Waiting upon the Holy Spirit. தூய தூய ஆவியாருக்காக காத்தி ருத்தல். (139) ஏசாயா 40:25-31. திருபாடல் 51 திருத்தூதர்,Acts. 1:1-11, லூக்கா 24:44-49. Six Sunday After Resurrection.

முன்னுரை; 

உயிர்த்த கிறித்துவின் அன்பு
நண்பர்களே! இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.
"தூய ஆவியாருக்காக காத்திருத்தல்"  என்ற தலைப்பை
தியானிக்க இருக்கிறோம். நம்மு டைய வாழ்வில் பல விடயங்களுக் காக காத்திருக்கிறோம். நல்லது நடக்கும் என காத்திருக்கிறோம். வெற்றி பெறுவோம் என காத்தி ருக்கிறோம். காத்திருத்தல் என்ப து நம் வாழ்வில் ஒன்றாக இருக் கிறது எந்த விடயமும் உடனே கிடைத்து விடுவதில்லை. ஆண்டவர் ஏற்ற காலத்திலேயே அவைகளை நமக்கு கிடைக்க செய்கிறார். "ஆண்டவர்மேல் நம்பி க்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களை ப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார். (எசாயா 40:31) என ஆண்டவர் கூறுகிறார்.
கர்த்தருக்கு பிரியமானவர்களே! கிதியோன்  தன்னுடைய சொந்தத் திறமைகளைப் பார்த்துத் தயங் கினாலும், தன்னோடு பேசுகிறவர் யார் என அறிந்துகொள்ள வேண் டும் என்னும் ஆசையும் உறுதியும் அவனுக்கு இருந்தது. “என்னோடு பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டும்” என்ற கிதியோனின் கோரிக்கைக்கு ஆண்டவர், “நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன்” ( நீதி தலைவர் கள் Judges. 6:17,18) என்று கர்த்தர்
காத்திருந்தார். கர்த்தர் ஆபிரகாமுக்காகக் காத்திருந்தார் (தொடக்க நூல்.ஆதியா 18,1 முதல் 8) நாமும் ஆண்டவர் நம்மில்
 செயல்பட காத்திருப்போம்.
1.எனக்கு நிகரானவர் யார்?
To whom will you compare me? Or Who is my equal ? ஏசாயா 40:25-31.
கிறிஸ்துவிற்கு பிரியமானவர் களே! இஸ்ரவேலர்கள் வழி தவறிச்சென்றதால், பாபிலோனி யர்களால் சிறைபிடிக்கப்பட்டனர். எகிப்திலிருந்து தங்களை விடுவி த்த கடவுளை மறந்து விட்டு சிலை களை வணங்குகிறார்கள். அவர் களை எச்சரிக்க அவர் தீர்க்கதரி சிகளை அனுப்பினார், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எனவே அவர்களை கடவுள் தண்டிக்கிறார் அடிமைகளாக்குகிறார். நன்றி மறந்தவர்கள். 
கடவுள் ஏன் எங்களை கை விட்டார்
என்று கேள்வி கேட்டனர். அவர் ஏன் பாபிலோனியர்கள் தன்
சொந்த குழந்தைகளை தோற் கடித்து அடிமைப்படுத்த அனுமதி த்தார்? பாபிலோனிய கடவுள்கள் [விக்கிரகங்கள்] இஸ்ரவேலின் கடவுளை விட வலிமையானவர் களா? என கேட்டனர். அதற்கு
ஆண்டவர்  "யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரா னவர் யார்?" என்கிறார் தூயவர். 
(எசாயா 40:25) உருவ வழிபாடு அதிகமாக இருந்த காலத்தில் ஏசாயா எழுதினார். "வேலை செய்பவன் ஒரு உருவத்தை வடிவமைக்கிறான், பொற் கொல்லன் அதை பொன்னால் விரிக்கிறான், வெள்ளிக் கொல் லான் வெள்ளி சங்கிலிகளை வார்ப்பான்" (ஏசா. 40:19). “அவர் ஒரு கடவுளை உருவாக்கி வணங்குகிறார்; அவர் அதை ஒரு செதுக்கப்பட்ட சிலை செய்து, அதன் மீது விழுகிறார்” (ஏசா. 44:15).ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளில், 'உன் கண்களை உயர்த்தி வானத்தைப் பார். இவை அனைத்தையும் படைத்தது யார்? கடவுள் அற்புத மானவர்; அவர் ஒப்பற்றவர்; அவரைப் போல் யாரும் இல்லை. இஸ்ரவேலே! என் வழி உமக்கு மறைவாய் உள்ளது, என் நீதி என் கண்க ளுக்கு தெரியவில்லை என்று கூறுகிறாய், ஆண்டவரே என்று முள கடவுள்; அவரே விண்ணு லகின் எல்லைகளைப் படைத் தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்;அவர் சோர்வு ற்றவருக்கு வலிமை அளிக்கி ன்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். 
இஸ்ரவேலே! யாக்கோபே! யூதாவே! கர்த்தருக்கு காத்திரு.
அவர் உன்னை விடுவிப்பார். நானே ஆண்டவர், எனக்காக
காத்திருப்போர், வெட்கமடையார்
என்பதையும் அப்பொழுது நீ அறி ந்துகொள்வாய்.( ஏசாயா 49:23)
என்ற கர்த்தர்,  கி.மு 548ல், பாரசிக மன்னன் (Persian King)மகா சைரஸ்(CyrusTheGreat)பாபிலோனியாவை வெற்றிகண்ட பிறகு இஸ்ரவேலரை தன் நாடான பாலஸ்தீனத்திற்கு செல்ல அனும தித்தான்.
Praise the Lord. Our God is a true God.
வாக்கு மாறாதவர். 48 ஆண்டு
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை. "பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த் தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள் வார்கள்” என்று சங்கீதக்காரன் கூறுகிறார்.(திருப்பாடல்.சங்கீதம் 37:9) ஆண்டவர் மனுசனல்ல மன
மாற, வாக்கு மாறாதவர்.
2.தந்தையின் வாக்குறுதி நிறைவேற  காத்திருங்கள்: Wait for  the promise of the Father. Acts: திரு தூதர் 1:1-11.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உயிர்த்த கிறிஸ்துவின் உன்னத வார்த்தை "தந்தையின் வாக்குறுதி நிறைவேற காத்திருங் கள் என்பதே". இயேசு துன்புற்று இறந்த பின்பு.40 நாட்கள்., அவர்களுக்குத்தோன்றி.இறையரசை குறித்து கற்பித்தார்...., தாம் உயிரோடு இருப்பதைக் சீடர்களு க்கு காண்பித்தார்..அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்கு றுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக் குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர் கள்”என்று கூறினார். இறைவார்த்தையை எடுத்துச் சென்று பரப்புவதற்கும், விசுவாச சாட்சியத்துக்குப் பலத்தை வழங்குவது தூய ஆவியானவர் அவரே. 
மனித வார்த்தைகளில் தூய ஆவியார் குடியிருக்கும்போது, அவ்வார்த்தைகள் ஆற்றல்மிக்க சக்தியாக மாறி, இதயங்களைக் கொழுந்து விட்டெரியச் செய்யும் பலம் பெற்றதாக, பிரிவினைச் சுவர்களைத் தகர்த்தெறிகின்றன. தூய ஆவியாரின் கொடை நமக்கு இலவசமாக வழங்கப்படுகிறதே அல்லாமல், நம் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிட்டுவதி ல்லை.
எதற்காக நாம் காத்திருக்க வேண்டும்?
1.தூய ஆவி பெற காத்திருக்க
   வேண்டும். ஏனேனில் " தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமை யைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரை க்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார். (திருத்தூதர்பணிகள் 1:8)
கடவுள் தம் மக்களுக்கு பரிசுத்த ஆவியை வாக்களிக்கிறார் என்பது  யோவான் 14:26 ல் இயேசு சொன்னார், "ஆனால் பிதா என் நாமத்தினாலே அனுப்பும் உதவி யாளர், பரிசுத்த ஆவியானவர், அவர் உங்களுக்கு எல்லாவற்றை யும் கற்பிப்பார், நான் உங்களுக்கு ச் சொன்ன அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்."
2.சாட்சிகளாக காத்திருக்க வேண்டும்.
யூதரும் சமாரியரும் கிரேக்கரும் பிற இனத்தவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் சாட்சிகளாகின்றனர்.நான் உங்க ளைத் திக்கற்றவர்களாக விடமாட் டேன். உலகம் முடியும்வரை எந் நாள்களும் உங்களோடு இருப் பேன் என, இயேசு தன் சீடர்களிடம் கூறிய அதே வார்த்தைகளை இன்றும் நம்மிடம் உரைக்கிறார். நாம் ஆண்டவரின் நடமாடும் (mobile) சாட்சிகள். பரிசுத்த ஆவியானவருக்காக நாம் காத்திருக்க வேண்டிய இறுதிக் காரணம் , நற்செய்தியைப் பிரசங்கிக்கும் சக்தியை நமக்குத் தருகிறார் . (லூக்கா 24:49).  

