சீர்திருந்திய மற்றும் சீர்திருந்துகின்ற திருச்சபை.(164) Church: Reformed and Reforming இனணச் சட்டம் 26:4-11. திருப் பாடல் 109:21-31. திருத்தூதர் பணிகள் 2: 43-47. மத்தேயு 13:33-35. சீர்திருத்த ஞாயிறு..Reformation Sunday.

முன்னுரை:  கிறித்துவிக்கு
பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வார  தலைப் பாக  நாம் சிந்திக்க இருப்பது, 
"சீர்திருந்திய மற்றும் சீர்திருந்துகின்ற திருச்சபை"
முதலாவது ஆக சீர்திருந்திய திருச்சபை என்றால் என்ன?
சீர் திருந்திய திருச்சபை என்பது,
16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சீர்திரு
த்தை ஏற்றுக்கொண்ட "புரட்டஸ் டன்ட்" திருச்சபைகளை குறிக்கும்.
சீர்திருத்தம் என்பது நம்மை கத்
தோலிக்க திருச்சபையிலிருந்து
வேதத்தின் அடிப்படையில் வேறு படுத்தி காட்டுவது.
சீர்திருத்த சபைகளின் முக்கிய
கோட்பாடுகள்:
1. வேதமே, நம் நம் அடிப்படை உண்மை, விசுவாச வழிகாட்டி.
2.கடவுள் ஒருவரே, அவர் தந்தை,
மகன், தூய ஆவியாக ஒன்றி னைந்து செயல்படும் திரியேக கடவுள்.
3 கடவுள் மீது வைக்கப்படும் விசுவாசத்தினால் மட்டுமே இரட்
சிக்கப்படுவார்கள். ஈகை செயல்
களால் அல்ல,
4 யார் இரட்சிக்கப்படுவார்கள்
என்பது ஆண்டவரின் அநாதி
தீர்மானமாகும்.
5 மிக முக்கிய அருட் சாதனம்
(Sacraments) திருமுழுக்கு மற்றும் தூய நற்கருனை (Baptism and Communion) யாகும்.
6.மேலே வானத்திலும், கீழே
பூமியிலும் இயேசு கிறித்துவே
திருச்சபையின் தலைவர்(Christ is the sole Head of the church )
7.அனைத்து விசுவாசிகளும்
ஆசாரியத்துவம் (priesthood) உள்
ளவர்கள். (குருத்துவம்)இயேசு கிறித்து மூலமாக நேரிடையாக கடவுளிடம் அனுகுபவர்கள்.
 இந்த கோட்பாடுகளை கொண்ட வைகளே சீர்திருந்திய திருச்சபை
யாகும்.
"மார்ட்டின் லூதர்" சீர்திருதத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத் தவாதியும் என அழைக்கப்பட்டார்
விவிலியமே கடவுளை அறிவ தற்கான ஒரே வழியாகவும், மீட்படைய மனித செயல்களால் அல்ல, மாறாக கடவுளின் கருணையால் மட்டுமே முடியும் எனவும் சீர்திருத்த சபை போதிக் கிறது.
சீர்திருந்துகின்ற திருச்சபை அனைத்து திருச்சபைகளுக்கும்
பொருத்தமாகும். சீர்திருத்தம்
ஒரு தொடர் நிகழ்வாகும்.எந்த
சீர்திருத்தமும் முற்றிலும் வேத
த்தின் அடிப்படையில், கருத்து
மாறாமல் இருக்க வேண்டும்.
தசம பாகத்தை அடிப்படையாக
கொண்டு அற்புதங்கள் நடக்கும்
என தவறான உபதேசங்கள்
தவிர்க்கப்பட வேண்டும். அற்புத ங்கள் ஜெபத்தாலும், உண்ணா நோன்பாலுமேயன்றி வேறு எவற்றாலும் நடைபெறாது.
திருச்சபை தலைவர்களே மிக
முக்கிய சீர்திருந்திய, சீர்திருந்து
கின்றவர்களாய் திகழ வேண்டும்.
இவர்களே, சீர்திருத்தத்தின்
மிக முக்கிய நபர்கள். இவர்கள்
வழிகாட்டிகள், முன் மாதிரிகள்.
