பரிசேயரும் மறைநூல் அறிஞரும் (189)Pharisees and Scribes.மத்தேயு 23:13-36.(The second Friday on the Lent)
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசுகிறிஸ் துவின் இனிய நாமத்தில் லெந்து காலத்தின் வாழ்த்துக்கள். லெந்து நாட்களின் இரண்டாவது வெள்ளி க்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது
"பரிசேயரும் மறைநூல் அறிஞரும் ". பரிசேயர்கள் யார்?
யூத சட்டங்களை நன்கு கற்றுனர் ந்த சமய அறிஞ்சர்கள். இவர்கள்
அரசயல், சமுக இயக்கமாக செய ல் பட்டவர்கள். இரண்டாம் எருச
லேம் தேவாலய காலத்தில் வாழ்ந் தவர்கள்.மக்கபேயர் (கி.மு. 140 - 116 காலப்பகுதியில், யூதேயாவை ஆண்டவர்கள்) புரட்சிகாலத்தில் ஒரு குழுவாக தொடங்கிய இயக் கமாகும்.இவர்கள் கடவுளுக் கென்று தங்களை பிரித்தெடுத் தவர்கள். பரிசுத்தமானவர்கள்.
கி. பி. 65ல் அரசன் அந்தியோக் கிஸ் எபிபேன்ஸ் ("Antiochus Epiphanes")க்கு எதிராக நடந்த கிளர்ச்சியில் இவர்களும் மக்காபி யர்களுடன் சேர்ந்து போராடினர் .பரிசேயர்கள் உயிர்த்தெழுதல் உண்டு என்று நம்பினர்.ஆனால், சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் இல்லை என்று நம்பினர்.
இவர்களின் கொள்கைகளும் கோட்பாடுகளுமே தற்கால யூத சமயத்துக்கு அடிப்படையாயிற்று.
யூத வரலாற்று ஆசிரியரான ஜொசிஃபஸ் (37 – c. 100 CE), ஒரு பரிசேயர். இவரின் கூற்றுப் படி இரண்டாம் கோவிலின் அழிவு க்கு முன்பு சுமார் 6,000 பரிசேயர் கள் வாழ்ந்ததாக குறிபிடுகின் றார். இவரின் கூற்றுப்படி சது சேயர் போல் அல்லாமல் பரிசேயர் மக்களிடம் நன்மதிப்பு பெற்ற வராய் விளங்கினர்.
புதிய ஏற்பாட்டில் புனித பவுல் ஒரு பரிசேயராக பல இடங்களில் குறிக்கப்படுகின்றார்.இவரின் குருவான காமாலியேல் போன்ற பரிசேயர்களில் சிலர் கிறித்தவ திருமறைக்கு ஆதரவாக இருந்த னர் என்பதும் குறிக்கத்தக்கது,
பரிசேயர்களின் சிறப்புகள்:
இவர்கள் மேசியா வருவார் என்ற
நம்பிக்கை உடையவர்கள்.
எருசலேம் தேவாலயம் செல்வதே
பரிசுத்தம் என்று நம்பினர்.
இவர்கள், மோசேவின் திருச்சட்
டத்தில் தெளிவற்ற கருத்துக்கள்
உள்ளது என்று பல சட்டங்களை
உருவாக்கினர். இவர்கள், வாய் மொழியாக சொல்லப்பட்ட பல பழைய சட்டங்களை நியாயாப் பிரமாணத்தில் இல்லாதவகை ளை கொண்டுவந்தனர்.இவர் கள்,மக்கள் சுமக்கமுடியாத அளவி ற்கு சட்டங்களை கொண்டுவந் தனர். பரிசேயர், இயேசுவைப் பார்த்து,"இவன் பேய்களின் தலை வனைக் (பெயல் செபூல்) கொண் டு பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.
(மத்தேயு நற்செய்தி 9:34) சீடர்கள் ஓய்வு நாளில் கதிர்களை சாப்பிட் டதை அவர்கள் இயேசுவிடம் குற்ற மாக சொன்னார்கள். ஆண்டவர் அவர்களுக்கு தகுதியான பதிலை அவர்களுக்கு கூறினார்.
பரிசேயர்கள் இயேசுவைப் பார் த்து "உம்சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந் துமுன் அவர்கள் தங்கள் கைக ளைக் கழுவுவதில்லையே" என்றனர். (மத்தேயு நற்செய்தி 15:2) இயேசு பரிசேயர்களை பார்த்து இவர்கள் வெளிவேடக் காரர்கள் என பகிங்கங்கரமாக குற்றம் சாட்டினார். அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று குற்றம் சாட்டினார்.எட்டு முறை உங்களுக்கு ஐயோ என கூறினார்.
