குணப்படுத்தும் இடமாக குடும்பம் (175) Family as a healing space.தொடக்க நூல் 33:1-11, திருப்பாடல்: 91, எபேசியர் 6:1-9, லூக்கா 15:11-24. குடும்ப ஞாயிறு.
முன்னுரை:

கிறித்துவின் அன்பு குடும்பத்தி னரே! இவ்வருடத்தின் இறுதி
ஞாயிறு குடும்ப ஞாயிராக
கொண்டாடுகிறோம். குடும்பம்
நம் கடவுளின் பரிசு.இதனை
காப்பது நம் கடமை. குடும்பம்
சமுகத்தின் அமைப்பு. பல சமுக
அமைப்பே நாடாகும்.அவற்றில்
நல்ல குடும்பங்கள் நல்ல
நாட்டின் அடையாளங்கள்.நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று குடும்ப விளக்கின் முன்னுரையில் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.
"இல்லறமல்லது நல்லறமன்று - இல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது" என்பது ஒளவையாரின் கூற்று. எபிரேய குடும்பம் குடும்பத் தலைவர், அவரது மனைவி, தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் வேலையாட் களைக் கொண்டுள்ளது. பைத் Bayith ( (வீடு) என்ற ஹீப்ரு வார்த்தை குடும்பம் என்ற வார்த்தையுடன் நெருக்கமாக தொடர்புடையது. இந்த வார்த்தை "வீடு" (1 நாளாகமம் 13:14), குறிப்பேட்டில் உள்ளது. கிறித்துவ ஆன்மிகத்தில் குடும்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நானும் என் வீட்டாரும் கர்த்தருக்குச் சேவை செய்வோம்” என்ற யோசுவாவின் வார்த்தை கள் பொருத்தமானவை. நம் ஆலயம் (Church) ஒரு குடும்பம்- பல குடும்பங்களைக் கொண்ட குடும்பம். குடும்பம் என்பது அன்பு, மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன் மைக்கான இடம்; காயங்களை ஆற்றும் இடம். பலவீனமானவர் கள் இங்கே பலம் பெறுகிறார்கள்,
குடும்பத்தில் அனுதின குடும்ப
ஜெபம் இருந்தால்தான் கிறித்து
விரும்பும் குடும்பமாகும். ஜெபம்
உள்ள இல்லத்தில் கிறித்து வாழ்
கிறார். ஜெபம் இல்லாத வீட்டில்
பிசாசு வாழ்கிறான். குணப்படுத் தும் இடமாக குடும்பம் இருக்க
அன்பும், மன்னிப்பும் மிகவும்
அவசியம்.
1 அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.? Is there bar that can even love restrain? தொடக்க நூல் Genesis 33:1-11,
கிறித்துவுக்குப் பிரியமானவர்
களே! அண்ணன் என்னடா தம்பி
என்னடா இந்த அவசரமான
உலகில் என கேட்கும் மக்கள்
வாழும் உலகில், அன்பு ஒன்றே
சகோதர உறவுகளில் உள்ள காயங்களை குணமாக்கும். தற்
காலங்களில், சகோதரர்களுக்குள்
ஏற்படும் பிரச்சனைகள் பெரும்
பாலும் சொத்து தகராறுகள்தான்.
நம்முடைய முற்பிதாக்கள்
ஏசாவும், யாக்கோபும் ஈசாக்கின்
புதல்வர்கள். இதில் யாக்கோபு ஏசாவை ஏமாற்றிவிட்டான். யாக்கோபு தன் தந்தை ஈசாக்கிடம் ஆசி பெற, "நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. என்று சொல்லி, நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குங்கள்" என்று
தந்தையை ஏமாற்றி , தன் சகோதரனுடைய ஆசிர்வாதத்தை
பெற்றுக் கொண்டார். இது துரோக செயல்.
இது நடந்து இருபது வருட நீண்ட கசப்பான இடைவெளிக்குப் பிறகு ஏசாவும் யாக்கோபும் சந்திக் கிறார்கள். யாக்கோபு ஏசாவுக்கு அவர் மனம் குளிர பரிசுகளை வழங்குகிறார். கிழக்கத்திய நாடுகளில், உங்களுடைய பரிசு உங்கள் மேலதிகாரியால் பெறப் பட்டால், நீங்கள் அவருடைய நட்பை நம்பலாம்; அது பெறப் படாவிட்டால், நீங்கள் பயப்பட வேண்டிய அனைத்தும் உள்ளன. யாக்கோபு தம் சகோதரரை நெருங்கிச் சென்று ஏழு முறை தரையில் வீழ்ந்து ஏசாவை வணங்கினார்.
ஏசா அவரைச் சந்திக்க ஓடினார் -அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர். அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்?
ஏசாவின் இந்த நடத்தை எவ்வளவு நேர்மையானது மற்றும் உண்மையானது, அதே நேரத்தில் எவ்வளவு மகத்துவமானது! அவர் தனது மனக்கசப்பு அனைத்தை யும் புதைத்துவிட்டார், மேலும் அவரது காயங்கள் அனைத்தை யும் மறந்துவிட்டார்; மன்னிப்பு மட்டுமல்ல, சகோதர பாசத்தின் வலிமையான ஆர்ப்பாட்டங் களுடன் தனது சகோதரனைப் பெறுகிறார். சகோதரர் ஒன்று பட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 133:) இதனால் சகோதரர்களின் காயங்கள் குணமாகியது.ஆண்ட
வராகிய இயேசு குறித்தும்,
" ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள் ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத்தேயு நற்செய்தி 5:23,24) என்கிறார்.நாம் இந்த புதிய வருடத்தில் நுழையும் போது, நம் சகோதர, சகோதரி உறவுகளில் இன்னும் காயங்கள் இருந்தால், அந்த காயங்களை ஆற்றுவதற்கு மன்னிப்போம், மறப்போம், அன்பை பொழிவோம், ஏசாவை
ப்போல் ஓடி சென்று கட்டி அனைப்போம். இதற்கு, நம் ஆண்டவர் நமக்கு உதவட்டும். சகோதரர்களின் காயங்கள் குணமாகும்.
2 குணங்களை வளர்க்கும் இடம் குடும்பம். A family is a place of Character building எபேசியர் 6:1-9.
கிறித்துவுக்கு பிரியமான பெற்றோர்களே! பிள்ளைகளே!
நம் இல்லங்கள் போன்ற மிக
சிறப்பான குணங்களை வளர்க் கும் இடங்கள் வேறு எங்கும்
இல்லை. ஒரு தந்தை ஆயிரம்
ஆசிரியர்களுக்கு சமம் என்பார்
கள். எனவே தான், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பது
தமிழற்பண்பாடு .திருதூதர் பவுல்
அடிகளார், பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உங்கள் தந்தையையும் தாயையும் மதிக்கவும் - இது ஒரு வாக்குறுதி யுடன் கூடிய முதல் கட்டளை -
என்கிறார். பெற்றோர்களே!
தங்கள் பிள்ளைகளை கோபத் திற்கு ஆளாக்கக் கூடாது என்று அப்பாக்களிடம் கூறுகிறார்.
இது இரண்டாம் கட்டளை. குழந்தைகளின் கல்வி, உடல்
நலம், அன்பு, பாதுகாப்பு, மகிழ்ச்சி
கிறித்தவ ஒழுக்கம் அனைத்தை
யும் வழங்கும் பல்கலைக்கழகம்
தான் குடும்பங்களாகும். பத்துக் கட்டளைகளில் ஒன்று மட்டும் ஒரு வாக்குறுதியுடன் வருகிறது- "உன் தந்தையையும் உன் தாயையும் கனப்படுத்து, நீ நீண்ட காலம் வாழ..." (யாத்திராகமம் 20:12;)
இதை பிள்ளைகளுக்கு சிறு
வயது முதலே பயிற்றுவிக்க
வேண்டும். அதேபோல், “தந்தையர்களே, உங்கள் பிள்ளைகளை எரிச்சலடையச் செய்யாதீர்கள்; மாறாக, கர்த்தருடைய பயிற்சியிலும் போதனையிலும் அவர்களை வளர்க்கவும்” (எபேசியர் 6:4). குழந்தைகளின் காயங்களுக்கும் ஒரு குணம் வர வேண்டும். தற்போது, குழந்தைகள் பல்வேறு வழிகளில் காயப்படுத்தப் படுகிறார்கள், சில நேரங்களில் சொல்ல முடியாத வழிகளில். அவர்களின் குணப்படுத்துதல் குடும்பத்தில் - குடும்ப உறவுகள் மூலம் நடைபெற வேண்டும். அதற்கு அடிப்படையானது அன்பே
முக்கியமானது.