 3.பரிசுத்த ஆவியானவர் எல்லா சத்தியத்திற்கும் நம்மை வழி நடத்த காத்திருக்க வேண்டும். நான் கர்த்தருக்காகப் பொறுமை யோடு காத்திருந்தேன்.அவர் என்னிடம் சாய்ந்து என் அழுகை யைக் கேட்டார்.(சங்கீதம் 40:1)என தாவிது கூறுகிறார்.புலம்பல் 3:25ல் கர்த்தர் தமக்காகக் காத்திரு க்கிறவர்களுக்கும், தம்மைத் தேடு கிற ஆத்துமாவுக்கும் நல்லவர். பரிசுத்த ஆவியானவர் எல்லா சத்தியத்திற்கும் நம்மை வழிநடத் துகிறார் எனினும், அவர், சத்திய ஆவியானவர், வரும்போது, ​​அவர் உங்களை எல்லா உண்மையிலும் வழிநடத்துவார்; ஏனெனில் அவர் தனது சொந்த அதிகாரத்தில் பேசமாட்டார், ஆனால் அவர் கேட்பதையே பேசுவார்.அவர் நம்மை சத்தியத்தில் வழிநடத் துகிறார்.பரிசுத்த ஆவியானவர் நமக்குப் போதிக்கிறார், வழி நடத் துகிறார்.பரிசுத்த ஆவியானவருக் காக நாம் காத்திருக்க வேண்டிய மற்றொரு காரணம், அவர்தான் நமக்கு நற்செய்தியைக் கற்பிப்பா ர். அவர் நமக்குச் சாட்சி கொடுத்து, சத்தியத்திற்கு நம்மை வழிநடத்து வது போல, அவர் நமக்கு உண்மை யைக் கற்பிப்பார் .இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டு மென்று, முன்மாரியும் பின்மாரி யும் வருமளவும், நீடிய பொறுமை யோடே காத்திருக்கிறான்” (யாக்கோபு 5,7) என்று யாக்கோபு கூறுவதுபோல, நாமும் நம்முடைய பிரயாசத்தின் பலனுக்கான அறுவடையைப் பெற பொறுமை யுடன் காத்திருப்போம்.

