புறந்தள்ளப்பட்டவர்களோடும் விளிம்பு நிலையில் உள்ளவர் களோடும் இருத்தல் (188) Being with outcasts and Marginalized. எஸ்தர் 4:1-17, திருப்பாடல் 43 திருத்தூதர் பணிகள் 15:12-21 மாற்கு : 1:40-45. (லெந்து முதல் ஞூயிறு.)
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! லெந்துகால முதல் ஞாயிறு தலைப்பாக கொடு க்கப்பட்டிருப்பது, "புறந்தள்ளப்பட்டவர்களோடும் விளிம்பு நிலையில் உள்ளவர் களோடும் இருத்தல்".
யார் புறந்தள்ளப்பட்டவர்கள்?
புறம் தள்ளப்பட்டவர்கள் என்றால் சமூகத்தில் இருந்து நிராகரிக்க பட்ட ஒருவரை குறிக்கும். சமூகத் தினால் இழிவாக பார்க்கப்பட்டவர் அல்லது புறக்கணிக்கப்பட்டவர் கள் புறந்தள்ள பட்டவர்கள் என அழைக்கிறோம்.
பழைய ஏற்பாட்டில் , ஆபிரகா மின் மகன் இஸ்மவேல், இஸ்ர வேலர்களின் மூதாதையராகக் கருதப்படும் அவரது ஒன்றுவிட்ட சகோதரன் ஈசாக்கின் பிறப்புக்குப் பிறகு வெளியேற்றப்பட்டார் . (தொடக்க நூல்16:12,) இஸ்மவே லின் ஒரு நாடோடியான வாழ்க் கையைப் பற்றி தீர்க்கதரிசனம் கூறுகிறது: "அவன் ஒரு காட்டு மனிதனாக இருப்பான்; அவன் கை ஒவ்வொரு மனிதனுக்கும் விரோதமாகவும், ஒவ்வொரு மனிதனின் கை அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; அவன் தன் சகோதரர்கள் அனைவருக் கும் முன்பாகக் குடியிருப்பான்." தன் குடும்பத்தின் மக்களாலே வெளியேற்றப்பட்ட மனிதன் தான் இஸ்மவேல்.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் சமுதா யத்தில் மிகவும் ஒதுக்கிவைக்கப் பட்டனர். லூக்கா நற்செய்தியாள ரின் புத்தகத்தில் ஐந்து விதமான மக்கள் புறக்கணிக்கப்பட்ட மக்களாய் யூத சமூகம் கருதியது ஆனால் இவர்களை ஆண்டவர் புறக்கணிக்கவே இல்லை. இவர்களுக்கு அன்பின் கரத்தை நீட்டி அணைத்துக் கொண்டு மறுவாழ்வு மற்றும் புது வாழ்வை அளித்தார்.
1. தொழு நோயாளிகள்: (லூக்கா 5:12-16.) தொழுநோய் ஒரு தொற்று வியாதி (infecticious disease)இது மிகவும் ஆபத்தானது எனவே யூத சமயம் இந்த தொழு நோயாளிகளை ஊருக்கு வெளி யே ஒதுக்கி வைத்தது. ஆனால் ஆண்டவர் இவர்களை ஏற்றுக் கொண்டு மறுவாழ்வு கொடுத் தார்.
2,முடக்கவாத நோய். Paralytic :
(லூக்கா 5:17-26) நோய்கள் பாவத்தில் அடையாளங்கள் என யூத சமூகம் கருதியது மற்றும் மக்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைத்தது.எனவே இயேசு கிறிஸ்து இத்தகைய நோய்களை விரட்டும் போது அவர் அவருடைய பாவங்களை முதலில் மன்னித் தார். ஆனால் யூதர்கள் பாவங் களை மன்னிக்க இவர் யார் என கேள்வி எழுப்பினர்.
3. வரி வசூலிப்போர் :Tax Collectors: லூக்கா :5:27-32.
வரி வசூலிக்கின்றவர்கள் ரோம அரசின் சார்பாக அதிக வரி தன் சொந்த மக்களிடமிருந்து வசூலித் தனர்.எனவே யூத மக்கள் வரி வசூலிக்கின்றவர்கள் ரோம கைக் கூலிகள் என வெறுத்து ஒதுக்கி னர். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து லேவி என்ற வரி வசூல் வசுலிக்கிறவனைப் பார்த்து அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார். அவன் தான் வரி வசூல் செய்த மத்தேயு நற் செய்தியாளர்.
4 பாவியான பெண்: A Sinful Woman : லூக்கா: 7:36:50.
இவள் பாவியாகிய பெண்ணாக மாறியதற்கு காரணமே யூத சமூகம் தான். இவள் ஒரு விபச் சாரி. ஆனால் அத்தகைய பாவத் திலிருந்து விடுதலை பெறவே இயேசு கிறிஸ்துவிடும் வந்தாள்.
5.பிசாசு பிடித்தவர்கள்: Devil Possessed : லூக்கா 8:26-39.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிசாசானவன் கல்லறையை இருப்பிடமாகக் கொண்டவன். சங்கிலியலால் கட்டப்பட்டவன் கற்களால் தன்னை காயப்படுத்தி யவன் இவன் சமுதாயத்தில் வாழ தகுதியற்றவன் என முழுமையாக கல்லறையில் தள்ளி விட்டார்கள். ஆண்டவர் இவனை குணப்படுத்தி சமுதாயத்துக்கு ஏற்றவனாக மாற்றினார்.
6. புற இனத்தார் : Gentiles :
யூதர்கள் புற இனத்து மக்களை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்களை தன் கலாச்சார, இன எதிரிகளாகவே நினைத்தனர். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிற இனத்து மக்களை யும் நேசித்தார். அவர்கள் ஊருக் குள்சென்றார். சமாரியர்களை யூதர்கள் ஒதுக்கிவைத்தனர் ஆனால் இயேசு கிறிஸ்து சமாரியா பெண்ணிடம் தண்ணீர் கேட்டு ஜீவ தண்ணீரை கொடுத் தார்.
ஆண்டவர் இயேசு வாழ்ந்த பாலஸ்தீன சூழலில் ‘‘ஏழைகள்’’ என்ற சொல் ‘‘பொருளாதார நிலை யில் வறியவர்கள்’’ என்பதை மட்டும் குறிக்கவில்லை. நோயி னால் அல்லது உடலில் உள்ள ஊனத்தால் பாதிக்கப்பட்டு வேலை செய்து பிழைக்க வழி அறியாமல், உற்றார் உறவினரின் ஆதரவு கிடைக்காமல் பிச்சை யெடுக்கத் தள்ளப்பட்டோர் இந்த ஏழைகள். ஆக பார்வையற்றோர், முடவர்கள், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள் போன்றோர் பிச்சைக்காரர்களாகத் தான் வாழ்ந்தார்கள். கைம்பெண்களும், அநாதைகளும் ஆதரவின்றித் தவித்தார்கள். அவர்களைப் பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் பிறரிடம் கையேந்தி உண்ணும் நிலையிலேயே இருந்தனர். இப்படிப்பட்ட மக்க ளை, மனித மாண்பும், உரிமையும் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோரைத் தான் இயேசு தேடிச் சென்றார். சமுதாயத்தில் மிகத் தாழ்ந்தவராக கருதப்படுவோரோடு இயேசு பழகினார், உறவாடினார். அவர்க ளில் ஒருவராகவே மாறிவிட்டார். ஒடுக்கப்பட்ட மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அதற்கு காரணம் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆண்டவர் காட்டிய பரிவு.‘‘இயேசு… பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள் மீது பரிவு கொண்டார்; அவர்களிடை யே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்’’ (மத்தேயு 14:14) ‘‘திரண்டிருந்த மக்களைக் கண்ட போது அவர்கள்மேல்பரிவுகொண் டார்; அவர்கள் ஆயர் இல்லாஆடுக ளைப் போல் அலைக்கழிக்கப் பட்டுச் சோர்ந்து காணப்பட்டார் கள்.’’ (மத்தேயு 9.36, மாற்கு 6:34). தொழுநோயாளி மீது இயேசு பரிவு கொண்டார் (மாற்கு 1:41). அதுபோலவே பார்வையற்றோர் மீதும் (மத்தேயு 20:34) பசியுற்ற மக்கள் கூட்டத்தின் மீதும் பரிவு கொண்டார் (மாற்கு 8:20). ஆண்ட வர் இயேசுவின் திருப்பணியின் பயணம் ஒடுக்கப்பட்ட மக்களோ டும், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களோடும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களோடும்தான் அமைந்திருந்தது. அப்படிப்பட்ட வாழ்விழந்த மக்களுக்கு வாழ்வு கொடுக்கவே தமது வாழ்வை இழந்தார். ஆண்டவர் இயேசு பயணித்த அந்த விடுதலை பயண த்தை இந்த லெந்து காலத்தில் சிலுவை நோக்கி பயணிப்போம். புறந்தள்ள பட்ட வரை ஆதரிப் போம்.
