நோய்களை குணமாக்குதல் . (182) Healing in Sickness. விடுதலை பயணம் 4:10-17,22, திருப்பாடல் 103:1-10, 2 கொரிந்தியர் 12:1-10, யோவான் 9:1-7. நலம் நல்கும் திருப்பணி ஞாயிறு.
கிறித்துவுக்கு பிரியமானவர்களே!
அனைவருக்கும் இயேசு கிறித்து வின் இனிய நாமத்தில் வாழ்த்துக் கள். இவ்வாரம் நம் தென்னிந்திய
திருச்சபை நலம் நல்கும் திருப் பணி ஞாயிறு என மருத்துவ
திருப்பணியை சிறப்பிக்கும் வகையில், "நோய்களை குண மாக்குதல்" . Healing in Sickness.
என்ற நமது ஆண்டவரின் திருப்
பணிகளில்ஒன்றான குணப்படுத்தும் திருப்பணி தலைப்பை தியா னிப்போம்.நோய்களை குணமாக் குதல் ஆண்டவரின் திருப்பணி களில் இரண்டாவது இடத்தை
பிடித்திருக்கிறது. அப்படி என்றால்
முதலாவது திருப்பணி இறை
ஆட்சியை இவ்வுலகில் கொண்
டுவருவது என்ற மீட்பின் பணியா
கும். ஆண்டவர் அன்புள்ளம்
கொண்டவர். நோயினால் பாதிக்க
ப்ட்டவர்களை கண்டதும் மன
உருக்கம் கொண்டார். குணப் படுத்தினார்.செவிடர்களின் காது களைத் திறந்தார்,இறந்தவர்களை உயிர்ப்பித்தார். ஆரம்பகால திருச்
சபைகள் ஆண்டவரை "தெய்வீக மருத்துவர்" என்ற பெயருடன்
அழைத்தனர். நம் ஒத்தமை நற் செய்தி நூல்களில் (Synoptic
Gospels Matthew, Mark and Luke)
22 குணப்படுத்தும் பணிகளை
ஆண்டவர் செய்திருக்கிறார். இவ ற்றில் பெண்களுக்காக 5 குணப் படுத்தும் நிகழ்வுகளும் உண்டு.(1)
கானானிய பெண்ணின் மகள்
(மத்தேயு 15:22-28,)(2) யாயிரின் மகள் (மாற்கு 5:22,23,) (3) 12 ஆண்டுகள் இரத்தப் போக்காள் பாதிகாகப் பட்ட பெண் (மாற்கு 5:25-29, ) (4) நாயின் ஊர் விதவையின் மகனை உயிர் பெற செய்தல் (லூக்கா7:11-15,) (5) தீயஆவி பிடித்தப் பெண் (லூக்கா 13:11-13.) இவற்றில், 4 பெண் களை குணப்படுத்துவதும் உள்ள டக்கியது. நற்செய்தியில் குணப் படுத்தும் பணியில் மூன்று வித,
மிகவும் ஓரம்கட்டப்பட்ட மக்கள்
(Marginaluzed people):என்றால்,
அது பெண்கள், தொழு நோயா ளிகள், புற இனத்தார். ஆண்டவரின் குணப்படுத்தும் மக்கள் 5 வகையினர்.1) பார்வை யற்றோர் (Blind) பார்வை பெறு கின்றனர்; 2) கால் ஊனமுற்றோர் (lame) நடக்கின்றனர்;3) தொழு நோயாளர் (leprosy) நலமடைகி ன்றனர்; 4) காது கேளாதோர் (deaf) கேட்கின்றனர்; 5)இறந்தோர்(death) உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழை களுக்கு நற்செய்தி அறிவிக்கப் படுகிறது. (மத்தேயு நற்செய்தி 11:5) என 5 குணப்படுத்தும் பணிகளை குறிப்பிடுகிறார்.
