பெண்கள் ஞாயிறு.:பெண்கள்: கடவுளின் விடுதலை செயலில் பங்காளர். (156)Women: Partners in God's Liberative Act விடுதலை பயணம் 1:15-22. திருப்பாடல்: 148. உரோமையர்: 16:1-16. மாற்கு 15:37-41.
முன்னுரை: கிறித்துவின் அன்பர்
களே! அனைவருக்கும் இயேசு கிறித்துவின் நாமத்தில் வாழ்த்து க்கள்.இந்த வாரம் பெண்கள் ஞாயிறு நம் திருச்சபைகள் கொண்டாடுகின்றன. அதன்தலை ப்பாக பெண்கள்:" கடவுளின் விடுதலை செயலில் பங்காளர். " என்றதலைப்பைதியானிப்போம். கடவுள் என்றுமே ஒரு விடுதலை
யாளர். The Lord is a Liberator for
ever. சங்கீதக்காரன், ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப் போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 146:7. என தன் அனு
பவத்திலிருந்து வெளிப்படுத்து கிறார். விடுதலை ஒரு தொடர்
போராட்ட நிகழ்வாகும். அடிமைத்
தனம் இருக்கும் வரை விடுதலை
யும் இருக்கும்.தனிமனிதர்கள்
பலவற்றில் அடிமையாக இருக்கி றார்கள்.தனிமனித அடிமைத்தன மே பாவத்தை சேர்க்கிறது.அடிமை சங்களியை அறத்தெரிவதே விடுதலை. கடவுள் படைப்பில் மட்டுமே தன்னிச்சையாக செயல் பட்டார். ஆனால், விடுதலை
போராட்டங்களை மனிதர்களின்
உதவியுடன்தான் செயல்பட்டார்.
(உ.ம் இஸ்ரவேலரை எகிப்திலிரு ந்து மோசஸ், ஆரோன் தலைமை மையில் நடத்தியது).
1.இனம் காத்த விடுதலையாள ர்கள். The Liberators of a Tribe.
விடுதலை பயணம் Exodus1:15-22.
அன்பின் இறைமக்களே! வேதத் தில் முதல் பெண்விடுதலையாளர் கள் யார் என்றாள் அது முதலாவ தாக, பிறக்கும் போதே அனைத்து ஆண் எபிரேய குழந்தைகளையும் கொல்லும் பார்வோனின்கட்டளை யை சாமர்த்தியமாக மீறும் மருத்துவச்சிகள்(Midwives)இவர்கள் பெயர்கள் ஒருவரின் பெயர் ஷிப்ரா [அழகு, பிரகாசம்] மற்ற வரின் பெயர் புவா [அற்புதமான, ஒளி]" கடவுள் தனக்கு பயந்த இந்த இரண்டு பெண்களின் பெயர்களை நித்திய பதிவேட்டில் வைப்பதில் கவனமாக இருக் கிறார். இவர்கள்தான் எபிரேய இனத்தையே காக்கும் விடுதலை யாளர்கள். இம்மருத்துவப் பெண் கள் கடவுளுக்கு அஞ்சியிருந்த தால், அவர் அவர்கள் குடும்பங்க ளைத் தழைக்கச் செய்தார். (விடுதலைப் பயணம் 1:21)இந்த இரண்டு எபிரேய மருத் துவச்சி களும் விரோதமான சூழலில் வேலை செய்து கொண்டிருந்த னர். பார்வோன் இஸ்ரவேல் மக்களை அழிப்பதற்காக இரண்டு மடங்கு திட்டத்தை செயல்படுத் தினான்: சிறைவாசம் மற்றும் அழி ப்பு. சிறைவாசம்: அவர் "கடின மான அடிமைத்தனத்தால் அவர் களின் வாழ்க்கையை கசப்பா னதாக்கினார்" அழித்தல்: அந்த சிறை வாசத்திற்கு கூடுதலாக அவர் சிசுக்கொலை மூலம் பிறப்பு விகிதத்தை குறைக்க முயன்றார்; மருத்துவச்சிகளிடம் "நீங்கள் எபி ரேயப் பெண்களுக்குமருத்துவச்சி செய்யும் போது ... அது ஒரு மக னாக இருந்தால், நீங்கள் அவரைக் கொன்றுவிடுவீர்கள், ஆனால்அது ஒரு மகளாக இருந்தால் அவள் வாழ்வாள்" ஆனால் இரண்டு தெய் வீகப் பெண்கள் அந்தத் திட்டத்தை முறியடித்தனர்: "ஆனால் மருத்து வச்சிகள் கடவுளுக்குப் பயந்து, எகிப்தின் ராஜா கட்டளையிட்டபடி செய்யாமல், ஆண் குழந்தைகளை உயிருடன் காப்பாற்றினர்" ராஜாவை மறுப்பதற்கு எவ்வளவு தைரியமாக இருந்தார்கள்! எனவே, எகிப்து அரசனின் பெயர்
வேதத்தில் இடம் பெரவில்லை.