1 இனம் காத்த இனியவள் எஸ்தர்.Esther, the sweet one who saved the race. எஸ்தர் 4:1-17.
கிறித்துவுக்குள் பிரியமானவர் களே!
அகஸ்வேர்என்னும் பெர்சியா
(ஈரான் ) மன்னன் இந்தியா முதல் எத்தியோப்பியா வரையிலான நூற்று இருபத்து ஏழு மாநிலங்க ளையும் ஆட்சி செய்யும் பொறுப் பை ஏற்றான். காலம் கி. மு 486-565.இவன் யூத பெண்ணாகிய எஸ்தரை திருமணம் செய்து கொண்டான். ஒரு நாட்டின் இனத்திற்காகவும்,மொழிக்காகவும் உழைக்கின்றவர்களே உண்மை யான தேசியவாதிகள். எஸ்தர் உண்மையான தேசியவாதி யூத இனத்தை காத்தவள். இவளின் மறுபெயர் அதசா. நேபுகாத் நேசரால் யூதர்கள் பெர்சியாவு க்கு அடிமைகளாக நாடுகடத்தப் பட்டனர். இவர்கள் புறந்தள்ளப் பட்ட இனமாக வாழ்ந்தனர். பெர்சிய அரசவையில் இருந்த சக்திமிக்க அதிகாரி ஆமான். அமலேக்கியர்களின் ராஜாவான ஆகாக்கின் வழித் தோன்றல் இவர்.. ஆமான் ஒரு பெருமை மிக்க மற்றும் லட்சியவாதி, மரியாதைக்குரிய அடையாளமாக அனைவரும் தன்னை வணங்க வேண்டும் என்று கோரினார். இருப்பினும், மொர்தெகாய் என்ற யூத மனிதர் அவரை வணங்க மறுத்துவிட்டார், இவர் எஸ்தரின் உறவினரும் பாதுகாவலருமா வார். மொர் தெகாய் மீது ஆமான் கோபப் படுகிறார், மற்றொரு நபரின் முன் வணங்குவது பாரசீக சமூகத்தில் மரியாதைக்குரிய ஒரு முக்கிய சைகையாக இருந்தது, ஆனால் ஒரு யூதர் கடவுளுக்குக் கீழ்ப்படிதலை மட்டுமே வெளிப் படுத்த வேண்டும் என்று நம்பும் மொர்தெகாயால் ஏற்றுக்கொள்ள முடியாத தாகக்கருதப்பட்டது . இதன் விளைவாக, ஆமான் பெர்சியாவின் அனைத்து யூதர் களையும் கொல்ல சதி செய் கிறார், இறுதியில் அரசன் அகாஸ்வேருஸை அவ்வாறு செய்ய அனுமதிக்கும் படி சமாதானப்படுத்துகிறார். இருப்பினும், எஸ்தர் ஆமானின் திட்டங்களை அகாஸ்வேருவிடம் வெளிப்படுத்தி கண்டனம் செய்வதன் மூலம் திட்டத்தை முறியடிக்கிறாள், பின்னர் ஆமானை மரணதண்டனைக்கு உட்படுத்தி யூதர்கள் தங்கள் எதிரிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்த அனுமதி வழங்குகிறாள்; எஸ்தரின் தைரியத்திற்காகவும், யூத தேசத்தை ஒழிப்பிலிருந்து காப்பாற்ற உழைத்ததற்காகவும்
யூதர்கள் தங்கள் விடுதலையைக் கொண்டாடவும், எஸ்தரை கௌர விக்கவும் ஆண்டுதோறும் பூரிம் பண்டிகையைக் கொண்டாடுகிறா ர்கள்.