இறைவனுக்குக் கீழ்ப்படிவது அவர்களின் வழி. இதுவே 'உங்கள் பெற்றோருக்கு ஆண்டவரில் கீழ்ப்படிதல்' என்பதன் பொருள். ஒரு கீழ்ப்படிதலுள்ள குழந்தை
உண்மையில் அதை கர்த்தருக்கு செய்கிறார். மேலும் இது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கொலோ 3:20ல் கூறுகிறது 'பிள்ளைகளே,எல்லாவற்றிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப் படியுங்கள், இது கர்த்தருக்குப் பிரியமானது.' ஆனால், மிக துரதிர்ஷ்ட வசமாக, குழந்தை களின் பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் குறைந்து வருகிறது. ஒரு பெற்றோர் தங்கள் குழந்தையிடம் எதிர்பார்ப்பது கடந்த 40 ஆண்டுகளில் மிகவும் மாறிவிட்டது... நல்ல முறையில் அல்ல. மிகவும் முற்றிலும் மாறாக, பழைய ஏற்பாட்டு நாட்களில் கீழ்ப்படியாத குழந்தைக்கு விளைவுகள் இருந்தன. அது போன்ற, கடுமையான விளைவு கள். இது தீவிரமானது:
இணைச்சட்டம் (Deu 21:18-21) ஒருவனுக்கு பிடிவாதமும் கலகமுமான மகன் இருந்தால், அவன் தன் தந்தைக்கும் தாய்க்கும் கீழ்ப்படியாமலும், அவர்கள் அவனைக் கண்டிக்கும் போது அவர்கள் சொல்வதைக் கேட்காமலும் இருந்தால், அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்துக் கொண்டு போக வேண்டும். அவரது நகரத்தின் வாசலில் பெரியவர் களிடம், "எங்கள் மகன் பிடிவாத மும், கலகக்காரனுமாக இருக்கி றான், அவன் நமக்குக் கீழ்ப்படிய மாட்டான், அவன் ஒரு விபச்சாரி, குடிகாரன்" என்று கூறுவார்கள் அப்பொழுது அவனுடைய நகரத்தார் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள். உங்கள் நடுவிலிருந்து தீமையை நீக்க வேண்டும். எல்லா இஸ்ர வேலர்களும் அதைக் கேட்டு அஞ்சுவார்கள். இது மிக கடுமை
யானது, நாம் கிறித்துவின்
வழியில் நம் பிள்ளைகளை
மிக மோசமான வழியில் செல்
லும்போது, குழந்தை நல ஆலோ
சகர்களிடம் அழைத்து சென்று
(Counsellor) ஆலோசனை பெறுவது அவசியம்.திருச்சபை போதகரிடம் அழைத்துச் சென்று ஜெபிக்கலாம், அவரிடமும் ஆலோசனை பெறலாம். குழந்தை கள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியாமல் இருப்பது இறுதி காலத்தின் அறிகுறிகளில் ஒன்றாகும். மற்றும் தற்கால
சமுக மாற்றத்தின் விளைவாகும்.
" தந்தையைச் சபிக்கிற, தாயை வாழ்த்தாத மக்களும் உண்டு.
நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 30:11) என கூறுகிறது.
"ஒரு நல்ல தகப்பன் என்பது நம் சமூகத்தில் அதிகம் பாடப்படாத, பாராட்டப்படாத, கவனிக்கப்படாத, இன்னும் மதிப்புமிக்க சொத்துக் களில் ஒருவர். என பில்லி கிரஹாம் கூறுகிறார். பிள்ளை
கள் தன் தந்தை, தாயை தன்
குடும்பத்தை புரிந்துக் கொள்ளும்
காலம் வரும், குடும்பம் ஒன்றே
குணப்படுத்தும் இடம். ஏனேனில்,
நம் இல்லங்கள் கிறித்துவின்
அன்பு கூடங்கள்.
3. தந்தையின் அன்பு: The loving Father: லூக்கா15:11-24.
