Encounter with the Risen Lord.உயிர்த் தெழுந்த ஆண்டவருடன் சந்திப்பு.(134) First Sunday, after the Resurrection. தொடக்க நூல் (Genesis): 32: 22-32. திரு.பாடல் (Psalms):40. திருத்தூதர் பணிகள் (Acts):9:1-18. யோவான்: 20: 24-29.
முன்னுரை: உயிர்த்தெழுந்த கிறித்துவை உன்னத கடவுளாய்
ஏற்றுக் கொண்ட அனைவருக்கும்
இறைமைந்தன் இயேசுவின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
Encounter என்றால் சந்தித்தல் or
எதிர்படுதல் என பொருள்படும்.
Encounter is to meet some one unexpectedly.
1.Magdalena Mary Encounter with the
Risen Lord. Luke: 24:1-12. அன்பர்களே!மகதலேனா மரியாள் (Mary Magdalene, மேரி மக்தலீன்) புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக முக்கிய பெண் சீடர் . இவர் "நம்பிக்கையின் திருத்தூதர்" என, நற்செய்தியால் சுட்டிக்காட்டப் படுகிறார்.இந்தவார்த்தை100க்கு
100 மகதலேனா மரியாவுக்கு பொருந்தும் இயேசு, உயிர்த்த நாளின் காலையில், மரியா, இயேசுவின் கல்லறைக்குச் சென் றார், காலியான கல்லறையை அவர் கண்டார், என் ஆண்டவரை காண வில்லை என கண்ணீரோடு அங்கலாய்த்து கல்லறையிலே இருந்தார். ஆண்டவரின் கடைசி நற்கருணையில் பங்கு பெற்ற பிரதான சீடன் பேதுருவும்
அன்பான சீடன் யோவானும்
கல்லறைக்கு வந்தார்கள், திரும்பி
சென்றார்கள். ஆனால் மரியாளோ
இந்த கல்லறையில் என்ன நடக்கி
றது என புரியாமல் நின்று கொண்
டிருந்த நிலையில்,ஆண்டவர்;
"மரியாளே" என அழைக்கிறார்.
இதுவே, உயிர்த்த கிறித்துவின்
முதல் சந்தித்தல் First Encounter with Mary Magdalene.மரியா இயேசுவின் கடைசி நாட்களில் கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது (அன்பிற்குரிய யோவானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடிய போதும் பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். எனவே, இவருக்கு
ஆண்டவர் அளித்த பரிசு" உயிர் த்த கிறித்துவின் முதல் சந்திப்பு.
இவர்தான் அப்போஸ்தலர் என்கி
ற திருதூதர்களுக்கு அப்போஸ்த லியாக திருத்தூதரைத்தவள்.
2.Emmau Disciples Encounter with the Risen Lord. St.Luke 24:12-35.
உயிர்த்த ஆண்டவருடன் சந்தித்த
எம்மாவு சீடர்கள் ஆண்டவரின்
இரண்டாவது சந்திப்பு.
வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த ஊரின் பெயர் எம்மாவு.இந்தச் சீடர்கள் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்கள் அல்லர். ஒருவேளை இயேசு தனக்கு முன் இருவர் இருவராய் அனுப்பிய 72 அல்லது 70 சீடர்களில் இருவராக இவர்கள் இருக்கலாம்.இந்த இருவரில் ஒருவர் பெயரை மட்டும் கிளயோப்பா என பதிவு செய்கி றார் லூக்கா.அவர்கள் வேகமாக வும், பதற்றமாகவும் நடந்திருப் பார்கள் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது. ஏன் இந்த வேகம்? ஏன் இந்த பதற்றம்? ஏன் இந்த கலக் கம்? தங்கள் சொந்த ஊரை, எருசலேமை, இவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? தங்கள் தலை வரை அது சிலுவையில் அறைந்து கொன்றதலா? அல்லது தங்களை யும் தேடி அது வருவதாலா? இப்படி கலக்கத்தோடும் பயத் தோடும் செல்லும் சீடர்கள் மத்தி யில் ஆண்டவர் தன்னை இணைத் துக் கொள்கிறார்.வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?' எனக்கேட்கின்றார். அவர்கள் அவரிடம், ``நாசரேத்து இயேசு வைப் பற்றியேதான் பேசுகின் றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சி யாளர்களும் அவருக்கு மரண தண்டனை விதித்துச் சிலுவை யில் அறைந்தார்கள். இவையெல் லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண் களுள் சிலர் எங்களை மலைப் புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன் னார்கள். ஆண்டவர்,மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனை வரின் நூல்களிலும் தம்மைக் குறி த்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர்களுக்கு விளக்கினார். அவர்கள் தாங்கள் போகவேண் டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிற வர் போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், ``எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று'' (Abide in us)என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அல்லேலூயா!
உடனே, ஆண்டவர் மறைந்து போனார்.அவர்கள் ஒருவரை யொருவர் நோக்கி, "வழியிலே அவர் நம்மோடு பேசி,மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" என்று பேசிக் கொண்டார்கள். அந்த பற்றி எரியும் அனுபவமே தூயஆவியின் அனுபவம். ஒவ்வொருகிறிஸ்தவர் உள்ளம், அந்த பற்றி எரியும் அனுபவத்தை பெற வேண்டும்.
ஆண்டவர், தன் ஊழியத்தில் மூன்று பேரை உயிரோடு எழுப்பினார்.தீர்க்கர்கள் எலியா. எலிசா, திருதூதர்கள் பேதுரும்,
பவுல் மரித்தவர்களை ஆண்ட வரின் வல்லாமையால் உயிருடன் எழுப்பினார்கள் நாம் அனைவரும், உயிர்தொழு வோம் என்ற நம்பிக் கையை ஆண்டவரின் உயிர்த்தெ ழுதல் கொடுக்கிறது.அன்பானவர்
களே! ஆண்டவர் சந்தித்த முதல்
இரண்டாம் நிகழ்வில் பங்கு பெற்றவர்கள் யாருமே, பிரதான மானவர்கள் அல்ல;
3. யாக்கோபு கடவுளை எதிர் கொள்ளுதல்.Jacob encounters
with God.தொடக்க நூல் (Genesis): 32: 22-32.
கிறித்துவின் அன்பர்களே!
யாக்கோபு கானானுக்குத் திரும்பும் பயணத்தின் போது யாபோக்கு (சர்க்கா நதி என அழைக்கப்படு கிறது. இது யோர்தானில் (Jordan) உள்ளது.) ஆற்றங்கரையில் தனியாக இரவைக் கழித்தார் . அவர் ஒரு "மனிதனை" (இறை தூதன்) சந்திக்கிறார், அவர் விடியும் வரை அவருடன் மல்யுத்த ம் செய்கிறார். அவர் தனக்கு எதிராக சக்தியற்றவராக இருப்ப தைக் கண்டார். அவர் யாக்கோ பின் தொடையின் சந்து விலக அடித் தார், அவருடன் அவர் போராடி யதில் யாக்கோபின் தொடையி ன்சந்து சிதைந்தது.
அவர், "என்னை விடுவிக்கவும், ஏனென்றால் விடியல் உடைந்து விட்டது!" நீ என்னை ஆசீர்வதித் தால் அன்றி, உன்னை விடுவிக்க மாட்டேன்! என்றார். அந்த இறை
தூதன் அவரிடம், "உன் பெயர் என்ன?" அவர், "யாக்கோபு" என் றார் , " நீங்கள் கடவுளுடனும் மனிதர்களுடனும் போராடினீர்கள், நீங்கள் திறமையானவர்!" என
அவரை ஆசீர்வதித்தார். யாக் கோபு அந்த இடத்திற்கு பெனியேல் என்று பெயரிட்டார் ,இறுதியில், யாக்கோபுவை "இஸ்ரேல்" என்று பெயரிடப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார், இதனை
தொடர்ந்து தன் சகோதரன் ஏசாவை சந்திக்க பயணமாகிறார்.
Jacob Encounters with Easa. யாக்கோபு தன் சொந்த சகோத ரான ஏசாவை அவர் இரண்டு முறை ஏமாற்றினார்.முதல்முறை யாக தலைமகனுக்குறிய உரிமையையும், தந்தை வழங்கும் ஆசிர்வாதத்தையும் ஏமாற்றி பரித்துக்கொண்டான்.எனவே,இவர்தன்சொந்தமாமனார் லாபானால், திருமணத்தில் லேயாளுக்கு பதிலாக ராக்கேலை கொடுத்து ஏமாற்றினான், கூலி விசயத்தில்
10 முறை மாற்றியமைத்து ஏமாற்றினான். இது நமக்கு பாடம்.
நாம் எதை விதிக்கிறேமோ அதையே அறுப்போம்.
யாக்கோபை கண்டவுடன் கொன் று போடுவேன் என இருந்த ஏசா; தன் சகோதரன் யாக்கோபுதனக்கு முன் சென்று தம் சகோதரர் ஏசாவை நெருங்கிச் சென்று ஏழு முறை தரையில் வீழ்ந்து அவரை வணங்கினார். ஆனால்ஏசாவோ அவருக்கு எதிர் கொண்டு ஓடி அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர். (தொடக்கநூல் 33:3,4)
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்
தாழ்" என ஏசா தன் சகோதரன்
யாக்கோபை ஆண்டவர் கூறிய
ஏழு முறையல்ல ஏழு எழுபது முறைக்கு சமமாக மன்னிக்கவும் செய்கிறார்.அன்பு சினமடையாது,
தீங்கு நினையாது.சகோதர உறவில், ஏசா இயேசுவைப் போல்
உயர்ந்து நிற்கிறார்.
4. பவுல் உயிர்த் தெழுந்த ஆண்டவருடன் சந்திப்பு.Jesus encounters with Paul.திருத்தூதர் பணிகள் (Acts):9:1-18
கிறித்துவின் அன்பர்களே!
இயேசு கிறித்து உயிர்தெழுந்த
நான்கு ஐந்து வருடங்களில்
சவுல் என்கிற பரிசேயன் தேவால யத்தை அழிக்கத் தொடங்கினார். வீடு வீடாகச் சென்று ஆண், பெண் இருவரையும் இழுத்துச் சென்று சிறையில் அடைத்தார் ( அப்போஸ் தலர் 8:3 ).
திருதூதர் ஸ்தேவான்மீது கல்
லெறிந்தபோது அவர், "ஆண்ட வராகிய இயேசுவே, எனது ஆவி யை ஏற்றுக்கொள்ளும்" என்று வேண்டிக் கொண்டார். ஸ்தேவா னைக் கொலை செயவதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார். அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவி ன் நாட்டுப்புறமெங்கும் சிதறடிக் கப்பட்டுப் போயினர். (திருத்தூதர் பணிகள் 8:1) சவுல் ஏன் கிறிஸ்த வர்களின்மீது இவ்வளவு காட்ட மாக இருந்தார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.கிறிஸ்தவை நெறியைப் பின்பற்றி வந்தவர் களைக் கைது செய்து, எருசலே மிற்கு இழுத்துக்கொண்டு வர சவுல் தமஸ்கு (Damascus- an ancient city , it's now the capital of Syria a country of terrorism, civil unrest frequent bombardment), நகர் நோக்கிச் செல்கின்றார். எப்படி மெசியாவாக முடியும்?’ என்று கிறிஸ்தவநெறியைப் பின்பற்றி வந்தவர்களையெல்லாம் கொன் றொழிக்கத் திட்டம் தீட்டுகின்றார். இதையெல்லாம் அவர் ஒரு சமயக் கடமையாகவே செய்கின்றார். இப்படிப்பட்ட சமயத்தில்தான் அவர் தமஸ்கு நகர் நோக்கிச் சொல்லும் வழியில் (The RisenGod encounters Saul on the way to Damascus) இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். இந்த நிகழ்வில் இயேசு சவுலிடம் பேசுகின்ற, “சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகின்றாய்?” என்ற வார்த்தைகள் மிகவும் கவ னிக்கத் தக்கவை. It's highly painful word in the Bible. இவ்வார்த்தைகள் நம்மை சிந்திக்கவைக்கின்றன. Am I paining my God? நான் என் தவறான செயலால் ஆண்டவரை துன்புறுத்துகிறேனா?
அவர் தனது பயணத்தில் டமாஸ்கஸை நெருங்கியபோது, திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றி பிரகாசி த்தது. அவர் தரையில் விழுந்து, "சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்று ஒரு குரல் கேட்டது.
"நீங்கள் யார், ஆண்டவரே?" என்று சவுல் கேட்டார்.
"நீங்கள் துன்புறுத்தும் இயேசு நானே" என்று அவர் பதிலளித் தார். "இப்போது எழுந்து நகரத் திற்குப் போ, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று உங்களுக்குச் சொல்லப்படும்."
சவுலுடன் பயணித்தவர்கள் பேசாமல் நின்றனர்; அவர்கள் சத்தம் கேட்டனர் ஆனால் யாரை யும் பார்க்கவில்லை. சவுல் தரை யில் இருந்து எழுந்தான், ஆனால் அவன் கண்களைத் திறந்தபோது அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவரை தமஸ்குவுக்குக் கைப் பிடித்து அழைத்துச் சென்றனர். அவர் மூன்று நாட்கள் பார்வைய ற்றவராக இருந்தார், எதையும் சாப்பிடாமல் அவர் உபவாசம் இருந்தார். யோனா பெரிய மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் கழித் தார். இயேசு மூன்று நாட்கள் கல்லறையில் இருந்தார். எண் மூன்று தெய்வீக முழுமையைக் குறிக்கிறது.
ஆண்டவர் அவரை அனனியா என்ற சீடனிடம் அனுப்புகிறார். அவரிடம், "நீ செல். அவர் பிற இனத்தவருக்கும், அரசருக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் (Paul encountering with Three dimensional
Approach.The Gentiles, the Kings and the Israelites, nobody had three assignments by God even to the Chief disciple Simon Peter)முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவி யாய் இருக்கிறார். நாம் அனைவ
ருமே கடவுளால் தெரிந்துகொண்ட
கருவிகள்தான்...
5.ஆண்டவர் தாமஸ் உடன் சந்தி
த்தில். Jesus encounters with Thomas.யோவான்: 20: 24-29.
உயிர்த்த கிறித்துவின் உன்னத
அன்பர்களே!
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவ ரான தாமஸ், இவரை குறித்து யோவான் நற்செய்தியில்தான் அதிகமாக கூறப்பட்டுள்ளது.
இந்த சந்தேகத்திற் குரிய மனித நிகழ்வுக்கு(DoubtingThomas)உதாரண மாகச் செயல்படுகிறார். கடவுளின் வார்த்தையின் உண் மைகளை ஒருவர் சந்தேகிக்க முடியும், ஏனென்றால் தாமஸ் உயிர்த்தெழுதலின் உண்மையை சந்தேகித்தார். கடவுளுடைய வார்த்தையின் உண்மைகளை சந்தேகிப்பது நல்லதா?
அவர் உயிர்த்தெழுந்த நாளின் ஆரம்ப மாலையில், கிறிஸ்து சீடர்கள் மத்தியில் தோன்றினார், அதே சமயம் பன்னிருவரில் ஒருவராக இங்கு வழங்கப்பட்ட தாமஸ் அங்கு இல்லை. சீடர்க ளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில்
இல்லாமல் தனித்து இருந்தார்.
அதனால் உயிர்த்த கிறித்துவின்
உன்னத தரிசனத்தை காண வில்லை. மற்ற சீடர்கள் அவரிடம், “நாங்கள் ஆண்டவரைக் கண் டோம்” என்றார்கள். அவர் மரித் தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், உயிருடன் இருக்கிறார் என்பதை இது உணர்த்துகிறது. ஆனால்
ஆண்டவர்உயிர்த்துவிட்டார்
(Jesus is risen) என மற்ற திருத் தூதர்கள் சொன்னதை முதலில் நம்ப மறுத்ததால் இவர் 'சந்தேக தோமா' (Doubting Thomas) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.
