இறைமக்களின் திருப்பணி. Ministry of the Laity.(161)1 சாமுவேல் 25: 14-28.1 தெசலோனிக்கேயர் 4:1-12. திருப்பாடல் 23. லூக்கா 10:25-37 ( இறைமக்கள் ஞாயிறு) Laity Sunday.

முன்னுரை: கிறித்துவின் அன்பு 
இறைமக்களே! இவ்வாரம் நாம்
இறைமக்கள் ஞாயிறுவை,
" இறைமக்களின் திருப்பணி"
(Ministry of the Laity) என்ற தலைப்
பில் கொண்டாடுகிறோம்.
Who is Laity? சாதரண மக்களை
(Layman) Laity என்று குறிப்பிடு கின்றனர். இவர்கள் பொதுநிலை
யினர் என்றும் பாமரர் என்றும்
அழைக்கப்படுகின்றனர்.Laity is
not an Ordained person or Clergy. ஆனால், அவர்கள் "இறை மக்கள்".
Laity என்ற வார்த்தை "lay" என்ற 
கிரேக்க வார்த்தை "laikos"என்ற
வார்த்தையிலிருந்து வந்தது.
லெய்கோஸ் என்றால் மக்கள்
என்று பொருள்படும். திருச்சபை
யுடன் இனைந்து பணியாற்றும்
அனைத்து சாதாரண மக்களும்
லெய்டி என்ற இறைமக்கள்தான்.
Laity is an ordinary person who
involes in all auxiliary church activities.
ஆரம்ப கால திருச்சபையில் கால்வினிசக் கோட்பாட்டிற்கும்  அர்மீனியனிசம் கோட்பாட்டிற் கும் முரன்பாடுகள் இருந்தன. 
ஆர்மினியனிசம் ஹாலந்தில் தோன்றிய போதிலும், ஜான் வெஸ்லியின் (மெதடிஸ்ட் ஸதாபகர்,)  தீவிர முயற்சி மூலம் ஆர்மினிசய கோட்பாடு இங்கிலாந்தில் அதன் மிகப் பெரிய செல்வாக்கு பெற்றது.  அதன் நடைமுறை அம்சங்களில் ஒன்று ஊழியம் மற்றும் பாமரர்களின் ஒருமைப்பாட்டின் கருத்தாகும். இந்த ஆர்மீனிய இறையியல்தான் முதன் முதலில் பாமரர்களின் "லே பிரசங்கத்தி ற்கு"  (லே பிரிச்சர்ஸ்) வழிவகுத் தது, 
மார்ட்டின் லூதர் இவ்வாறு எழுதினார்: "'ஒவ்வொரு கிறிஸ் தவ ஆணும் ஒரு பாதிரியார், மேலும் ஒவ்வொரு கிறிஸ்தவப் பெண்ணும் ஒரு பாதிரியார், இது
லே பிரிச்சர்ஸின் அடிப்படை
கொள்கையாகும்.
திருச்சபை ஆயர்கள் திருச்சபை க்கு ஆல மரம் (Banyan tree) போன்றவர்கள் என்றால், அதன்
விழுதுகளாக(aerial roots) இருப்பவர்கள் லே பிரிச்சர்ஸ். இவர்கள்தான், கிராம சபைகளின்
பொருப்பாளர்கள். சபை மக்களை
நன்கு அறிந்தவர்கள். சிறப்பாக
பாடும் திறன்,  பிரசங்கிக்கின்ற
ஆற்றல் பெற்றவர்கள். இவர்களு க்கு ஆயர்கள் மாதா மாதம் சிறப்
பு கூட்டங்களை நடத்தி பயிற்சி 
அளிக்கின்றன.பேராயம் இவர்
களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்
கிறது.இவர்கள்தான் திருச்சபை
யின் இரத்த நாளங்கள் (blood
Veins) 
1.இறைமகள் அபிகாலியின்
திருப்பணி.The divine daughter Abigail and her Minisyry. 1 சாமு வேல் 25:14-28.
கிறித்துவுக்குபிரியமானவர்களே!
சாமுவேல் என்ற ஆசாரியன் முதல் தீர்க்கர், இஸ்ரவேலரின் கடைசி நீதியரசர். இவர் அபிகா லின் காலத்தில் மறைந்தார். இஸ்ரவேலர் அனைவரும் கூடி அவருக்காக துக்கம் அனுசரித்த னர். தாவிதும் துக்கம் கொண்டார்.
