Identifying Risen Lord in the Work Place. உயிர்த்த ஆண்டவரை பணித்தளத்தில் அடையாளம் காணல்.(135) ரூத் 2:1-18, திருப்பாடல் 15. திருத்தூதர் பணிகள் Acts: 9:36-43. யோவான்: 21:1-14. The Second Sunday after Resurrection.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
உயிர்த்தெழுந்த ஆண்டவரை பணித்தளத்தில் அடையாளம் காணுதல் என்ற தலைப்பை சிந்திக்க இருக்கின்றோம். பணித்தளம் என்றால் என்ன"?" "பணியாளர்கள் அல்லது தனிநபர்கள் தங்கள் தொழில் முறை நடவடிக்கைகள், பணிகள் மற்றும் பொறுப்புகளை மேற் கொள்ளும் இடமே பணித்தளம்" 
என்பர்.Work is worship.
"செய்யும் தொழிலே தெய்வம்" என்பார். ஆண்டவர் இவ்வுலகை படைக்கின்ற போதும், மனித னைப் படைத்து அவனுக்கென்று பொருத்தமான பணிகளை ஏற்படுத்தினார்"ஏதேன் தோட் டத்தைப் பண்படுத்தவும் பாது காக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். (தொடக்கநூல் 2:15) ஆண்டவர் உருவாக்கிய ஏதேன் தோட்டம் முதல் மனிதனுக்கான பணித்தள மாகும். எனவே பணியை கொடுப் பது கடவுள், பணி தளத்தை மனிதனோடு  சேர்ந்து ஏற்படுத்து வது கடவுள், அதை பராமரிக்கவும் பாதுகாக்கவும் நம் கடமை. தூய பவுல் அடிகளார் தன்னுடைய எபேசியர் நிறுபத்தில்; "மனிதர்களுக்கு உகந்தவர்களா குமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாயிராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். 
(எபேசியர் 6:6) மனிதனை பிரியப்படுத்தும்படியாக நம்முடைய பணி இருக்கக் கூடாது நம்மை காணாத கடவுள் பார்க் கின்றார் என்ற நம்பிக்கையோடு நம் பணி இருக்க வேண்டும்.Don't please your boss, but please your God.
கொலேசியர் நிருபத்தில் பவுல்
அடிகளார்;"இவ்வுலகில் உள்ள உங்கள் தலைவர்களுக்கு, முற்றி லும் கீழ்ப்படியுங்கள். மனிதர்க ளுக்கு உகந்தவர்களாகுமாறு வேலை செய்வதாகக் காட்டிக் கொள்ளாமல், ஆண்டவரக்கு அஞ்சி முழுமனத்தோடு வேலை செய்யுங்கள். 
(கொலோசையர் 3:22) இதுவே, கிறித்தவர்களின் அடிப்படை பாட
மாக இருக்க வேண்டும். நம் வாழ்க்கையிலும், பணித்தளத் திலும் மற்றவர்களுக்கு முன் மாதி
ரியாக; " சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்து ங்கள். (பிலிப்பியர் 4:8)
கிறித்தவன் தன் பணித்தளத்தில்
கையூட்டு (Bribe) வாங்குவது, ஆண்டவருக்கே அவமானத்தை
கொண்டு வருகிறான். அவனை
ஆண்டவர் நிச்சயம் தண்டிப்பார்.
இக் குற்றத்தை மன்னிக்க மாட் டார். அறியாமல் செய்த குற்றங் களை, ஒருவேளை நீங்கள் மனம் மாறி, அறிக்கை இட்டு, திருந்தி விட்டால் மன்னிப் பார், "what you sow that you reap"
ஒரு கிறித்தவன் பணித்தள த்தில்எப்படி இருக்க வேண்டும்:
1.நேரம் தவறாமை. இவற்றே சரியாக செய்பவர், எல்லாவற்றி லும் சரியாக இருப்பார்.
2.கிறித்துவ அன்பு: தன் உடன்
பணியாளருடன் அன்பின் தன்மை
யை வெளிப்படுத்த  வேண்டும். அன்பு இழிவானதை செய்யாது.
