லெந்து : மீட்புக்கான ஒரு காலம். (185)Lent : A time of Redemption. ஏசாயா: 58:1-4, திருப்பாடல் 6. உரோமையர் 2:1-13. யோவான் 5:1-9.

முன்னுரை:  கிறித்துவுக்கு பிரியமானவர்களே! லெந்து என்ற தவக்காலம், பாவிகளின் திருநாளாகும். இந்நாள் பாவி களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட நாட்களாகும். இன்னாட்கள்,  ஆண் டவருடைய சிலுவைபாடுகளை நினைவு கொள்ளும் இவற்றில் கொஞ்சமாவது நாம் பங்கெடுக் கும் பாடுகளினால், தான தர்ம ங்கள், ஜெப விண்ணப்பங்கள், மன்றாட்டுக்கள், உன்னா நோன் புகள், பாடல்கள், ஆராதனைகள் என்று கிறித்துவின் பாடுகளின் நினைவிலே   வாழக் கூடிய திருநாளாகும். லெந்து சாம்பல் புதன் (Ash Wednesday) தொடங்கி கடைசி திருவிருந்து வியாழன் வரை அடங்கியுள்ள 40 நாட்கள் அடங்கியதாகும்.லெந்து
என்பது ஈஸ்டருக்கானதயாரிப்பில் வழிபாட்டு ஆண்டில் புனிதமான கிறித்துவ மத அனுசரிப்பு ஆகும் . மத்தேயு , மாற்கு மற்றும் லூக்கா வின் நற்செய்திகளின்படி , இயேசு தனது பொது ஊழியத்தைத் தொட ங்குவதற்கு முன்பு யூதேயா பாலை வனத்தில் உண்ணாவிரதம் இருந் து சாத்தானால் சோதனையைத் தாங்கிக் கொண்ட 40 நாட்களை இது எதிரொலிக்கிறது. லெந்து நாட்களில்  ஞாயிற்று கிழமைகள் சேர்க் கப்படவில்லை. லெந்தின்
அடிப்படையே,, "என்னைப் பின்ப ற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள் தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். (லூக்கா நற்செய்தி 9:23) என்ற ஆண்டவரி ன் வார்த்தையை அடிப்படையை கொண்டது.
கிறித்தவர்களுக்கு 40 என்பது ஒரு முக்கியமான எண், ஏனெனில் இது முக்கியமான வரலாற்று நிகழ்வுகளுடன் நெருக்கமாக தொடர்புடையது. உதாரணமாக, மோசே கடவுளின் பத்து கட்டளை களுக்காகக் காத்திருந்தபோது 40 பகல்களும் 40 நாட்களும் மலை யில் கழித்தார். நோவாவின் வெள்ளம் 40 பகலும் 40 இரவுக ளும் நீடித்தது. எலியா சீனாய் மலைக்குச் செல்லும் பயணத்தில் 40 நாட்கள் கழித்தார். கானானுக் குச் செல்லும் வழியில் இஸ்ரவேல ர்கள் 40 ஆண்டுகள் வனாந்தரத் தில் கழித்தனர், இஸ்ரவேல் உள வாளிகள் 40 நாட்கள் கானானில் கழித்தனர். நினிவே மக்கள் மனம் மாறி நல்வழிக்குத் திரும்புவதற்கு யோனா இறைவாக்கினர் நாற்பது நாள் கெடு கொடுத்தார் ( யோனா 3:4).இவ்வாண்டு 2025,ல்,
லெந்து மார்ச் 5, தொடங்கி ஏப்ரல்
17, 2025 வரை இறை மன்றாட்டின்
அதி முக்கிய நாட்களாகும்.
சாம்பல் புதன் ஏன் அனுசரிக் கிறோம்? Why we observe the Ash Wednesday?
 கிறித்துவின் அன்பர்களே!
திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் கிழமை யை குறிக்கும்.  நாற்பது நாள் நீடிக்கின்ற தவக்காலத்தின் முதல் நாள்  இதுவே.திருநீற்றுப் புதனி லிருந்து 46ஆம் நாளாக உயிர்த் தெழுதல் விழா கொண்டாடப்ப டுகிறது. இடையே வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பது வழக்கமல்ல. ஏனென்றால் ஞாயி ற்றுக் கிழமை இயேசு உயிர்பெற் றெழுந்த நாள் ஆதலால் மகிழ்ச்சி நாள்; அது நோன்பு நாளல்ல என் பது கிறித்தவர்களின் நம்பிக்கை. சென்ற ஆண்டின் குருத்தோலை ஞாயிற்றில் ஊர்வலத்தில் நாம் எடுத்து சென்ற குருத்தோலையை சாம்பலாக்கி அதை இந்த சாம்பல் புதன் அன்று நெற்றியில் இந்த வசனத்தின் "மனிதனே, நீ மண் ணாய் இருக்கிறாய். மண்ணுக் குத் திரும்புவாய் என நினைத் துக்கொள் (தொடக்க நூல் 3:19). ” அடிப்படையில், பூசிக்கொள்ள வேண்டும்.சிலுவையே வாழ்வுக்கு வழி என்னும் நம்பிக்கையை நமக்கு கொடுப்பது சாம்பல் புதன் ஆகும்.
பிசாசை ஆண்டவர் எவ்வாறு எதிர் கொண்டார்? How did the Lord encounter the Devil?
 கிறித்துவுக்கு பிரியமானவர் களே! உன்னாநோன்பு காலத்தில் தான் பிசாசானவன் அதிகமாக சோதிப்பான். பலவித பிரச்சனை களை ஏற்படுத்துவான். சோதனை கள் வரும், நம்முடைய விசுவாசத் தை சீர்குலைக்கும் செயல்கள் ஏற்படும். ஆனாலும் நாம்உண்ணா நோன்பு காலத்தில் மிக உறுதி யாக, அமைதியாக, பொறுமை யாக, நிதானமாக ஆண்டவரின் வசனத்தை பயன்படுத்தி சோத னைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஆண்டவர் நமக்கு வழி காட்டுகிறார்.நம் ஆண்டவர் திருமுழுக்கு யோவான் மூலம் திருமுழுக்கு பெற்றப்பிறகு யூதேய பாலைவனத்தில்உண்ணா நோம்பு மேற்கொண்டபோது, பசி
உண்டாயிற்று. அவரை பிசாசா னவன் சோதித்த பொழுது ஆண்டவர் அழகாக திரு விவிலிய த்திலிருந்து (இணைச்சட்டம்) வசனங்களை எடுத்துரைத்து பிசாசை வெற்றி கொண்டார்.
சோதனை1..
சோதிக்கிறவன் அவரை அணுகி, "நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளை யிடும்" என்றான். (மத்தே. 4:3)பசிக் கான தனது தூண்டுதலில் அவர் கடவுளைத் தவறவிடவில்லை. பசி
வந்தால் பத்தும் பறந்து போகும்
என்பர். யாக்கோபு தன் சொந்த சகோதரன் ஏசாவின் பசிக்காக "அவனது தலைமகனுரிமையை வாங்கியதை நாம் வேதத்தில்
பார்க்கிறோம்.(தொடக்கநூல் 25:31) ஆனால், நம் ஆண்டவர்
 " மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ் வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிரு க்கிறது " (இணைச்சட்டம் 8:3) என
பசியிலும் ஞானமாய் பதில் அளி
க்கிறார்.
சோதனை :2 (லூக்கா4)
பின்பு பிசாசு அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் அவருக்குக் காட்டி அவரிடம், "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடு ப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; 
நான் விரும்பியருக்கு கொடுப் பைன், நீர் என்னை வணங்கி னால் அனைத்தும் உம்முடைய வையாகும்" என்றான் இயேசு அவனிடம் மறுமொழியாக,அங்கே
போ! சாத்தானை,  "'உன் கடவு ளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய் வாயாக" என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்றார். உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு! 
(இணைச் சட்டம் 6:13)என்று வேதம் கூறுகிறது.