இவர்கள் எவ்வாறோ, அவ்வாறே
திருச்சபைகள் இருக்கும்.
கிறித்துவின் பெயரால் திருச்ச பையை வழிநடத்தும் பொறுப்பு பேராயருக்கும் ஆயர் குழுவுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
1.நிலத்தின் முதற்பலன் கடவுளுடையது.The first fruits of the land belong to God. Dueteronomy இனணச் சட்டம்.26:4-11.
கிறித்துவுக்குப் பிரியமானவர் களே! இணைச்சட்டம் என்கிற
உபாகமம் மோசேயின் ஐந்தாம்
புத்தகம். இரண்டாம் சட்டமாகும். இதன் முக்கிய நோக்கமே சட்ட வழியில் எவ்வாறு கடவுளை
வணங்க வேண்டும் என்ற சீர்தி ருத்தத்தை மோசே கொண்டு வந்தார்.
நமது ஆண்டவர் கர்த்தராகிய இயேசு கிறித்து, வனாந்தரத்தில் பிசாசினால் சோதிக்கப்பட்டபோது அவர் மூன்று முறைபதிலளித்தார்:
அந்த பதில்கள் அனைத்தும் உபா கமத்தை அடிப்படையாக கொண் டது. " அவர் மறுமொழியாக; "'மனிதர் அப்பத்தினால் மட்டு மல்ல; மாறாக, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார். ( மத்தேயு 4:4 ) 
இயேசு அதனிடம்: "'உன் கடவு ளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' எனவும் எழுதியுள் ளதே" என்று சொன்னார். (மத்தேயு  4:7)"அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, "அகன்று போ, சாத்தானே,'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றார். (மத்தேயு 4:10) ஆக,
இந்த மூன்று பதில்களும் உபாகமம் 8:3 ; உபாகமம் 6:16 ; உபாகமம் 6:13 லிருந்து எடுத்து பயன்படுத்துவது. உபாகமத்தின் நம்பகத்தன்மைக்கு தெய்வீக சான்றுகள்.உபாகமத்தின் நிகழ் வுகள் எகிப்திலிருந்து வெளியே றிய 40 ஆம் ஆண்டில் பதினொன் றாம் மாதத்தின் முதல் நாளின் போது நடக்கும் (உபாகமம் 1:3 ). இந்த நிகழ்வுகளின் இடம் ஜோர்டானின் கிழக்குப் பகுதியில் உள்ள "மோவாப் சமவெளி" ஆகும். இங்குதான் மோசே மரிக்கி
றார்.
இந்த அதிகாரம்,முதலாவதாக: வீடற்றவர்கள் (அலைந்து திரிந்த அரேமியர்கள்), ஒடுக்கப்பட்ட வர்கள் (பாதிக்கப்பட்ட குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர்), மற்றும் ஒதுக்கப்பட்ட (அனாதைகள் மற்றும் விதவைகள்) சார்பாக செயல்படும் கடவுளின் வார்த் தையின் விசுவாசத்தில் நமது மீட்பு வேரூன்றியுள்ளது என்பதை நினைவுபடுத்த அறிவுறுத்தப் படுகிறோம்.யாக்கோபு, ஒரு அலைந்து திரிந்த அரேமியன் , அவருடைய தாய் ரெபெக்காள் அராமியன் ( ஆதியாகமம் 24:10 ; 25:20 ; 26 ). உண்மையில், யாக்கோபு அராமில் தனது தாயின் சகோதரன் லாபானுடன் இருபது ஆண்டுகள் வாழ்ந்தார் ( ஆதியாகமம் 31:41-42 ). யாக்கோபு ஒரு அலைந்து திரிந்த அராமிய னாக இருந்தார் , ஏனென்றால் அவர் இடம் விட்டு இடம் சென்றார், முதலில் ஆராமிலிருந்து கானானு க்கு ( ஆதியாகமம் 31 ). பிறகு யாக்கோபும் அவனுடைய குடும்பமும் எகிப்துக்குப் போய் அங்கே தங்கினார்கள் ( ஆதியாகமம் 42:1 ; 43:1-2 ; 47:4-7 ). 
முற்பிதாக்கள் ஆபிராகாம், ஈசாக்,
யாககோபு முவருமே அராமியன் கள் தான்.
