என் அமைதியை நான் உமக்கு அளிக்கிறேன்.(157) My Peace I give to you . செகரியா 8:12-19 திருப் பாடல்: 119: 161-176. உரோமையா 5:1-5. யோவான் 16: 16:33
முன்னுரை:
கிறித்துவிக்குபிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் இறைமைந்தன் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இவ்வார சிந்தனை தலைப்பு,"என் அமைதியை நான் உமக்கு அளிக்கிறேன்".( "My Peace I give to you") இவ்வார்த்தை ஆண்ட வரின் இறுதிவிடை பெறும் (farewell) வார்த்தையாகும். ஆண்டவர் கலங்கிய இருதயத் துடன் இருந்த தன் சீடர்களுக்கு தன் இதயப் பரிசாக கொடுத்தது அவரின் " அமைதி" .
இது ஆண்டவர் அருளிய "ஆன்மீக அமைதியாகும்" ,(spiritual Peace). இதை யாரும் தரமுடியாது இந்த உலகமும் தரமுடியாது. அமைதி' என்ற சொல்,கிரேக்க வார்த்தையான "peace" என்பது 'eirene" என்ற கிரேக்க அமைதி கடவுளின் பெய ராகும். தமிழில்"சமாதானம்" என்ற அமைதி. நம் வேதத்தில், அமைதி என்ற வார்த்தை, "சாலோம்" (shalom) என குறிப்பிடபடுகின்ற, கடவுள் மனிதர்களுக்கு வழங் கிய,"உடன் படிக்கை (covenant) வார்த்தையாகும் . நம் திருவிவலி யத்தில் 400 வசனங்களில், 429 முறை வருகிறது. நம் வேதத்தில், முதன்முலாக ஆதியாகமம் (தொன்மை நூல்) "15:15ல், ஆண்டவர் ஆபிராம்க்கு
கொடுத்த வாக்காகும்." நீ மிகவும் முதிர்ந்த வயதில் அமைதியாக உன் மூதா தையரிடம் சென்றபின், நல்லடக்கம் செய்யப்படுவாய். "
(தொடக்கநூல் 15:15) நம்வ ஆண்டவராகிய இயேசு கிறித்து வின் மற்றொரு பெயர்," சமாதான பிரபுஎன்கிற," அமைதியின் அரசர்" (ஏசாயா 9:6) Prince of peace என அழைக்கப்படுகிறார். உலகில் தோன்றிய எந்த அரசருக்கும் இப்பெயர் வழங்கப்படவில்லை.
ஏனேனில், அவர்களால் எந்த அமைதியையும் கொடு த்ததில்லை.கொடுக்கவும் தகுதி
யில்லை.
1.வாய்மையும், நல்லுறவும் அமைதி தரும். Truth and rapport shall give Peace. செக்கரியா 8:12-19. அன்பிற்கினிய இயேசுவின்
இறைமக்களே: சகரியா தீர்க்கர் உண்மையும், நல்லுறவும் அமைதிக்கான இரு வழிகள் என கூறுகிறார் . சகரியா என்றால்," கடவுள் புகழ் பெற்றவர்" என்பதா கும்.இவர் காலம், கிமு 520-518; வரை.முக்கிய வசனம், Zec 14:9 .இயேசு சிலுவையில் அறையப் படுவதைப் பற்றிய குறிப்பிட்ட வாக்குறுதிகளை சகரியா கொண் டுள்ளது ( Zec 9:9,11:12 , 13 ; 13:6 , 7) வேறு எந்த தீர்க்கரும் இயேசுவின் சிலுவை பாடுகளை அதிகமாக கூறவில்லை. அவர் ஆண்டவரா கியஇயேசுவை,"அமைதியின் விதை " என உருவகப் படுத்து கிறார்.(உருவகம் என்பது, ஆங்கிலத்தில் metaphor, which is a figure of speech that compares two different things by directly stating that one thing is the other.) இவர், எருசலேமின் மீட்பையும், கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு கொடுக்கிறார். திரு வெளிப்பாட் டில், திருதூதர் யோவான் அவர் கள், செக்கரியா தீர்க்கரின் வார்த் தையை அதிகம் பயன் படுத்து கிறார். இஸ்ரவேல் மக்களின் விசுவாசத்தை பலப்படுத்துவதி லும், ஜனங்களை மனம் திரும்ப செய்வதிலும், அவர்களுக்குரிய எதிர்கால ஆசீர்வாதம் காத்திருக் கிறது என்ற நிச்சயத்தை அளிப் பதிலும் சகரியா உருதியளித்தார். இந்த 8 ம் அதிகாரத்தில், யூதா மற்றும் இஸ்ரயேல் குடும்பத்தார் களுக்கு ஆருதல் தரும் செய்தி யை தருகிறார். அவர்கள் காலம் காலமாக வேற்றினத்தாரிடையே ஒரு சாபச் சொல்லாய் இருந்தார் கள்; அவர்களை, நான் உன்னை இரட்சிப்பேன், நீங்கள் ஆசீர்வாத மாக இருப்பீர்கள்: பயப்படாதே, ஆனால் உங்கள் கைகள் பலமாக இருக்கட்டும்.இப்பொழுதே நான் உங்களை மீட்டருள்வேன் என் கிறார்.