உயிர்ப்பின் அனுபவத்தின் மூலம் சமுகத்தை கட்டமைத்தல்.(136) Community Formation Around Resurrection Experience. ஏசாயா 25:1-9, திருப்பாடல் 126, திருத்தூதர் பணிகள் 4:32-37. லூக்கா 24:13-35. Third Sunday After Resutrection.

முன்னுரை:
கிறிஸ்துவிற்கு மிக பிரியமான வர்களே! உங்கள் அனைவருக்கும்
உயிர்த்தெழுந்த கிறித்துவின்
நாமத்தில்வாழ்த்துக்கள்."உயிர்ப்பின் அனுபவத்தின் மூலம் சமுகத்தை கட்டமைத்தல்" என்ற தலைப்பில்சிந்திக்கஇருக்கிறோம்.சமுதாயம்" என்பது லத்தீன் வார்த்தையான societas, என்ற சொல்லில் இருந்து வந்துள்ளது. இதுவும் தோழர், நண்பன், நட்பு என்ற பொருள் கொண்ட socius என்றசொல்லில் இருந்து பிறந்த தாகும்.சமூகம் (Society) என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும்,ஒரேமாதிரியானபுவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமுகம் எனலாம்.இயேசுவின்
காலத்திய சமூகத்தில் விவசாயி கள் அதிகமாக இருந்தனர். அவர்களில் குத்தகை விவசாயி கள், கூலி தொழிலாளிகள் (மத்தேயு 21:33, மாற்கு12) அதிகம்.இவர்கள் ஏழைகள்.
பாலஸ்தீனத்தில் நாடோடிகள் (nomads) சிறு குழுக்களாக ஆடுகளை ஊர் ஊராக தங்கி 
மேய்த்து வந்தனர்.சிலர் மீன் பிடிப்
பவராகவும், இயேசுவின் குடும்பத் தினர் போல தச்சு, வீடு கட்டுதல்
போன்றதொழில்செய்தனர்.இவர்களின் வருமானம் ரோமர்களுக்கு
வரிசெலுத்தவேசரியாகஇருந்தது.
ரோமர்கள் நான்குவிதமான வரி
களை; அதாவது கால்நடை வரி, நில வரி, சுங்க வரி மற்றும் தொழி
ல் வரி வசுலித்தார்கள். எனவே, 
பாலஸ்தீனர்கள் மிகவும் கஸ்ட்டப்
பட்டார்கள். இதனால் யூத சமுகம்
ரோம ஆட்ச்சியாளரை வெறுத்த னர். சமுகம் என்பது சங்கீதக் காரன் கூறுவதுபோல்;
சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 133:1) என்ற வார்த்தைக்கு
ஏற்ப நம் நலனுக்காகவும், சமுக
நலத்துக்காகவும் நாம்"ஊரோடு ஒத்து வாழ்." என்பர்.     கிறிஸ்தவர்களின்  தலையாக கடமை சமூகத்தோடு இணக்கமாக வாழ்வதுதான் சமூக மக்களுக்கு அருட்பணி ஆற்றுவதே ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கும் உன்னத நோக்கமாகும். உயிர்த்த கிறித்து
தன் சீடர்களை ஒன்று சேர்த்து
சந்திக்கிறார். இதன் மூலம் கூட்டு
றவை வளியுருத்துகிறார்.
1. சமுகத்தை கட்டமைக்க கிறித்தவர்களின் கடமை என்ன?
கிறித்துவின் அன்பர்களே! நாம்
பன்முக சமுகத்தில் ஒரு அங்க மாக இருக்கிறோம். ஆண்டவர்
வழியில் சமுக பணியாற்றுவது
நம் கடமையாகும். நம்முடைய அருட்பணியாளர்கள் இந்தியாவி ற்கு கி.பி 1813ல் முதல் வரத்தொட ங்கினர். இவர்கள் மதத்தை மட்டு ம் பரப்பும் நோக்கத்திற்காக வர வில்லை. கல்விப்பணி, மருத்துவ
பணி இரண்டையும் இரண்டு
கண்களாக கொண்டு மக்களுக்கு
அருட்பணியாற்றினார்.இது ஆண் டவரின் அருட்வார்த்தையான;
"இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலரு டைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார். 
