விளக்கு தண்டின் மேல் ஒளி.(167) Light on the Lamp Stand செக்காரியா: 4:1-14, 1 கொரிந் தியர் 3:10-15, திரு.பாடல் 27 மத்தேயு 5:14-16.
முன்னுரை: கிறித்துவின் அன்பு
விசுவாசிகளே! உங்க அனைவருக் கும் இயேசு கிறித்துவின் இனிய
நாமத்தில் வாழ்த்துக்கள்.இவ்வார தலைப்பாக"விளக்கு தண்டின் மேல் ஒளி. Light on the Lamp Stand " சிந்திக்க இருக்கிறோம்.
ஆண்டவர் இவ்வுலகை படைக்கும்
போது; மண்ணுலகு உருவற்று வெறுமையாக (Tohu wa-bohu எபிரேயம்) இருந்தது. It means the earth was formlessness and emptiness). ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. (தொடக்கநூல் 1:2) இது ஒளி உண்டாக்குவதற்கு முன்பாக பூமியின் நிலையை எடுத்துக்காட்டுகிறது.
படைப்பின் முதல் நாளில் ஆண்ட வர் ஒளியைத்தான் படைத்தார், ஒளி உலகில் தோன்றியவுடன் இருள் பிரிந்தது. கடவுள்
அந்த ஒளியை நல்லது என்று
காண்கிறார். உலகில் முதல் நல்ல
செயல் "ஒளியே". படைப்பில்
இருள் உலகில் பரவியிருந்தது, அதனால், கடவுள் ஒளியை படைத்து, ஒளியையும் இருளை
யும் இரண்டாக பிரித்தார். யோவான் நற்செய்தியாளர் கூறுவது போல ,"அனைத்து மனிதரையும் ஒளிர் விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.
(யோவான் நற்செய்தி 1:9)
ஒளியான அவர் (இயேசு கிறித்து) உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.
(யோவான் நற்செய்தி 1:10)
On the creation, Christ created his light. The light of Christ chases away
the darkness. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.
(யோவான் நற்செய்தி 1:5)
இதைத்தான், யோவான் நற்செய்தியில் ஆண்டவர், "நானே உலகின் ஒளி" என்றார்". (யோவான் நற்செய்தி 9:5) ஏசாயா
தீர்க்கர் 9:2ல், இருளில் நடக்கிற
ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை
கண்டார்கள்" என்றார். அந்த ஒளி
இயேசு கிறித்து.
ஒளியை விளக்குதண்டின் (Lamp Stand) மீது வைத்தால்தான்
வீட்டில் உள்ள அனைவருக்கும் பிராகாசிக்கும்.வேதத்தில், முதன் முதலில் நாம் விடுதலை பயணம்
Exodus:31ல் பொன்னால் ஆன விளக்கு தண்டினை பார்க்கி றோம். (யாத்திராகமம் 25:31,) இஸ்ரவேலர்கள் கட்டும் கூடாரத்தில் (Tabernacle) வைக் கப்பட வேண்டிய பொன் குத்துவிளக்கு(Golden Lampstand) பற்றிய விரிவான வழி முறை களை கடவுள் கொடுக்கிறார். விளக்குத்தண்டு எப்படி இருக்க வேண்டும் என்று கடவுள் விரும் பினார் என்பதை விளக்குவதில் கடவுள் எவ்வளவு முக்கியத்
துவம் தருகிறார் என்பதை
காட்டுகிறது.மிக முக்கியமாக
ஓரே விளக்குதண்டு தூய கத்தில் வைக்கப்பட வேண்டும் என்பது கடவுளின் கட்டளை.
அந்த ஒரே விளக்குத் தண்டு நம் ஆண்டவர் இயேசு கிறித்துவே. This unique lampstand symbolizes Christ as the embodiment and expression of the Triune God.