அவர்கள் தன் கட்டளைக்குக் கீழ்ப் படியவில்லை என்பதை அறிந்த அரசன் அவர்களை அழைத்தான். அவருக்குக் கீழ்ப்படிய மறுப்ப தற்கு அவர்களுக்குத் தைரியம் தேவைப்பட்டால், கீழ்ப்படியாமைக் குப் பிறகு அவருக்கு முன்பாக நிற்க அவர்களுக்கு இன்னும் அதிகமாகத் தைரியம் தேவைப் பட்டது. , "நாம் மனிதர்களைக் காட்டிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்" (அப்போஸ்தலர் 5.29)
அவ்வாறே, மூன்று மாத கை குழந்
தையான மோசேவை இனி மறை க்க முடியாது என்பதை உணர்ந்த ஒரு லேவிய தாய், அவனை ஆற் றில் ஒரு கூடையில் வைத்து காப்
பாற்றுகிறாள். பாரோனின் மகள்
மோசே மிதப்பதைக் கண்டு, இரக் கம் கொண்டு, அந்த மக்களின்
விடுதலை தலைவனைவளர்த்துக் கொள்கிறாள்.மிரியம்,மோசஸின் மூத்த சகோதரி, மிரியம் தன் சிறிய சகோதரனை கடுமையாக பாதுகாத்தாள். அவள் ஒரு எளிய, அடிமைப் பெண்ணாக இருந்தா லும், அவள் தைரியமாக பார்வோ னின் மகளை அணுகி, ஆற்றில் மிதக்கும் குழந்தைக்கு உதவ முன்வருகிறாள்: "உனக்காக குழந்தைக்கு பாலூட்ட ஒரு எபி ரேயப் பெண்ணை நான் கொண்டு வருகிறேன்." என்று அவள் மரியம் கொண்டுவருகிறாள் -மோசேவின் சொந்த தாய் யொகோபெத் தையே பாலுட்டி குழந்தையை
வளர்க்க செய்தது ஒரு இனத்தின்
உன்னத விடுதலையை குறிக்கி றது.இந்த மோசஸ்தான் 430 ஆண்டு இஸ்ரவேலரின் எகிப்து அடிமைத்தனத்திலிருந்து விடுத லை தருகிறார்.
1.திருத்தூதர் பவுல் அடிகளாரி ன்திருப்பணியில்பெண்களின்பங்கு: திருத்தூதர் பணிகள் 16:1-16. The Role of Women in St.Paul's Ministry.
