விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது எப்படி?

முன்னுரை: கிறிஸ்துவிற்கு பிரியமான விசுவாசிகளே!  விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென் றும், அவர் தம்மைத் தேடுகிறவர்க ளுக்குப் பலன் அளிக்கிறவரென் றும் விசுவாசிக்கவேண்டும் (எபிரேயர் 11:6).
விசுவாசம் என்றால் என்ன?
விசுவாசம்என்பது நம்பப்படுகிற வைகளின் உறுதியும், காணப்ப டாதவைகளின் நிச்சயமுமாய் காணப்படுகிறது.
விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்தமுடியாது. விசுவாச வாழ்க்கையினால் உலகத்தை ஜெயித்த விசுவாச வீரர்களின் பட்டியலை எபிரேயர் 11-வது அதிகாரத்தில் வாசிக்கிறோம். 
1.ஆபிராம் 75-வது வயதில் காணப்பட்ட வேளையில் ஊர் என்ற கல்தேயரு டைய தேசத்தை விட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்கு போ என்று தேவன்சொன்னார். ஆபிராம் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து புறப்பட்டுச் சென்றான். பின்பு தரிசனத்தில் தோன்றி வானத்தி ன் நட்சத்திரங்களை எண்ணக் கூடுமானால் எண்ணு; அவ்வண் ணமாய் உன் சந்ததி இருக்கும் என்று கர்த்தர் வாக்குக் கொடுத் தார். ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தான், அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். 
தொடக்கநூல் 15:6.
2.ஏனோக்: விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாத படிக்குஎடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன்அவனைஎடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படா மற்போனான்; அவன்தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.
வெள்ளத்தினால் அழிவு வரப் போகிறது என்பது நோவாவுக்கு முன்பாகவே ஏனோக்குக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவன் வெள்ளத்தினால் அழிவு வரப் போகிறது என்பதை விசுவாசித் தான். ஆகையால் அதன்பின்பு 300 வருடங்கள் தேவனோடு சஞ்சரித்தான். தேவனுக்குப் பிரியமான ஜீவியம் செய்தான், தேவனுக்குப் பிரியமானவன் என்ற சாட்சியையும் பெற்றான். ஆகையால் அவனுடைய 365-வது வயதில் வெள்ளத்தினால் அழிவு வருவதற்கு முன்பாகவே கர்த்தர் அவனை எடுத்துக்கொண்டார். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாய் வாழ்வது கூடாதக் காரியம். இனி வெள்ளத்தினால் அல்ல, அக்கினியினால் கர்த்தர் உலகத்தை அழிக்கப்போகிறார். நாம் காண்கிறவைகள் அத்தனையும் அக்கினிக்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறது என்று வேதம் கூறுகிறது. ஆகையால், அதை விசுவாசித்து நாம் கர்த்தருடைய வருகைக்காய் ஆயத்தப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
3.பேதுரு: இந் நாட்களில் சத்துரு நம்முடைய விசுவாசம் ஒழிந்து போவதற்கு அனேக தந்திரங் களைச் செய்கிறான். கர்த்தர்: சீமோன் பேதுருவை நோக்கி, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார் (லூக்கா 22:31,32). ஆனால் நம்முடைய விசுவாசம் ஒழிந்து போகாதபடி நமக்காய் வேண்டுதல் செய்கிற கர்த்தர் பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கிறார். ஆகையால் நம்முடைய விசுவாசம் நமக்குள்ளாய் பெருகும்.
4. ஆபேல்: விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். – (எபிரேயர் 11:4.)காயீனும் காணிக்கைகளைக் கொண்டு வந்தான். ஆபேலும் கர்த்தருக்குக் காணிக்கைகளைக் கொண்டு வந்தான். ஆனால் கர்த்தர் ஆபேலின் காணிக்கைகளை மட்டுமே அங்கிகரித்தார்.
வாழ்க்கையில் விசுவாசம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். வேதம் சொல்லுகிறது, “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17). உங்கள் வாழ்க்கையில் விசுவாசம் உருவாவதற்கு தேவ வசனம் மிகவும் அவசியமாயிருக்கிறது. ஆவியும் ஜீவனுமாய் இருக்கிற வேத வசனம் கிறிஸ்துவின் பிரியத்தை உங்கள்மேல் கொண்டுவர பெரும்பங்கு வகிக்கிறது. நீங்கள் அவரில் விசுவாசம் வைத்து அவரைச் சார்ந்துகொள்ளும்போது, அவர் உங்கள்மேல் மனம் மகிழுவார். உங்கள்மேல் பிரியமாயிருப்பார்.
எனவே,
 நாம் தரிசித்து அல்ல, விசுவாசித்து நடக்கும்படிக்கு அழைக்கப்பட்டவர்கள். ஆனால் கர்த்தருடைய வருகையின் நாட்களில் மனுஷகுமாரன் விசுவாசத்தைக் காண்பாரோ என்றும் வேதம் கேட்கிறது. விசுவாசம் குறைந்து போகிற நாட்கள் இவை, விசுவாச ஜீவியத்தில் பின்வாங்கிப் போகிற நாட்களாய் இந்நாட்கள் காணப்படுகிறது, விசுவாச துரோகங்கள் எங்கும் நேரிடுகிற காலமாய் காணப்படுகிறது. ஆகையால், விசுவாசத்தை துவக்குகிறவரும்,முடிக்கிறவருமாகிய இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஒடும்படிக்கு நாம்அழைக்கப்பட்டிருக்கிறோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொரு வரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.