எனவே தான் நம் ஆண்டவர்,
விளக்கைக் கொளுத்தி மரக்காலில் மூடிவைத்தால் வெளிச்சம் தராது. விளக்குத் தண்டின் மேல் வைக்கும் பொழுது அது எல்லோருக்கும் வெளிச் சத்தைக் கொடுக்கும். இதன்
அடிப்படையில் உள்ளதுதான்
ஆங்கில பழமொழி, "to hide one's light under a bushel" விளக்குத் தண்டின் மேல் ஏற்றி வைத்த விளக்கைப் போல நாம் நம்முடைய கிரியைகளால் பிறருக்கு ஒளியூட்டுகிறவர் களாகத் திகழ வேண்டும்.
1. ஆலயம் கட்டுபவர்களே
விளக்குதண்டுகள். The Church
builders are the Lampstand.
Zechariah செக்கரியா 4:1-14.
அன்புடைய கிறித்துவின் பற்றுறு தியாளர்களே! தீர்க்கர் சகரியா
.கி.மு. 520-ம் ஆண்டில் இறை வாக்கு உரைப்பதற்காக இறை வனால் அழைக்கப்பட்டவர். செக்கரியா எனும் பெயருக்கு, ‘கடவுள் நினைவு கூருகிறார்’
என்பது பொருள்.குருத்துவ வழி மரபில் வந்தவர். பாபிலோனில் இருந்து யூதேயா விற்கு வந்த முதல் கூட்டமான 50 ஆயிரம் பேரில் ஒருவராக இருந்தவர்.
இவரது நோக்கம் எருசலேமுக்கு வந்ததும் இறைவனின் ஆலயத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதாக இருந்தது.
இவரை குறித்துதான் நமது ஆண்டவர் மத்தேயு நற்செய்தியில்
23:25ல், ஆலயத்துக்கும் பலிபீடத்துக்கும் இடையே கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை “திருக்கோவிலுக்கும் பலி பீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் செக்கரியாவின் ரத்தம் வரை” (மத்தேயு 23:25) என்று மேற்கோள்
காட்டினார். கடவுளின் தூதர்
செக்காரியாவிற்கு 8 காட்சிகளை (Visions) காட்டுகிறார்.
செக்காரியா 4காம் அதிகாரம்
ஐந்தாவது காட்சியாகும். தூதன், தீர்க்கரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறவனை எழுப்பதுபோல எழுப்பி, "நீ என்ன காண்கிறாய்?" என்று அவரை கேட்கிறார், அதற்கு தீர்க்கர், "இதோ முழுவதும் பொன்னாலான, விளக்குத் தண்டு (golden stand, the Hebrew term for lampstand is "menôrah) ஒன்றைக் காண்கிறேன்; அதன் உச்சியில் கிண்ணம் ஒன்று உள்ளது; அக்கிண்ணத்தின்மேல் ஏழு அகல்கள் இருக்கின்றன; மேலே உள்ள ஒவ்வோர் அகலுக்கும் ஏழு மூக்குகள் உள்ளன;என்றார். அன்பானவர்களே! பொன்னாலான விளக்குத்தண்டு
வேதத்தில், நான்கு இடங்களில்
வருகிறது.( வி.பயணம் Exodus 25.