இரண்டாவது: நிலத்தின் அருட் கொடையை மட்டும் கொண்டா டாமல், அருட்கொடைக்கு ஆதார மான கடவுளின் உண்மைத்தன் மையைக் கொண்டாட வேண்டும் என்ற சீர்திருத்தத்தை மோசே கொண்டுவருகிறார். நிலத்தின் பலனைத் தக்கவைக்க கடவுள் உண்மையுள்ளவராக இருப்பதால் நமது தாயகமான பூமி அதன் விளைச்சலால் நம்மைத் தாங்குகிறது.நாம் ஒன்றை நினை வுபடுத்தவிரும்புகிறேன்.ஆபிராகமுக்கு கொடுக்கப் பட்ட வாக்கு தத்ததைகடவுள்நிறைவேற்றினார் என்பதிற்கு சாட்சியாகவும்  மற் றும் இஸ்ரவேலரை அடிமைத் தனத்திலிருந்து மீட்கப்பட்டதை கொண்டாடும்நிகழ்வாகத்தான்  நிலத்தின் முதற்பலனை கடவுளு க்கு கொடுக்கும் கட்டளையாகும். இதுநன்றியுணர்வுடன் இருப்பது கடவுள் மீதுள்ள பாசத்தை வடிவமைக்கிறது. அவர்கள் அதிகமாக கேட்கவில்லை. ஒரு கூடை மட்டுமே கொண்டு வர வேண்டும்.என்கிறார்.கோதுமை, பார்லி, திராட்சை, அத்திப்பழம், மாதுளை, ஆலிவ் (எண்ணெய்) மற்றும் பேரீச்சம்பழம் (தேனாக) ஆகிய ஏழு வகை நிலங்களின் முதல் பழங்கள் காணிக்கையாக வழங்கப்படவேண்டும்.இதுமுற்றிலும் ஒரு நன்றி படையல்.  இங்கு "தசமபாகம்" போன்றவை குறிப்பிடப்படவில்லை. ஆனால், பத்தில் ஒன்று ,"பத்திலொரு பகுதி  பாகத்தை, லேவியருக்கும், அன்னியருக்கும், அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் கொடு. அதனால் அவர்கள் உன் வாயில் களுக்குள்ளே உண்டு நிறைவு அடைவர். (இணைச் சட்டம் 26:12)
நான்கு வித மக்களுக்கு காணி க்கை பிரித்து கொடுக்கப்பட்டது
என்பது சீர் திருத்தமானது.
இந்த காணிக்கை கடவுளின் மீட்பு, கடவுளின் உடன்படிக்கை, வாக்குதத்தமானநாட்டிற்காக  இஸ்ரவேலர் கடவுளுக்கு செலுத்த வேண்டியது. இது மக்களின் கடமை, மற்றும் பொறுப்பாகும் ( liability) இவை சீர் திருந்தியதற்கான அடையாளம்.
2.ஆதி திருச்சபையின் சீர்திருத்த நடவடிக்கைகள். The reforming activities of the early churches. திருத்தூதர் பணிகள் (Acts)2: 43-47. 
கிறித்துவின் அன்பர்களே: சீர் திருத்தம் என்பது திருச்சபை மக்
களின் நன்னடத்தையை  குறிக்கும். 16ம் நூற்றாண்டில் ஏற்
பட்ட சீர்திருத்தம் முற்றிலும் கத்தோலிக்க திருச்சபை தலைவர் களின் தவறான போதனைகள், 
கோட்பாடுகள், மற்றும் சடங்குக ளுக்கு விரோதமாக ஏற்பட்டது.
முக்கியமாக புனித வேதத்திற்கு
எதிராக இருந்தது.(உ.ம்) பாவ
மன்னிப்பு சீட்டு விற்பனை.
எனவே, சீர்திருத்த திருச்சபைகள்
துவங்க ஆரம்பித்தன, நாம் சீர்
திருந்திய திருச்சபையினர் என
கூறுவதில் மகிழ்ச்சியடை கிறோம். ஆனாலும். நாம் நம்
திருச்சபைகளை சீர் திருத்துகின்
ற அவசியத்தில் இருக்கிறோம்.
