பெண் குழந்தைகளைப் பாதுகாத்தால் (168) Protecting the girl child.,யோபு 42:10-17, திருப்பாடல் 45:8-14, திருத்தூதர் Acts: 16:16-18, மத்தேயு 15:21-28. Girl Children Sunday.
முன்னுரை:
கிறித்துவுக்கு பிரியமானவர்களே
இயேசுகிறித்துவின் விலையேறப்
பட்ட திருநாமத்தில் வாழ்த்துக்கள்.
இவ்வார தலைப்பு," பெண் குழந்தைகளை பாதுகாத்தல்" .
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl Child,)என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமை களையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.சர்வதேச ரீதியில் கல்வி, ஊட்டச்சத்து, குழந்தை திருமணம், சட்ட மற்றும் மருத்துவ உரிமைகளை பெண்பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றவைகளை
அடிப்படையாக கொண்டது.
பெண்குழந்தைகள் ஒரு சுமை அல்ல,போற்றப்பட வேண்டிய பரிசுகள். படைப்பில் கடவுள், "ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, "மனிதர்" என்று பெயரிட்டார்.
(தொடக்கநூல் 5:2) ஆண்டவர்
ஆண் பெண் என்று வேறுபாடு பார்க்காமல் சமமாக தன் சாயலிலே படைத்தார்.
இருவருக்குமே, இந்த உலகை
ஆளும் அதிகாரம் கொடுத்தார்
(தொடக்க நூல் 1:28)
நம் திருவிவலியத்தில் ( எண்ணி க்கை Numbers 27:1-7)ல் தன்
தந்தை செலுபுகாத்தை (Zelophehad’) குடும்ப வரலாற்றிலிருந்து மகன் இல்லாததால் ஏன் நீக்கவேண்டும், எங்களுக்கும் குடும்ப சொத்தில் உரிமை வேண்டும் என முதல் உரிமை
குரல் மோசேக்கு முன்பாக எழுப்பியவர்கள் ஐந்து பெண்களே
மக்ளா,நோகா, ஒக்லா,மில்கா, திர்சா,என்ற பெண்குழந்தைகளே.
கடவுள் இப் பெண்களுக்கு குடும்ப உரிமை சொத்தில் (inheritance) பங்கு உண்டு என கட்டளை கொடுத்தார்.உலகில் முதன் முதலில் உரிமைக்காக போராடிய பெண்கள் இவர்கள்தான். போராடாமல் உரிமைகளை
பெற முடியாது என்பதை உலகி
ற்கு முதலில் காட்டினர்.
இந்தியாவில் பெண் குழந்தை
களின் சிசுகொலை (infanticide)
அதிகரிக்க பெண் திருமணம் செய்ய குடும்பங்கள் போதுமான dowry எழுப்பி முடியாது என்ற
காரணமாகும்,அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு பல வீடுகளில் கடுமையான உள் நாட்டு வேலைக்கு பயன்படுத் தப்படுகிறார்கள். பெண்களுக்கு
எதிராக பாலியல் வன்கொடுமை,
திராவக வீச்சு acid attack, பலியியல் குற்றங்கள், வரதட்
ச்சனை கொலைகள், கவுர
கொலைகள், கடத்தல், விபச்சாரத்
தில் தள்ளுப்படுதல் இந்தியாவில்
அதிகரிக்கும் பெண்களுக்கான
கொடுமைகளாகும்.
1.சொத்தில் உரிமை பெண்களின் பிறப்புரிமை: The birth right of women is inheritance. Job:யோபு 42:10-17,
கிறித்துவுக்கு பிரியமான அன்பு
தந்தையர்களே! அனைத்து தந்தை
யர்களுக்கும் விசுவாசியான
யோபுதான் முன் உதாரணம், மறறும் வழிகாட்டி. யோபு என்ற இப்பெயரின் பொருள் வெறுக்கப்படுபவர். யோபு நூல் எக்காலக் கட்டத்தில் தொகுக்கப்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. பல அறிஞர்கள் இந்நூல் பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பிற்பட்டது என்பர். எனவே, இந்நூல் கி.மு. 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம்.