1அரசர் 7-1 kings 7, செக்கரியா Zechariah 4, மற்றும் திருவெளிப் பாடு 1(Revelation 1.) குறிப்பிடப்பட் டுள்ளது. விடுதலை பயணத்தில்
கூடாரத்தில், ஒரே ஒரு விளக்குத்
தண்டு, தூயகத்தில் ஒளிவீச
பொருத்தப்பட்டது.ஆனால், செக்காரியாவில், விளக்குத் தண்டின் அருகில் வலப்புறம் ஒன்றும் இடப்புறம் ஒன்றுமாக இரு ஒலிவ மரங்கள் இருக் கின்றன" (செக்கரியா 4:3) பண்
டைய இஸ்ரவேல் நாட்டில், ஒலிவ மரங்கள் அனுதின வாழ்க்கையில்
மிக முக்கியமானது.ஆலிவ்
எண்ணெய், சமைப்பதற்கும், ஒளி
ஏற்றுவதற்கும், அபிசேகம் செய்வதற்கும், சுத்தப்படுத்தவும்,
பயன்படுத்தப்பட்டது. இயேசுவின்
வெற்றி பயணத்தில் ஒலிவமர
கிளைகள் வரவேற்புக்காக பயன்படுத்தப்பட்டது. இங்கு,
( Zechariah 4,) ஆலிவ் மரம்
எண்ணெய் ஊற்ற பயன் படுத்தபட்டது. இந்த இரண்டு
ஒலிவ மரங்கள் கடவுளால் அபி
சேகிக்கப்பட்ட செருபாபேலை யும், (செருபாபேல் ( கிமு 6 ஆம் நூற்றாண்டு யூதேயாவின் ஆளுநராக இருந்தார், இவரின் கீழ் யூத ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது).யோசதாக்கின் மகனுமான யோசுவாவையும் (Joshua) (தலைமைக் குருவு)(செக்கரியா 6:11)இவர்கள்
இருவரும் ஆண்டவரின்
கோவிலை கட்டுவதற்காக
தூய ஆவியால் தேர்வு செய்யப்
பட்டவர்கள்.இவர்களே இரு ஒலிவ
மரங்களாக குறிப்பிடப் படுகின்றனர். "செருபாபேலுக்கு ஆண்டவர் அருளியவாக்கு இதுவே; உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல; ஆனால் எனது ஆவியாலே ஆகும், "என்கிறார் படைகளின் ஆண்டவர். (செக்கரியா 4:6)
செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார் தீர்க்கர் ஆகாய் (ஆகாய் 2:23).
ஆலயம் கட்டுபவர்களை ஆண்ட
வர் முத்திரமோதிரமாக வைக்கிறார்.இவர்களே ஒளி
ஏற்ற பயன்படும் விளக்கு
தண்டுகள் The church builders are
the Lampstand, without lampstand,
it's dufficult to lit light to all.
2.ஆண்டவரே திருச்சபையின்
அடித்தளம். Christ is the foundation of the Church 1 கொரிந்தியர் 3:10-15
கிறித்துவுக்கு பிரியமான அன்பர்
களே! திருத்தூதர் பவுல் அடிகளார்
கி.பி 54-55 காலகட்டத்தில், தனது
இரண்டாம் பயணத்தில், கொரிந்து திருச்சபையை ஏற்படுத்தினார். இந்நகரில் அவர் 18 மாதங்கள்தங்கினார்.(திருதூதர் பணிகள் 18:11) கொரிந்து பட்டணம் உரோமர் களின் வணிக நகரமாகும். சுமார் 7 இலட்ச்சம் மக்கள் தொகை கொண்டது.
திருதூதர் பவுல் அடிகளார் தன்னை ஒரு கட்டிடம் கட்டுபவர் என்று ஒப்பிடுகிறார், நீடித்த நற் குணங்களைக் கொண்ட கிறிஸ்தவ சீடர்களை உருவாக்க ஆன்மீக கட்டுமான (spiritual builders)வேலையில் கடவுளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
இவ்வுலகில், நாம் நம் ஆண்டவரின் நற்செய்தியை
கொண்டு செல்ல திருதூதர் பவுல்
அடிகளாரின் அடித்தளத்தை அடி
ப்படையாக இருக்க வேண்டும்.
அந்த அடித்தளம் கிறிஸ்துவே.
பவுலாகிய நான், கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.