2. யாருக்கு மீட்பு? யூதருக்கா? பிற இனத்தருக்கா? Salvation to whom? For Jews? Or Gentiles?
திருதூதர் பணிகள் 15: 12-21.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருச்சபை வரலாற்றில் திருத்தூதர்களின் காலத்தில் எப்பொழுதுமே ஒரு ஒரு பிரச் சனை புற இனத்தார் மேலே இருந் தது. யூத இனத்து கிறிஸ்தவர்களு க்கும், புற இனத்து கிறிஸ்தவர்க ளுக்கும் திருச்சபையில் பிரிவி னைகள் இருந்தன. குறிப்பாக கீழ்க்கண்ட கொள்கைகளில் புற இனத்தாரை இரண்டாம் கட்ட விசுவாசிகளாக யூத கிறிஸ்தவர் கள் நடத்தினர்.
1. விருத்தசேதனம்: புறங்கினத்தாரும் யூத சட்டத்தின் படி விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று திருச்சபையில் கட்டாயப்படுத்தினர்
2 பழைய உடன்படிக்கையான நியாயப்பிரமாண கருத்துக்கள் புறயினத்தாரும் கைகொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது
3 புற இனத்தாரின் இரட்சிப்பு க்கு மோசேவின் சட்டத்தை கடைப் பிடிப்பது அவசியமா?
இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண திருத்தூதர்கள் பவுலடிக ளாரும், பர்னபாஸம் எருசலேம் கவுன்சிலிங் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எருசலேம் சென்றனர்.
எருசலேம் கவுன்சில் அல்லது அப்போஸ்தலிக் கவுன்சில் என்பது கி.பி. 48-50 இல் எருசலே மில் நடைபெற்ற சீர்திருத்த கூட்டமாகும்.(திருதூதர் பணிகள் 15 ஆம் அதிகாரம்) இந்த கவுன் சில் கூட்டத்தை பெரும்பாலான கிறிஸ்தவ பிரிவுகள் ஏற்றுக் கொண்டது. இதன் உறுப்பினராக
நீதிமானாகிய யாக்கோபு ,(இயேசுவின் சகோதரர்) பேதுரு மற்றும் யோவான் இருந்தனர் .
(The three are the Pillars of the Church )
இந்த கவுன்சில் கூட்டத்தில் திருத்தூதர்கள் பவுலடிகளாரும் பர்ன பாசும் மிகச் சிறப்பாக பிற இனத்தாருக்கு எவ்வாறு நற் செய்தி அளித்தார்கள் என்பதை விளக்கமாக, விவரமாக எடுத்து ரைத்தனர்.கீழ்கண்ட தீர்மானங் கள் கவுன்சில் கூட்டத்தில் நிரை வேற்றப்பட்டன:
1 புற இனத்தார் ஆண்டவரின் பெயரை தாங்கி இருப்பதால் அவர்கள் கடவுளை தேடுகிறவர் கள்
2. புற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கக் கூடாது
3. சிலைகளுக்கு படைக்கப்பட்டது தீட்டுப்பட்டது அதை தொடக் கூடாது.
4. புதிதாக கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய வேற்று இனத்தார் மோசேயின் சட்டங்களை முழுமை யாக கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணம் விருத்தசேதனம்.
5.வேசித்தனத்திலிருந்தும் ,
கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, இரத்தம் மற்றும் பரத்தைமை ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு நாம் எழுதவேண்டும். என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சீடர்கள் மூலம் அனைத்து திருச்சபைக்கும் எடுத்துரைக்க ஆட்கள் அனுப்பப்பட்டார்கள். இதன் முக்கிய நோக்கமே புற இனத்தாரை எக்காரணத்தை கொண்டும் நாம் புறந்தள்ள கூடாது.கிறிஸ்துவத்தில் வர இருக்கின்றவர்களை நாம் வரவேற்க வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்தவர்
நீதிமான் யாக்கோபு , அவருடைய தீர்ப்பு அப்போஸ்தலிக்க ஆணையில் ஏற்றுக்கொள்ள ப்பட்டது (திரு. தூதர். பணி 15:19–29 ), நண்பர்களே! திருத்தூதர் பவுல் அடிகளார், ஒரு மனிதன் "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் அல்ல, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப் பதினாலேயே நீதிமான் ஆக்கப்படுகிறான்" என்பதை அறிந்து, நாமும் கிறிஸ்து இயேசுவை விசுவாசித்தோம், இதனால் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் அல்ல, கிறிஸ்து வை விசுவாசிப்பதினாலேயே நாம் நீதிமான்களாக்கப்படுகி
றோம் என்பதை வலியுறுத்தினார்.
ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு வின்மீது வைக்கும் நம்பிக்கை யின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம்.
கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக் கும் அவரே கடவுள்.ஏனெனில் கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசே தனம் பெறாதவர்களாயினும், இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்பு டையவராக்குகிறார்.
(உரோமையர் 3:28-30) என பவுல் அடிகளார் கடவுள் அனைவருக்கு மான கடவுள் என உணர்த்து கிறார்.லெந்து காலங்கள் நம்மை கிறிஸ்துவோடு இனைந்து செய ல்படும் காலம், முழுமையாக நீதிமான்களாக மாற்றப்படுகின்ற தருணம். இதற்கு நாம் இடம் கொடுப்போம்.
3. இயேசுவின் பணி சுத்தப் படுத்தலா? குணப் படுத்தலா?
The Ministry of Jesus is Cleansing?Or healing? மாற்கு 1: 40-45.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இயேசுவின் காலத்தில், தொழு நோய் என்ற சொல் பல் வேறு வகையான தோல் நோய் களுக்குப் பயன்படுத்தப்பட்டது, இதில் கொப்புளங்கள் மற்றும் சொறி சிரங்கு போன்ற நோய்கள் அடங்கும் (லேவியராகமம் 13-14). அந்த நோய்களில் சிலவற்றிற்கு அறியப்பட்ட சிகிச்சை இல்லை, எனவே அவை மிகவும் அஞ்சப் பட்டன. சில மிகவும் தொற்றக் கூடியவை, எனவே தொழு நோயா ளிகள் தனிமையில் வாழ வேண்டி யிருந்தது. நியாயப்பிரமான சட்டம் பின்வருமாறு கூறுகிறது:
"தொழுநோயாளி கிழிந்த ஆடைக ளை அணிந்திருக்க வேண்டும்,
தலைமுடி தளர்ந்து தொங்க வேண்டும்.அவன் மேல் உதட்டை மூடிக்கொண்டு, 'தீட்டு! தீட்டு!' என்று கூக்குரலிட வேண்டும்.
அந்தத் தொழுநோய் அவனுக்குள் இருக்கும் நாளெல்லாம் அவன் தீட்டுப்பட்டிருப்பான். அவன் தனி மையில் தங்க வேண்டும். அவன் பாளயத்திற்கு வெளியே தங்கியி ருக்க வேண்டும்" (லேவியராகமம் 13:45-46).பழைய ஏற்பாட்டில், கடவுள் மக்களைத் தண்டிக்க தொழுநோயால் துன்புறுத்திய பல பதிவுகள் உள்ளன (எண்ணாகமம் 12:9-10; 2 இராஜாக்கள் 5:27; 15:5; 2 நாளா கமம் 26:19-21), எனவே மக்கள் தொழுநோயை பாவத்திற்கான தண்டனையாக விளக்க முனை ந்தனர். தொழுநோயாளிகள் தனியாக வாழ வேண்டும், மற்றவர்களிடமிருந்து (சமூக ரீதியாக) ஐம்பது அடி தூரத்தை பராமரிக்க வேண்டும். தொழு நோயாளி மற்றொரு நபரைத் தொட்டால் அல்லது அவர்களால் தொட்டால், அந்த நபர் ஒரு பாதிரி யாரால் பரிசோதிக்கப்பட்டு சுத்த ப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப் படும் வரை நோயுற்றவராகவும் சடங்கு ரீதியாக அசுத்தமான வராகவும் கருதப்படுவார்.
நண்பர்களே! இயேசு கிறித்துவி டம் ஒரு தொழுநோயாளி வந்து, மண்டியிட்டு, " நீர் விரும்பினால் என்னை சுத்தப்படுத்த உம்மால் முடியும் " என்று வேண்டினான்.
