பன்மைதன்மை: மானுடப் பொதுமையும், பற்றுறுதி பகிர்வும் (154) Plurality: Common Humanity and faith sharing. யோனா 4:1-11, திருப்பாடல் 82.திருத்தூதர் பணிகள் 8:26-40.மத்தேயு 22:1-14.

முன்னுரை: கிறித்துவிற்கு பிரிய மான அன்பு நண்பர்களே! பன்மை தன்மை: மானுடப் பொதுமையும், பற்றுறுதி பகிர் வும் என்ற சிறந்த தலைப்பை தியானிப்போம். பன்மை தன்மை (Plurality) கடவுளின் படைப்பிலே இருந்தது." புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிக ளையும் கனி தரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்ல து என்று கண்டார். (தொடக்கநூல் 1:12)
ஆண்டவர் அனைத்தையும் பன் முக தன்மையுடன் படைத்தார். அவரின் படைப்பு இன்றளவும்
தொடர்கிறது" மத பன்மைத்துவம் என்பது சமூகத்தில் இணைந்து ள்ள மத நம்பிக்கை அமைப்பு களின் பன்முகத்தன்மை பற்றிய அணுகுமுறையாகும். ." மண்ணு லகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். (திருப்பா (சங்கீதங்கள்) 24:1) இந்த உலகம் கடவுளுடையது அனைத்து உயிரி னங்களும், நாமும் கடவுளுக்கு சொந்தமானவர்கள் என்பது ஆண்டவரின் பன்முக தன்மையை வெளிப்படுத்துகிறார்.அனைத்து மதங்களிலும் ஒரு சில நல்ல கருத்துக்கள் உண்டு.அவைகள் மக்களின் நலனுக்கானவை. திருத்தூதர் பேதுரு, " "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவ ரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். 
(திருத்தூதர் பணிகள் 10:34,35) ஆண்டவரின் பன்முகத்தன்மை யை இங்கு வெளிப்படுத்துகிறார்.
அவருக்கு ஒரு பெயருண்டு, "உலகத்தின் பாவத்தை சுமந்து
தீர்க்கும் தேவாட்டுக்குட்டி" இதன் மூலம் கிறித்து உலகில் உள்ள அனைவருக்குமானவர். இதன் மூலம்தன்பன்முகத்தன்மை யை உறுதி படுத்துகிறார். இந்தி
யர்களின் பன்முக தன்மை " வேற் றுமையில் ஒற்றுமை காண் பதே" (Unity in diversity) .திருவள்ளுவரும்,"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார். " அதாவது  உலகத் தாரோடு பொருந்தி ஒழுகும் தன் மையை அறியாதவர், பல நூல் களைக் கற்றிருந்தாலும் அறிவில் லாதவரே ஆவர் என அனைவரு டன் சேர்ந்து வாழ அறிவுருத்து கிறார்.பல்வேறு மத நம்பிக்கைக ளை கொண்ட மனிதநேயம் உரு வாக வேண்டும். இது பன்மைதன் மையை நமக்கு உணர்த்துகிறது.  மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீ கத்தை இயேசு போதித்துள்ளார். இதையே, நம் திருச்சபைகள் போதிக்கின்றன. 
1 கீழ்படியாத யோனா. Disobedie nce Jonah.யோனா 4:1-11, 
கிறித்துவின் அன்பர்களே! இறை
வாக்கினர் (அ) தீர்க்கதரிசி (prophet) எனும் நபர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது தெய்வீகத் தன்மையுடைய பண்புகளை கொண்டவர்.இவர் மானிட மக்க ளுக்கு இடையிலான சேவையைச் செய்கின்றவர். இறைவாக்கினர் என்ற சொல், இறைவனின் வார்த் தையைப் பேசுபவர் அல்லது மக்க ளுக்கு எடுத்துரைப்பவர் என்ற பொருளில் கடவுளின் திட்டத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தி, மக்களின் தீய வாழ்க்கையை மாற்ற இறைவாக்கினர்கள்  உழை த்தனர். ஆனால்,  அமித்தாயின் மகன் யோனாவுக்கு (யோனா 
என்றால் புறா என்று அர்த்தம்) ஆண்டவரின் வாக்கு கி.மு 8ம் நூற்றாண்டில் அருளப்பட்டது. 
ஆண்டவர் யோனாவை நோக்கி"நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகி றது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமை கள் என்முன்னே வந்து குவிகின் றன" என்றார். நினிவே பண்டைய 
அசீரியர்களின் தலைநகர்.இவர்
கள், மெசொப்பொத்தேமியா பெண் கடவுளான இஸ்தரை வழி பட்டனர். நில நடுக்கத்தாலும், பல
படை எடுப்பாலும் அழிந்துப்போன
பட்டணம். தற்சமயம், அதன் பழை
ய சிதலடைந்த நகரம் ஈராக்கில்
மோசுல் நகரின் யூப்ரடிஸ் நதிக் கரையில் இன்றும் உள்ளது.
இறைவாக்கினர், யோனாவின்
காலத்தில் நினிவே நகரில் 1,20,000 மக்கள் வசித்தனர். அப் பொழுது அதன் அரசர் அசர் டானின் பல்(Aššur-danin-pal was King of Nineveh) யோனா யூத இறை
வாக்கினர். நினிவே மக்கள் புற
இனத்தர்வர்கள்.பாவ சேற்றில் 
வாழ்ந்தனர். யோனாவிற்கு அசீரி யர்களைப்( நினிவே மக்கள்) பிடிக்கவில்லை. அசீரியா ஒரு உருவ வழிபாடு, பெருமை மற்றும் இரக்கமற்ற நாடு,ஆண்டவர் அவர் களை எச்சரிக்க யோனாவை அனுப்புகிறார். ஆனால், யோனா ஆண்டவருக்கு கீழ்படியாமல், நினிவே பட்டணம் செல்லாமல்  அவர் ஸ்பெயினின் தெற்குப் பகு தியில் ஜிப்ரால்டருக்கு அருகில் உள்ள தர்ஷிஷ் நகருக்குச் செல்ல கடற்கரை நகரமான யோப்பாவு க்கு  கப்பலில் பயணம் செய்தார்.
கீழ்படியாமை மிக கடுமையான
பாவமாகும்.
நினிவே அழிக்கப்பட வேண்டும் என்று யோனா விரும்பினார். அவர்கள் கடவுளின் தண்டனை தீர்ப்புக்கு தகுதியானவர்கள் என்று அவர் உணர்ந்தார். கடவு ளின் கருணை தனது எதிரிகளு க்கு(புறஇனத்தார்)நீட்டிக்கப்படுவதை யோனா விரும்பவில்லை.
இறைவாக்கினர்கள் கடவுளுக்கு
கீழ்படிவது முதல் தகுதியாகும்.
ஆதாம், ஏவாள் கீழ்படியாமையாள்
பாவம் உலகில் வந்தது. யோனா
கீழ்படியவில்லை, ஆனால்யோனா வின் எச்சரிக்கையை கேட்டு நினிவேமக்கள்கீழ்படிந்தனர்.கடவுளின்" கட்டளைக்கு யோனா கீழ்ப்ப டியாததன் விளைவு "கடவுள்" ஒரு திமிங்கலத்தை அவர் மீது வரச் சொன்னது, அவர் மன்னிப்புக்காக ஜெபிக்கும் வரை திமிங்கலம் அவ ரை தன்னுடன் மூன்று நாட்கள் உயிருடன் வைத்திருக்கச்சொல்ல ப்பட்டது.கடவுளிடமிருந்து தப்பிக்க யோனாவின் தவறான முயற்சி தோல்வியடைந்தது. தான் செல் லும் எல்லா இடங்களிலும் கடவுள் தன்னுடன் இருப்பதை அவர்விரை வில் உணர்ந்தார். பெரிய மீனின் வயிற்றில் கூட, யோனா எங்கே இருக்கிறார்என்பதைகடவுள்அறிந்திருந்தார், அவருடைய ஜெபத் தைக் கேட்க முடிந்தது ( யோனா 2:2). நினிவேயின் மக்கள் மனந்தி ரும்பியது இந்த நகரத்தைப் பற்றி மனந்திரும்புவதைப் பிரசங்கித்த யோனாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நினிவே அழிக்கப் படும் என்று யோனா நினைத்தார். ஆனால் யோனா கடவுளின் மனப் போக்கைக் கண்டு வியந்தார், புற இனத்தார் 'அவர்களும் எனக் குரியவர்கள். கடவுள்அனைவருக் கும் கடவுள் என்பதை இந்த நிக ழ்வு நமக்குநினைவூட்டுகிறது. 
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவரல் லாத மக்கள் கிறிஸ்தவ நம்பிக் கைக்கு வந்த பல நிகழ்வுகள் உள்ளன. கடவுள் பேதுருவை கொர்னேலியஸ் என்ற யூதரல் லாத நபரின் வீட்டிற்கு அனுப்பி னார். ஆனால் பேதுருக்கு அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடின மாக இருந்தது. காலப்போக்கில் பேதுரு கனவின் மூலம் யாரையும் அசுத்தமாகப் பார்க்கக் கூடாது என்றும் கடவுள் சுத்திகரித்தது இழிவானதாக நினைக்கக் கூடாது என்றும்புரிந்துகொண்டார்.கடவுள் பாரபட்சம் காட்டுவதில்லை, அவர் எல்லா மக்களுக்கும் கடவுள் (அப். 10:34; எபி. 13:5; கலா. 3:27). 
கடவுளுடைய விண்ணரசு பற்றிய கிறித்துவின் போதனைகளின் போது அவர் பின்வருமாறு முடித் தார்: "ஆனால் முதலில் இருப்பவர் கள் பலர் கடைசியாக இருப்பார் கள், கடைசியாக இருப்பவர்கள் பலர் முதன்மையானவர்களாவா ர்கள்" (மத். 19:30; 20:16) நினிவே மக்கள் நிச்சயம் விண்ணரசில் இருப்பார்கள்.
யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையா ளமாய் இருப்பார்...கடவுளின்
கருணைக்குஅளவில்லை,எல்லை யும் இல்லை, கனிவு காட்டுவதில்  நல்லவர்கள், பொல்லாதவர்கள் என பாகுபாடு ஆண்டவரிடம் இல் லவே இல்லை. மன மாறும் அனை வருக்கும் பன்முகதன்மையுடன் மன்னிப்பு உண்டு. 
2. திருச்சபை ஒரு தனியார் நிருவனமா? Is the Church a private Company? திருத்தூதர் பணிகள் Acts: 8:26-40 
ஆண்டவரின் அன்பு பற்றுறுதியா
ளர்களே: திருத்தூதர்களின் காலத்
தில் திருச்சபைகள் வளர தொடங் கின.திருச்சபையின் வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயம் என்ன வென்றால், திருச்சபைகள் முற்றிலும் யூத நிறுவனமாக(Jews company) இருந்து தொடங்கியது. (திருத்தூதர்  6:1-15),புறஜாதிகளை ஏற்றுக்கொள்வது பற்றிய பெரும் விவாதத்தின் முதல் முணுமுணுப் புகளைக் காண்கிறோம். இந்த பிரச்சனைகளை கவனிக்க தேர்வு செய்யப்பட்ட ஏழு நேர்மையாளர் களில் பிலிப்பும் ஒருவர். இவர் திருதூதர் பிலிப்பு அல்ல (தி.து.ப 6:3) திருத் தூதர்கள் பேதுருவும், யோவானும்எருசலேமைமையமாக கொண்டு  யூதர்களுக்காக திரு ப்பணியாற்றினார்.சமாரியாவின் பெரும்பாலான இடங்களுக்கு ஏன் நற் செய்தி எட்டவில்லை, ஆனால் அந்தப் பகுதியைப் பற்றி ஆண்ட வர் முன் கூட்டியே என்ன சொல்லி யிருந்தார்? "சமாரியர்களுடைய எந்த நகரத்துக்குள்ளும் நுழை யாதீர்கள். வழி தவறிப்போன ஆடுகளைப் போல்இருக்கிறஇஸ்ர வேல் தேசத்தாரிடமே போங்கள்” என்று திருத்தூதர்களுக்கு இயேசு முன்பு அறிவுரை கொடுத்திருந் தார். (மத். 10:5, 6) அதன்படியே, சில காலம் இவர்கள் எருசலேமை பணித்தளமாக கொண்டு இறை பணியாற்றினர். ஸ்தேவானைக் கொலை செயவதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார். அந்த நாள்க ளில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது. திருத் தூதர்களைத் தவிர மற்ற அனை வரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக் கப்பட்டுப் போயினர். (திருத்தூதர் பணிகள் 8:1) அப்படி “சிதறிப் போன” சீடர்களில் ஒருவர் தான் பிலிப்பு.இவர் சீமோன் பேதுரு,  அந்திரேயாவின் ஊரானபெத்சா ய்தாவைசேர்ந்தவர்.கிரேக்கமொழி  அறிந்தவர்.இவரின் பெயரும் கிரேக்கபெயர்தான்.கிரேக்கர்களை ஆண்டவரிடம் அழைத்து வந்தவர், தந்தையை எங்களுக்கு காட்டும்"(யோவான்14:8–11)என்று ஆண்டவரிடமே கேட்டவர். கிறித் தவப் பாரம்பரியப்படி, இவரே கிரேக்கம், சிரியா முதலிய நாடுக ளுக்கு கிறித்தவத்தைக் கொண்டு சென்றவர்.அவர் சமாரியாவுக்குப் போனார். அந்த நகரத்தில் நல்ல செய்தி பெரும்பாலும் சென்றெ
டையவில்லை. ஏனென்றால், “ ஆனால் காலப்போக்கில்,சமாரியா விலும் நல்ல செய்தி முழுமையாக ப் பிரசங்கிக்கப்படும் என்பதை இயேசு தெரிந்திருந்தார்.அதனால் தான், பரலோகத்துக்குஏறிப்போவ தற்கு முன்பு, “எருசலேமிலும், யூதே யா முழுவதிலும், சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச்சாட்சிகளாகஇருப்பீர்கள்” என்று சொன்னார்.—(திருதூதர். 1:8.) ஆண்டவர், யாரையும்கைவிடு வதில்லை.யூதர்களுக்கு சமாரியர் களுடன் அந்தச் சமயத்தில் எந்த வொரு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், யூதர்கள் அவர்களை  மிக தாழ்வாக பார்த்தார்கள். பரி சேயர்களுடைய குறுகிய மனப் பான்மைக்கு பிலிப்பின் பிரசங் கம் முற்றிலும் மாறுபட்டது... என்ப தை அந்தச் சமாரியர்கள் தெரிந்து கொண்டார்கள்.அதனால் பிலிப்பு சொன்ன செய்தியை சமாரியர்கள் ‘எல்லாரும்’ காது கொடுத்துக் கேட்டதில் ஆச்சரியமேதுமில்லை.—(தி.தூ. 8:6.) சமாரியாவில் பிலிப்பு நிறைய அற்புதங்களைச் செய்தார். உதாரணமாக,ஊனமாக இருந்தவர்களை குணப்படுத்தி னார், பேய்களையும் விரட்டினார். (அப். 8:6-8) பிலிப்புவிடம் இருந்த அற்புத வரங்களைப் பார்த்து ஒருவர் ரொம்பவே அசந்து போனார். அவர்தான் மந்திரவாதி சீமோன்; பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு மந்திரவாதி. “சக்திபடைத்த தெய்வப் பிறவி” என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் புகழ் பெற்றிருந்தார். இப்போது கடவுளி ன் உண்மையான சக்தியை பிலிப் பு செய்த அற்புதங்கள் மூலம் சீமோன் பார்த்தபோது விசுவாசி யாக மாறினார். (அப். 8:9-13)  சீமோனும் நம்பிக்கை கொண் டவனாய்த் திருமுழுக்குப் பெற்று, பிலிப்புடன் கூடவே இருந்தான்; அவர் செய்த அரும் அடையாளங் களையும் வல்ல செயல்களையும் கண்டு மலைத்து நின்றான். 
(திருத்தூதர் பணிகள் 8:13)
சமாரியர் பிலிப்பின் மூலம் கடவு ளின்வார்த்தையைஏற்றுக்கொண்  டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தா ர்கள். அவர்கள் வந்து சேர்ந்தவுட ன், புதிய சீடர்கள் மீது கைகளை வைத்தார்கள்; ஒவ்வொருவரும் கடவுளுடைய சக்தியைப் பெற்றா ர்கள். மந்திரவாதிசீமோன் அதைப் பார்த்து வாயடைத்துப் போனார். “எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்” என்று அப்போஸ்த லர்களிடம் கேட்டார். ‘நானும் யார் மேல் கைகளை வைக்கிறேனோ அவர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்க’ வேண்டும் என் றார். அந்தப் புனித பாக்கியத்தை விலைக்குவாங்கிவிடலாம் என்று நினைத்து அவர்களுக்கு சீமோன் பணமும் கொடுத்தார்.—(அப். 8:14-19.)சீமோனிடம் பேதுரு அழுத்தம் திருத்தமாக இப்படிச் சொன்னார்: “கடவுள் தரும் இலவச அன்பளிப் பைப் பணம் கொடுத்து வாங்க லாம் என்று நீ நினைத்ததால் உன் பணம் உன்னோடு அழிந்து போக ட்டும். உன் உள்ளம் கடவுளுடைய பார்வையில் நேர்மையாக இல்லா ததால், இதில் உனக்குப் பங்கும் கிடையாது, பாகமும் கிடையாது.” உடனடியாக மனம் திருந்தி மன்னி ப்புக்காக மன்றாடும்படி சீமோனி டம் பேதுரு சொன்னார். “உன் உள்ளத்தில்தோன்றிய பொல்லாத எண்ணத்துக்காக மன்னிப்பு கேட்டு ஆண்டவரிடம்  மன்றாடு” என்றார். அதற்காக, சீமோனை முழுக்க முழுக்க கெட்டவர் என்று முத்திரை குத்திவிட முடியாது. சரியானதைச் செய்யவே அவர் விரும்பினார்; ஆனால், அது தவறு என்று அந்தச் சமயத்தில் அவருக் குத் தெரியவில்லை. அதனால் தான், “நீங்கள் சொன்ன எதுவும் எனக்கு நடந்து விடாதபடி தயவு செய்து எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்” என்று அப்போஸ் தலர்களிடம் கெஞ்சினார்.—(தி.தூதர் பணிகள் (அப். 8:20-24.)
இது மானுட தன்மைக்கு எடுத்துக்
காட்டாகும். ஒருவரையும் இழந்து
போவது கடவுளின் தன்மையல்ல.
அனைவரையும் தன் பால் இனை ப்பதே ஆண்டவரின் பன்முக தன்
மை." இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக் கிறார்" என்று சொன்னார். 
(லூக்கா நற்செய்தி 19:10)
அன்று சீமோனைக்கண்டித்து பேதுரு சொன்ன வார்த்தைகள் இன்று கிறிஸ்தவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கின்றன. சொல்லப்போனால், “சைமனி” என்ற ஆங்கில வார்த்தை இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான்பிறந்தது.முக்கியமாக திருச்சபை வட்டாரங்களில், அதிகாரத்தை வாங்குவதையும்
விற்பதையும் இந்த வார்த்தை குறிக்கிறது. தேர்தலில் பணத் தைக் கொடுத்து பதவியை வாங் கும் பழக்கம் மிகவும் வெட்கங் கெட்ட விதத்தில், மகா மோசமான விதத்தில், படுகேவலமான விதத் தில் நடந்திருக்கிறது என்பது
சைமனி மந்திரவாதி கூட்டத்தி னர்.சைமனியைக் குறித்து, அதா வது “பணத்தை” கொடுத்து “பதவி யை” வாங்கும் பாவத்தைக் குறித் து, கிறிஸ்தவர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். உதார ணத்துக்கு, சபையில் கூடுதல் பொறுப்புகள் பணத்தை” கொடுத் து “பதவியை” வாங்குவதைக் குறித்து கிறித்தவர்களாகிய நாம்  எச்சரிக்கையாக இருக்க வேண் டும்.பதவியை அடைவதற்காக பொறுப்பில் இருப்பவர்களுக்குப் பரிசு மழை பொழிவதோ புகழாரம் சூட்டுவதோ கூடாது. அதேசமயத் தில், பொறுப்பில்இருப்பவர்களும் கூட பணக்காரர்களுக்குத் தனி சலுகை காட்டுவதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண் டும். இவை இரண்டுமே ஒருவகை யில் “சைமனிதான்.”தனக்குத் தானே புகழ் தேடுகிறவர்களுக்கு’ ஆண்டவரின் அமைப்பில் இடமி ல்லை.(—நீதி. 25:27.)
பின்பு ஆண்டவரின் தூதர் பிலிப் பிடம், "நீ எழுந்து எருசலேமிலிரு ந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ" என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை. ( காசா ஒரு பழைமையான
நகரமாகும்.ஆதியாகமம்10:19.எகிப்தின் எல்லையில் இருக்கும் பால ஸ்தீனத்தின் நகரம்; ) 
 பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப் போனார். அப்போது எத்தியோப் பிய அரச அலுவலர் ஒருவர் எரு சலேம் சென்று, கடவுளை வண ங்கி விட்டுத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அவர் ஓர் மூன்றாம் பாலினத்தவர். (Eunuch) எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். அவர் தமது தேரில் அமர்ந்து ஏசாயா வின் இறைவாக்கு 53ம் அதிகார த்தை படித்துக் கொண்டிருந்தார்.  பிலிப்பு ஓடிச் சென்று, , "நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?" என்று கேட்டார். அதற்கு அவர், "யாராவது விள க்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?" என்று கூறித்தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார். பிலிப்பு அவர்கள் ஏசாயா தீர்க்கரின் 53ம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு கிறித்துவின் பாடுகளை விளக்கினார் உடனே, நிதி அமைச் சர் மனம்மாறினார், திருமுழுக்கு எடுத்தார்.அந்த எத்தியோப்பிய அதிகாரி யூதமதத்துக்குமாறி, ஆண்டவரை  வணங்கி வந்தார். சொல்லப் போனால், அன்றும்கூட அவர் எருசலேம்ஆலயத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார். (அப். 8:27) அப்படியென்றால், ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஒரு அண்ண கராக இவர் இருந்திருக்க முடி யாது என்று தெரிகிறது. ஏனென் றால், ஆண்மை நீக்கம் செய்யப்ப ட்டவர்கள் இஸ்ரவேல் மக்களுடன் சேர்ந்து ஆண்டவரை வழிபட திருச்சட்டம் தடை விதித்திருந்தது.(—இணைச் சட்டம் 23:1.) இவர் அலி
என்கிற மூன்றாம் பாலினித்தவர்.
ஆக, ஆண்டவர் பன்மைதன்மை யுடன் மானுடப் பொதுமையும், பற்றுறுதி பகிரவும் யூதரல்லாத
கொர்நெலியுவையும், புற இனத்
தாரான சமாரியர்களையும், மந்
திரவாதியான சீமோனையும்,
அலியான எத்தோப்பிய நிதி 
அமைச்சரையும் கிறித்து தனக்
குள் கொண்டுவரும் நிகழ்வுகள்
ஆண்டவர் அனைவருக்குமானவர்
என்பதை உறுதியாக்கிறார்.
(Note: The second part of the message is extracted from William Barclay's Daily Study Bible)
3 கடவுளின் அழைப்பு - பன்மை தன்மையானது, The call of God is
Plurality.,மத்தேயு:22:1-44.
கிறித்துவின் அழைப்பாளர்களே!
இந்த உவமை விண்ணரசை ஒப் பிட்டு கூறப்படுகிறது.  பிரதான ஆசாரியர்கள் மற்றும் பரிசேயர்க ளுக்கு இந்த உவமை மூலம் (The Parable of the Great Banquet)ஆண் டவர் பதிலளிக்கிறார். .இது நமக் கும் பொருந்தும் .கடவுளின் அழை ப்பு ஒரு திருமண விருந்துபோன்ற மகிழ்ச்சியான விருந்து (Joy of feast) என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
இங்கு ஒரு அரசர் தன் மகனுக்கு திருமண விருந்தை நடத்துகிறார்.
திருமணத்திற்காக தெரிந்து கொள்ளப்பட்டவர்களை தன் பணி யாளர்கள் மூலம் அழைக்கிறார். இதற்காக அரசரின் பணியாளர் கள் நேரில் சென்று அழைப்பை பெற்றவர்களை விருந்திற்கு அழைக்கின்றனர். ஆனால், அழை
ப்பை பெற்றவர்கள் விருந்தை
நிராகரிக்கின்றனர்.  அதில், மூன்றாவது அழைப்பாளர்கள் அந்த பணியாளர்களை பிடித்து, அடித்து, இழிவு படுத்தி கொல் கிறார்கள். அதில் முதல் இரண்டு அழைப்பாளர்கள் தங்கள் சொந்த வேளைக்கு சென்றனர், அதில் தவறு இல்லை ஆனால் அழைத் தது யார்? ஒரு அரசர். தன் மகனு க்கான திருமணவிருந்திற்கு சில குறிப்பிட்டவர்களை மட்டும் அழை க்கிறார். எனவே, அவரின் அழைப் பிற்கு கீழ்படிவது மிக முக்கியம். இதில்நான்குவிதஅழைப்பாளர்கள் இருந்தனர்.இவற்றில் முதல் மூன்றுவித அழைப்பாளர்கள் பழைய உடன்படிக்கையாளர்கள்.
(Old Covenants Peple) கிறித்துவை
ஏற்றுக் கொள்ளாதவர்கள். யூதர் கள்.இவர்கள் திருமணவிருந்தின் மகிழ்ச்சியைஇழந்தவர்கள்.ஆனால்,இந்தநான்காவதுஅழைப்பாளர்கள்  யார் என்றால் நாமே. மற்றும் புற இனத்தார், புற மதத் தார், நல்லோர், தீயோர், வழிபோக் கர்கள். இவர்கள் அனைவருமே புதிய உடன் படிக்கையின்  (The new Covenant people) மக்கள். இயேசுவை ஏற்று க்கொண்டவ ர்கள்.விண்ணரசின் சொந்தக் காரர்கள். அரசர், அழைப்பை ஏற்காதவர்களையும்,கொலையாளிகளையும், நகரத்தையும்
அழித்துப்போட்டார்.இது கி.பி 70 ம் ஆண்டில் ரோம பேரரசன் டைடஸ்
(Tytus) அவர்களால் எருசலேம்
அழிக்கப்பட்டது. இதை மத்தேயு
நற்செய்தியாளர் கி.பி 85-90 க்குள்
எழுதி இருக்கலாம் என நம்பபடு கிறது. இங்கு பணியாளர்கள்
இறை மக்கள். அரசர் என்பவர் ஆண்டவர்.திருமணம் என்பது விண்ணரசை குறிக்கிறது. விருந்து-தூய நற்கருணையை
குறிக்கிறது.அன்பர்களே!கிறித் துவின் அழைப்பை நாம் நிராக ரித்தால், ஒரு நாள் நாம் ஆண்ட வரால் நிராகரிக்கப்படுவோம்.
நான்காவது அழைப்பு " கிருபை யின் அழைப்பு". இதுவே, பன்மை தன்மையுடனான மானுடப் பொது மையும், பற்றுறுதியை பகிரவும் 
உறுதியளிக்கிறது. கடவுளின்
அழைப்பை நிராகரிப்பவர்களுக்
கு நியாய தீர்ப்பின் தன்டனை உண்டு. விண்ணரசை நிரப்புவதே
கடவுளின் உள்ளார்ந்த விருப்பம்.
எனவே, விண்ணரசு நிரம்பும் வறை அவரின் வருகையும் தள்ளி
போகிறது. திருமண ஆடைஎன்பது
நம் உள்ள தூய்மை, நீதி, இரட்சி ப்பை வளியுறுத்தும் புதிய உடன்
படிக்கையின் நற்செய்தியாகும்.. 
இந்த புதிய ஆடையின் நற்செய் தியை அறியாதவனை இருளிலே
அதாவது நரகத்திலே தள்ளுங்கள்
என கூறுகிறார்.
இஸ்ரவேலர் பழைய ஆடையாகிய
பழைய உடன்படிக்கையின் பிள் ளைகளாக இருப்பதினால், விண் ணரசிற்கு தகுதியானவர்கள்
அல்ல.ஆண்டவர், எவ்வளவோ முயன்றார் இஸ்ரவேலரை மீட்பத
ற்காக, தன் சீடர்களை அனுப்பி னார், தானே கானாமல்போன இஸ்ரவேலேரை மீட்கவே வந்தே ன் என்றார். ஆனால், அவரின்
சொந்த இனமக்கள் ஏற்றுக்
கொள்ளவில்லை. இந்த உவமை
அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை யாகும்.இப்பொழுதோகடவுள்மனிதரைத்தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியா க்கப்பட்டுள்ளது. இயேசு கிறித்து வின்மீது கொள்ளும் நம்பிக் கையின் வழியாக மட்டுமே கடவுள் மனிதரை தமக்கு ஏற்பு டையவராக்குகிறார்: (உரோமர் 3-21,22)
பிறஇனத்தாராகிய மக்களுக்கு பழைய உடன்படிக்கையும் கிடை யாது, பழைய ஆடையும் கிடை யாது. இயேசுவின் புதிய உடன்படிக்கையான நற்செய்தி என்ற திருமண ஆடை மட்டுமே 
விண்ணரசிற்கு தகுதி படுத்தும்.
ஆண்டவர் தாமே நம்மை விண்
ணரசிற்கு தயார்படுத்தவும்,தகுதி
படைக்கவும் கிருபை அருள் வாராக! ஆமேன்.

  
 Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com 



Note: This Sermon is prepared to deliver at CSI Bishop Azaria Memorial
Church, at Pulipakkam, Chengalpet.25/
8/2024.






தகுதியான ஆடை இல்லாதவன்.

பெர்னார்டோ ஸ்ட்ரோஸி, "திருமணத்திற்கான அழைப்பின் உவமை," 1636
பெர்னார்டோ ஸ்ட்ரோஸி, "திருமணத்திற்கான அழைப்பு.* Thank you Wikipedia .











 

 









 

















 





 

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.