பரிசேயர்களிடம் காணப்பட்ட நற்செயல்கள்:
நண்பர்களே பரிசேயர்களிடம் பல குறைபாடுகள் இருந்தாலும் இவர் கள் இயேசுவிற்கும், கிறிஸ்தவர்க ளுக்கும் நன்மை செய்திருக்கிறா ர்கள்:
1. பரிசேயர்கள் இயேசுவிடம் ஏரோது மூலம் உங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்று எச்சரிக்கையை கொடுத்தனர்.(லூக்கா 13:31)
2. சில பரிசேயர்கள் இயேசுவை தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தனர்.உ. ம். சீமோன்
3. சில பரிசேயர்கள் இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொண்ட னர்.
4. சில பரிசேயர்கள் ஆரம்ப கால கிறித்தவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர்.
5. பரிசேயர்கள் உயிர்த்தெழுதலி ல் நம்பிக்கை உடையவர்கள்.(லூக்கா 20:39)
6. பரிசேயர்களான நிக்கதோமு, அரிமத்தியா யோசேப்பும் ஏசுவையும், அவரின் போதனை களையும் ஏற்றுக் கொண்டனர்.(யோவான் 19:39,40)
7.பரிசேயர்கள் கடவுளுடனான தங்கள் உறவை தீவிரமாக எடுத்துக் கொண்டனர். அவர்கள் தங்கள் மதத்தைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருந்தனர்.
8.பரிசேயர்களின் ஏகத்துவத்தை ஒரே கடவுள் நம்பிக்கை யூத மதத்தின் மையமாக ஆக்கின.
9.கமாலியேலின் (பரிசேயர்) ஆலோசனை, பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் கொல்வதிலிருந்து நியாயசங் கத்தைத் தடுக்கிறது.
(திருதூதர் பணிகள் 5:33-42).
10.நியாயசங்கத்தில் உள்ள பரிசேயர்கள் உயிர்த்தெழுதலில் பவுலுடன் சேர்ந்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று தீவிரமாகக் கோருகிறார் கள்.(திருதூதர் பணி 22:30.)
11. "வைராக்கியம்" மற்றும் "பக்தி" என்ற மொழி பரிசேயர்களுக்கு மிகவும் பொருத்தமானது.
பரிசேயரின் விண்ணப்பம்:
அன்பர்களே! பரிசேயர்கள் இறைவேண்டல் செய்யும்போது தாங்கள்தான் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், நாங்களே பரிசுத்தர் என்ற எண்ணத்தோடு ஜெபிப்பார்கள்.
"கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரம் போன்ற மற்ற மக்களைப் போல வோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;
வாரத்தில் இரு முறை நோன்பி ருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். "
(லூக்கா நற்செய்தி 18:11,12) தன்னை உயர்த்தியே இறை வேண்டல் செய்வார்கள், ஆனால் ஆண்டவர் தன்னை தாழ்த்துகிற
வனை உயர்த்துகிறார். தன்னை பாவி என்று பிரார்த்திக்கிறவனை மன்னிக்கிறார்.
ஆண்டவர் அவர்களை பல இடங்களில் கண்டிக்கிறார்.
"ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை' என்று நீங்கள் உங்களுக்குள் சொல்லிக் கொள்ளலாமென்று நினைக்காதீர்கள்" ( மத்தேயு 3:9 ).
எங்கள் தந்தை ஆபிரகாம் என பரிசேயர்கள் குலப் பெருமையை பாராட்டினார்கள்.
பரிசேயர்கள் வெளிப்புற நீதியில் பெருமை கொள்கிறார்கள். எனவே, இயேசு சொன்னார், “உங்கள் நீதி வேதபாரகர் பரிசேயர் நீதியை விட அதிகமாக இல்லாவிட்டால், நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள். ( மத்தேயு 5:20 ) நம்முடைய நீதி பரிசேயர், வேதப் பாரர்கள் நீதியை காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும். நீதியை நாட்டுக்கின்றவர்களாக இருக்க வேண்டும் இந்த லெந்து காலத்தில் இறைவேண்டுதலோ டும், உண்ணா நோம்புடனும்,தான
தர்மங்களுடன், சிலுவைப்பாட்டை தியானித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பரிசேயர்கள் பாவமுள்ள மக்களு டன் பழகுவதில்லை.பரிசேயர்கள் இயேசுவின் சீடர்களிடம், "உங்கள் போதகர் பாவிகளுடன் ஏன் சாப்பி டுகிறார்?" என்று கேட்டார்கள் ( (மத்தேயு 9:11 ). பாவிகளை இரட்சிக்கவே இயேசு கிறிஸ்து உலகில் வந்தார், எனவே ஆண்ட வர் அவர்களோடு பேசினார், பழகினார், உணவு உண்டார், இரட்சிப்பைக் கொடுத்தார்.