நம் திருச்சபைகள் இதை நினை
வுப்படுத்தும் விதமாக மருத்துவ
முகாம் நடத்தி மருத்துவ ஞாயிறு
தினத்தை கொண்டாடி வருகிறார்
கள். கிறித்தவ அருட்பணியாளர்
கள் கல்வி பணி, மருத்துவ பணிக
ளை திருச்சபையின் கடமை என
100 ஆண்டுகளுக்கு முன்பாகவே
ஆரம்பித்தனர்.
அன்பானவர்களே! குணப்படுத் தும் நற்பணியில்,ஆண்டவர்
சட்டமா? மனித நேயமா? எதை
கண்ணோக்கினார் என்றால்
மனித நேயத்தை தான் தூக்கிப் பிடித்தார். ஓய்வு நாளில் (sabbath) நன்மை செய்வதா?தீமை செய் வதா,? என யூத மத தலைவர்க ளிடம் கேள்வி கேட்டு 7 குணப்
படுத்தும் செயலை ஓய்வு நாளில்
செய்தார். ஓய்வு நாளில் 39 வேலைகளை மிஸ்னாபடி தடைசெய்திருந்தனர்.(Acc. to Mishnah ,the first written collection of the Jewish oral traditions that are known as the Oral Torah, the healing is prohibited in the Sabbath day)
இதை நம் ஆண்டவர், பரிசேயர் களைப் பார்த்து," அவர் அவர் களை நோக்கி, "ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. " என்றார்.(மாற்கு நற்செய்தி 2:27)
ஆண்டவர் மக்களின் மன ரீதி யான, உடல் ரீதியான, சமூகரீதி
யான வியாதிகளுக்காக மிகவும்
வருந்தினார். இவ்வியாதிகள்
மக்களை கடவுளிடமிருந்தும், சக மனிதர்களிடமிருந்தும் பிரிப் பதாக உணர்ந்தார், எனவே, வியாதி உள்ளவர்களை குணப் படுத்தினார்.தன்னிடம் நம்பிக்கை
யுடன் வந்தவர்களை குணப்படுத் தியதுடன், பாவமன்னிப்பையும் அளித்தார்.ஏனேனில், அவர் வந்
தது, இழந்து போனதை தேடவும்
இரட்சிக்கவுமே என்பதை உறுதி
படுத்தினார். தன்னை எதிர்த்த
ரபீமார்கள், பரிசேயர், சதுசேயர் கள் காணும்படியாகவும், தான்
மேசியா என உறுதிப்படுத்திட
குணப்படுத்தும் மானிட செயலை
மனிதாபத்தோடு செய்தார்.
1 இருக்கின்றவராக இருக்கி ன்றவர் நானே அனுப்பினார். I am who I am, sent unto you. விடு
தலை பயணம் 4:10-17
கிறித்துவுக்குப் பிரியமானவர் களே! இறைபணியை இவ்வுல கில் நிறைவேற்ற, செயலாற்ற
ஏதாவது சாக்கு போக்கு சொல்வ
து ஆண்களுக்கான இயல்பான
குணம்தான். பயம், தயக்கம், இவைகளுடன் கடவுளுக்காக
உலக வாழ்வை இழக்காத மனித
குணமே காரணம். கடவுள் தான்
நேசிக்கும் இஸ்ரவேலரை 430
ஆண்டுகள் எகிப்தில் அடிமைதன
த்திலிருந்து, விடுதலை செய்ய
மோசே என்ற மாபெறும் நபரை
அழைக்கிறார்.ஆனால், அவரோ
"நாவன்மை அற்றவன் நான்; எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்” (விப 4:10) எனத் தயங் குகிறார். இதற்கு அறிவியல், ரீதி
யாக நாம் சிந்திப்போம், மோசே யின் முதல் 40 ஆண்டுகள் எகிப்து
மன்னரின் அரண்மனை வாழ்வு,
அவருக்கு தெரிந்த மொழி எகிப்து
மொழியாகும். தெள்ள தெளிவாக பேசுவதற்கு , அவர் எபிரேய மொழியை நெருக்கமாக அறிந்தி ருக்கவில்லை என்பது உண்மை.