(மத்தேயு நற்செய்தி 20:28)எனவே,
கிறித்தவர்கள் சமுதாயத்திற்கு தொண்டு செய்வதே; தலையாய
கடமையாகும். இதன்மூலம் உயிர்
த்த கிறித்துவின் செயலாற்றும்
தன்மையை சமுக கட்டமைப்பில்
பங்காற்றசெய்கிறோம்.திருச்சபை
என்பது திருப்பணியாற்றுவதே.
Back to basic.நமது அடிப்படையே
திருப்பணியாற்றுவது.திருப்பணி
ஆற்றாமல் நல்ல சமுகத்தை கட்ட
மைக்க முடியாது.திருப்பணிகள்
மூலமே இறையரசை இவ்வுலகில்
கொண்டுவரமுடியும்.ஆண்டவர்;      "ஏனெனில் நான் பசியாய் இருந் தேன், நீங்கள் உணவு கொடுத்தீர் கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னி யனாகஇருந்தேன்,என்னைஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்;நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண் டீர்கள்; சிறையில் இருந்தேன், என் னைத் தேடி வந்தீர்கள்" என்பார். 
(மத்தேயு நற்செய்தி 25:35,36)இத்த
கைய, அருட்பணிகளை ஆற்று வது உயிர்த்த கிறிஸ்துவை சமு தாயத்தை கட்டமைக்கும் வழிக ளாகும்.
2. கர்த்தாவே! நீரே என் கடவுள். My God, you are my Lord. ஏசாயா 25:1-9.
கிறித்துவின் அன்பர்களே! ஏசாயா
தீர்க்கர் சீயோன் மலையில், ஆண்டவர் நடத்திய "உலகலாவிய
விருந்தை" The feast of the world. பற்றிய  தீர்க்கதரிசன நன்றியின் பாடலாக Thanks giving songs. இவ் அத்தியாயம்இருக்கிறது.கர்த்தாவே, நீரே என் தேவன்; இரண்டு வாக்குறுதிகள்: 1)நான் உன்னை உயர்த்துவேன், 2) உமது நாமத்தி ற்கு நன்றி செலுத்துவேன்;
தீர்க்கதரிசி கடவுளையே துதிக்க தீர்மானிக்கிறார்; ஏனென்றால், மற்றவர்களைத் துதிக்க தூண்டு வதை காட்டிலும்; முதலில் தங்க ளைத் தாங்களே கடவுளைத் துதிக் கத் தூண்ட வேண்டும் .கர்த்தரைத் தங்கள் தேவனாகக் கொண்டவ ர்கள் அவரைத் துதிக்கக் கட்டுப்பட் டவர்கள்; ஆண்டவர் இஸ்ரவேலரு க்காக அற்புதங்களைச் செய்துள் ளார்,அவர்கொடுங்கோலர்களிடமிருந்து  விடுவித்திருக்கிறார்.
"கொடுங்கோலன்" என்ற சொல் மூன்று வசனங்களில் (3, 4, 5) மூன்று முறை மீண்டும் மீண்டும் வருகிறது.கர்த்தாவே! நீரே என் கடவுள், என்னுடன் உடன்படிக்கை செய்த தேவன்." தேவன் பூமியின் மீது பூமியின் ராஜாக்களைத் தண்டித்து , அவர்களைத் தமக்கு முன்பாக நடுங்கச் செய்யும் போது, ​​ஒரு ஏழை தீர்க்கதரிசி அவரிடம் சென்று, அடக்கமான தைரியத் த்துடன், ஆ! ஆண்டவரே! நீரே என் தேவன், ஆகையால் நான் உம்மை உயர்த்துவேன், உமது நாமத்தைத் துதிப்பேன். ஆதலால் , நாம் அவருக்குப் பெயருக்காகவும் புகழுக்காகவும் இருக்கும்படி அவர் நம்மைத் தம்முடைய மக்களாக ஏற்றுக் கொண்டார் . கடவுளைத் துதிப்பதில் நாம் அவரை உயர்த் துகிறோம்; அவரை மகிமைப்படு த்துகிறோம்.இந்த தீர்க்கதரிசனம் பாபிலோனின் அழிவிலும், யூதர் களை அங்குள்ள சிறையிருப்பி லிருந்து விடுவிப்பதிலும் ஒரு சாதனையைப் பெற்றிருக்கிறது.