(1 கொரிந்தியர் 3:10)
இறையரசை இவ்வுலகில் கட்டு
வதில் மிக கவணம் தேவை.பவுல் எழுதினார்: “இயேசு கிறிஸ்து போடப்பட்ட அஸ்திபாரத்தைத் தவிர வேறெந்த அஸ்திபாரமும் போட முடியாது.” (1 கொரிந்தியர் 3:11) இயேசு கிறித்துவை ஒரு அஸ்திவாரத்துடன் ஒப்பிடப் படுவது இது முதல் முறையல்ல. சொல்லப்போனால், ஏசாயா 28:16 முன்னறிவித்தது: “உன்னதப் பேரரசராகிய கர்த்தர் சொல்லுகிறார்: இதோ, நான் சீயோனில் ஒரு அஸ்திவாரமாக, சோதித்த கல்லை, உறுதியான அஸ்திபாரத்தின் விலையேறப் பெற்ற மூலையாக வைக்கிறேன்.” கடவுள். அவருடைய குமாரன் கிறிஸ்தவ சபையின் அஸ்தி வாரமாக மாற வேண்டும் என்று நீண்ட காலமாக எண்ணியிருந் தார். ஆண்டவரே திருச்சபையின்
அடித்தளம் என்பது அநாதி
தீர்மானமாகும். கொரிந்து சபையில் பிரிவினைகள் இருந்தன. சிலர் பவுலை சார்ந்தவராகவும், ஒரு சிலர்
அப்பொல்லாவை சார்ந்தவராக
காட்டிக் கொண்டதை கண்டித்து
நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். இதில் கடவுள் ஒருக்கே
பெருமையாகும் என்றார். ஊழிய
த்தில் தனிமனித ஈர்ப்பு கூடாது.
கிறித்துவே நம் தலைவர். பலருடைய ஊழியங்களின் வேலைப்பாடு தீர்ப்பு நாளில்
தெரிந்துவிடும்; அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந் நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.
ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெருவார்.எனவே, நாம்
புதிய ஏற்பாடுகளின் வெளிச் சத்திலும்,எல்லாவற்றிற்கும் மேலாக,சிலுவையின் வெளிச் சத்திலும் நம் திருச்சபைகள் கட்டப்படவும், அமைக்கவும் நம்
ஒளி மனிதர்கள் முன் ஒளிர
ஆண்டவர் கிருபை செய்வாராக.
3.விளக்குதண்டின் மேல் ஒளி.
Light on the Lampstand.மத்தேயு
5: 14-16.
கிறித்துவின் அன்பு இறை மக்களே! கிறித்தவர்களுக்கு
ஆண்டவர் வழிகாட்டும் மற்றும்
வாழ்வளிக்கும் ஒளியாக இருக்கிறார்.கடவுள் ஒளியாய்
இருக்கிறார் அவரில் இருள்
இல்லவே இல்லை.இருள்
பாவத்தின் அடையாளம். படைப்பில் இருளை கடவுள்
படைக்கவில்லை ஆனால்
மண்ணுலகை படைக்கும்
போதே ஆழத்தை அது பற்றிக் கொண்டது.கடவுள் ஒளியை படைத்து இருளைபிரித்தார்.
இருள் ஒளியின் பகை. ஆண்டவர், நான் உலகத்தின் ஒளி. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார், மாறாக வாழ்வின் ஒளியைப் பெறுவார்.
கடவுளின் முதல் படைப்பு ஒளி (தொநூ 1:3). தம் படைப்பில் ஒளி எத்துணை இன்றியமையாததென அறிந்தே அவர் இச்செயலைச் செய்தார். அவ்வாறே மனிதர் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தவே நம்மை ஒளியோடு ஒப்பிட்டுள்ளார் ஆண்டவர் இயேசு இருளை அழிக்கும் வல்லமை கொண்டுள்ள ஒளியைப் போல, மனிதர் நாம் நம் நற்செயல்களால் தீமை எனும் இருளகற்றி ஒளிர வேண்டும் என்பதே ஆண்டவரின் ஆசை.நாம் நற்செயல்கள் செய்யத் தவறும்போது, தவறு களுக்கு ஒத்துப்போகும்போது, பாவத்தினால் கரைபடும் பொழுது, நற்செய்தியை அறிவிக்கவும், கேட்கவும்
அதன்படி நடக்கவும் எசாசரிக்கைபடுகிறோம். விளக்குத் தண்டின் மேல் ஏற்றி வைத்த விளக்கைப் போல நாம் நம்முடைய கிரியைகளால் பிறருக்குஒளியூட்டுகிறவர்களாகத் திகழ வேண்டும் . நாம் கடவுளு டைய வார்த்தையையும் அவருடைய சத்தியத்தையும் பெறும்போது, அது நம் இதயங் களையும் வாழ்க்கையையும் ஒளிரச் செய்கிறது. இது மறைக்கப்பட வேண்டியதல்ல, ஆனால் உலகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒளியைக் கொண்டுவருகிறது.