மோசே எகிப்தியர்களின் அனை த்து ஞானத்திலும் கற்றறிந்தவரா கவும், வார்த்தைகளிலும் செயல் களிலும் வல்லமை வாய்ந்தவரா கவும் இருந்தார் என்று திருதூதர் பணிகள் 7:22ல் ஸ்தேவான் கூறுவதை நாம் காண்கிறோம் .
இந்த எகிப்து மொழி நன்றாகத் தெரியும் என்ற காரணத்திற்காக
வே, எகிப்து அரசிடம் பேச மோசே வை ஆண்டவர் தேர்ந்தெடுத்திரு க்கலாம். அடுத்த 40 ஆண்டுகள்
வாழ தகுதியற்ற மிதியான் நாடு சீனாய் பாலைவனத்தின் ஒரு பகு
தியில் ஆடுகளை மேய்த்துவந் தார். இங்கு வாழ்ந்த மீதியானியர்
ஆபிராகாம், வழிவந்தவர்கள்.(ஆபிரகாம் கெத்தூரா என்ற மற் றொரு பெண்ணை மணந்து அவ ள் மூலம்பெற்றெடுத்த பிள்ளைக ளில் மிதியான் என்பவரும் ஒரு வர். ஆதலால் இந்த மிதியானி யரும் செமித்திய இனத்தைச் சார்ந்தவர்களே,ஆபிரகாமின் மக்களே! மிதியானின் அர்ச்சகரா கிய இரகுவேலின் மகள் சிப்போராவை மணம் முடித்தார் மோசே.(தொடக்க நூல் 25:1,2) ஆதலால், இவர்கள்மூலம் அவர் எபிரேய மொழியை கற்றுக் கொ ண்டிருக்கலாம்.அவர் மீதியனில் கழித்த கடைசி நாற்பது ஆண்டு கள் , அங்கு தூய எபிரேய மொழி நிலவியிருக்க வாய்ப்பில்லை, இருப்பினும் அதன் ஒரு பேச்சு வழக்கு அங்கு பேசப்பட்டிருக் கலாம்.இதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு மோசே எகிப்தில் இருக்கும் போது மந்தமான பேச்சோ மந்த மான நாவோ இருக்க வாய்ப் பில்லை.(Acts 7:22)
40 ஆண்டுகளாக, மோசே ஆடுகளி டம் மட்டுமே பேசுவதாகத் தோன்றி யது. அவருடைய தன்னம்பிக்கை போய்விட்டது; மொழியாற்றல்
குறைந்துவிட்டது. ஆனால், அவர்
பின்னாட்களில் ஐந்து ஆகமங்க ளை எபிரேய மொழியில் எழுதும்
ஆற்றலைப்பெற்றார்.
அன்பானவர்களே! இறைவன்
இறைவாக்கினர் மோசேவை
அழைக்கிறார் ஆனால், அவரோ
"நாவன்மை அற்றவன் நான்; எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்” என்கிறார்.
இதே கடவுள், இறைவாக்கினர் எசாயாவை அழைக்கிறார். அதற்கு எசாயா, “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில், தூய் மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதர் நான்” (எசா 6:5) எனப் பதிலளிக்கிறார்.
இறைவாக்கினர் எரேமியாவை அழைக்கப்பட்டபோது அவர் சொன்ன பதில், “எனக்குப் பேசத் தெரியாது. சிறுபிள்ளை நான்” (எரே 1:6) என்றார்.
புனித பேதுரு இயேசுவை ஆண்ட வர் என்று உணர்ந்தவுடன், “ஆண்டவரே நான் பாவி, என்னை விட்டுப் போய் விடும்” (லூக் 5:8) எனப் பதறுகிறார்.
இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொ ண்ட புனித பவுல், “பாவிகளுள் முதன்மையான பாவி நான்” (1திமொ 1:15) எனக் கலங்குகிறார்
கடவுளால் அழைக்கப்பட்ட விவிலி ய மாமனிதர்கள் இறைப்பணியை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதை, பயப்படுவதை, பதறுவதை, கலங்குவதைக் காண்கின்ற போது இறைபணியை ஆண்டவர்
அருளும் வல்லாமையால் மட்டு மே செய்யமுடியும். இருக்கிறவ ராக இருக்கிறவர், எல்லாவற் றையும் நேர்த்தியாய் செய்வார்.
அவ்வாறே, தான் திக்கு வாயன்
என்று மோசே கூறியதற்கு,
"மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே!
ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப் பேன்" என்றார். இங்கு, ஆண்டவர், மோசே மூன்றுமுறை மறுத்தும், அவனுக்கு இரண்டு அற்புதங் களை செய்ய வைத்தும், அவனி ன் திக்குவாயை குணப்படுத்த வில்லை.?:கடவுள் குறைபாடு உடைய மக்களையும் தன் உன்ன
த பணிக்கு பயன்படுத்துவார். இது கடவுளின் மகா திட்டம்.இது
தெய்வீக பணிக்கான தெய்வீக அழைப்பாகும்.
ஆனாலும், மோசே, "வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!" என்றுரைத்தார். இதைக் கேட்டு ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு பின்வருமாறு கூறினார்; "லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா? அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும். இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிரு க்கிறான். அவன் உன்னைக்காணு ம்போது மனமகிழ்வான். என்றார்.
கடவுளின் இறைபணிக்கு இரண் டு இரண்டு பேராக செல்வது நமக்கு இது வழிகாட்டுகிறது.
ஆண்டவர் தம் சீடர்களை இஸ்ர
வேலருக்குள் அனுப்பும் போது
இரண்டு பேராகவே அனுப்புகிறார்
குருத்தொலை ஞாயிற்று பயணத்
திற்காக கழுதையை கொண்டுவர
இரண்டு பேரை அனுப்புகிறார்.
மேல் அறையில் பாஸ்கா விருந் தை ஆயத்தம் செய்ய ஆண்டவர்
இரண்டு சீடர்களைத்தான் அனுப்
பினார்.
அவ்வாறே, இஸ்ரவேலரின்
விடுதலைபயணத்தை இரண்டு
தலைவர்கள் வழி நடத்தினர்.
மோசே தலைவர், ஆரோன் மோசே
வின் செய்தி தொடர்பாலர்.(Spokes
Person) சென்றார்கள், வென்றார் கள், பின் 40 ஆண்டு வனாந்திர
பயணம்.
2.என் அருள் உனக்கு போதும்.
My grace is sufficient for you.2 Corinthians 12:1-10
கிறித்துவின் அன்பர்களே! இந்தப் பகுதியை நாம் ஒரு குறிப்பிட்ட பயபக்தியுடன் படிக்க வேண்டும், ஏனெனில் இதில் பவுல் தனது இதயத்தை வெளிப்படுத்துகிறார், அதே நேரத்தில் அவரது மகிமை யையும் வேதனையையும் நமக் குக் காட்டுகிறார்.கொரிந்திய கிறித்தவர்கள் பவுலைப் பற்றி குறைவாக சிந்திக்க வைத்தது உலக சிந்தனை, அவர்களால் அதை உணர முடியாவிட்டாலும், இயேசுவைப் பற்றி குறைவாக சிந்திக்க வைத்தது. அவர், தான்
கண்ட காட்சியினிமித்தமும், வெளிப்பாடுகள் மூலம் பெருமை
பாராட்ட தகுதிகள் உள்ளன, ஆனா ல், அவரைகுறித்து பெருமை பாரா
ட்ட விரும்பியதில்லை.