வரலாற்றில் மட்டுமல்ல, யூதா என்ற இரண்டு கோத்திரங்க ளுக்கு மாறாக, பத்து கோத்திரங் களும் இஸ்ரேல் என்ற பெயரைக் கொண்டிருந்தன. ஆனால் தீர்க் கதரிசிகளில்; ஓசியா சொல்வது போல், "இனி இஸ்ரவேல் வீட்டாரு க்கு நான் இரக்கம் காட்ட மாட் டேன், யூதாவின் வீட்டாருக்கு இரக்கம் காட்டுவேன்" (ஓசியா 1:6-7) . இங்கே அவர் இரண்டையும் இணைக்கிறார்; இருவரும், அவர் கள் சிறைபிடிக்கப்பட்ட காலத்தில், ஒரு சாபமாகஇருந்தனர், அவர் களை,ஜாதிகளுக்குள்ளே,ஒவ்வொருவருக்கும் பெயரிட்டு, நான் உங்களை இரட்சிப்பேன்." என்று உறுதியளிக்கிறார்.இந்தஉறுதியளிப்பு, இஸ்ரவேலின் சிறையிரு ப்புகாலத்தில், செக்கரியா, ஆறு தல் தரும் வார்த்தை, இந்நாள் களில் மீண்டும் எருசலேமுக்கும் யூதாவின் குடும்பத்தாருக்கும் நன்மை செய்யத் திட்டமிட்டுள் ளேன்; ஆகையால் அஞ்சாதீர்கள். என்று கூறி மிக முக்கிய கட்டளையை தருகிறார், " நீங்கள் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய வை இவையே; ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்; உங்கள் நகர வாயில்களில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு நீதியாகவும் நல்லுறவுக்கு வழிகோலுவதாயும் இருக்கட் டும்; என்கிறார். உண்மை, நீதியான தீர்ப்பு, நல்லுறவு இம்மூன்றுமே அமைதியின் வழியாகும்.
2 நம் பற்றுறுதியே கடவுள் மீது நல்லுறவு கொள்ளும்.Our trust in God will Get along well. (உரோமையர் 5:1-5.) அன்பிற்கினியே, இறை மக்களே! நாம் கடவுள் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத விசுவாசம்தான் ஆண்டவர் மீது நாம் கொண் டுள்ள நல்லுறவின் அடையாளமா கும். "நம்பிக் கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயி ருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும்.
(எபிரேயர் 11:6) இந்த நல்லுறவே, நமக்கு என்றும் அமைதி தரும். ஆண்டவர் மீது கொள்ளும் நல்லுறவு சக மனிதர்கள் மீது கொள்வது தான் மிக மேன்மை யானது.மனிதர்கள் மீது நல்லுறவு கொள்ளாமல் அமைதியை பெற முடியாது. இது குடும்பமாக இருக்கட்டும், வேலை செய்யும் இடமாக இருக்கட் டும் நல்லுறவே அமைதிதரும்."அமைதி ஏற்படுத்து வோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். (மத்தேயு நற்செய் தி 5:9) கிறித்தவர்களின் அடையாளமே அமைதியை நிலை நாட்டுபவர் மற்றவர்களின் அமை திக்கு இடறலாக இருப்போர் கிறித்தவராகஇருக்கும் தகுதியை இழக்கின்றனர். நாம் கடவுளோடு சமாதானமாக இருக்கிறோம் என்றால், இந்த அமைதியும், கிரு பைக்கான அணுகலும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக வந்தி ருக்கிறது. மேலும், பரிசுத்த ஆவியின் மூலம் கடவுளின் அன்பு நம் இதயங்களில் ஊற்றப்பட்டு ள்ளது . குமாரன் நமக்கு கடவு ளின் மகிமையை தருகிறார், ஆனால், ஆவியானவரோ கடவு ளின் அன்பை நம்மீது ஊற்று கிறார்.ஆக,கடவுளின் மகிமையும், தூய ஆவியின் அன்பும், அமைதி யின் வாசல்கள்.
The grace and love are the Gateway to Peace.ஏசாயா தீர்க்கர், "நேர்மை யால் வரும் பயன் நல்வாழ்வு; நீதியால் விளைவன என்று முள அமைதியும் நம்பிக்கையும். (எசாயா 32:17) நேர்மை நல்வாழ்வு தரும், நீதியால் வருவது அமை தியும், நம்பிக்கையும். இவைகளே
கடவுளின் மகிமையைப் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையில் நாங் கள் பெருமை பாராட்டுகிறோம்” என்று பவுல் கூறுகிறார். கடவுளின் ஆவி நம் இதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது என்று பவுல் கூறுகிறார். எனவே, கிறித்து நிமித்தம் நம் அனைத்து துன்பங்களும் தற்காலிகமானதே, அவரின் சமாதானத்தின் ஆவி நம் உள்ளங்களில் ஊற்றப்பட்டுள்ள
தால், அமைதி நம் வாழ்வில்
நீடித்து நிலைத்து நிற்க வாழ்த் துகிறேன்.