சோதனை :3
நீர் தேவனுடைய குமாரனேயா னால், இங்கிருந்து தாழக்குதியும்; ஏனெனில், 'உம்மைக் காக்கும்படி தம்முடைய தூதர்களுக்குக் கட்ட ளையிடுவார்; உம்முடைய பாதம் கல்லில் மோதாதபடிக்கு, அவர்கள் உம்மைத் தங்கள் கைகளில் ஏந்திச் செல்வார்கள்' என்று மேற் கோள் காட்டினான் " ( லூக்கா 4:9–11) (திருப்பாடல்,சங்கீதம் 91:12)
இயேசு தனது உத்தமத்தைக் காத்துக்கொண்டு, வேதவசன ங்களை மேற்கோள் காட்டி, "உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக் காதே என்று சொல்லப்பட்டிருக் கிறது" என்று பதிலளித்தார். (மத்தேயு 4:7இணைச்சட்டம் 6:16) 
மூன்று முறை பிசாசு வேத வசனத் தை பயன்படுத்தியே இயேசுவைச் சோதித்தான்.பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர். 
(மத்தேயு நற்செய்தி 4:11) இவ்வாறே கிறித்தவர்களும் அலகையின் சோதனையை முறி யடிக்க தவக்காலம் ஒரு வாய்ப் பாக அமைகிறது.அதிக வசனங் களை அடிக்கடி நம் வாயில்
வருவதாக. சிலுவைப் பாட்டை தியானிப்பது மீட்புக்கான வழி முறையாகும். சிலுவை இல்லாமல் மீட்பு கிடைக்காது. ஆண்டவரு டைய மறு பெயர் மீட்பார். அது சிலுவை பாட்டின் மூலமே நமக்கு கிடைத்தது. தவக்காலமே மீட்பின் காலமாகும்.
1.சத்தமாக அழுங்கள்:Cry Loudly.
  ஏசாயா 58:1-4.
 கிறித்துவுக்கு பிரியமானவர்களே ஏசாயா தீர்க்கர் இஸ்ரவேலரு டைய மதச் சடங்குகளை அர்த்தம ற்றது என எச்சரிக்கிறார். "சத்தமாக கூப்பிடு" என்ற வார்த்தை எபிரேய மொழியில்  பெகரோன் கெரா' என்பர். 
(தொண்டையால் கூப்பிடுங்கள்) . ,இஸ்ரவேலரின் மதம் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மதமாகும். ஆனால் அதன் உண்மையான சக்தியை  அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. எனவே அவர்களின் பாவத்தையும் வன் செயல்களையும் சத்தமாக கண்டி த்துரைக்கிறார்.
யூதர்கள் சட்டத்தின்படி தினசரி சடங்குகளைச் செய்ததால் அவர்கள் தங்களை நீதிமான்கள் என்று நினைத்தார்கள். இவை அனைத்தையும் மீறி அவர்கள் இன்னும் பாவிகள் என்பதை தீர்க்கதரிசி அவர்களுக்குக் உணர்த்துகிறார். உண்மையில், இந்த சடங்குகள் மீதான அவர் களின் அணுகுமுறையே அவர் களின் முக்கிய பாவமாகும்.
உதாரணமாக, பலர் கடவுளுக்கு முன்பாக உண்மையிலேயே தாழ்மையுடன் இருப்பதற்காக அல்ல, மாறாக கடவுள் தங்கள் செயல்களால் ஈர்க்கப்படுவார் என்று நம்புவதால் உபவாசம் செய்கிறார்கள். ஆனால் அவர் கள் உபவாசம் இருக்கும் அதே நேரத்தில், அவர்கள் தங்கள் தொழிலாளர்களை ஒடுக்கு கிறார்கள். ஒருவருக்கொருவர் சண்டை யிடுகிறார்கள். அவர்கள் உபவாசம் இருப்பதைக் காட்டும் விதத்தில் நடந்துகொள்கிறார்கள், உடை அணிகிறார்கள், ஆனால் அத்தகைய உபவாசம் கடவுளின் பார்வையில் பயனற்றது . அவர்கள் மற்றவர்களை ஒடுக்கு வதை நிறுத்திவிட்டு ஏழைகளு க்கும் ஏழைகளுக்கு உதவத் தொடங்குவதையே கடவுள் விரும்புகிறார்  அப்போதுதான் அவர் அவர்களைப் பார்த்து மகிழ் ச்சியடைவார்; அப்போதுதான் அவர் அவர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொண்டு அவர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிப் பார்.
