Skip to main content

பாவத்தின் கட்டிலிருந்து விடுதலை.(172) Deliverance from the bondage of Sin. விடுதலை பயணம் Exodus 14:1-14 திருப்பாடல் 37:1-12, ரோமர் 8:1-11 யோவான் 8;31-38.Advent Third Sunday.

முன்னுரை:கிறித்துவின் அதிசயமான நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வார தலைப்பு
"பாவத்தின் கட்டிலிருந்து விடுதலை" பாவக் கட்டு என்றா
ள் என்ன? What's the bondage of sin?
திருத்தூதர் பவுல் அடிகளாரின்
கூற்றுப்படி ( உரோமையா 7:15-20),
" ஒருவன் தான் என்ன செய் கிறான் என்பதை தெரியாமலும் (Ignorant),எந்த நன்மையை செய்ய
 விரும்புகிறேனோ அதை அவன் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறான். அவ்வாறு செய்வது அவனுள் குடிகொண்டிருக்கும் பாவமே" இவனே, முழுமையாக
பிசாசினால் ஆட்சி செய்யப் படுகிறான்." இதுவே, பாவ கட்டாகும். இதன் பலன் மரணம்.
நம் ஆண்டவரின் நாமங்களில் ஒன்று, "இரட்சகர்"(Saviour) நம்மை
பாவத்திலிருந்து விடுதலை (deliverance), அளிக்கும் இரட்சகர். இரட்சகர் என்ற வார்த்தை 'Sotiris' என்ற கிரேக்க வார்த்தை, புதிய ஏற்பாட்டில், அது "Saviour"என்று        அழைக்கப்படுகிறது. அது இயேசு கிறித்துவிற்கு மட்டுமே பொருந்தும்.  ஆனால், அன்பான வர்களே! பழைய ஏற்பாட்டில் சில
நீதி அரசர்கள், (Judges) மற்றும் 2 அரசர்கள் 13:5 ( 2 Kings 13:5)ல்,       ம் வசனத்தில்,  யோவாகாஸ் (Joash)என்ற அரசன், அராமியர் என்ற சிரியர்களை வென்று இஸ்ரவேலரை மீட்டார், இவரை
சேவியர்( இரட்சகர்) என அழைக்கப்படுகிறார். ஆனால், நம்மை போன்ற பாவிகளை மீட்கவே, இயேசு கிறித்து இவ் உலகில் வந்தார்.எனவே, திருதூதர் பவுல் அடிகளார், "நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமை களாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டி ருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். 
(உரோமையர் 6:6) என்கிறார். பாவத்திலிருந்து விடுதலை
என்பது, நம் ஆண்டவர் அளிக்கும்
உறுதி (promise) யாகும். பாவம்
அழிவின் சக்தி (the power of evil),
இது கடவுளின் நல்லுறவிலிருந்து
பிரிக்கிறது.இதுவே, உலகை
ஆள்கிறது." ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்த வர்களாய் இருக்க முடியாது. 
(உரோமையர் 8:8) என பவுல்
அடிகளார் கூறுகிறார்.எனவே,
ஆண்டவர் இயேசு கிறித்து,
சிலுவை மரணத்தின் மூலம்  நம்
பாவங்களிலிருந்து விடுதலை
தந்தார் என்பதே மீட்பின் நற்
செய்தியாகும்.
1.எகிப்தில் இருந்து விடுதலை Deliverance from Egypt (Exodus 14:1-14) வி.,ப..)
கிறித்துவின் அன்பிற்குறியோர் களே! எகிப்தின் அடிமைத்தனத் திலருந்து, இஸ்ரவேலரை மீட்க
மோசஸ் என்ற மீட்பரை கடவுள்
தெரிவு செய்தார். மோசஸ் இயேசு
கிறித்து என்ற இரட்சகரை பிரதி பலிக்கிறார். செங்கடல் பாதை
இஸ்ரவேலருக்கு விடுதலை,
கல்வாரி பாதை உலக மக்களின்
