படைப்புகளின் சீரழிவு.(184) The Corruption of Creation. ஏசாயா 5:1-13, திருப்பாடல் 8, கலாத்தியர் 1:5 -10, லூக்கா 10: 13- 16

 முன்னுரை: கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே உங்க   அனை வருக்கும்  இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.  இந்த வார தலைப்பாக நாம் சிந்திக்க இருப்பது,. படைப்புக ளின் சீரழிவு. சீரழிவு என்பது ஆங்கிலத்தில்  Deteriotion (அ) Corruption என கூறலாம். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத் தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படை த்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணு லகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவை கள், நிலத்தில் ஊர்ந்து உயிர்வாழ் வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார். (தொடக்கநூல் 1:27,28)
இப்படி ஆசிர்வாதமாக ஆரம்பிக்க
ப்பட்ட இவ் உலகம், கடவுள் படை த்த ஏதேன் தோட்டத்தில் இந்த சீரழிவு முதல் பாவமான கீழ்படை யாமையால் பூமி கடவுளால் சபிக் கப்பட்டது.சாபம் முதலில் உலகில் வந்தது.(தொட. நூல்3:17)
ஏன் இந்த சீரழிவு?  கடவுள் இவ்வு லகை படைக்கின்ற போது எல்லா ம் நல்லது என்று சொன்னார் அவர் பார்வையில் நன்றாக இருந்தது. ஆனால்,மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. (தொடக் கநூல் 6:6) படைப்புகளின் சீரழிவு திருத்தந்தைபிரான்சிஸ் அவர்கள், இந்த உலகில் இந்த அளவு தீமைகள் ஏன்?, அநீதிகள் ஏன்?, குழந்தைகளின் மரணங்கள் ஏன்?, நகர்களும் இயற்கையும் அழிவுக் குள்ளாக்கப்படுவது ஏன்?, அன்னை  பூமி அழிக்கப்படுவது ஏன்? என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார். 
திருதூதர் பவுல் அடிகளார்,
" படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பிய தால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப் பட்டிருக்கும் நிலையிலிருந்துவிடு விக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைக ளுக்குரிய பெருமையையும்விடுத லையையும் தானும் பெற்றுக் கொள்ளும் என்கிற எதிர்நோக் கோடு இருக்கிறது. இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்." (உரோமையர் 8:20-22) படைப்பு அழிவு நிலையில் இருந்து மீண்டும் நல்ல நிலைக்கு மாறும் என்ற ஒரு சாதகமான நம்பிக்கையை இங்கு தருகிறார். மனிதர்களே இந்த அழிவு நிலை க்கு காரணம். மனிதர்களே இதை சீர்படுத்த வேண்டும். உலகம் படைக்கப்பட்ட காலத்தில் இருந்து கடவுள் படைத்த அனைத்து படைப் பையும் அழித்து கொண்டு வருகி ன்றவன் பிசாசுதான், அவன் இந்த உலகத்தின் அதிபதி என்று ஆண்டவர் சொன்னார் எனவே இந்த உலகத்தின்  படைப்பை அவன் அழித்து வருகிறான். படைப்பின் சீரழிவை தடுப்பது நம் கடமையல்லவா?
 கிறிஸ்துக்கு  பிரியமானவர்களே! டேவிட் லிவிங்ஸ்டன், ஒரு  ஸ்காட் டிஷ் மிஷனரி ஆவார். 1858ஆம்  ஆண்டு மத்திய ஆப்பிரிக்காவை யும், கிழக்கு ஆப்பிரிக்காவையும் ஆராய்வதற்காகச் சென்றார். செல்லும் வழியிலே அராபியர்கள் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்பனை செய்யக் கடத்திச் செல்வதைக் கண்டார். இது படைப்பின் வீழ்ச்சியாகும். சக மனிதனை அடிமையாக பாவிப் பது கடவுளின் படைப்பையே சிதைப்பதாகும்.இக் கொடிய முறையை ஒழிக்க இவர் அரும் பாடுபட்டார். மொத்தத்தில், டேவிட்டின் 32 ஆண்டுகால மிஷ னரி பயணத்தில், மக்களை நற்செய்தியுடன் ஈடுபடுத்தவும் கண்டத்தை வரைபடமாக்கவும் ஆப்பிரிக்காவின் உட்புறத்தில் 29,000 மைல்கள் நடந்து சென்றது அடங்கும்."நான் இதயத்தாலும் ஆன்மாவாலும் ஒரு மிஷனரி. கடவுளுக்கு ஒரே மகன் இருந்தார், அவர் ஒரு மிஷனரி மற்றும் மருத் துவர். நான் அவரைப் போலவே ஏழையாகவே இருக்க விரும்புகி றேன். இந்த சேவையில் நான் வாழ நம்புகிறேன்; அதில் நான் இறக்க விரும்புகிறேன்." என்றார்.