 ஆண்டவராகிய இயேசு கிறித்து, நாம் உண்ணா நோன்பு இருக்கி ன்ற போது எப்படி அதை அனுசரி க்க வேண்டும் என்று மிக சிறப் பாக கூறியிருக்கிறார். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண் டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார் கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார். 
(மத்தேயு நற்செய்தி 6:16-18)
இஸ்ரவேலர்கள் தங்களின் உண்ணாவிரதத்தின் மூலம் கடவுளைத் தேடுவதாக நம்பி னாலும், "நீதியைத் தேடுங்கள் , ஒடுக்கப்பட்டவர்களை மீட்பது, அனாதையைப் பாதுகாப்பது, விதவைக்காகப் பரிந்து பேசுவது" (ஏசாயா 1:17) என்று ஏசாயா முன்னதாகவே தெளிவாகக் கட்டளையிட்டிருந்ததை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். உண்மையிலேயே "கர்த்தரைத் தேடுவது" என்பது ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதி யையும் அமைதியையும் தேடுவ தாகும். ஆனால், அவர்கள் தங்கள் சடங்குகளையும் வேண்டுதளை யும் கடவுளுக்கு ஏற்றவாறு செய் யவில்லை. எனவே சத்தமாக அழுங்கள் என்றுஎச்சரிக்கின்றார். 
 தங்களுடைய பாவங்களுக்காக தம்மையே வருத்திக் கொள்வது உன்னா நோம்பாகும். லெந்து  காலங்களில் தங்கள் பாவங்களை யும் மீறுதலையும் ஒவ்வொன்றாய் விட்டு விடுவதே  நோக்கம் ஆகும் செயலாற்றல் இல்லாமல் இருக் கின்ற உண்ணாவிரதம் வீண். தங்களின் பாவங்களுக்காக சத்த
மாக அழுங்கள்.(Cry Loudly). 
ஏசாயா தீர்க்கர், "உங்கள் பாவங் கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின் றன; எனினும் உறைந்த பனி போல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திரு க்கின்றன; எனினும் பஞ்சைப் போல் அவை வெண்மையாகும். 
(எசாயா 1:18)என உறுதியளிக்கி
றார். நாம் நினிவே நகர மக்கள்
போல,நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். 
(யோனா 3:5). எனவே அன்பான வர்களே! லெந்து மீட்பின் காலம் இப்பொழுதே நாம் பாவங்களை விட்டு சிலுவையை நோக்கி பயணிப்போம்.
2.நீ யார் மற்றவனை தீர்ப்பிடுவ
தற்கு? Who are you to Judge others?
உரோமையர் 2:1-13.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!
தூய பவுல் அடிகளார் உரோமை யர் திருமுகத்தை எழுதும்போது உரோமைக்குச் சென்றிருக்க வில்லை. எனினும் அக்காலத்தில் திருச்சபை அங்கே வேரூயுன்றியி ருந்தது. வேறு பல நற்செய்தியா ளர்கள் அங்குச் சென்று மறைப் பணி புரிந்திருந்தனர். அது உரோ மைப் பேரரசின் தலை நகராக இருந்ததால், பல நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் அங்குப் போய் வாழ்ந்து வந்தனர். இந்தஉரோமை சபையைக் சந்திக்க விழைந்தார் பவுல். ஸ்பெயின் நாடு போகும் வழியில் உரோமைக் கிறித்தவர் களைச் சந்திக்கத் திட்டமிட்டார் (15:28) மாசிதோனியா, அக்காயா ஆகிய நாடுகிளலிருந்து இறை மக்கள் கொடுத்த காணிக்கையை எருசலேம் கொண்டு போகுமுன் கொரிந்து நகரிலிருந்து இத்திரு முகத்தை அவர் கி.பி. 57-58 கால கட்டத்தில் இதை எழுதியிருக் கலாம். அன்பர்களே! இங்கு பவுல் யூதர்களுக்கு எதிரான தனது வாதத்தை ஒரு கண்ணோட்ட த்தில் எச்சரிக்கையுடன் தொடங் குகிறார், நீங்கள் ஒரு யூதராக இருந்தாலும் சரி, புறஜாதியாராக இருந்தாலும் சரி, கடவுள் உங்க ளை மதிப்பதில்லை. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதைத்தான் கடவுள் அங்கீகரிக்கிறார்.
