சிலுவை: ஈடு செய்யும் துன்பத்திற்கான ஒரு அழைப்பு. (186) Cross : A Call to vicarious suffering. 1அரசர்கள் 17:12-24, திருப்பாடல் 102. பிலிப்பியர் 2: 1-11, மாற்கு 8:31-38. சாம்பல் புதன்.

முன்னுரை: கிறித்துவுக்கு பிரிய மானவர்களே உங்கள் அனைவ ருக்கும்  இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில்  சாம்பல் புதனின் வாழ்த்துக்கள். சாம்பல் புதன் நம்மை நாமே சிலுவை பாட்டை தியானிக்க முழுமையாக ஒப்புக்கொடுக்கும் நாளின் துவக்கமாக இருக்கிறது. நமக்கு
கொடுக்கப்பட்டுள்ள தியான
தலைப்பு,"சிலுவை: ஈடு செய் யும் துன்பத்திற்கான ஒரு அழைப்பு.  Cross : A Call to vicarious suffering"  ஈடு செய்யும் துன்பம் என்றால் என்ன?
 ஈடு செய்யும் துன்பம் என்பது "மற்றவர்களுக்காக ஒருவர் சுமக்கும் துன்பத்திற்கு" ஈடு செய்யும் துன்பம் என்று பெயர்.
(Suffering done by one person as a substitute for another is vicarious )
 ஆண்டவராகிய இயேசு கிறித்து இந்த உலக மக்களுக்களின் பாவங்களுக்காக தன் இன்னு யிரை சிலுவையில் ஒப்புக் கொடுத்ததை நாம் ஈடு செய்யும் துன்பம் என்பகிறோம். இந்த துன்பத்திற்கு ஈடாக எதையுமே சமமாக கருத முடியாது.இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், மனிதனை கடவுளுடன் ஒப்புர வாக்குவதற்காக,ஆண்டவர் ஏற்று
க்கொண்ட தூய பலியாகும். பரிகார துன்பம் என்ற கருத்து முன்னறிவிக்கப்படுகிறது. பலிகள், குறிப்பாக பாவநிவாரண பலிகள், மக்கள் தங்கள் பாவங் களுக்குப் பரிகாரம் செய்யக்கூ டிய ஒரு வழிமுறையாகும்.
லேவியர் ஆகமத்தில் (1-5)கடவுள் மோசேவுக்கு கொடுத்த கட்டளை ப்படி பல்வேறு பலிகள் செய்ய இஸ்ரேல் மக்களுக்கு ஆணையி ட்டார். முக்கியமாக, " உடலின் உயிர் குருதியில் உள்ளது. அதனை நான் உங்களுக்காகப் பலிபீடத்தின்மேல் உங்கள் உயிருக்கெனப் பாவக்கழுவாய் செய்யும்படி ஆணையிட்டேன். ஏனெனில், அது உயிருக்கான பாவக்கழுவாய் நிறைவேற்றும் குருதி. (லேவியர் 17:11) ரத்தம் சிந்துதலே  பாவ நிவாரணமாக இருந்தது, இந்த எல்லா பலிகளுக் கும் ஆசாரியர்களே தலைவராக இருப்பர். ஆனால், புதிய ஏற்பா ட்டில், இயேசுவே பலியாக மாறினார் (எபி. அதிகாரம். 4.5.6). 
 இயேசு கிறித்துவே பிரதான ஆசாரியர். அவ்வாரே, ஒவ்வொரு கிறித்தவனும் தன் சொந்த சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவின் பலியாக  பாடுகளை சுமக்க அழைக்கப்படுகிறோம்,  இதன் மூலம் ஒவ்வொரு கிறித் தவனும் ஆசாரியனாக மாற்றப் படுகிறான்.(1 பேதுரு 2:9). இயேசு
கிறித்துவே கடவுளின் ஆட்டு குட்டி என திருமுழுக்கு யோவான் அறிவித்தார். "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். (யோவான் நற் 1:29)
 திருத்தூதர்  பவுல் அடிகளார் தனது நிருபங்களில் இந்தக் கோட்பாட்டை விளக்குகிறார். ரோமர் 5:8 இல் , அவர் எழுது கிறார், "நாம் இன்னும் பாவிகளாக இருந்தபோதே, கிறிஸ்து நமக்காக மரித்தார்." இது கிறிஸ்துவின் மரணத்தின் மாற்றுத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது - அவர் பாவிகளுக்குப் பதிலாக மரித்தார், அவர்களுக்கு உரிய தண்டனையைச் சுமந்தார்.( 2 கொரிந்தியர் 5:21-) இதுதான் ஈடு செய்யும் துன்பம்.
1.பகுத்துண்டு வாழ்வதே வாழ்க்கை.Life is living by sharing.
