லெந்து : மீட்புக்கான ஒரு காலம். (185)Lent : A time of Redemption. ஏசாயா: 58:1-4, திருப்பாடல் 6. உரோமையர் 2:1-13. யோவான் 5:1-9.
முன்னுரை: கிறித்துவுக்கு பிரியமானவர்களே! லெந்து என்ற தவக்காலம், பாவிகளின் திருநாளாகும். இந்நாள் பாவி களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட நாட்களாகும். இன்னாட்கள், ஆண் டவருடைய சிலுவைபாடுகளை நினைவு கொள்ளும் இவற்றில் கொஞ்சமாவது நாம் பங்கெடுக் கும் பாடுகளினால், தான தர்ம ங்கள், ஜெப விண்ணப்பங்கள், மன்றாட்டுக்கள், உன்னா நோன் புகள், பாடல்கள், ஆராதனைகள் என்று கிறித்துவின் பாடுகளின் நினைவிலே வாழக் கூடிய திருநாளாகும். லெந்து சாம்பல் புதன் (Ash Wednesday) தொடங்கி கடைசி திருவிருந்து வியாழன் வரை அடங்கியுள்ள 40 நாட்கள் அடங்கியதாகும்.லெந்து என்பது ஈஸ்டருக்கானதயாரிப்பில் வழிபாட்டு ஆண்டில் புனிதமான கிறித்துவ மத அனுசரிப்பு ஆகும் . மத்தேயு , மாற்கு மற்றும் லூக்கா வின் நற்செய்திகளின்படி , இயேசு தனது பொது ஊழியத்தைத் தொட ங்குவதற்கு முன்பு யூதேயா பாலை வனத்தில் உண்ணாவிரதம் இருந் து சாத்தானால் சோதனையைத் தாங்கிக் கொண்ட 40 நாட்களை இது எதிரொலிக்கிறது. லெந்து நாட்களில் ஞாயிற்று கிழமைகள் சேர்க் கப்படவில்லை. லெந்தின் அடிப்படையே,, "என்னைப் பின்ப ற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை...