Pentecostal Sunday. Come Holy Spirit, Renew Us. வாரும் தூய ஆவியாரே, எம்மைப் புதுப்பியும்.(140). எசேக்கியேல் 37:1-14. திரு.பாடல் 104: 24-35. திருத்தூதர் Acts. 2:1-13. யோவான் 16:1-11.
முன்னுரை:
கிறித்துவின் அன்பு இறைமக் களே! உங்க அனைவருக்கும்
இயேசு கிறித்துவின் இனிய நாம த்தில் வாழ்த்துக்கள்."வாரும் தூய ஆவியாரே, எம்மைப் புதுப் பியும்" என்ற தலைப்பை பெந்த
கொஸ்தே ஞாயிறு நாளுக்காக
தியானிப்போம். வாரும் தூய ஆவியாரே, எம்மைப் புதுப்பியும்
என்ற தலைப்பு கத்தோலிக்க
திருச்சபையின் இறை மன்றாட்
டாகும்.
What is Pentekoste? பெந்த கொஸ்தே என்றால் என்ன?
"பெந்தகொஸ்தே" என்றவார்த்தை கிரேக்கமொழியான"பெந்தகோஸ்டே" (pentekoste) என்ற வார்த்தையி லிருந்து வந்தது.இதற்கு ஐம்பது
என்ற பொருளாகும். கிறித்தவத் தில், ஆண்டவர் தூய ஆவியை
திருத்தூதர்களுக்கு ஐம்பதாவது
நாளில் வழங்கியதை நினைவு
கூறும் நாளாகும்.(Fifty days after Easter) திருத்தூதர்கள் Feast of Weeks என்ற வார விழாவை கொண்டாடுவதற்காக
எருசலேமில் கூடி இருந்தபொழுது
தூய ஆவியாக அவர்கள்மீது
இறங்கிய (descent)நிகழ்வை
குறிக்கிறது.இது ஈஸ்டர் பண்டி கைக்கு அடுத்து வரும் ஏழாம்
ஞாயிறு அன்று (Seventh Sunday after Resurrection.) கொண்டாடப்
படுகிறது.(Acts. திருதூதர் பணி கள் 2:1-31) பெந்தகொஸ்தே
ஞாயிறுக்கு " வெள்ளை ஞாயிறு
White Sunday" என்ற பெயரும் உண்டு. It's the first Pentecost marks the start of the Messianic Age. மிக முக்கியமாக பெந்தகொஸ்தே நாளில் 120 மக்கள் பங்கு பெற்ற னர், 12 சீடர்களும்,( மத்தியாஸ் யூதாசுக்கு பதிலாக) ஆண்டவரின் தாய் மரியாளும், இயேசுவின் சகோதரர்கள், மற்றும் சில பெண் களுமாக மேல் அறையில் Upper Room.கூடி இருந்தனர்."சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 133:1) தூய ஆவி வர ஒரு மனத் தின் ஆவி மிக முக்கியமானது.
தூய ஆவி வருகின்ற போது;
1.கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத் திலிருந்து உண்டானது,
2 அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.
3.நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் (Tongues of Fire) ஒவ் வொருவர் மேலும் வந்து அமர்ந் தது.
4.அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்.
5. தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ் வேறான மொழிகளில் Different Languages பேசினார்கள்.
6. நேரம் காலை 9 மணி.
திருத்தூதர் பேதுருஎழுந்து நின்று
நீங்கள் காணுகின்ற காட்சி இறை வாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே. 'இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையு ம் காண்பர். (திருத்தூதர் பணிகள் 2:16,17) தூய ஆவிபெறநாம்என்ன
செய்யவேண்டும் என்று பேதுருவிடம் கேட்டனர், அதற்குப் பேதுரு, அவர்களிடம், "நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங் களிலிருந்து மன்னிப்புப் பெறுவ தற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழு க்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். (திருத்தூதர் பணி கள் 2:38) தூய ஆவியே பெற மூன்று செயல்கள் மிக முக்கியமா னது; 1.மனம் மாறுங்கள் (Repent)
2.மன்னிப்பைபெருங்கள்(Remission)
3.திருமுழுக்கு பெருங்கள்.(Babtize)
தூய ஆவியின் வல்லமையால் அன்றைய தினமே 3000 பேர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர்.
