திருமுழுக்கு: கிறித்துவுடன் மரித்தலும், உயிர்த்தலும்.(152) Babtism: Dying and Rising up with Christ. தொடக்க நூல் 7:11-24, திருப்பாடல்: 29, உரோமையர் 6:1-14, யோவான்; 12: 20-26. (Sacrament -1.)
முன்னுரை: கிறித்துவின் அன்பர் களே! உங்க அனைவருக்கும் இயேசு கிறித்துவின் இனிய நாம த்தில் வாழ்த்துக்கள். திருமுழுக்கு
கிறித்துவுடன் மரித்தலும், உயிர்த் தலும் என்ற தலைப்பை சிந்திப் போம்.திருமுழுக்குஎன்னும்சொல் Βάπτισμα (baptisma) என்னும் கிரேக்கச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். அதற்குக் கழுவுதல், குளிப்பாட்டுதல், நீராடல் என்னும் பொருள் உண்டு. திருமுழுக்குப் பெறுவோரைத் தண்ணீரில்முழுவ துமாக அமிழ்த்தி இச்சடங்கைச் சில சபைகள் நிகழ்த்துகின்றன.
தென்னிந்திய திருச்சபையில் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கும் பழக்கம் நீடித்துவந்துள் ளது. திருமுழுக்குப் பெறுவோரின் தலைமீது தண்ணீர் வார்த்து சிலுவையின் அடையாளம்நெற்றி யில் இடப்படும் பழக்கம் இவர் களை திருச்சபையின் உறுப்பின
ராக சேர்க்கப்படுவதாகும். திருமுழுக்குப் பெறுவோரின் தலையைத் திருமுழுக்குத் தொட்டியில் உள்ள நீரில் அமிழ் த்தி, அல்லது அவரை முழுதுமாக அந்நீரில் அமிழ்த்தி இச்சடங்கை நிகழ்த்துவர். "தந்தை , மகன், தூய ஆவியின் பெயரால்" திருமுழுக்கு வழங்குகின்றன. மத்தேயு:28:16-29.திருமுழுக்கு இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய ஏழு அருள்சாதனங் களுள் முதலாவது இது. மிக முக்கிய அருட்சாதனமாகும். ஏனேனில், இயேசு, "சிறு பிள்ளை களை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகை யோருக்கே உரியது" என்றார்.
(மத்தேயு நற்செய்தி 19:14) என்ற
வார்த்தை குழந்தை திருமுழுக்கை
உறுதிபடுத்துகிறது.Babtism is a gateway to Christianity. தூய பவுலடி
களார் கொலோசியர் திருமுகத் தில்," நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டு ள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள் ளீர்கள். (கொலோசையர் 2:12)
திருமுழுக்கு ஆண்டவரோடு மரி
ப்பதை உறுதி செய்கிறது, அவ் வாறே, அண்டவரின் வல்லமை மீது கொண்டுள்ள பற்றுறுதியே
நம்மை உயிர்த்தெழ செய்கிறது.
திருத்தூதர் பேதுரு அவர்கள்
இஸ்ரவேலர்களுக்கு உறுதியாக
சொன்னது என்ன வென்றால்,
"நீங்கள் மனம் மாறுங்கள். உங் கள் பாவங்களிலிருந்து மன்னிப் புப் பெறுவதற்காக ஒவ்வொரு வரும் இயேசு கிறிஸ்துவின் பெய ரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.(திருத் தூதர் பணிகள் 2:38) என்றார். திருமுழுக்கு மனமாற்றத்தை வலி யுறுத்துகிறது, பாவங்களிலிருந்து விடுதலையும், தூய ஆவியும் பெற உதவுகிறது.
1 நீரின் மூலம் நியாய தீர்ப்பு. The first Judgement was by water. தொடக்க நூல் 7:11-24,
கிறித்துவுக்கு பிரியமானவர்களே
முதல் நியாய தீர்ப்பு நீரினால் உலகை அழித்தது திருமுழுக்கை
நினைவுப்படுத்துகிறது. நீரினால்
திருமுழுக்கு அளிப்பது, நோவாவி
ன் குடும்பத்தினர் மொத்தம் 8 பேர்
மட்டுமே, நீரினால் இரட்சிக்கப்பட்
டார்கள். மற்றவர்கள் அனைவ ருமே நீரினால் அழிக்கப்பட்டனர். பேழைக்குள் செல்வது திருமுழு க்கு பெறுவதின் அடையாளமா கும். பேழைக்கு வெளியே இருந் தவர்கள் திருமுழுக்கு பெறாதவர் கள். மொத்தமாக நீரினால் அழிந்
தனர். ஆண்டவராகிய இயேசுவும் , "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவி யாலும் பிறந்தாலன்றி இறையாட் சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கி றேன். (யோவான் நற்செய்தி 3:5)
என்றார்.திருமுழுக்கு தண்ணீரால் அளிக்கப்படுகிறது."நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து.அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியா ரே உண்மை. (1 யோவான் 5:6) நீரால் பெறும் திருமுழுக்கு
இயேசுவை சான்றாக கூறிகிறது.
நோவாவின் காலத்தில் நாற்பது பகலும் நாற்பது இரவும்மண்ணுல கில் பெரு மழை பெய்தது.மிக உயர்ந்த மலைகளின் உச்சியில் இருபது அடிக்கு மேல் நிரம்பி வழிந்தது கடவுளின் நியாயத்தீர் ப்புகளுக்கு தப்பிக்க மனிதர்க ளுக்கு உலகில் உயர்ந்த இடம் பூமியில் இல்லை. கடவுளுடைய கரம் அவருடைய எதிரிகள் அனை வரையும், அழிக்கும். வெள்ளம் பெருகியபோது, நோவாவின் பேழை உயர்த்தப்பட்டது, மற்ற அனைத்தையும் அழித்த தண்ணீர், பேழையைத்தாங்கியது.பேழையில் இருந்தவர்களைத்தவிரஉலகில் இருந்த எல்லா ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறந்து போனார்கள்.இது பற்று றுதியற்றவர்களுக்கு மரணத்தை அடையாளப்படுத்துகிறது,ஆனால் விசுவாசிகளுக்கு வாழ்க்கையை ஜீவனுக்குஅடையாளப்படுத்துகிறது.இரட்சிக்கப்படுவதற்கு போது மான நீதியுள்ள ஒரே நபர் நோவா என்று கடவுள் அறிவித்தார். நோவாவின் நீதி அவருடைய குடும்பத்தைக் காப்பாற்ற அனும தித்தது. இயேசுவின் நீதியானது அவரை விசுவாசிக்கின்ற அனை த்து குடும்பத்தையும் காப்பாற் றும்.கர்த்தர் தனக்குக் கட்டளை யிட்டபடியே நோவா செய்தார் ." (தொடக்க நூல். 7:5) நோவாவின் கீழ்ப்படிதலை கடவுள் பதிவு செய்தார். நோவா கண்ணுக்குப் புலப்படாதவை குறித்துக் கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற, கவனத்தோடு ஒரு பேழையை அமைத்தது நம்பிக்கையினால் தான். அதன் வழியாய் அவர் உலகைக் கண்டித்து இறைவனு க்கு ஏற்புடையவர் என்னும் உரி மைப் பேறு பெற்றதும் நம்பிக்கை யினால்தான். (எபிரேயர் 11:7) இது
நோவா கடவுள் மீது வைத்துள்ள
நம்பிக்கையை காட்டுகிறது.
2 நாம் கிறிஸ்துவுடன் மரித்திருந்தால், அவருடன் வாழ்வோம்.If we died in Christ, we shall live in Him. Romans 6:1-14.
கிறித்துவின் அன்பர்களே!.
இயேசு கிறிஸ்துவுக்குள் திருமு ழுக்கு பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள் திரு முழுக்கு பெற்றவர்கள் என்பதை நாம் அறியாமல் இருக்கமுடியுமா?