இந்த தொழுநோயாளி இயேசு விடம் முழங்காலில் மன்றாடு கிறான்.இயேசு கை நீட்டி அவரைத் தொடுவதால், அவர் பராமரிக்க வேண்டிய ஐம்பது அடி எல்லை யை மீறுகிறார் என்பது தெளிவா கிறது. ஆண்டவர் மனிதநேய ஆண்டவர் அவனை தூரவே வைத்து சுகம் கொடுக்க விரும்ப வில்லை சட்டத்தை மீறுகிறார் அவனிடத்தில் வருகிறார். இந்த தொழுநோயாளி இயேசு மற்ற வர்களைக் குணப்படுத்திய செய்தியைக் கேள்விப்பட்டிருப்பது தெளிவாகிறது, ஆனால் இயேசு தன்னைக் குணப்படுத்துவாரா என்பது அவனுக்குஉறுதியாகத் தெரியவில்லை. நியாயப்பிர மாண சட்டத்தின்படி, தொழுநோய் பாவத்திற்கான கடவுளின் தீர்ப் பாக இருந்தால், இயேசு அவரை தனது முழு தண்டனையையும் அனுபவிக்கச் சொல்லலாம். மனிதன் குணமடைய கேட்கவில் லை, மாறாக தன்னை ஆன்மீக மற்றும் சமூக சுத்தப்படுத்தலை வேண்டுகிறான். அவன் சுத்தமாக இருக்கிறானா? இல்லையா? என்பதை, யூத சட்டத்தின்படி ஒரு மருத்துவரல்ல, ஒரு பாதிரியார் ஒருவருக்கு தொழுநோய் இருக் கிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. (லேவியராகமம் 13) கடவுள் மட்டுமே ஒரு தொழுநோயாளியை குணப்படுத்த முடியும், மேலும் பாதிரியார் (கடவுளால் நியமிக் கப்பட்ட பிரதிநிதி) மட்டுமே ஒரு தொழுநோயாளியை சுத்திகரிக்க முடியும் என்று அறிவிக்க முடியும்.
இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்பு கிறேன், உமது நோய் நீங்குக!" என்றார். யாரும் செய்யக் கூடாத தை ஆண்டவர் செய்தார் அவனை த் தொட்டார்.
ஆண்டவர் அவனை தொடாமலே ஒரே வார்த்தை நிமித்தம் சுகமா க்க முடியும் ஆனால் அவனுக்கு தேவை ஆன்மீகம் மற்றும் சமூக சுத்திகரிப்பு எனில் அவனை தொட்டு சமூகத்தில் ஒருவனாக அவனை உயர்த்தி காட்டினார்.
சுத்திகரிக்கப்பட்ட தொழு நோயாளி தன்னை ஆசாரியனிடம் காண்பிக்க வேண்டும் என்ற இயேசுவின் கட்டளை அந்த மனித னின் நலனுக்கானது, ஏனென் றால் ஆசாரியனின் ஒப்புதல் இல்லாமல் அவர் மீண்டும் சமூகத் தில் நுழைய முடியாது. இதுதோரா சட்டத்தின் மீதான இயேசுவின் பக்தியையும் நிரூபிக்கிறது, மனித இனம், தன் இனத்தாரோடு கொள்கின்ற பொருளாதார அரசி யல், சமுதாயத் தொடர்புகளினால் இயங்கிவரும் ஓர் அமைப்பே சமுதாயம் எனப்படுகின்றது. அந்த சமுதாய அமைப்பில் அவன் முழு அங்கத்தினாக ஆண்டவர் அவனை மாற்றி அமைத்தார். இவ்வாறே, நாமும் ஆண்டவர் வழியில் புறந்தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தனித்துவிடப்பட்ட கைவிடப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் இணைந்து செயலாற் றுவோம் அதுவே அர்த்தமுள்ள லெந்து ஆகும். இந் நாட்களை கைக்கொள்ளும் நாம், விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்கு நம்மை வழிநடத்த கடவுள் அருள் செய்வாராக ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam. Sermon Writer. www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com.
Four friends bring a paralytic man so that Jesus can heal him. Being
Comments
Post a Comment