கல்வி ஞாயிறு: ஆசிரியர் தினம்.இயேசுவே ஆசான்.(155) Jesus the Guru. நீதி மொழி: 4:1-19. திருப்பாடல்:141, திருத்தூதர் பணிகள்: 22:-1-5, லூக்கா: 4: 31-44.

முன்னுரை:
கிறித்துவின் அன்பர்களே! ஆசிரி
யர் தினத்தை திருச்சபைகள் கல்வி ஞாயிறு ஆக கொண்டாடு வதில் மிக மகிழ்ச்சிஅடைகிறேன். 
ஆசிரியர்களுக்கெள்ளாம் தலை சிறந்த ஆசிரியராகவும்நமதுஆண் டவர் இயேசு கிறித்து திகழ்கிறார்.  எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.ஆசிரியர் மாதா, பிதா, குரு என மூன்றாம் கடவுளாக கருதுகிறார்கள். ஆண்டவரை  " ரபீ" (Rabbi) என்ற பெயரில் அழை த்தனர்.(A Jewish religious leader and teacher of Jewish law.) அவருடைய சீடர்களும் ஆண்டவரை கர்த்தர் என்றும்,ரபீ என்றும் போதகரே என்றும், ஐயா(லூக்கா5:5) என்றும், மெசியா என்றும் அழைத்தனர். ஆண்டவர் அதிகாரத்துடன் போதித்தார். அவரிடம் நேர்மை, உண்மை, சக்தி இருந்தது.
தன் போதனைகளில் உவமைகள், 
பழமொழிகள், கதைகளை ஒரு
நல் ஆசிரியராக தன் சீடர்களுக்கு
போதித்தார். தன் போதனையில்
சரியான மொழியை பயன்படுத்தி னார். உருவகம், உவமானங்களை
அதிகம் பயன்படுத்தினார். குழந்
தைகளுக்கு அவர்காலத்தில் முத
ன்மை கிடையாது, ஆனால், சிறு
வர்கள் தன்னிடம் வர அனுமதித்
தார்.சிறுவர்கள் போன்றவருக்கு
தான் விண்ணரசு என்றார். இத்த
கைய விண்ணரசின் சொந்தகார
ரான சிறுபிள்ளைகளை நல்வழி
யில் வளர்வதற்கு தடையாக இரு
க்கும் மணிதர்களின் கழுத்தில்
எந்திர கல்லை கட்டி நடு சமுத்தி
ரத்தில் தள்ளுவது நலமா இருக்
கும் என்பது சிறுவர்கள் மத்தியி
ல் பணி செய்யும் ஒவ்வொருவரு க்கும் பாடமாகும்.நீதி, நேர்மை, மனித தன்மையுடன் வாழ மக்களு
க்கு போதித்தார். தன் இறையியல்
கருத்துக்களை எளியவர்களும்
புரிந்து கொள்ளும்படி செய்தவர்
செயலிலும் செய்து காட்டினார். சில உவமைகளை தெளிவுரையு
டன் விளக்கினார். இடம் விட்டு இடம் பெயர்ந்து போதித்த ஆசிரி யர் என்பதால் இவர் பெரும்பாலும் "ரபி" என்று அழைக்கப்பட்டார். இன்றளவும் உலகின் மிக சிறந்த
பேராசானாக, குருவாக, நல் ஆசிரி
யராக 2,365 பில்லியன்( 237 கோடி)
மக்களுக்கு வழிகாட்டும் ஆன்மீக
ஆசியராக இருக்கிறார்.ஆண்டவர்
ஒரு " நடமாடும் பல்கலைக்கழக மாக' திகழ்ந்தார். அவரின் போத
னையில் மிக சிறந்த எடுத்துக்
காட்டு," "உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்பதே
(மத்தேயு நற்செய்தி 22:39) ஆசிரியர் என்ற சொல்லை ஆசு + இரியர் என்று பிரிப்பர்.அதாவது ஆசிரியர் என்பவரை குற்றங்கள் களைபவர் என்று பொருள்.
நற்செய்தியில் "போதகரே'என்ற
சொல் 45 முறை வருகிறது.
"நீங்கள் என்னைப் "போதகர்" என்றும் "ஆண்டவர்" என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ் வாறு கூப்பிடுவது முறையே.நான் போதகர்தான், ஆண்டவர்தான். 
(யோவான் நற்செய்தி 13:13)ஆண்
டவர் தன்னை போதகர் என்று
அழைப்பதை ஏற்றுக்கொள்கிறார்
1.தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை. நீதி மொழிகள்:4:1-19.
There is no advice like father's.
கிறித்துவிற்கு பிரியமானவர் களே ! தாவிதின் மகன்கள் நான்கு
பேர், அவர்களில் சாலமன் அரசர்
