கடவுளின் மாட்சியை பறைசாற்றும் படைப்பு (160)Creation Proclaims Glory of God. நீதி மொழிகள் 8:22-31. திருப் பாடல் 19. திருவெளிப்பாடு 21:1-8. லூக்கா 8:22-25
முன்னுரை:
கிறித்துவின்அன்புஇறைமக்களே!
உங்க அனைவருக்கும் இயேசு
கிறித்துவின் இனிய நாமத்தில்
வாழ்த்துக்கள். கடவுளின் மாட்சி யை பறைசாற்றும் படைப்பு (Creation Proclaims Glory of God.)
என்ற தலைப்பை தியானிப்போம். கடவுள் அனைத்தையும் நேர்த்தி யாக படைத்து மனிதனை தன் சாயலாக படைத்தார். படைப்பனைத்தும் நல்லது என்று கண்டார். ஆனால், "மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.
(தொடக்கநூல் 6:6) இதனால்,
படைப்பை முக்கியமாக நிலத்தில்
வாழ்ந்த மனிதன் முதல் விலங்குகள் வரை அழிக்கிறார்.
இவைகள், ஆண்டவரின் படைப்
பை மகிமை படுத்தவில்லை.No living things on the earth, glorify God.
கடவுளின் படைப்பில், வான மண்
டலங்கள் மட்டுமே அவரை
மகிமை படுத்தின."வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான் வெளி அவர்தம் கைகளின்வேலை ப்பாட்டை விவரிக்கின்றது.
(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:1)" ஏனேனில், "வானங்கள் உமது கரத்தின் வேலை." (எபிரெயர் 1:10) என உறுதி படைத்தார். கடவுளின் மகிமை நம் தடங்களில் நம்மை நிறுத்தும் அழகில் பிரதிபலிக்கிறது. அவரது சக்தி "இயற்கையின்" சக்திகளில் காணப்படுகிறது. காட்டு மலர்கள் நிறைந்த மலை அல்லது புல்வெளியின் மென்மையான மற்றும் உடையக்கூடிய அழகு, அரட்டையடிக்கும் விலங்குகள், சிரிக்கும் நீரோடைகள் மற்றும் பிற அற்புதமான உயிரினங்களின் புரவலன்களில் அவரது மென்மை மட்டுமே வெளிப்படுகிறது.
இயற்கை மற்றும் உயிரினங்
கள் கடவுளின் படைப்பை மகிமை
யுடன் வெளிப்படுத்துகின்றன.
ஆனால், இவைகள் கடவுளை
மகிமைப் படுத்தவில்லை. கடவுளை மகிமை படுத்துவது
மனிதனா? இயற்கையா? என்ற
விவாதத்தில் மனிதனே உன்னத படைப்பாய் கடவுளை மகிமைப் படுத்துகிறான்.அவர் படைப்பில்
மிக சிறந்தது எது என்றால்
மனிதனே. ஏனேனில் கடவுளின்
சாயலில், அவரின் கைவேலை
யால், அவரின் உயிர் மூச்சை
கொடுத்து மனிதனை படைத்தது படைப்புகளிலே சிறந்த படைப் பாகும். It's a Magnun Opus and
God's Masterpiece. மனித படைப்பே
கடவுளின் மாட்சியை பறைசாற்று கிறது.
1.படைப்பிற்கு மூத்தவள் ஞானம். Wisdom is older than creation. நீதி மொழிகள்:8:22-31
அன்பின் இறை மக்களே! நீதி
அரசர் சாலமோன் ஞானத்தை
பெண் பாலில் ஒரு கவிதை வடிவில் குறிப்பிடுகிறார்.
(நீதி மொழிகள் 7:4) ஞானம் தொடக்கங்களின்தொடக்கமாகும். "Wisdom is the beginning of beginnings." ஞானம் என்பது அவர் படைத்த ஒன்றல்ல; அது அவருடைய குணாதிசயத்தி லிருந்து உருவானது.படைப்பிற்கு முன்பே ஞானம் இருந்தது. ஆரம்பத்திலேயே கடவுளுக்கு ஞானம் இருந்தது . அவர் தண்ணீரைப் பிரிப்பதற்கு முன்பு அல்லது விலங்குகள் அல்லது மனிதர்களை உருவாக்குவதற்கு முன்பு ஞானம் அவருடையது என்று அவரது பழைய படைப்பு கள் தெரிவிக்கின்றன. கடவுள் தம்முடைய சாயலில் மனிதர் களைப் படைத்ததால், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்மையில் எது உண்மையானது, எது உண்மையற்றது என்பதை அறிவதற்கு அவர்களுக்குள் ஞானத்தின் விதை இருக்கிறது என்பதை இது வெளிப்படுத்து கிறது. ( தொடக்க நூல் 1:26 ல் "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்").
தொடக்கத்தில், பூவுலகு உண்டா குமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்.
(நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 8:23) என்ற வார்த்தை
ஞானமே படைப்பின் முன்னோடி
மற்றும் மூத்தவள் என குறிப்பி
டுகிறார். ஞானம் என்பது படைப் புக்கு சாட்சியமளிப்பது மட்டு மல்ல; அது படைப்பின் மகிழ்ச்சி.
தூய பவுல் அடிகளார், ஞானம்
என்பது யார் என 1கொரிந்தியர் 1:30ல் விளக்குகிறார்.
" அவரால்தான் நீங்கள் கிறிஸ்து வுடன் இணைக்கப்பட்டிருக்கிறீ
ர்கள். கிறிஸ்துவே கடவுளிடமி ருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக் கித் தூயவராக்கி மீட்கின்றார். "
நம் ஆண்டவர் படைப்பில் இருந்
தார். திருதூதர் யோவான்,தன்
நற்செய்தியில் ஆண்டவர்;
"தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத் தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்த ருளும். (யோவான் நற்செய்தி 17:5) என இவ்வுலகம் படைப்பத
ற்கு முன்பாக கடவுள் தன் குமா
ரனை மகிமைப்படுத்தினார்.
ஆண்டவரே, ஞானம். படைப்பிற்கு
முன்னானது.
2.படைப்பனைத்தையும்புதிதாக்கும் ஆண்டவர்.Lord who renews creation. திருவெளிப்பாடு.21:1-8.
அன்பின் இறை மக்களே! ஆண்
டவர் ஏன் படைப்பனைத்தையும்
புதிதாக்க வேண்டும். படைப்ப னைத்தும் பாவக்கரையில் மூழ்கி
யிருப்பதால் புதிதாக்குவது மிக
அவசியமாகிறது.மேலும், ஏசாயா 65:17 ல் கடவுள் ஒரு புதிய வானத் தையும் பூமியையும் படைப்பார் என்று தீர்க்கதரிசனமாக கூறி னார். ஆண்டவராகிய இயேசு
கிறித்து, இரண்டு இடங்களில்
மத்தேயு 5:18, 24:35ல் இந்த "வானமும் பூமியும் ஒழிந்துவிடும்"
என குறிப்பிடுகிறார்.
இதற்கு காரணமானவர்கள் மனி
தர்களே. கடவுள் படைத்த இவ்
வுலகை பாவத்திலும், இயற்கை
வளங்களை அழிப்பதும், மாசுப்பட
வைப்பதும், தொழிற்சாலைகளின்
நச்சுப் புகையும், கழிவுகளை
கண்ட இடங்களில் கொட்டுவதும்,
இந்த உலகமும், விண்ணகமும்,
மண்ணகமும் மாசு அடைந்து
விட்டன. இதனால் பெருகி வரும்
நோய்களும் மனித வாழ்விற்கு
தகுதியற்றதாய் இருப்பதால்
ஆண்டவர் இவ்வுலகிற்கு மாற்றா
க " புதியதொரு விண்ணகத்தை யும் புதியதொரு மண்ணகத்தை யும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லா மற் போயிற்று.
(திருவெளிப்பாடு 21:1)இந்த
புதிய வானமும், புதிய பூமியும் ஆண்டவரின் வருகையை வெளிப்படுத்துகிறது.திருதூதர் பேதுரு அவர்கள்," அவர் வாக்க ளித்தபடியே நீதி குடிகொண்டிரு க்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம். (2 பேதுரு 3:13)
அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிரு ந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமக ளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. (திருவெளிப்பாடு 21:2)
கடவுளும் அவருடைய மக்களும் வாழும் இந்த மகிமையான வாசஸ்தலம் புனித நகரமாக வர்ணிக்கப்படுவது.
இங்கே, புதிய ஜெருசலேமில் , நமக்கு முற்றிலும் தனித்துவமான ஒன்று உள்ளது: பாவமற்ற, தூய்மையான, நீதியின் சமூகம், ஒரு புனித நகரமாகும்.
புதிய எருசலேம் யாருக்காக?
1. இந்த புதிய எருசலேம், ஆண்ட வரால் மீட்கப்பட்ட ஆன்மாக்களின் இறுதி உறைவிடமாகும்.
2 ஆண்டவரின் வின்னரசின்
தலைநகர் (Messianic Kingdom) இந்த புதிய எருசலேம் ஆகும்.
(எசேக்கிய தீர்க்கர்)
3.புதிய எருசலேம் என்பது, இயேசுவைஏற்றுக்கொண்டவ
கள், அவருடன் சேர்ந்து அரசாட்சி
செய்யுமிடம்
4 புதிய மண்ணுலகத்தின் மைய
பகுதியே புதிய எருசலேம்.
எனவே, இந்த புதிய படைப்பில்
நாம் பங்கு பெறுபவராக இருக்க
வேண்டும், இந்த புதிய எருச லேமில் ஆண்டவர் நம் மத்தியில் வாசம் செய்கிறார். இங்கு கண்
ணீர் இல்லை, சாவு இல்லை, துன்பம் இல்லை, துயரம் இல்லை.