 கிறித்துவுக்காக வாழ்ந்து மரித் தவர் டேவிட் லிவிங்ஸ்டன் அவர் வாழ்வு கிறித்தவர்களுக்கு பாடமாகும்.
1.நற்கனிகளை தருவதே படைப்பு. Creation is to give good fruits.ஏசாயா 5:1-13.
கிறித்துவின் அன்பர்களே!இந்த பகுதி ஒரு உவமையாகும். திராட்சைத் தோட்டத்தைப் பற்றி யது. அது ஒரு அன்பான நபருக்கு  சொந்தமானது. அது மிகவும் செழிப்பான மலையில் நடப்பட் டது.   திராட்சை தோட்டம் இஸ்ர வேல் குடும்பத்தார், திராட்சை செடி யூதமக்கள். நிலம் கவனமா கத் தயாரிக்கப்பட்டது ( அதைத் தோண்டி அதன் கற்களை அகற்றி யது ). அது நல்லமரக்கட்டைப் பந்தலுடன் நடப்பட்டது  சிறந்த கொடியுடன் நடப்பட்டது ). அது பாதுகாக்கப்பட்டது. அதன் நடுவி ல் ஒரு கோபுரம் . பழங்களை பதப் படுத்த அதில் ஒரு மது ஆலை செய்யப்பட்டது. அது நல்ல திராட் சைகளை விளைவிக்கும் என்று அவர் எதிர்பார்த்தார் : திராட்சைத் தோட்டத்திற்கு இருந்த அனைத்து நன்மைகளையும் கருத்தில் கொண்டு, இது ஆச்சரியமல்ல. வேறு என்ன எதிர்பார்க்கப்படும்? ஆனால் அதற்கு பதிலாக அது காட்டு திராட்சைகளை விளைவி த்தது. காட்டு திராட்சை மட்டுமே அறுவடை செய்யப்பட்டதற்கு யார் காரணம் ? அது திராட்சைத் தோட் டத்தின் உரிமையாளரின் தவறா?, அல்லது அது திரா ட்சைத் தோட்ட த்தின் தவறா? இது படைப்பின் வீழ்ச்சி.தவறு கடவுளிடம் அல்ல, மனிதனிடம் உள்ளது. "அப்போது தெரியும்... ஒவ்வொரு மனித ஆன்மாவும் ஒரு பலனளிக்கும் திராட்சைத் தோட்டமாக மாறுவத ற்கான வாய்ப்பைப் பெற்றது; அது நேர்மாறாக மாறினால், அது கடவு ளின் ஞானத்திலோ அல்லது கிருபையிலோ எந்தத் தோல்வி யாலும் ஏற்படாது." கடவுளின் திராட்சைத் தோட்டமாகிய நாம், கடவுளின் கிருபையுடன் வேலை செய்ய அழைக்கப்பட்டுள்ளோம், இதனால் கிருபை வீணாகப் பெறப்படாது. கடந்த கால, நிகழ் கால அல்லது வாக்குறுதியளிக் கப்பட்ட எந்தவொரு செயல்களுக் காகவும் கிருபை வழங்கப்படுவதி ல்லை; இருப்பினும், வேலை தேவையற்றது என்று சொல்லா மல், வேலையை ஊக்கு விப்பதற் காக இது வழங்கப்படுகிறது என திருதூதர் பவுல் அடிகளார் கூறு கிறார்.(2.கொரி 6:1:)
2.கிறித்துவின் நற்செய்தியா?