நீதி அரசராய் திகழ்ந்தார். அவர்
தன் தந்தை தாவிது அரசரின்
ஆலோசனைகளுக்கும், புத்தி மதி 
களுக்கு செவி கொடுத்து வளர்ந் தார். " நான் என் தந்தையின்( தாவிது) அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்துவந்தேன்(நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 4:3) அப்பொழுது என் தந்தை எனக்குக் கற்பித்தது இதுவே; "நான் சொல் வதை உன் நினைவில் வை; என் கட்டளைகளை மறவாதே; நீ வாழ்வடைவாய். நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 4:4 ஞானத்தையும், மெய்யுணர்வை யும் தேடிப் பெறு; நான் சொல் வதை மறந்துவிடாதே; அதற்கு மாறாக நடவாதே; நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 4:5
 ஞானத்தை புறக்கணியாதே; அது உன்னைப் பாதுகாக்கும்; அதை அடைவதில் நாட்டங்கொள்; அது உன்னைக் காவல் செய்யும். 
நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 4:6) தன் தந்தை சொல்லை தட்டாம
ல் சாலமன் வளர்ந்தார். அவர்
தன் அறிவுரைகளை தந்தை
குழந்தைகளுக்கு கூறுவதுபோல்
கூறினார்.அரசர் சாலமோனுக்கு
நான்கு மகன்கள், ஆனால் சாலமோன் தன் தந்தை தாவிதின்
அறிவுரைகளை கேட்டு நடந்தது
போல் இவருடைய பிள்ளைகள்
நடக்கவில்லை. இவரின் மகன்
ரெகோபெயாம் (சாலமன் மற்றும் நாமாவின் மகன்) சாலமோனுக் குப் பிறகு ராஜாவானார், இவரு டைய  காலத்தில்தான் இஸ்ரவேல் தேசம் வடக்கு மற்றும் தெற்கு என்று பிரிந்தது. புறஜாதியினரை திருமணம் செய்ய வேண்டாம் என்று கடவுள் இஸ்ரவேலர்களிடம்
கூறியிருந்தார். ஆயினும் நாமா ஒரு அம்மோனிய பெண்  என்று அறிந்தோம். அம்மோனியர்கள் தங்கள் குழந்தைகளை நெருப் பில் பலியிடும் மோலோக் வழிபா ட்டாளர்கள். இதுவே அழிவிற்கு
காரணம். தந்தை சொல் கேட்பது
பிள்ளைகளின் முதல் கடமை.
ஒரு தந்தை 1000 ஆசிரியர்களு க்கு சமம். தந்தையே முதல் நல்லா
சிரியர்.புனித வேதம் கூறுவது
போல், தந்தை தன் பிள்ளைகளுக்
கு போதிக்க கடமைப்பட்டுள்ளார்.
"நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன்வீட்டில்இருக்கும்போதும்,உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது,எழும்போதும்அவற்றைப் பற்றிப் பேசு. (இணைச் சட்டம் 6:7) இதையே, அரசர்கள்
தாவிதும், சாலமனும் தன் பிள்ளை
களுக்கு ஒரு தந்தையாக, ஆசிரிய
ராக போதித்தனர்.திருவள்ளுவரு ம், "தந்தை மகற்காற்று நன்றி அவையத்து  முந்தி இருப்பச் செயல். " தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர் களை அறிஞர்கள் அவையில் புக ழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். ஆக, தந்தை என்பவர் ஒரு
நல் ஆசிரியராக தன் பிள்ளைக ளை கற்றொர் அவையில் முதன்
மை பெற செய்வதே! அதற்கு நன்றி கடனாக பிள்ளைகள்,
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான்  கொல் எனும் சொல்." மகன் தன்
தந்தைக்குச் செய்யத் தக்க கைம் மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய் தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.தாவிது
தன் மகன் சாலமோனுக்கு போதி
க்கும் போது, என்  வார்த்தைகளை
உன் இதயத்தில் வைத்து நடப்பா யாக என்றார். அதையே சாலமோ ன்  தன் பிள்ளைகளுக்கு போதித் தார்.