மீட்பின் பாதை.செங்கடல் 150 மைல் அகலம் 1 மைல் ஆழம்
நிறைந்தது. இஸ்ரவேலர் இப்
பகுதியை நேரிடையாக செங் கடலை கடந்திருந்தால், அவர்கள்
எளிதில் அரேபிய தீபகற்பத்தை
அடைந்திருப்பர், ஆனால் அது
நடக்கவில்லை.இஸ்ரவேலர்
சீனாய் தீபகற்பத்தின் வழியாக
வடமேற்கு பகுதியில் உள்ள
செங்கடலை ( தற்சமயம் சூயஸ்
கால்வாய்) கடந்தனர்.
 1.செங்கடல், எகிப்து மன்னன்
பாரோ விற்கு கடந்து செல்ல
முடியாத (impassable) கடல்,
2.செங்கடல், இஸ்ரவேலருக்கு
நம்பிக்கையற்ற தன்மையை
குறிக்கிறது,3.செங்கடலின் ஆழம்
அதன் சக்தி எகிப்தியரின்
இராணுவத்தை மூழ்கடிக்கும்
ஆற்றல் பெற்றது.4. செங்கடல், கடவுளின் வல்லமையால், இஸ்ரவேலரை கடக்க செய்தது.
5. செங்கடலின் வெற்றி கானான் என்ற ஒரு தேசத்தின் பிறப்பாகும்.
எகிப்து பாவத்தின் அடையாளம்.
அடிமை வாழ்வு விடுதலையின்
விடிவு.இவர்களின் கானான்
நித்திய வாழ்வின் நம்பிக்கை.
எகிப்து என்பது சாத்தானின் சேவையில் ஒரு வகையான பாவம் மற்றும் பிணைப்பு ஆகும்.
பாரோ ஒரு வகை சாத்தான்.
இஸ்ரேலை விடுவிக்க, கடவுள் மோசேயை அனுப்புவது ஒரு வகையில், கிறிஸ்தவர்களை விடுவிக்க, தந்தை கிறித்துவை அனுப்பியது போல் உள்ளது.
இரண்டும் விடுதலையை குறிக்கும்.இஸ்ரேல் வனாந்தரத் திற்குள் நுழைவது தேவாலயத் தில் கிறிஸ்தவர்களின் நுழைவின் அனுகு முறையை குறிக்கும், அது ஒரு தேர்வு. 
இந்த வனாந்தரம் ஒரு வகையான தேவாலயம்.பாவம் நிறைந்த இஸ்ரேவேலர்,  கானானுக்குள் நுழையவில்லை என்பது.                 " கிறிஸ்தவர்கள்"அனைவரும் பரலோகத்தில் நுழைய முடியாது
 என்ற எச்சரிக்கையாகும்.கானான் ஒரு வகையான பரலோகம்.
"Canaan is a type of our journey from the Egypt of sin into the everlasting Canaan."(Based on William Barclay Study light Bible org.)
கிறித்துவின் விடுதலை. Deliverance from Christ: ரோமர். Romans: 8:1-11
கிறித்துவுக்கு பிரியமானவர்களே!
தூய பவுல் அடிகளார், ரோமருக்கு
எழுதிய நிருபம் 8ம் அதிகாரத்தில்
இரண்டு காரியங்களை மீண்டும்
மீண்டுமாக வலியுருத்துகிறார்.
1 சரிரமாகிய நம் உடல். Flesh என்ற வார்த்தை 'Sarx " என்ற 
கிரேக்க வார்த்தையை குறிக்கிறது.
ஆவி spirit: என்ற வார்த்தை   pneuma, நியூமா என்ற  கிரேக்க வார்த்தையை குறிப்பிடுகிறார்.
உலகில் முதல் பாவம், முதல்
மனிதன் ஆதாம் மூலம் உண்டா
னதுபோல், விடுதலையும் கடைசி
ஆதாம் இயேசு கிறித்துவால்
உண்டானது. எனவே, திருதூதர்
பவுல் அடிகளார், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப் போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. (உரோமையர் 8:1) என்கிறார்.  பவுல் அடிகளார்
தான் எழுதிய 13 நிருபங்களில்
சரிரம் என்ற  வார்த்தையை மிக அதிகமாக பயன்படுத்துகிறார்.