புதுபித்தல் ஒருவன் கிறித்துவுக்
குள் இருந்தாள்தான் முடியும்.
1. "உலர்ந்த எலும்புகளே!ஆண்ட வரின் வாக்கைக் கேளுங்கள்". O! You dry bones, hear the word of God. எசேக்கியேல் 37:1-14.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! எசேக்கியேல் தீர்க்கரை ஆண்டவர் உலர்ந்த எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிற்கு கொண்டு செல்கிறார். காரணம்
பாபிலோனில் இருந்த யூதர்களின் மனப்பான்மையை மாற்றுவதற்கு எசேக்கியேல் சுமார் ஐந்து வருடங் களாக படாத பாடு பட்டார்.ஆனால், எந்த நன்மையுமில்லை. கடவுள் சொன்ன செய்தியை அவர் அறி வித்தார்,, உவமைகள்மூலமாகவும் சொன்னார். இப்படியெல்லாம் செய்தும்கூட, எதிரிகள் எருசலே மை அழிப்பதற்கு ஆண்டவர் விட்டுவிடுவார் என்பதை அந்த மக்கள் நம்பவே இல்லை. பாபிலோனியப் படை எருசலேமை முற்றுகை போட்டிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட அவர்கள் நம்பவேஇல்லை.அங்கே குடியிருப்பவர்களுக்கு எந்த ஆபத் தும் வராது என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது அவர்களுடைய நம்பிக் கை சுக்குநூறாகிவிட்டது. ஏன்?
முற்றுகை போடப்பட்டு இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, எருச லேமிலிருந்து பாபிலோனுக்குத் தப்பித்து ஓடிவந்த ஒருவன், “நகரம் அழிந்துவிட்டது!” என்று சொன்னான். அதைக் கேட்டதும் பாபிலோனில் இருந்த யூதர்கள் அப்படியே இடிந்து போய் விட்டார் கள். அவர்கள் நெஞ்சார நேசித்த நகரம், பரிசுத்த ஆலயம், அருமை யான தேசம் என எல்லாமே அழிந் து விட்டது என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. அதுவரை அவர்களுக்கு இருந்த நம்பிக்கை யெல்லாம் வீண்போனது.(எசே. 21:7; 33:21.)
அப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்பி க்கை தரும் ஒரு தரிசனத்தை எசே க்கியேலுக்கு ஆண்டவர் கொடுத் தார். எசேக்கியேல் தீர்க்கருக்கு
ஆண்டவரின் கரமும் The hand of the Lord upon him, ஆண்டவரின்
தூய ஆவியும் The spirit of the Lord
அவருடன்எப்பொழுதும்இருந்தது. மனமுடைந்துபோன யூதர்களுக்கு அந்தத் தரிசனம் என்ன நம்பிக் கையை அளித்தது? இன்று கடவுளுடைய மக்களுக்கு அந்தத் தரிசனம் எப்படிப்பொருந்துகிறது? என்பதே நம் சிந்தனை.
அந்த பள்ளத்தாக்கு முழுவதும் எலும்புகளாகக் கிடந்தன. (The Valley of death) இவைகள் மிக கடு மையானபோரில் இறந்தவர்கள். அவைகள் மிகவும் உலர்ந்து போய் இருந்தன. எலும்புகளுடன் துறு பிடித்த வாள்கள், கேடயங்கள், தலைகவசங்கள், ஈட்டிகள் இருந்தன. அந்தத் தரிசனத்தின் அர்த்தத்தை முழுமையாகப் புரி ந்து கொள்வதற்காக, என்னை சிதறிக்கிடந்த‘அந்தஎலும்புகளைச் சுற்றி நடக்கும்படி’ஆண்டவர் சொன்னார்.
