Trinity Sunday. We worship the Triune God. நாம் வழிபடும் மூவொரு கடவுள். (141) எசேக்கியல் 1:1-28. .திரு.பாடலா: 2, 2 கொரிந்தியர் 13:11-14. யோவான் 1:1-18.
முன்னுரை:
கிறித்துவின் இரத்தத்தால் மீட்க
பெற்ற இறை மக்களே! உங்க
அனைவருக்கும் இயேசு கிறித்து
வின் இனிய நாமத்தில் வாழ்த்துக் கள். நாம் வழிபடும் மூவொரு கடவுள் என்ற கொள்கை சித்தா ந்த தலைப்பை சிந்திக்க இருக்கி
றோம். மூவொரு கடவுள் என்றால்
என்ன? What is a Triune God?
கிறித்துவ இறையியலின்படி கடவுள் "இறைத்தன்மையில் ஒரு வராகவும், ஆள்த்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் இருக்கிறார்." கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) எனப்படும். இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள். இருப்பினும் தந்தை, மகனிடமிருந் தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; மகன், தந்தையிடமி ருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; தூய ஆவி, தந்தை யிடமிருந்தும் மகனிடமிருந்தும் வேறுபட்டவர். எனவே, இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள்; மூவரும் மூன்று கடவுள்கள் அல்லர். எந்தவித வேறுபாடும் இன்றி, இந்த மூவருக்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே இறைத்தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே. இதனால் கிறிஸ்தவ சமயத்தினர் கடவுளை மூவொரு இறைவன் என்று அழைக்கின்றனர்.ஆண்டவராகிய இயேசுவின்உன்னத கட்டளை;
"எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்கு ங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக் குக் கொடுங்கள். (மத்தேயு நற்செய்தி 28:19) எனவே, ஆண்ட வராகியஇயேசு கிறித்து தன்னை யே திரித்துவமாய் இருப்பதை
வெளிப்படுத்துகிறார்.
1.தந்தையாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் முதல் ஆளாவார். இறைவெளிப்பாட்டில் இவரே படைப்பாளராக காணப்ப டுகிறார். He is a Creator of Everything.
2.இறைமகன் அல்லது மகனா கிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆளாவார். இறைவெளிப்பாட்டில் இவர் மீட்பவராக காணப்படுகி றார்.
3.தூய ஆவி என்பவர் அதிபுனித திரித்துவத்தின் மூன்றாம் ஆளாவார். இறைவெளிப்பாட்டில் இவர் புனிதப்படுத்துபவராகவும், தேற்றவாளராகவும், புதுப்பிப்ப வராகவும் காணப்படுகிறார்.
படைப்பில்மூவொரு கடவுள்: உலகப் படைப்பை விவரிக்கும் நிகழ்வில், முதலில் மூவொரு இறைவனைக் காண்கிறோம். தந்தையாம் கடவுள் தூய ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்த வேளையில்,தம் வார்த்தையால் அனைத்தையும் படைத்தார் என்று தொடக்கநூலில் (ஆதியாக மம்) முதல் அதிகாரத்தில் கூறப் பட்டுள்ளது. தூய ஆவியின் அசை வாடல் என்பது இயக்கமளித் தலைக் குறிக்கிறது. கடவுள் தம் வார்த்தையால் அனைத்தையும் படைத்து, தம் ஆவியால் அவற்று க்கு இயக்கம் அளித்தார் என்று இதற்கு பொருள்.இங்கு வார்த்தை என்பது இயேசுவையே குறிக்கிறது.
மூவொரு கடவுளின் முதல் வெளிப்பாடு.( தொடக்க நூல். ஆதியாகமம் 18:1-16)
அன்பானவர்களே! ஆபிரகாமின் வாழ்வில் நடந்த பின்வரும் சம்பவ த்தை மூவொரு இறைவனை அடையாளப்ப டுத்தும் நிகழ்வாக கூறலாம்: 'பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத் தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களைஉயர்த்திப்பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக் கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரை மட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!" என்றார்.'
புதிய ஏற்பாட்டில்,
வானதூதர் மரியாவிடம், "தூய ஆவிஉம்மீதுவரும்.உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலி டும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக் குழந்தை இறைமகன் எனப்படும்" என்றார்.' (லூக்கா1:35) மூவொரு கடவுளின் நாமமான தூய ஆவி .
இயேசுவும், 40 நாட்கள் பாலை நிலத்தில் சோதிக்கப்பட்ட போது, மனிதகுலத்தை மீட்கும் அவரது மனித இயல்பு வலிமைபெற்று, மக்கள் பணிக்குத் தன்னை தயார்படுத்திக்கொள்ள தூய ஆவியார் அவருக்குத் துணை நின்றார் .
1.தூய ஆவியை தொடர்ந்து செல்லும் கேரூபீன்கள்: Cherubim that follow Holy Spirit.எசேக்கியல் 1:1-28.
