'மாரநாதா' : ஆண்டவரே வாரும்" 'Maranatha': O Lord Come. (173) இனணச் சட்டம் (உபாகமம்) Dueteronomy: 18: 15-22. திருப்பாடல் 28. 1 கொரிந்தியர் 16:13-24, யோவான் 1: 1-14.
முன்னுரை: அன்பின் இறைமக்களே! நித்திய பிதாவின்
நாமத்தில் வாழ்த்துக்கள். திருவருகையின் நான்காம் ஞாயிறு தலைப்பு, 'மாரநாதா' : ஆண்டவரே வாரும்" 'Maranatha': O Lord Come' என்பதை தியானிப் போம்.திருதூதர் பவுல் அடிகளார்,
இவ்வுலகிள் அநீதிகள் பெருகி
வருவதை கண்டு"இறைநீதியை" இவ்வுலகில் சீக்கிரத்தில் நிலை நாட்ட பயன்படுத்திய வார்த்தை தான் 'மாரநாதா'. ' மாரனா" என்றால் 'ஆண்டவரே', என்றும் 'தா' என்றால், ' வருக' என பொருள்படும்.(Acco. to Webster's Dictionary, the meaning was to say, "may the Lord come quickly to take vengeance on thee for thy crimes".) எங்கள் ஆண்டவரே, வாருங்கள்!" ஆனால், "எங்கள் இறைவன் வந்தான்" என்றும் மொழி பெயர்க்கலாம். புதிய ஏற்பாட்டில் ஒரே ஒரு முறை வரும் அராமைக் சொற்றொடர் , 1 கொரிந்தியர் 16:22.ல், "ஆண்ட வரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப்படுக! மாரனாத்தா!
என கூறுகிறார்." இதன் highlight
என்ன வென்றால், ஆண்டவர்
பேசிய, அராமிக் மொழியை பவுல் பயன்படுத்தியுள்ளார். பவுல் அடிகளார் கிரேக்கம், எபிரேய, அராமிக், மற்றும் லத்தின் மொழிகளை அறிந்தவர். ஆண்டவர் இயேசு கிறித்து பவுலை, அராமிக் மொழியில், சவுலே, சவுலே என அழைப்பதை
நாம் அறிவோம்.(திரு தூதர் 9:4) .
திருவெளிப்பாட்டில் 22:20-ல் , இவற்றுக்குச் சான்று பகர்பவர், "ஆம், விரைவாகவே வருகிறேன்" என்கிறார். ஆமென். ஆண்டவரா கிய இயேசுவே, வாரும். கர்த்தர் வருகிறார் என்பது இவ்வுலகில்
ஒருவருக்கு மட்டுமே தெரியும்.
அதை ஏன் தன் ஒரே குமாரனா கிய இயேசுவுக்கு, பிதாவானவர்
ஒரு உரிமையாக வெளிப்படுத்த வில்லை? தந்தையே அதன் உரிமையே வைத்திருக்கிறார்.
ஏன் எனில், திருதூதர் பேதுரு
அவர்கள், "அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்து விட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. (2 பேதுரு 3:8)
எனவே, ஆண்டவரின் பிறப்பு,
தந்தையின் பார்வையில். 2 நாட்கள்தான் ஆகிறது, ஆனால்
நமக்கோ, இரண்டாயிரம் ஆண்டு கள் ஆகிவிட்டன.எனவே, பிதா
வானவர், தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந் தாழ்த்து வதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந் தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமை யோடிக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்பு கிறார். (2 பேதுரு 3:9) இதுதான்
காரணம். ஏற்ற காலத்தில். தன்
மகனை இந்த உலகம் நியாயம்
தீர்க்கப்பட பிதாவானவர் தம்
குமாரனை இவ்வுலகில் அனுப்
புவார். வாரும் ஆண்டவரே
வாரும்.மாராநாதா.
1.வாரும் தீர்க்கதரிசியே வாரும். மாராநாதா:Come Prophet come. இணைச்சட்டம் 18:15-22.