மனுஷனே, நீ எவனாக இருந்தா லும் நியாயந்தீர்க்கிறவனே, நீ மன்னிக்க முடியாதவனாயிருக்கி றாய். நீ யார் மற்றவனை தீர்ப்பிடு வதற்கு?
மற்றவரைத் தீர்ப்பிடுவதில் நீயே உன்னைக் குற்றவாளியாக்கு கிறாய்; ஏனெனில், தீர்ப்பிடும் நீயும் அதே காரியங்களைச் செய்கிறாய் ( ரோமர் 2:1 ).
மனிதன்" குற்றவாளியாக இருப்ப தற்குக் காரணம், அவர் புறஜாதி யாரைப் பாவிகளாகக், குற்றவாளி என்று தீர்ப்பிடுவதால் அல்ல, மாறாக அவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பிடுவதன் மூலம் தன்னைத்தானே குற்றவாளி என்று தீர்ப்பிடப்படுகிறான். ஏனெ ன்றால் அவர் அதே பாவங்களைச் செய்ததற்காக குற்றவாளியாகி றான்.
கடவுள் நியாயந்தீர்க்கும் முதல் கொள்கை என்னவென்றால், அவர் நீதியாக நியாயந்தீர்க்கிறார் ( ரோமர் 2:2 ). அவர் உண்மையில் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு நியாயந்தீர்க்கிறார், வெறுமனே தோன்றுவதை அல்ல. உதாரணமாக, அவரது ஒழுக்கக் கேடான எண்ணங்கள் கவனிக்க முடியாததால் அவர் குற்றமற்றவர் என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் கடவுள் இதயத்தைப் பார்க்கிறார். நீ யார் என்று அவரு க்குத் தெரியும்.
அன்பர்களே!கடவுள் புறஜாதியி னரின் நீதிபதியாக இருக்கலாம், ஆனால் அவர் யூதர்களின் சிறப்பு பாதுகாவலராக இருந்தார். அதற் காக யூதர்களுக்கு நியாயதீர்ப்பு
இல்லை என்பதல்ல.அவரவர் கிரியைகளுக்குத்தக்கதாக ஒவ் வொருவருக்கும் அவர் பலனளி ப்பார்: 
நீங்கள் அவருடைய கருணை, பொறுமை மற்றும் பொறுமை யின் செல்வத்தை அவமதிக்கிறீர் களா?" இந்த மூன்றும் தேவனு டைய தயவு உன்னை மனந்திரும் புதலுக்கு வழிநடத்துகிறது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.
மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் நற்செயல்க ளில் தொடர்ந்து தேடுகிறவர்க ளுக்கு, [தேவன்] நித்திய ஜீவனை அருளுவார். ஆனால், சண்டையிடு கிறவர்களும், சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநீதிக்குக் கீழ்ப்ப டிகிறவர்களுமாகிய அவர்கள், தீமை செய்கிற ஒவ்வொரு மனித ஆத்துமாவின்மேலும், கோபத்தை யும், உபத்திரவத்தையும்,வேதனை யையும் அடைவார்கள்; முதலில் யூதனும், பின்னர் புறஜாதியான்; ஆனால், நன்மை செய்கிற ஒவ் வொரு மனிதனுக்கும், முதலில் யூதனும், பின்னர் புறஜாதியான் மேலும் மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும்; தேவனி டத்தில் பட்சபாதம் இல்லை. ( ரோமர் 2:6-11 ).
நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்தவர்கள் நியாயப் பிரமாணம் இல்லாமல் கெட்டுப் போவார்கள்; நியாயப் பிரமா ணத்திற்குள் பாவம் செய்தவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவார்கள். எனவே,நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன் பாக நீதிமான்கள் அல்ல, நியாய ப்பிரமாணத்தின்படி செய்கிறவர் களே நீதிமான்களாக்கப்படுவார்
கள்.
கடவுள் எவ்வளவு காலம் நல்ல வராகவும், நீடிய பொறுமையுள் ளவராகவும், கனிவானவராகவும் இருப்பார் என்று நீங்கள் நினைக் கிறீர்கள்? கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பது உண்மை தான், ஆனால் அவர் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் உள்ள பாவத்தையும், அக்கிரமத்தையும், ஊழலையும் வெறுக்கிறார். நீங்கள் அவற்றைஒப்புக்கொண்டு கைவிடாவிட்டால், உங்கள் சுய நலம், உங்கள் பொறாமை,  மற்றும் சுய விருப்பம் ஆகியவை கடவுளின் நியாயத் தீர்ப்பின் கீழ் வரப் போகின்றன. கடவுள் நீடிய பொறுமையுள்ளவர். பூமியில் இத்தனை வருடங்களாக நியாய த்தீர்ப்பு இல்லாமல் வாழ அவர் நம்மை அனுமதித்துள்ளார். இது
சுய வெருப்பின் (self denial) காலம்.மீட்பிற்கான காலம். சிலுவை நோக்கியே நம் பயணம்.
3..லெந்து: மீட்பிற்கான பயணம். Lent: Journey to Redemption. யோவான் 5:1-9.
கிறித்தூவின் அன்பர்களே!
யூதர்களின் மூன்று பண்டிகைகள் மிகமுக்கிய பண்டிகைகளாக இருந்தன - பஸ்கா, பெந்தெ கொஸ்தே மற்றும் கூடாரப்பண்டி
கை. எருசலேமிலிருந்து பதினை ந்து மைல்களுக்குள் வாழ்ந்த ஒவ்வொரு வயது வந்த யூத ஆண்களும் அவற்றில் கலந்து கொள்ள சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டிருந்தனர். இயேசு பாஸ்கா பண்டிகைக்காக
தனியாக எருசலேம் செல்கிறார். தேவாலயத்தைச் சுற்றியுள்ள மதில் சுவருக்கு பன்னிரண்டு வாசல்கள் இருந்தன. அதில் ஒரு வாசல்தான் ஆட்டுவாசல். இந்த ஆட்டுவாசலின் அருகே தான் பெதஸ்தா குளம் இருந்தது. எபி ரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர்.  இஸ்ரவேல் ஜனங் கள் எருசலேமுக்குப் பண்டிகை க்கு வரும்போது பாவநிவாரண பலி செலுத்த ஆடுகளை அழைத் துக் கொண்டு, இந்த ஆட்டுவாசல் வழியாகத் தான் வருவார்கள்.
எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் இருந்த பெதஸ்தா குளத்திற்கு ஐந்து மண்டபங்கள்  உண்டு. இந்தக் குளத்தின்  5 மண்டபங்களும் நியாயப்பிர மாணத்திலுள்ள ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்ற ஐந்து ஆகமங்களைக் குறிக் கிறது.  அதாவது கருணையின் வீடு.நெகேமியா 3 : 1 ல் பிரதான ஆசாரியரும், அவனுடைய சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து இந்த ஆட்டுவாசலைக் கட்டினார்கள். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற் றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர்.சில
சமயம் ஆண்டவரின் தூதர் குளத் து நீரை கலக்குவார். நோயாளி
கள் குளத்து நீர் கலங்குவதற்கா கக் காத்திருப்பார்கள். தண்ணீர் கலங்கிய பின், முதலில் இறங்குப வர் எவ்வித நோயுற்றிருந்தாலும் குணமடைவார். 
முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இவன் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை வியாதியில் தான் கழித்திருக்கி றான். இந்த மனிதன் தன்னுடைய வீட்டாரால், உறவினரால், நண்பர் களால் கைவிடப்பட்டவனாய், உதவியற்றவனாய், நம்பிக்கை அற்றவனாயிருந்தான் இயேசு எப்போதும் நண்பர் இல்லாதவர் களின் நண்பராகவும், பூமிக்குரிய உதவி இல்லாத மனிதனுக்கு உதவியாளராகவும் இருந்தார். இவன் இத்தனை கேடான நிலமை க்கு வந்ததற்குக் காரணம் அவனு டைய பாவமே. பாவமானது ஒரு மனிதனை 38 வருடங்கள் செய லற்றவனாக மாற்றியிருப்பதைப் பார்க்கிறோம்.பாவத்தின் சம்பளம் மரணம்.(உரோமையா 6:23) இயேசுவே பாவத்தின் இறுதி தண்டனையான மரணத்தைத் தோற்கடித்தார். மரணத்தின் மீதான அவரது வெற்றி அவரது சக்திக்கான காரணங்கள் மட்டுமல்ல, நமது இரட்சிப்புக்கான காரணங்களும் கூட.
இயேசுவின் மனித நேய அனுகு முறை:
1.இயேசு அந்த மனிதனிடம் குணமடைய விரும்புகிறீர்களா என்று கேட்பதன் மூலம் மனித
உறவை நேசிக்கிறார்.
2.இயேசு அந்த மனிதனை எழுந் திருக்கச் சொன்னார்.இது நம்பி க்கையின் வார்த்தை.
3.உண்மையில் இயேசு அந்த மனிதனுக்கு முடியாததை முயற்சிக்கும்படி கட்டளையிட்டார். "எழுந்திரு!" என்று அவர்கூறினார்.
4.முயற்சி செய்ய வேண்டும் என்ற தீவிரமான விருப்பமும் உறுதியும் நமக்கு தேவை.
5.38ஆண்டின் படுக்கையை மாற்றுகிறார். மறு வாழ்வு மற்றும்
புது வாழ்வு தருகிறார்.
அந்த குளம் தெய்வீக வல்லமை வெளிப்படும். அற்புதங்கள் நடந்து கொண்டிருக்கும் குளம்.
6.அவர் அவனை குணப்படுத்திய
நாள் ஒரு ஓய்வு நாள். மனித நேய
மே முக்கியம் என்பதை நிருபித் தார்.
இஸ்ரவேலரை 38 ஆண்டுகள் கானானுக்குள் பிரவேசிக்க விடாமல் வனாந்தரத்தில் அலை யும்படி தேவன் அளித்த தண்ட னைக்கு இந்த மனிதனின் 38 ஆண்டுகள் ஒப்பாயிருக்கிறது 
(இணைசட்டம் 2:14)
இவன் இத்தனை கேடான நில மைக்கு வந்ததற்குக் காரணம் அவனுடைய பாவமே. பாவமா னது ஒரு மனிதனை 38 வருடங் கள் செயலற்றவனாக மாற்றியிரு ப்பதைப் பார்க்கிறோம். எனவே நம்பிக்கையில்லாத நிலமையில் இருந்த அவனைத் தேடி இயேசு வந்தார். பாவத்திலிருந்து மீட்கப்
பட்டான். மீட்பை இயைசுவே தேடி சென்று  கொடுத்தார், இயேசுவை
தேடி வந்தவர்களுக்கும் மீட்பை
அளித்தார்.
கிறித்துவின் அன்பர்களே!
இந்த லெந்து காலம் மீட்பிற்காக
சிலுவை நோக்கிபயணிப்போம்.

Prof. Dr. David Arul Paramanandam 
Sermon Writer.
www.davidarulsermoncentre 
www. davidarulblogspot . com 






What is Ash Wednesday?

children-getting-ash-crosses.Image source,Getty Images
Image caption,

People are marked with ash on their foreheads during services on Ash Wednesday





Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.