பொறுப்பான்மை : வெளிப்படை தன்மை மற்றும் கணக்களிப்பு. (151)Stewardship: Transparency and Accountability. விடுதலை பயணம் 36:2-7, திருப்பாடல் 116:12-19. பிலிப்பியர் 4:10-20, லூக்கா 19:11-27 . பொறுப்பான்மை ஞாயிறு.

முன்னுரை: கிறித்துவின் அன்பு
இறை மக்களே! ஆண்டவரின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
 "பொறுப்பான்மை" ( stewardship)
என்றால், "ஒருவரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட ஒன்றை கவனமாகவும் பொறுப்புடனும் நிர்வாகம் செய்தல்" எனப்பொருள் படும். இயற்கை வளங்களை
பொறுப்புடன் நிர்வாகம் செய்வோ
ரே சிறந்த பொறுப்பான்மை யாளர்.
How Does the Bible Define Stewardship?
"Stewardship in the Bible often refers to caring for the people, animals, land, and other resources that God has created."
பொறுப்பான்மையின் மிக முக்கிய கோட்பாடு," தன் பொறுப் பில் உள்ள நிர்வாகத்தை எதிர்காலத்திற்காக பாதுகாப்பது."
முதல் பொறுப்பான்மை பொறுப் பை கடவுள் மனிதனுக்கு படைப் பிலே கொடுத்தார். The first
Stewardship responsibility was given
by God, the Creator". " கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்"என்றார். 
(தொடக்கநூல் 1:26) "மனிதன் வேலை செய்வதற்காகவே படைக் கப்பட்டான் "கடவுள் எல்லாவற் றையும் உருவாக்கி, அதை வேலை செய்வதற்கும் அதை கவனித்துக் கொள்வதற்கும் ஆதாமை தோட்டத்தில் வைத்தார்.கடவுள் அவனுக்குக் கொடுத்த படைப்பு கள் அனைத்திற்கும் காக்கும் பணியே பொறுப்பு (stewardship) என்பதும் தெளிவாகிறது .எனவே, கடவுள் நம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள அனைத்தையும் நிர்வ கிப்பதற்கான நமது கீழ்ப்படிதலை பொறுப்பான்மை வெளிப்படுத் துகிறது.
கடவுள் நமக்கு “எல்லாவற்றையும் அபரிமிதமாக அனுபவிப்பதற்கு” கொடுத்தாலும், எதுவும் நம்முடை யதல்ல. எதுவுமே நமக்குச் சொந்த மில்லை. கடவுளுக்கே எல்லாம் சொந்தம்; நாம் வெறுமனே மேலா ளர்கள் அல்லது அவரது சார்பாக செயல்படும் நிர்வாகிகள்.
"உக்கிராணத்துவம்" (Stewardship) என்பது ஒருவரின் சுயம் மற்றும் உடைமைகளை கடவுளுடைய சேவைக்கு அர்ப்ப ணிப்பதாகும், தூய பவுல் அடிக ளார், "நீங்கள் செய்கின்ற அனை த்து வேலைகளையும் மனிதருக் காக அல்ல; ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களு க்கு உரிமைப்பேறு (Ownership) அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்ட வர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள். (கொலோசையர் 3:23,24) என கூறுகிறார்.இதுவே விவிலியப் பணியின் அடிப்படைக் கொள்கையாகும். இதில் வெளிப் படை தன்மை அடங்கியுள்ளது.