இதன்பிறகு தாவிது மாவோன் பாலைவனத்திற்குச் சென்றார்
அரசர் சவுலுக்கு பயந்து தாவிது தன்னுடன் 600 பேருடன் ஒளிந்துக்
கொண்டிருந்தார்.கர்மேல் வனாந்தரத்தில் தன்னுடன் இருந்த அத்தனை பேருக்கும் உணவளிப்பது தாவீதுக்குப் பெரும்பாடாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, ஒருநாள் நாபாலிடம் உதவி கேட்டு பத்து ஆட்களை அனுப்பினார்.
நாபால் அபிகாலியின் கணவன்.
நாபால் காலேபின் குலத்தைச் சேர்ந்தவர், இவர்கள் யூதா குலத் தை சேர்ந்தவர்.(எண்ணிக்கை 13:6)
நம் ஆண்டவரும் யூதா குலத்தை
சேர்ந்தவர்தான். காலேப் மிக
தைரியமானவர், கடவுளால்
தெரிந்துக் கொள்ளப்பட்டவர்.
காலேப் யோசுவாவுடன் சேர்ந்து
கானானை மீட்டவர். இவரின்
வம்ச வழியில் வந்தவர்தான் இந்த
நாபால்.மேலும் அவரது பெயர் "முட்டாள்" என்று பொருள்படும் - இது நாபால் தனது "கடுமையான மற்றும் தீய" நடத்தையால் அவர் பெற்ற புனைப்பெயராக இருக் கலாம் என்று கூறப்படுகிறது.
நாபால் யூதேயாவின் மலை நாட்டில் மாவோன் நகருக்கு அருகில் வசித்து வந்தவர்.பெரும் செல்வந்தனாக இருந்தான். அவரிடம் ஆயிரம் வெள்ளாடுக ளும் மூவாயிரம் செம்மறி ஆடுக ளும் இருந்தன. அவர் ஒரு கடுமையான மனிதராக இருந்தார் ( "அற்பத்தனமானவர்"), ஒரு அன்பான பெண்ணை மணந்தார் ,
அவர்தான் அபிகாயில்.அவள் ஒரு புத்திசாலி மற்றும் அழகான பெண்ணாக இருந்தாள்.
ஒருநாள், தாவிது அது ஆடுகளு க்கு மயிர் கத்தரிக்கும் காலம், ஒரு கொண்டாட்டமான காலம்; அப்போது, வாரி வழங்குவதும் விருந்தளிப்பதும் வழக்கம். தாவீது சரியான சந்தர்ப்பத்தில் தான் தன் வேலையாட்களை நாபாலிடம் உணவு கேட்டு  அனுப் பினார். நாபால் கொதித் தெழுந் தான்! “காட்டுக்கத்தல் கத்தி அவர்களைக் கேவலமாகத் திட்டினான்.” கண்டவர்களுக் கெல்லாம் அப்பத்தையும் தண்ணீ ரையும் இறைச்சியையும் கொடு க்க முடியாதென அந்தக் கஞ்சன் கத்தினான். தாவீதை மட்டம்தட்டிப் பேசினான், கேலி செய்தான்; நாபால் தாவீதின் வேலையாட்க ளையும், தாவீதையும் அவமான ப்படுத்தித் திருப்பிஅனுப்பினான்,   தாவீது தன் படைகளுக்குக் கட்டளையிட்டான்,நீங்கள் ஒவ் வொருவரும் உங்கள் வாளைக் கட்டிக் கொள்ளுங்கள்!” ( 1 சாமு வேல் 25:13 ). நாபாலின் வீட்டைத் தாக்க நானூறு பேர் தயாராகினர். நாபாலின் வீட்டு ஆண்கள் அனை வரையும் அடியோடு அழிப்பதாகச் சபதம் செய்தார்.  இதை அறிந்த நாபாலின் வேலைக்காரன் ஒருவன் நிலைமையைப் பற்றி அபிகாயிலிடம் சொன்னபோது
அபிகாயில் விரைவாகச் செயல்பட்டாள். அவள் இருநூறு ரொட்டிகளையும், இரண்டு திராட்சை மதுவையும், ஐந்து ஆடுகளையும், வறுத்த தானிய ங்கள் ஐந்து, திராட்சையும் நூறு திராட்சை மற்றும் இருநூறு அத்திப்பழங்களின்ரொட்டிகளையும் எடுத்து கழுதைகளின் மேல் ஏற்றினாள். பின்பு அவள் தன் வேலைக்காரர்களிடம், 'முன்னே போங்கள்; நான் உன்னைப் பின்பற்றுவேன்” ( 1 சாமுவேல் 25:18-19 ). அபிகாயில் தாவீதின் ஆட்களுக்குப் பொருட்களைக் கொடுத்தார், அவளுடைய விவேகமான செயல் தாவீதும் அவனுடைய ஆட்களும் அவளை ஆசீர்வதித்து தங்கள் முகாமுக்குத் திரும்பச் செய்தது. நாபால், அவனது குடும்பம் மற்றும் வேலை க்காரர்கள் அவளது செயல்களால் காப்பாற்றப்பட்டனர், இவளின்
மதிநுட்பம், துனிவு, விரைந்து செயல்பாடு தன் குடும்பத்தையும், தன் வேலைக்காரர்களையும் காப்பாற்றியதுடன் வருங்கால அரசர் தாவீதை "இரத்தப்பழிக் குற்றத்திலிருந்தும் பழித்தீர்ப் பதிலிருந்தும் என்னை இன்று தடை செய்த நீ ஆசி பெறுவாய்! உன் நுண்ணறிவும் ஆசி பெறுவதாக! என்று(1 சாமுவேல் 25:33)தாவிது கூறும் அளவுக்கு
ஒரு இறைமகளின் பணியாக
தன் மக்களை காத்ததால், நாபாலின் இறப்பிற்குப் பிறகு
அபிகாயில், தாவிது அரசனின்
முன்றாவது மனைவி ஆனார்.
2.தூயவரே இறைமக்கள். Pure is the people of God. 1.தெசலோனிக்கேயர் 4:1-12
கிறித்துவுக்குள் பிரியமான அன்பர்களே! திருத்தூதர் பவுல்
அடிகளார் எழதிய 13  திருமுகங் களில் தொசலோனிக்கியர் முதல் நிருபமாகும். கி.பி 51 ல் எழுதி னார். இம்மடல் கிறித்துவின் இரண்டாம் வருகையும், உயிர்த்
தெழுதல் பற்றியும் விளக்குகிறது.
இந் நிருபத்தில் சில்வானும், திமொத்தேயும் சேர்ந்து எழுது வதாக குறிப்பிடுகிறார்.
இத்திருமுகம் புற இனத்தாருக்கு
முன்பாக விசுவாசிகள் (lay preachers) சாட்சியுள்ள வாழ்க்கை யை வாழஅழைக்கிறது.அன்பான, அமைதியான வாழ்வு, தங்கள்
சொந்த அலுவல்களை கவனிக் கவும், உழைக்கும் மனப்பாங் கோடு பிறர்க்கு முன்மாதிரியாக வாழ அழைக்கிறது. கடவுளை
பிரியப்படுத்துபவராகும், தூய வராகவும், பரத்தமையை  முற்றி
லும் தவிர்க்க வேணடும். உங்க ளில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும். கட்டுக்கடாங்கா பாலு
னுர்வுக்கு இடங்கொடுக்க கூடாது.
தன் சகோதரரை வஞ்சிக்க கூடாது
வஞ்சிப்போரை ஆண்டவர் தண்டிப்பார்.கடவுள் நம்மை ஒழுக் கக்கேட்டிற்கு அல்ல, தூய வாழ் வுக்கே அழைத்தார். இப்படி கட்டுப்
பாட்டுடன், அன்புள்ளவர்களாய்
வாழ்பவர்களே லே பிரிச்சர்ஸ்களி
ன் தகுதியும், கடமையுமாகும். இத்
தகைய வாழ்வை வாழும் நபர் களே கிறித்துவின் வருகையிலே முதன் முதலில் உயிர்த் தெழுவர் என பவுலடிகளார் இத் திருமுகத் தில் எழுதுகிறார்.
3.நீங்களும் போய் அப்படியே
செய்யுங்கள்.Go and do the same.
லூக்கா 10:25-37.
கிறித்துவுக்குப் பிரியமானவர் களே! ஆண்டவர் தன் இறைபணி
யில் மேலும் 72 பேரை தேர்வு
செய்து இரண்டு இரண்டு பேராக
பல ஊர்களுக்கு அனுப்பினார்.