3.உன்னதத்திலிருந்து வரும் வல்லமையை பெற காத்திருங் கள்: Wait for strength from the Supreme. லூக்கா24:44-49   உயிர்த்த கிறித்துவின் உன்னத மானவர்களே! தன் சீடர்கள் தூய ஆவியை பெற்றுக் கொள்ள எருசலேமில் காத்திருக்க ஆண்ட வர்  வேண்டுகிறார். சீடர்கள் காத்திருத்தல் என்பது தங்களை அவர்கள் தகுதிப்படுத்திக் கொள் ளவும், தயார்படுத்திக்கொள்ளவும் ஆண்டவர் விரும்புகிறார். ஏனேனி ல் அது தந்தை அனுப்பும் தூய ஆவியானவர்.கிறிஸ்து பிதாவிடம் ஏறுவதற்கு (Ascension) முன்பு, அவர் எவ்வாறு நியாயப்பிர மாணம், சங்கீதம் மற்றும் தீர்க்க தரிசினங்களை நிறைவேற்றி னார் என்பதைப் பற்றி அவருடை ய சீடர்களின் மனதைத் திறந் தார். மேலும், அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் மனந்தி ரும்புதலின் செய்தி போன்ற சில உண்மைகளைப் பற்றி அவர் தனது திருத்தூதர்களுக்கு இறுதி அறிவுரைகளை வழங்கினார். மேலும், அவருடைய நாமத்தில் பாவ மன்னிப்புக்காக மனந்திரு ம்புதலைப் பிரசங்கிக்க வேண்டும் இதற்காக இயேசு என்ற நாமம் தவிற வேறு நாமம்  அறிவிக்கப்பட வில்லை.அவருடைய துன்பத்தை யும், மரணத்தையும், உயிர்த்தெழு தலையும் சீடர்கள் கண்டனர். எனவே, கிறிஸ்து அவர்களை தம் சாட்சிகள் என்று அழைத்தார். அவர்களுக்கு அதிகாரம் அளிக் கும் பரிசுத்த ஆவியான பிதாவின் வாக்குறுதியை அவர் அவர்களு க்கு உறுதியளித்தார். உயிர்த்த கிறித்து 40 நாட்கள் தன் சீடர்க ளோடு இருந்து வின்னகம் சென்றார். சீடர்கள் விண்ணப் பத்திலும், உண்ணா நோம்புமாக 10  நாட்கள் காத்திருந்தனர். ஆண்டவர் 50 தாவது நாளில் (On the Pentecost Day) தூய ஆவியின் வல்லமையை  அளித்தார்.

4. தூய ஆவியின் செயல்கள்: The impact of Holy Spirit: அன்பின் இறை மக்களே!  பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர் கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். சூறாவளி காற்றும், இரைச்சலும் வானத்திலி ருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந் திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் (Tongues of Fire) ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது.அனைவருக்கும் தூய ஆவியால் நிரப்பபட்டனர். உடனே,அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கி யிருந்தனர். இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளை யும் காண்பர்.  அவருடைய வார்த்தைகளை ஏற்றுக் கொண் டவர்கள்திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறையமூவாயிரம் பேர்அவர்களோடுசேர்க்கப்பட்டனர்முடிவுரை:

அன்பானவர்களே! அன்பின் ஆண்டவர் இன்னும் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.முதலாவதாக மனம் திருந்தி, அவர் மரணத்தையும், உயிர்த்தெழுத லையும், ஏற்று இயேசு கிறித்து வின் நாமத்தில் திருமுழுக்கு பெற்றோமானால் நமக்கு தூய ஆவியைவரமாகதருவார்.அதற்காக நம் இதய கதவை தட்டிக் கொண்டே இருக்கிறார். வாரும் தூய ஆவியானவரே! ஆமேன்.

Prof.Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com  







Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.