திருதூதர் பவுல் அடிகளார் 14 ஆண்டிற்கு முன்பாக நடந்த தரி சன நிகழ்வை இங்கு கொண்டு வருகிறார்.பவுலின் தரிசனத்தில், அவர் பரலோகத்திற்கு எடுத்து க்கொள்ளப்பட்டார். இந்த அனுப வத்தைப் பெற்ற ஒரே நபர் திரு விவலியத்தில் பவுல் மட்டுமல்ல. தீர்க்கர்கள் எசேக்கியேல், தானி யேல் மற்றும் யோவான் ஆகிய அனைவருக்கும் இதே போன்ற அனுபவங்கள் இருந்தன.
பவுல் தற்காலிகமாக உடல் ரீதி யாக விண்ணகத்திற்கு எடுத்து க்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு அது உண்மையானது (ஏனோக்குக்கும் எலியாவுக்கும் இது நடந்தது).
பேதுரு சுத்தமான மற்றும் அசுத் தமான விலங்குகளைப் பற்றிய ஒரு தரிசனத்தைக் கண்டார் ( திரு தூதர் 10:17-19) முதல் வானம் (பூமியின் வளிமண்டலம்). இரண்டாவது வானம் விண்வெளி மற்றும் அங்குள்ள வான உடல் கள். (Celestial body) மூன்றாவது வானம் கடவுளின் வாசஸ்தல த்தைக் குறிக்கிறது. பவுல் மூன் றாம் வசனத்தில் அதை "சொர்க் கம்" (Paradise) என்று அழைக்கி றார். இது பாரசீக மொழியிலிரு ந்து வந்தது.ஆனால் அவர் இந்த தரிசனத்தை ஒரு முறை மட்டுமே குறிப்பிடுகிறார், ஆனாலும் அவர்
இதை குறித்து பெருமை பாராட்ட
விரும்பவில்லை. தன் வலுவின்
மையே எனக்கு பெருமை என்கி
றார்.Infirmity is my boost. இதில்
நான் பெருமை பாராட்டப்படாதபடி
அவரிடம் பெருங்குறை ஒன்று
அவரின் உடலில் தைத்த முள்
போல் அவரை வருத்திக் கொண் டே இருக்கிறது. A continuous pain
in his body prevents him for self
boosting. இதை "சாத்தானின் தூதுவன்" என உருவகப்படுத்து கிறார்.(A messenger of Satan) இந்த
முள்ளை எடுக்க மூன்று முறை
வேண்டினார்.அதுநடக்கவில்லை. நம் ஆண்டவர், கெர்ச்சமனே தோட்டத்தில் மூன்று முறை வேண்டினார், அதை பிதாவின் விருப்பத்திற்கு விட்டு விட்டார். அவ்வாறே, பவுலுக்கும் அது நிறைவேற்றப் படவில்லை, மாறாக,, "என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெரு மை பாராட்டுவேன் என்றார். மோசேக்கு இருந்த குறைபாட்டு டன் தன் பணிக்கு கடவுள் அழைத்
தார், அவ்வாறே, பவுலின் இந்த
குறைபாட்டுடன் தன் பணியில்
நிலைநிருத்தப்பட்டார்.
பவுலின் உடலில் தைத்த முள் எது?