உலர்ந்த எலும்புகள் ஆண்டவரை
விட்டு பிரிந்தவர்களை குறிக்கி றது. அவர் என்னிடம், "மானிடா! இந்த எலும்புகள் உயிர் பெற முடியுமா?" என்று கேட்டார். தீர்க்கர் உடனே" முடியாது" என்று சொல் லாமல், என், "தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே" என்று அறிவுடன் மறு மொழி அளித்தார்.
ஆண்டவர் தீர்க்கரிடம்,"மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக் கும். These bones are the whole house of Israel.”அவர்களோ "எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய் விட்டது.நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்" எனச் சொல்கிறார்கள்.
இவர்களுக்கு நம்பிக்கை கொடுக்
கும் வார்த்தை " சிதறுண்ட இஸ்ர
வேலரை ஒன்று சேர்ப்பதே".
இஸ்ரவேலர் எசேக்கியேல் தீர்க்கர்
காலத்தில் கி.மு 643-591ல் "எனக்கெதிராய் கிளர்ச்சி செய்யும் மக்களாகவும்,"வன் கண்ணும் கடின இதயமும்" கொண்ட அம்மக் களிடம் நான் உன்னை அனுப்பு கிறேன்(எசேக்கியேல்2:3,4)என்றுஆண்டவர்இஸ்ரவேலரைப் பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்பாக கூறியது அவர்கள் 2024 லிலும் அப்படியே உள்ளதை இங்கு நினைவு படுத்துகிறேன் ."Israel is a rebellious nation that has rebelled against God"
தற்காலத்தில் இஸ்ரவேலர்போல
சில திருச்சபையினரும் உள்ளனர்
இவர்கள் மத்தியிலும் ஆணடவர்
தம் ஊழியர்களை அனுப்புகிறார்.
எசேக்கியேல் தீர்க்கர்போல கஸ்டப்பட வைக்கிறார். மனம்
திருந்தாத மக்களும், இஸ்ரவேல ரும் உலர்ந்த எலும்புகளே. ஆண்ட வர் இந்த எலும்புகளுக்கு இறை வாக்குரை. "உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங் கள்" என்று சொல்.எனதீர்க்கருக்கு
கட்டளையிடுகிறார். தலைவரா கிய ஆண்டவர் இந்த எலும்புகளு க்கு உயிர்மூச்சு புகச் செய்வேன்;. நீங்களும் உயிர் பெறுவீர்கள். என்கிறார்.ஆண்டவரின்வார்த்தை
அவரின் தூய ஆவியுடன் வழங்கப் படுகிறது.எனவே, எலும்புகள்
உயிர் பெற்றன. மிக வருத்தமான
செயல் என்னவென்றால் இந்த
எலும்புகளுக்கு உரிய மரியாதை
இல்லை.முறையாக அடக்கம் (Burial)செய்யவில்லை.அவைகளுக்கும் உயிர்பெற செய்கிறார்.
2.பெந்தகொஸ்தே அனுபவம்
பெற்றிருக்கிறியா? Have you received the experience of Pentecost?
திருத்தூதர் Acts. 2:1-13.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நம்முடைய வாழ்வில் பல அனுபவங்களை பெற்றிருக்கி றோம். பெந்தகோஸ்தே அனுபவம் நம் வாழ்விலே எப்பொழுதாவது நாம் பெற்று இருக்கிறோமா? என்பதை சிந்திக்க அழைக்கப்படு கின்றோம். பெந்தகொஸ்தே என்பது தூய ஆவியை நம்மில் ஊற்ற செய்வது. தூய ஆவி என்பது அனைவருக்கும் ஆனது. இது கல்வி, பதவி, செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டது அல்ல. கடவுள் அருளும் ஒரு ஈவு. அன்பானவர்களே! எனக்கு அப்போது 37 வயது இருக்கும்.
