Resurrection: Celebrating the Joy of Salvation.உயிர்த்தெழுதல்: மீட்பின் மகிழ்ச்சியை கொண்டாடுதல்.(133) விடு.பய.14:26-31. திரு.பாட.118:14-29. கொலோசையர்: 3:1-11. மத்தேயு: 28:1-10. Easter.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்க அனைவருக்கும் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இயேசு உயிர்த்
தெழுந்தார் என்ற செய்தி வரலாற்
று நிகழ்வாகும். இதுவே கிறிஸ் துவத்தில் மீட்பின் நற்செய்தியா கும். இதன் அடிப்படையில்தான் தூய பவுல் அடிகளார், " கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டி ருக்கிற நம்பிக்கையும் பொருள ற்றதாயிருக்கும். 
(1 கொரிந்தியர் 15:14) என்கிறார்.
எனவே உயிர்த்தெழுதல் நிகழ்வே தான் திருச்ச சபையின் தொடக்க மாகும்.ஆண்டவரின் உயிர்த் தெழுதலே கிறிஸ்தவர்களின் உயிர்மூச்சியாகவும்.அடித்தளமாகும். அன்பானவர்களே!
ஆண்டவர் இயேசுவை சிலுவை யில் அறையப்பட்ட கி.பி 33-ம் ஆண்டில் இருந்து உயிர்த்தெழுந்த நாள் கொண்டாடப்பட்டு வருகி றது. எனினும் கி.பி.325-ல் ரோம பேரரசை ஆண்ட கான்ஸ்டான் டைன் மன்னர் காலத்தில் இருந்து தான் ஈஸ்டர் பண்டிகை பிரபலம் ஆனது. ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காகவேஅப்போது தனிச்சட்டமும் பிறப்பிக்கப்பட் டது. ‘ஈஸ்டர்’ (Easter) என்ற வார்த் தைக்கு ‘வசந்த காலம்’ என்ற அர்த்தம் உண்டு. ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய அதிசய பூ ‘ஈஸ்டர் லில்லி’. இந்தப்பூ இயேசு உயிர்த்தெழுந்த காலத்தில் அதிகமாக பூப்பதால் உயிர்த் தெழுந்த திருநாளிற்கு ‘ஈஸ்டர்’ எனப்பெயர் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மற்றும் இது இஸ்ரவேல் மக்களின் ‘பாஸ்கா’ என்னும் ‘கடந்து போதல்’ பண்டி கையை நினைவு படுத்துகிறது. பூக்கள் பூத்து குலுங்கும் மாதத் தில் ஆண்டவர் உயிர்த்தெழுந்த தால் நாம் ஆலயத்தை பூக்களால் அலங்கரிக்கிறோம். பூக்களின் நறுமணம்,வாசம் ஆண்டவரின் உயிர்த்தெழுதலை  நம் உள்ளத் தை மணக்க செய்கிறது.
430 ஆண்டு காலம் அடிமைப்பட்டு யிருந்த இஸ்ரவேல் மக்களை மோசேயின் தலைமையில் செங்கடலை பிளந்து ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினி ன்று இஸ்ரயேலருக்கு விடுதலை யளித்தார். கடற்கரையில் எகிப்தி யர் செத்துக் கிடப்பதை இஸ்ரயே லர் கண்டனர். 
(விடுதலைப் பயணம் 14:30)
இந்த மீட்பின் மகிழ்ச்சியும், உயிர் த்தெழுதலின் மகிழ்ச்சியை கொண்டாடுவதே ஈஸ்டர் ஆகும். 
தேவன் இந்த உலகத்திலே அதி அற்புதமான ஒன்றை செய்தார் என்றால் அது இயேசு கிறிஸ் துவின் உயிர்த்தெழுதல்!
1. காளியான கல்லறை தெரிக்கப் பட்ட முத்திரை:
அன்பின் இறைமக்களே! "All Roads
Lead to Rome' என்பார்கள். அத்த கைய ரோம பேரரசின் அரசு
முத்திரையை தெறிக்க விட்டது, 
உடைக்கப்பட்டது.ஆண்டவரின் உயிர்தெழுதல். அவர்களால் 
போடப்பட்ட கல்லரை முத்திரை.
அத்துடன் அவர்களின் அதிகார
ஆனவமும் உடைக்கப்பட்டது.  காலியான கல்லரை. ஆண்டவர் கல்லறையை வெறுமையாக் கினார் அதன் மூலம் நம்மை வாழ்வாக்கினார்.  அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்; "சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?" பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே. 
ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி! 
(1 கொரிந்தியர் 15:54-57)
முதலாவதாக, இந்த உலகத்து மனிதன் சொல்லுவது என்ன? ஒவ்வொரு நிமிடமும் மனிதன் கல்லறையை நோக்கி ஒடிக் கொண்டிருக்கிறான் என்று சொல்லுகிறான். ஆனால் இயேசு சொல்லுகிறார்: கல்லறை முடிவல்ல; மரணம் முடிவல்ல; அது ஒரு வாசல். ஒரு வாழ்க்கை யிலிருந்து நித்திய வாழ்க்கைக் குள்ளாக கடந்து செல்லுகிற ஒருவாசல் என்று சொல்லுகிறார். அது எப்படி உண்மை என்பதை தன்னுடைய உயிர்த்தெழுத லினாலே அவர் நிரூபித்தார். மனிதனாய் பிறந்தார்; மாம்சமும் இரத்தமும் உடையவராய் வாழ்ந்தார்; அவர் மகிமையின் சரீரத்தோடு எழுந்திருக்கும்போது எனக்கும் அதே நம்பிக்கை உண்டு. மறுமை ஒன்று உண்டு; அது நிச்சயம் என்கிற அந்த உண்மையை இயேசுவின் உயிர்த்தெழுதல் உலகிற்கு காட்டியது.
மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? என்று ஒவ்வொருவரும் ஆர்ப் பரிக்கத்தக்கதாக மரணம் முடிவல்ல; அது ஒரு சோகமான அனுபவமல்ல; அது சந்தோஷ மான காரியம்; மரணம் ஒரு ஆசீர் வாதம் என்று தன்னுடைய உயிர்த் தெழுதலினாலே இயேசு நிரூபித் தார். ஆம், பிரியமானவர்களே! மரணம் ஒரு ஆசீர்வாதம்; நான் மரித்தால் எனக்கு முன் மரித்த அத்தனை பேரையும் நான் சந்திக்க முடியும். இன்னும் அவர்களோடு பிரியாமல் இருக்க முடியும். ஆண்டவரின் வருகை
யிலே உயிர்த்தெழுவேன்.
2. "அஞ்சாதீர்"அவர் இங்கே இல்லை, அவர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்:
அன்பான இறை மக்களே! இந்த
உலகில் உயிர்த்தெழுந்த கிறித்து வை உயிருடன் சந்தித்த முதல்
பெண்மணி மகதலேனா மரியாள். ஓய்வுநாள் அன்று அதிகாலையில் மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், மற்றும் சில ஸ்திரீகளும், இயேசுவுக்கு சுகந்த வர்கம் வைப்பதற்காக கல்லறை கயை பார்க்க வந்தார்கள். அங்கே அவர்கள் இயேசுவுடைய கல்லறையில் கல் புரட்டப்பட்டு, அதின் மேல் தேவ தூதன் உட்காந் திருப்பதை கண்டார்கள். மரியாள் மிகவும் பயந்து, இயேசுவின் சரீரத்தை கல்லறையில் இல்லை என்று கண்டபோது, அந்த தூதன், அவள் கல்லறையண்டையில் நின்று அழுது கொண்டிரு க்கிறாள். இயேசுகிறிஸ்து உயி ரோடு எழுந்துவிட்டார். ஆனால், அவரால் இவளுடைய கண்ணீரை தாண்டி பிதாவினிடத்திற்கு போக முடியவில்லை. ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். அதற்கு அவள்: என் ஆண்டவரை எங்கோஎடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள் என்றாள். மரியாளே! என்று தன்னை உயிரோடு இருக் கிறவராக இயேசு காண்பித்தார்.
 மரியா திரும்பிப் பார்த்து, "ரபூனி" என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு "போதகரே" என்பது பொருள். இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள் ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர் களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமான வரிடம் செல்லவிருக்கிறேன்" எனச் சொல்" என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றை யும் அவர்களிடம் சொன்னார். 