1அரசர்கள் 17:12-24.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இஸ்ரவேலின் 7ம் அரசன் ஆகாப்பின் நாட்களில்,  இறை வாக்கினர் எலியா அவர்கள் வாழ்ந்து வந்தார். இஸ்ரவேலர் கர்த்தரை விட்டு விலகி பாகால் வழிபாட்டில் விழுந்தார்கள். ஆண்டவர் எலியா தீர்க்கதரிசியை ஆகாப் அரசனிடம் அனுப்பி 3 ஆண்டுகள் நாட்டில் மழையோ, பனியோ பெய்யாதிருக்கும் என்று எச்சரிக்க சொல்லுகிறார். தீர்க்க தரிசி சொன்னபடியே நாட்டில் மழை இல்லை, கொடிய பஞ்சம் உண்டாயிற்று. ஆண்டவரின் கட்டளைப்படி எலியா தீர்க்கர்   சாரிபாத்.    (Zarephath) ஊருக்கு வருகிறார், இது ஒரு புற இனத் தார் வசிக்கும் நாடு. இது எலியா இருந்த இடத்திலிருந்து 75 மைல் (கேரியத்) தூரத்திலிருந்தது. இந்தப் பிரயாணம் கடுமையான பிரயாணம். இது  இஸ்ரேலின் எதிரியின் தாய்நாடான சீதோனுக்குட்பட்ட பகுதி. சீதோன் நாட்டில் உள்ள விதவைகள் சபிக்கப்பட்டவர்கள் என்றும் அபசகுணமுள்ளவர்கள் என்றும், மக்கள் நினைத்தனர். விதவை களை அங்கு மதிக்கப்படுவது கிடையாது.அவர்களை நகரங் களை விட்டு எல்லைபுறப் பட்டண ங்களில் குடியிருக்க அனுப்பிவி டுவர்.அப்படிப்பட்ட இடத்தில்தான் இந்த விதவையும் இருந்தாள். அப்படிப்பட்ட ஒருத்திக்கு அற்புதம் செய்யத் தேவன் எலியாவை அனுப்பினார். அவள் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் எலியா தன்னைப் பராமரிக்கப் போகிற வள், இந்த விதவை தான் என்று  உறுதிப்படுத்திக் கொண்டார். உண்மை என்ன வென்றால் எலியா பேசும் எபிரேய மொழி அந்த விதவைக்குத் தெரியாது, அந்த விதவை பேசும் சீதோனிய மொழி எலியாவுக்கு தெரியாது. செய்கையால் மட்டுமே பேசி இருக்க முடியும்.
 இறைவாக்கினர், முதலில் தண் ணீர் கேட்கிறார். அந்த விதவை தண்ணீர் எடுத்துக்கொண்டு வர போகும் போது, கொஞ்சம் அப்ப மும் கொண்டுவாம்மா என்கிறார்.
அதற்கு அவள், "ஐயா என்னிடம் ஒரு பிடிமாவும், கொஞ்சம் எண்ணையும் மட்டுமே உண்டு. அதில் அடைகளைப் பண்ணி, நானும் என் குமாரனும் செத்துப் போவதற்காகத் தான் இந்த இரண்டு விறகுகளைப் பொறுக் குகிறேன் என்று உம்முடைய தேவனாகிய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்.
கர்த்தர் கடைசி நாள் சாப்பாட்டை சாப்பிட்டுச் செத்துப்போகவிரு க்கும் ஒரு பெண்ணிடம் எலியா வை அனுப்புகிறார். ஆனால் பஞ்சம் முடிந்து திரும்ப எருசலேமு க்குச்சென்று அவருடைய ஊழிய த்தைத் தொடங்கும் வரை, கர்த்தர் எலியாவை அந்த வீட்டில்தான் வைத்திருந்தார்."இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ! முதியவன் ஆகிவிட்டேன்; ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை; அவர்களு டைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை. (திருப் பாடல்கள்(சங்கீதங்கள்) 37:25) கடவுள் என்னிலையிலும், தன் இறைமக்களை கைவிடுவ தில்லை.
கடவுள்,  “உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல” என்கிறார். மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழிகள் உண்டு. ஆனால் அது மரணவழிகள் என்று  வேதம் கூறுகிறது. சிலுவைவழியே செம்மையான வழி அங்குதான் மீட்பு உண்டு.
 இறைவாக்கினர் எலியா அவர் கள் அந்த விதவையை ஆசீர்வதிக் கின்றார்.
"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே; நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலு ள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது" என்று சொன்னார். (1 அரசர்கள் 17:14)
இந்த விதவையைக் குறித்து நம் இயேசு லூக்கா 4 : 25, 26ல் குறிப்பி
டுகிறார்.
உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதை முதலில் எனக்குக் கொடு என்பதுதான். அதேபோல் நாமும் நம்மிடம் என்ன இருக்கிறதோ, அதைத் தேவனிடம் கொடுக்கும் போது அதைத் தேவன் நூறு மடங்காக ஆசீர்வதித்துக் கொடுப் பார். மெய்யான தேவ மனிதனின் அடையாளம் எலியாவுக்குக் கொடுத்ததை கர்த்தர் நூறுமடங்கு திருப்பிக் கொடுத்தார். எலியா யாருக்கும் கடனாளி அல்ல. ஒரு வீட்டுக்குப் போனால் அந்த வீட்டை ஆசீர்வதிப்பார். எலியா ஒரு தேவ மனிதன். அன்பானவர்களே! இந்த சாம்பல் புதன் கிழமை மற்றும் லெந்து நாட்கள் நமக்கு வலியுறு த்துவது உபவாசம், தான தருமங் கள், மன்றாட்டுக்கள். இம்மூன்றை யும் மனதில் வைத்து சிலுவையை நோக்கி பயணிக்க நம்மை அழை க்கின்றது.
2.சிலுவைகிறித்துவைப்போல் மாற அழைப்பு. The Cross is a call to become like Christ. பிலிப்பியர் 2:1-11.
 கிறித்துவுக்கு பிரியமானவர்
களே! திருத்தூதர் பவுல் அடிகளார் பிலிப்பியர்களுக்கு எழுதிய திரு முகத்தில் பிலிப்பியர் கிறித்தவர் கள் இயேசு கிறித்துவை போல் மாறுகின்ற அழைப்பை கொடுக்கி ன்றார். இந்த பிலிப்பு பட்டணம்  கிமு 356 இல் மகா அலெக்சாண் டரின் தந்தையான மாசிடோனிய மன்னர் இரண்டாம் பிலிப்பால் நிறுவப்பட்டது.எனவே,  "பிலிப்பி
திருச்சபை  கிறித்தவர்களில் எவருக்கும் யூதப் பெயர்கள் இல்லை - மாறாக அவை அனைத்தும் கிரேக்க மற்றும் லத்தீன் பெயர்கள்" வைக்கப்பட் டன என்பதில் ஆச்சரியமில்லை. 
இத் திருமுகம் விசுவாசிகளிடை யே ஒற்றுமை, பணிவு மற்றும் அன்புக்கான பவுலின் அறிவுரை வலியுருத்துகிறார்.ஒவ்வொரு கிறித்தவரும் கிறித்துவின் ஆறு தலை அறிந்திருக்க வேண்டும் . இயேசுவை மேசியாவாகக் குறிப்பிடும் பெயர்களில் ஒன்று "இஸ்ரவேலின் ஆறுதல்" என்று கூறுகிறது.(லூக்கா2:25) கிறிஸ்துவின் பாடுகள் நம்மில் பெருகுவது போல, கிறிஸ்துவின் மூலமாகவும் நமக்கு ஆறுதல் பெருகுகிறது என்று கூறலாம் .
 கிறித்தவர்கள்  பணிவு உள்ளவர் கள் தங்கள் சொந்த நன்மையை அல்ல, மற்றவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பைத் தேடவேண்
டும்.மனத்தாழ்மை என்பது மற்ற வர்களுக்கு சேவை செய்வதற் காக தன்னை மறுப்பதாகும்.
 கிறிஸ்தவர்களிடம் ஒற்றுமை மிக முக்கியமானது, ஏனென்றால் ஒரு குழுவாகச் சேர்ந்து வேலை செய் வதன் மூலம், ஒரு சில தனிநபர் கள் தங்கள் சொந்தக் காரியத் தைச் செய்துகொண்டு, அதில் இருக்கும்போது கருத்து வேறு பாடு கொள்வதை விட, திருச்சபை அதிகமாகச் சாதிக்க முடியும்.
 சுயநல நோக்கங்களுக்காக எதையும் செய்யாமல்", மற்றவர் களின் நலன்களைக் கவனித்துக் கொண்டால் உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கிறித்து எவ்வாறு இந்த உலக மக்களுக்காக தன் இன்னுயிரை சிலுவையில் கொடுத்தாரோ நாமும் பிறர் நலனில் அக்கறை உள்ளவராய் இருப்பதே கிறித்துவின் அழைப் பாகும். ஒரு உண்மை கிறித்தவனு க்கு இருக்கக் கூடாத குணம் சுயநலம். ஏனெனில், சுயநலமே கிட்டத்தட்ட எல்லா பாவங்களுக் கும் வேராகும். பேராசை, பொறா மை,   கொலை, விபச்சாரம், பொய், திருட்டு, பெருந்தீனி ஆகியவை சுயநலத்திலிருந்து உருவாகும் பாவங்களில் சில.  விசுவாசிகள் இந்தக் கொள்கையைப் பின் பற்றினால், உலகம் மிகவும் சிறந்த இடமாக இருக்கும்!
