அனைவருக்குமான சமத்துவமும், நீதியும்.(180) Justice and Equality for all. ஆமோஸ் 5:18-27, திருப்பாடல் 97 திருதூதர் பணிகள் 10: 34-43, மத்தேயு 23:23-31 (குடியரசு நாள்.)

அறிமுகம்: கிறித்துவுக்குப் பிரிய மானவர்களே! உங்க அனைவரு க்கும் இறைமைந்தன் இயேசு கிறித்துவின் நாமத்தில் வாழ்க வளமுடன், நலமுடன் என
வாழ்த்துகிறேன். இந்த ஞாயிற் றுக்கிழமை இந்தியாவின் குடிய ரசு தினம் கொண்டாடப்படுகிறது.
"அனைவருக்குமான சமத்து வமும், நீதியும்" என்ற தலைப்பு
தரப்பட்டுள்ளது. 
சமத்துவம் என்பது சமமாக இருப்பதன் நிலை, அதே சமயம் நீதி என்பது நியாயமாக இருப்ப தற்கான தரம், நீதியும் அடிபபடை மனித உரிமை.
நீதி என்பது அவர்களின் பின்ன ணியைப் பொருட்படுத்தாமல் அனைவரும் நியாயமாகவும் நடுநிலையாகவும் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்து.
சமத்துவம் என்பது ஒரு சமூகக் கருத்து, அதே சமயம் நீதி என்பது ஒரு சமூகத்தில் சமத்துவ சமூக த்தில் நடைமுறைப்படுத்தப்ப டுவதை உறுதி செய்யும் மதிப்பு நோக்கு நிலையாகும். சமத்துவம் என்பது அனைவரும் சமமாக, பாகுபாடு இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான். இது சமூக ஒற்றுமையை ஊக்குவிக் கும் மற்றும் வறுமையை குறைக் கும். கடவுளின் பார்வையில் 
அனைவரும் சமம் .எனவே ஒவ்
வொருவருக்கான அன்பும், மரியா
தையும் உடையவர்கள்.கடவுள்
தன் சாயலில் ஆண், பெண் இருவரையும், ஒன்றாக படைத்
தார். திருதூதர் பவுல் அடிகளார்,
 "இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். "கலாத்தியர் 3:28
 நீதி என்றாலே அது முக்கியமாக சமூக நீதியை குறிக்கும். அனை
வருக்குமான சமத்துவமும், நீதியு
ம் மறுக்கப்படுவது சமயமும் ஒரு 
காரணமாகிறது.ரோமானிய பேரரசில் யூதர்களும் மதப் பாகுபாட்டை எதிர்கொண்டனர் . எருசலேமில் இருந்து யூதர்களை வெளியேற்றியதும் , பேரரசர் ஹட்ரியன் (கி.பி. 117-138) ஆட்சியின் போது நகரத்தை பிறமதமாக்கியதும் , இது யூத புலம்பெயர்ந்தோருக்கு வழிவகுத்தது . ரோமானியப் பேரரசில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவது பரவலாக இருந்தது. கிறித்துவத்தின் நற்செய்தியின் முக்கியத்துவத் தின் காரணமாக, ரோமானியப் பேரரசின் பல தெய்வ வழிபாட்டை கிறிஸ்தவம் அச்சுறுத்தியது, ஏற்க
மறுத்தது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மதத்தின் அடிப்படையிலான பாகுபாட்டை (Discrimination ) இந்திய அரசிய லமைப்பு தடை செய்தாலும் இந்தியாவில் பாகுபாடு மற்றும் மத வன்முறை அடிக்கடி நிகழ் கிறது, சில சமயங்களில் அரசாங் கத்தின் செயல்பாடும் இதில் அட ங்கும். எடுத்துக்காட்டாக, இந்து , சீக்கியர் அல்லது பௌத்தர் அல்லாத தலித் மக்கள் பட்டியல் சாதிகள் (Scheduled Castes) சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் அல்ல, எனவே தலித் கிறித்த வர்கள் மற்றும் முஸ்லிம்களுக் கான உறுதியான நடவடிக்கை அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் கல்வி, வேலை வாய்ப்பு, நலன்புரி (Welfare) சலுகைகள் மற்றும் வெறுப்புக் குற்றங்களு க்கான பாதுகாப்புகளைப் பெறு வதில்லை. தங்கள் தோழர்களு க்கு. தலித்துகள் இந்துக்களைப் போலவே ஒரே கடவுள்களை வழிபட்டாலும், அவர்களுக்கான சமத்துவம், நீதி மறுக்கப்படுகி றது.இந்த 76வது குடியரசு நாளில் 
அனைவருக்குமான சமத்துவம், நீதி கிடைக்க இறைவேண்டல்
செய்வோம்.