1.போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து "Contented mind is a perpetual feast" விடுதலை பயணம் 36:22-27
கிறித்துவிற்கு பிரியமானவர் களே! மோசே கடவுளுக்காக " திரு உறைவிடத்தை (ஆசாரிப்பு கூடா ரம். (Sanctuary) (Sanctuary is the inner part of Tabernacle to keep the Arc of covenant.)கட்டுவதற்காக பெசலேலையும் ஒகோலியாபை யும், கர்த்தர் சாமர்த்தியசாலியான ஒவ்வொருதிறமைசாலிகளையும்,  அந்த வேலையைச் செய்ய வரு மாறு அழைத்தார். இஸ்ரவேலர் கள் ஆசரிப்புக் கூடாரத் திட்டத்திற் கான பொருட்களை வழங்குவதில் மிகவும் தாராள மனப் பான்மையு டன் இருந்தனர் அவர்கள் திரு உறைவிடம், அதன் கூடாரம், மேல் விரிப்பு, கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதப்பொருத்துக்கள், பேழை, அதன் தண்டுகள், இரக்கத்தின் இருக்கை, அதை மறைக்கும் தொங்குதிரை, மேசை, அதன் தண்டுகள், அனைத்துத் துணைக் கலன்கள், திருமுன்னிலை அப்பம், ஒளிவிளக்குத் தண்டு, அதன் துணைக்கலன்கள், அகல்கள், விளக்குக்கான எண்ணெய், தூபப் பீடம், அதன் தண்டுகள், திருப் பொழிவு எண்ணெய், நறுமணத் தூபம், கூடார வாயிலிலுள்ள தொங்குதிரை, (விடுதலைப் பயணம் 35:11-15) மேலும் பல பொருட்களைபெற்றனர்.ஆண்டவர் கட்டளையிட்ட கட்டுமானப் பணி க்கு ஜனங்கள் போதுமானதை விட அதிகமாகக் கொண்டு வருகி றார்கள். எந்த பொருட்களும் வீனாக கூடாது என்ற பொறுப்பு டனும், (Wasting is a social crime) இயற்கை இந்த கட்டுமானத்தி ற்காக அழிக்ககூடாது என்ற பொறுப்பான்மையை முன்னி ருத்தி,மேலும் ஒரு அறிவிப்பு முகாம் முழுவதும் விநியோகிக்கப் பட்டது: "இனி ஒரு ஆணும் பெண் ணும் பரிசுத்த ஸ்தலத்தின் காணி க்கைகளுக்கு வேலை செய்ய வேண்டாம்." இதனால் மக்கள் மேலும் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட் டது. ஆண்டவரி ன் பணிக்குஅவர்களிடம் இருந்த பொருள் போதுமானதாகவும், அதைச் செய்வதற்குப் போது மானதாகவும் இருந்தது. கடவுள் படைப்பின் மீது அதிகாரத்தை நம்மிடம் ஒப்படைத்துள்ளார், மேலும் நாம் விரும்பியபடி அதை ஆள அனுமதிக்கப்ப டவில்லை. அவர் நிறுவிய கொள்கைகளுக்கு இணங்க அவரது படைப்பை நிர்வகிக்கும் படைப் பாளரின் கண்காணிப்பு கண்களின் கீழ் நமது ஆதிக்கத்தை செயல்படுத்த நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
 தூயகத்தை  கட்டுவதற்குக் தாராளாமாக கொடுக்க கடவுள் தம் மக்களை அழைத்திருந்தார். அவர்கள் தாராளமனதுடன், கொடுக்கத் தொடங்கினர், மேலும் கொடுப்பதை நிறுத்து மாறு மோசே சொல்ல வேண்டிய நிலை க்கு அவர்கள் இவ்வளவு கொடுத் தார்கள். அவர்களுக்குத் தேவை யானதை விட அதிகமாக இருந் தது.மற்றும் கூடாரத்தின் கட்டிடம் இன்று கடவுளின் சபையைக் கட்டுவதில் விசுவாசிகளின் பங்கை முன்னறிவித்தது. நாம் தேவாலயத்தின் இணை-கட்டமை ப்பாளர்களாக (Joint- Builders) இருப்பதில் விசுவாசிகளின் பங் கைப் பற்றிய கடவுளின் வெளிப் படை தன்மை தொடர்கிறது. மிக முக்கியமாக எல்லாவற்றிலும் போதும்என்ற மனப்பாங்கு மிக அவசியமாகிறது.அளவுக்கு மீறி இயற்கைவளங்களை அழிப்பதை கடவுள்விரும்பவில்லை. அதை காப்பாற்றும் ஆர்வலர்களாக நாம் இருக்கவேண்டும். இயற்கையை
நாம் அழித்தால் அது நம்மை அழித்துவிடும்.இதற்குஉதாரணம் 
கேரள மாநிலத்தில், வயநாட்டு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு. நாம் சுற்றுச்சூழலின் பூவுலகின்
நண்பர்களாக, பாதுகாவலர்களாக
பொறுப்பாளர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
2. என்நிலையிலும் மன நிறை வோடு இருக்க கற்றுக்கொள்.In
Whatsoever status, learn to be content. பிலிப்பியர் 4:10-20.