கிறித்துவின் அன்பு இறை மக்க ளே! ஆண்டவராகிய இயேசு கிறி
த்துவின் இறை பணியில் இயேசுவின் தாய் மரியாள், முதல்
பெண் சீடரான மகதலேனா மரியா
கிளயோப்பா மரியாள், யோவன் னாள், சலோமி,மற்றும் பலர் ஈடு
பட்டனர். அவ்வாறே, திருத்தூதர்
பவுல் அடிகளாருடன் இறைப் பணி யாற்றிய பெண்கள் பலர்
உள்ளனர். அவர்களில், திருத்தூ தர் பவுளால் அடையாளப்படுத்த
படுபவர்களில் ஒருவர்தான் ஃபோபே (Phoebe), இவர், கொரிந்து துறைமுகமாக இருந்த செங்கிரேயாவிலிருந்து உள்ள தேவாலயத்திலிருந்து வந்தவர்.போபே என்ற பெயர் அப்பொல் லோ என்ற பொய்கடவுளை (pagan god)வணங்கிய பெண்களுக்கு கொடுக்கப்படும் பெயராகும். இதன் பொருள்," பிரகாசமான" என்ற அர்த்தமாகும். ஃபோபே அவர்கள் கிறித்த மதத்திற்கு மாறுவதற்கு இருந்த பெயராகும்.
சில நேரங்களில் இவள் ஒரு டீக்க னஸ் என்று அழைக்கப் படுகிறார்.
இவரை, ரோமில் உள்ள திருச் சபையினருக்கு அறிமுக கடிதமாக
இவரைப்பற்றி எழுதுகிறார்.நான் உங்களை பாராட்டுகிறேன். தேவ னுடைய ஜனங்கள் ஒருவரை யொருவர் வரவேற்கும் விதத்தில் நீங்கள் அவளை கர்த்தருக்குள் வரவேற்க வேண்டும் என்கிறார்.
இதன் மூலம் கடவுளின் ஊழியர் களை மதிக்கவும், பராமரிக்கவும்
நாம் கடமைப்பட்டுள்ளோம் என்ப
தை பவுல் அடிகளார் நினைவுப்
படுத்துகிறார்.எங்கள் சகோதரி ஃபோபியை நான் உங்களுக்குப் பாராட்டுகிறேன், எனவே நீங்கள் அவளைக் கர்த்தருக்குள் பரிசுத்த வான்களுக்குப் பொருத்தமாக வரவேற்கவும், உங்களிடமிருந்து அவள் எதைக் கேட்டாலும் அவளு க்கு உதவவும். பலருக்கும் எனக் கும் நன்மை செய்பவள்.
ஆதி கிறிஸ்தவ திருச்சபையில் பெண்களின் பணிக்கு எல்லை யற்ற மதிப்பு இருந்திருக்க ஆரம் பகால திருச்சபையின் நாட்களில் இது சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.பவுல் ஃபோபை "நம் முடைய சகோதரி" என்று அடை யாளப்படுத்துகிறார், அவள் பரந்த கிறிஸ்தவ சமூகத்தின் ஒரு பகுதி யாக இருப்பதைக் குறிக்கிறது.
இத்தகைய பெண் இறைபணி யாளர்கள் முழுக்க முழுக்க ஞான ஸ்நானம், அது போல், நோயாளி கள் வருகை, ஏழைகளுக்கு உணவு விநியோகம் போன்ற பொதுப் பணிகளில் பெண்கள் திருச்சபை வாழ்க்கை மற்றும் வேலையில் பெரும் பங்கு வகித் திருந்தவர்கள். ஆனால், ஒரு தேவாலயம் எப்போதுமே அது இருக்க வேண்டிய வரவேற்பு நிறுவனமாக இல்லை. ஆலயங்
கள் ஆண்டவரின் வார்த்தைபடி,
அனைவருக்குமான ஜெப வீடா கும்.அடுத்ததாக, கிறிஸ்து இயேசு வுக்குள் என் உடன் பணிபுரிபவர் களான பிரிஸ்காவையும் அக்கி ல்லாவையும் வாழ்த்துங்கள்