இயேசு 100% கடவுள் மற்றும் 100% மனிதன்100% பாவம் அற்றவர்  என்பது நற்செய்தியின் மிக முக்கியமான போதனைகளில் ஒன்றாகும். ஆகவே சிலுவை நம்பி கிறித்துவை போல் மாற அழைக்கிறது.
3.சிலுவை: ஈடு செய்யும் துன்ப த்திற்கான ஒரு அழைப்பு. 
Cross : A Call to vicarious suffering.
மாற்கு 8:31-38
 கிறித்துவுக்குள் பிரியமானர்
களே! சிலுவை, ஈடு செய்யும் துன்பத்திற்கான ஒரு அழைப்பு. இயேசு கிறித்துவே ஈடு செய்யும் துன்பத்திற்கு ஆளானவர். இதன் மூலம் உலக மக்களை மீட்டெடு த்தார். இயேசு கிறிஸ்துவை சீடர் கள் ஒரு மேசியாவாக பார்த்தார் கள். அவரை துன்புறம் கிறித்து வாய், மரணத்துடன் இணைத்த போது சீடர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,.  புரிந்துகொள்ள முடியாததாகவும் இருந்தது. அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்கள் மேசியாவை ஒரு தவிர் க்கமுடியாத வெற்றியாக நினை த்தார்கள், இப்போது அவர்களைத் தடுமாறச் செய்யும் ஒரு யோசனை அவர்களுக்கு முன்வைக்கப்பட் டது. அதனால் தான் பேதுரு மிகவும் வன்முறையில் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு அது முழுவதும் சாத்தியமற்றதாக இருந்தது.
இயேசு ஏன் பேதுருவை இவ்வ ளவு கடுமையாகக் கடிந்து கொண்டார்? ஏனென்றால், இயேசுவைத் தாக்கிய சோதனை களையே அவர் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். இயேசு இறக்க விரும்பவில்லை. வெற்றி பெறுவதற்குப் பயன்படுத்தக் கூடிய சக்திகள் தன்னிடம் இருப் பதை அவர் அறிந்திருந்தார்.  கடவு ளின் வழிக்குப் பதிலாக தனது வழியை எடுக்க, சாத்தான் அவரை மீண்டும் விழுந்து வணங்கும்படி தூண்டினான்.
சோதனையாளர் சில சமயங்க ளில் நல்லெண்ணம் கொண்ட ஒரு நண்பரின் குரலில் நம்மிடம் பேசுவது விசித்திரமானது, சில சமயங்களில் பயங்கரமானது. நாம் சரியான பாதையை முடிவு செய்திருக்கலாம், ஆனால் அது தவிர்க்க முடியாமல் பிரச்சனை, இழப்பு, பிரபலமின்மை, தியாகம் ஆகியவற்றைக் கொண்டுவரும். மேலும் சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் உலகில் சிறந்த நோக்கங்களுடன் நம்மைத்
தடுக்க முயற்சிக்கிறார்கள். 
 பேதுரு கடவுளுக்கு ஏற்றவழியை சிந்தியாமல், மனிதர்களுக்கு ஏற்றவாறு சிந்தித்ததால் அவனை கடித்துக் கொள்கிறார். சாத்தா னின் பிரதிநிதியாக பேதுரு பேசினார். இயேசுவை பின்பற்ற விரும்புகிறவருடைய வாழ்வு மற்றொருவருக்காக வாழ்வதாக இருக்க வேண்டும். இயேசுவை பின்பற்ற  வேண்டுமானால் தன்னலம் துரக்க வேண்டும். சிலுவையை அனுதினமும் சுமக்க வேண்டும் என்ற கோட்பாடு கிறித்தவர்களுக்கு அடிப்படை யானது. தன் உயிரைக் காத்துக் கொள்கின்ற எவனும் அதை இழந்து போவான் அதே நேரத்தில் கடவுளின் அரசுக்காகவும், நற்செய்திக்காகவும் தன் உயிரை கொடுக்கின்றவன், அதை மீண்டும் பெருவான் என்பது கடவுளின் வாக்குறுதி. உலக ஆதாயம் அனைத்தையும் பெற்று தன் உயிரை இழப்பதினால் மனிதர்களுக்கு என்ன லாபம்?
எனவே, சிலுவை நோக்கி பயனி
க்க ஆண்டவர் கிருபை அருள் வராக! ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam 
Sermon writer.
www. david arul sermon சென்டர்
www.davidarulblogspot .com.




El Greco's Jesus Carrying the Cross, 1580.wiki.


Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.