நியாயப்பிரமானமா? கலாத்தியர் 1:5-10.
 கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பர்களே! திருத்தூதர் பவுல் அடிகளார் கலாத்தியர்களுக்கு எழுதிய நிருபத்தில் நற்செய்தி என்றால் என்ன என்பதை விளக் குகிறார்.கலாத்தியா திருச்சபை தற்போதுள்ள துருக்கி நாட்டில் உள்ளது. இவர் இரண்டு முறை இந்த பகுதியில் பிரசங்கித்தார். இவரின் நற்செய்தியை கேட்டு இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் அதிகமாக புற இனத்தார்கள் ஆனால் சில யூத கிறித்தவர்கள் இவர் விதைத்த நற்செய்தியை புரட்டாக அங்கு உபதேசித்தார்கள். இதற்காகவே
 இத்திருமுகத்தை எழுதுகிறார்.  "கடவுளின் கிருபையினாலும் கிறித்துவின் மரணத்தினாலும் மட்டுமே மக்கள் தங்கள் பாவங் களிலிருந்து இரட்சிக்கப்பட முடியும் என்ற நற்செய்தியாகும் ". ஆனால்,கலாத்தியர்களில் பலர் இந்த ஒரே உண்மையான நற் செய்தியிலிருந்து விலகிச் செல் வதைக் கேட்டு பவுல் ஆச்சரியப் பட்டு கோபப்படுகிறார். அதற்கு பதிலாக, அவர்கள் இரட்சிக்கப்படு வதற்கு நியாயப்பிரமான சட்டத் தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற யூத போதனையை நம்பு கிறார்கள் (6-7). ஒரே உண்மை யான நற்செய்திக்கு மாறாகப் பிரசங்கிக்கும் அனைவருக்கும் அவர் இரண்டு முறை கடவுளின் சாபத்தை அறிவிக்கிறார் (8-9). யூத மதத்தினர் பவுல் விருத்த சேதனத்தைப் பிரசங்கிக்கவில் லை என்று குற்றம் சாட்டினர், இதனால் புறஜாதியினர் தேவா லயத்தில் சேர எளிதாக இருக்கும் என்று அவர்கள் கூறினர். அவர் மக்களைப் பிரியப்படுத்த பிரசங் கித்தார், இது போன்ற கடுமை யான மொழியை அவர் பயன்படு த்துவதைக் கேட்ட பிறகும் அவர் களால் அப்படிச் சொல்ல முடியு மா? இது ஒருவரின் தயவைப் பெற முயற்சிக்கும் ஒருவரின் மொழி அல்ல! பவுலின் நோக்கம் கிறித்துவைப் மட்டுமே பிரியப் படுத்துவது, அவரைக் கேட்பவர் களை அல்ல. படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் முதன் மையான செயல்பாடு கடவுளை மகிமைப்படுத்துவதாகும். "வான ங்கள் கடவுளின் மகிமையை அறிவிக்கின்றன" ( சங்கீதம் 19:1 ).
மனிதனின் படைப்பின் நோக்கமே கடவுளை மகிமைப்படுத்துவதே என்பதால், மனிதன் இந்த நோக் கத்தை மீறும்போது அல்லது எதிர்க்கும்போது, ​​அவன் வாழும் உரிமையை இழக்கிறான். மனி தன் தன் சொந்த பலத்தால் மட்டும் எழ முடியாது, ஆனால் தன்கையை தன் படைப்பாளரின் கையில் வைத்து, பழங்கால ஏனோக் கைப் போல, கடவுளுடன் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். மனிதன் இறுதியாக பிதாவுடன் நித்திய ஐக்கியத்தை அடைய முடியும் என்ற எண்ணம் எவ்வளவு ஆழமானது. இதில் சொல்ல முடியாத மகிழ்ச்சிகள் உள்ளன.