யோபு நேர்மையாளர்’ என கடவுள் சொல்ல, அவருக்கு வசதிகள் இருப்பதால் தான் அவர் இப்படி இருக்கிறார் என சாத்தான் வாதிடுகிறான். கடவுள் யோபுவின் செல்வங்களை, குழந்தைகளை அழிக்க சாத்தானுக்கு அனுமதி கொடுக்கிறார். பின்னர் யோபுவின் உடலில் நோய்களைக் கொடுக்கிறார்.கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தை யோபுவுக்குத் தெரியாது. அவர் எவ்வாறு விசுவாசத்தில் நிலைத்திருந்தார் என்பதே
நமக்கு பாடமாகும். அவரின் மனைவியும், நண்பர்களும் அவரை அவமானப்படுத்து கின்றனர். குற்றவாளியாக்கு கின்றனர். பாவி என்கின்றனர். எல்லாவற்றையும் தாண்டியும் யோபு நீதிமானாகவே இருக் கிறார்.தன்னுடைய உத்தமத்தை யோபு விட்டுக்கொடுக்கவே இல்லை.யோபுவோ,’ கடவுள் கொடுத்தார். கடவுள் எடுத்துக் கொண்டார்…. அவருடைய பெயர் போற்றப்படட்டும்’ என்றார்.
அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர். யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. மூத்த மகளுக்கு எமிமா என்றும், இரண்டாவது மகளுக்குக் கெட்டிசியா என்றும், மூன்றாவது மகளுக்குக் கெரென் அப்பக்கு என்றும் பெயரிட்டார். அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர் களோடு அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.
வேதத்திலேயே, முதன்முலாக
பெண்களுக்கு சொத்துரிமை
கொடுக்க சொன்னவர் நம் ஆண்ட
வர்தான் மோசே மூலமாக செலுபுகாத் (Zelophehed) வம்ச
பெண்களுக்குதான்.(எண்ணிக்கை 27:1-7) அதன் பிறகு
அக்காலத்தில், பெண்களுக்கு
சொத்தில் உரிமை கிடையாது.
ஆனால், ஒரு பொருப்பான, நேர்
மையான தந்தையாக யோபு
தன் மூன்று பெண்குழந்தை
களுக்கு தன் மகன்களுக்கு
நிகராக சரிசமமாக சொத்துக்
களை பிரித்து கொடுத்தார்.
இதன்மூலம் அவர் எந்த அளவு
பெண்குழந்தைகளை நேசித்தார்
என்பதை காண்கிறோம்.
2.பெண் விடுதலையே சமுக
விடுதலை.Women's liberation is social liberation. திருத்தூதர் பணிகள் Acts. 16:16-18.
கிறித்துவின் அன்பு விசுவாசி
களே! திருத்தூதர் பவுலடிகளாரின்
இரண்டாம் பயணத்தில் பிலிப்பி
(The first Christian church in Europe was founded at Philippi C.E.49, the first baptised European woman was Lydia. Phillipy an ancient city in Greece was the Christianity's gate way to Europe, ) பட்டணம் வந்தனர் பவுலும், சீலாவும். இது மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரம். மற்றும் உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சிலநாள்கள் தங்கியிரு ந்தார்கள். அப்படி தங்கி இருக்கும் போது ஒருநாள் அவர்கள் இறை வேண்டல் செய்வதற்காக ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். அவ்வாறு செல்லும் வழியில் குறி சொல்லும் ஆவியை ( அப்பெண்ணுக்கு *பைதோனா (pythons) என்ற பாம்பின் ஆவி பிடித்தவள், பிலிப்புபட்டணத்தின் பக்கத்தில் "அப்பொல்லோ" என்ற பாம்பு கோயில் இருந்தது.) கொண்டிரு ந்த ஒரு அடிமைப்பெண். அவர்களுக்கு எதிரே வந்தார். அவள் குறி சொல்லி அதனால் தன்னுடைய முதலாளிகளுக்கு மிகுந்த வருமானத்தை தேடி கொடுத்தாள். அவள் திருத்தூதர்
களைப் பார்த்து, " இவர்கள் உன்னத கடவுளின் பணியாளர் கள்" என்று உறக்க சத்தமாய் கூறினாள். இவ்வாறு பல நாட்கள் அவள் செய்து வந்தாள். பவுல் எரிச்சல் அடைந்து, அவள் பக்கம் திரும்பி, " நீ இவளை விட்டு போகுமாறு அந்த அசுத்த ஆவிக்கு கட்டளையிட்டார், உடனே, அந்த
அசுத்த குறி சொல்லும் ஆவி
அடிமை பெண்ணை வி்ட்டு விலகியது. ஒரு மனிதன் தன் நண்பர்கள் மற்றும் எதிரிகளால் அடையாளம் காணப்படுவார் என்ற வழக்க சொல்லின்படி,"
இயேசு கிறிஸ்துவின் பெயரில் அவள் வெளியே வர வேண்டும் என்று நான் உனக்கு கட்டளையி டுகிறேன்" என பவுல் அடிகளார் கூறியது ஆண்டவர் இயேசுவை நினைவுபடுத்துவதாகும்.:இயேசு தன் சொந்த அதிகாரத்துடன் பேய்களை வீரட்டினார். இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தில் மட்டுமே பேய்களுடன் பேசுவதில் பவுல் கவனமாக இருந்தார். இவ்வாறே, சமூகத்தில் அடிமை
யாகவும், பிசாசின் ஆவியுடனும்
மிகவும் சிரமப்பட்ட பெண்ணி
ற்கு விடுதலை கொடுத்து, சமுக
மதிப்பை கொடுத்தவர் ஆண்ட
வர் வழியில் தூய பவுல் அடிகளார்.பெண் விடுதலையே
சமுக விடுதலையகும்.
Note: ( *David Guzik commentary on Acts 16)
3.பெரிய நம்பிக்கையுடைய தாய்.A great faith woman.மத்தேயு 15:21-28.
இயேசு, தன்னுடைய ஊழியத்தின் நாட்களில் முதன் முதலாக கலிலேயா, சமாரியா,யூதேயா ( யூதர்கள் வாழும் பகுதி) பகுதியிலிருந்து சுமார் ஐம்பது மைல்கள் தொலைவில் உள்ள யூதர்கள் வசிக்காத தீரு சீதோன்
என்ற கானானிய பட்டணங் களுக்குக் கடந்து சென்றார்.(Phoenicians dwelt) இவர்கள் விக்கிரகத்தை வழிபடுகிறவர்கள். இவர்களுடைய விக்கிரகம் அஸ்தரோத். இந்த பட்டணங்கள் இப்போது, லெபனான் தேசத்தில் காணப்படுகிறது.
இயேசு , கலிலேயா, சமாரியா, யூதேயா என்ற இடங்களின் எல்லைகளை விட்டு வெளியே
செல்வது, நற்செய்தி உலகெங் கும். எடுத்துச்செல்லவேண்டும் என்ற அடிப்படையிலானது.It fore-shadows the going out of the gospel to the whole world.(Barcklay)
இங்கு வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் இயேசுவிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினாள்.
சொந்த இஸ்ரவேல் ஜனங்கள் இயேசுவை யாரென்று தெளிவாக அறியாதபோதும், புற இன பெண் இயேசுவை ஆண்டவராகவும், ராஜாவாகவும் கண்டு கொண் டாள்.தொடர்ந்து, வேண்டிக்
கொண்டே வருகிறள் ஆண்டவர்
கண்டுகொள்ளவில்லை. பாலஸ்
தீனத்தில், யூதர்களால் பல
தொல்லைகளை கண்ட ஆண்டவர், புற இனத்தார்
பகுதியிலாவது தனிமையாக இருக்க விரும்பினார். ஆனால்
கானானிய பெண் விடவில்லை.
எனவே, சீடர்கள் ஆண்டவரை அணுகி, "நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர். இயேசுவோ, மறுமொழியாக, "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.
மீண்டும், அவள் பணிவாய் வேண்டினாள்.
கானானியர்களுக்கும், யூதர்களுக் கும் பழைய பகை இருந்தது.The Canaanites were the ancestral enemies of the Jews. (Josephus - a Jews historian) அதனால்,ஆண்டவர்
அவளை பழிவாங்க விரும்ப வில்லை. அவளின் உள்ளத்
தில் உண்மை வழிபாட்டை
உருவாக்கவே அமைதி காத்தார்.
பிறகு, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டி களுக்குப் போடுவது முறையல்ல" என்று அப்பெண்ணிற்கு அளித்த பதில், அதிர்ச்சியானது.ஆண்டவர்
அவளின் பொருமையை சோதிக்
கிறாள்.(To call a person a dog was a deadly and a contemptuous insult outwardly).ஆனால், ஆண்டவர்
குறிப்பிடும் நாய் வீட்டில் வளர்க்
கும் நாய். A gentle little household dog, but not street dog.(Kunaria)
இந்த பதிலை கேட்ட கிரேக்க
பெண் கோபம் அடையவில்லை.
கிரேக்கர்கள் (Hellenes) அறிவாளி கள். கிரேக்கம் தத்துவ ஞானி களின் பிறப்பிடம்.உலகின் முதல் மக்களாட்சி (Democracy) மலர்ந்த
மண்ணில் பிறந்தவள்.எனவே, மிக சாதுரியமான, அறிவான, உள்ளத்தை உடைக்கும் பதிலை உடனே கூறுகிறாள். "ஆம் ஐயா,ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசை யிலிருந்து விழும் சிறு துண்டு களை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்றாள். இப் பதில் ஆண்டவரின்
உள்ளத்தை உடைத்தது, அவரின் இரக்கம் நிறைந்த அன்பின் கண்கள் அவளை நோக்கியது. அவளின் பற்றுறுதி ஆண்டவரை மெய்சிலிர்க்க வைத்தது. இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
தன் மகளுக்காக விடாமல்
போராடிய இத் தாய், திரு விவலியத்திலேயே பெரிய
(Great) நம்பிக்கை உடைய பெண்ணாக ஆண்டவரால் அடையாளப்படுத்துகிறார்.
4. கானானிய பெண்ணிடம் கண்ட சிறப்பான குணங்கள்.
Excellent qualities found in a Canaanite woman.
கிறித்துவின் அன்பர்களே!
கானானிய பெண் தன் மகள்
நலம் பெற வேண்டும் என்பதற் காக அவள் எடுத்துக் கொண்ட
முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட
வேண்டியது.
1. அவள் தன் மகளுக்கு ஒரு
அன்புள்ள தாயாய் இருந்தாள்.
அன்பு இறுமாப்பு அடையாது
என்பது அவளின் செயல்களின்
வெளிப்பாடு.
2.விசுவாசமுள்ள தாய். ஆண்டவர்
அவளுக்கு அன்னியமானவர். ஆனாலும், அவர்மீது தீராத நம்பிக்
கை உடையவளாய் இருந்தாள்.
3 ஆண்டவரை வணங்கிய தாய்
பணிந்து முழங்காலில் நின்று
வேண்டினாள்
4 விடாமுற்சியுடன் ஆண்டவரை
வேண்டினால்.இயேசுவே அவளுக்கு ஒரே நம்பிக்கை.
5 பொறுமை, அறிவு, பணிவு
நிறைந்த தாய்.ஆண்டவர், அவள் கேட்ட உடனே சுகம் அளிக்காமல்
தாமதித்தபோதும் பொறுமை
காத்தாள்.
6.இவள் அன்னிய பெண்ணாக
இருந்தபோதும். ஆண்டவரை
"தாவிதின் மகனே" என அழை
க்கிறாள். அது அரசியல், அதிகார வழியில் ஆற்றல் மிக்க பெயர்தான் தாவிதின் குமாரன். அப்பெயரிளே தன் மகளுக்கு நலம் வேண்டுகிறாள். இறுதியில், தன் மகளுக்கு நலம் பெற்றாள்.
அன்பு, பண்பு,அறிவு நிறைந்த
தாய், பிள்ளைகளுக்கு மகுடமாக
இருக்கிறார்கள். பெண்குழந்தை
கள் ஒரு வீட்டின் கண்கள், நாட்டின்
செல்வங்கள், திருச்சபை வளர்ச்சிக்கு எதிர்கால தூண்கள்.
இக்குழந்தைகளை கண்மணி
போல் காப்பாது நம் அனைவரின்
கடமையள்ளவா? அவ்வாறு, அவர்களை காக்க கடவுள்
கிருபை செய்வாராக! ஆமேன்.
Prof. Dr.David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
" If you educate a man, you educate an individual, but if you educate a woman, you educate a family.”
Comments
Post a Comment