என பவுல் அடிகளார் நம்மை கேட்
கிறார். நம் ஆண்டவராகிய கிறித் து தந்தையின் மகிமையினாலே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழு ப்பப்பட்டதுபோல நாமும் புது வாழ்வு வாழ்வதற்காக, நாம் மரிக் கும்வரை திருமுழுக்கு மூலம் அவரோடு அடக்கம் செய்யப்பட் டிருக்கிறோம்.ஏனெனில், நாம்
திருமுழுக்கு மூலமாக அவருடைய மரணத்தின் சாயலில் நாம் அவ ரோடு ஒன்றுபட்டிருப்பதால், அவ ருடைய உயிர்த்தெழுதலின் சாய லில் அவரோடு ஒன்றுபட்டிருப் போம். நாம் இனியும் பாவத்திற்கு அடிமையாகாதபடிக்கு, நம்முடைய பாவ சரீரம் செயலிழக்கச் செய்யு ம்படி, நம்முடைய பழைய சரிரம் அவரோடு சிலுவையில் அறைய ப்பட்டதை நாம் அறிவோம். கிறித் துவிற்காக இறந்த ஒரு மனிதன் பாவத்திலிருந்து விடுவிக்கப்ப டுகிறான். ஆனால், நாம் கிறித்து வுடன் மரித்திருந்தால், அவருடன் வாழ்வோம் என்று நாம் நம்புகி றோம், ஏனென்றால் கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப் பப்பட்ட பிறகு, அவர் இனி மரிப் பதில்லை என்பதை நாம் அறிவோ ம். மரணத்திற்கு இனி பிசாசின் மேல் அதிகாரம் இல்லை. இறந்த வர்கள் செய்த பாவத்திற்கு ஈடு செய்ய ஒரு முறை இறந்தார்; வாழ்பவர்களாகிய நமக்கு நம் கடவுள் வாழ்கிறார். ஆகவே, நாம் நம் பாவத்திற்கு மரித்தவர்களா கவும், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுக்கென்று உயிரோடிருப் பவர்களாகவும் எண்ணிக்கொள்ள வேண்டும். தூய பவுல் அடிகளார்
" பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது." (உரோமையர் 5:20) என்பது கிருபை பெருகும்படி நாம் பாவத்தில் நிலைத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகி றது. கடவுளே! பாவத்திற்கு மரித்த பின் நாம் இன்னும் அதில் எப்படி வாழ்வோம்? இங்கு கடவுளின்
மன்னிக்கும் மான்பை வெளிப்படு த்துகிறது. பாவம் எங்கு அதிகமாக
பெருகுகிறதோ, அங்கு ஆண்ட வரின் அருள் ( கிருபை) பெருகுகி
றது.அதற்காக ஆண்டவர் பாவம்
செய்வதை ஊக்க வில்லை. ஏனேனில், "பாவத்திற்கு கிடைக் கும் கூலி சாவு". மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.
(உரோமையர் 6:23)
ஆரம்பகால திருச்சபையில் திரு முழுக்கு என்பது நம்பிக்கையின் ஒப்புதல் வாக்குமூலத்துடன் நெரு க்கமாகஇணைக்கப்பட்டிருந்தது.,ஒரு மனிதன் தண்ணீரில் இறங்கி யதும், அவன் தலைக்கு மேல் தண்ணீர் மூடிக்கொண்டதும், அது புதைக்கப்பட்டதைப் போல இருந்தது. அவர்தண்ணீரிலிருந்து வெளிப்பட்டபோது, அது கல்லறை யிலிருந்து எழுந்தது போல் இருந் தது. திருமுழுக்கு என்பது மரணம் மற்றும் உயிர்தெழுதலின் அடை யாளமாக இருந்தது. திருமுழுக்கு என்பது நாம் பாவத்திற்கு இறந்து விட்டோம், கிறிஸ்துவில் புதிய வாழ்க்கையைப் பெறுகிறோம் என்பதற்கான ஒரு பாடம். அதைத்தான் இந்த வார்த்தை இங்கு குறிக்கிறது. நம்முடைய பாவத்தினிமித்தம்கிறிஸ்துசெய்த அதே பாடு, நாமும் அனுபவிக்கத் தகுதியானவர்கள். என்பதை நினைவில் வையுங்கள்.
கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றவர்- கிறிஸ்துவோடும் அவருடைய மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலோடும் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்தத் தலைப்பு அத்தியாயத்தின் மற்ற பகுதிகளி லும் தொடர்கிறது. இது தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறிக்கவி ல்லை, மாறாக கிறிஸ்துவில் நாம் விசுவாசம் வைக்கும்போது ஏற்ப டும் ஆவிக்குரிய ஐக்கியத்தைக் குறிக்கிறது.