அவர் குறிப்பாக பூமியின்வலிமை மிக்கவர்களின் பெருமையைத் தாழ்த்தி, அதிகாரத்தை உடைத்து ள்ளார்.மற்றவர்களும் கடவுளைத் துதிக்கக் கொண்டுவரப்படுவார் கள் என்ற எண்ணத்தில் அவர் தன்னை மகிழ்விக்கிறார்,கர்த்தர் ஏழைகளுக்கு அடைக்கலமாகவும், வெப்பத்திலிருந்து நிழலையும், மழைக்காலத்திலிருந்து தங்கு மிடமாகவும் இருக்கிறார் (25:4). அவர் இஸ்ரவேலுக்கு மட்டுமல்ல, "எல்லா மக்களுக்கும்" நம்பிக் கையைஅளிக்கிறார்.கடவுளுடைய ராஜ்யத்திற்கு விரோதிகளாக இருந்து, அதன் நலன்களுக்கு எதிராக மிகுந்த வலிமையுடனும், பயங்கரத்துடனும் போராடியவர் கள், ஒன்று மனமாற்றம் அடைந்து, கடவுளின் சேவையில் அவருடைய மக்களுடன் சேர்ந்து கடவுளை மகிமைப்படுத்துவார்கள், தீர்க்கர்
உயிர்த்த கிறித்துவை இங்கு
பிரதிபலிக்கிறார்.மரணத்தை தன்
உயிர்ப்பின் மீது வெற்றிக் கொண்டார்.அதனால் என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிரு ந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். 
 அந்நாளில் அவர்கள் சொல்வார் கள்; இவரே (இயேசு கிறித்துவை) நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந் தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம். " 
(எசாயா 25:9) என மீட்பரே நம்
ஆண்டவர் அவரே நம் கடவுள்
என்பதை சமுகத்தை கட்டமைப் பதே நம் கடமை. இதன் மூலம் உயிர்த்த கிறித்துவ சமுதாயத்தில் பிரதிபலிக்கிறோம்..
3.பற்றுறுதியாளர்களின் அடை யாளம் ஒரே உள்ளம் ஒரே உயிர். One heart and one mind are the nature of the believers.  திருத்தூதர் 4:32-37
கிறித்துவிற்கு பிரியமானவர் களே! திருத்தூதர்கள் பேதுருவும் 
யோவானும் உயிர்த்தகிறித்துவை
சமுகத்தில் கட்டமைக்க (எருசலேம் நகரில்) அவர்கள்முதல் ஆயுதமாக கையில் எடுத்தது ஜெப விண்ண ப்பமே. " ஆண்டவரின் நாமத்தின் பெயரில் அவர்கள் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நல மளியும்; அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும்." என வேண்டினர்.உடனே அவர்கள் கூடியிருந்த இடம் அதிர் ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால்ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க்கடவுளின்வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர். 