அன்பானவர்களே! முள் என்பது ஆன்மீக சோதனைகளைக் குறிக்கிறது என ஜான் கால்வி னின் கருத்தாகும் (சீர்திருத்த இயக்க காலத்தைச் சார்ந்த பிரான்சின் கிறித்தவ தலை சிறந்த இறையியல் வல்லுநர் ஆவார்) . மார்ட்டின் லூதர் கருத் துப்படி, (சீர் திருத்த திருச்சபை யின் தந்தை)" முள் என்பது, ஒருவர் எதிர் கொள்ள வேண்டிய எதிர்ப்பு மற்றும் துன்புறுத்தல், அவரது பணியைச் செயலிழக்கச் செய்தவர்களுடனான தொடர்ச்சி யான போர் ஆகியவற்றைக் குறிக்க இது பயன்படுத்தப்பட் டுள்ளது. என்கிறார். ஆனால், ரோமன் கத்தோலிக்கக் திருச் சபையின் கருத்துபடி, முள் என்பது, சரீரப் பிரகாரமான சோதனைகளைக் குறிக்கும். இது துறவிகளும் தங்கள் துறவி மடங்களிலும், அறைகளிலும் தங்களை அடைத்துக் கொண்ட போது, அடக்கக்கூடிய கடைசி உள்ளுணர்வு பாலியல் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதை அகற்ற அவர்கள் விரும்பினர், ஆனால் அது அவர்களை மேற் கொண்டது. . பவுல் அப்படிப்பட் டவர் என்று அவர்கள் நம்பினர்.
முள் எதுவாக இருந்தாலும், அது அவ்வப்போது இருந்தது, ஏனென் றால், அது சில சமயங்களில் பவுலைச் முழுமையாக சாய்த் தாலும், அது அவரை ஒருபோதும் அவரது வேலையிலிருந்து முற்றிலுமாகத் வெற்றிக் கொள்ள
முடியவில்லை.அனைவருக்குமே,
சரிர, ஆன்மீக முட்கள் உண்டு. இந்த முட்களுடன் இறைபணி யாற்றிட அழைக்கப்படுகிறோம். திரு தூதர் பவுலின் வாழ்க்கை யிலிருந்து முள்ளை அகற்றுவதற் குப் பதிலாக, கடவுள் பவுலுக்குத் தம்முடைய கிருபையைக் கொடுத் தார், தொடர்ந்து கொடுப்பார். பவுலுக்குக் கடவுள் கொடுத்த கிருபை அவருடைய ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்ய போதுமானதாக இருந்தது. அவ் வாறே, நமக்கும் அருள்வார்.
3 குணப்படுத்தும் கிறித்து. Healing Christ.யோவான் 9:1-7.
கிறித்துவின் அன்பு விசுவாசி களே! நற்செய்தி நூல்களில் கூறப்பட்டுள்ள ஒரே அற்புதம் இந்த பிறப்பிலிருந்து குருடனாக பிறந்தவன்தான்.(Born blind)
இயேசுவின் காலத்தில், ஒரு மனி தனின் துன்பம், அது பிறப்பிலிரு ந்தே வந்தாலும் கூட, அவன் பிறப் பதற்கு முன்பு செய்த பாவத்திலிரு ந்து வரக்கூடும் என்று சில யூதர் கள் நம்பினர். பிதாக்களின் அக்கி ரமத்தை மூன்றாம் மற்றும் நான் காம் தலைமுறை வரை பிள்ளை கள் மீது விசாரிக்கிறேன்" ( விடு தலை பயணம் 20:5) என்ற
வேதத்தின் அடிப்படையிலானது.
யூதர்கள் துன்பத்தையும் பாவத் தையும் இணைத்தனர். துன்பம் இருக்கும் இடமெல்லாம், பாவம் இருக்கிறது என்ற அனுமானத்தில் அவர்கள் செயல்பட்டனர்."Where there is suffering there is sin"
"ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள்.
ஆண்டவர், உடனே, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப் படும் பொருட்டே இப்படிப் பிறந் தார் என அவன் பிறப்பை மதிக்
கின்றார். இதுதான் ஆண்டவர்.
பழைய ஏற்பாட்டின் முக்கிய குறிப்புகளில் ஒன்று, பிதாக்க ளின் பாவங்கள் எப்போதும் பிள்ளைகள் மீது சுமத்தப்படு கின்றன. எந்த மனிதனும் தனக்கென்று வாழ்கிறான், எந்த மனிதனும் தனக்கென்று இறக்க வில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ஒரு மனிதன் பாவம் செய்யும்போது, அவன் முடிவில்லாத துன்பத்தின் தொடரை இயக்குகிறான்.
