Christ's Invitation to be an Expression of Mission. அருட்பணியாய் அடையாளப்பட கிறித்துவின் அழைப்பு. (138) எசேக்கியேல் 34:25-31, திரு.பாடல் 47. 1 பேதுரு 2:1-10. யோவான் 20; 19-23.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்து வின் இனிய நாமத்தில் வாழ்த்து கிறேன். உயிர்த்த கிறிஸ்து நம க்கு கொடுக்கும் பெரிய பணி என்பது அருட்பணி ஆற்றுவது. அதற்காகவே நம்மை அழைக் கின்றார். ஆண்டவர் அழைப்பு மற்றவர்களுக்காக இறைபணி ஆற்றுவது, இதுவே கிறிஸ்தவர் களின் முக்கிய பணியாகும்.
"அருட்பணியாய் அடையாளப் பட கிறித்துவின் அழைப்பு"
என்ற தலைப்பு கிறித்தவர்களின்
கடமையை குறிக்கிறது. கிறிஸ்த வர்களின் அடையாளமே அருட் பணியாகும். அருட்பணி ஆற்றா மல் ஆண்டவருக்கு பிரியமாய் இருப்பது எப்படி?.உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், அவருடைய கட்டளைகளைப் பின்பற்றவும் பணித்தார். திருச்சபையின் பணியானது நற்செய்தி அறிவிப்பு மற்றும் அன்பு மற்றும் அருட்பணி ஆகிய இரண்டும் அடங்கும். உள்நாட்டிலும் பூமியின் கடைசிப் பகுதிகளிலும் இந்த பணிக்காக நம்மையும் நமது வளங்களையும் அர்ப்பணிக்க வேண்டும். விவிலிய சாட்சிய முறை உள்ளூர் முதல் உலகத்திற்கு நகர்வதால், நம் உள்ளூர் சமூகங்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பதோடு, நம் தேவாலயங்கள், சுவிசேஷம், சேவை, சமூக நீதி மற்றும் கலாச் சார, சர்வதேச பணிகள் ஆகியவற் றில் குறிப்பாக அக்கறையுடன் செயல்பட முயற்சிப்போம். உலகின் ஏழைகள் மற்றும் எட்டப் படாத மக்களை அரவணிக்கும் அணுகு முறை நம் செயலாக இரு
க்க வேண்டும். மத்தேயு நற்செய் தியில்- "அதற்கு அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங் கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார். (மத்தேயு நற்செய்தி 25:40) இதுவே, அருட்பணியின் அடையாளங்கள். The Sermon on the Mountain is a preamble to Mission. மத்தேயு 5 ம்
அதிகாரம் அருட்பணியின் முன்னுரையாகும்.
1.அருட்பணியாற்றாத ஆயர்க ளுக்கு( தலைவர்கள்) ஐயோ.
Woe be to the Shepherds, who do not minister. Ezekiel 34:25-31. கிறித்து
வின் அன்பர்களே! எசேக்கியேல் என்னும் பெயர் கொண்ட இறை வாக்கினர் எருசலேம் நகரின் வீழ்ச்சிக்கு முன்பும் பாபிலோனி யச் சிறையிருப்பின் போதும் வாழ்ந்தவர். ‘எசேக்கியேல்’ எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார். இவர் காலம் கி.மு. 595-573).கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சுமார் 22 ஆண்டுகள் அவர் பணி யாற்றினார். ஆண்டவர் தீர்க்கரு க்கு "மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக் குரை. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயே லின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்! நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவி ல்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்ற வற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழிதப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமை யுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள்.எனவே,தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகி றார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்.
ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந் தையைத் தேடிப் போவேன். என
ஆண்டவர், நம்மையும் ஆடுகளை
தேடி செல்வதே ஒரு ஆயனின்
அருட்பணியாகும் என வலியுருத் துகிறார்.எசேக்கியேல் 34:25-31ல், கடவுளின் கட்டளையைக் கடைப் பிடிக்கத் தவறியதற்காக திருச் சபையை கண்டிக்கிறது. "செம்மறி யாடுகள்" என்ற தேவாலயத்தின் உறுப்பினர்களை விட ஊழியம் சம்பளம் மற்றும் சுயநலத்தில் எவ்வாறு அதிக அக்கறை கொண் டுள்ளது என்பதை அத்தியாயம் பேசுகிறது. தேவாலயம் மக்களு க்கு உதவவும், குணப்படுத்தவும், மக்களை நீதிக்கு இட்டுச் செல்ல வும் வேண்டும் என்று ஆண்டவர் மீண்டும் வலியுறுத்துவதுகிறார். ஆடுகளை விட தங்களைக் கவனி த்துக் கொள்ளும் மேய்ப்பர்களால் அவர் வருத்தப்படுகிறார். எசேக்கியேல் 34:26ல், கடவுள் தம் முடைய உண்மையுள்ள ஊழியர் களை ஆசீர்வதிப்பதாக வாக்களி க்கிறார். வசனம் கூறுகிறது, “ பொய்யான ஆயர்களை அவர் நிராகரிக்கிறார். மிக முக்கியமாக
தன் மக்களை ( மந்தை) கவனிக் காத தலைவர்களை அவர் கண்
டிக்கிறார். இவர்கள் மீது நியாய தீர்ப்பு வரும் என எச்சரிக்கிறார்.
This chapter describes leadership as an office of "servanthood," which requires genuine people who care for the wellbeing of the whole nation.
கிறித்துவே நல் ஆயன், அவரே
தன் மந்தையை காப்பார். அவர் களுக்கு நித்திய அமைதியை
அருள்வார்.
2 விசுவாசிகளாக நமது உண் மையான அடையாளத்தை அறிந்து கொள்வது எப்படி? How do we know our true identity as believers? (பேதுரு.2:1-10)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! தூய திரு தூதர் பேதுரு போந்து, கலாத்தியா, கப்பத் தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, தற் காலிகக் குடிகளாய் வாழ்ந்து வரும் மக்களுக்கு, கிறித்துவின் விசுவாசிகளாக நமது உண்மை யான அடையாளத்தை எப்படி நாம் அறிந்து கொள்வோம் என்பது குறித்து விளக்குகிறார்.
முலாவதாக, தந்தையாம் கடவு ளின் முன்னறிவின்படி, இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவும், அவரது இரத்தத்தால் தூய்மை யாக்கப்படவும் நீங்கள் தூய ஆவியால் இறைமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். We are all chosen by our God. இந்த தற்காலிக குடிமக்களாக இருப்ப வர்களை ஆறுதல் படுத்தவும், ஊக்குவிக்கவும், நம்பிக்கையை
தருகிறார்.. இது மக்களுக்கான
அருட்பணியாகும். ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை நாம் சுவைத்திருந்தால், எல்லா வகையான தீமையையும் வஞ்சக த்தையும் வெளிவேடம், பொறா மை, அவதூறு ஆகிய யாவற்றை யும் அகற்றுவதே கிறித்துவை, அருட்பணியாய் அடையா ளப்படுத்தும் செயலாகும்.
