ஆண்டவரின் வருகைக்கு இறைவேண்டலோடு காத்திருத்தல் (169) Waiting prayer fully for the coming of the Lord. மல்கியா: 4:1-6, திருப்பாடல்: 121, 2. தெசலோனிக்கியர் 2:1-17. மத்தேயு 25: 1-13.
முன்னுரை:
கிறித்துவின் அன்பு விசுவாசி களே! உங்க அனைவருக்கும் இயேசு கிறித்துவின் இனையற்ற திரு நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வார தலைப்பு,"ஆண்டவரின் வருகைக்கு இறைவேண்ட லோடுகாத்திருத்தல்." காத்திருத்தல் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமாக நடந்தே வருகிறது. ஒரு தாய் தன் குழந்தை பிறப்பிற்காக 10 மாதம் காத்திருக்கிறாள். மாணவர்கள் தேர்வுக்காகவும், நல்ல வேலைக்காகவும் காத் திருக்கின்றனர்.சிலர் திரு மணத்திற்காக காத்திருக்கின் றனர். இப்படி காத்திருப்பது நம் வாழ்வின் அங்கமாக உள்ளது. சங்கீதக்காரன் "ஆண்டவர் முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரை யும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே (திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 37:7)என்கிறார். மற்றும் " தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்; ஆண்டவருக் காகக் காத்திருப் போரே நிலத்தை உடைமையாக் கிக் கொள்வர். (திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 37:9) இந்த உலகம் நம்பிக்கை யுடன் காத்திருப்போருக்கு சொந்தமானது.அவ்வாறே,ஏசாயா தீர்க்கர்,காத்திருக்கும்நபர்களுக்கு அளிக்கும் வாக்குதத்த வார்த்தை, "ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார். (எசாயா 40:31) என்கிறார்.இது மகா உன்னத வாக்குதத்தம்.இயேசுகிறித்துவின் இரண்டாம் வருகை தான் புதிய ஏற்பாட்டின் புதிய கீதமாகும்.புதிய ஏற்பாட்டில் ஒவ்வொரு 25 வசனங் களில் ஒரு வசனமாவது ஆண்ட வரின் இரண்டாம் வருகையை குறிப்பிடுகிறது. மற்றும் 318 முறை ஆண்டவரின் வருகையை ஆழமாக புதிய ஏற்பாடு பிரதி பளிக்கிறது.இதன் அடிப்படை யில்தான் திருச்சபைகள் அப்போஸ்தலர் விசுவாசப் பிரமானத்தையும், (Apostelic Creed) நிசேயா பிரமானமும் (Nicene Creed) ஆண்டவரின் இரண்டாம் வருகையை உறுதி மொழியாய் நமக்கு அளித்திருக்கிறது. இந்த அறிக்கை நம்மை இறை வேண்டலுடன் (prayerfully) காத்திருக்க வேண்டுகிறது.இதில் மிகவும் முக்கிய வார்த்தை இறைவேண்டல். அதாவது prayerfully என்ற adverb, highlight ஆக இத்தலைப்பில் பயன்படுத் தியிருப்பதை மிகவும் கவனிக்க வேண்டும்.Adverb என்பது தமிழில்ì வினை உரிச் சொல் அதாவது அதன் தன்மையை மிகப்படுத்தி காட்டுவது. இங்கு இறை வேண்ட லுடன் என்ற வார்த்தை காத்திருப்பதற்கு மிகைப்படுத்துகிறது. ஆண்டவர் மத்தேயு 25:13ல்,எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது. என்றார். ஆண்டவர் வருகிறார் என்பது நம்பிக்கையின் வார்த்தை.