கிறித்துவிற்கு பிரியமானவர் களே! எசேக்கியேல் .(கி.மு 593 to 571)தீர்க்கருக்கு ஆண்டவர் பாபி லோனிலுள்ள கெபார் ( தற்கால ஈராக் நாடு) ஆற்றோரம் நாடு கடத்தப்பட்ட இஸ்ரவேலருடன் இருக்கையில், விண்ணுலகம் திறக்கப்படக் கடவுள் அருளிய காட்சிகளைக் காண்கிறார்.. எசேக்கியல் தீர்க்கருக்கு மொத்தம்
6 காட்சிகளை (visions) காணச் செய்கிறார். அவைகளில் முதலா வது காட்சிதான் இது. பாபிலோன் முழுவதும் கல்தேயா (Chaldeans) என்று அழைக்கப்பட்டது, அதன் மக்கள் கல்தேயர்கள் என அழைக்கப்பட்டனர்.,காலம் கி.மு 626 to 539 கி.மு. இங்குதான் ஆண்டவரின் வம்சம் தோன்ற
காரணமான விசுவாசிகளின்
தந்தை ஆபிரகாமின் தகப்பன்
தேராகு வாழ்ந்த ஊர்(Ur) என்ற பகுதியாகும்.தேராகு தம் மகன் ஆபிராமையும்,தம்மகன்ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.இது கடவுளின் அழைப்பு.(Abraham was born as a Chaldean but died as a Hebrew)
இத்தகைய வரலாற்று பின்புலம்
கொண்ட கெபார் ஆற்றங்கரை
யில் வடக்கிலிருந்து புயற்காற்று விரைந்து வந்தது.மின்னலடிக்கும் பெருமேகத்தையும் அதனைச் சுற்றிச் சுடர்வீசும் தீப்பிழம்பையும்,
கொண்ட நான்குஉயிரினங்களின் வடிவம் தோன்றியது. அவற்றின் தோற்றம் மனிதச் சாயலுக்கு ஒப்பாயிருந்தது. இது கேருபீன் கள் என்று அறிந்துகொண்டேன்.
(எசேக்.10:20.)இந்தகேரூபீன்கள் தான் ஜீவ விருட்சத்தை காவல் காத்துக்கொண்டிருந்ததை ஆதாம் பார்த்தான்.ஏசாயா சேராபீன் களை (Seraphs)பார்த்தான்; எசேக்கியேல் தீர்க்கதரிசி கேரூ பீன்களை பார்த்தான். சேராபீன் களுக்கு ஆறு செட்டைகளும், கேரூபீன்களுக்கு நான்கு செட்டை களும் உண்டு. சேராபீன்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு மேலாகவும், கேரூபீன்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு கீழாகவும் காணப்படுகிறார்கள். அவைகளுடைய செட்டைகளின் கீழ் மனுஷ கைகளின் சாயல் இருந்தது. சேராபீன்கள்
இடைவிடாமல் பரிசுத்த தேவனை பார்த்து பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று ஓய்வில்லாமல் ஆராதித்துக்கொண்டிருக்கும் இந்த சேராபீன்களை போல நாமும் கூட உயரமும் உன்னத முமானவரை துதிக்க வேண்டும். இதுதான் கிறித்துவித்தின்
அடையாளம்.
இந்த கேரூபீன்கள் மின்னலைப் போல பற்றியெரியும் நெருப்பை போன்ற நிறம் உடையவர்கள். மாத்திரமல்ல கேரூபீன்கள் முன் னால் சென்றபோது, இதுவரை கேட்டிராத பெரும் இரைச்சலை எசேக்கியேல் கேட்டார். அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத் தின் இரைச்சல் போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத் தின் சத்தம் போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன ( எசேக்கி 1 : 24 ).
இந்த கேரூபீன்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய மான காரியமென்னவென்றால் வசனம் சொல்கிறது அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; தூய ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை ( எசேக் 1 : 12 ) என்பதாக. கிறித்தவன் பின்னானவைகளை நோக்காமல், முன்னானவகளை நாட அழைக்க ப்பட்டியிருக்கிறோம். No turning back, no turning back. லோத்தின்
மனைவி திரும்பி பார்த்து உப்புத் தூனானாள், கிறித்துவுக்குள் இருப்போர் புதியபடைப்புகள். அதாவது கேரூபீன்கள் பரிசுத்த ஆவியானவரை எப்பொழுதும் தொடர்ந்து சென்றார்கள். அதே போலத்தான் நாமும் கூட எப்பொ ழுதும் பரிசுத்த ஆவியானவரை தொடர்ந்து செல்பவர்களாய் காணப்பட வேண்டும். அவர் போகிற இடத்துக்கு போக வேண் டும். அவர் போகாத இடத்துக்கு போகக்கூடாது. இதை கர்த்தரு டைய பிள்ளைகள் கேரூபீன்க ளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட கேரூ பீன்கள் சேராபீன்கள் மத்தியில் வாசம் செய்கிறவர் மனிதகுலமா கிய நம் மத்தியில் வாசம் செய்ய வேண்டுமென்று விருப்ப முடைய வராய் காணப்படுவது ஒரு பெரிய ஈவாக காணப்படுகிறது.