கடவுள் இஸ்ரவேலின் விளக்கை ஏற்றினார்." தேசம் அல்லது கடவுளின் மனிதன் பிரகாசித்த ஒளி கடன் வாங்கிய ஒளி.
யூதர்கள் ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்தனர் - எந்த மனிதனும் தன் சொந்த ஒளியை எரியவிடவில்லை. ஜெருசலேம் தேவாலயம் உண்மையில் புறஜாதிகளுக்கு ஒரு வெளிச்சமாக இருந்தது, ஆனால் " கிறிஸ்தவர்களிடமும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
கிறிஸ்தவனிடமிருந்து பிரகாசிக்கும் ஒளி கிறிஸ்த வனின் இதயத்தில் கிறிஸ்துவின் பிரசன்னத்திலிருந்து வருகிறது.
கிறிஸ்தவர் உலகத்திற்கு ஒளியாக இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னபோது, அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்றால் நம் வாழ்க்கையை.
ஒளி என்பது முதலில் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. பாலஸ்தீனத் தில் உள்ள வீடுகள் மிகவும் இருட்டாக இருந்தன, ஒரே ஒரு சிறிய வட்ட சாளரம் பதினெட்டு அங்குலங்களுக்கு மேல் இல்லை. விளக்கெண்ணெய் டைல்ஸ் போடப்பட்டது போல அதில் மிதக்கும் திரி இருந்தது. தீப்பெட்டிகளுக்கு முந்தைய நாட்களில் விளக்கை மீண்டும் எரிய வைப்பது அவ்வளவு எளிதல்ல. பொதுவாக விளக்கு விளக்குத்தண்டின் மீது நிற்கும், அது மரத்தின் தோராயமாக வடிவிலான கிளையாக இருக்காது; ஆனால் மக்கள் வெளியே சென்றதும், பாதுகாப்பு நிமித்தம், விளக்கை அதன் நிலையிலிருந்து எடுத்து, அவர்கள் திரும்பி வரும் வரை அது ஆபத்து இல்லாமல் எரியும்படி, அதை ஒரு மண் புதரின் அடியில் வைத்தார்கள். விளக்கின் ஒளியின் முதன்மைக் அவர்களின் பாதுகாக்கும் கடமை காணப்பட்டது.
"நீங்கள் திருச்சபையின் ஒளி" என்று இயேசு சொல்லவில்லை; அவர் கூறினார், "நீங்கள் உலகத்தின் ஒளி", மேலும் உலகில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவரது கிறிஸ்தவ தன்மை அனைவருக்கும் தெளிவாக வெளிப்படையாக, இருக்க வேண்டும்.நாம் பேரொளியாம் கடவுளிலிருந்து சிறு ஒளியாகப் பிறந்தவர்கள். ஒளித் துளிகளாம் நம் உணர்வு, எண்ணம், மொழி, மூச்சு, அசைவு யாவும் மலைமேல் காணும் நகர் போலாக வேண்டும். நம் செயல்பாடு ஒவ்வொன்றும் ஓர் ஒளித் துளி. உன்"கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நல மாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.
(மத்தேயு நற்செய்தி 6:22)
நாம் காணக்கூடிய ஒளி, எச்சரிக்கும் ஒளி, வழிகாட்டும் ஒளி, இவையே கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டிய விளக்குகள்.
எனவே, மனிதர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கட்டும்.
நாம் விளக்கு தண்டின் மீது
வைக்கப்பட்ட விளக்காய்
ஒளிர, ஆண்டவர் கிருபை
செய்வாராக, ஆமேன்.
Prof.Dr.David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
Note: The message is to be delivered
at CSI Alisan Casse Memorial Church,
Chengalpet. 10/11/2024.
.
Comments
Post a Comment