மீட்டெடுக்கும் உண்மை வழிபாடு.(120) True Worship that Liberates. விடு.பயணம்( Exodus)3:11-18. திரு.பாட.137. திருத்தூதர் (Acts )16:25-34. லூக்கா: 13:10-17.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு இறை மக்களே இந்த லெந்து காலத்தின் தியான மாக நமக்கு கொடுக்கப்பட்டிருக் கின்ற தலைப்பு மீட்டெடுக்கும் உண்மை வழிபாடு. அன்பர்களே
உண்மை வழிபாடு என்பது,"
" கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" என்றார். 
(யோவான் நற்செய்தி 4:24) உள்ளத்தில் ஆண்டவரை இருத்தி 
வழிபடுவதே உண்மையான வழிபாடு. எனவேதான் சங்கீதக்
காரன், "என் உயிரே! ஆண்ட வரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவ ரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத் தையும் மறவாதே (திருப்பாடல் கள்(சங்கீதங்கள்) 103:1,2) எனவே உள்ளத்தில் துதிப்பதே உண்மை யான வழிபாடு.  அதனால்தான்
நாம் கீர்த்தனையில், "மகனே உன்
நெஞ்சை (உள்ளத்தை) எனக்கு
தாராயோ" என பாடுகிறோம். தூய்மை உள்ளமே இறைவனின்
இல்லம். இப்படி உள்ளத்தில் வழி
பாடு செய்தால்; நம்மை பாவங்க ளிலிருந்து மீட்டெடுப்பார். ஆண்ட வருக்கு மறுபெயர் "மீட்பர்"
அந்த மீட்பர் நம் உள்ளத்தில் இருந்தால், என்னுள்ளம் அவர் பால் பொங்கி எழும். ஆண்டவர் உள்ளத்தில் உண்மையாய் வழி படுபவர்களை மீட்டெடுப்பார் உள்ளத்தில் வழிபடுவதே, உண்மையான வழிபாடு.
1. இருக்கின்றவராக இருக்கிற வறே மீட்டெடுப்பார். (விடுதலை பயணம். 3: 11-18." I am as I am" is a Liberator. Exodus: 3-11-18)
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே ! நம் ஆண்டவர் இருக்கின்ற வராக இருக்கிறார் அவரே  430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைப்ப ட்டிருந்த இஸ்ரேலியரை  மோசே என்ற மாமனிதர் மூலம் விடுதலை ஆக்கினார். மோசேக்கு ஆண்டவர் கொடுத்த உறுதிமொழி நான் இருக்கின்றவராக இருக்கிறேன். ஆண்டவர் மோசேவை அழைக்கும் போது தன் மாமனார் இத்திரோ வின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவருக்கு வயது 40.அவர் அந்த ஆட்டு மந்தையைப்  ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையா கிய  ஒரேபை (சீனாய்மலையைச்  சுற்றியுள்ள மலைப்பகுதி ஓரேப் என்று அழைக்கப்பட்டது. சீனாய் மலை, (எகிப்து) ஓரேப் மலை என் றும் அழைக்கப்பட்டது (வி.ப 3:1,) 
ஆலயத்திற்கு ஒழுங்காக வருகி
றோமா? பத்து கட்டளைகளில் ஒன்றான மூன்றாவது கட்டளை
"ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு."
(விடுதலைப் பயணம் 20:8) என்ற
கட்டளையை இந்த பெண் தன்
பெலவீனத்திலும் ஆலயம் சென்று
ஆண்டவரை தொழுது கொண் டாள், கட்டளையை நிறைவேற்றி
னாள். உண்மையாய் கடவுளை
வணங்கினாள், எனவே, விடுத லை பெற்றாள். எனவே, இதுவே
மீட்டெடுக்கும் உண்மை வழிபாடு.
கடவுள் தாமே, நமக்கு உண்மை
வழிபாடு செய்து, அனைத்து
தீய வழிகளிருந்து இந்த லெந்து
காலங்களில் மீட்டெடுக்க அருள் புரிவராக.ஆமென்.

Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer. 
www.davidarulsermoncentre.com, 
www.davidarulblogspot.com 






"துதியுங்கள் அற்புதங்களை காண்பீர்கள் ..."







ஜேம்ஸ் டிஸ்ஸாட் , 1886-1896, ஒரு பலவீனமான பெண்ணை கிறிஸ்து குணப்படுத்துகிறார் .





 

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.