 ஒரு பெண்ணின் கண்ணீரைக் கடந்துபோக முடியாத அன்பின் தேவன் இயேசு. அவர் நம்முடைய கண்ணீரை அலட்சியம் பண்ணு வாரோ?. நீங்கள் தேவனைத் தேடுவதற்கு எவ்வளவு வாஞ்சை யாயிருக்கிறீர்களோ அவர் திக்கற்றவர்களாக ஒருநாளும் விடமாட்டார். நம் கண்ணீரை துடைத்துவிட்டுதான் அவர் கடந்து போவார்.தூதன் கூறியதை கண்டு, அவர்கள் மிகவும் பயத் தோடும், மகிழ்ச்சியோடும், புறப்ப ட்டு சீஷர்களுக்கு அறிவிக்க போனார்கள். நம் வாழ்விலும் கூட பலவிதமான தடை கற்கள் நம்மை முன்னேறிச்செல்ல விடாமல் இருப்பதை பார்க்கலாம், அவருக்குள் இருந்த அந்த ஜீவன் எப்படி கல்லறையின் வாசலில் கல் புரட்டப்பட்டு இருந்ததோ, நாம் அந்த ஜீவனுள்ள தேவனை விசுவாசித்தால் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற தடை கற்கள் புரட்டப்படும்.
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றையே நாடுங்கள்...பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள் (கொலோசையர் 3:1,12).
பெண்கள் இறுதி வரை துணிந்து நின்றவர்கள், மீட்பை கண்டார்கள். அதிலும் மகதலேனா  மரியாள் இயேசுவை பற்றி பிடிக்கும் பேறு பெற்றாள். உயிர்த்தெழுந்த நற் செய்தியை கேட்கும் வாய்ப்பை யும் பெற்றாள். பெண்கள் வின் தூதுவர்கள் ஆனார்கள். ஆம், மேய்ப்பருக்கு இயேசு பிறப்பை வின் தூதர் அறிவித்தனர். பெண்கள் இயேசுவின் உயிர்த் தெழுதல் செய்தியை அறிவித் ததால் அவர்களும் "விண்ண வரின் தூதர்களாய் ("The Messenger of God" )ஆனார்கள். வாழ்வு மீண்டும் கிடைத்துவிட்டது என்பதை உலகறிய செய்தினார் ஏன் அவர்களுக்கு வாய்ப்பு எனில் அவர்களே துணிந்து நின்றவர்கள் எனவே தான் கல்லறை திறக்க ப்பட்டது. அரன்மனை முதல் கல்வாரி வரை, கல்வாரி முதல் கல்லறை வரை வந்தவர்களுக்கு கல்லறை திறக்கப்பட்டது. இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தி யை பரப்பும் உரிமை பெற்றனர். எதற்குமே சாட்சியளிக்க உரிமை யற்ற பெண்கள், இயேசுவின் உயிர்த்தெழுதல் என்ற உனனத நிகழ்வுக்கு சாட்சிகளாகப் பட்டவர்கள் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
3.உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின் ஆதாரம்.
அன்பின் இறை மக்களே!
கிறிஸ்தவத்தின் முதுகெலும்பும், அடிப்படை சத்தியமும், இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுததில் தான் இருக்கிறது, இன்றைக்கும் இயேசு ஜீவிக்கின்றார். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் கிறிஸ்தவம் இல்லை, கிறிஸ்தவனும் இல்லை, கிறிஸ்துவ வாழ்க்கையும் இல்லை. நாமும் இல்லை. இயேசு கிறிஸ்து நமக்காக இவ்வுலகிற்கு வந்தது சரித்திரம், மரித்து உயிர் தெழுந்ததும் சரித்திரமே. உலக வரலாற்றில் இயேசு உயிர்தெ ழுந்ததை உண்மை என்றும் நிரூபி க்கப்பட்டுள்ளது. உயிர்த்தெழுந்த பின்பு 40 நாள் அப்போஸ்தலரு க்கும் மற்றும் தன்னுடன் கூட இருந்தவர்களுக்கு அவர் தரிசன மானார்.
உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்ப தில்லை அவர் நம்மை நீதி யோடும் நியாயம் தீர்க்க வருகி றார். வாரும் ஆண்டவரே, எங்களை உம்முடைய இறை யரசில் சேர்த்துக் கொள்ளும், ஆமென்.

Prof. Dr.David Arul Paramanandam Sermon Writer 
www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com. 





 




இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், 



 


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.