 சமூக நீதி (Social justice) என்ற கருத்தாக்கமானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவைக் குறிக்கிறது. தமிழக அரசு தந்தை
பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 யை சமூக நீதி
நாளாககொண்டாடுகிறது.எகிப்தில் இஸ்ரேல் மக்களின் கொடுங் கோன்மை அடக்குமுறை என்பது அரசியல் உந்துதல், சமூக அநீதி யின் தொன்ம வடிவமாகும். இறை
வாக்கினர்கள் ஏசாயாவும், ஆமோசும் சமுக நீதியை பல இடங்களில் வலியுறுத்துகின்றன
னர். .அவ்வாறே ஆண்டவர் அருளும் விண்ணரசு சமுக, சமயத்திற்கான அரசாகும்.
அங்கு அனைவரும் விண்ணகத்
தூதராக இருப்பார்கள். (மத்தேயு
22: 30) ஆண்டவர் சமத்துவத்தை
இவ்வுலகிலும், விண்ணரசிலும்
நிலைநாட்ட விரும்புகிறார்.
நீதி என்பது சட்டபூர்வமானது, நியாயமானது, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சமமான வாய்ப்புகள், சம சலுகை கள், சுதந்திரம் ஆகியவற்றைக் குறிக்கும். நீதி என்பது ஒரு அகநிலை கருத்தாகும். ஆண்டவர்,"மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறி (righteousness) யைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லை யெனில், நீங்கள் விண்ணரசுக் குள் புக முடியாது என உங்களுக் குச் சொல் கிறேன். (மத்தேயு நற்செய்தி 5:20) என்கிறார்.
நீதியைக் கடைப்பிடிப்பவர்கள் பாக்கியவான்கள், எப்போதும் சரியானதைச் செய்கிறார்கள்."
-( சங்கீதம் 106:3),ஆண்டவர் நியாயபிரமான சட்டத்தின் நீதியையும், விசுவாசத்தையும்
இஸ்ரவேலர் விட்டுவிட்டனர்
என்கிறார். நாம் இவைகளை விடாமல் காப்போமாக.
1. நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! Let the Judgement run down as waters! ஆமோஸ் 5:18-27.
அன்புள்ள நண்பர்களே! இறை வாக்கினர் ஆமோஸ் யூதேயா என்ற வட இஸ்ரவேலை சேர்ந்த வர். இவர் காலம் கி.மு 750. இவர் இறைவாக்கினர்கள் ஏசாயா மற்றும் ஓசீயாவின் சம காலத்த வர்.உண்மையாகவே, இவர் ஒரு
மேய்ப்பர், விவசாயி.சமுக நீதியை
(Social Justice) அதிகம் பேசியவர்.
ஆண்டவருடைய நாள் வருவதை
யும், அவரின் நியாய தீர்ப்பையும் 
எச்சரிக்கிறார்.இஸ்ரவேலர்கள் ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்குச் செல்வார்கள். சிங்கத் தின் வாயிலிருந்து தப்பியவன் கரடியின் பாதங்களில் விழுவான்
என அவர்களின் அநீதியான
வாழ்வை கண்டிக்கிறார். அவர்கள் குற்றங்கள் எவ்வளவு மிகுதி யானவை என்றும் உங்கள் பாவங் கள் எத்துணைக் கொடியவை என்றும் நான் அறிவேன்; நல்லாரைத் துன்புறுத்துகிறீர்கள், கையூட்டு வாங்குகிறீர்கள், நகர் வாயிலில் வறியோருக்கு நீதி வழங்க மறுக்கிறீர்கள். ஆகை யால், அவர்களின் மூன்று முக்கிய பண்டிகை களையும் வெறுக்கி றார் என்றார். 