அன்பின் இறைமக்களே! தூய பவுலடிகள் தான் சிறைச்சாலை யில் இருந்தாளும் பிலிப்பியர்களி
ன் கொடுக்கும் தன்மையை பாராட்டி நன்றி செலுத்த இத்திரு முகத்தை எழுதுகிறார்.ஒருவேளை
பவுல் அடிகளார் ரோம சிறையிலி ருந்தாள், பிலிப்பி பட்டணம் 1,100 கி.மி உள்ளது.எப்பாஃப்ரோடிடஸ் பணப் பரிசை பிலிப்பியிலிருந்து கொண்டு சென்றார் ( பிலி 4:18 ).
 இதற்காக அவர் மகிழ்ச்சியடைந் தார்.ஆயினும் அவர், தான் பட்ட துன்பத்தில் பிலிப்பியர்கள்பங்கு கொண்டது மூலம் அவர்களின் நன்மனத்தைக் காட்டுகிறது என கூறுகிறார்.இறைவன் மீது கொண்ட அன்புதான் அவர்க ளைக் கொடுக்க, கொடுக்கத் தூண்டியது என்பதை அவர் கண் டார். பிலிப்பியர்கள் மூன்றாவது முறையாக பண உதவி அனுப் பினார்கள், ஆனால் அவர் பரிசின் இறுதி ஆதாரமாக இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். இது ஒரு
திருச்சபை ஒரு நற்செய்தியா ளரை தாங்குவதை காட்டுகிறது.
பிலிப்பியர்கள் கடவுள் தங்களுக் குக் கொடுத்ததைத் தன்னுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இரு ப்பதைக் கேட்டு பவுல் மகிழ்ச்சிய டைந்தார்.கிறிஸ்துவுக்கு சேவை செய்ததில் பவுலுக்கு பல அனுபவ ங்கள் இருந்தன, அவற்றில் பெரு ம்பாலானவை கடினமானவை. கப்பல் உடைப்பு, சிறைவாசம், கசையடி, கல்லெறிதல், அடித்தல், இன்னும் பல இன்னல்கள் வாடிக் கையாகிவிட்டன. எனவே, எப்படி திருப்தியாக இருக்க வேண்டும் என்பதை அவரது சூழ்நிலைகள் அவருக்குக் கற்றுக் கொடுத்தன என்று சொல்லலாம்.
எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலி லும் வாழப் பயிற்சி பெற்றிருக்கி றேன். (பிலிப்பியர் 4:12) எந் நிலை
யிலும், மன ரம்மியமாக இருக்க
கற்றுக் கொண்டது பொறுப்பான்
மையை வெளிப்பட தன்மையுடன்
அவர் தன் ஊழியத்தில் நடந்துக்
கொண்டதை காட்டுகிறது. இதுவே, அனைத்து நற்செய்தி யாளர்களுக்கு முன்னுதாரனம்.
3.பொறுப்பான்மை : வெளிப் படை தன்மை மற்றும் கணக் களிப்பை கொண்டது. Steward ship contains Transference and Accountability.,லூக்கா19:11-27.
அன்பின் இறை மக்களே! ஆண்டவர் வேதத்தில் பல உவமை
களையும், பழமொழிகளையும்
கூறி இருக்கிறார். அவற்றின்
முக்கிய காரணமே,"மனிதர்களின் மனதை விண்ணரசு கருத்துகளை நோக்கி அழைத்துச் செல்ல பழக் கமான உதாரணங்களைப் பயன் படுத்துகின்றன" ( வில்லியம் பார்க்களே) என்கிறார். Parables are the Gateway to the Kingdom of God.