நாம் இந்த உலகத்தில் அன்னி யராக இருக்கிறோம். ஒருவரி ல்யொருவர் நேசிக்கப்படவும், தீய மனப்பான்மைகளையும், செயல் களையும் விலக்குவதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். விசு வாசிகள் இயேசுவிடம் "உயிருள்ள கற்களாக" (Living Stone) வர வேண்டும் என்று திரு தூதர் குறிப்பிடுகிறார் (1 பேதுரு 2:5). இயேசு தாமே ஒரு பாறை என்று பேதுருவிடம் தனிப்பட்ட முறையில் கூறியதிலிருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம்,
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், "நீ பேதுரு, இந்தப் பாறையில் நான் என் திருச்சபை
யை கட்டுவேன், பாதாளத்தின் வாயில்கள் அதின்மீது வெற்றி பெறாது.(மத். 16:18). அதே உவமை யைப் பயன்படுத்தி, 1 பேதுரு 2:5-ல் பேதுரு விளக்குகிறார், எல்லா விசுவாசிகளும் கடவுள் ஒரு ஆவி க்குரிய வீட்டைக் கட்டுவதற்குப் பயன்படுத்தும் கற்கள்—அதாவது அவருடைய ஆலயம். இந்த கட்டமைப்பின் மூலக்கல்லாக கிறிஸ்து, "வாழும் கல்" (1 பேதுரு 2:4). "Jesus Christ is not only a Corner Stone but a living stone" எனவே,
நம்மை உயிருள்ள கற்களாயி ருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! We shall stand as a spiritual home to offer spiritual offerings. இயேசு கிறிஸ் துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட் டமாகவும் இருப்பீர்களாக! என கூறுகிறார். அதனால், நம்மை
இருளினின்று தம்முடைய வியத்
தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின்
மேன்மை மிக்க செயல்கள் அறிவி
ப்பதே நாம் ஆண்டவரை அருட்ப ணியாய் அடையாளப்பட கிறித் துவின் அழைப்பாகும்.
3.உயிர்த்த கிறித்து தன்னை
எவ்வாறு அடையாளப்படுத்தி னார்? How do Resurrected Christ identify himself? யோவான் 20;19-23.
கிறித்துவின் அன்பர்களே!
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களு க்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள்.
ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பயப்படத்தக்க நிகழ்ச்சிகள் குறித்து விவாதித்துக் கொண்டி ருந்தார்கள். பேதுரு மற்றும் யோவான் மூலமாக கல்லறை காலியாய் இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். அவர் உயிர்த்தெழுந்தார் என்று தேவ தூதர்கள் சொன்ன செய்தியுடன் அந்தப் பெண்கள் இதை உறுதிப் படுத்தினார்கள். மகதலேனா மரி யாள் தான் இயேசுவைக் கண்ட தை அறிவித்தாள். இயேசுவைப் பின்பற்றியவர்களுக்கு இச் செய்தி அதிர்ச்சியைத் தந்தது.
இயேசு சிறைபிடிக்கப்பட்டப்போது, அவர்களெல்லாரும் தூக்கத்தில் இருந்தார்கள். அவர் சிறைபிடிக் கப் பட்டப்போது, பேதுரு மறுதலித் தார். அவர் விசாரணைக் குட்படு த்தப்பட்டபோது ஒருவரும் கர்த்தர் பக்கம்நிற்கவில்லை.சிலுவையின் அருகில் கூட வரவில்லை. யோவான் மற்றும் சில பெண்கள் மட்டும் இருந்தார்கள். இயேசுவின் சரீரத்தை சிலுவையில் இருந்து இறக்கும் சமயத்தில் உதவி செய் தார்கள். சீடர்கள் யூதர்களைக் குறித்துப் பயந்திருந்தார்கள். பண்டிகை முடிந்தவுடன் உபத் திரவம் ஆரம்பிக்கும் என்று எண்ணினார்கள். இக் காரணங்க ளுக்காக அவர்கள் கதவுகளைப் பூட்டி உள்ளே கூடியிருந்தார்கள். உள்ளறையில் நம்பிக்கையற்ற வர்களாய் இருந்தார்கள்.கதவை தட்ட வில்லை, கதவை திறக்க வில்லை. பூட்டிய அறைக்குள்
உன்னத இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்க ளுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இப்படி வாழ் த்துவது யூதர்களின் வழக்கம். இஸ்லாமியரும் இப்படி வாழ்த்து கிறார்கள். மரித்த ஒருவர் உயிரு டன் தோன்றியுள்ளார். புறக்கணி க்கப்பட்டவர் விடுதலையுடன் இருக்கிறார். கல்லறையின் கல் லோ அல்லது இரும்புக் கதவோ அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட மக்கள் மத்தியில் அவருடைய பிரசன்னத்தை தடுக்க முடியவி ல்லை. உயிர்த்த கிறித்துவின்