கிறிஸ்துவின் மரணத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றோம் என்ப தன் அர்த்தம் என்ன? நமது பழைய சுயம் சிலுவையில் அறையப்ப ட்டது என்று அர்த்தம். நாம் பாவத் திற்கு இறந்துவிட்டோம் என்று அர்த்தம். நாம் இனி பாவத்தின் அடிமைகளாக இருக்க மாட்டோம். பாவத்தின் சக்தி மற்றும் விளைவு களிலிருந்து நாம் விடுவிக்கப்பட் டுள்ளோம். கிறிஸ்துவின் மரணம் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது, சாத்தான் தான் தோற்று கிறிஸ்து வென்ற தை நாம் காண்கிறோம். திருமுழு க்கு மூலமாக நாம் சபைக்குள்ளாக கர்த்தரால் சேர்க்கப்படுகிறோம். அதே வேளையில் தேவனுடைய ராஜ்யத்திற்குள்ளாகவும், பிரவே சிக்க தகுதியடைகிறோம்.
"பாவத்திலிருந்துவிடுவிக்கிறது சினாய் மலை அல்ல, ஆனால் புனிதர்களை உருவாக்குவது கல்வாரி மலை." பல மனிதர்கள் பாவத்திலிருந்து இரட்சிக்கப் பட்டது, நாம் கிறிததுவுடன் கல்வா
ரியில் மரித்தோம், திருமுழுக்கு
மூலமாக உயிர்த்திருக்கிறோம்.
(Note: The second part of the message is based on William Barclay's Daily Study Bible)
3. " மனுஷகுமாரன் மகிமைப் படுத்தப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது" The time has come to glorify the Son of God.(யோவான்; 12: 20-26. )
கிறித்துவின் அன்பர்களே! யூதர் களின் மிக முக்கிய பண்டிகை
பாஸ்கா. இது இஸ்ரவேலரை பண்
டைய எகிப்தின் அடிமைத்தனத்தி லிருந்து மீட்ட விடுதலையை நினைவு கூறும் மிக முக்கிய பண் டிகையாகும். இது ஈப்ரு மாதமான
நிசான் 15 முதல் 22 ம் தேதிவரை
எட்டுநாள் திருவிழாவாக கொண் டாடப்படுகிறது. ஆண்டவராகிய
இயேசுவும் திராளான மக்களுடன்
வெற்றி ஊர்வலமாக" ஒசன்னா"
என்ற கூட்டத்துடன் ஒரு அரசராக
எருசலேம் சென்றார்.இது ஆண்ட வரின் இறுதி பயணம்.ஆண்டவர்
எருசலேமிற்கு வருவது மிக தைரி
யமான செயலாகும். ஏனேனில்
யோவான் 11:57ல், இவர் தேடப்ப டும் குற்றவாளி.ஆசாரியர்கள், சதுசேயர்கள் ஆண்டவரை கலகத் தின் தலைவராக பார்த்தனர், ஆனால் மக்களோ அவரை மேசி யாவாக, அரசராக, இரட்சகராக பார்த்தனர். இந்த பாஸ்கா வழிபா
ட்டில் சில கிரேக்கர்களும் வந்திரு
ந்தனர்.இவர்கள் கிரேக்க நாட்டிலி
ருந்தும், தெக்கபோலி நாட்டிலிருந் தும், இங்கு அதிக கிரேக்க மக்கள்
தொகை உள்ள நிலப்பகுதி, மற்று
ம் கலிலேயா பகுதி அடங்கிய 10
நகரங்களிலிருந்து வந்த கிரேக்க
ர்கள்.இவர்கள் இஸ்ரவேலின்
கடவுளை வணங்கும் விருத்தத சேதனம் செய்யாத புற இனத்தார்
இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாயிதாவைச் சேர்ந்த பிலிப்பு விடம் வந்தார்கள். பிலிப்பு என்ற
பெயர் ஒரு கிரேக்க பெயராகும். இவர் தெக்கபோலி ஊருக்கு அரு
கில் உள்ள பெத்சாயிதா ஊரை
சேர்ந்தவர் எனவே, கிரேக்கர்கள்
இவருக்கு ஏற்கெனவே தெரிந்த
வராக இருக்கலாம். ஆனால்
பிலிப்பு நேரிடையாக ஆண்டவரி
டம் அழைத்து செல்லாமல் தன்
ஊரை சேர்ந்த அந்திரேயாவிடம்
அழைத்து செல்கிறார். அந்தி ரேயா என்ற பெயரும் "ஆண்ட்ரு" என்ற கிரேக்க சொல்லிலிருந்து " "ஆண்ட்ரோஸ்" ( மனிதன்) பெயர் வந்தது. இந்த அந்திரேயா திருமு ழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். ஆண்டவரின் முதல் சீடர். இவர்தான் தன் சகோதரர் சீமோன் பேதுருவைஆண்டவரிடம் அறிமுகம் செய்தவர். எனவே, கிரேக்கர்களை ஆண்டவரிடம் இரு வரும் அழைத்து சென்று இயேசு விடம் தெரிவித்தனர்.
*கிரேக்கர்களின்வருகை"உலகமே அவன் பின்னே போய்விட்டது" என்று பரிசேயர்கள் பேசியது உண்மையாகிறது (வசனம்19)
* கிரேக்கர்களின் வருகை, " தம் முடைய நேரம் வந்துவிட்டது" என்ற வார்த்தை உறுதியாக்கு கிறது.
* கிரேக்கர்களின் வருகை, இயேசு
உயர்த்தப்படும் போது,"எல்லா
மக்களையும் தன்னிடம் இழுத்துக்
கொள்வார்"என்ற வார்த்தை
உண்மையாகிறது.(வசனம் 32).
இயேசு கிரேக்கர்களைப் பார்த்து, "மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. (யோவான் 12:23) என்றார்.
*ஆண்டவரின் நேரம், கானா ஊர்
திருமணத்தில், இயேசு தன்
தாயிடம் " என் நேரம் இன்னும்
வரவில்லை" என்று சொன்னார்.
(வசனம்: 2:4)
* இயேசு தன் சகோதரர்களிடம், "எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை; உங்களுக்கு எந்த நேரமும் ஏற்ற நேரம்தான்.
(யோவான் நற்செய்தி 7:6)என்றார்
* எருசலேமில்,யூதர்கள் அவரைக் கைது செய்ய முயன்றனர், ஆனால் அவரது நேரம் இன்னும் வராததால் முடியவில்லை.(7:30)
*கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன் னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை. (யோவான் நற்செய்தி 8:20) ஆனால், இறுதி யாக இயேசு தன் நேரம் வந்து விட்டது என்று உறுதியாக கூறுகி றார்.இதனால்மகிமைஅடைகிறார்"மகிமை" என்பது ஆண்டவரின்
சிறப்பியல்பை குறிக்கிறது. இயேசுவின் மகிமை, மறு ரூப மலையில் வெளிப்பட்டது.
மரணத்திலும், உயிர்த்தெழுதலி
லும் அவர் மகிமை வெளிப்பட்டது
ஆண்டவர் தன் மகிமையை தன்
சீடர்களுக்கும் கொடுத்தார்.(யோவான் 17:22), அதே மகிமை யை அவரை ஏற்றுக்கொண்ட
அனைவருக்கும் அந்த மேலான
மகிமையை தரித்திருக்கிறோம்.
சத்திய ஆவியாகிய தேற்றறவா ளன் இயேசுவைமகிமைப்படுத்து
வார் (யோவான் 16:13-14).
அன்பர்களே! திருமுழுக்கு என்ற
அருட்சாதனம் நம்மை கிறித்துவு டன் இனைக்கும் ஒரு பாலமாகும்.
,Babtism is a bridge to connect with
Jesus our Lord இதனால்தான்
குழந்தைகளை திருமுழுக்கு மூல
மாக திருச்சபை என்கிற ஆண்ட
வரின் பாசறையில் சேர்க்கப்படு கிகிறார்கள். இதனால் திருமுழுக் குப் பெற்ற அனைவரும் அவருடை
ய மரணத்திலும், உயிர்த்தெழுத லிலும் பங்கு பெறுகிறோம்.We are
the partakers of His death and resurre ction through babtism.
ஆண்டவர் நம் அனைவரையும்
காப்பாராக.ஆமேன்.
Prof.Dr.David Arul Paramanandam Sermon Writer
www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
விலங்குகள் பேழைக்குள் நுழைகின்றன.
Comments
Post a Comment