என்னை மிகவும் கவர்ந்த உவமை
கள் நல்ல சமாரியன் மற்றும்
ஊதாரி மகன் உவமை (The Prodigal Son) மனித நேயத்தை அடிப்படையாக கொண்டது. இந்த
பொறுப்பான்மை உவமை தனி
மனித குணத்தை வெளிப்படுத் தும் உவமையாகும். ஆண்டவர்
தன் சீடர்களூடன் எரிகோவிலிரு ந்து  எருசலேமை நோக்கி சுமார் பதினேழு மைல் தூரம் பயணமா கும் போது, இந்த உவமையைக் கூறினார்.It's different from the parable mentioned in St.Matthew 25:
24-30. இந்த உவமை, ஊழியர்கள் (பொறுப்பாளர்கள்) அவர்களுக் கென்று கொடுக்கப்பட்ட பணியில் உண்மையாக இருக்க வேண்டு மென்பதை இந்த உவமை கூறுகி றது.  "உயர் குடிமகன்( அரசர்) ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். "புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர் களிடத்தில் பத்துராத்தல்( மினாக் கள்  (The weight of this mina is calculated at 1.25 pounds (0.57 kg), or 570 grams of silver (18 troyounces ).திரவியங்கொடுத்து: நான் திரும் பிவருமளவும் இதைக் கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.’ஒவ்வொருவருக் கும் ஒரே மாதிரி முதலீடு கொடு க்கப்பட்டது. இதில் 10 ராத்தல் என்பது பெரிய தொகை. இந்தப் பணம் அவர்களுக்கு மூன்றுமாத சம்பளமாகும் இதில் கூறப்பட்ட அரசன் என்பவன்  ராஜகுடும்பத் தைச் சேர்ந்தவன். இவன் தூர தேசத்திற்கு ராஜாவாக போகிறா னென்றால் அன்றைக்குள்ள காலகட்டத்தின்படி அநேக ராஜா க்கள் இருந்தனர். அநேக ராஜாக் கள் இருந்தாலும் அவர்களுக்குள் தெரிந்தெடுத்து ஏரோது என்ற பெயர் சூட்டப் படுவார்கள். அதற் குப் பதிவு செய்ய (Register) வேண் டுமென்பதற்காக ரோமாபுரிக்குப் போகிறான்.இங்கு இயேசு அரசராக குறிப்பிடப்படுகிறார். ராத்தல் என்பது நற்செய்தியைக் குறிக்கிறது. ஆனால் இயேசு தானாகத் தன்னை உயர்த்திக் கொள்ளவில்லை. பிதாவே அவரை எல்லாவற்றிற்கும் மேலா க உயர்த்தினார் (பிலிப்பியர் 2 : 9 – 11) இயேசு பிறந்தவுடன் யூதரு க்கு ராஜாவாகப் பிறந்திருக்கிற வர் எங்கேயென்று சாஸ்திரிகள் ஏரோது ராஜாவிடம் கேட்டனர் (மத்தேயு 2 : 2). இயேசுவும் தம்முடைய ஊழியக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் தாலந்து களை, வரங்களை, வாய்ப்புகளை, திறமையைக் கொடுத்திருக்கி றார். அதைக் குறித்து நாம் அவருக்குக் கணக்கு கொடுக்க வேண்டும். நாம் ஒவ்வொருவ ருக்கும் ராத்தல்களைக் கொடுத் ததைப் போல, ஒவ்வொருவரும் அவைகளை வைத்து நற்செய்தி அறிவிக்க வேண்டும். அது நம் ஒவ்வொருவரின் கடமை. வியா பாரம் பண்ணுங்கள் என்பது தேவ னுடைய ராஜ்ஜியம் கட்டப்படுவ தாகும். தேவனுடைய ராஜ்ஜியத்து க்குத் திரளான ஜனங்களைச் சேர்க்கப் பாடுபட வேண்டும் என்ப துமாகும்.அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்த போது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்கார ரில் அவனவன் வியாபாரம் பண் ணிச் சம்பாதித்தது இவ்வள வென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.”பத்து பேரிடம் மினார்  கொடுத்தாலும் 10 பேரில் மூன்று பேரை மாத்திரமே இயேசு இந்த உவமையில் எடுத்துக் காட் டாகப்பயன் படுத்தியிருக்கிறார்.
