புனித புதன். Holy Wednesday. சமுகத்தில் புறக்கணிப்பு (127).Rejection in Society. மத்தேயு 22:1-14.
முன்னுரை: கிறித்துவின் அன்பு உடன் ஊழியர்களே! உங்க அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.
சமுகத்தில் புறக்கணிப்பு என்ற
தலைப்பு நம்மையும் பல கட்டங்க ளில் இந்த சமுதாயம் நமக்கு தர
வேண்டிய அங்கிகாரத்தை தராது
நம்மை புறக்கனித்திருக்கும்.
ஒருவர் சமூக தொடர்புகளில் இருந்து வேண்டுமென்றே விலக்கப்பட்டால் சமூக நிராகரிப்பு ஏற்படுகிறது . நிராகரிப்பு என்பது மனச்சோர்வுக்கு ஒரு காரணம் மற்றும் விளைவு ஆகும்."
1.நேர்மையற்றவர்களை சமுகம் புறக்கணிக்கிறது .1சாமுவேல் 8:1-5. Society rejects Dishonest People.
கிறித்தூவிற்கு பிரியமானவர் களே! நாம் சமுகத்தில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் நம்முடைய பிள்ளைகள் நேர்மை அற்றவர்களாக இருந்தால் சமூகம் அவர்களை நிராகரிக்கும் என்பத ற்கு நம்முடைய தீர்க்கர் சாமுவே லின் பிள்ளைகளே உதாரண மாகும்.சாமுவேல் வயதாகியபோது, தன் மகன்களை தனக்குப் பிறகு இஸ்ரவேலின் தலைவர் களாக நியமித்தார். அவருடைய முதல் மகனின் பெயர் ஜோயல், அவருடைய இரண்டாவது மகன் பெயர் அபியா, அவர்கள் பெயெர் செபாவில்நீதிஅரசர்களாக பணிபுரிந்தார்கள். ஆனால் அவருடைய மகன்கள் அவருடைய வழிகளைப் பின்பற்றவில்லை.வேதத்தில்
சாமுவேல் மிகவும் தெய்வீகமான மனிதர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் இங்கே அவர் செய்த செயல் அவரது சுயநலத் தின் ஒரு பாவமாக இருக்கலாம். அக்காலத்தில்நீதிபதிகள் மனிதர்களால் நியமிக்கப்படுவதுஅல்லது நீதிபதியின் பதவி தந்தையிடமி ருந்து மகனுக்கு வருவது. சாமுவேல் தனது மகன்களை இஸ்ரேலுக்குநீதிபதிகளாக நியமிப்பதுசரியல்ல. அவர்கள் நேர்மையற்ற ஆதாயத்திற்குப் பின் விலகி, லஞ்சம் மற்றும் தவறான நீதியைவழங்கினர். சாமுவேலின் மகன்கள் ஏலியின் மகன்களைப் போல ஆனார்கள், எனவே இஸ்ர வேலின் மூப்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடம் வந்தனர். அவர்கள் அவரிடம், “உனக்கு வயதாகி விட்டது, உன் மகன்கள் உன் வழி யைப் பின்பற்றுவதில்லை. இப் போது மற்ற எல்லா நாடுகளுக்கும் இருப்பதைப் போல, எங்களை வழிநடத்த ஒரு ராஜாவை நியமிக் கவும்.என்று கேட்டு சாமுவேலின்
மகன்களை புறக்கணித்தார்கள்.
"எங்களுக்கு நீதி வழங்க ஓர் அரசனைத் தாரும் என்று அவர்கள் கேட்டது சாமுவேலுக்குத்தீயதென ப்பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டார். ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது; "மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னை புறக்கணிக்கவில்லை. அவர் களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டனர்.
தீர்க்கரின் பிள்ளைகளின் நேர்மை
யற்றதன்மையினால்,இஸ்ரவேலர்
ஆண்டவரை புறக்கணித்தனர்.
2.விண்ணரசு: அனைவருக்கு மான அழைப்பு: The Kingdom of God: A callTo All.மத்தேயு 22:1-14.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!விண்ணரசுஅனைவருக்கும் ஆனது. யாரையுமே புறக்கணிக்க கூடாது என்பது ஆண்டவருடைய அநாதி விருப்பம். எனவே இந்த உவமை மூலம் விண்ணரசுக்கு பங்கு பெற ஆண்டவர் அனைவ ரையும் அழைக்கிறார்.