1. பாஸ்கா ;பெசாக் ( pass over)
பாஸ்கா என்பது இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைத்தனத்திலி ருந்து விடுவிக்கப்பட்டதை பாஸ்கா  நினைவு கூறப்படுகிறது.
விவசாய ரீதியாக, பாஸ்கா வசந்த அறுவடை திருவிழாவாகும். ஒவ்வொரு குடும்பமும் எருசலே முக்கு தங்கள் பயிரிலிருந்து பார்லியை ஏறக்குறைய காணிக் கையாகக் கொண்டு வந்தனர்
2.ஷாவூட்( Shavout) Weeks: வரலாற்று ரீதியாக, ஷாவூட் என்பது இஸ்ரவேலர்கள் சினாய் மலையில் பத்துக் கட்டளைகளைப் Torah பெற்றதன் ஆண்டுவிழாவை குறிக்கும்கும்.விவசாய ரீதியாக, ஷவுட் கோதுமை அறுவடை திருவிழாவாகும். கோதுமை, பார்லி, திராட்சை, அத்தி, மாதுளை, ஆலிவ், பேரீச்சம்பழம் ஆகியவற்றின் (முதல் பழங்கள்) ஜெருசலேம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
3.சுக்கோட் (Shukkot). (Booths)
கூடாரப்பண்டிகை.
சுக்கோட் என்பது  மகிழ்ச்சியின் நேரம். வரலாற்று ரீதியாக,  இஸ்ர வேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறிய பிறகு, அவர்கள் கானானுக்கு  நுழைவதற்கு முன்பு இருந்த நேரத்தைக் குறிக்கிறது. இந்த நேரத்தில் அவர்கள் நாற்பது ஆண்டுகளாக வனாந்தரத்தில்  , தற்காலிக குடிசைகளில் (சுக் கோட்) வாழ்ந்தனர்.
பழங்காலத்தில், இந்தப் பண்டிகை களின்போது, ​​ஒவ்வொரு இஸ்ர வேலரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் எருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். அங்கு ஒருவர் கோவிலில் நடக்கும் ஆராதனைகளில் கலந்து கொள்வார்.
ஆமோசின் காலத்தில் இஸ்ரவே லர் அநீதியான வாழ்வில் வாழ்ந்த
தால் ஆண்டவர் அவர்களின்
பண்டிகைகளையும், பலியையும்
வெறுக்கிறார்.நீதியை நிறை வேற்றுவது நிலத்தின் மீது விழும் மழையைப் போல் எங்கும் இருக்கட்டும்.எல்லா இடங்களிலும் நீதி நிலவட்டும் ,நீதி தண்ணீரைப் போலவும், நீதி எப்போதும் ஓடும் நீரோடை போலவும் உருளட்டும்" நீதி  இல்லாத மதச் செயல்பாடு கள் ஆண்டவருக்கு அருவருப் பானவை. எனவே, நீதி வெள்ள மெனப் பொங்கி வருக! என உணர்த்துகிறார்.
2.சமத்துவத்தை வலியுறுத்தும் கிறித்தவம்.Christianity emphasizes equality.திருதூதர்
 Acts 10: 34-43, 
கிறித்துவுக்கு பிரியமானவர்களே!