பத்து இராத்தல்கள் கொடுத்து சம்பாத்தியம் பண்ணக் கூறியவர் அவர்களைக் கண்காணிக்க யாரையும் நியமிக்கவில்லை. கண்காணி இல்லாவிட்டாலும் எப்படிப்பட்டவர்களாக நடந்து கொண்டார்களோ, அதன்படி அவர் களுக்கு அதற்குரிய பிரதிபலனை எஜமான் இந்த உவமையில்கொடு த்தார். அதேபோல் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது நம்மிடம் கணக்கு கேட்பார். அதற் கேற்ற பலனையும் கொடுப்பார். 
அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலி னால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.”“எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.”
“அப்படியே இரண்டாம் ஊழியக்கா ரன் வந்து: ஆண்டவனே, உம்முடை ய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.”
“அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.”
அரசர் 10 நபருக்கு கொடுத்தாலும் 7 பேர் கணக்குகொடுக்கவில்லை. 3 பேர் மட்டுமே கொடுத்தனர். 10 குஷ்டரோகிகள் இயேசுவிடம் தன்னுடைய வியாதியை குணமா க்க வேண்டினர். அனைவரையும் குணமாக்கி இயேசு அனுப்பி ஆசா ரியர்களிடம் காட்டச் சொன்னார். அதில் 9 யூதனும் திரும்பி வந்து இயேசுவிடம் நன்றி கூறவில்லை. ஒரு சமாரியன் மட்டுமே திரும்பி வந்து நன்றி சொல்லி இரட்சிப் பைப் பெற்றான். ஊழியத்தில் எத்தனை பேர் வந்தார்கள் என்பது முக்கியமல்ல. கடைசிவரை எத்தனை பேர் நிற்கிறார்கள் என்பது தான் முக்கியம். வியாபா ரம் செய்து பெருகப் பண்ணினர். வெகுமதி எதுவும் தருவதாகக் கூறாவிட்டாலும் 3 பேர் அதை பெருக்கமடையச் செய்கின்றனர். இது அவர்களது உண்மையையும், உத்தமத்தையும் காட்டுகிறது.  உழைப்பு இல்லாமல் உயர் வில்லை.
பின்பு மூன்றாம் நபர் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.” ஏனேனில்
“நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவரு மான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து,உமக்குப்பயந்திருந்தேன்  என்றான்.” “அதற்கு அரசன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச் சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிற வனும், விதைக்காததை அறுக் கிறவனுமான கடினமுள்ள மனுச னென்று அறிந்தாயே,”“பின்னே ஏன் நீ என் திரவியத்தைக் காசுக் கடையிலே வைக்கவில்லை? வைத்திருந்தால் நான் வரும் போது, அதை வட்டியோடே வரப் பற்றிக் கொள்வேனே என்று சொல்லி;” மூன்றாவது நபரிடம் பத்து இராத்தல் கொடுத்தும் அவன் உழைக்கவோசம்பாத்தியம் பண்ணவோ இல்லாமல் ஒன்றுமே பண்ணவில்லை என்று கூறுகி றான். இந்த மூன்றாவது நபர் தன்னுடைய எஜமானைப் பற்றித் தெளிவாக அறிந்திருந்தான். ஆனால் பயந்ததாகக் கூறுகி றான். மேலும் அவரைப் பற்றி தகாத வார்த்தைகளைக் கூறுகி றான், தன்னுடைய எஜமான் வைக் காததை எடுக்கிறவரென்றும், விதைக்காததை அருக்கிறவரெ ன்றும்,கடினமுள்ளமனுசனென்றும் கூறுகிறான்  ஒன்றுமே சம்பாத் தியம் பண்ணாத மூன்றாவது நபருக்குத் தண்டனை கொடுக்கப் பட்டதைப் பார்க்கிறோம்.  