மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.
முன்னுரை: கிறித்துவின் அன்பு இறை மக்களே!
மாணவர் (Student) என்பவர் முதன் மையாக ஒரு பள்ளி அல்லது பிற கல்வி நிறுவனத்தில் கல்வி பயி லும் ஒருவரைக் குறிப்பதாகும். மாணவர்" என்பவர் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மேற்படிப்பு களில் (எ.கா., கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் ) சேர்ந்தவர் களைக் குறிக்கிறது; Students can be children, teenagers, or adults who are going to school, but it may also be other people who are learning, such as in college or university. இவர்களுக் காக நம் திருச்சபை ஒரு ஞாயிற்று
கிழமையை மாணவர் ஞாயிறு ஆக கொண்டாடிவருகிறது.
ஞானம் என்பது,"அறிவு ,அனுபவம் , புரிதல் ,பொதுஅறிவு நுண்ண றிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி சிந்தித்து செயலாற்றும் திறனே ஞானம் எனப்படும்.
கிறிஸ்தவ இறையியல் பழைய ஏற்பாட்டில் ஞானம் (ஹீப்ருமொழி யில் சோக்மா) என்றும் கிரேக்க மொழியில் ஞானம் ( சோபியா ) என்று அழைக்கப்படுகிறது. இது பிளாட்டோனிசத்திலிருந்து பெற்றது . Acc.to Collins' dictionary,
"Wisdom is the ability to use your expe rience and knowledge in order to make sensible decisions or judgments."
"Knowledge (அறிவு )is information and understanding about a subject."
ஞானம் பரத்திலிருந்து வருவது.
உண்மையான ஞானம் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து மட்டுமே வருகிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். சாலொமோன் ராஜா மிகவும் ஞானியாக இருந்தார், ஏனென்றால் அவர் ஞானத்தால் நிரப்ப கடவுளை நாடினார். அவருடைய ஞானத்தை சோதிக்க உலகெங்கிலும் இருந்து உயர்ந்த மற்றும் உன்னதமானவர்கள் வந்து ஆச்சரியப்பட்டனர். மேலிருந்து வரும் ஞானத்தின் சக்திஅது.ஞானம்தெய்வீகமானது மற்றும் அதீதமானது. நாம் வேதத் தில் மூழ்கும்போது, நம் மனதை அறிவூட்டவும், கடவுளின் சத்தியத் தின் ஆழத்தை வெளிச்சம் போடவு ம் பரிசுத்த ஆவியானவரை அழை க்கிறோம். மனிதர்களின் ஞானம் அவர்களுடன் புதைக்கப்படும், ஆனால் கடவுளுடைய வார்த்தை யில் காணப்படும் மனித புரிதலுக் கு அப்பாற்பட்ட உண்மைகளை உணர தெய்வீக ஞானம் நமது ஆன்மீகக் கண்களைத் திறக்கி றது.வசனத்தை தியானிக்கும் போது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திற் கும் கடவுளுடைய ஞானத்தைத் தேடுவதையும், விசுவாசத்துடன் அதைப் பெறுவதையும் நினை வில் வையுங்கள், உலகம் பெற்ற ஞானத்தை விட நீங்கள் அதிகம் புரிந்துகொள்கிறீர்கள்.யோபு ஞானத்தையும் அறிவையும் விளக்குகிறார்; " ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்; தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு. (யோபு 28:28)
மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல்தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத் தின் ஆவியினால் நிறையப் பட்டான்…” (உபாகமம் 34:9)."விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அதுஅமைதியைநாடும்;பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளி வேட மற்றது. (யாக்கோபு 3:17) என கூறுகிறார்.மற்றும்"உங்களிடையே குறைவான ஞானம் கொண்டி ருப்போர் கடவுளிடத்தில் கேட்கட் டும் அப்போது அவரும் ஞானத் தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்.
(யாக்கோபு 1:5) என கூறுகிறார்.
தெய்வீக ஞானம். இதனை யாக் கோபு, “பரத்திலிருந்து வருகிற ஞானம்” (யாக்.3:17) என்கிறார்.
1.கடவுள் அருளிய ஞானமே நல்ல தீர்ப்பை வழங்கியது. The Wisdom of God gives a good Judgem ent.: 1 அரசர்கள் 3:16-28
கிறித்துவின் அன்பு இறை பற்று றுதியாளர்களே! அரசர் சால மோன் ஒன்றிணைந்த யூதா-இஸ்ரயேல் நாட்டின் அரசராக ஆட்சிசெய்தவரும் தாவீது அரச னின்மகனும்ஆவார்.சாலமோனுடைய ஆட்சிக்காலம் ஏறக்குறைய கி.மு. 970 முதல் கி.மு. 931 வரை யென கணிக்கப்படுகின்றது.
இஸ்ரவேலின் யூப்ரடீஸ் ஆறு தொடங்கி, பெலிஸ்தியர்களின் தேசத்தைக் கடந்து எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த எல்லா நாடுகளையும் சாலமோன் ஆட்சி செய்தார்.ஒருநாள் சால மோன் அரசர் பலி செலுத்து மாறு கிபயோனுக்குச் சென்றார். அன்றிரவு கிபயோனில்ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!” என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், “உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துட னும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர். என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?” என்று கேட்டார்.