3.என் அமைதியை நான் உமக்கு அளிக்கிறேன்.My Peace I give unto you.யோவான் 16: 16:33
கிறித்துவிற்கு பிரியமான வர்களே!என் அமைதியை நான் உமக்கு அளிக்கிறேன் என்ற உத்திரவாதத்தை ஆண்டவர் தன் சீடர்களுக்கு பிரியா விடை அருளுரையாககொடுத்தார். ( Farewell) அவர்களுக்கு மட்டுமே அல்ல. அவரை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் அளிக்கப்படும் ஒரு அன்பின் பரிசாகும்.இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்க ளிடம் திரும்பி வருவேன்’என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.இயேசு தம்மோடு பந்தியமர்ந்திருக்கின்ற தம் சீடர்களுக்கு அமைதியை வாக் களிக்கிறார். வழக்கமாகக் கூறப் படுகிற வாழ்த்துச் சொல் ''அமைதி!'' என்பதாகும். இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து தம் சீடர்களுக்குத் தோன்றிய போதும் ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார். இவ்வாறு இயேசு வாக்களிக் கின்ற அமைதி உலகம் தருகின்ற அமைதி அல்ல. அதாவது, கடவு ளிடமிருந்து வருகின்ற அமைதி நம்மைக்கடவுளோடு ஒன்றிணை க்கின்ற சக்தி கொண்டது. கடவுளே நம் குற்றங்களை மன்னி த்து நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்பதால் நாம் கடவுளின் அமை தியில் பங்கேற்கிறோம். இந்த அமைதியை உலகமோ உலகத் திலுள்ள எந்த சக்தியோ நமக்குத் தர இயலாது. எனவே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வின் மூலம் அவருடன் சமாதா னத்தை அனுபவிப்போம். அவர் மூலமாக, விசுவாசத்தால், நாம் நிற்கும் இந்த கிருபையின் அருளை நாம் பெற்றிருக்கிறோம்; தேவனுடைய மகிமையின்மகிமை யில் நம்பிக்கையில் மேன்மை பாராட்டுவோம். ஏனெனில், தொல்லைகள் மன உறுதியையும், மனவலிமை தன்மையையும் உருவாக்குகிறது என்பதை நாம் அறிவோம். குடும்பங்களிலும் இன்று அமைதியற்ற சூழல். கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்பிள்ளைகளுக்கிடையே அமைதியின்றி வாழும் நிலை காண்கிறோம். பணமோ, பொருள் களோ அமைதியைத்தர இயலாது. நல் உறவுதான் அமைதியைத் தரும். முதலில், இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது, உலகம் தர இயலாத அமைதியை அவர் நமக்குத் தருவார்.மேலும், கடவுளின் அன்பு நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவி யின் மூலம் நம் இதயங்களில் ஊற்றப்பட்டுள்ளது. இயேசு கிறித்து இவ்வுலகில் வருவதற்கு முன், எந்த ஒரு தனி மனிதனும் கடவுளிடம் உண்மையில் நெருங் கி இருக்க முடியாது.கிறித்து ஒருவரே தூரமாய் இருந்தவர் களையும், அன்னியரையும் , தன்னோடு ஒன்றினைத்தார் .அமைதிதேடி அலைமோதி நிலை குலையும் மனித சமுதாயத்திற்கு இயேசு பதிலாக தீர்வாக இருக் கிறார். "என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல"(யோவான் 14:27) இவ்வாறு தன் தெய்வீக அமைதியில் நமக் குப் பங்கு தருகிறார் .எதைப் பற்றியும் கலங்கவோ, மருளவோ அவசியம் இல்லா அமைதியே இந்த இறை அமைதி.
நான் போகிறேன், பின் உங்களி டம் திரும்பி வருவேன்" என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுகின் றார் 'எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்ப ங்களைத் தெரிவியுங்கள். அப் பொழுது,அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசு வோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்"என்றும். மற்றும் அமைதியை அருளும் இறைவன் நம்மோடு இருக்க வேண்டிய வழிமுறைகளையும், இறைத் தன்மையையும் அவர் கற்றுத் தருகின்றார். அவை உண்மை யானவை, கண்ணியமானவை, நேர்மையானவை, தூய்மையான வை விரும்பத்தக்கவை, நற்பண்பு டையவை, போற்றுதற்குரியவை ஆகிய இறைப்பண்புகளை மனத்தில் இருத்தும் போது உண் மையில் அமைதியை அருளும் இறைவன் நம்மோடு இருப்பார் என்று ஆணித்தரமாக எடுத்து ரைக்கின்றார்.(பிலிப்பியர் 4:8) அவ்வாறே, அமைதியை தரும் நம் ஆண்டவர் நம்மை ஆசிர்வதித்து காப்பாராக! ஆமேன்.
Prof.Dr.David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com.
அவருடைய பதினொரு சீடர்களுக்கு அளித்த பிரியாவிடை சொற்பொழிவு என்று அறியப்படுகிறது . [ 1 ]
Comments
Post a Comment