யாருமே பார்க்காத போது எப்படிப்பட்ட வர்களாக நாம் இருக்கிறோம். நாம் தலைமை அதிகாரிகள் பார்க்காத போது நாம் எவ்வாறு வேலை செய்கிறோம். நம்முடைய பெற்றோர்கள் பார்க்காத போது நம்முடைய நடத்தை எப்படி இருக் கிறது இருந்தது, இருக்கிறது என்று நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊர், வெவ்வேறு மொழி, வெவ்வேறு தேசமாயிருக் கலாம். ஆனால் பணி ஒன்றே. நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு ஒரு பெரிய பட்டணமாகவோ, ஒரு சில மக்களாகவோ இருக்கலாம், அல்லது உங்கள் வீட்டை உங்கள் கரத்தில் கொடுத்திருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் நீங்கள் அதில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். கர்த்தருடைய கண்கள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் பார்த்துக் கொண்டேஇருக் கிறது கர்த்தர் நம் ஒவ்வொருவரு டைய அசைவையும் தேவன் பார்த் துக்கொண்டிருக்கிறார். நாமும் அதேபோல் நமக்குத் தேவன் கொடுத்திருக்கிற ஊழியம், குடும் பம், நண்பர்கள், சொந்தங்கள், வரங்கள், தாலந்துகள் எல்லாவற் றிற்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.நாம் தேவனிடம் உண் மையும் உத்தமுமாக இருக்க வேண்டும். கொஞ்சத்தில் உண் மையாய் இருக்கிறவர்களுக்கு தேவன் அநேக ஆசிர்வாதங்க ளைக் கொடுப்பார் தேவனுடைய ராஜ்ஜியம் சீக்கிரம் வரப் போவ தால் நாம் எப்படி இருக்கிறோம் என்று நினைக்க வேண்டும். 
கொஞ்சத்தில் உண்மை உள்ளவ னாக இருந்தால், நாம் அநேக ஆசிர்வாதங்களைப் பெறமுடியும். 
தேவன் நமக்கு முதலில் சிறிய சிறிய வாய்ப்புகளை வழங்குகி றார். அவைகளை நாம் உண்மை யுடனும், சிரத்தையுடனும், முழு ஈடுபாடுடனும் செய்யும் போது நமக்குப் பெரிய பொறுப்புகளைத் தருவார். எனவே தேவன் தருகிற சிறிய பொறுப்புகளை ஆத்மார்த் தமாகச் செய்வோம்.
நாம் வெளிப்படை தன்மையுடன் 
உண்மையுடன், உத்தமத்துடன்
இறையரசிற்கான இறைபணியை
ஆற்றிடுவோம்.இந்த உவமை
ஆண்டவரின் இரண்டாம் வருகை
யை குறிக்கிறது.இதில் கூறப் பட்ட அரசன் இயேசுவை குறிக்கி றது. மினார் என்பது நற்செய்தி
யை குறிக்கிறது.இயேசுவின் இரண்டாம் வருகையில் இயேசு வை ஏற்றுக்கொள்ளாத யூதராயி னும், புறஜாதியராயினும் அவர் களுக்கு நியாயத்தீர்ப்பு நிச்சயம். நம் கணக்களிப்பு(Accountability) எப்படி ஆண்டவரிடத்தில் கொடுக் கப்போகிறோம்என்பதை இன்றே சிந்திப்போம்."இதோ! நான் விரை வில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம் மாறு என்னிடம் உள்ளது. (திருவெளிப்பாடு 22:12)
ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக! (திருவெளிப்பாடு 22:21) ஆமேன்.


Prof.Dr David Arul Paramanandam Sermon Writer.  www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com 


   


  



திறமைகளின் உவமை, 1712 மரவெட்டில் சித்தரிக்கப்பட்டது. சோம்பேறி வேலைக்காரன் புதைந்து கிடக்கும் திறமையைத்
தேடுகிறான்.
  
Source: Wikipedia.  Thanks.
    













Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.