அவர்கள் வந்து ஆண்டவரின் பெயரை சொன்னால் ஏற்படும்
அதிய மாற்றங்கள் நிகழ்வதை
எடுத்து சொன்னார்கள். ஆண்ட
வர் மகிழ்ச்சி அடைந்து தந்தையை
மகிமை படுத்தினார். அப்பொழுது
திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். 
இவ்வாறே, வேதபாரகரும், பரிசேயர்களும் அவரை சோதிக்க
அடிக்கடி கேள்விகள் கேட்பார்கள்.
இந்த திருச் சட்ட அறிஞ்சர் முதலாவதாக, தங்களுடைய மறை ஆளுமையை, மத அறிவை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கம். இரண்டாவது, இயேசுவை அவரது வாயாலேயே மாட்ட வைக்க வேண்டும் எனும் சிந்தனை. இந்த கேள்வியும் அப்படிப்பட்ட‌ ஒரு கேள்வி தான். இங்கே கேள்வி கேட்ட நபர் திருச்சட்டத்தை அலசி ஆராய்ந் தவர். மத சட்டங்களின் சந்து பொந்துகளில் உலவியவர். அவருடைய முதல் கேள்வி “நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்” என்பது.
யூதர்களுடைய நம்பிக்கைப்படி, நிலைவாழ்வு பெறவேண்டு மெனில் மத சட்டங்களைக் கடைபிடித்தால் போதும். இது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்பத ற்காக அவர் அந்தக் கேள்வியை இயேசுவின் முன்னால் வைக் கிறார். சட்ட அறிஞருக்கு பதில ளிக்கும் விதமாக இயேசு சட்டத் தின் வழியிலேயே சென்று ஒரு கேள்வியைக் கேட்கிறார். “திருச்சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறது?” என்பதே அந்த கேள்வி. முதலில் கேள்வி கேட்டவருக்கு இயேசுவின் கேள்வி எளிதான ஒன்று என்பதால் சட்டென பதிலை சொல்லி விடுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, உன்னைப் போல உனக்கு அடுத்திருப்பவனை நேசி. அது தான் திருச்சட்ட த்தின் சாரம்சம் என்கிறார். இப்பொழுது, கதைக்கு வருவோம்.
எருசலேமில் இருந்து எரிகோ செல்லும் சாலை மிகவும் ஆபத் தான சாலையாக இருந்தது. ஜெருசலேம் கடல் மட்டத்திலி ருந்து 2,300 அடி உயரத்தில் உள்ளது; எரிகோ நின்ற சவக் கடல், கடல் மட்டத்திலிருந்து 1,300 அடிக்கு கீழே உள்ளது. எனவே, 20 மைல்களுக்குள், இந்த சாலை 3,600 அடி குறைந்தது. இது குறு கலான பாறை, அபயகர திடீர் திருப்பங்கள் கொண்ட சாலை யாக இருந்தது, இது கொள்ளை யர்களின் மகிழ்ச்சியான வேட்டையாடும் மைதானமாக இருந்தது. ஐந்தாம் நூற்றாண்டின்
வரலாற்று ஆசிரியர்  ஜெரோம் 
எரிகோ  இன்னும் "சிவப்பு, அல்லது இரத்தம் தோய்ந்த வழி" என்று அழைக்கப்பட்டதாக கூறுகி
றார்.மக்கள் எருசலேமிலிருந்து எரிகோ சாலையில் தனியாகச் செல்வது அரிது. எண்ணிக்கையில் பாதுகாப்பைத் தேடி, அவர்கள் கான்வாய் ( கூட்ட மாய்) அல்லது கேரவன்களில்.    (வணிகர்கள், பயணிகள், யாத்திர
ர்கள்) பயணம் செய்தனர். இந்த மனிதன்( indirectly a Jew) தனியாக சென்றது மிக துரதிஸ்டம். எனவே, கள்வர்கள் கையில் சிக்கி,  அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். 
யூத பாதிரியர் ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். ஏனேனில்,
இவர் பழமைவாதி,இறந்த மனிதனைத் தொட்டவன் ஏழு நாட்கள் அசுத்தமாயிருந்தான் (எண்ணாகமம் 19:11 ) என்பதை அவர் நினைவில் வைத்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. மனிதனின் வலியை விட, மனித
நேயத்தைவிட, கோயிலும் அதன் வழிபாட்டு முறையும் அவருக்கு 
முக்கியமானது. விலகி போனார்.