3.கடின உழைப்பு: தன் பணியில்
கடின உழைப்பு கட்டாயம் தேவை. உழைப்பே உனக்கு உயர்வு தரும்  
4. நேர்மை: பணியில் நேர்மை, பேச்சில் நேர்மை, மற்றவர்களை
மதிப்பது கடவுளுக்கு மகிமை
சேர்க்கும். வேதம் சொல்கிறது
, "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்பு களில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப் புகளில் உம்மை அமர்த்துவேன். உம்தலைவனாகிய(ஆண்டவரின்) என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 25:21) ஆண்டவர் உண்மையுள்ள பணி யாளர்களால் மகிழ்ச்சியடை கிறார். கிறித்துவ பணியாளர்கள்
பெண் பணியாளர்களிடம், மதிப் பும், மரியாதையுடன் நடந்துக்
கொள்ள வேண்டும். No sexual arresment and sexual abuse. பாலியல் ரீதியான தொல்லைகள்
கொடுக்க கூடாது. தாவீது அரசன்
தன் கீழ் பணிசெய்த உரியாவை
கொன்று அவன் மனைவியை
எடுத்துக் கொண்டதால் அவனு க்கு கடவுள் தண்டனை கொடுத்
தார்.2. சாமுவேல் 11 ம் அதிகாரம்.
ஆண்டவர் அவனுக்குப் பிறந்த
குழந்தையை கொன்றுபோட்டார்.
இது நமக்கும் எச்சரிக்கை.
1. உம் கடவுளே எம் கடவுள்- Your God is my God. ரூத் 2:1-18, 
கிறித்துவின் அன்பர்களே! 
மோவாபிய ஸ்திரீயான ரூத் என்ப வள் தன் மாமியாரோடு பெத்லெ கேமிலேகுடியிருக்கிறாள்.இவள் தன் கணவன் இறந்தபிறகு
தன்மாமியார்நகோமியிடம்   உம் கடவுளே எம் கடவுள் என நம்பி அவளுடன் எருசலேம் வந்தாள்.
மோவாபிய வம்சம் லோத்தின் பிள்ளைகள் முறையற்று பெற்றுக்கொண்ட வம்சங்களின் மூலமாக வந்தவள்.  இவளும் அருவருப்பாக கருதப்படவில்லை.
இவள் தன் மாமியாரின் கடவுளை
ஏற்றுக் கொண்டால். இவள் மூல மாய் தாவீது வம்சம் உருவானது.
தாவீது வம்சத்தில் ஆண்டவர் தோன்றினார்.
 ரூத் தன்னுடைய வீட்டிலே சோம் பேறியாக சும்மாயிருக்கவில்லை. ஒரு நாள் தன் மாமியார் நகோமி யைப் பார்த்து: ""நான் வயல் வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயை கிடை க்குமோ, அதன்பிறகேகதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்'' என்று சொல்லுகிறாள். அதற்கு நகோமி, ரூத்திடம், ""என் மகளே, போ''(ரூத்2:2) என்று சொல்லுகி றாள். மருமகள் வேலைக்குப் போக மாமியார் அனுமதி கொடுக் கிறாள்.மருமகளை தன் மகள் போல கவனித்துகொள்கிறாள். ரூத் மனத்தாழ்மைக்கு எடுத்துக் காட்டாயிருக்கிறாள். கர்த்தரு டைய சித்தத்தின் பிரகாரமாக, ரூத்தின் வீட்டிலே வறுமையிருக் கிறது. இந்த சூழ்நிலையில் ரூத் தன்னைத் தானே தாழ்த்துகிறாள். கதிர்களைப்பொறுக்கிக்கொண்டு வருகிற வேலை, பிறருடைய வீட்டில் பிச்சையெடுப் பதைப் போன்ற அவமானமான வேலை என்று ரூத் நினைக்கவில்லை. ரூத் எந்த வேலையையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறாள். அவள் கதிர்களைப் பொறுக்க வெட்கப்ப டவில்லை. ரூத் கதிர்களைப் பொறுக்குகிற வயல்வெளி போவாஸ் என்பவருடையதாயிரு க்கிறது (ரூத் 2:1-3). போவாஸ் ரூத்திற்கு அநேக சலுகைகளைக் காண்பிக்கிறார்வயல்வெளிகளின் ஓரங்களில் இருக்கும் தானிய ங்கள் ஏழைகளுக்காக நியமிக் கப்பட்டிருக்கிறது. மேலும் அறுக் கப்படாமல் மீந்திருக்கும் கதிர்க ளும் ஏழைகளுக்கே உரியது. ஏழைகளை ஆதரிக்க வேண்டு மென்பதற்காக இதுபோன்ற பழக் கம் இஸ்ரவேலில் காணப்படுகி றது. கர்த்தருடைய பிரமாணத்தி லும் இதுபற்றிக் கூறப்பட்டிருக் கிறது (லேவி 19:9-10; லேவி 23:22; உபா 24:19, யோபு 24:10) 