இந்நிலையில், திருத்தூதர்கள்
காலத்தில் திருச்சபைகள் எவ்வா
று இருந்தன? என்பதை இக்கால
திருச்சபையுடன் ஒப்பிட்டு பார்ப்
போம்.
திருத்தூதர்களின்போதனைகளைக் கேட்டு, விசுவாசத்தில் விடா முயற்சியுடன் இருந்தனர். அப்பம்
பிட்பதில் ஒருமித்திருந்தனர்.
அவர்கள் அப்போஸ்தலர்களின் ஜெபத்திலும், உண்ணா நோம் பிலும் உறுதியாக இருந்தனர். இவர்களால் பல அடையாளங் களும், அற்புதங்களும் செய்யப் பட்டன. அனைத்து விசுவாசிகளும் ஒன்றாக இருந்தனர் மற்றும் அவர்கள் தங்கள் பொருட்க ளையும், உடைமைகளையும் விற்று ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப அனைவருக்கும் விநியோகிக்கும் பழக்கத்தில் இருந்தனர். ( இது இக்காலத்திற்கு பொருந்தாது, உடமைகளை விற்பது, அதை பகிர்வது குடும்ப பாதுகாப்பிற்கு பொருத்தமான தல்ல) தினமும் அவர்கள் ஒரு மனதாக ஆலயத்தில் சென்று, வீடு வீடாக அப்பம் பிட்டு, மகிழ்ச்சி யுடனும், மனப்பூர்வமாகவும் தங்கள் உணவைப் பெற்றனர்.( வீடு வீடாய் சென்று உணவு சாப்பிடுவது  சோம்பேரித்தனத் தை உருவாக்கும், விண்ணரசு புசிப்பும், குடிப்புமல்ல) அவர்கள் கடவுளைத் துதித்துக்கொண்டே இருந்தார்கள். இரட்சிக்கப்படுபவர்களை ஆண்டவர் தினமும் திருச்சபை யில் சேர்த்துக் கொண்டார்.
ஆரம்பகால திருச்சபைகள் ஒரு கற்றல் திருச்சபையாக (learning
church or Educate church) விசுவாசி களுக்கு இருந்தது. திருச்சபை
களின் பெரிய குறைபாடு,
முன்னோக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக பின்னோக்கிப் பார்ப்பது. கிறித்துவின் ஐசுவரியங்கள் வற்றாதவை என்பதால் நாம் எப்போதும் முன்னேறிச் செல்ல வேண்டும். நாம் புதிதாக ஒன்றை க் கற்றுக் கொள்ளாதபோதும், ஞானத்திலும், கடவுளின் அருளி லும் நாம் ஆழமாக ஊடுருவாத போது அதை வீணான நாளாகக் கருத வேண்டும்.
திருச்சபை என்பது சகோதரர்க ளின் கூட்டமாக இருக்கும் போதுதான் உண்மையான தேவாலயமாகும். " சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது! 
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 133:1) இதுவே, திருச்சபையின்
அடையாளங்கள்.
ஆதி திருச்சபைகள்  ஒரு பிரார்த்தனை தேவாலயமாக இருந்தது - இந்த ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த பலத்தில் வாழ்க்கையை சந்திக்க முடியாது என்பதையும் உணர்ந்து 
ஆலயம் சென்று செபித்தனர்.
திருச்சபைகள் ஒரு மரியாதைக்
குறிய இடமாக இருந்தது.அது
"பகிர்வு" ஆலயமாக இருந்தது.
திருச்சபை ஒரு வழிபாட்டு தேவாலயம் (அப்போஸ்தலர் 2:46 ); அவர்கள் கடவுளின் வீட்டிற்கு செல்ல மறந்ததில்லை.
அது ஒரு மகிழ்ச்சியான தேவால யம் (அப்போஸ்தலர் 2:46 ); மகிழ்ச்சி இருந்தது.அமைதி கிடை த்தது.ஆரம்பகால திருச்சபையில் கடவுளுடைய மக்களுக்கு ஒரு வெற்றி இருந்தது. 