காஞ்சிபுரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வாய்ப்பு
கிடைக்கும்போதுதெல்லாம்
கைப்பிரதி தருவது, கிராம நற்செ
ய்தி பணி செய்வது, நற்செய்தி
கூட்டங்களுக்கு செல்வது என
சுறுசுறுப்பாக இருப்பேன். அக்கா
லத்தில் காஞ்சிபுரத்தில் Dr. சுந்தர்
சிங் ( தந்தை பெயர் Dr. பிச்சை முத்து, லே லீடர்) அவர்கள் "ஏசு
மருத்துமனை" என்ற பெயரில்
மருத்துவ மனை நடத்திவந்தார்.
கடவுள் மீது அளவற்ற அன்புள்ளம்
கொண்டவர். ஊழியமே அவரது
மூச்சாகும்.ஒவ்வொரு இரண்டாம்
சனிக்கிழமை தன்வீட்டில் நற்செ
ய்தி கூட்டங்களை நடத்துவார்.
என்னை ஒவ்வொரு கூட்டத்திற் கும் அழைப்பார். அவ்வாறு நடந்த
ஒரு கூட்டத்தில் நானும் உபவாசத்
தோடு கலந்து கொண்டேன்.என்
னுடன் சுமார் 25 பேருக்கு மேல்
கலந்துகொண்டனர்.பாடல், விண் ணப்பம், நற்செய்தி, சாட்சி என
சென்று கொண்டிருந்தது. இருதி
யில் சென்னையிலிருந்து வந்த
ஊழியர் தூய ஆவியின் ஆற் றலை பெற முன்னே வாருங்கள்
உங்களுக்காக ஜெபிக்கப்போ கிறேன் என்றார்.நானும்,மற்ற
சகோதரர்களும் முன்னே சென்று
வரிசையாக முழங்காளுடன் இருந்தோம். போதகர் ஒவ்வொரு
வருக்காகவும் தலையில் கை
வைத்து ஜெபித்துக் கொண்டே
வந்தார். என்னிடம் வந்து, தலை
மேல் கைவைத்து ஜெபித்தார்.
உடனே என் தலையில் அழுத்தம்
(Power) இறங்கியது.என் உடல்
மீது ஒரு நடுக்கம் ஏற்பட்டது, நான்
தூக்கி எறியப்பட்டேன். I lost my
Sense.என்ன நடந்தது என எனக்கே
தெரியவில்லை.நான் அன்னிய
மொழியில் பேசினேன், தொடர் ந்து துதித்துக்கொண்டிருந்தேன்.
பிறகு என்னை தூக்கி அமரவை
த்தார்கள். என் முகம் பிரகாசமாக
இருப்பதாக கூறினார்கள்.என்
உடல் முழுவதும் உற்சாகத்தின்
ஆவி இருப்பதை உணர்ந்தேன்.
அந்த போதகர் பெரிய அளவில்
அறியப்பட்ட போதகர் அல்ல. ஆனாலும் ஆண்டவர் அவர்மூல
மாக என்மீது தூய ஆவியை
கட்டளையிட்டார்.அல்லேலூயா!
ஆமேன்.இந்த அனுபவம் ஊழிய
த்தின் மீது அதிக தாக்கம் ஏற்படு த்துகிறது. ஆண்டவரை அதிகம்
நேசிக்க வைக்கிறது. ஏதாவது
அவருக்கு செய்யவேண்டும்என்ற வாஞ்சையை உண்டாக்குகிறது.
"ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலே மிலும் யூதேயா, சமாரியா முழுவ திலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார்.
(திருத்தூதர் பணிகள் 1:8) தூய
ஆவி நமக்கு வல்லமையை
தருகிறது.சீடர்கள், மற்றும் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்அனைவருக்கும் தூய ஆவியைகொடையாக தருகிறார். நாம் அந்த அனுபவத்தி ற்குசெல்லஅழைக்கப்படுகிறோம்.
3.தூய ஆவியின் தூயபணிகள்.
Holy functions of the holy spirit. யோவான் 16:1-11.