நகோமிக்கு உறவுக்காரர் அநேகர் அந்த ஊரிலிருக்கிறார்கள். அவர்களில் போவாஸ் என்பவர் மிகவும் விசேஷமானவர். போவாஸ் மிகுந்த செல்வந்தர். இவர் நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின் முறை யில் ஒரு இனத்தான்.  ரூத் தன் மாமியாரிடம்,தன்னைப்பற்றியோ, மோவாபிலுள்ள தன்னுடைய தாய் வீட்டைப்பற்றியோபெருமையாய்ப் பேசவில்லை.தனக்குஇதுபோன்ற  வேலை செய்து பழக்கமில்லை என்று ரூத் ஆணவமாய்ப் பேசவுமி ல்லை.கதிர்களைப்பொறுக்கி அதை சாப்பிடவேண்டியஅவசியம் தனக்கு இல்லை என்று, ரூத் தன் மாமியாரிடம் அலட்சிய மாய்ப் பேசவுமில்லை.  ரூத் உற்சாகமாய் வேலை செய்கிறவளுக்கு எடுத்து க்காட்டாயிருக்கிறாள். கர்த்தரு டைய பிள்ளைகள் எல்லோருமே ஏதாவது ஒருவேலையை செய்ய வேண்டும். ஒருவரும் சோம்பேறி யாக சும்மாயிருக்கக் கூடாது. கண்ணியமான எந்த வேலையை யும் செய்ய நாம் ஆயத்தமாயிரு க்கவேண்டும். அவமானமான வேலை, ஈனமான வேலை என்று ஒருவேலையும் இல்லை. எல்லா வேலையும் நல்ல வேலைதான். கர்த்தர் நமக்குக் கொடுக்கும் வேலைகளை, நாம் உண்மையா ய்ச் செய்யவேண்டும்போவாசின் வயல்வெளியிலே அவருடைய வேலைக்காரர்கள் வாற்கோதுமை விளைச்சலை அறுவடை செய்கி றார்கள். போவாஸ் தன்னுடைய வயல் நிலத்திலே அறுப்பு அறுக்கி றவர்களை கர்த்தருடைய நாமத் தினாலே வாழ்த்துகிறார். அவர் களும் போவாசை கர்த்தருடைய நாமத்தினாலே ஆசீர்வதிக்கிறார் கள். அவர்கள் ஒருவருக் கொரு வர் கர்த்தருடைய நாமத்தினாலே வாழ்த்துதல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் மூலம் போவாஸ் கடவுளின் மகனாக இருக்கிறார். அவரின் வேலையாட் களும், தன் எசமான் போல் கடவுள் பக்தியுள்ளவர்கள்.நீங்கள் தேசத் தின் பயிரை அறுக்கும் போது, உன் வயலின் ஓரத்திலி ருக்கிற தைத் தீர அறுக்காமலும், சிந்திக் கிடக்கிற கதிர்களைப் பொறுக்கா மலும், உன் திராட்சத்தோட்டத் திலே பின் அறுப்பை அறுக்காம லும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்'' (லேவி 19:9,10).கடவுளின் கட்டளைபடியே நடந்துக்  கொள்கி றார். அவர்  தன்னுடைய வயல் வெளியிலே அறுப்பு அறுக்கிற வர்களையும், அவர்களுக்கு பிறகே கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறவர் களையும் கவனித்துப்பார்க்கிறார். அவருடைய நிலத்திலே எப்போது ம் இருக்கிறவர்களைத் தவிர, இப்போது ரூத் அங்கே புதிதாக வந்திருக்கிறாள். அவள் அறுப்பு அறுக்கிறவர்களின் பின்னே கதிர் களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறாள். போவாஸ் இதற்கு முன்பு ரூத்தைப் பார்த்ததில்லை. நிலத்திலே, கதிர்களைப் பொறுக் குகிற ரூத்திற்குபோவாஸ்நன்மை செய்ய விரும்புகிறார். அதன் நிமித்தமாகவே போவாஸ் "இந்தப் பெண்பிள்ளை யாருடையவள்'' என்று கேட்கிறார். போவாஸ் ரூத் தைப்பற்றி அறிந்து கொண்ட பின்பு, அவளுக்கு ஒரு சில சலு கைகளையும் செய்கிறார். 