விசுவாசிகளால் மட்டுமே ஒரு விசுவாசமான சமூகத்தை உருவா க்க முடியும்.அவர்கள் "ஒரேஇதயம் மற்றும்ஆன்மா",ஒருவருக்கொருவர் ஆழமாக ஐக்கியப்பட்டவர்கள்;
"எந்தவொருஉடைமைக்கும்யாரும் தனிப்பட்ட உரிமைகோரவில்லை, ஆனால் அவர்களுக்குச் சொந்த மானஅனைத்தும்பொதுவானவை";அவர்கள் "கர்த்தராகிய இயேசு வின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சி யமளித்து"மிகுந்தவல்லமையுடன், அடையாளங்கள் மற்றும் குணப் படுத்துதல்கள் மூலம் "அவர்கள் அனைவரின் மீதும் மிகுந்த கிருபை இருந்தது".அவர்களில் ஒருவரும் தேவையில்லாத நபர் இல்லை, ஏனென்றால் சொந்த மான நிலங்கள் அல்லது வீடுகள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை விற்று, விற்றதைக் கொண்டு வந்தார்கள்.இது சோசலித்தின்
அடிப்படையாகும்.ஏற்ற தாழ்வற்ற
சமுகம், உயர்ந்தவன், தாழ்ந்தவன்
இருப்பவன், இல்லாதவன் என்ற
சமுகத்தை சீர்படுத்த உயிர்த்த கிறித்து கட்டமைக்க விரும்புகி றார்.அவர்களின் பொருள் பகிர்வு (Equal distribution of wealth - Karl Marx) என்பது மிகவும் ஆழமான கொள்கையின்  சமுக அமைப்பை
திருத்தூதர்கள் கட்டமைத்தார்கள்.
இது ஆண்டவராகிய இயேசு கிறித்துவின் அருளுரையான "உன்னிடத்தில் உள்ளவைகளை
ஏழைகளுக்கு கொடு" " அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று அவரிடம் கூறினார். "
(மாற்கு நற்செய்தி 10:21)ஆனால் 
அந்த செல்வந்தர் மறுத்துவிட்டார்.
சமதர்ம சமுதாயம் அமைய ஆண்
டவர் விரும்புகிறார். எருசலேம்
விசுவாசிகள், ஒருவருக்கொருவர் கொண்டிருந்த அன்பு, சமுக அக்க றையின் வெளிப்பாடாகும்.
இல்லாதவர்களுக்கு வழங்குவத ற்காக இது ஒரு தன்னார்வப் பகிர்வாகும். Voluntary dustribu tion.ஒவ்வொருவரின் நோக்கமும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த தேவைகளை மட்டும் பார்க்காமல் மற்றவர்களின் தேவைகளையும் 
கவனிக்க வேண்டும். கிறிஸ்தவம் என்றுமேதன்னலத்தைவிரும்பாது பிறர் நலத்தை காண அழைக்கி றது. இதுதான் ஆண்டவர் தன் வாழ்நாளில் செய்தார் கிறிஸ்தவ ர்கள் சமூகத்தில் ஆற்ற வேண்டிய பெரும் பங்கு. உயிர்த்த கிறிஸ்து வை அவருடைய நற்செயல்கள் மூலமாக, நல் கிரியைகள்மூலமாக மக்களுக்கு பயனடைய செய்வதே ஒரு நல்ல சமூகத்தைக் கட்டமை க்க முடியும். இதை தான் நம்மு டைய அருட்பணியாளர்கள் கல்வி ப்பணியும் மருத்துவ பணியும் முதன் முதலில்ஆரம்பித்தார்கள். 
அனனியா, சப்பீராள் அவர்கள்
தான் விற்ற நிலத்தின் ஒரு பகுதி
யை எடுத்து வைத்துக் கொண்டா
ர்கள். இது தவறா? என்றால் இல்லை என்பேன். ஆனால் அவர்
கள் தூய ஆவிக்கு முன்பு பொய்
சொன்னதுதான் மிக தவறு. இந்த 
திருத்தூதர் காலத்தின் பொருளா தார கூட்டமைப்பு, அவர்கள் சுமார்
5000 பேர், சாலமோன் மண்டபத் தில் கூடி இருந்தனர். இவர்கள்
ஜெபத்திலும், உபவாசத்திலும் தரி
த்திருந்தனர். உழைப்பையும், உற்பத்தியையும் வலியுருத்தவி ல்லை.Labour and production are very important for livelihood. இதனால்,
சில விசுவாசிகள் உழைக்காமல்
உணவருந்தினர். இது கடைசியில்
பிரிவினைக்கு கொன்று சென்றது
"அக்காலத்தில் சீடர்களின் எண் ணிக்கைபெருகிவந்தது.அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். 
 எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, "நாங்கள் கடவுளது வார்த்தை யைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. 
