புனித செவ்வாய். Holy Tuesday. பணித்தளத்தில் புறக்கணிப்பு (126) Rejection at Workplace. மத்தேயு: 21:33-46.

முன்னுரை: கிறித்துவின் உடன்
பணியாளர்களே! பணித்தளத்தில்
புறக்கணிப்பு என்பது, ஒன்று 
நீங்கள் நேர்மையாக இருந்தாலும்
புறக்கணிப்பார்கள், உங்கள் நடத்
தை சரியில்லை என்றாலும் புறக்கணிப்பார்கள். இத்துடன்
சாதியம், மதம். அதீத திறமை , 
பொறாமையினாலும் புறக்கணிப்
பார்கள். இவைகளிலிருந்து
மீண்டு வருவது பொருமை, சகிப்பு
தன்மை,, அன்பை  ஆயுதமாக
பயன்படுத்துங்கள். வாய்மையே
வெல்லும். பணித்தளத்தில் உண்  மையை புறக்கணிக்காதீர்..நிரா கரிப்பு கடுமையான துன்பத்தை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. "Work is divine" 
"செய்யும் தொழிலே தெய்வம்."
என்பர். நாம் கடவுளின் பிள்ளை
கள். நம் தூய பணிகள், செயல்கள்
மூலம் ஆண்டவரை மகிமைப் படு
த்துவது நமக்கு கொடுக்கப்பட்ட
கடமையாகும். நாம் நம் பணியி டங்களில் புறக்கணிக்கப்படும்
போது, ஆண்டவரை நினைவில்
கொள்ளவேண்டும்.
1. ஆண்டவர் தன் பிறப்பிலேயே
     சத்திரத்தில் இடமில்லை என
     புறக்கணிக்கப்பட்டார்,
2. தன் சொந்த நாட்டில் புறக்கணி க்கப்பட்டு, உயிர் பிழைக்க எகிப்தி
ற்கு தப்பி சென்றார்
3. தன் சொந்த ஊர்மக்களால் புறக்கணிக்கப்பட்டார். இவருக்கு
இந்த அறிவு எப்படி வந்தது,  இவர்
தச்சனின் மகன் அல்லவா? என்றனர். (மாற்கு 6:3)
4. ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. 
(யோவான் நற்செய்தி 7:5)
5."உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங் களைப் புறக்கணிப்பவர் என்னை ப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப் பினவரையே புறக்கணிக்கிறார். " 
(லூக்கா நற்செய்தி 10:16)
6.மதத்தலைவர்களால் நிராகரிக்க
    கப்பட்டார்.(மாற்கு 8:31)
7. அவர் மனிதர்களால் நிராகரிக் கப்பட்டால். (ஏசாயா 53:3)
8.தன் சீடர்களால், நிராகரிக்கப் பட்டார். யூதாஸ் காட்டி கொடுத் தான், மற்றவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.
9. ஒளியான அவர் உலகில் இருந் தார். உலகு அவரால்தான் உண் டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. 
(யோவான் நற்செய்தி 1:10)
10. சிலுவையில், "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தினார். (மத்தேயு நற்செய்தி 27:46) தன் தந்தையாளயே ஆண் 
டவர் கைவிடப்படும் போது, நாம்
எம்மாத்திரம். எனவே, நம் பணியி டங்களில் நாம் புறக்கணிக்கப் பட்டாள் ஆண்டவரை போல அமைதி, பொருமை, நிதானம்
மிக அவசியம். ஒரு இடத்தின்
புறக்கணிப்பு உங்களுக்கு ஆண்ட வர் வேறு இடத்தில் உயர்வை
கொடுப்பார்.