"அமைதி உறித்தாகுக" என்ற வார்
த்தை கடவுளிடமும், சக மனிதர்க ளிடம் அமைதியுடன் வாழ அருட்
பணியாளர்களின் முதல் தகுதி
யாகும்.எனவே தான் "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். (மத்தேயு நற்செய்தி 5:9), அமைதி
உறித்தாகுக என உயிர்த்த கிறித்
து இரண்டுமுறை கூறுகிறார். அருட்பணியாய் கிறித்துவை அடையாளப்படுத்த அமைதியை
ஏற்படுத்துவோம். இரண்டாவதாக
ஆண்டவர்; " தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டி னார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். ஆண்டவரின் காயங்களின் தழும் புகளே நம்முடைய மீட்பின் அடை
யாளங்கள். It's our prime duty to
Identify Christ's wounds is redumption of our sins, ஐந்து காயங்கள் நம் மீட்பின் அடையாள சின்னங்கள். சிலுவையின் மூலமாக அவர் உலகத்தாரை இறைவனுடன் ஒப்புரவாக்கி உள்ளார் என்பதை இந்த வாழ்த்துதல் வெளிப்படுத் திக் காண்பிக்கிறது.அடுத்தாக, ஆண்டவரை கண்ட சீடர்கள் மிக மகிழ்ச்சியடைந்தனர்
பயந்து, மேல் அறை வீட்டில் பதுங்
கியிருந்த சீடர்களின் வாழ்வில்
அமைதி வந்தவுடன் மகிழ்ச்சிய டைந்தனர். ஆண்டவர் இயேசு வரும் இடங்கள் மகிழ்ச்சியின் இல்லங்கள் நாம் உயிர்த்த கிறிஸ் துவை மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற வகையில் அடையாளப் படுத்த கடமைப்பட்டுள்ளோம். இயேசு என்ற நாமம் மகிழ்ச்சியின் நாமம். மூன்றாவதாக, "தந்தை என் னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" It's a world wide Mission. The mission is to proclaim the good news about salvation through faith in Jesus’ death and resurrection to all people. we are
the Messengers of God. நமக்கு ஆண்டவர் தரும் கட்டளையாகும். கடவுள் நம்மை அனுப்புகிறார். இதற்கு துணையாக தன் தூய
ஆவியை கொடுத்து அனுப்புகி றார். தூய ஆவி இல்லாமல் அருட்ப பணியை ஆற்ற முடியாது அவரே நமக்கு எல்லாவற்றையும் கற்றுத் தருகிறவர் வழி நடத்துகிற வர், காக்கிறவர். நம்மை ஆண்ட வரின் அருட்பணியின் அடையா
ளமாக மாற்றுகிறவர் அவரே. இறுதியாக, மற்றும் உறுதியாக
அளிக்கும் அடையாளம் மன்னிப்பு
. It's a Mission to forgive in the name
of Jesus Christ.எவருடைய பாவங்க ளை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடை ய பாவங்களை மன்னியாதிருப்பீர் களோ, அவை மன்னிக்கப்படா" என்றார். நாம் முதலில் மன்னிப்பு
பெறவேண்டும்.பிறகு பிறரை மன்னிக்க வேண்டும். இது ஆண்டவரின் கட்டளை. மன்னிப்பு மனிதர்களின் மாண்புமிகு செயல் மன்னிக்கும் போது ஆண்டவர் மகிழ்ச்சி அடைகிறார் பிறரை நாம் மன்னிப்பதினால் நாம் நம்முடைய பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறுகிறோம்.
அன்பின் இறை மக்களே! நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் இறை வார்த்தைபடி நற்பணி ஆற்றுவது நம்முடைய கடமையாக இருக்கிறது. இதன் மூலம் ஆண்டவருடைய அன்பு இந்த உலகிற்கு நாம் கொடுக்கிறோம். அருட்பணி ஆற்றாமல் கடவுளு க்கு பிரியமாய் இருப்பது எப்படி? என சிந்திப்போம். செயல்
படுவோம். ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
"We need a theologically grounded Missiology and Missiologically focused theology" By Dr.Peter kuzmic.
(Prof.of World Mission and European Studies.)
Comments
Post a Comment