அரசர் (பிதா) ஒருவர் தம் மகனுக் குத்(இயேசு)திருமணம்(விண்ணரசு) நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப்பெற்றவர்களைக்கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. அழைக்கப்பட்டவர்கள்(இஸ்ரவேலர்) விருந்தாகிய விண்ணரசை புறக்கணக்கின்றனர்.மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், "நான் விருந்து ஏற்பாடு செய்திரு க்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்று களையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்" என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப் பினார். ஆண்டவர் முதன்முதலில் அழைத்தது இஸ்ரவேல் தேசத்து மக்களைத்தான். இது எதைக் காட்டுகிதென்றால் இயேசுவின் இரண்டாம் வருகைக்குப்பின் ஒரு கல்யாணவிருந்து பரலோகத்தில் பிதாவின் வீட்டில் நடக்கும் (வெளிப்படுத்தல் 19 : 7). ஆயிரவருட அரசாட்சியின் ஆரம் பத்தில் கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோரும் அதில் கலந்து கொள் வார்கள். அதற்காகத் தேவன் தன்னுடைய பிள்ளைகளை அழை த்துக்கொண்டேவருகிறார்.அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடை க்குச் சென்றார். நாம் கூட சில நேரங்களில் ஆலயத்திற்கு அழைப்பு மணி கேட்டும் ஆலயம் செல்லாமல் தங்களுடைய சொந்த பணிக்கு செல்கிறோம். ஆண்டவரின் அழைப்பை புறக்கணித்த அம்
மக்கள் அவருடைய பணியாளர்க ளைப் (நியாதிபதிகள், தீர்க்கர்கள்) பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப் பிஅக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார்.அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக் கினார். இது எருசலேம் பட்டணம் கி. பி 70 ம் ஆண்டிலே நொறுக்கப் பட்டுஅழிக்கப்படப்போகிறதற்குரியமுன்னறிவிக்கும்வார்த்தைகளாக உள்ளது. ரோமதளபதி டைட்டஸ் இதைச் செய்தான். அவர்கள்உலக மெங்கும் சிதறடிக்கப் பட்டார்கள்.
பின்னர் தம் பணியாளர்களிடம், "திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்க ளோ தகுதியற்றுப் போனார்கள்.
எனவே நீங்கள் போய்ச் சாலை யோரங்களில் காணும் எல்லாரை யும் திருமண விருந்துக்கு அழைத் து வாருங்கள்" என்றார்.
கர்த்தரின் அழைப்பையும், இயேசு வின் அழைப்பையும், அவருடைய உபதேசத்தையும் இஸ்ரவேல் ஜனங்கள் புறக்கணித்ததால் பிற இனத்தார்களுக்கு (Gentiles)அந்த அழைப்பு போனது. மேலும் நாம் பல தலைமுறைகளாக கிறிஸ்த வர்களாக இருப்பவர்கள் இயேசு வைப் பின்பற்றாதபடியால் புதி தாக அவரை ஏற்றுக்கொள்ளு கிறவர்கள்(Newly converted are very faithful than the old) விண்ணரசின் விருந்திற்கு அனுமதிக்கப்படுவர். பிதாவின் வீட்டில் அநேக வாசஸ் தலங்கள் உண்டு. பரலோகமான து தேவனால் தெரிந்து கொள்ளப் பட்ட பரிசுத்தவான்களால் நிரம் பும். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்ட பம் விருந்தினரால் நிரம்பியது.
ராஜா வந்திருந்தவர்களிடம் விருந்துண்டதைப் பற்றிக் கேட் காமல், அவர்கள் வஸ்திரம் அணி ந்திருக்கிறார்களா? என்றுதான் பார்த்தார். அங்கு கல்யாண வஸ் திரம்( இரட்சிப்பை குறிக்கிறது) இல்லாத ஒரு மனிதனைப் பார்க்கிறார். அவர்கள் தங்கள் ஆடையோடு வந்தது பிரச்சனை யில்லை. உள்ளுக்குள் வந்த பின் அழுக்கு ஆடையோடு ( பாவம்) இருந்தது தவறு. அவர்களுக் குரியதைக் களைந்து, கல்யாண வீட்டில் கொடுக்கும் வஸ்திரத்தை வாங்கி அணிந்திருக்க வேண்டும். அவனைப் பார்த்து ராஜா கல் யாண வஸ்திரம் இல்லாதவனாய் எப்படி வந்தாய் என்று கேட்டார். அவன் அதற்குப் பதில் பேசாம லிருந்தான். ராஜாவுக்கு முன்பாக யாரும் பேசமுடியாது. எனவே ராஜா அவனுடைய கையையும், காலையும் கட்டி அழுகையும் பற் கடிப்பும் உள்ள நரகத்தில் போடுங் கள் என்று கட்டளையிட்டார்.
கடவுளின் அன்பு இறைமக்களே! இவ்வாறு அழைப்புப் பெற்றவர் கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்க ப்பட்டவர்களோ சிலர்."
கர்த்தரின் அழைப்பையும், இயேசு வின் அழைப்பையும், அவருடைய உபதேசத்தையும் இஸ்ரவேல் ஜனங்கள் புறக்கணித்ததால் புறஜாதிகளுக்கு அந்த அழைப்பு போனது. ஆண்டவரின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள். அவர் அழைத்துக் கொண்டே இருக்கிறார் அவரை ஏற்றுக் கொள்வது நம்முடைய கடமை யாகும். ஆண்டவரை ஏற்றுக் கொள்வதினால் சமூகத்திலும் நாம் ஏற்றுக் கொள்ளப்படுவோம் ஏனெனில் ஆண்டவர் அன்பினா லே நம்மை இவ்வுலகில் வாழ அழைக்கிறார். அவ்வாறு இருக்க கடவுள் நமக்கு கிருபை செய்வா ராக ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer
www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
Comments
Post a Comment