ஆண்டவரின் பிறப்பை, "இஸ்ரவேலை ஆளப்போகிறவர் பெத்லகேமிலிருந்து புறப்பட்டு வருவார் (மீகா 5:2). என்று முன்னரிவித்த மீகா தீர்க்கரின் வார்த்தை 700 ஆண்டிற்கு பிறகுதான் அது நிறைவேறியது. எருசலேம் நகரில் உள்ள பெதஸ்தா குளத்தில் 38 வருடம் படுத்த படுக்கையாயிருந்த நபர் ஆண்டவர் வந்து சுகம் கொடுக்க 38 வருடம் காத்திருந்தார். விசுவாசிகளின் தகப்பனான ஆபிரகாம், சாராள் கடவுளின் வாக்குதத்தம் நிறைவேற ஈசாக் பிறக்கும் வரை காத்திருந்தனர். ஆடுகளை மேய்த்திருந்த தாவிது, சாமுவேல் தீர்க்கரால் அரசராக திருப்பொழிவு பெற்றவுடன் அரசராக பொருப்பேர்க்க வில்லை,சவுல் மரிக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இப்படி, காத்திருப்பது கடவுள் ஒரு காலகட்டத்தை ஒவ்வொன்றிகும் வைத்திருக்கிறார்.எனவே, ஆண்டவரின் வருகைக்கு இறை வேண்டலுடன் காத்திருப்பது, நம் கடமைள்ளவா?
1.நம்பிக்கை தரும் ஆண்ட வரின் வருகை:The coming of the Lord of hope. மலாக்கி 4:1-6 கிறித்துவின் அன்பு இறை மக்களே! மல்கியா தீர்க்கர் கி,மு5ம் நூற்றாண்டில் எருசலேம் தேவாலயம் மீண்டும் கட்டிய பிறகு எழுதப்பட்ட நூலாகும்.மலாக்கி என்றால்," என் தூதர்" My Messenger எனபொருள்படும்.ஆகாய், சக்காரியா தீர்க்கர்களுக்குப் பிறகு தோன்றியவர். ஆலயம் கட்டிய பிறகு கடவுளுக்கு பிரியமா இருக்க வேண்டிய மக்களும், குருக்களும் கொஞ்சம் கொஞ்சமாக கடவுளை விட்டு வழிவிலகி புற இனத்து பெண் களை மணந்தார்கள். காணிக்கை செலுத்துவதில் காயப்படுத்தினர், தூயகத்தை தீட்டுப்படுத்தினர். இந்த சூழ்நிலையில் கடவுளின் வார்த்தை அவருக்கு உண்டானது. ஆண்டவரின் வருகைக்கு தயாராகுங்கள் என்ற உன்னத எச்சரிக்கை ( வசனம் 4:1) கொடுக்கிறார்.அவ்வாறே, நம்பிக்கையும்(வசனம்4:2) தருகிறார். கடவுள் மோசேமூலம் இஸ்ரவேலருக்காக ஓரேபு மலையில்( சீனாய் மலை) கொடுக்கப்பட்ட நீதிசட்டங் களையும், நியமங்களையும் நீதிநெறிகளையும் நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.(வசனம்4:4) "இவைகள் அனைத்தும், இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது. (கலாத்தியர் 3:24) "The law was our schoolmaster to bring us unto Christ." ஐந்தாம் வசனத்தில், தீர்க்கர் இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். என்கிறார். யார் அந்த எலியா?அவர்தான் திருமுழுக்கு யோவான் (மத்தேயு 11:10-15, 17:10-13,லூக்1:13-17) (The symbolic representation of Elijah was John the Baptist)அன்புக்குரியோரே!மல்கியா தீர்க்கருக்குப்பிறகு திருமுழுக்கு யோவான்தான் வேதத்தின்படி இறைவாக்குரைத் வர், ஆண்டவருக்காக வழியை ஆயுத்தப்படுத்துங்கள்என்றார். ஆறாம் வசனத்தில் தீர்க்கர் ஒரு நம்பிக்கையை தருகிறார் "உலகைச் சபித்துத் தண்டிக் காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத் தும், பிள்ளைகளின் உள்ளங் களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார். " இந்த நம்பிக்கை நம்மில் நிறைவேற காத்திருப்போம்.
2.விழிப்புடன் காத்திருங்கள்: Stay Alert.2 தெசலோனிக்கியர் 2:1-17. கிறித்துவின் அன்பு சகோதரர்களே! திருதூதர் பவுல் அடிகளார் கி.பி 51 ம் ஆண்டு 2ம் திருமுகமான தெசலோனிக்கியர், கொரிந்து பட்டணத்திலிருந்து எழுதினார்.இந்த நிருபத்தில் பவுலின் போதனைகள் முதன்மையாக இயேசு கிறிஸ் துவின் இரண்டாம் வருகையை மையமாகக் கொண்டவை.பவுல் தெசலோனிக்காவில் சீலாவுடன் உழைத்தார்,
"தெசலோனிக்கா" என்ற பட்டணம் மகா அலெக்சாண்டர் அவரின் ஒன்றுவிட்ட சகோதரி பெயரால் அழைக்கபட்டது. இவள் மாசிடோனியோ மன்னன் பிலிப்பின் மகள். அலெக்சாண் டரின் தந்தை. இதன் அசல் பெயர்," தெர்மல். இன்று, அதன்பெயர் சலோனிகா இது 70,000 மக்கள் தொகை உள்ளது. பவுல் தெசலோனிக்காவில் வசித்த பரிசுத்தவான்களுக்கு எழுதினார், பவுலின் காலத்தில் அதன் மக்கள்தொகை 200,000 ஆக உயர்ந்தது. பவுல் தெசலோனிக்காவில் தங்கிய செய்தி திருதூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 17:1-10 இல் உள்ளது, அவர் ஜெப ஆலயத்தில் மூன்று ஓய்வுநாட்கள் (திருதூதர் பணிகள் 17:2) பிரசங்கித்தார், அதாவது அவர் அங்கு தங்கி யிருந்தது மூன்று வாரங்களுக்கு மேல் இருந்திருக்க முடியாது. யூதர்கள் கோபமடைந்து, பல பிரச்சனைகளை எழுப்பியதால், பவுல் தனது உயிருக்கு ஆபத்து என உணர்ந்து, பெரோயாவுக்கு கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். பெரோயாவிலும் இதேதான் நடந்தது (திரு தூதர் பணிகள் 17:10-12) மற்றும் பவுல் தீமோத்தேயுவையும் சீலாவையும் விட்டுவிட்டு ஏதென்ஸுக்கு தப்பிச் செல்ல வேண்டியிருந்தது. கிறித்தவம் மீண்டும் வேரோடு பிடுங்கி எறியப்பட முடியாத அளவுக்கு ஆழமாக விதைக் கப்பட்ட ஒரு இடத்தில் மூன்றே வாரங்களில் இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியுமா? இரண்டாம் வருகையைப் பற்றிய பிரசங்கம் ஒரு ஆரோக்கியமற்ற சூழ்நிலையை உருவாக்கியது, இரண்டாம் வருகை வருவதற்கு முன்பு மரித்தவர்களுக்கு என்ன நடக்கும் என்று அவர்கள் கவலைப்பட்டனர்.இயேசுவில் மரித்தவர்கள் எந்த மகிமை யையும் இழக்க மாட்டார்கள் என்று பவுல் விளக்குகிறார் ( 1 தெசலோனிக்கேயர் 4:13-18 ).
இரண்டாம் வருகை வருவதற்கு முன் என்ன அடையாளங்கள் முதலில் வர வேண்டும் என்பதை யும் பவுல் விளக்குகிறார். இது இரண்டாம் வருகையைப் பற்றிய உற்சாகமான தெசலோனிக் கேயர்களின் எண்ணங்களை சரிசெய்ய முயல்கிறது.
1.திருதூதர் பவுல் அடிகளார் தெசலோனிக்கேயர்களிடம் அவர்கள் இரண்டாம் வருகைக்காக பதட்டமான, வெறித்தனமான காத்திருப்பைக் கைவிட வேண்டும் என்று கூறினார்.
2.கர்த்தருடைய நாள் வந்துவிட்டது என்று தான் சொல்லவில்லை என்று மறுத்தார்.
3.கர்த்தருடைய நாள் வருவதற்கு முன்பு இன்னும் நிறைய நடக்க வேண்டும் என்று அவர் அவர் களிடம் கூறினார்.
4. முதலில் கடவுளுக்கு எதிரான கிளர்ச்சியுகம் வரும்; இந்த உலகத்தில் ஏற்கனவே ஒரு இரகசிய தீய சக்தி வந்துவிட்டது,
5.இயேசு கடவுளின் அவதாரமாக இருந்ததைப் போலவே தீமையின் அவதாரமான ஒருவர் எங்கோ வைக்கப்பட்டார். அவர் பாவத்தின் நாயகன், அழிவின் மகன், சட்டமற்றவர்.
6. கிறிஸ்து சட்டமற்றவனை( நீதி சட்டங்கள்) முற்றிலும் அழித்துவிடுவார்; கிறிஸ்துவின் மக்கள் அவருடன் கூடிவரு வார்கள், சட்டமற்றவரைத் இறுதிப் போரில் கடவுள் வெற்றி பெறுவார் என்றும் கடவுளுக்கு எதிரான இந்த சக்தி இறுதியாக அழிக் கப்படும். கிறிஸ்தவ வாழ்க்கை காலத்தோடு முடிவதில்லை; அதன் குறிக்கோள் நித்தியம். எனவே, கர்த்தரின் இரண்டாம் வருகைக்காக விழிப்புடன் காத்திருப்போம்.( William Barclay Daily Bible Study)
3. ஆண்டவரின் வருகைக்கு இறை வேண்டலுடன் காத் திருத்தல். Waiting prayerfully for the coming of the Lord. மத்தேயு25:1-13.
கிறித்துவின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கும் அன்பு விசுவாசிகளே! ஆண்டவர் இந்த உவமையை தனது மரண ஊழியத்தின் முடிவில், பத்து கன்னிகைகளின் உவமையைக் கூறி, இரண்டாம் வருகைக்குத் தயாராக இருப்பதன் முக்கியத் துவத்தை தம் சீடர்களுக்குக் கற்பித்தார். இறைவன் மீண்டும் வரும்போது அவரைச் சந்திக்க உங்களைத் தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவும் உணரவும் இந்தப் உவமை உதவும்."அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்குகிறார். மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். இவர்களில் 5 பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். இவர்கள் தேவனுடைய குமாரனின் வருகைக்கான ஆயத்தமாக இருந்திருக்க வேண்டும்; அவர் வரும்போது அவருக்காக அவர்கள் தயாராக இருந்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக அவர்கள் மிகவும் தயாராக இல்லை, அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. எண்ணெய்தூய ஆவியை குறிக்கும். தூய ஆவிஅனைவரையும் ஒளிர செய்வது.முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். ஏன் தாமதம் என்றால் அனைவரும் இரட்சிக் கப்படவேண்டு்ம் என்பது ஆண்ட வரின் விருப்பமாகும்.
இதோ, மணமகன் வருகிறார் என்ற ஒலி ,விளக்கேற்றுகின் றனர்.அறிவிலிகள் முன்மதியு டையோரைப் பார்த்து, "எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் என்றார்கள். புத்தியுள்ளவர்கள் "உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வ துதான் நல்லது" என்றார்கள். புத்தியற்றவர்கள் எண்ணெய் வாங்க சென்றபோது மணமகன் வந்துவட்டார் . ஆயத்தமா இருந் தவர்கள் உள்ளே பிரவேசித்தனர் கதவும் அடைக்கப்பட்டது. புத்தியற்றவர்களை பார்த்து, மணமகன் உங்களை தெரியாது என்றார்.
சிந்திக்க:
எனவே மூடப்பட்ட கதவு. யூதர்களின் ஆயத்தமின்மையின் சோகம் இங்கே நாடக வடிவில் உள்ளது.
ஒரு மனிதன் கடவுளுடனான உறவை கடன் வாங்க முடியாது; முட்டாள் கன்னிப்பெண்கள் எண்ணெய் தேவை என்று கண்டறிந்ததும் கடன் வாங்குவது சாத்தியமில்லை
உலகில், கடன் வாங்க முடியாத சில விஷயங்கள் உள்ளன என்று அது நம்மை எச்சரிக்கிறது.
அவ்வாறே, கடைசி நிமிடத்தில் பெற முடியாத சில விஷயங்கள் உள்ளன என்றும் எச்சரிக்கிறது இந்த நிலை நமக்கு வராமலிருக்க, விண்ணப் பத்துடன் ஆண்டவர் வருகைக் காக காத்திருப்போம்.
"Prayer is a strong wall and fortress of the church; it is a goodly Christian weapon. - Martin Luther"
'"Prayer does not mean asking God for kinds of things we want, it is rather the desire for God Himself, the only Giver of Life. - Sadhu Sundar Singh
Prof. Dr.David Arul Paramanandam Sermon Writer.
www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
Comments
Post a Comment