நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்(யோவான்-14:18)
கிறித்துவின் அன்பு விசுவாசிகளே! இவ்வுலகில்
மிக கொடுமையான சூழ்நிலை
என்ன வென்றால்." அனாதையாக"
இருப்பது. திக்கற்றவர்களுக்கு
தெய்வமே துனை என்பார்கள்.
அந்த தெய்வம் யார் என்றால்
நம் ஆண்டவர் இயேசு கிறித்து.
உன் தாயும், தகப்பனும் கைவிட் டாலும் நான் உன்னை கைவிடேன்
என்றவர். நம்மை காக்கும் கரங்
களால் காத்து வழி நடத்துவார்.
லூக்கா 13 : 10 – 13 “ஒரு ஓய்வு நாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கே இருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக் கூடாத கூனியாயிருந்தாள். இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: உன் பலவீனத்தி னின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.”
அன்பானவர்களே! அவளுக்கு
திடிரென வியாதி வந்து கூன்
விழுந்தவளாய், பூமியை மட்டும்
பார்த்து நடந்து வாழ்ந்து வந்தாள்
ஆனால் அவள் எனக்கு கூன்
விழுந்துவிட்டது நடக்க முடிய
வில்லை என்று வீட்டிலேயே
அமர்ந்திருக்கவில்லை. ஓய்வு
நாளை பரிசுத்தமாய் ஆராதிப் பாயாக என்ற கடவுளின் கட்டளை
படி ஆலயம் செல்கிறாள், ஆண்ட
வர் அவளை பார்க்கிறாள், அவள்
மீது அன்பு கூர்ந்து அவளை குணப்படுத்தினார். நிமிர்ந்து
ஆண்டவரை பார்கிறாள், மக்களை
பார்க்கிறாள், வானத்தை பார்க்கி
றாள். அற்புத ஆண்டவர், கஸ்டப் படுவோரின், கண்ணீர் யாவையும் துடைப்பார்.
பெரும்பாடுள்ள ஸ்திரீ:
மாற்கு 5 : 25,26 “அப்பொழுது 12 வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அனேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளை எல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குண மடையாமல் அதிக வருத்தப்படு கிற பொழுது,”
இந்த நிகழ்ச்சி பாலஸ்தீனாவி லுள்ள கப்பர்நகூமில் நடந்த நிகழ்ச்சி. இயேசு யவீரு என்ற ஜெப ஆலயத்தலைவனின் மகள் மரணத் தருவாயில் இருப்பதால் அவளைக் குணமாக்கச் சென்று கொண்டிருக்கும் போது, திரளான ஜனங்கள் அவரை நெருக்கிக் கொண்டு சென்று கொண்டிருந் தனர். அப்போது ஒரு பெரும்பாடு ள்ள ஸ்திரீ இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு இயேசுவினிட த்தில் வந்தாள்.பன்னிரண்டு வருஷங்களாக அந்த வியாதி யோடு மிகவும் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருந்தவள். தன் செல்வத்தையெல்லாம் செலவழித்தும், அனேக வைத்தி யர்களைப் பார்த்தும், அந்த வியாதியிலிருந்து அவளுக்கு சுகம் கிடைக்கவில்லை. பெரும்பாடுள்ள உதிரப் போக்கின் போது அவள் யாரையாவது தொட்டால் தீட்டாகிவிடும் (லேவியராகமம் 15 : 25 – 28). இவ்வாறிருக்கும்போது அவள் தேவாலயத்துக்கோ, ஜெப ஆலயத்திற்கோ செல்லக் கூடாது. எந்த ஆசரிப்பிலும், திருவிழாக்க ளிலும் கலந்து கொள்ளக்கூடாது. வியாதியைவிட இவ்விதமான ஒதுக்கப்பட்ட நிலைமை, தனிமை அவளை வருத்தியிருக்கக் கூடும். அப்படிப்பட்டவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். ஆனால் இந்தப் பெண் தன்னுடைய நோயின் கொடூரத்தினால் வெளியே வந்தாள். யாருமறியாமல் இயேசுவின் அருகில் சென்று, இயேசுவுக்குத் தெரியாதபடி, இயேசுவிடம் எதுவும் கூறாமல் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்பதால் அதை தைரியத்தோடு பயன்படுத்தி னாள் . அவிசுவாசம் தடைகளைப் பார்க்கும். விசுவாசமோ வாய்ப் புகளைப் பார்க்கும். இயேசுவை விசுவாசத்தால் தடைகள் கண் ணுக்குத் தெரியாது. இயேசுவின் வஸ்திரத்தில் வல்லமையும் அபிஷேகமும் இருந்தது. வியாதி யஸ்தர்கள் இயேசுவைத் தொடு வதைக் குறித்துப் பல இடங்களில் பார்க்கிறோம். அதேபோல் இயேசு வியாதியஸ்தர்களைத் தொடு வதைக் குறித்தும் வேதத்தில் பல இடங்களில் பார்க்கிறோம், மத்தேயு 14 : 36 லும், மாற்கு 6 : 56 லும் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்ட யாவரும் சுகம் பெற்றனர். இயேசுவைக் கூட்டத்தில் அநேகர் நெருக்கினார்கள். அவர்களுக்கு நடக்காத அற்புதம், இந்தப் பெண்ணுக்கு நடந்தது. இயேசுவை தொட்டவர்களும்
சுகம் பெற்றனர். இயேசுவால்
தொடப்பட்டவர்களும் சுகம்
பெற்றனர்.
Comments
Post a Comment