கிறித்துவுக்கு பிரியமானவர்
களே! ஒரு கிறித்துவ தந்தைக்கு
எடுத்துக்காட்டாக காணப்படுபவர்
இந்த தந்தையாவார். உண்மை யில் யூத சட்டத்தில்,இணைச்சட்டம்
Deuteronomy 21:17ன் படி, ஒரு தந்தை தன் சொத்தை தன் விருப்பபடி பிரித்து கொடுக்க முடியாது. மூத்த மகனுக்கு மூன்றில் இரண்டு பங்கும், இரண்டாம் மகனுக்கு மூன்றில்
ஒரு பங்கு மட்டுமே தந்தையின்
மறைவுக்குப் பிறகு பெறமுடியும்.
ஆனால், இந்த இதயமற்ற இளைய மகன் தன் சொத்தை
தரும்படி தந்தையிடம் கேட்கிறான்
தந்தை அவனிடம் மறுப்பு தெரிவி க்காமல் கொடுத்துவிடுகிறார்.
அப்படியாவது, திருந்தட்டும் என
நினைத்திருக்கலாம்.அவர் நெடும் பயணம் சென்று தீயவழியில்
சொத்தை அழிக்கிறார். கடைசி யில் , யூதர்களால் சபிக்கப்பட்ட
தொழிலான பன்றிகளுக்கு
உணவளிக்கும் தொழிலை செய்
கிறான். அவனுக்கு அறிவு தெளிந்த பிறகு, தன் வீட்டை,
தன் தந்தையை நினைக்கிறான்.
அங்கு கூலியாட்களுக்கு நல்ல
உணவு கிடைக்கிறது. வீட்டிற்கு
திரும்பி செல்வேன், தந்தையே, இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்" என்று சொல்லிக்கொண்டு சென்றார்.
தந்தை மகன் வருவதை பார்க்
கிறார்.அவன் கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்று சொல்வதற்கு
முன்பாக தந்தை ஓடிச் சென்று
கட்டித் தழுவி முத்தமிட்டார்.
மகனோ அவரிடம், "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்" என்றார்.
அவருக்கு, ஆடை அணிவித்து
மனிதனாக கவுரவிக்கிறார்,
மோதிரம் அணிவிக்கிறார், இது
மகன் என்ற அதிகாரம் வழங்கு
கிறார்.காலணிகள் அணிவிக் கிறார் இனி என் மகன் அடிமை
இல்லை என்பதாகும். மனிதர்களுக்குக் குடும்பத்தைப் பரிசாக வழங்கிய நம் அருளாளர் கடவுள், பரஸ்பர அன்பையும் அக்கறையையும் காணும் குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பார். குடும்பம் என்ற அமைப்பில் மனித வாழ்க்கையை வடிவமைத்ததற்காக நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர் களாக இருக்கிறோம். குடும்ப வாழ்க்கையில், இயேசு இந்த பூமியில் தம்முடைய சுய தியாக வாழ்க்கையின் மூலம் நமக்குக் கற்பித்தது போல ஒரு வருக்கொருவர் பகிர்ந்து கொள் வது, நேசிப்பது மற்றும் மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் கற்றுக்கொள்கிறோம். ஒவ்வொரு உறுப்பினருக்கும் குடும்பத்தில் குணப்படுத்தும் இடத்தை உருவாக்க எங்களுக்கு உதவுங்கள், இதனால் அவர்கள் உங்கள் தொடர்ச்சியான மன்னிப்பு, கருணை மற்றும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்; இயேசு கிறிஸ்து மூலம், பரிசுத்த ஆவியானவர், ஒரே கடவுளுடன், இப்போதும் என்றென்றும் நம் முடன் வாழ்ந்து வரும் இறை
மைந்தன் நம்மை வழிநடத்துராக.
கடவுள் கொடுக்கும் குணம் அனைவருக்குமானது. உடல், மனம், ஆன்மா மற்றும் உறவு களை குணப்படுத்துவதற்கு குடும்பம் ஒரு வழியாகும்.
ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்துகிற ஆண்டவரே, சகோதர சிநேகத்தின் மேன்மை யை உணராமல் மனக்கசப்போடு வாழ்ந்த நாட்களை எங்களுக்கு மன்னியும். சகோதர சிநேகத்தில் நிலைத்திருக்க கிருபை தாரும். ஆமென்.
Prof. Dr.David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
Comments
Post a Comment