எந்த கிறிஸ்தவனும், போதகர் களும் உண்மையான நற்செய்தி யைக் கற்பித்து அனைவரையும் பிரியப்படுத்த முடியாது. சிலர் எப்போதும் கிறிஸ்தவர்களை எதிர்ப்பார்கள். கிறிஸ்துவின் ஊழியர்களில் ஒருவராக இருப் பது எளிதல்ல. ஆனாலும் நாம் இறுதிவரை நற்செய்தியில் நிலைத்திருப்பது நம்முடைய தலையாக கடமையாகும் இதன் மூலம் கடவுளின் படைப்பின் வீழ்ச்சியை நாம் தடுக்க முடியும்.
3 படைப்பின் சீரழிவு ஒரு சாப மாகும்.The Corruption of Creation is a curse. லூக்கா 10:13-16.
 கிறித்துவுக்கு பிரியமானவர் களே! படைப்பின் சீரழிவு ஒரு சாப மாக கருதப்படுகிறது. ஆண்டவரா கிய இயேசு கிறித்து இதை சீர்படு
த்த,  வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக் கும் இடங்களுக்கும் தமக்கு முன் னே இருவர் இருவராக அனுப்பி னார். (லூக்கா நற்செய்தி 10:1)
பொதுவாக, எண் 70, யூதர்களுக்கு அடையாளமாக இருந்தது.வனாந் தரத்தில் மக்களை வழி  வழிநடத் தும் பணியில் மோசேக்கு உதவ தேர்ந்தெடுக்கப்பட்ட மூப்பர்களின் எண்ணிக்கை 70 ஆகும் ( எண்கள் 11:16-17 ; ) அது யூதர்களின் உச்ச சபையான சனகெரின் எண்ணிக் கையும் 70 ஆகும். இது அக்காலத் தில் உலகில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையாகக் கருதப்ப ட்டது. லூக்காதான் உலகளாவிய பார்வையைக் கொண்ட மனிதர்,  The Gospel Luke is the Universal Gaspel . மேலும் உலகில் உள்ள ஒவ்வொரு தேசமும் தனது இறைவனை அறிந்து நேசிக்கும் நாளைப் பற்றி அவர் யோசித்தி ருக்கலாம். துயரம், சாபம் உச்சரிக்கப்படும் நகரங்களில் ஒன்று கோராசின். நற்செய்தி வரலாற்றில் கோராசின் ஒரு போதும்குறிப்பிடப்படவில்லை.
இரண்டு வருஷங்களாக இயேசு கலிலேயாவில் பெரிய அளவில் ஊழியம் செய்தபோது பெரும் பாலும் கப்பர்நகூமில் தங்கிய தாகத் தெரிகிறது; கப்பர் நகூம் ஆண்டவரின் பனித்தளம். கப்பர்நகூமுக்குப் பக்கத்தில்தான் கோராசினும் பெத்சாயிதாவும் இருந்தன. கோராசின் மற்றும் பெத்சாயிதாவில் குடியிருந்த யூதர்கள் இயேசுவின் அற்புதங்க ளைக் கண்கூடாகப் பார்த்தார்கள். இயேசு தனது பணியைச் செய்த நகரங்களாகக் இவைகள் குறிப்பி டப்பட்டுள்ளன . (தீருவிலும் சீதோ னிலும் உருவ வழிபாடு செய்து வந்த மக்கள் அந்த அற்புதங்க ளைப் பார்த்திருந்தால் அவர்களே மனம் திருந்தியிருப்பார்கள்.)
உதாரணத்துக்கு, பெத்சாயிதாவி ல்தான் 5,000-க்கும் அதிகமான மக்களுக்கு இயேசு அற்புதமாக உணவு தந்தார்; பார்வையில்லாத ஒருவரையும் கூட அங்குதான் குணப்படுத்தினார்.(மத் 14:13-21)
கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாத வர்களின் முடிவு கந்தகத்தாலும் அக்கினியினாலும் அழிக்கப்பட்ட சோதோமை காட்டிலும் மோசமான தாக இருக்குமாம்.இயேசு நம் சமூகத்தைப் பார்வையிட்டால், அவர் என்ன சொல்வார்? கோராசினுக்கும்பெத்சாயிதாவுக்கும் கொடுத்தது போன்ற ஒரு எச்சரிக்கையை அவர் விடுப் பாரா? பரிசேயர்களின் குறுகிய மனப்பான்மைக்காக இயேசு அவர்களைக் கண்டித்தார். அவர்களின் மனம் நெருக்கமாக இருக்கிறது, அவர்கள் தங்கள் எல்லா செயல்களிலும் சரியான வர்களாகத் தோன்றுகிறார்கள். நம் செயல்களின்படி நாம் நியா யந்தீர்க்கப்படுவோம் என்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. கடவுளை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் கற்பிப்ப தைச் செய்தால் நாம் இரட்சிக்கப் படுவோம். கர்த்தருடையசெய்தி யை நாம் நிராகரிக்கக்கூடாது, ஏனெனில் அது நம் வீழ்ச்சிக்கும்,
படைப்புக்கும் வழிவகுக்கும்.
நற்செய்திகளில் , பெத்சாயிதா மற்றும் கப்பர்நகூமுடன் சேர்ந்து, கோராசின் நகரங்கள் ஆண்ட வரின் வார்த்தையை நிராகரித்த தாகத் தோன்றியதால், பின்னர் அவை சபிக்கப்பட்டன ( மத்தேயு 11 :20-24)
 கிறிஸ்துக்கு பிரியமானவர்களே கடவுளின் உன்னத படைப்புகளின்
 சீரழிவிற்கு காரணம் அவரையும், அவரின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல்இருப்பதேகாரணம்.  அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அழிக்கப்படுவார்கள் என்ற சாபம் நமக்கு கோராசின் பாடமாக இருக் கிறது.படைப்பையும், சுற்றுச்சூழ லையும் பாதுகாப்பது வெறும் நடைமுறைச் செயல்களால் மட் டும் இயலக்கூடிய செயல் அல்ல, மாறாக, அது, நீதியையும், நன்னெ றியையும் சார்ந்த மனமாற்றம் குறித்த விடயம்.
"மனிதன் பாவம் செய்வதால் அவன் பாவியாக மாறுவதில்லை, மாறாக அவன் ஒரு பாவி, அதனா ல் அவன் பாவம் செய்கிறான்' என்று புனித அகஸ்டின் ஒரு முறை கூறினார். மனிதன் பாவம் செய்யும் இயல்பான போக்கைக் கொண்டிருக்கிறான் என்பதே இதன் அர்த்தம். ஆனால் நமது கடவுளின் நித்திய மன்னிப்பு கிறித்துவின் மூலம் வெளிப்படுகி றது என்றும், கடவுள் மனிதனை பாவத்திலிருந்து காப்பாற்றினார் என்றும் வேதம் நமக்குக் கற்பிக்கி றது. அதுதான் படைப்பின் மிகப் பெரிய நம்பிக்கை. ஊழலில் மூழ்கியிருக்கும் படைப்பு நற் செய்திகளின் வழியாக கிறித் துவிடமும் அவருடைய போதனை களிடமும் திரும்பினால் மட்டுமே அதற்கு ஒரு மீட்பு இருக்கும். அன்பர்களே, படைப்புகளின் சீரழிவு சரி செய்யப்பட, படைப்ப
னைத்தும் படைப்பாளராகிய
கர்த்தரிடம் திரும்புவதே ஒரே வழி.
அவ்வாறு அமைய ஆண்டவர்
அருள் புரிவாராக. ஆமேன்.


Prof. Dr. David Arul Paramanandam 
Sermon Writer 
www. davidarulsermoncentre 
www.davidarulblogspot.com


Note: The message is to be delivered 
at CSI St. Peter 's Church, Pazhaveli,
Chengalpet on 23/02/25.















கோராசினில் உள்ள பண்டைய ஜெப ஆலயம்







கோராசினில் உள்ள பண்டைய ஜெப ஆலயம் Source: Wikipedia 

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.