இது புதிய படைப்பின், புதிய
நகரம், நித்திய வாழ்வின் உறை
விடம்.
3. ,படைப்பின் பன்பே கீழ் படிவது.The quality of creation is subservience. லூக்கா:8:22-25.
கிறித்துவுக்கு பிரியமானவர்களே!
திருத்தூதர் லூக்கா அவர்கள் ஆண்டவர் தன்சீடர்களுடன் கலிலேயா கடலில் மிக கலைப் புடன் படகில் பயனிக்கிறார்.
மிகவும் தேவையான ஓய்வு மற்றும் அமைதிக்காக இயேசு கடலைக் கடக்க முடிவு செய்தார் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் படகில் சென்றபோது, அவர் தூங்கிவிட்டார்.நாம் சோர்வடைவதைப் போலவே அவரும் சோர்வாக இருந்தார்.
ஏனேனில் அவர் மனுச குமாரன்.
பசி, பட்டினி, களைப்பு போன்ற
துன்பங்களை அனுபவித்தார்.
தன்னை அறியாமல் அயர்ந்து
தூங்கினார். அப்போது புயல் வீசியது. கலிலேயா கடல் அதன் திடீர் புயல்களுக்கு பெயர் பெற்றது. ஒரு பயணி கூறுகிறார், "காற்று கடலை நோக்கி வீசத் தொடங்கியபோது சூரியன் மறைந்திருக்கவில்லை, மேலும் இரவு முழுவதும் பலமாக காற்று அதிகரித்தது, அதனால் அடுத்த நாள் காலை நாங்கள் கரையை அடைந்தபோது கடளின் முகம் ஒரு பெரிய கொதிநிலை போல் இருந்தது. ." காரணம் இதுதான். கலிலேயா கடல், கடல் மட்டத் திலிருந்து அறுநூறு அடிக்கு மேல் உள்ளது. இது வட்ட வடிவ நிலங்களால் சூழப்பட்டுள்ளது, அதைத் தாண்டி பெரிய மலைகள் எழுகின்றன. ஆறுகள் மேசை நிலங்கள் வழியாக ஆழமான பள்ளத்தாக்குகளை கடலுக்குள் வெட்டியுள்ளன. இந்த பள்ளத்தாக்குகள் மலைகளில் இருந்து குளிர்ந்த காற்றை இழுக்க பெரும் புனல்கள் போல் செயல்படுகின்றன; இதனால் புயல்கள் எழுகின்றன. அன்று படகைத் தாக்கியது அப்படிப்பட்ட திடீர் புயல்தான், இயேசுவும் அவருடைய சீடர்களும் உயிருக்கு ஆபத்தில் இருந்தனர். சீடர்கள் இயேசுவை எழுப்பி ஒரு வார்த் தையால் புயலை அமைதிப் படுத்தினார். புயல் கீழ்படிந்தது,
கடல் அமைதியானது. இந்த சம்பவத்தின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், இயேசு எங்கிருந்தாலும், புயல் அமைதி யாகிவிடும்.
இயேசு வருகிறார்,சோதனையின் புயல்களைஅமைதிப்படுத்துகிறார். சில நேரங்களில் கிட்டத்தட்ட மிகைப்படுத்தப்பட்ட சக்தியுடன் வந்தாலும் படைப்பனைத்தும்
கடவுளுக்கு கீழ்படிய வேண்டும்
என்பது காலத்தின் கட்டாயம்.
கடவுளின் முதல் படைப்பின் மனிதனின் முதல் பாவமே கீழ்படியாமை என்ற பாவமே. இயற்கை கடவுளின் படைப்பு,
புயலை அடக்கும் சக்தி சீடர்களை
காப்பாற்றியது ஆண்டவரின்
அதிகாரத்தை வெளிப்படுத்து
கின்றன.ஆண்டவர் அமைதியின்
அரசர். எனவே, காற்றையும், கட
ளையும் அமைதி படுத்தி சீடர்
களை பயத்திலிருந்து விடுவிக்
கிறார்.அமைதியை ஏற்படுத்து வது கடவுளின் மாட்சியை பறைசாற்றும் படைப்பாகும்.படை
ப்பு ஒரு தொடர் நிகழ்வு.
அனைத்தும் கடவுளை மகிழ்மை
படுத்தவேண்டும். அதற்கு முன்
தேவை கீழ்படிதல். அனைத்து படைப்பும், கடவுளை மகிழ்மை படுத்த வேண்டும் என்பது நம்
கடமையன்றோ. கடவுள் சிறந்த
படைப்பாளி. நாமே இவற்றில்
சிறந்த படைப்பாகும். கடவுளை
மகிழப்படுத்துவது நமக்கு
கொடுக்கப்பட்ட உரிமை மற்றும்
கடமையாகும். ஆமேன்.
Prof. Dr.David Arul Paramanandam
Sermon Writer www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
To be delivered at CSI Bishop Newbegin Church, Arthur,Chengalpattu
on 29/09/2024.
Comments
Post a Comment