இக்கால, திருச்சபை பல சீர்திருத் தங்களை செய்துள்ளது
என்பது உண்மை. ஆனால்,  அது
இன்னும் சீர்திருந்த வேண்டிய தாக இருக்கிறது. மிக முக்கிய மாக திருச்சபை தலைவர்கள் 
ஒழுக்கம், நேர்மை, கடவுள் பக்தியுடன் மந்தைக்கு மாதிரி யாக,திருத்தூதர்கள் போல நடந்துக்கொள்ள வேண்டும்.
இப்படி நடந்துக் கொண்டால் 
இவர்கள், சீர்திருந்துகின்ற திருச்சபையை கொடுக்க முடியும்.
3.விண்ணரசை கொண்டு வருவதே சீர்திருந்துகின்ற சபைகளின் பொறுப்பு:The responsibility of Reforming Churches is to bring the Kingdom of God. மத்தேயு 13:33-35. 
 கிறித்துவிற்கு பிரியமானவர் களே! மிக முக்கிய திருச்சபையின்
கடமை என்பது விண்ணரசை
இவ்வுலகில் கொண்டுவருவதே.
To bring the Kingdom of God on to
this earth is the prime duty of the
Churches. நமது ஆண்டவர் தன்
இறைபணியை,"காலம் நிறை வேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். 
(மாற்கு நற்செய்தி 1:15), திருமுழு க்கு யோவானும்," மனம் மாறுங் கள், ஏனெனில் விண்ணரசு நெரு ங்கி வந்துவிட்டது என்று பறை சாற்றி வந்தார். (மத்தேயு  3:2).
இவர்கள் இருவருமே, இறைபணி
யை, விண்ணரசை மையமாக
வைத்தே துவக்கினர். ஆனால், அக்கால மக்கள் இவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இயே சுவை  பார்க்க வந்த திரளான மக்களில் பலர் தாங்கள் கேள்விப் பட்ட அந்த அதிசயம் செய்பவரைப் பார்க்கவே வந்தார்கள் அல்லது, சிலர் தமக்காகவோ, உறவினருக் கோ அல்லது நண்பருக்கோ, நோய் அல்லது பிற உடல் நலக் குறைவால் குணமடையவே வந்தனர். ஆண்டவருக்கு இது
நன்றாகவே தெரியும். இதனால்,
உவமைகள் மூலம் இறைகருத்தை விளக்கினார். 
உவமைகள் (Parables) என்பது,
"ஒரு பொருளை(கருத்தை) இன் னொரு பொருளுடன் ஒப்பிட்டு (compare)அழகுபடுத்திக் கூறு வதே உவமையாகும்.அவை மேற்பரப்பில் எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் அவை எப்போதும் ஆழமான பொருளைக் கொண்டுள்ளன. உவமைகள் பெரும்பாலும் மறக்க முடியாத மன உருவங்களை வரைந்தன,
ஆண்டவரின் உவமைகளில் 13
உவமைகள் விண்ணரசை பற்றி
யது.அவரின் உவமைகளில்,
பெண்களை  உள்ளடக்கிய உவமைகள் 5. ( பத்து கன்னிகை கள், பத்து வெள்ளிகாசுகள், விவேகமான பணிப்பெண், விடாமல் வேண்டிய விதவைப் பெண்,புளித்த மாவின் பெண்).