2. திருத்தூதர் பவுல் அடிகளார் இறையியலின் மிகப் பெரிய
ஒரு பேராசிரியர்: St. Paul was a great professor in theology. Acts:22:1-5.  கிறித்துவுக்குப் பிரியமானவர்
களே! திருத்தூதர் பவுல் அடிகளார்
எருசலேமில் ஒரு குற்ற வாளியாக
யூதர்கள் முன் நிற்கிறார்.அவர்மீது
தவறானகுற்றம்சுமத்தப்படுகிறது 
எருசலேம் தேவாலயத்திற்குள்
புற இனத்தாரை( கிரேக்கர்கள்) கொண்டு வந்ததாக குற்றம்.( திரு
த்தூதர் 21:28,29) ரோம அதிகாரி
ஆயிரத்தவர் தலைவனிடம் அனு
மதி கேட்டு யூத மக்களிடம் எபி
ரேய மொழியில்( அராமிக்) பேசு கிறார். 
"சகோதரர்களே, பிதாக்களே, இப் போது உங்கள் முன் என் வாதத் தைக் கேளுங்கள்." அவர் எபிரேய மொழியில் பேசினார் என்று அவர்கள் கேள்விப்பட்டபோது, ​​அவர்கள் இன்னும் அமைதியாக இருந்தார்கள். மொழி ஒரு நாட்டி ன், இனத்தின் பெருமை, அடையா ளமாகும். பவுல் அடிகளாருக்கு கிரேக்க மொழியில் புலமை
பெற்றவர். அராமிக் அவரின் முதல் மொழி.அங்கு இருந்த யூதர்
களுக்கு கிரேக்க மொழி தெரி யாது, எனவே, அவர்களின்மொழி யிலே பேசினார். உடனே கூட்டம் அமைதியாய் கேட்டது.  பின்னர் அவர் கூறினார்: "சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள்"  என்ற ஸ்தேவான் தான் கொள்ளப்படு வதற்கு முன்பு யூதர்கள் மற்றும்  சவுல்(பவுல்) மத்தியிலும்,பேசிய
வார்த்தையை  போலவே பவுலும் யூதர்களுக்கு முன்பாக தனது பெரிய வாதத்தைத் தொடங்கி னார்: சகோதரர்களே, பிதாக்களே, கேளுங்கள் . (அப்போஸ்தலர் 7:2)
என்று ஆரம்பித்தார்.
அன்பான ஆண்டவரின் பிள்ளை 
களே! சகோதரர்களே, பிதாக்களே
என்ற வார்த்தை ஆண்டவருக்காக கல்லெறிந்து கொள்ளப்பட்ட 
ஸ்தேவானின் வார்த்தையை முன்
மொழிகிறார். கிரேக்க மொழியில் இது மன்னிப்பு என்றவார்த்தையா கும் , இதிலிருந்து நாம் 'மன்னிப்பு' என்ற வார்த்தையைப் பெறுகி றோம். இது ஒருவரின் கடந்தகால வாழ்க்கை அல்லது செயல்களின் முறையான செயலை குறிக்கி றது. பவுல் ஒரு பேராசிரியராக,
"நான் உண்மையில் ஒரு யூதன், சிலிசியாவின் தர்சஸில் பிறந் தேன், ஆனால் இந்த நகரத்தில் கமாலியேலின் காலடியில் வளர்ந்தேன், எங்கள் மூதாதை யரின் சட்டத்தின்படி கற்பிக்கப்ப ட்டேன், இன்று நீங்கள் அனைவ ரும் இருப்பது போல் கடவுளிடம் வைராக்கியமாக இருந்தேன்."
யார் இந்த கமாலியேல்?
கமாலியேல் என்கிற இராபி ஒரு
மூப்பர் இவர் முதலாம் நூற்றா ண்டில் வாழ்ந்தவரும் யூத தலைமைச் சங்கத்தின் குறிப்பிட த்தக்க நபரும் ஆவார்.இவர் யூத திருச்சட்ட ஆசிரியரும், பரிசேய ரும் ஆவார். பவுல் அடிகளாரும்
ஒரு பரிசேயர். கமாலியேல் மக்களிடையே நன்மதிப்பு பெற்ற வராக விளங்கினார். இவர் திருத் தூதர்கள் தலைமைச்சங்கத்தின் முன் விசாரிக்கப்பட்டபோது, அவர்களுக்காகப் பரிந்து பேசிய வர். எனவே, பவுல் அடிகளார் தன்
னை தீவிர யூத நியாயாப்பிரமா னத்தின்படி வளர்க்கப்பட்டவன் பென்னியமின் கோத்திரத்தை யுடையவன் என்பதை அவர்களுக் கு உணர்த்துகிறார்.அவரின் சிறப்பான அறிவாற்றலால் அவர் களுக்குள் கலகம் ஏற்பட்டு பரிசேயர், சதுசேயர்கள் என இரண்டாக பிரிந்தனர், பரிசேயர் கூட்டம் இவரை ஆதரித்தது.
தன் பேச்சாற்றலால் பாதுகாப்பாக
கொண்டுசெல்லப்படுகிறார்.ரோம குடியுருமை பெற்றவர் என்பதால்
ரோமர்கள்தான் விசாரிக்கப்பட