பரிசேயர்கள் மக்களை உபவாசம் இருக்கவும் ஜெபிக்கவும் கட்டாயப்படுத்தினர். ஆன்மீக ரீதியானவர்களாக மாறுவதற்கா ன ஒரு வழியாக உபவாசம் போன்ற உடல் ரீதியான ஒழுக்கங் களை அவர்கள் வலியுறுத்தினர் ,
பரிசேயர்கள் துறவிகள் எனவே,
"பரிசேயர்கள் உபவாசம் இருக்கி றார்கள், ஆனால் உம்முடைய சீடர்கள் உபவாசம் இருப்பதில்லை யே?" ( மத்தேயு 9:14 ). என கேள்வி கேட்டனர். இறுதியில், பரிசேயர் வெளியே சென்று, இயேசுவை எப்படிக் கொல்லலாம் என்று அவருக்கு எதிராகச் சதி செய் தார்கள்" ( மத்தேயு 12:14 ).
பரிசேயர்கள் இயேசுவின் மீது பொறாமைப்பட்டனர்,ஏனென்றால் அவர்களால் செய்ய முடியாத பல காரியங்களைச் ஆண்டவர் செய் தார். பரிசேயர்கள் ஆன்மீக ரீதி யில் குருடர்கள் இயேசு சொன் னார், “அவர்கள் குருடருக்கு வழி காட்டும் குருடர்கள். குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார் கள்” ( மத்தேயு 15:14 ).
இயேசு சொன்னார், “பரிசேயர் மோசேயின் ஆசனத்தில் அமர்ந் திருக்கிறார்கள்; ஆகையால்,அவர் கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் செய்யுங்கள், கைக் கொள்ளுங்கள், அவர்களுடைய கிரியைகளின்படி செய்யாதிரு ங்கள்; அவர்கள் சொல்லுகிறவை களைச் சொல்லியும் செய்யாதிரு க்கிறார்கள்” (மத்தேயு 23:2,3).
பரிசேயர்கள் கற்பித்தார்கள், ஆனால் அதன்படிசெய்யவில்லை. அவர்கள் பிரசங்கித்ததை அவர் கள் கடைப்பிடிக்கவில்லை.
இதுதான் பரிசேயர்களுடைய வாழ்வாய் இருந்தது.
2. மறை நூல் அறிஞர்கள் :
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! வேதபாரர்கள் போல மறை நூல் அறிஞர்களும் வேதத்தை நன்று கற்றவர்கள். இவர்களு டைய முக்கிய பணியே வேத நூல்களை பல பிரதிகளாக எழுது கின்ற பணியாகும். அதனால் தான் இவர்களுக்கு ஸ்க்ரைப்ஸ் (Scribes )என்ற பெயர் இருந்தது. இவர்கள் அரசர்களைப் பற்றியும், சமயங்களை பற்றியும், வரலாற் றை எழுதினார்ள். பல நிகழ்ச்சி களை எழுத்து வடிவாக எழுதி வைத்தனர்.வேதங்களை தொகுத் தனர். இவர்கள் வேதத்திற்கு ஆற்றிய பணி மிகவும் பாராட்டக் கூடியது. வேதத்தை அழியாமல் எழுத்து வடிவத்தில் எழுதிப் பாதுகாத்த இனம் தான் இந்த வேதபாரகர் என்ற மறைநூல் அறிஞர்கள்.
அன்பர்களே! நியாயப்பிரமாண த்தில் தேர்ச்சி பெற்று அதனை விளக்குவதிலும், போதிப்பதிலும் நிலைத்திருந்த ஒரு வகுப்பினர் தான்'வேதபாரகர்' என்ற மறை நூல் அறிஞர்கள் என்று அழைக்கப்பட்டனர்.(Scribes)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த் துவின் வாயில் இருந்து புறப்பட்ட உலகை நியாயம் தீர்க்கப்போகும் வார்த்தைகளில் "யார் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியா து" என்ற வார்த்தை:
"வேதபாரகர் பரிசேயர் என்பவர்க ளுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர் கள்(மத்:5:20) வேதபாரகர், பரிசே யர்கள் நீதியை காட்டிலும் நம்மு டைய நீதி அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் நம்மை கேட்கின்றார். விண்ணரசி
ல் நமக்கு இடம் வேண்டுமானால் நாம் வேதபாரர்களை காட்டிலும் பரிசேயர்களை காட்டிலும் நீதியை நிலைநாட்டும் கிறிஸ்தவர்களாக என்றும் இருக்க வேண்டும். அவர் களுக்கே விண்ணரசு உண்டு என்று உறுதியாக உரைக்கின் றார்.
வேதபாரகர் பரிசேயர் என்பவர் கள் ஆண்டவராகிய இயேசு வாழ் ந்த காலத்தில் வாழ்ந்த பழைய ஏற்ப்பாட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு தாங்கள் அனைத்தும் அறிந்தவர்கள்என்ற நோக்கில் போதனை செய்த பெரிய மனிதர்கள் என்று அறிய முடிகிறது. இவர்களை பற்றி ஆண்டவர் பல இடங்களில் "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை" என்பதில் ