Believing in Christ.: கிறித்துவில் நம்பிக்கை : உயிர்த்தெழுதல் (137).2 ,அரசர்கள்: 4:27-37, திருப்பாடல்: 90, திருத்தூதர் பணிகள்: 26:12-23 யோவான் 11:17-28. The Fourth Sunday after Resurrection
முன்னுரை: உயிர்த்த கிறித்துவின்உன்னதஅன்பர்களே! உங்க அனைவருக்கும் இயேசு கிறித்துவின் இனையற்ற நாமத் தில் வாழ்த்துக்கள். கிறித்துவில் நம்பிக்கை என்ற தலைப்பை
தியானிப்போம்.கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அக்காலத்தில் ஏறக்குறைய முப்பது வருடங்களா க ரோம சாம ராஜ்யம் முழுவதும் பரவலாக அதிகம் பேசப்பட்டது, மற்றும் இஸ்ரவேலில் இருந்த ஒவ்வொரு யூதர்களும் அதைப் பற்றி அறிந்திருந்தார்கள்! கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இரகசியமாக வைக்க ப்பட்டது அல்ல! வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, இயேசு சிலுவையில் இறந்து அதன் பின் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்வுகளைத் தொடர் ந்து கி.பி. 35அளவிலேயேஇம்மரபு எழுந்திருக்கவேண்டும்.அந்தமரபைத்தான்பவுல்எடுத்தியம்புகின்றார்; இயேசு உண்மையாகவே உயிர்த் தெழுந்தார் என்னும் செய் தியைப் புனித பவுல் "பெற்றுக் கொண்டதாகக்" குறிப்பிடுவதால் அவருடைய காலத்துக்கு முன்பே இயேசுவின் உயிர்த்தெழுதல் பற் றிய நம்பிக்கை உருவாகிவிட்டது என்பது தெரிகிறது. கிறித்தவ சமூகத்திற்கும் அந்நம்பிக்கையை
ஒப்படைக்கின்றார்.இறந்தவர்களின் உயிர்த்தெழுதலுக்கான எதிர் பார்ப்பு பல விவிலியப் படைப்பு களில் காணப்படுகிறது. எசேக்கியேல் புத்தகத்தில் , நீதியு ள்ள இஸ்ரவேலர்கள் மரித்தோரி லிருந்து எழுந்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நீதிமான்களும் அநீதியுள்ள இஸ்ர வேலர்களும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவதன் மூலம் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை யை தானியேல் புத்தகம் மேலும் கூறுகிறது.. இயேசுவானவர் உயிர்த்தெழுந்த பிறகு நூற்றுக் கணக்கான( 500 பேர்களுக்கு மேலாக) மக்கள் கண்கண்ட சாட்சிகளாக பார்த்தார்கள் என்று எழுத்தளவில் உள்ளது .
1.உயிர்த்தெழுதல் ஒரு வரம்.
Resurrection is a gift .2 அரசர்கள் 4:27-37.
கிறித்துவுக்காகவே வாழும் அன்பர்களே! பழைய ஏற்பாட்டில்
மூன்று இடங்களில் உயிர்த்தெழும்
செயல்கள் நடந்துள்ளன. 1 அரசர் 17ல் எலியா தீர்க்கர் பஞ்ச காலத்
தில் சீதோன் பகுதியில் உள்ள சாரிபாத்துக்குப் போனார்.அங்கு ஏழை விதவையின் மகனை எலியா உயிர் பெற செய்தார். இரண்டாவதாக எலிசா தீர்க்கர் சூனேமுக்குச் சென்றார்.(2 அரசர் 4:27-37) அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர்அவரை உணவருந்தும்படிவற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்றபோதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார் . அவள் குழந்தை இல்லாதவள், ஆனால் அவளுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று எலிசா தீர்க்கத ரிசனம் கூறுகிறார். ஒரு வருடம் கழித்து அவள் ஒரு மகனைப்
பெற்றெடுத்தாள். ஒருநாள் எலிசா
கர்மேல் மலையில் தங்கி இருந் தார்.(வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு கடலோர மலைத்தொடர் ஆகும், இது மத்தியதரைக் கடலில் இருந்து தென்கிழக்கு நோக்கி நீண்டுள்ளது.இதற்கு மார் எலியா ஸ் அன்ற அரபு பெயரும் உண்டு)
சூனேமிபெண்ணின்(Shunammite's )மகன் இறந்துவிட்டான். அவனை தீர்க்கர் எலிசாவிடம் கொண்டு வந்தார்கள். அவர் அவனை உயிர்
பெற செய்தார். மூன்றாவதாக;
எலிசா இறந்து அடக்கம் செய்யப் பட்டுவிட்டார். அந்த இடத்தில்
"மக்கள் இறந்த ஒருவனைப் புதை த்துக் கொண்டிருந்த பொழுது, அங்கு கொள்ளைக் கூட்டத்தின ரைக் கண்டார்கள்; எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறை யில் போட்டு விட்டு ஓடினர். எலிசா வின் எலும்புகளின்மேல் அந்த உடல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான்.
(2 அரசர்கள் 13:21) ஓர் தீர்க்கரின்
எலும்பு பட்டு ஒருவன் உயிர் பெறும் ஆற்றல் ஆண்டவர் தம் ஊழியர்களுக்கு வரமாக கொடுத் திருக்கிறார். இந்த இரண்டு
பெண்களும் ஆண்டவர்மீதும், ஆண்டவரின் ஊழியக்காரர்கள்
உயிர்த்தெழுதல் செய்யும் வரமும்
வல்லமை பெற்றவர்கள் என்ற
ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்க ளாக இருந்தார்கள் என்பதே
பெரிய உண்மையாகும்.
2.வழக்காடும் வழக்கறிஞ்சராக பவுல் அடிகளார்.Paul became a litigious lawyer.திருத்தூதர் பணிகள்: Acts:26:12-23 .
உயிர்த்த கிறித்துவின் உண்மை
விசுவாசிகளே! கிறித்து உயிர்த் தெழுந்தார் என்பதை நிருபிக்க
திருத்தூதர் பவுல் அடிகளார் அகிரிப்பா அரசர் முன்பு ஒரு வழக்
கறிஞ்சராய் வாதிடுகிறார். (ஏரோது அக்ரிப்பா (ரோமானியப் பெயர் மார்கஸ் ஜூலியஸ் அக்ரிப்பா காலம் கி.மு 11 முதல் கி.பி 44 வரை, இவரை 2ம் ஏரோது என்றும் அழைக்கப்ப டுவார். இவர் யூதேயாவின் கடைசி யூத அரசர் ஆவார் ). It's actually a dramatic scene. முதல் மற்றும் பிரதான கேள்வியும் வாதமும்;
"தேவன் மரித்தோரை எழுப்புகி றது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?"
அகிரிப்பா அரசே! யூதர் எனக்கு எதிராகச் சாட்டும் அனைத்துக் குற்றங்களையும் பொறுத்த மட்டில் என் நிலையை இன்று உமக்குமுன் நான் விளக்கப் போகிறேன். இது எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு என்று கருதுகிறேன். நான் இளமை முதல் என் இனத்தாரிடை யே எருசலேமில் எப்படி வாழ்ந்து வந்தேன் என்பதையூதரனைவரும் தொடக்கமுதல் அறிவர். நான்
சமயத்தில் கண்டிபபான பரி சேயன்.நாசரேத்து இயேசுவை
ஏற்றுக் கொண்டவர்களை துன்பு
ருத்தினேன், பலரை சிறையில்
அடைத்தேன், மரணத்தை அளித்
தேன்.கடவுளைப் பழித்துரைக்க அவர்களைப் பலமுறை நான் இயேசுவை மறுதலிக்க கட்டாயப் படுத்தினேன்; தொழுகைக் கூடங் களிலும் அவர்களைத் தண்டனை க்கு ஆளாக்கினேன். மேலும் நான் வெளியே உள்ள நகரங்களுக்கும் சென்று, அங்குள்ளோர் மீது வெகுண்டெழுந்து அவர்களைத் துன்புறுத்தினேன்.