கிறிஸ்துவின் அன்புஇறைமக் களே! ஆண்டவரின் விடைபெறும்
செய்தியாக( Farewel Message) யோவான் 16 இருக்கிறது. சீடர்க ளை திடப்படுத்துவது, தயார்படுத் துவது அவரின் பிரதான விடை
பெறும் செய்தியாகும். அவர்
விண்ணகம் சென்றால்தான்
மண்ணகத்தில் அவர்களை காக்கு
ம் கரமாக "துனணயாளர்" அனுப்ப படுவார். ஆண்டவர் செல்வது
அவர்களின் நன்மைக்காகவே.
அந்த துனணயாளரே அவர்க ளோடு என்றென்றும் இருக்க போகிற "தூய ஆவியானவர்".
வாரும் தூய ஆவியாரே, எம்மைப் புதுப்பியும். நம் அனைவரின்பற்றுறுதியை புதுப்பிக்கின்றவர்
தூய ஆவியே. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். தூய ஆவியார் இரண்டு விதங்களில் நம்மிடையே தங்கியிருக்கின்றார்.“உங்களோடு தங்கியிருக்கிறார்(Withus)உங்களுக்குள்ளும் (with in) இருக்கிறார்.” சீடர்களுக்கு துன்பங்கள் உண்டு. தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள்.உங்களை கொலை செய்வர்கள்.ஆனாலும் தூய ஆவியானவர் உங்களோடு என்றென்றும் இருப்பார்.நான் உங்களைதிக்கற்றவர்களாகவிடேன்.நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம் என அவர்களை திடப்படுத்தினார்.
தூய ஆவியானவர் இவ்வுலகில்
வரும்போது; பாவம்,(sin), நீதி (righteousness,) மற்றும் தீர்ப்பு, (Judgement) அவர் வந்து, பாவத் தைக் குறித்தும், நீதியைக் குறித் தும், நியாயத் தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்து வார்.இது "ஆன்மீகத்தின் மூன்று பெரிய படிகள்".
1. பாவம்: உலகத்தின் தீமை, பாவம் முக்கியமாக அவருக்கு எதிராக இருந்தது ,—
ஏனெனில், எல்லாருமே பாவம் செய்துகடவுள்கொடுத்தமேன்மையைஇழந்துபோயினர்(உரோமையர் 3:23) இதை தூய ஆவியானவர்
சரிசெய்ய விரும்புகிறார். ஏனெ னில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது.என
பவுல் அடிகளார் உணர்த்துகிறார்.
தந்தை உலகை படைத்தார், குமாரன் உலகை மீட்டார், தூய ஆவி உலகை வழிநடுத்துகிறார் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.
.எனவே 1பேதுரு:1:15,16. இல் காண்பது "உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தை யிலெல்லாம் தூய்மையுள்ளவர்க ளாய் இருங்கள். நீங்கள் தூயவ ராயிருங்கள். ஏனெனில் நான் தூயவன் என்று மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது ஆம் தூய் மையான வாழ்க்கையைத்தான் இறைவன் நம்மிடம் விரும்புவது. கடைசிகாலத்தில் பயணம் செய்யும் நாம் தூய ஆவியாரின் செயல்பாடுகளை உணர வேண்டு மென்றால் உள்ளத்தில் உள்ள பாவக்கறைகளை முதலில் அகற்றி மனம்திரும்பி இறைவ னில் முழுமையாக ஒன்றாக வேண்டும்.மத்தேயு:5:8 இல்இயேசு மலைப்பொழிவில் கூறுவது "தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் இறைவனைக் காண்பர். நமது உள்ளம் தூய்மையாக இருக்கும் போது தான் ஆவியானவரின் செயல்பாடுகளை உணரவும், ஆழ மாக அனுபவிக்கவும் முடியும்.
2.நீதி: நீதியும், அமைதியும் இணைந்தே பயணிப்பவை.இவை இரண்டும் தூய ஆவியினரின் கண்கள். நீதி எங்கே நிலவுகிற தோ, அங்கே அமைதியும் அமர்ந்தி ருக்கும். தூய ஆவியினர் ஆட்சி செய்வார். அமைதி எங்கே உலவு கிறதோ, அங்கே நீதியும் நடமா டும். நீதியற்ற தன்மை, அமைதிய ற்றசூழலைஉருவாக்குகிறது.அங்கு தூய ஆவியானவர் இல்லை. நீதியற்ற தன்மை அச்ச உணர்வை உருவாக்குகிறது.நீதியற்றதன்மை பதட்டத்தை பிரசவிக்கிறது.