கொர்னேலியஸ் ரோமானிய நூற்றுவர். செசரியாவில் இருந்த இத்தாலியப் படையில் பணி யாற்றியவர். அவர் சில கிறித்த வர்களால் விசுவாசத்திற்கு மாறிய முதல் புற இனத்தார்.  கொர்னேலியஸ், முதல் நூற்றா ண்டில் வாழ்ந்தவர்.அவர் நீதி மானும், தேவனுக்குப் பயப் படுகிறவரும், யூதர்களாலே நல்லவரென்று சாட்சி பெற்றவர்.(திருதூதர் 10:1-23-)
இவரும் இவர் குடும்பமும் பக்தியுள்ளவர்கள். கடவுளுக்குப் பயந்து வாழ்ந்தவர்கள். இவர் யூதர்களுக்கு ஜெபக்கூடம் கட்டிக் கொடுத்தவர். யூதர்களிடம் அதிக
 அன்பு காண்பித்தவர். அவர்களு டன் நல்ல உறவு கொண்டவர். கொர்நேலியுவுக்கு விருத்தசேத னம் ஒன்றைத் தவிற யூதனா வதற்கு அனைத்து தகுதிகளும் இருந்தன. இவர் ஒரே கடவுள் என்னும் யூத சமய நம்பிக்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர். கொர்நேலியு சமூகத்திலுள்ள ஏழை எளிய மக்களுக்கு தான தர்மம் செய்தவர். கடவுளிடம் இடைவிடாது ஜெபித்துக் கொண் டிருந்தவர். இவர் யூத சமயத்தை யும் கிறித்தவத்தையும் இணைக் கும் இலட்சிய புற இனத்தவராக கருதப்படுகிறார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுளை நம்பும் யூத சமயம் இயேசு கிறித்துவின் தந்தையே கடவுள் என்னும் விசுவாசத்திற்கு அழைத் துச் செல்கிறது.அப்போது பேதுரு கொர்நெலியுசுடன் பேசத் தொடங் கினார், "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர் கிறேன். (திருத்தூதர் பணிகள் 10:34) இயேசு கடவுளால் அனுப் பப்பட்டார் மற்றும் அவரால் ஆவியானவர்  வல்லமையுடன் செயல்பட்டார். எனவே இயேசு கிறித்து மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு.  ஆண்டவராகிய இயேசு குணப்படுத்தும் ஊழியத் தை மேற்கொண்டார். உலகத்திலி ருந்து வலியையும் துக்கத்தையும் பாவத்தையும் துரத்திவிட வேண் டும் என்பது அவரது பெரும் ஆசை.ஆனால். யூதர்கள் அவரை சிலுவையில் அறைந்தனர். 
அவர் மீண்டும் மூன்று நாட்களுக் குப் பிறகு உயிரத்தெழுந்தார். இயேசுவிடம் இருந்த சக்தி தோற் கடிக்கப்படவில்லை. 
திருத்தூதர் பணிகள் என்ற திருமுகத்தை எழுதிய லூக்கா நற்செய்தியாளர் கிறித்துவ போதகரும், மருத்துவருமா வர்.இவர்  கிறித்துவின் உயிர் த்தெழுதலின் சாட்சி. அவரைப் பொறுத்தவரை இயேசு ஒரு புத்தகத்திலோ அல்லது அவர் கேள்விப்பட்ட ஒரு நபரோ அல்ல. அவர் நேரிடையாக சந்தித்த ஒரு வாழும் மனுச குமாரன்.பாவ மன்னிப்பு அளிப்பதன் மூலம்
 கடவுளுடன் ஒரு புதிய உறவு, மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே எப்போதும் இருந்திருக்க வேண்டிய நட்பு, இயேசுவின்மூலம் மனிதகுலத்தின் மீதுஉதயமானது.