போவாஸ் ரூத்தைப் பார்த்து, "ஒருவரும்உன்னைத்தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்ட ளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங் களண்டைக்குப் போய், வேலைக் காரர் மொண்டுகொண்டு வருகிற திலே குடிக்கலாம்'' (ரூத் 2:9) என்று சொல்லுகிறார். போவாசு தம் அறுவடையாள்களிடம்,"அரிகட்டுகள் கிடக்குமிடத்தில் அவள் கதிர் பொறுக்கட்டும். அவளை யாரும் அதட்ட வேண்டாம். மேலும் கட்டுக் களிலிருந்து சில கதிர்களை உரு விப்போட்டு விடுங்கள். அவள் பொறுக்கி கொள்ளட்டும். யாரும் அவளை தடுக்க வேண்டாம்"என்று கட்டளையிட்டார்.அவருடைய வய லில் ரூத்து மாலை வரை கதிர்க ளை பொறுக்கிச் சேர்த்தார்.
தட்டி புடைத்து நிறுத்திய போது வாற்கோதுமை ஏறத்தாழ இருபது படி இருந்தது.அவர் அதை எடுத் துக் கொண்டு ஊருக்குள் சென்று தம் மாமியாரிடம் காட்டினார். போவாசிடம் இருந்த நற்குணங் களான கருனை, இரக்கம், உதவி
செய்தல் போன்ற நற்குணங் களை தம் பணியிடங்களில் நாம்
காட்ட வேண்டும்.
2.நற்பணிகள் மூலம் உயிர்த்த 
கிறித்துவை அடையாளம் காணுதல்.திருத்தூதர் பணிகள் 9:36-43.Identifying the Risen Lord through the good deeds.
கிறித்துவின் அன்பு இறைபணி
யாளர்களே!
இயேசு முன்னுரைத்ததுபோல 'எருசலேமிலும், யூதேயா முழுவ திலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் சபை பெருக ஆரம்பித்தது.' (திரு,தூதர் 1:8 .) விசுவாசத்தை ஏற்ற புது விசுவாசி கள் இயேசுவின் ஊழியத்தைச் செய்ய ஆரம்பித்தார்கள்.யோப்பா பட்டணம் ஒரு துறைமுகப் பட்ட ணம் .இது மிகவும் செல்வச் செழி ப்புள்ள பிரசித்தி பெற்ற பட்டணம். இந்தப் பட்டணம்லித்தாவிலிருந்து 12 மைல் தூரமும், எருசலேமிலி ருந்து  30மைல் தூரம் உள்ளது. யோசுவா கானானைச் சுதந்தரித்த பின் எல்லாக் கோத்திரத்தாருக் கும் கானானைப் பங்கிட்டுக் கொடுக்கும் போது தாண் கோத் திரத்தாருக்கு யோப்பா பகுதியை க்கொடுத்தான். (திரு தூதர் 11 : 5 )ல் பேதுரு யோப்பா பட்டணத்திலி ருக்கும்போதுதான்ஞானதிருஷ்டியடைந்தார்.யோப்பா பட்டணத்தில் உள்ள சீடர்களில், கிரேக்கு மொழியிலே தொற்காள் (Dorcas)  என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண் சீடர் இருந்தாள்; அவள் நல்ல காரியங்களையும் தருமங் களையும் மிகுதியாகச் செய்து கொண்டுவந்தாள்.வஸ்திரமில்லாதோருக்கு வஸ்திரம்கொடுப்பது இயேசுவுக்கே கொடுப்பதாகு மெ ன்ற இயேசுவின் கட்டளையை அப்படியே பின்பற்றினாள். (மத் 25:38,40) இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்க ளைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார் கள். (மத்தேயு நற்செய்தி 5:16) என்ற வார்த்தையின்படி நடந்து
கொண்டாள்.எதிர்பாராமல் ஒரு நாள் தொற்காள் மரிக்கிறாள். பக்கத்திலிருந்த லித்தா எனும் இடத்துக்கு பேதுரு வந்திருந்த படியால், யோப்பாவுக்கு வரும்படி சிலர் அவரை அழைக்கிறார்கள். (அப் 9:37-41) . 
இறந்து போன தொற்காளைக் குளிப்பாட்டி மேல் வீட்டரையில் கிடத்தி வைத்தனர். யூதர்களின் பாரம்பரியத்தில் மேல் வீடு என்பது ஒரு முக்கியமான பகுதி யாகும். மேல் வீட்டை ஜெபம் செய் வதற்குப் பயன்படுத்துவர்.
ஆண்டவரின் கடைசிதிருவிருந்து   மேல்மாடியில் ஒரு பெரிய அறை யில் நடத்தினார்.(மாற்கு  14:15)
பேதுரு உடனே அங்கு வருகிறார்.