2. நட்புறவு கொள்ளும் தூய ஆவியார்.The friendship of Holy Spirit. 2 கொரிந்தியர் 13:11-14.
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
திருதூதர் பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய இரண்
டாம் நிருபத்தில்; ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும்( Grace) கடவுளின் அன்பும் (love), தூய ஆவியாரின் நட்புறவும் ( frie ndship)உங்கள் அனைவரோடும் இருப்பதாக! (2 கொரிந்தியர் 13:13) இருப்பதாக என நிருபத்தை நிறைவு செய்கிறார்.தூய ஆவியார் நம்மில் நட்புறவு பாரா ட்ட நாம்:
1. நம் பாவங்களுக்காக மனத்துயரடைய வேண்டும்.
2. இயேசு கிறிஸ்துவை நம் ஒரே மீட்பராக ஏற்க வேண்டும்.
3. தூய ஆவியார் நம்மை நிரப்ப உருக்கமாகக் கெஞ்சி மன்றாட வேண்டும்.
தூய ஆவியானவர் நம்மை புனித
படுத்துகிறார்.தூய்மையில் வழி
நடத்துகிறார். நம்முடன் நட்புறவு
கொள்கிறார்.
தூய ஆவி நம்மில் இருக்கிறார்
என்பதை எப்படி தெரிந்துக்
கொள்வது?
1. வேதம் வாசிக்கும் போது
உங்கள் உள்ளம் உற்சாகத்தினால்
கொளுந்து விட்டு எரிந்தால், ஒரு
நடுக்கம் ஏற்பட்டால் தூய ஆவி
உங்களுடன் இருக்கிறார்,
2. ஆண்டவரை துதித்துப்பாடப் பாட, உற்சாகம் மிகுதியானால்
தூய ஆவி உங்களுடன் இருக்கி றார்,
3. நீங்கள் தனியாக ஜெபிக்கும்
போது, உங்க உடலில் நடுக்கம்
ஏற்பட்டால், vibration தூய ஆவி உங்களுடன் இருக்கிறார்,
4. குழுவாக ஜெபிக்கும் போது
தூய ஆவி உங்கள் மத்தியில்
வாசம் செய்கிறார்,
5. இறை செய்தியை கேட்கும்
போதும், வழங்கும் போதும்
தூய ஆவி நம்முடன் இருக்கிறார்.
Dear Friends, Holy spirit is our companion, friend and protector.
3.வார்த்தை மாம்சமானார். The Word became Flesh in Jesus Christ.
யோவான் 1:1-18.
உயிர்த்த கிறித்துவின் உன்னத
நண்பர்களே! தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது; வாக்காய்
இருந்தவர் வாக்கு மாறாதவர், படைப்பில் இருந்தவர் இயேசு வாகவே இருந்தவர்.அவரிடம்
வாழ்வும் இருந்தது. இயேசு என்றா
ல் வார்த்தை; வார்த்தை என்றால்
இயேசு. இவருக்குள் ஒளி இருந்தது.அந்த ஒளி அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி . ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் மூவொரு
கடவுளாய் இருந்தார்.இப் பூமியில் முதன்முதல் ஒலித்தது கடவுளின் வார்த்தைதான்.வார்த்தைதான் படைப்புக்குக் காரணம் (சங்.33:6) .
வார்த்தை தேவ கட்டளையாக
இருக்கிறது.தீர்க்கர்கள் வாக்கை
வசனமாக்கினர்.வாக்குகடவுளின்
வெளிப்பாடு. வார்த்தை நித்திய மானது, அழிவில்லாதது.
"வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.(மத்தேயு 24:35) அது பிழைப்பை தரும், வாழ்வளிக் கும். "'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' (மத்தேயு நற்செய்தி 4:4)
வாக்கான கிறித்து நற்செய்தியை
கொடுத்தார்.நற்செய்தி நமக்கு
வேதமாக கொடுக்கப்டடது.வேதம்
திரியேக கடவுளின் வாக்காகும்.
எனவே, வாக்கானவர் மாம்சத்தில்
வந்த இயேசு,நாம் வழிபடும் மூவொருகடவுளுமானவர்.வேதத்தின் அடிப்படையிலே, கடவுள் ஒருவரே என்பதைப் புரிந்து கொள்ள இயலும். உபாகமம் 6-4, ஏசாயா 44-6, மாற்கு 12-29,32, 1 கொரிந்தியர் 8-4 ஆகிய வார்த்தைகள் தேவன் ஒருவரே என்பதைவெளிப்படுத்துகின்றன.
நம் விசுவாசம் என்னும் பற்றுறுதி
மூவொருகடவுளை ஆராதிப்பதே!
ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
"எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
மத்தேயு நற்செய்தி 28:19"
This message shall be delivered at CSI St.Peter's Church, Chengalpattu. Tamilnadu.
Comments
Post a Comment