எங்கே நீதி நசுக்கப்படுகிறதோ, அங்கே அமைதி தனது அமைதி யை இழக்கிறது. தூய பவுல் அடிகளார்," நீதியற்ற நம் நடத்தை யின் மூலம் கடவுளின் நீதி வெளிப்படுமாயின் நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தெழு ந்து தண்டித்தால், அவர் நீதியற்ற வர் என்போமா?-(உரோமையர் 3:5)
அநீதியானவர்களைகடவுள்தண்டிப்பார். நீதி என்னும் மார்க்கவசம் (Breastplate of righteousness) அணி
ந்தவராய் இருக்க கடவுள் தூய
ஆவியின் மூலம் உணர்த்துகிறார்.
"நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். (மத்தேயு நற்செய்தி 5:6)
3.தீர்ப்பு: Judgement:
பிரியமானவர்களே! தூய ஆவியி ன் சிறப்பான பணி தண்டனை
தீர்ப்பு. அரசன் அன்றே கொல் வான், தெய்வம் நின்று கொல்லும்
என்பர். தூய ஆவியானவரும்
மனந்திருந்தும் வரை காத்திருப்
பார். திருந்தாதாதவர்களை திருத்தி கொள்ள மறுப்பவர்களை
தீயினால் சுட்டெரிப்பார்.
ஆகவே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. ஏனெனில், கிறிஸ்து இயேசு வோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது.என
பவுல் அடிகளார் உரோமையா 8:1,2
ல் கூறுகிறார்.ஒரு மனிதன் செய் யும் எந்தத் தவறுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் தூய ஆவியைப் பழிப்பவனுக்கோ மன்னிப்பே கிடைக்காது என்றும் இயேசு கூறியுள்ளார்.உலக பாவத்திற்கு
தூய ஆவியின் தண்டனை தரு வது அவரின் பணியகும்.
அன்பானவர்களே நம்மை அவர் தெரிந்துகொண்டிருப்பது நம்மில் காணப்பட்ட நற்குணம், அல்லது துர்குணம் அடிப்படையில் அல்ல, நாம் அவரின் மேய்ச்சலின் ஆடுக ளாய் அவருக்கு பின்செல்லும்படி யாகவேதெரிந்துகொண்டிருக்கின்றார்." உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண் ட தூயஆவிதங்கும்கோவில்என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. (1 கொரிந்தியர் 6:19) நாம் கடவுளுக்குறியவர்கள்
நம் உடல் தூய ஆவி தங்கும்
கோவிலாக மாற்றுவோம்,
உலகம் நியாயந்தீர்க்கப்படுதலின் நோக்கதை அவிசுவாசிகள் நரக த்தில் தள்ளப்படுவதாக மட்டும் ஆண்டவரா பார்க்கவில்லை. சாத்தானையும் அவனுடைய அடிமைத்தனத்தையும் முற்றிலும் அழித்து அதற்கு ஒரு முடிவுகட்டு வதாகவே ஆண்டவர் நியாயத்தீர் ப்பைப் பார்த்தார்.இறைவனுடைய அன்பின் ஐக்கியத்திலிருந்து மனிதர்களைப் பிரிப்பவன் சாத்தானே. அவனை அழித்து நம்மை காப்பதே தூய ஆவியின்
திருப்பணி யாகும்.
"Holy Spirit is Our Helper, Our Counselor, and Our Comforter:"
வாரும் தூய ஆவியாரே, எம்மைப் புதுப்பியும், ஆமேன்.
Prof. Dr David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com.
"On the far side of every cross we find the newness of life in the Holy Spirit, that new life which will reach its fulfillment in the resurrection."
St. Pope John Paul II
Pentecost | |
---|---|
Fresco of the Pentecostal dove (representing the Holy Spirit) |
Comments
Post a Comment