தோமா' என்னும் அரமேய மொழிச் சொல்லுக்கு இரட்டையர் என்பது பொருள். இதற்கு இணையான சொல் திதைமுஸ் (Didymus,
"நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" (யோவான் 20:28) You are my Lord and my God என்று உயிர்த்த இயேசுவை நோக்கி இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் புகழ்பெற் றவை.இது அவரின் தூய உள்ள த்தை வெளிப் படுத்துகிறது. இவர் துணிவு நிறைந்தவர்.இயேசு, “மீண்டும் யூதேயாவுக்குப் போ வோம், வாருங்கள்” என்று சீடர் களிடம் கூறியபோது, அவர்கள் அவரிடம், “ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார் கள்.அதேநேரத்தில் தோமா மற்ற சீடர்களிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்று துணிவுடன் கூறியதை காண்கி றோம். He was ready to die for Christ.
இயேசு இறுதி இரவுணவு வேளை யில், தாம் விண்ணகத்திற்கு செல் வது குறித்து மறைபொருளாக பேசிக் கொண்டிருந்தபோது, தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக் குத்தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள் ள இயலும்?” என்று கேட்கிறார். அவரது கேள்விக்கு விடையாக வே,ஆண்டவர் “வழியும் உண் மையும்வாழ்வும் நானே" என்ற இயேசுவின் வார்த்தைகள் வெளிப்பட்டன. Thomas was very
Straight forward. ஒளிவு, மறைவு
அவரிடம் இல்லை.
உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதாக மற்ற சீடர்கள் கூறிய போது, தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிக ளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டா லன்றி நான் நம்பமாட்டேன்"
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற முதுமொழிக்கு இணங்கச் செயல்பட்டார். இதனால் இவரு
க்காகவே ஆண்டவர் உயிர்த்த
எட்டு நாள்களுக்குப்பின் அவரு டைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமா வும் அவர்களோடு இருந்தார். கத வுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தி னார். பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர் த்து நம்பிக்கைகொள்" என்றார்.
இது தோமாவின் உள்ளத்தை நொருக்கியது;உடனே,தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!("My Lord and My God")என்றார். தோமா உடனே மன்னிப்பை கேட்டிருக்க வேண்டும், ஆனால் அவர் தன் நம்பிக்கையை கண்டதினால் வெளிப்படுத்தி ஆண்டவரே என் கடவுள் என்று அறிக்கை இடுகி றார்.
நம்பிக்கை (belief) என்பது ஓர் உளவியல் சார்ந்தது. ஒருவர் ஒருவரின் மீது வைக்கும் மிகுந்த பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது.
இயேசு தோமாவுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமான ஒரு விஷயத்தைச் சொன்னார்: “நீங்கள் என்னைக் கண்டதால் நம்பினீர்களா? பார்க்காமல் இருந்தும் விசுவாசித்தவர்கள் பாக்கியவான்கள்” இது நமக்கு
ஒரு பாடம். நாம் சில நேரங்களில்
ஆண்டவரின் வார்த்தையில்
நம்பிக்கை வைப்பதில்லை. தோமாவின் அர்ப்பணிப்பான
வார்த்தை என் ஆண்டவரே என்
கடவுள் என்பதே. இந்த நிகழ்வில்
ஆண்டவர் 11 சீடர்களை உயிர்த் தெழுந்து சந்தித்து விட்டார்.
இந்த சந்திப்பு நிகழவில்லை எனில் தோமா இந்தியாவிற்கு
வந்திருக்க முடியாமல் போயிருக் கும். ஆனால், கி.பி 52ல் கேரளா
விற்கு தோமா வந்தார்.முதல்
திருச்சபையை நிறுவினார்.கி.பி
72ல் தமிழகம் வந்தார் சென்னை மைலாபூரில் கொள்ளப்பட்டார்.
ஆண்டவரின் இரத்த சாட்ச்சி யானார். கிறித்துவே, எங்கள்
பற்றுறுதியை கடைசி வரை காத்துக் கொள்ளும். ஆமேன்.
Prof. Dr.David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
திருத்தூதர் புனித தோமா Saint Thomas (Apostle) | |
---|---|
"தோமாவின் ஐயம்" – கரவாஜியோ |
Comments
Post a Comment