(திருத்தூதர்பணிகள்6:1,2)என்பதை கவணிக்க வேண்டும். விண்ணரசு புசிப்பும் குடியுமல்ல," இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி,மகிழ்ச்சிஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது. 
(உரோமையர் 14:17) இதை மனதில் வைக்க வேண்டும். எனவே, இந்த ஐக்கிய விருந்து
காலப் போக்கில் கைவிடப்பட்டது.
ஆண்டவரின் திருக் கட்டளைப்படி
திருத்தூதர்கள் உலகமெங்கும்
நற்செய்திக்காக பிரிந்து சென்றனர்.ஆண்டவரே! வாழ்வு தரும் உணவு, என்னிடம் வருப வனுக்கு என்றுமே பசியிராது (யோவா. 6:35) என்பது இயேசு கூறிய உயிருள்ள வார்த்தைகள் என்பதை இன்று சிந்திக்க உங்களை அழைக்கிறேன். 
4.கண்கள் திறந்தன, இதயம்
எரிந்தது.The eyes opened and the heart burned.லூக்கா 24:13-35.
 உயிர்த்த கிறித்துவின் அன்பர் களே! வரலாற்று ரீதியாக பல சாலைகள்முறையானகட்டுமானம் அல்லது சிலபராமரிப்புஇல்லாமல் வெறுமனே அடையாளமாய் இருக்கும். "All road goes to Rome" என்பர். ஆனாலும் பல சாலைகள் மத்தியில் எம்மாவு என்ற கிராமத் தின் சாலை உயிர்த்த கிறித்து வால் உலக புகழ் பெற்றது. ஏனேனில் எம்மாவு  என்ற ஊர் விவிலியத்தில் ஒரே ஒரு முறை உச்சரிக்கப்படும் ஊர் ! ஆனாலும், வரலாற்றில்ஒருவராலும் மறக்க முடியாததாய் நிலைத்துவிட்டது. இது 3 ஆம் நூற்றாண்டில் நிக்கோபோலிஸ் ("வெற்றி நகரம்") என்று அழைக்கப்பட்பது.
உயிர்த்தெழுந்த நாளில் சீடர்க ளுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள எம்மாவு என்ற ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். ஒருவர் பெயர் கிளயோப்பா மற்றவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்தச் சீடர்கள் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்கள் அல்லர். ஒருவேளை இயேசு தனக்கு முன் இருவர் இருவராய் அனுப்பிய 72 அல்லது 70 சீடர்களில் இருவராக இவர்கள் இருக்கலாம்.இவர்கள்
சோகமும்,வருத்தமும்,ஏமாற்றமும், 
பயத்துடனும், பக்தியுடனும், நம்பிக்கையற்றவர்களாய், எருச லேமில் நடந்தவற்றை மனதில்
நினைத்துக் கொண்டு  அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே ஒன்றி னைந்து சென்றார்கள். அப்பொ ழுது உயிர்த்த இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். நாம் எவ்வளவு அதிக மாக ஒன்றிணைந்து பயணிக் கின்றோமோ அவ்வளவு அதிக மாக கிறிஸ்துவுடன் நாம் இணை ந்திருப்போம் என்று நம்ப வேண் டும் உயிர்த்த இயேசுவுடன் ஒன்றிணைந்து நடந்தால், அவரும் நம்முடன் உடன் நடந்து, நம்மை ஊக்குவித்து, நமது பயணத்தை நிறைவடைய செய்வார். நானே வழி’ என்றவர் அவர்களோடு
வழியில் இணைகிறார் ! இத்த கையதொரு பயணமே "திருப் பயணம்" என்றும்  Holy trip or pilgrimage என்பர். கிறிஸ்தவர் களிடையேயான உரையாடல் கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது என்பதை இயேசுவுடன் எம்மாவு சீடர்கள் மேற்கொள்ளும் உரை யாடல் நமக்கு எடுத்துக் காட்டு கிறது.
ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, "வழி நெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?" என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.