இதே எண்ணத்துடன் தான், தலைமை குருக்களிடம் அனுமதி பெற்று தமஸ்கு செல்லும் வழியில் நடுப்பகல் வேளையில், அரசே! கதிரவனை விட அதிகமாகச் சுடர் வீசியஒளிஒன்று வானிலிருந்து தோன்றி என்னை யும் என்னோடு வந்தவர்களையும் சுற்றி ஒளிர்ந்ததை நான் கண் டேன். நாங்களனைவரும் தரையி ல் விழுந்தோம். எபிரேய மொழி யில், "சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தாற்றுக்கோலை(pricks)உதைப்பதுஉனக்குக்கடினமாயிருக்கும்" என்று ஒரு குரல் ஒலித்ததைக் கேட்டேன். அதற்கு நான், "ஆண்டவரே நீர் யார்?" என்று கேட்டேன். அவர், "நீ துன்புறுத் தும்இயேசுநானே..என்றார்.உன்னை என் ஊழியக்காரனாயும், உயிர்த்தெழுதலின் சாட்சியாக தெரிந்துக் கொண்டேன். நீ அவர் களை இருளிலிருந்து ஒளிக்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து கடவுளிடம்திரும்புமாறு அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்வார்கள். "ஆகையால் அகிரிப்பா அரசே! அந்த விண்ணகக் காட்சிக்கு நான் கீழ்ப் படிந்தேன். இவ்வாறு பவுல் தம் நிலையை விளக்கிக் கொண் டிருந்தபோது, பெஸ்து Festus (Governor Festus is in authority over the king. ரோமானியப் பேரரசில் ஆளுநர்கள் அதிக அதிகாரம் உடையவர்கள். அகிரிப்பா ராஜா இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தார், ஆனால் ரோமானிய அதிகாரத்தின் கீழ் ஆட்சி செய் தார். . சீசர் மிக உயர்ந்த அதிகார மாக இருந்தார், மாகாணங்களின் மீதான ஆளுநர்கள் தங்கள் பிராந்தியத்தின் நாளுக்கு நாள் இயங்குவதில் மிகவும் தன்னாட்சி பெற்றவர்கள். ஆளுநர்களின் கீழ் உள்ளூர் மன்னர்கள் இருந்தனர், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் இல்லை. இந்த காரணத்திற்காக, இயேசுவும் ( பொந்து பிளாத்து) இப்போது பவுலும் ஒரு ரோமானிய அதிகாரியின் முன் மரண தண்டனை வழக்கில் விசாரிக்கப்படுகின்றனர்).