 ஏனேனில், சரிரத்தை, மரண சரிரம் என உருவகப்படுத்து கிறார். "அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? (உரோமையர் 7:24)" என கேட்கிறார். அதுமட்டு மின்றி,  ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்த வர்களாய் இருக்க முடியாது. 
(உரோமையர் 8:8) ஒருவன் சரிரத்
தினால் ஆளுமை கொள்ளாமல்,
தூய ஆவினால் ஆட்கொள்பவரே 
கடவுளுக்கு பிரியமாய் இருக்க
முடியும்.நாம் யாரை பிரிய படுத்து கிறோம்? கடவுளையா, மனித னையா? பிசாசானவனையா?
ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு,  அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன். (கலாத்தியர் 5:19-21)என பவுல் அடிகளார் திட்ட வட்டமாக கூறுகிறார்.எனவே,
அனைத்து அடிமைத்தன பாவத்
திலிருந்து விடுதலை பெற
இயேசு கிறித்துவின் இரத்தம்
நம்மை விடுதலையாக்கும்.
3.பாவகட்டிலிருந்து விடுதலை.
Deliverance from the bondage of Sin.   யோவான் 8;31-38.
கிறித்துவுக்கு பிரியமான அன்பர் களே!   ஒருவன் பாவ கட்டிலிரு ந்து    விடுதலை பெறவேண்டு
மெனில் முதலாவதாக அவன்
 ஆண்டவரின் சீடராக மாற வேண்டும்  என்ற கருத்தை தன் மீது நம்பிக்கையுள்ள யூதர்
களிடம் ஆண்டவர் பேசினார்.
சீடத்துவம் என்பது என்ன?
1, சீடத்துவம் என்பது ஆண்டவரை
நம்பி, உண்மையாக ஏற்றுக் கொள்வது.
2. சீடத்துவம் என்பது நிலையாக
ஆண்டவரின் வார்த்தையில் நிலைத்திருப்பது
3. சீடத்துவம் என்பது உண்மை யை அறிந்தவர்கள். அந்த உண்மையே (இயேசு) நமக்கு விடுதலை அளிக்கும்" என்றார். 
 யூதர்கள் அவரைப் பார்த்து, "'உங்களுக்கு விடுதலை கிடைக்கும"; என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!" என்றார்கள்.உண்மை
யில் யூதர்கள் அரசியல் ரீதியாக
ரோமர்களுக்கு அடிமை. விடுதலை என்ற வார்த்தை
யூதர்களுக்கு கசப்பான வார்த்தை யாக இருந்தது. நாங்கள் யாருக் கும் அடிமையில்லை என்றார்கள்.
அதற்கு இயேசு, "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். என்றார். இயேசு
கிறித்து ஒருவரே பாவத்திற்கு அடிமையான  நம்மை விடுவிக்க
முடியும்.கிறித்து எங்கேயோ,
அங்கே விடுதலை உண்டு.இயேசு
கிறித்துவின் சிலுவை மரணமும்,
உயிர்த்தெழுதலும் நமக்கு பாவ
கட்டிலிருந்து விடுதலை தரும்
மீட்பின் கொடையாகும்.(The Gift of
Redemption)
எனவே, இப் பாவ உலகில் , வாழும் மனிதன் ஏதாவது ஒன்றிற்கு அடிமைப்பட்டு விடுபட
விரும்புகின்றவர்களுக்கு இயேசு கிறித்து ஒருவரே வழியாகும்.



Prof. Dr. David Arul Paramanandam,
Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com 


Note: This Sermon is prepared to
deliver at CSI St.Peter's Church,
Theettalam, Uthuramerur, Pastore on
15/12/24 




           bondage of sin

bondage of sin


Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

கிறித்துவை அர்ப்பணித்தல் (181) The Presentation of Christ 1 சாமு வேல் 1: 19-28, திருப்பாடல் 118: 19-29, உரோமையர் 11:33-36, 12:1,2. லூக்கா 2:22-40.