 அப்பொழுது அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயரு டைய சீடர் அவரிடம் மறுமொழி யாக, "எருசலேமில் தங்கியிருப் பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!" என்றார். எருசலேம்முழுதும்எரிந்துகொண்டிருக்கும் விஷயம் உமக்கு மட்டும்
தெரியாதோ !என்றனர். Are you an Alien? 
அதற்கு அவர் அவர்களிடம்,"என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசு கின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகி றார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால்தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித் துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன் றோடு மூன்று நாள்கள் ஆகின் றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்க ளைமலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடி யிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காண வில்லை" என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, "அறிவிலிகளே! (O fools and slow heart) kjv) இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவத ற்கு முன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!" என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கி னர்வரை அனைவரின் நூல்களி லும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களு க்கு விளக்கிக் கூறினார்.
Jesus might have spoken the following verses from the Scriptures because it
was a 11 km distance.
1.உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.அவள் வித்துஉன்தலையைக்காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" 
(தொடக்கநூல் 3:15)
2. கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னை ப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. 
(இணைச் சட்டம் 18:15)
3 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக் கும் அந்த இளம் பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழ ந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார். 
(எசாயா 7:14)
4. அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனை யுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. 
(எசாயா 53:3)
5.அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப் படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்ப ட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். 
(எசாயா 53:7)
6.நான் தாவீது குடும்பத்தார் மேலும், எருசலேமில் குடியிருப் போர் மேலும் இரக்க உள்ளத்தை யும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்கு வார்கள்; அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள் ளைக்காகக் கதறி அழுபவர் போ லும் மனம் கசந்து அழுவார்கள். 
(செக்கரியா 12:10) கிறிஸ்து அவர்களின் இதயங்களுடன் பேசுகிறார், அவர்களை மீண்டும் எழுப்புகிறார், அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்;
"Abide in us" ( இந்த வார்த்தை மகத்
துவமானது, வல்லமையுள்ளது.)
ஏனெனில் மாலை நேரம்ஆயிற்று; பொழுதும் போயிற்று"என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள்."தங்கும்" எனசொல்லாமல் இருந்திருந்தால்
அற்புதமான அந்தஅனுபவத்தை அவர்கள் பெறாமலேயே போயிரு ப்பார்கள். அவர் அங்குத் தங்கு மாறு அவர்களோடு சென்றார்.் What a wonderful God? வருந்தி அழைத்தால் ஆண்டவர் வருவார்
உண்மையன்றோ?
அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம்கண்டுகொண்டார்கள்.இங்கேஅப்பம் பிட்கையில்
கண்கள் திறக்கின்றன ! ( இதை நாம் திருவிருந்து எடுக்கும் போது நினைவு கூறவேண்டும்) உடனே
அவர் அவர்களிடமிருந்து மறைந் து போனார். உங்கள் கண்கள் திறக்கப்பட்டவுடன், மற்றவர்கள் தங்கள் கண்களைத் திறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பு வீர்கள்.அப்போது, அவர்கள் ஒரு வரையொருவர் நோக்கி, "வழியி லே அவர் நம்மோடு பேசி, மறை நூலை விளக்கும்போது நம் உள் ளம் பற்றி எரியவில்லையா?"  என்று பேசிக்கொண்டார்கள்.
சீடர்களின் கண்கள் திறக்கப்ப டுவதும், அவர்களின் இதயங்கள் முதல்முறையாக எரிவதும்தான்
உயிர்த்த கிறித்துவின் உன்னத
செயல் அவர்களின் அறிவைத் தெளிவடையச் செய்கின்றார் .
இந்த உன்னத அனுபவத்தின்
மூலம் நம் சமுகத்தை கட்டமை ப்பது நமது கடமையன்றோ?
துயரத்தின் ஒற்றையடிப் பாதை யாய் இருந்தஎம்மாவுவழிப்பாதை,
மகிழ்வின் நெடுஞ்சாலையாய்
மாறியது !
உயிர்த்த கடவுள் உங்களை ஆசீர் 
வதித்து காப்பாராக. ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com. 







             எம்மாவு 

 

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.