இவ்வாறு பவுல் தன் நிலையை
விளக்கிகொண்டிருந்த போது,
பெஸ்து உரத்த குரலில், "பவுலே! உனக்குப் பித்துப் பிடித்துவிட்டது; அதிகப்படிப்பு உன்னைப் பைத்தி யக்காரனாக மாற்றிவிட்டது" என்றார். அதற்குப் பவுல், "மாண் புமிகு பெஸ்துவே! எனக்குப் பித்துப் பிடிக்கவில்லை. நான் உண்மையோடும் அறிவுத்தெளி வோடும் பேசுகிறேன். அதற்குப் பவுல், "மாண்புமிகு பெஸ்துவே! எனக்குப் பித்துப் பிடிக்கவில்லை. நான் உண்மையோடும் அறிவுத் தெளிவோடும் பேசுகிறேன். அரசர் இவற்றை அறிவார்.ஆகவே நான் துணிவோடு அவர்முன் பேசுகின்றேன். உடனே, அகிரிப்பா பவுலை நோக்கி, "இவ்வளவு குறுகிய காலத்துக்குள் என்னைக் கிறிஸ்தவனாக்கி விடலாம் என நம்புகிறீரா?" என்றார். ஒரு அரசனை மாற்றும் சக்தி ஆண் டவரின் வார்த்தைக்கு உண்டு என்
பதை நாம் காண்கிறோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், ரோமானிய சட்டத்திற்கு எதிராக பவுல் கடுமையான குற்றங்க ளைச் செய்தார் என்று ஆளுநர் பெலிக்ஸ் Felix முன்பும் குற்றம் சாட்டினர். பவுலை தனது பதவிக் காலத்தில் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு வீட்டுக் காவலில் வைத்திருந்தார்.(திரு. தூதர் 24)
இறுதியாக தீர்ப்பு, "இவர் மரண தண்ட னைக்கோ சிறைத் தண்ட னைக்கோ உரிய குற்றம் எதையும் செய்யவில்லையே" என ஒருவ ரோடொருவர் பேசிக்கொண்டா ர்கள். அகிரிப்பா பெஸ்துவிடம், "இவர் சீசரே தம்மை விசாரிக்க வேண்டும் என்று கேட்டிராவிட்டால் இவரை விடுவித்திருக்கலாம்" என்று கூறினார்.
(திருத்தூதர் பணிகள் 26:32)
கிறித்து உயிர்த்தெழுந்தார் என்ப
தை நிருபிக்க பவுல் தன் வாதத்
திறமையால் வெற்றிக்கண்டார்.
பவுல் தனது கிறிஸ்தவ சாட்சிய த்தை சட்டப்பூர்வ வாதத்தின் வடிவத்தில் வழங்குவதன் மூலம் பதிலளிக்கிறார்.
3.உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. I am the Resurrection and Life.யோவான் 11:17-28.
உயிர்த்த கிறித்துவின் அன்பு
பற்றுறுதியாளர்களே! மரித்து
நான்கு நாட்களான லாசருவை
ஆண்டவர்உயிர்த்தெழசெய்கிறார்
லாசருவின் சொந்த ஊர் பெத்தா னியா. இதற்கு "துயர இல்லம்" அல்லது "துன்பத்தின் வீடு" எனப் பொருள்படும். இங்கு மரியா, மார்த்தா, இலாசர் ஆகியோரின் வீடும், "தொழுநோயாளர் சீமோன்" என்பவரின் வீடும் இருந்த நகரமா கக் குறிப்பிடப்படும்.பெத்தானியா எருசலேமிலிருந்து கிழக்காக ஒன்றரை மைல் (2 கி.மீ) தொலை யில் உள்ளது.இவர்கள் இயேசுவு க்கு ரொம்ப நெருக்கமான நண்பர் கள். லாசருவின் சகோதரி மரியா தான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத் தவர். ஒருநாள் மார்த்தாளும் மரியாளும், ‘லாசரு ரொம்ப உடம்பு முடியாமல் இருக்கிறான். சீக்கிர மாக வாருங்கள்’ என்று இயேசுவு க்கு அவசரமாக செய்தி அனுப்பி னார்கள்.அப்போது இயேசு பெரேயா மாகாணத்தில் இருந் தார். அவர் உடனடியாகக் கிளம்பாமல் இன்னும் இரண்டு நாட்கள் அங்கேயே இருந்தார். பிறகு தன் சீடர்களிடம், ‘லாசரு தூங்கிக்கொண்டிருக்கிறான். நான் அவனை எழுப்ப வேண்டும். வாருங்கள், பெத்தானியாவுக்குப் போகலாம்’ என்று சொன்னார். அதற்கு சீடர்கள், ‘லாசரு தூங்கி னால், அவனுக்கு உடம்பு சரியாகி விடுமே’ என்று சொன்னார்கள். அப்போது இயேசு, ‘லாசரு இறந்து விட்டான்’ என்று அவர்களிடம் தெளிவாகச் சொன்னார்.இயேசு பெத்தானியாவுக்கு வந்தபோது லாசருவை அடக்கம் செய்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் ஆறுதல் சொல்ல நிறைய பேர் வந்திருந்தார்கள். இயேசு வந்திருக்கிறார் என்று தெரிந்த வுடன் மார்த்தாள் அவரைப் பார் க்கவேகமாகப்போனாள்.அவரைப் பார்த்ததும், “ஆண்டவரே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டா ன்” என்றாள். அப்போது இயேசு, ‘உன் சகோதரன் மறுபடியும் உயிரோடு வருவான். மார்த்தாளே, நீ இதை நம்புகிறாயா?’ என்று கேட்டார். அதற்கு மார்த்தாள், ‘உயிர்த்தெழுதல் நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று நம்புகிறேன்’ என்றாள். இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழு தலும்வாழ்வுமாகஇருக்கிறேன்” என்று சொன்னார்.பிறகு மார்த் தாள், ‘இயேசு வந்திருக்கிறார்’ என்று மரியாளிடம் போய்ச் சொன்னாள். மரியாள் அவரைப் பார்க்க ஓடினாள். அங்கே இருந்த வர்களும்அவள்பின்னால்போனார்கள். அவள் இயேசுவின் காலில் விழுந்து அழுதாள். அவளால் அழுகையைஅடக்கமுடியவில்லை. அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைப் பார்த்து, ‘இவரு க்கு லாசருமேல் எவ்வளவு பாசம்’ என்று அங்கே இருந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் சிலர், ‘இயேசு ஏன் தன் நண்பரைக் காப்பாற்றவில்லை?’ என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள்.
இயேசு கல்லறைக்குப் போனார். அதன் வாசல் ஒரு பெரிய கல்லா ல் மூடப்பட்டிருந்தது. ‘அந்தக் கல் லை எடுத்துப் போடுங்கள்’ என்று இயேசு சொன்னார். அதற்கு மார்த் தாள், ‘அவன் இறந்து நான்கு நாள் ஆகிவிட்டது, நாறுமே’ என்று சொன்னாள். ஆனாலும் அந்தக் கல்லை எடுத்துப் போட்டார்கள். அப்போது இயேசு, ‘தந்தையே, என் விண்ணப்பத்தைக் கேட்பதற்காக நன்றி. நீங்கள் எப்போதுமே என் ஜெபத்தைக் கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால், நீங்கள் தான் என்னை அனுப்பினீர்கள் என்று இந்த மக்கள் புரிந்து கொள் ள வேண்டும். என்றார். பிறகு, “லாசருவே, வெளியே வா” என்று சத்தமாகக் கூப்பிட்டார். அப்போது, ஆச்சரியத்திலும் ஆச்சரியமான சம்பவம் நடந்தது! லாசரு கல்ல றையை விட்டு வெளியே வந்தார். அவருடைய உடல் நாரிழை துணிகளால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அங்கே இருந்தவர்களிடம், ‘இவனுடைய கட்டுகளை அவிழ்த் துவிடுங்கள், இவன் போகட்டும்’ என்று சொன்னார்.அதைப் பார்த்த நிறைய பேர் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள். ஆனால், சிலர் பரிசேயர்களிடம் போய் அதைப் பற்றிச் சொன்னார்கள். அப்போதிலிருந்து இயேசுவையும் லாசருவையும் கொல்ல பரிசே யர்கள் வழிதேடினார்கள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உயிர்த்த ஆண்டவர் விண்ணகம் செல்ல இந்த பெத்தா னியாவையே தேர்ந்தெடுத்தார்.
(லூக்கா நற்செய்தி 24:50)
உயிர்த்த கிறித்துவில் அசையாத
நம்பிக்கை வைப்பதே நம் ஒவ் வொருவரின் தலையாய கடமை
யாகும். ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
Comments
Post a Comment