இங்கு, விண்ணரசு புளிப்பு மாவைப் போன்றது என்று இயேசு விரிவாகக் கூறுகிறார் , ஒரு பெண் அதை எடுத்து மூன்று
கொத்து மாவில் முழுவதுமாக புளிக்கும் வரை மறைத்து வைத் தாள் (வ. 33). இதைச் செய்வது ஒரு பெண் என்று இயேசு குறிப் பிடுவது மிக முக்கியமானது. அன்றைய யூத கலாச்சாரத்தில், ஆண்களுக்கு நிகரான அந்தஸ் தை பெண்கள் அனுபவிக்க வில்லை. பெண்கள் பெரும்பாலும் ஆண்களால் கவனிக்கப்படுவ தில்லை அல்லது இழிவாகப் பார்க்கப்படுகிறார்கள். பரலோக இராஜ்ஜியத்தைப் பற்றிய இந்த உவமையில் ஒரு பெண்ணைப் பயன்படுத்துவதில் ,இயேசு பெண்களை (மற்றும் சமூகத்தின் விளிம்பில் உள்ள மற்றவர்களை) உயர்த்துகிறார், மேலும் ராஜ்யத்தி ல் யார் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்று அவர் பெண்ணை பரிந்துரைத்து இருக்கலாம். மூன்று மரக்கால் மாவு ஐம்பது ரொட்டிகளுக்கு மேல் செய்ய முடியும்! ஏராளமான மக்களுக்கு உணவளிக்கும் அளவுக்கு அப்பம் தயாரிக்கும் ஒரு பெண்ணை இயேசுவிவரிக்கிறார் .விண்ணரசும் இந்த  பெண்ணைப் போன்றது , அவளுடைய மாவின் புளிப்பு அதிகமாக இருந்தது.A micro economic activity by a woman 
expands into a Macro Economy of
The Kingdom of heaven. அன்பு 
பெண்களே! கடவுளுடைய அரசிற்கு தூண்களாக நில்லுங் கள். Stand as the pillars of the kingdom of God. பழைய ஏற்பாட்டில் பெண்கள் வரலாறு முழுவதும் காணப்பட்டனர், ஆனால் தலைவ ர்களாக இல்லை.  ஆசாரியர்களும் ஆட்சியாளர்களும் பொதுவாக ஆண்களாகவே இருந்தனர். ஆண் ஆதிக்கம் செலுத்தும் தேவாலயம் உலகம் மாறும்போது மாறியது.
இது சீர்திருதத்தின் விளைவாகும்
சரித்திரம் முழுவதிலும், இயேசு பெண்களுக்கு மரியாதை காட்டி னார். ஆண், பெண் வேறுபாடின்றி எல்லா மனிதர்களிடமும் இயேசு அன்பைக் காட்டினார். உண்மை யில், தேவாலய நடவடிக்கைகள் அல்லது விவாதங்களில் பெண் கள் சேர்க்கப்படாத காலத்தில் இயேசு தனது போதனைகளிலும் ஆன்மீகத்திலும் பெண்களை உள்ளடக்கியதாகக் காட்டப்பட்டார். கலாச்சாரக் குழுக்களால் பெண் கள் தாழ்ந்தவர்களாகக் காணப் பட்டாலும், இயேசு அவர்களைக் கடவுளின் பார்வையில் சமமாகப் பார்த்தார். இது சீர் திருந்தும்
திருச்சபைகளுக்கு வழிகாட்டி
யாகும்.
முன்பை விட இன்று தேவாலய த்தில் அதிகமான பெண் போதகர்கள் ஈடுபட்டுள்ளனர். எல்லா பாலினத்தவர்களும் இறைவனுக்குப் புகழைச் சேர்ப்பதற்காக மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான புகலிடங்களை திருச்சபைகள் உருவாக்குகின்றன. ஆண்களும் பெண்களும் ஒன்றாக தேவாலய த்திற்கு வருகிறார்கள்.சேவைகள், பாடகர் குழு மற்றும் குழந்தை களின் நடவடிக்கைகள் ஆண் மற்றும் பெண் தேவாலயத்தில் பங்கேற்பாளர்களைக் கொண்டி ருக்கின்றன இவைகள், சீர் திருந்திய சபைகளின் சிறப்பான
செயல்களாகும். மிக முக்கியமாக
தனிமனித சீர்திருத்தம் மனம்
மாறுதலில் தான் இருக்கிறது. இந்த மன மாற்றமே மகிழ்ச்சியை
தரும். விண்ணரசிலும் மகிழ்ச்சி
ஏற்படும் ஒரே செயல் மனம்
திரும்புதல். திருச்சபைகள் இதை
தான் செய்துவருகின்றன. தொடர் ந்து சீர்திருத்தத்தில் நாம் செயல் பட கடவுள் கிருபை செயாவாராக. ஆமேன்.
 



Prof. Dr.David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com. 
 
 

 
Note: This message is prepared to deliver at St.John's Church, Gundur, Chengalpet on 27/10/24













Martin Luther
Martin Luther, the Father of Reformation.

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

கிறித்துவை அர்ப்பணித்தல் (181) The Presentation of Christ 1 சாமு வேல் 1: 19-28, திருப்பாடல் 118: 19-29, உரோமையர் 11:33-36, 12:1,2. லூக்கா 2:22-40.