தொற்காளின் ஊழியத்தால் பயனடைந்த அநேக ஏழைமக்கள் அங்கே நிற்பதை பேதுரு பார்க் கிறார். அவள் செய்திருந்த வஸ்தி ரங்களைக் காட்டுகிறார்கள்; தங்க ளுக்கும் பிறருக்கும் அவள் செய்த பிற உதவிகளையும் அவர்கள் சொல்லியிருக்கக்கூடும்."சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தை யும் அழியாமையையும் தேடுகிற வர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார் (ரோமர்2:7) பேதுரு வைப் பார்த்தவுடன் தொற்காளால் நன்மைகளைப் பெற்ற விதவை கள் அழுதனர்.அந்த விதவைகளு க்குத் தொற்காளின் பிரிவு தாங்க முடியாத துக்கத்தைக் கொடுத்திரு ந்தது. பேதுரு தன்னுடன் இரு வரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று, "தபீத்தாளே, எழுந்திரு என்றான்; அந்தபொழு திலே மரித்த தபீத்தாள் உயிரோடு எழுந்தாள். இது ஆண்டவர் யவீரின் மகளை "தலீத்தாகூமி'' என உயிருடன் எழுப்பியதை நினைவு படுத்துகிறது.(மாற்கு 5:22-43) உயீர்த்த கிறித்துவின்
வல்லமை நம் அனைவரையும்
உயிர்பிக்க செய்ய வல்லமை
உள்ளது.
3.நீங்கள் என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா? Do you love in me? யோவான்: 21:1-14.
 கிறித்துவின் அன்பர்களே! ஆண்டவர் மீது காட்டும் நம் அன்பே; நம் பணித்தளத்திலும்,
நம் செயலிலும் காட்டும்.
திபேரியாஸ் கடலில் (இது கலிலேயாக் கடலின் மற்றொரு பெயர்) இயேசு தம் சீடர்களுக்கு மீண்டும் தன்னை மூன்றாவது முறையாக வெளிப்படுத்தினார். ஏன் அவர்கள் கலிலேயா செல்ல
வேண்டும்? ஆண்டவர்( மத்தேயு 28:7 , 28:10 ) படி,  இயேசு சொன்ன தால் அவர்கள் கலிலேயாவுக்குச் சென்றார்கள்என்பதைநினைவில் கொள்வது அவசியம்.பேதுருவும் மற்ற சீடர்களும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் நிச்ச யமற்ற நிலையில் இருந்தனர் என்பதை இது காட்டுகிறது. "மீன்பிடி பயணமானது சீடர்களின் நிச்சயமற்ற தன்மையை தெளி வாக வெளிப்படுத்துகிறது, 
சீமோன் பேதுரு, டிடிமுஸ் என்று அழைக்கப்படும் தாமஸ், கலிலே யாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மகன்கள் மற்றும் அவருடைய சீடர்களில் இருவரும் ஒன்றாக இருந்தனர்.மொத்தம் ஏழு சீடர்கள் இருந்தனர்.
சீமோன் பேதுரு அவர்களிடம், "நான் மீன் பிடிக்கப் போகிறேன்" என்றார். தலைமை சீடன் ஆண்டவ ரின் உன்னத அழைப்பையும், இறைபணியையும் மறந்து விட் டார். "அமைதி உரித்தாகுக" என்று ரைத்த ஆண்டவரை மறந்து விட்டனர். சீலர் கடவுள் கொடுக் கும் பணியை அலட்சியப்படுத் துகின்றனர்.அவர்கள் வெற்றிப் பெற மாட்டார்கள். மற்ற சீடர்களும் அவரிடம், "நாங்களும் உன்னுடன் வருவோம்" என்றார்கள். அதனால் அவர்கள் வெளியே சென்று படகில் ஏறினார்கள், ஆனால் அன்று இரவு அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. மிகவும் திறமையான மீனவர்கள், 
இருந்தும் தோல்வி. இது நம்
ஊழியத்தில் கூட பல நாட்கள்
உழைத்தும் ஒரு ஆன்மாவையும்
கொண்டுவர முடியாமல் இருக்க
லாம், ஆனால் தளர்ந்து விடக் கூடாது. நம் இறை வேண்டல் தடையாய் இருக்கும் எரிகோ மதிலை விழச்செய்யும். விடிந்ததும், இயேசு கரையில் நின்று கொண்டிருந்தார்; ஆனால் அது இயேசு என்பதை சீடர்கள் உணரவில்லை.இயேசு அவர்க ளிடம், "பிள்ளைகளே, உண்பதற்கு ஏதாவது கிடைத்ததா?" என்றார். அவர்கள் அவருக்கு, "இல்லை" என்று பதிலளித்தனர்.