அன்பின் இறை மக்களே! இனண
சட்டம், கி.மு.1406 ல், தீர்க்கதரிசி யான மோசஸ், இஸ்ரவேலர் வாக்குதத்த நாடான கானானில் பிரவேசிப்பதற்கு, 40 நாட்களுக்கு
முன்பாக, மோவாபிய சமவெளி
பகுதியில் இதை எழுதினார். இதன் நிகழ்வுகள் அனைத்தும்
சீனாய் மலை தொடங்கி மோவாப்
நிலப்பகுதி வரை நடந்தவை களை முக்கியமாக இஸ்ரவேல
ருக்கு நினைவூட்டிய அறிவுரை
களை இப்புத்தகத்தில் எழுதியி ருக்கிறார். அவற்றில் மிக முக்கிய மானது, ஆண்டவர் இயேசுவின்
வருகையை முன் மொழிந்துள் ளார்,"கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்றுஎன்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத் தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். (இணைச் சட்டம் 18:15,18) இந்த தீர்க்க தரிசனம்
இயேசுவின் பிறப்பில் நிறை
வேறியது.இங்கே கிறிஸ்துவைப் பற்றி வாக்குறுதி கொடுக்கப் பட்டுள்ளது. சினாய் மலையில் மோசேக்கு கடவுள் என்ன வாக் குறுதி அளித்தாரோ, அவ்வாறே, மோசே கடவுளின் பெயரில் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். எல்லா தீர்க்கதரிசி களுக்கும் மேலான ஒரு தீர்க்கதரிசி வருவார், அவரால் கடவுள் தம்மையும் தம்முடைய சித்தத்தையும் மனிதப் பிள்ளை களுக்கு முன்னெப்போதையும் விட முழுமையாகவும் தெளிவாக வும் தெரியப்படுத்துவார். இது
தீர்க்கதரிசி மோசேக்கு கடவுள்
அருளிய வாக்குதத்தம்.
அவர் உலகத்தின் ஒளி, (யோவான். 8:12.) அந்த ஒளி, நம்மிடம் பேசும் வார்த்தையாக இருந்தார். (யோவான். 1:1,2) தேவன் அவரை அவர்கள் நடுவிலிருந்து எழுப்புவார். அவன் பிறப்பில் அவன் அந்த தேசத்தில் ஒருவனாக இருக்க வேண்டும், அவர்களிடையே வாழ்ந்து அவர்களிடமே அனுப்பப்பட வேண்டும்.
அன்புக்குறியோர்களே! இனண
சட்டம் 18:18ன்படி, "உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை "அவர்களுடைய ('Their' - a possessive pronoun. Means, "belon ging to them") சகோதரர்களின்ன்று நான் அவர்களுக்காக ஏற்படுத்து வேன். என்ற வார்த்தையில், "அவர்களுடைய" என்ற வார்த்தை இஸ்லாமியர்களாகிய எங்களை யும் குறிக்கிறது. மோசே தீர்க் கருக்கு அளிக்கப்பட்ட வாக்கு றுதியாக இயேசு கிறித்துவும், இஸ்லாம்மக்களுக்கு, முகமது நபியை குறிப்பிடுவதாக கூறுகிறார்கள். (Islamic basis for Deteuronomy 18:18)
மற்றும், இணைசட்டம் ஆசாரி யர்கள், மற்றும் லேவியர்களுக்கு எச்சரிப்பது, இந்த வாழ்க்கையின் விவகாரங்களில் தங்களைத் தாங்களே சிக்கிக் கொள்ளாமல், இந்த உலகத்தின் செல்வத்தால் தங்களை வளப்படுத்திக் கொள் ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
திருதூதர் யோவான்,1:11ல்,
"அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
(யோவான் நற்செய்தி 1:11) ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாத மக்களை நியாயம் தீர்க்கவும், ஆண்டவரை ஏற்றுக்கொண்ட மக்களையும் அவர்களின் செயல்களுக்கு ஏற்றவாறு தீர்ப்பளிக்க மாரநாதா:
ஆண்டவரே வாரும்.
2. பரோசியா - ஆண்டவரின்
இரண்டாம் வருகை: Parousia - the Second coming of Christ. 1கொரிந்தியர் 16:13-24.
அன்பின் இறைமக்களே! திருதூதர் பவுல் அடிகளார் கொரிந்தியர்களுக்கு இம் மடலை எழுதும் போது, ( கி பி 54-55) கிறித்தவர்கள் மனித தலைவர் களுக்கு மட்டுமல்ல; மாறாக கிறித்துவிடம் கொள்ளும் உறவை குறித்தே மேன்மை பாராட்ட வேண்டும் என்று அறிவுறுத்து கிறார்.அவர் கொரிந்துவில் 18 மாதங்கள் தங்கியிருந்தார். எபேசுவைத் தவிர வேறு எந்த நகரத்தையும் விட அவர் அங்கு அதிக நேரம் செலவிட்டார்.
ஒரு நாள் திருதூதர் பவுல் அடிகளாரை , ஸடெபினாஸ் (Stephenous) இவர் பவுல் அடிகளாரிடம் திருமுழுக்கு பெற்றவர், அக்காயா நாட்டை சேர்ந்தவர், இவர் அக்காயா நாட்டில் முதன் முதலில் கிறித்துவை ஏற்றுக் கொண்ட குடும்பத்தினர்.போர்டுனாடஸ் மற்றும் அகாய்ஸ் ஆகியோர்
எபேசஸில் பவுலை சந்திக்க வந்தனர். ,(They were representing the Corinth Church as leaders) மேலும் கொரிந்துவில் என்ன நடக்கிறது என்பது பற்றிய அவரது அறிவின் இடைவெளி களை நிரப்பிய முதல் தகவலை அவருக்குக் கொண்டு வந்தனர். ஸ்டீபனாஸைப் பற்றிய அவரது பாராட்டு மிகவும் முக்கியமானது. திருச்சபையின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தால் ஸ்டீபனாஸ் மரியாதைக் குரியவராக இருந்தார். ஆரம் பகால திருச்சபையில் விருப் பமான மற்றும் தன்னிச்சையான சேவை அலுவலகத்தின் தொடக்கமாக இருந்தது. ஒரு மனிதன் திருச்சபையின் தலைவராக ஆனாள், அது மனிதனால் உருவாக்கப்பட்ட நியமனத்தால் அல்ல, அவனுடைய வாழ்க்கையும் வேலையும் அவனை எல்லா மனிதர்களும் மதிக்க வேண்டிய ஒருவராகக் கருதப்படுகிறார் என்பதை நாம் கருத்தில் கொண்டு எப்பொழுதும் திருச்சபையின் வளர்ச்சிக்கும், நேர்மையாகவும், உண்மையா கவும் நாம் ஊழியம் செய்யவேண்டும்.
தூய பவுல் அடிகளார் ஐந்து கட்டாயத் தொடர்புடன் தொடங்குகிறார். ( திமொத்தேயு, அப்பொல்லோ, ஸ்டிபினாஸ், போர்டினாஸ், மற்றும் அகாய்ஸ்) முதல் நால்வரும் இராணுவப் பின்னணியைக் கொண்டவர் களாகவும்,It's an Allusion தளபதியின் கட்டளைகளைப் போலவும் அவரது வீரர்களுக்கு இருக்கலாம். "ஒரு காவலாளியாக, எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள். தாக்குதலுக்கு உள்ளாகும்போது, விசுவாசத்தில் உறுதியாக நிற்கவும், ஒரு அங்குலமும் விட்டுவிடாதீர்கள். போரின் போது, ஒரு வீரனின் பங்கை ஆற்றவும். நன்கு ஆயுதம் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற சிப்பாயைப் போல, வலிமையாக இருங்கள். "உன் அரசனுக்காகப் போரிடு." என்ற சித்தாந்தத்தை உள்ளவர்கள் என்ற உருவகம் பின்னர் மாறுகிறது. கிறிஸ்தவ சிப்பாய் வெளியில் இருந்து கிறிஸ்தவ நம்பிக்கையை அச்சுறுத்தும் நபர்களுக்கும் விஷயங்களுக்கும் என்னவாக இருந்தாலும், திருச்சபையில் உள்ளவர்களுக்கு அவர் ஒரு தோழராகவும். அன்புள்ளவரா கவும் இருக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒருபோதும் பின்வாங்காத தைரியமும், ஒருபோதும் தோல் வியடையாத உறுதி இருக்க வேண்டும். "தேவாலயத்தில் பலர் வேலை செய்கிறார்கள், ஆனால் சிலர் உழைக்கிறார்கள்."என்ற
கருத்திற்கு உட்பட்டவர்கள்.
அகிலா மற்றும் பிரிஸ்கில்லா விடமிருந்து வாழ்த்துகள் அனுப்பப்படுகின்றன. இந்த இரண்டு பேரும் யூதர்கள், பவுலைப் போலவே கூடாரம் செய்பவர்கள். முதலில் அவர்கள் ரோமில் குடியேறினர், ஆனால் கி.பி 49 - 50 இல் ரோமானிய பேரரசர் கிளாடியஸ் அனைத்து யூதர்களையும் ரோமில் இருந்து வெளியேற்றும் ஆணையை வெளியிட்டார். இதனால் பிரிஸ்கில்லாவும், அகில்லாவும் கொரிந்துவுக்குச் சென்றனர், அங்கேதான் பவுல் அவர்களை முதலில் சந்தித்தார் (திரு தூதர் 18:2 ). கொரிந்துவிலிருந்து அவர்கள் எபேசஸுக்குச் சென்றனர், இப்போது பவுல் கொரிந்துவிலுள்ள அவர்களது பழைய கூட்டாளிகளுக்கு வாழ்த்துக்களை அனுப்புகிறார். இதிலிருந்து ரோமர் 16:3அவர்கள் ரோமுக்குத் திரும்பிச் சென்று மீண்டும் அங்கேயே குடியேறி யதைக் காண்கிறோம். அகிலா மற்றும் பிரிசில்லா பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த நேரத்தில் கூட பயணம் எவ்வளவு எளிதா கவும் இயற்கையாகவும் இருந்தது என்பதை அவர்கள் நமக்குக் காட்டுகிறார்கள். அவர்கள் பாலஸ்தீனத்திலிருந்து ரோம் வரையிலும், ரோமிலிருந்து கொரிந்துவரையிலும், கொரிந் திலிருந்து எபேசு வரையிலும், எபேசஸிலிருந்து ரோம் வரை யிலும் தங்கள் வர்த்தகத்தைத் தொடர்ந்தனர்.இந்த இரண்டிலும் ஒரு பெரிய விஷயம் இருக்கிறது. அந்த ஆரம்ப நாட்களில் தேவாலய கட்டிடங்கள் இல்லை. உண்மையில், மூன்றாம் நூற்றாண்டு வரை தேவாலயக் கட்டிடத்தைப் பற்றி நாம் கேள்விப்படவே இல்லை. சிறிய சபைகள் தனிப்பட்ட வீடுகளில் கூடின. ஒரு வீட்டில் போதுமான பெரிய அறை இருந்தால், அங்குதான் கிறிஸ்தவ கூட்டமைப்பு சந்தித்தது. இப்போது அகிலாவும் பிரிஸ்கில்லாவும் எங்கு சென்றாலும் அவர் களுடைய வீடு ஒரு தேவாலயமாக மாறியது. அவர்கள் ரோமில் இருக்கும்போது, பவுல் அவர்களுக்கும் அவர்களுடைய வீடாகிய தேவாலயத்திற்கும் வாழ்த்துக்களை அனுப்புகிறார் (ரோமர் 16:3-5 ). அவர் எபேசஸிலி ருந்து எழுதும்போது, அவர் களிடமிருந்தும் அவர்களுடைய வீட்டில் இருக்கும் தேவாலயத்திலிருந்தும் வாழ்த்துக்களை அனுப்புகிறார். அகிலாவும் பிரிசில்லாவும் இந்த அற்புதமான மனிதர்களில் இருவர், தங்கள் வீடுகளை கிறிஸ்தவ ஒளி மற்றும் அன்பின் மையங்களாக ஆக்குகிறார்கள், அவர்கள் பல விருந்தினர்களை வரவேற்கிறார்கள், ஏனென்றால் கிறிஸ்து எப்போதும் அவர்களின் கண்ணுக்கு தெரியாத விருந் தாளியாக இருக்கிறார், Jesus is an unseen Guest. அவர்கள் தங்கள் வீடுகளை ஓய்வு மற்றும் அமைதி மற்றும் நட்பின் புகலிடமாக மாற்றுகிறார்கள். " அகிலாவும் பிரிஸ்கில்லாவும் வாழ்ந்த அமைதியின் சத்திரத்தை கிறிஸ்தவ வழிப்போக்கர்கள் எப்போதாவது கண்டுபிடித்தார் கள், நம் வீடுகளை அவ்வாறே அமைக்க இறைவன் அருள் புரிவாராக! (William Barclay commentary)
கிறிஸ்துவை நேசிக்காத எவருக்கும் எதிராக பவுல் அவர்களை எச்சரிக்கிறார். பின்னர் அவர் அராமிக் மொழியில் "மாரநாதா என்ற சொற்றொடரை எழுதுகிறார் , இது பெரும்பாலும் ஆண்டவரே வாரும்" '" என்று பொருள்படும். ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப்படுக! மாரனாதா!
என முடிக்கிறார். இது ஆண்டவ ரின் இரண்டாம் வருகையை the Second Advent ஐ குறிக்கிறது. இதற்கு பரோசியா (parousia)
என்று பொருள்படும்.இது கிரேக்க
வார்த்தை, உலகத்தின் இறுதியில்
வரும் நியாயாதீர்ப்பை நடத்த
ஆண்டவர் இவ்வுலகில் வரும்
இரண்டாம் வருகையை குறிக்கிறது.
3."வாக்கே" வருக: O! The Word Come. யோவான் 1;1-14.
கிறித்துவின் அன்பு இறைமக் களே! திருதூதர் யோவான்
அவர்கள், ஆண்டவரகிய இயேசு
கிறித்துவை, "வாக்காக" (The Word)
குறிப்பிடுகிறார்.
"தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது; வாக்கு என்னும் அவரே தொடக் கத்தில் கடவுளோடு இருந்தார்.
(யோவான் நற்செய்தி 1:1,2)
படைப்பின் வரலாற்றில், வார்த்தை செயலில் இருந்ததை
காண்கிறோம்.இது ஒரு சொல்
மட்டுமல்ல, அல்லது வெறும்
ஒலி அல்ல, அனைத்தையும்
செயல்படுத்தும் சக்தி.
வார்த்தைக்கான கிரேக்க சொல் Logos லோகோஸ் என்பது வார்த்தை மட்டும் அல்ல; அதற்கு காரணம் என்றும் பொருள். கடவுளுடைய வார்த்தையே உருவாக்கும் சக்தி. "கர்த்தருடைய வார்த்தையினால் வானங்கள் உண்டாயின" (சங்கீதம் 33:6 ).
அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி அவர்களைக் குணமாக் கினார்" (சங்கீதம் 107:20) ஆக
வார்த்தை, கடவுளின் செயல்படும்
தன்மையை குறிக்கிறது. அவர்
வார்த்தை ஆம் என்றும் ஆமென்
என்றும் செயல்படுகிறது. அன்பா னவர்களே! ஈசாக்கு ஏசாவுக்குப் பதிலாக யாக்கோபை ஆசீர்வதிப் பதற்காக ஏமாற்றப்பட்டவுடன், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை, அந்த ஆசீர்வாத த்தின் வார்த்தையை மீண்டும் எடுக்க முடியவில்லை. வார்த்தை
சக்தி வாய்ந்தது.ஏசாயா தீர்க்கர்,
"அப்படியே என் வார்த்தை என் வாயிலிருந்து புறப்படும்; அது என்னிடத்தில் வெறுமையாய்த் திரும்பாது, நான் நினைத்ததை நிறைவேற்றி, நான் அனுப்பிய காரியம் செழிக்கும்"(ஏசாயா55:1).
இந்த வார்த்தையான கிறித்து
மீண்டும் வர இருக்கிறார்.
ஆனால், இவர் வருகை இரண்டாம்
வருகை. இது நீதி அரசரின் வருகை, நியாதீர்ப்பின் வருகை.
திருவெளிப்பாட்டில்; ,"தீங்கு புரிவோர் தீங்குபுரிந்து கொண்டே இருக்கட்டும்; இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்து கொண்டே இருக்கட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்.
"இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது.
(திருவெளிப்பாடு 22:11,12)
எனவே, அவரின் வருகைக்கு தகுதிப்படைப்போம், தயாராகு வோம், கடவுள் அருளும் ஆயிரம்
வருட அரசாட்சியில் இடம் பெற
நமக்கு கிருபை புரிவாராக. ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com.
Note: The Sermon is prepared to deliver at CSI St.Peter's Church,
Chengalpet on 22/12/24.
,
மராநாதா
Comments
Post a Comment