இவர்கள்,புதிய ஏற்பாட்டில் குறிக் கப்படும் முதலாம் நூற்றாண்டில் மறைபணியாற்றிய தம்பதியரா வர். இவர்கள் மரபுப்படி எழுபது சீடர்களில் பட்டியலிடப்படுகின் றனர். விவிலியத்தில் திருத்தூதர் பவுல் இவர்களை, கிறிஸ்து இயேசுவுக்காக தம்மோடு சேர்ந்து உழைக்கின்றவர்கள் என்று கூறுகின்றார். இவர்கள் ஆதி கிறித்தவர்களுக்கு ஊக்கமூட்டி கிறித்தவ நெறியில் முனைப்புடன் இருக்க தூண்டினர். பவுல் இவர் களை தமது கடிதங்களில் மிகவும் புகழ்ந்துள்ளார். (உரோமை. 16:3-4) பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அப்பொல்லோவுக்கு கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக் கியதாக திருத் தூதர் பணிகளில் 18:26,கூறப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டின் நான்கு புத்தகங்களில் இவர்கள் ஆறு முறை குறிப்பிடப்ப
டுகின்றனர். ப்ரிஸ்கா மற்றும் அகிலாவின் வீடு கிறிஸ்தவ மக்கள் குழுவிற்கு கூடும் இடமாக இருந்தது(PrayerHouse) அவர்களு டைய வீடு கிறிஸ்தவ கூட்டுறவு மற்றும் சேவையின் மையமாக இருப்பதைக் காண்கிறோம். இவர்கள் ஆதி கிறித்தவர்களுக்கு ஊக்கமூட்டி கிறித்தவ நெறியில் முனைப்புடன் இருக்க தூண்டினர். பவுல் இவர்களை தமது கடிதங்க ளில் மிகவும் புகழ்ந்துள்ளார். இவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார் கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கி றேன். நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத் துமே நன்றி செலுத்தக் கடமைப்ப ட்டிருக்கின்றன. (உரோமையர் 16:4) இவர்களின் வீடு, தேவால யமாக செயல்பட்டது.
தேவாலயக் கட்டிடம் போன்ற ஏதேனும் ஒன்று இருந்த நாட்களு க்கு முன்பே குடும்ப வழிபாடு இருந்தது; ஒவ்வொரு வீடும் ஒரு தேவாலயமாக இருக்க வேண்டும்,
என்பதே, ஆண்டவரின் விருப்பம்.
அடுத்தாக, கிறிஸ்துவுக்கு முதன் முதலாக மதம் மாறிய ஆசியன், என் அன்பிற்குரிய எபேனெட் டஸுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும். (ஆசியா என்பது இன்று நாம் அறிந்த கண்டத்தை குறிக்கவில்லை. இது ஆசியா மைனரின் ரோமானிய மாகாணத் தைக் குறிக்கிறது, இது நவீன துருக்கியாகும்)
கிறித்துவின் அன்பர்களே! இந்த 16ம் அத்தியாயத்தில் இருபத்தி நான்கு தனிப்பட்ட பெயர்கள் உள்ளன.இருபத்து நான்கு பேரில் ஆறு பேர் பெண்கள். இது நினைவில் கொள்ளத்தக்கது, ஏனென்றால் தேவாலயத்தில் பெண்கள் செய்து வரும் பணி களைப் பற்றிய அவரது பாராட்டு பவுல் அடிகளாரின் வார்த்தை களில் பிரகாசிக்கிறது. உங்களுக்காக பாடுபட்டு உழை த்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள். மிக முக்கியமாக பவுல் அடிகளாரின் உறவினர்க ளும் உடன் கைதிகளுமான (co- prisoners (அந்திரோனிக்கு, யூனியா ஆகியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்; திருத்தூதர்களுள் இவர்கள் பெயர் பெற்றவர்கள்; இவர்கள் எனக்கு முன் கிறிஸ்த வர்கள் ஆனார்கள். இவர்களை சக அப்போஸ்தலர்கள் என்று பவுல் அழைக்கிறார். இம் மடல் ரோம திருச்சபையருக்கு அவரு க்கு உதவி செய்தவர்களைநன்றி யுடன் உபசரிக்க வேண்டி எழுது கிறார். ஆண்டவருக்குதிருப்பணி யாற்றும் ஒவ்வொருவரையும் கனப்படுத்தப்பட வேண்டும் என்தே அவரின் நோக்கமாகும்.