எனவே அவர் அவர்களிடம், "படகின் வலது பக்கத்தில் வலையை வீசுங்கள், நீங்கள் ஏதாவது கண்டுபிடிப்பீர்கள்" என்றார். அதனால் அவர்கள் அதை எறிந்தார்கள், மீன்களின் எண்ணிக்கையால் அதை உள்ளே இழுக்க முடியவில்லை.
எனவே இயேசு நேசித்த சீடர் யோவான், பேதுருவிடம், "அவர் ஆண்டவர்" என்றார். கர்த்தர் என்று சீமோன் பேதுரு கேள்விப் பட்டபோது லேசாக உடையணிந் திருந்தபடியால், தன் வஸ்திரத் தைக் கட்டிக்கொண்டு கடலில் குதித்தான். யோவான் கல்லறை யை பேதுருவுக்கு முன்பாகவே சென்றடைந்தார். இங்கு ஆண்டவ ரை பேதுருவுக்கு முன்பாகவே அடையாளம் காண்கிறார். அவர் ஆற்றல் மிக்கவர்.மற்ற சீடர்கள் படகில் வந்தார்கள், ஏனென்றால் அவர்கள் கரையிலிருந்து வெகு தொலைவில் இல்லை, சுமார் நூறு மீட்டர்கள் மட்டுமே, மீன்களு டன் வலையை இழுத்துச் சென்ற னர்.அவர்கள் கரையில் ஏறிய போது, ​​மீன் மற்றும் ரொட்டியுடன் கரி நெருப்பைக் கண்டார்கள்.
இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்த மீன்களில் சில வற்றைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
எனவே சீமோன் பேதுரு சென்று நூற்று ஐம்பத்து மூன்று பெரிய மீன்கள் நிறைந்த வலையை கரைக்கு இழுத்தான். இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழிய வில்லை.உயிர்த்தெழுந்த இயேசு இன்னும் ஒரு பணிவான ஊழியராக இருப்பதை அவர்கள் கவனித்தனர். அவர்களுக்கு காலை உணவை அளிக்கிறார்.
இயேசு அவர்களிடம், "வாருங்கள், காலை உணவு உண்ணுங்கள்" என்றார். மேலும் சீடர்களில் ஒருவரும் அவரிடம், "நீங்கள் யார்?" என்று கேட்கத் துணியவில் லை. ஏனெனில் அது இறைவன் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
இயேசு வந்து அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார், அப்படியே மீனையும் கொடுத்தார்.
ஆண்டவர் பேதுரு மீது தனி அன்பு
கொண்டிருந்தார். ஏனவே.அவர் உயிர்த்த நாளில் தனியே பேதுரு வைசந்திக்கிறார்."அங்கிருந்தவர்கள், "ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப் பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்து ள்ளார்" என்று சொன்னார்கள். 
(லூக்கா நற்செய்தி 24:34)தூய பவுல் அடிகளாறும் இதை உறுதி
படுத்துகிறார்."பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னி ருவருக்கும் தோன்றினார். 
(1 கொரிந்தியர் 15:5) இதன் நோக்கமே; அவர் பிரதான சீடன்
வழி தவறி போகக்கூடாது எனவும்,
உலகம் முழுவதும் நற்செய்தி
கொண்டு செல்லும் கூட்டத்திற்கு
தலைவன் பேதுரு, மற்ற சீடர்க ளின் முன்னிலையில் பேதுருவை மீட்டெடுப்பது இயேசுவுக்கு இன்னும் முக்கியமானது.எனவே, ஆண்டவர் அவரை பார்த்து;
"மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார். "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். இயேசு அவரிடம், ""என் ஆடுகளைப் பேணிவளர். 
(யோவான் நற்செய்தி 21:17)
ஆண்டவரிடம் அன்பு கொண்டோர்
தன் பணித்தளங்களில் உயிர்த்த
கிறித்துவை அடையாளப்படுத் துவது நம் கடமையன்றோ.
அவ்வாறு நம்மை செயல்படுத்த
கடவுள் கிருபை செய்வாராக!
ஆமேன்.

Prof. Dr.David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com. 
 



தொற்கா மீண்டும் உயிர் பெறுதல்.


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.