வேண்டியவர்.கிறிஸ்த்து எல்லோ ருக்கும் பொதுவானவர் யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத் தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போ ஸ்தலர் என அழைக்கப்பட்டார்.
இவர் இறையியலின் பேராசிரியர்
ஆண்டவரை புற இனத்தாருக்கு
கொண்டு சென்றவர்.
3.இயேசு பன்முக ஆசிரியர்: Jesus is a Multifaceted Teacher.
லூக்கா: 4: 31-44.
கிறித்துவிக்கு பிரியமானவர் களே ! நமது ஆண்டவர் இயேசு 
கிறித்து ஆசிரியர்களுக்கெல்லாம்
ஆசிரியர். அவர் பன்முக தன்மை
கொண்ட நல்லாசிரியர். ஆனால்
அவரின் சொந்த ஊர் மக்கள்
அவரின் உபதேசத்தை ஏற்கவி ல்லை.எனவே,இயேசு நாசரேத் திலிருந்து புறப்பட்டு,வடகிழக்கில் 15 மைல் தொலைவில் உள்ள கலிலேயாக் கடலின் அருகே உள்ள கப்பர்நகூம் என்ற நகரத் திற்குச் செல்கிறார்.கலிலெயின் ஒரு நகரமான கப்பர்நகூம், பேதுரு, யாக்கோபு, யோவான் மற்றும் அந்திரேயா ஆகியோரின் இல்லமாக இருந்தது, ஏனெனில் அது கலிலேயா கடலின் வடக்கு கரையில் இருந்தது. கலிலேயா கடல் உண்மையில் ஒரு கடல் அல்ல; அது ஒரு நன்னீர் ஏரி. இயேசுவின் பணி மையம் போல கப்பர்நாகும் விளங்கியது.இயே சுவின் ஊழியத்தின் பெரும்பகுதி கலிலேயா பகுதியை மையமாகக் கொண்டது.அவருடைய வார்த்தை க்கு அதிகாரம்இருந்ததால்,மக்கள் அவருடைய போதனையைக் கண்டு வியந்தனர்.அன்றைய ஆசிரியர்கள் பாரம்பரியத்தின் அடிப்படையில் கற்பித்தார்கள். வேறொருவரின் போதனைகளை
போதித்தனர்.
இயேசு வேறு விதமாக பேசினார். அதிகாரத்துடன் பேசினார்.அவரது வார்த்தைகள்ஆட்சிசெய்தன.அவ  ருடைய வார்த்தைகளில் தாக்க மும் சக்தியும் இருந்தது. " கர்த்தர்
பேய்க்கு கட்டளையிட்டார், பேய் கள்  கீழ்ப்படிந்திருந்தன. ஆண்டவர், மக்கள் மீது அன்பு
செலுத்தினார். அவர் மெசியா.
அற்புதங்களை ஆண்டவரின்
அடையாளங்களாக பன்முக தன்மையுடன் செய்து காட்
டினார். அவர் அதிகாரத்துடன்
போதித்தார், பேய்கள் மீதும், நோ
ய்கள் மீதும் அதிகாரம் செலுத்தி னார்.ஆனால், ஆண்டவர் மனித 
நேய ஆசிரியராக போதித்தார்.
கருப்பினர்களின் விடுதலைக் காக பாடுபட்ட மார்டின் லூத்தர்
கிங் ஜூனியர் கூறுகிறார், இருளை இருள் விரட்ட முடியாது.
ஒளி ஒன்றே இருளை நீக்கும்.
வெறுப்பை வெறுப்பு விரட்ட 
முடியாது, அன்பு ஒன்றே வெறுப்
பை மாற்றும்.அறியாமையை
அறியாமை விரட்டமுடியாது. அறிவு ஒன்றே விரட்டும்.என்றார்
அந்த அறிவை தரும் ஆசான் நம்
ஆண்டவர். நல்வழிப்படுத்தும்,
அவரின் போதனை இம்மைக்கும்
மறுமைக்கும் உரியது. அவரே,
" நீங்கள் என்னைப் "போதகர்" என்றும் "ஆண்டவர்" என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ் வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர் தான்.(யோவான் நற்செய்தி 13:13)
ஆனால், அவரின் போதகப்பணி
விண்ணரசிற்கு தகுதிபடுத்திடும்
தூய பணியாகும். அவர் இருளை
நீக்கி நீங்கா வெளிச்சம் வீசும்
பேராசான். அவர் ஒளி வீசும்
 ஆசான். நம்மை உலகத்தின்
ஒளியா இருக்க அழைக்கிறார்.
நாமும் ஒளிவீசும் ஆசானாக திகழ்
வோம். அவ்வாறு செயல்பட கடவுள் கிருபை செய்வாராக.
ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com. 







 










                                                               






























              



Jesus surrounded by children

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.