நிராகரிப்பு நம் அடையாளத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. காயீனின் காணிக்கையை கடவுள் நிராகரித்தபோது, ​​காயீன் கோபமும் ஏமாற்றமும் அடைந்தது மட்டுமின்றி, தான் யார் என்று அவருக்குத் தெரியவில்லை.  தெரியவில்லை. காயின் போல
நாம் புறக்கணிக்கின்ற போது உணர்வு ரீதியாக செயல்பட கூடாது."When a problem comes do not react emotionally--cool it" (Norman Vincent Peal) இது மிக முக்கிய மானது, கோபத்தில் எடுக்கும் முடி
வுகள் மிக தவறாகவே இருக்கும்.
விவாகரத்து என்பது வாழ்க் கையில் நிராகரிப்பின் மிகவும் வேதனையான அனுபவங்களில் ஒன்றாகும். திருமணத்தில் ஒரு வரையொருவர் நேசிக்கும் இரு வர், ஒரே உடலாகவும் ஒரே உடலா கவும், திருமணத்திலிருந்து வில கிச் செல்லும்போது, ​​​​மற்றவர் வேதனையான நிராகரிப்புக்கு ஆளாகிறார்.
1. கடவுளே இறுதி நில உரிமை யாளர். Lord is the land owner.
மத்தேயு: 21:33-46.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நம் பணியிடங்களில் பல நேரங்களில் புறக்கணிக்கப் படுகிறோம். ஆனால் ஆண்டவர் இந்த உவமையில் குத்தகைதாரர் கள் குத்தகை தராமல் எப்படி நில உரிமையாளரை புறக்கணிக்கிறா ர் என்று குறித்தான கதையாக பார்க்கின்றோம். இந்த உவமை யில், திராட்சைத் தோட்டத்தை நட்டு, அதைக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு வேறு நாட்டிற்குச் சென்ற நில உரிமையாளர் ஒரு வரைப் பற்றி அறிகிறோம். கடவுளே இறுதி நில உரிமை யாளர் God is the ultimate land owner. என்பதை இந்த நில உரிமையா ளர் நமக்கு நினைவூட்டுகிறார், மேலும் நாம் அவருடைய குத்தகை தாரர்கள் (tenants) மட்டுமே. அதனால்தான், கிறிஸ்தவர்க ளாகிய நாம், சொந்தக்காரர்களாக இல்லாமல், கடவுளின் படைப்பின் பொறுப்பாளர்களாக இருக்கி றோம்.  குத்தகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலம் அல்லது கட்டிடத்தை ஆக்கிரமி ப்பதற்கான உரிமையை ஒரு தரப்பினர் வாங்கும் நில உரிமை. இயேசுவின் காலத்தில், நில உரிமையாளர் தனது முதல் குத்தகையை பெறுவதற்கு பொது வாக ஐந்து வருடங்கள் இருக்கும் என்று விவிலிய அறிஞர்கள் கூறு கிறார்கள்.இந்நிலையில்,உரிமையாளர்  நிலத்தை குத்தகை கொடு த்துவிட்டு, வேறொரு நாட்டுக்குப் போனார். குத்தகை பெறும் காலம் நெருங்கி வந்தபோது, ​​தன் குத்த கை  பெறுவதற்காகத்தன்வேலை  க்காரர்களைகுத்தகைக்காரர்களிடம் அனுப்பினான். தோட்டத் தொ ழிலாளர். அவனுடைய வேலைக் காரரைப் பிடித்து ஒருவனை அடித்து, ஒருவனைக் கொன்று, ஒருவனைக் கல்லெறிந்தார்கள். மீண்டும் அவர் மற்ற வேலையாட் களை அனுப்பினார், முதல்வரை விட மிக அதிகமாக ஆட்களை அனுப்பினான். அவர்களுக்கும் அவ்வாறே செய்தார்கள். பிறகு, 'அவர்கள் என் மகனை மதிப் பார்கள்' என்று சொல்லி, தன் மகனை அவர்களிடம் அனுப்பி னார். ஆனால் குத்தகை தாரர்கள் மகனைக் கண்டதும், `இவர்தான் வாரிசு; வா, அவனைக் கொன்று அவனுடைய சுதந்தரத்தைப் பெறு வோம். அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றார்கள். திராட்சைத் தோட்டத்தின் உரிமை யாளர் வரும்போது, ​​அந்தக் குத்தகைதாரர்களை என்ன செய்வார்?" அவர்கள் அவனை நோக்கி, "அந்தக் கேடு கெட்ட வர்களைக் கொடிய மரணத்திற்கு ஆளாக்கி, அந்தத் திராட்சைத் தோட்டத்தை மற்ற குத்தகை தார ர்களிடம் விட்டுவிடுவார், அவர்கள் தங்கள் பருவத்தில் குத்தகை தருவார்" என்றார்கள். இயேசு அவர்களிடம், "நீங்கள் வேதத்தில் படித்ததில்லையா: 'கட்டுபவர்கள் புறக்கணித்த கல்லே மூலைக்குத் தலையாயிருக்கிறது; இது கர்த் தருடைய செயல், அது நம் பார் வைக்கு ஆச்சரியமாயிருக்கிறது. ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனுடைய ராஜ் யம் உங்களிடமிருந்து பறிக்க ப்பட்டு,அதன் பலனைத் தரும் தேசத்திற்குக் கொடுக்கப்படும். பிரதான ஆசாரியர்களும், பரி சேயர்களும் அவருடைய உவ மைகளைக் கேட்டபோது, ​​அவர் தங்களைக் குறித்துப் பேசுகிறார் என்று உணர்ந்தார்கள். ஆனால் அவர்கள் அவரைக் கைது செய்ய முயன்றபோது, ​​மக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று கருதிய தால், அவர்களுக்குப் பயந்தார் கள்.
கிறிஸ்து தனது திராட்சைத் தோட் டமாகிய திருச்சபையை நிறுவி நம் கைகளில் ஒப்படைத்தார். கிறி ஸ்து தம்முடைய வேலையை,  நம் மை நம்பி ஒப்படைத்த தற்காகப் பாராட்டுக்களைச் செலுத்துகிறா ர்.அவர் நமக்கு ஒரு வேலையைத் தருவது மட்டுமல்லாமல், மற்ற ஆத்மாக்களின் நித்திய இரட்சிப் பை நம் கைகளில் வைக்கிறார்.
இங்கு நில உரிமையாளர்  கடவுள்.
திராட்சைத் தோட்டம் இஸ்ரவேல் தேசம்.
குத்தகைதாரர்கள் இஸ்ரேல் மக் கள் மற்றும் அதன் மதத் தலை வர்கள்.
• வேலையாட்கள் தீர்க்கதரிசிகள்.
• மகன் இயேசு.
ஆண்டவர் "உனக்காக நான் வைத் திருக்கும் திட்டங்களை நான் அறி வேன்," என்று கர்த்தர் அறிவிக்கி றார், 'உங்களைச் செழிக்கத் திட்டமிடுகிறேன், உங்களுக்கு தீங்கு விளைவிக்காமல், உங்களுக்கு நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்' (எரேமியா 29:11). என்ற வாக்குத்தம் நம்மை
ஆறுதல் படுத்துகிறது.
இயேசுவை நிராகரிப்பவர்கள் ஒருபோதும் விண்ணரசை பெற மாட்டார்கள், எனவே, நம்மை
புறக்கணிப்பவர்களை ஆண்டவர்
புறக்கணிப்பார்.
விசுவாசிகளாகிய நாம் நமது கடந்த கால தோல்விகளால் அல்லது புறக்கணிப்பால் அல்லது மற்றவர்களின் நிராகரிப்பால் வரையறுக்கப்படவில்லை. நாம் கடவுளின் குழந்தைகளாக வரையறுக்கப்படுகிறோம் அவர்
என்றும் நம்மை கைவிடார். ஆமென்.



Prof.Dr. David Arul Paramanandam Sermon Writer. 
www.davidarulsermoncentre.com 
www.davidarulblogspot.com. 




 




 இயேசுபரிசேயர்களுடன் தகராறுசெய்து நிராகரிக்கப்பட்டார் .




Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.