சாலமோன் கடவுளைத் தொழுகை யில், இறைவன் தோன்றி ""உனக்கு வரம் தருகிறேன். செல்வம், அமைதியான வாழ்வு, ஞானம் எது வேண்டும்?'' என்றார். பேரரசன் சாலமோன் தனக்கு ஞானமே வரமாகத் தரவேண்டும் என்று பெற்றுக்கொண்டான். நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத்தேவையான ஞானத்தைமட்டுமேகேட்டிருக்கிறாய். அன்பர்களே! நாம் ஆண்டவரி டம் என்ன கேட்கிறோம்? சுய நலமற்ற விண்ணப்பத்தை ஆண்
டவர் விரும்புகிறார். ஆண்டவர்
அருளால் அவர் நீதி மொழிகளை,
உன்னதப்பாட்டு, பிரசங்கி என மூன்று புத்தகங்கள் பேரரசன் சாலமோனால் எழுதப்பட்டன.
அரசவையில் ஒரு குழந்தைக்காக இரண்டு பெண்கள் சண்டை போட்டார்கள். அந்தப் பெண்கள் ஒரே வீட்டில் குடியிருந்தார்கள், இருவரும் சில நாட்கள் இடை வெளியில் ஒரு மகனை பெற் றெடுத்தார்கள். அந்தக் குழந்தைக ளில் ஒன்று இறந்து விட்டது, இப்பொழுது அந்த இருவரும் உயிருள்ள குழந்தை தன் னுடையது என உரிமை கொண்டா டினார்கள். உண்மையில் நடந்த தை சொல்ல கண்கண்ட சாட்சிகள் யாருமில்லை. ஒருவேளை இந்த வழக்கு கீழ் நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்து அங்கு தீர்க்கப் படாமல் போயிருந்திருக்கலாம். கடைசியில், இந்த வழக்கு இஸ்ர வேலின் அரசனாகிய சாலொமோ னிடம் கொண்டு செல்லப்பட்டது. அவரால் உண்மையை கண்டு பிடிக்க முடிந்ததா? அந்தப் பெண் களின் வாதத்தை சிறிது நேரம் காதுகொடுத்து கேட்டுவிட்டு, ஒரு வாளை எடுத்துவரும்படி சாலொ மோன் சொன்னார். பின்பு, உறுதி யான குரலில், அந்தக் குழந்தை யை வெட்டி ஆளுக்குப் பாதி கொடுக்கும்படி ஆணையிட்டார். உடனே, உண்மையான அம்மா அந்தக் குழந்தையை—தன் அரு மை செல்வத்தை—அடுத்தவளி டமே கொடுத்துவிடும்படி அரச னிடம் மன்றாடினாள். ஆனால் அடுத்தவளோ அந்தக் குழந்தை யை இரண்டாக வெட்டும்படி வற்புறுத்தினாள். சாலொமோன் இப்பொழுது உண்மையை உணர் ந்து கொண்டார். ஒரு அம்மாவுக்கு தன் கர்ப்பத்து பிள்ளை மீது இருக்கும் கனிவான இரக்க த்தைப் பற்றி அவர் அறிந்திருந் தார். அந்த அறிவின் அடிப்படை யில் வழக்கைத் தீர்த்து வைத்தார். “அந்த முதல் பெண்தான் அவனு டைய அம்மா” என்று சொல்லி உண்மையான அம்மாவிடம் அந்தக் குழந்தையை ஒப்படைத்த போது அவள் அடைந்த நிம்மதி யை சற்று கற்பனை செய்து பாருங்கள்.—(1 ராஜாக்கள் 3:16-27).
பரத்திலிருந்து வரும் ஞானம் அருளப்படும்படி ஆண்டவரிடம் வேண்டுதல் செய்வோம். தெய்வீக ஞானத்தால் மட்டுமே தேவனுடைய எதிர்பார்ப்புகளை நம்மால் செய்துமுடிக்க முடியும். அது ஒன்றே தேவனுக்குப் பிரியமாகவும் இருக்கும். மாறாக, உலக ஞானம் நம்மை ஏமாற்றி வீழ்த்திப்போடும். தேவனுடைய பணியைச் செய்ய தெய்வீக ஞானமே தேவை.
2. ஞானம் கடவுளின் ஈவு: Wisdom is the Gift of God. யாக்கோபு 1-1-8
கிறித்துவிற்கு மிக பிரியமானவர்
களே! கடவுளுக்கும் ஆண்டவரா கிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி உலகின் பல பகுதிகளில் சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, (யூதர்கள் ) இத்திருமுகத்தை எழுதுகிறார்.
இவர் நம் ஆண்டவரின் சகோதரர்
எருசலேம் திருச்சபை தலைவர். ஒரு காலத்தில் ஆண்டவர்மீது
நம்பிக்கை அற்றவர் இன்றோ
கிறித்துவின் அன்பு பனியாளர்.
(In the Gospel of Mark, we see Jesus’ brothers acting like brothers, telling others that Jesus’ is “out of his mind” and trying to restrain him) இவர்
திருத்தூதர் பவுலுடன் நல்லுறவு
கொண்டிருந்தவர்.எனவேதான்,
கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில், உயிர்த்த கிறித்து
தன்னை திருத்தூதர் பேதுருவுக் கும், பன்னிரென்டு சீடர்களுக்கும்
அதன்பிறகு 500 பேர்களுக்கும், பிறகு யாக்கோபுவிற்கும் தோன்றி
னார் என குறிப்பிடப்படுகிறார்.
தூய ஆவி பெற்ற பெந்தெகொஸ்
தே நாளில் தன் தாயுடன் மேல்
வீட்டறையில்இருந்தார்.ஆண்டவரை கண்டபிறகு தூய ஆயியின்
வல்லமையால் கிறித்துவின் பணி
யாளராகமாறினார்.அவருக்காவே இரத்த சாட்சியாக மறித்தார்.
யாக்கோபு அவர்கள், என் சகோதர சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும் போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள். என
கூறுகிறார்.உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப் போர் கடவுளிடத்தில் கேட்கட்டும் அப்போது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணா மல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். ஆனால் மிக முக்கியமானது நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால்அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள்.
என கூறுகிறார்.உறுதியான மனமே ஆண்டவரின் ஞானம்
நம்மை காத்துக்கொள்ளும் என
கூறுகிறார்.
3. கடவுளில் மகிழ்வதே ஞானம்.
Rejoice in the Lord is Wisdom.
லூக்கா: 10:21-24.
கிறித்துவிற்கு பிரியமானவர் களே !ஞானம் பரத்திலிருந்து வருவது.அறிவு உலகத்திவிருந்து பெறுவது. அன்பானவர்களே!
ஆண்டவர் முதன்முதலில் தூய ஆவியால் பேருவகை அடை கிறார். (Rejoice in Spirit).நற்செய்தி
நூட்களில் மூன்றுமுறை கண்ணீர்
விட்டவர், ஒரு ஒரு முறை மகிழ்ச்சி
அடைகிறார்.ஏன்? எதற்காக மகிழ்
ச்சியடைந்தார்? இறை வாக்கினர்
ஏசாயா கூறுவதுபோல்,
" காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். "
(மத்தேயு நற்செய்தி 4:16) என
ஆண்டவரின் நற்செய்தி பல இடங்
களில் பரவியது, ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என 72 சீடர்கள்
கூறிய வார்த்தை, மற்றும்
ஆண்டவர் "வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். "உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" என்ற ஆண்டவர் தானும் முதன் முதலாக
மகிழ்ந்தார். மனம் மாறிய மக்கள்,
இறை செய்தியை ஏற்றுக்கொண்
டதாலும், அற்புதங்கள் பலரின்
விடுதலை ஆண்டவருக்கு ஆவியி
ல் மகிழ்ந்தார். அன்பர்களே!
நாம் எப்போதாவது, ஆண்டவரை
மகிழ்ச்சி படுத்தினோமா?
ஆண்டவர் தன் கடவுளின் இறை யான்மையை( the sovereignty of God) ஞானிகளுக்கும் அறிஞர்களு க்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தி னீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்" என்றார். ஏனெனில் பல இறைவாக்கினர் களும் அரசர்களும் நீங்கள் காண் பவற்றைக் காண விரும்பினார்க ள். ஆனால், அவர்கள் காணவி ல்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை ஆனால்
உங்களுக்கு இந்த பேறு கிடைத்
தது என ஆவியில் மகிழ்ந்தார்.
கடவுள் ஞானிகளை ஏன் வெறுத் தார்? திருதூதர் பவுல் அடிகளார்
" கடவுள் ஞானிகளை வெட்கப்படு த்த, மடமை என உலகம் கருதுப வற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப் படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண் டார். (1 கொரிந்தியர் 1:27) ஏனேனில்," எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார். அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக் கப்பட்டிருக்கிறீர்கள்.கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மைஏற்புடைய வராக்கித் தூயவராக்கி மீட்கின் றார். (1 கொரிந்தியர் 1:29,30)
எனவே, அன்பு மாணவர்களே!
" ஞானத்தையும் மெய்யுணர்வை யும் தேடிப் பெறு; நான் சொல்வ தை மறந்துவிடாதே; அதற்கு மாறாக நடவாதே; ஞானத்தை புறக்கணியாதே; அது உன்னைப் பாதுகாக்கும்; அதை அடைவதில் நாட்டங்கொள்; அது உன்னைக் காவல் செய்யும். ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்; உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர் வைத் தேடிப் பெறு. அதை உயர் வாய்க் கொள்; அது உன்னை உயர்த்தும்; அதை நீ தழுவிக் கொள்; அது உன்னை மாண்புறச் செய்யும்(நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 4:5-8)
ஆண்டவர் தரும் ஞானம், நிலை யானது, நித்தியமானது. அதை
உறுதியாக பற்றிக்கொள். கடவுள்
நம்மை காப்பாராக! ஆமேன்.
Prof. Dr.David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
Comments
Post a Comment