இரண்டாவதாக, லேவியர்(லெவி என்பவர்கள் லேவி பழங்குடியின ரின் ஆணாதிக்க வம்சாவளியைக் கூறும் யூத ஆண்கள். லேவி கோத்திரம் யாக்கோபு மற்றும் லேயாவின் மூன்றாவது மகனான லேவியின் வழிவந்தது.)
என்பவர், "பாதுகாப்பு முதலில்" என்ற குறிக்கோளுடன் இருந்த ஒரு மனிதர். அவர் மற்றவர்களு க்கு உதவ எந்த ஆபத்தும் எடுக்க மாட்டார். தீட்டாகிவிடுவோம் என
நம்புகின்றவர்கள். அதுமட்டுமல்ல
ஆண்டவர், அக்காலத்தின் சமய
சமுக அவளங்களை வெளிப்படுத் துகிறார்.மூன்றாவதாக, சமாரியன்(இசுரயேலர் அல்லது எபிரேயர் இனத்தை மூலமாகக் கொண்ட லெவண்ட் (பகுதி என்பது கிழக்கு மத்தியதரைக் கடலில் அமைந்த சைப்பிரசு, மற்றும் நிலநடுக்கடலின் கிழக்கே அமைந்த வடக்கு அரேபிய தீபகற்பத்தின் பகுதிகளான இசுரேல், யோர்தான், லெபனான், பாலத்தீனம், சிரியா, தெற்கு துருக்கி அடங்கிய பகுதிகளை குறிக்கும்.) உள்ள இனச்சமயக் குழு ஆகும். மேற்குக் கரை, இசுரேலிய, பாலத்தீன இணைந்த பகுதி. இவர்கள் சமாரிய சமயத் தைச் சேர்ந்தவர்கள். யூதர்களுக்கு சமாரியர்களுடன் எந்த தொடர்பும் இல்லை, இந்த சமாரியன், சத்திரத்திற்கு வழக்கமான வாடிக்கையாளராக இருந்த ஒரு வகையான வணிகப் பயணி யாகத் தெரிகிறது.  யோவான் 8:48ல், யூதர்கள் இயேசுவை சமாரியன் என்று அழைக்கிறார் கள்.
இந்த சமாரியன், அவனைப் பார்த்து இரக்கம் கொள்கிறார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை ரசமும், எண்ணெயும் வார்த்து, காயங் களை  கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண் டார்.மறுநாள் இரு தெனாரியத் தை எடுத்து, (ஒரு தெனாரியம் என்பது ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்.) சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார். 
மூன்று விஷயங்களை இந்த உவமை உள்ளடக்கியது.
(i) சமாரியன் செய்ததைப் போல, ஒரு மனிதன் தனது கஷ்டத்தைத் தானே சுமந்தாலும், நாம் அவருக்கு உதவ வேண்டும்.
(ii) தேவையில் இருக்கும்  எந்த தேசத்தைச் சேர்ந்த மனிதனும் நமது அண்டை வீட்டாரே. நம் உதவி கடவுளின் அன்பைப் போல பரந்ததாக இருக்க வேண்டும்.
(॥l) உதவி என்பது நடைமுறைக் குரியதாக இருக்க வேண்டும் மற்றும் வெறுமனே வருத்தப்ப டுவதைக் கொண்டிருக்கக்கூடாது. யூத பாதிரியாரும், லேவியரும் காயப்பட்ட மனிதனைப் பார்த்து பரிதாபப்பட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இரக்கம், உண்மையாக இருக்க, செயல்களில் வெளிப்பட வேண்டும். இந்த நல்ல சமாரியன்
போல, லே பிரிச்சர்ஸ் என்று
அழைக்கப்படும் இறை மக்களும்,
கிறித்தவர்களாகிய நாமும்
இறைபணியுடன் சமுக பணி யாற்ற கடமைப்பட்டுள்ளோம்.
 "நீங்களும் போய் அப்படியே செய்யுங்கள்." என்ற வார்த்தை
ஆண்டவர் நமக்கு அளிக்கும்
கட்டளையாகும். Every lay preacher is a good samaritan.
கடவுள் நம்மை காத்து நடத்து வாராக! ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com. 

  



அபிகாயில் (Abigail)
(மகிழ்ச்சியின் ஊற்று)





Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.