இயேசு குணப்படுத்த உமிழ் நீரால் சேறுண்டாக்கி, பார்வை யற்றவரின் கண்களில் பயன் படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு அற்புதங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று காது கேளாத திக்குவானின் அதிசயம் ( மாற்கு 7:33 ). எச்சில் பயன்படுத்துவது நமக்கு விசித்திரமாகவும், அருவ ருப்பாகவும், சுகாதாரமற்றதாகவும் தெரிகிறது; ஆனால் பண்டைய உலகில் இது மிகவும் பொதுவான
செயலாகும்.எச்சில், குறிப்பாக சில புகழ்பெற்ற நபரின் எச்சில், சில குணப்படுத்தும் குணங்க ளைக் கொண்டிருப்பதாக நம்ப ப்பட்டது.அதுவும் உண்ணா நோம் புடன் உள்ள வாயின் உமிழ்நீர் குணமாக்கும் திறன் அதிகம் கொண்டது.
ஆண்டவர், தெய்வீக மருததுவர்.
அக்காலத்தில் உள்ள வழக்கத் தின்படி இந்த உமிழ்நீர் சிகிழ்ச்சை
அளித்தார். உமிழ்நீர் கண்நோய்,
புண், தொழுநோய் புண்கள், காயங்கள் போன்ற பல வியாதி களை குணப்படுத்தியது.அவனை
சீலோவாம் குளத்திற்கு சென்று
கழுவ சொல்கிறார்.இயேசு கிறிஸ்து தாம் உலகத்திற்க்கு அனுப்பப்பட்ட சீலோவாம் என்றும், அவர் செய்யும் அற்புத ங்களை கொண்டு அவரை நாம் கண்டு பிடிக்க முடியும் என்பதை, சங்கீதகாரன் இவ்வாராக எழுதி வைத்துள்ளார் - குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார் - (திருப்பாடல் 146:8)
தொடக்க நூலில், இந்த ஷிலோ என்கிற பெயர் வரப்போகிற மெசியாவை குறிப்பதாக இருக்கிறது - "யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப் போனாய்; என் மகனே, சிங்கம் போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? சமாதான கர்த்தர்(Shiloh) வருமளவும் செங் கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவ தும் இல்லை; ஜனங்கள் அவரிடத் தில் சேருவார்கள் - (ஆதியாகம் தொடக்க நூல் 49:9-10)
அதே சமயத்தில், இந்த சீலோவாம் குளம் மனந்திருந்தாதவர்களுக்கு ஏச்சரிப்பின் குளமாகவும் இருக் கிறது - ".சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலே மில் குடியிருந்த மற்ற எல்லாரை யும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீ ர்கள்" என்றார். (லூக்கா நற் செய்தி 13:4,5) ஆக, சீலோவாம்,
குளம் சென்று, பார்வை அடைந் தான். அந்த நாள், சனிக்கிழமை,
ஓய்வுநாள் Sabbath day. களி மண் ணில் கைவைத்து சேர் உண்டாக் கியது மிஸ்னாவில் தடை செய்யப்
பட்ட 39 பணிகளில் ஒன்று. ஆனால், குணப்படுத்தும் பணி
24 மணிநேர அவசர பிரிவு
மருத்துமனை போல், அண்டவர்
மனித நேய பணியாற்றினார்.
அன்பானவர்களே! நன்மை
செய்யும் ஆண்டவரைப்போல்
நலம் நல்கும் திருப்பணி ஞாயிறு தினத்தில், நன்மை
செய்பவராய் வாழ கடவுள்
அருள்புரிவாராக.ஆமேன்.
Prof Dr David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
Comments
Post a Comment