உண்மையில் கடவுள் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை நாம் உணர்கிறோம். நற்செய்தி இப்போது புற இனத்தவருக்கு க்குச் செல்ல வேண்டும் என்ற பேதுருவின் புரிதலுக்கான அடித்தளம் இதுதான். கடவுள் நிச்சயமாக யூதர்கள் மற்றும் புற இனத்தார்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டினார் என்று அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த யூத சிந்தனைக்கு முற்றிலும் எதிரானது .  பேதுருவின் நாளில் இருந்த பல யூதர்கள், கடவுள் யூதர்களை நேசித்ததாகவும் அதே சமயம் புறஜாதிகளை வெறுத்ததா கவும் நினைத்தார்கள். ஒரு யூத மனிதன் தான் ஒரு அடிமை, ஒரு புறஜாதி அல்லது ஒரு பெண் அல்ல என்றும், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரார்த்தனையுடன் நாளைத் தொடங்குவது வழக்கம். புதிய ஏற்பாட்டின் நாட்களில் யூத மதத்தின் ஒரு அடிப்படைப் பகுதி யானது, ஒரு புற இனத்தாருக்கு எந்த சூழ்நிலையிலும் உதவி செய்ய மாட்டான் என்று உறுதி யளித்த ஒரு சத்தியம், அதாவது அவர்கள் கேட்டால் வழிகாட்டுதல் களை வழங்குவது போன்றது.புற இனத்தாரையும் கிறித்துவின் உலகிற்கு கொண்டு வரவேண்டும் என்பதே சமத்துவத்தின் அடிப் படை.ஒரு யூதர் ஒரு புறஜாதியை மணந்தால், யூத சமூகம் யூதருக்கு இறுதி சடங்கு செய்து அவர்களை இறந்துவிட்டதாக கருதுவார்கள். ஒரு புறஜாதியின் வீட்டிற்குள் நுழைவது கூட ஒரு யூதனை கடவுளுக்கு முன்பாக அசுத்தப்படு த்தியது என்று கருதப்பட்டது.  
ஆனால் புறஜாதிகள் யூதர்களிட மிருந்து எவ்வளவு கெட்டதைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்தனர்.. புறஜாதிகள் யூதர்களை விசித்திரமான பாரம் பரியவாதிகள் என்று இகழ்ந்த னர்,   ஆனால். கிறித்துவின்  நற்செய்தி இவைகளை பரவலு டன் மாற்றியது. இன கலாச்சார மற்றும் தேசிய வரம்புகளை புறக் கணித்த முதல் மதம் கிறித்தவம்.
யூதர்கள் இந்த வகையான பாரபட்சத்தைக் காட்டும்போது அவர்கள் பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டபடி கடவு ளுடைய இருதயத்திற்கு உண்மை யாக இருக்கவில்லை. கடவுள் பாரபட்சம் காட்டுவதில்லை என்ற கருத்து(இணைசட்டம்10:17,18)
மற்றும் (2 குறிப்பேடு 19:6,7)  உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவர்களுக்கும் கர்த்தருக்கும் கர்த்தர், பெரிய தேவன், வல்லமை யும் பயங்கரமுமானவர், பாரபட்சம் காட்டாதவர். நீதி உள்ளவர்.
அவ்வாறே, ஒவ்வொரு தேசத்தி லும் அவருக்குப் பயந்து நீதியைச் செய்கிறவர் அவரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார் : கொர்னேலியஸைப் போன்ற மனிதர்கள் ஏற்கனவே கடவுளு டன் சரியானவர்கள், கடவுளிடமிரு ந்து ஒதுக்கிவைக்கப்பட்டதாக அவர் உணர வேண்டியதில்லை. 
 கடவுள் நிறத்தைப் பார்க்கிறார் என்று நாம் அடிக்கடி நினைக்கி றோம்; அவர் இதயத்தை மட்டுமே பார்க்கிறார். கடவுள் பொருளா தார நிலையைப் பார்ப்பதில்லை; அவர் இதயத்தை மட்டுமே பார்க்கிறார். அவர் தேசியம் அல்லது இனக்குழுவைப் பார்ப்பதில்லை; அவர் இதயத்தை மட்டுமே பார்க்கிறார்.
அவர் அனைவருக்கும் இறை வன்  இது ஒரு சக்திவாய்ந்த சொற்றொடர், இது இயேசுவின் தெய்வீகத்தைக் காட்டுகிறது.  அதாவது யூதர் மற்றும் புறஜாதி யார். யாரை அவர்கள் மரத்தில் தொங்கவிட்டுக் கொன்றார் கள்...அவரை மூன்றாம் நாளில் கடவுள் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது, பேதுரு புறஜாதிகளுக்குப் பிரசங்கிப்பது அடிப்படையில் யூதர்களுக்கு அவர் பிரசங்கித்ததைப் போலவே இருந்தது. அவர் இயேசு கிறிஸ்து வின் நபர் மற்றும் வேலையை முன்வைத்தார், இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் இந்த விஷயங்களின் வெளிச்சத்தில் கடவுளுக்கு முன்பாக நமது பொறு ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி னார்.
அன்பானவர்களே! திருதூதர் பேதுரு அவர்கள், ஒரு இனத்திற்கு ஒரு பிரசங்கம் மற்றும் மற்றொரு இனத்திற்கு ஒரு பிரசங்கம் என
செய்யவில்லை.யாரானாலும், வாழும் இயேசு கிறிஸ்துவில்  நம்பிக்கைக்கு வருவதன் மூலம் அனைத்து மக்களும் இரட்சிக் கப்பட வேண்டும் என்பதே அவ ரின் பிரசங்கம்.
இயேசு பிசாசினால் ஒடுக்கப்பட்ட வர்களை விடுவிப்பதிலும், நன்மை செய்வதிலும் சுகமாக் குவதிலும் சுற்றிச் சென்றார்.
கடவுள் அவருடன் இருந்ததால், இயேசு கடவுளின் வல்லமையால் இதைச் செய்தார்.
இயேசு இவற்றை நேரில் கண்ட சாட்சிகள் முன்னிலையில் இதை செய்தார்.இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இயேசுமரித் தோரிலிருந்து எழுப்பப்பட்டார்,
பலரின் சாட்சிகளின் பார்வையில் உயிர்த்தெழுந்தார்.இயேசு முழு உலகத்தின் நீதிபதியாக கடவு ளால் நியமிக்கப்பட்டார்.நீதி, சமத்துவத்தில் நம்பிக்கை உள்ளதே கிறித்துவம்.
3.நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; Blessed are they do which hunger and
thirst after righteousness. Matt:23:23-31.
கிறித்துவின் அன்பு இறை மக்களே! இயேசுவின் காலத்திய
மறைநூல் அறிஞ்சர்களும், பரிசேயரும் திருச்சட்டத்தின் மிக முக்கிய போதனைகளான நீதி,
இரக்கம், நம்பிக்கையை முற்றிலும் கைகொள்ளவில்லை..
இவர்கள் குருட்டு வழிகாட்டிகள்
என்கிறார்.பத்தில் ஒருபங்கு
தசமபாகம் யூத மத ஒழுங்கு முறைகளில் இன்றியமையாத பகுதியாக இருந்தது. "உன் விதையின் விளைச்சலில் தசமபாகம் கொடுக்க வேண்டும், அது ஆண்டுதோறும் வயலில் இருந்து வெளிவரும்" ( இணைச் சட்டம் 14:22 ). "நிலத்தின் விதை யாக இருந்தாலும், மரங்களின் கனியாக இருந்தாலும், தேசத்தின் தசமபாகம் முழுவதும் கர்த்தருடை யது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது" ( லேவியர் 27:30 ). இந்த தசமபாகம் விசேசமாக லேவியர்களின் ஆதரவிற்காக இருந்தது, அதன் பணியானது ஆலயத்தின்  வேலைகளைச் செய்வதாகும். தசமபாகம் கொடு க்க வேண்டிய விசயங்கள் சட்டத் தால் மேலும் வரையறுக்கப்ப ட்டன.இயேசு கூறியதன் பொருள் இதுதான். முக்கிய பயிர்களுக்கு தசமபாகம் கொடுக்கப்பட வேண்டும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் புதினா மற்றும் வெந்தயம் மற்றும் சீரகம் ஆகியவை சமையலறை தோட்டத்தின் மூலிகைகள் மற்றும் அதிக அளவிலும் வளர்க்கப் படாது; ஒரு மனிதனுக்கு அவற் றில் ஒரு சிறிய பகுதிதான் தேவைக்காக  பயன்படுத்தப் பட்டது, வெந்தயம் மற்றும் சீரகம் மருத்துவப் பயன்களைக் கொண்டிருந்தன. அவைகளுக் கும்  தசமபாகம் கொடுப்பது என்பது பொருத்தமட்டது என்கிறார்.பரிசேயர்கள்தசமபாகம் பற்றி மிகவும் கவனமாக இருந் தார்கள். தசம பாகம் ஆலயத்தின்
வளர்ச்சிக்கும், மக்களை சமநிலை யில் உயர்த்தவும், கடவுளுக்கு உரியது மக்களுக்கே என்பதை
நினைவில் கொள்ளவேண்டும்.
