Believing in Christ.: கிறித்துவில் நம்பிக்கை : உயிர்த்தெழுதல் (137).2 ,அரசர்கள்: 4:27-37, திருப்பாடல்: 90, திருத்தூதர் பணிகள்: 26:12-23 யோவான் 11:17-28. The Fourth Sunday after Resurrection
முன்னுரை : உயிர்த்த கிறித்துவின்உன்னதஅன்பர்களே! உங்க அனைவருக்கும் இயேசு கிறித்துவின் இனையற்ற நாமத் தில் வாழ்த்துக்கள். கிறித்துவில் நம்பிக்கை என்ற தலைப்பை தியானிப்போம்.கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அக்காலத்தில் ஏறக்குறைய முப்பது வருடங்களா க ரோம சாம ராஜ்யம் முழுவதும் பரவலாக அதிகம் பேசப்பட்டது, மற்றும் இஸ்ரவேலில் இருந்த ஒவ்வொரு யூதர்களும் அதைப் பற்றி அறிந்திருந்தார்கள்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இரகசியமாக வைக்க ப்பட்டது அல்ல! வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, இயேசு சிலுவையில் இறந்து அதன் பின் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்வுகளைத் தொடர் ந்து கி.பி. 35அளவிலேயேஇம்மரபு எழுந்திருக்கவேண்டும்.அந்தமரபைத்தான்பவுல்எடுத்தியம்புகின்றார்; இயேசு உண்மையாகவே உயிர்த் தெழுந்தார் என்னும் செய் தியைப் புனித பவுல் "பெற்றுக் கொண்டதாகக்" குறிப்பிடுவதால் அவருடைய காலத்துக்கு முன்பே இயேசுவின் உயிர்த்தெழுதல் பற் றிய நம்பிக்கை உருவாகிவிட்டது என்பது தெரிகிறது. கிறித்தவ சமூகத்திற்கும் அந்நம்பிக்கையை ஒப்படைக்கின்றார்.இறந்தவர்களின் உயிர்த்தெழுதலுக்கான எதிர் பார்ப்பு பல விவிலியப் படைப்பு களில் காணப்படுகிறது....