2. புரட்சி பெண்களின் புனித யாத்திரை, கலிலேயா முதல் கல்வாரிவரை. The pilgrimage of
the Revolutionary women from Galilee
to Calvary. Mark:15:37-41.
கிறித்துவுக்கு பிரியமானவர்களே.
ஆண்டவரின் சிலுவை பயணத் தில், தன்னால் தேர்வு செய்யப் பட்டு, பயிற்சிக்கப்பட்ட சீடர்களில்
யோவானைத் தவிற மற்ற சீடர்கள்
உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்து
விட்டனர். இது இயற்கையானது
பயமும், மரணமும் மனிதர்கள்
விருப்பமல்ல. ஆனால், ஆண்டவ ருக்கு தன் உடமைகளை கொண் டு ஊழியம் செய்த பரட்சி பெண்
கள் கூட்டம் கலிலேயா தொடங்கி
எருசலேம்வரை வந்து நடந்த
நிகழ்வுகளை பார்த்தனர், இறுதி யில் சிலுவை பயணத்தில் ஆண்ட
வரோடு கனத்த இதயத்தோடும், கண்ணீரோடும்பயணித்தவர்கள்.
இவர்கள் மகதலேன மரியாள்,
ஆண்டவரின் தாய் மரியாள், சின்ன யாக்கோபு மற்றும் யோசே
வின் தாய் மரியா, , கிளயோப்பா மரியாள், யோவன்னா, சூசன்னா, செபுதேயுவின் மகன்களின் தாய் (சலோமி) இவர்களின் மகன்கள்
தான் யாக்கோபு, நற்செய்தியாளர்
யோவான். ஒருமுறை ஆண்டவரி டம் தன் மகன்களுக்காக வலபக்க மும், இடபக்கமும் இருக்கை கேட்ட
வர். அதில் தவறு இல்லை. எந்த
தாயும் தன் பிள்ளைகளின் எதிர் காலம் நல்லா இருக்க வேண்டும்
என்று விரும்புவார்கள்.
இவர்கள் இறுதியில் கல்லறையி
லும், உயிர்த்தெழுதலிலும் பங்கு
பெற்றவர்கள். எனவே, உயிர்த்த
கிறித்துவின் உன்னத காட்சியை
முதன் முதலில் கண்டுகளித்தனர், சாட்சி பகிர்ந்தனர்.
அன்பர்களே! ஆண்டவரின் நாமம்
எபிரேய மொழியில் "ஏசுவா" (Yesh
ua) என்றும் இது ஆங்கிலத்தில் ,"யோசுவா "(Joshua) என்றும்
அழைக்கப்பட்டார். எகோசுவா
என்ற எபிரேய பொருள்,"கடவுள்
இரட்சிக்கிறார்" ( "Jesus Saves" or
God is Salvation") சேவியர் என்ற
வார்த்தை ஆண்டவரை மட்டுமே
குறிக்கும். இதனை அடிப்படை யாக கொண்டு, ஆண்டவர் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத் துக்கு வந்தார். தமது வழக்கத்தி ன்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று ஏசாயா தீர்கரின் 61:1,2 வாசிக்க எழுந்தார்.
"ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வைய ற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்
ஆண்டவர் அருள்தரும் ஆண்டி னை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். "
(லூக்கா நற்செய்தி 4:16,18,19)இது
ஆண்டவரின் விடுதலை இறையி யலை (Liberation Theology) அடிப்படையாக கொண்டு, அவர்
விடுதலையாளராக ("God is the
Liberator " ) நாம் காண்கிறோம்.
விடுதலை ஆண்டவர் நம்மை
தீயவற்றிலிருந்து விடுவித்து
காப்பாராக! ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
Comments
Post a Comment