நண்பர்களே! இயேசு ஒரு தெளிவான உதாரணத்தைப் பயன்படுத்துகிறார். மத்தேயு 23:24கிங் ஜேம்ஸ் பதிப்பில் ஒரு வினோதமான விசயம் நடந்து ள்ளது. இது ஒரு கொசுவை வடிகட்டுவதாக இருக்கக்கூடாது, ஆனால் திருத்தப்பட்டநிலையான பதிப்பில் உள்ளதைப்(Standard Edition) போல ஒரு கொசுவை வடிகட்ட வேண்டும். முதலில் அந்த தவறு ஒரு தவறான அச்சிடலாக இருந்தது. ஆனால் அது பல நூற்றாண்டுகளாக நீடித்து வருகி றது. உண்மையில் பழைய பதிப்புகள் -டின்டேல், கவர்டேல் மற்றும் ஜெனிவா பதிப்பு விவலியங்கள் - அனைத்தும் சரியாக ஒரு கொசுவை வடிகட்ட வேண்டும் என்று உள்ளது: ஒரு கொசு ஒரு பூச்சி, அதனால் அசுத்தமானது; மேலும் ஒரு ஒட்டகமும் இருந்தது. அசுத்தமான எதையும் குடிப்பதால் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, மெல்லிய துணி மூலம் வடிகட்டப்ப ட்டது, இதனால் ஏதேனும் அசுத்தம் வெளியேறும். நுண்ணிய பூச்சியை விழுங்கு வதைத் தவிர்ப்பதற்காக செய்யப்பட்டது.
(As stated by William Barclay) அசுத்தம் பற்றிய கருத்து யூத சட்டத்தில் தொடர்ந்து எழுகிறது. இந்த அசுத்தமானது உடல் அசுத்தம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு அசுத்தமான பாத்திரம் என்பது ஒரு அழுக்கு பாத்திரம் என்ற வார்த்தையின் நமது அர்த்தத்தில் இல்லை. ஒரு நபர் வழக்கமாக தூய்மையற்றவராக இருப்பதென்றால், அவர் கோவிலுக்குள் அல்லது ஜெப ஆலயத்திற்குள் நுழைய முடியாது. அவர் கடவுள் வழிபாட்டிலிருந்து தடுக்கப்பட்டார். உதாரணமாக, ஒரு மனிதன் ஒரு இறந்த உடலைத் தொட்டால் அல்லது ஒரு புறஜாதியுடன் தொடர்பு கொண் டால் அவன் அசுத்தமாக இருந் தான். ஒரு பெண்ணுக்கு ரத்தக்க சிவு ஏற்பட்டால் அசுத்தமாக இருந்தாள், அந்த இரத்தப்போக்கு முற்றிலும் சாதாரணமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலும் கூட. தானே அசுத்தமாக இருந்த ஒருவன் எந்தப் பாத்திரத்தைத் தொட்டாலும் அந்தப் பாத்திரம் அசுத்தமாகிவிடும்; அதன்பிறகு, பாத்திரத்தைத் தொட்ட அல்லது கையாண்ட மற்ற நபரும் அசுத் தமானார். எனவே, பாத்திரங் களை சுத்தப்படுத்துவது மிக முக்கியமானது;
ஆண்டவர் எச்சரிப்பது," குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத் தின் உட்புறத்தைத் தூய்மையா க்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும். 
(மத்தேயு நற்செய்தி 23:26)
மேலும் அவற்றை சுத்தப்படுத் துவதற்கான சட்டங்கள் இக்காலத் திற்கு சாத்தியமில்லை. மிகவும் சிக்கலானது. 
வெளிவேடக்கார மறைநூல் அறிஞ்சர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு, ஐயோ! உங்களுக் குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளு க்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக் கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. (மத்தேயு  நற்செய்தி 23:27) இது முற்றி லுமாக, உள்ள சுத்தத்தை, நீதி, நேர்மை, சமத்துவத்தை கையாள
வலியுறுத்துகிறது.
ஆண்டவரின் குற்றசாட்டு என்ன
வென்றால்; இஸ்ரவேலரின்
வரலாற்றில், இரத்தம் சிந்திய
செயல்கள்தான் உள்ளது. அவர்கள் பல இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு இந்த மறைநூல் அறிஞ்சர்களும், பரிசேயர்களும் சாட்சிகள். 
 நேர்மையாளரான ஆபேலின் இரத்தம்முதல் திருக்கோவிலு க்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் சக்கரியாவின் இரத்தம் வரை இம்மண்ணில் சிந்தப்பட்ட நேர்மையாளர் அனைவரின் இரத்தப் பழியும் உங்கள்மேல் வந்து சேரும் என்றார்.ஆபேல்
தன் சொந்த சகோதரன் காயின்
கொலை செய்தான். ஆனால் ,
பராக்கியாவின் மகனான சக்க
ரியா ஏன் கொலை செய்யப்பட்டார்
என்ற தெளிவான ஆதாரம் இல்லை. அவர் கேட்ட ஒரே கேள்வி, "இதோ, கடவுள் கூறுகி றார்; ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்?" என்று கேட்டார், கொள்ளப்பட்டார். அவரை கொலை செய்த அரசன் யோவாசு .(2 குறிப்பேடு 24:20-22), இதில் சக்கரியாவின் தந்தை  பெயர் யோயாதா,  ஆனால், நற்செய்தியாளர் மத்தேயு, தவறுதலாக பராக்கியா
என குறிப்பிட்டுள்ளார். (According to William Barclay's commentary 
Zacharias is called the son of Barachios, whereas, in fact, he was the son of Jehoiada, no doubt a slip of the gospel writer in retelling the story.)
இந்த வரலாற்று நிகழ்வுகள்
வரும் சந்ததினாரால் நியாயம் 
தீர்க்கபடுவார்கள்.
எனவே, அன்பர்களே!; அனைவரு க்குமான சமத்துவம்,  நீதி நிலை
நாட்டப்பட ஆண்டவரின் பிள்ளை
யாக நாம் செயல்படுவோம். ஆமேன்.

Prof.Dr.David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com. 

Note:
Why should Zacharias be chosen? In the Hebrew Bible Genesis is the first book, as it is in ours; but, unlike our order of the books, 2 Chronicles is the last in the Hebrew Bible. We could say that the murder of Abel is the first in the Bible story, and the murder of Zacharias the last. From the beginning to end, the history of Israel is the rejection, and often the slaughter, of the men of God.
Jesus is quite clear that the murder taint is still there. He knows that now he must die, and that in the days to come his messengers will be persecuted and ill-treated and rejected and slain.  By William Barclay.

எங்கும் அநீதி எல்லா இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தலாகும்."
- மார்ட்டின் லூதர் கிங்

நீதி தண்ணீராக உருளட்டும்.
மற்றும் நீதி ஒரு வலிமைமிக்க நீரோடை..
மார்ட்டின் லூதர் கிங்



   



Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.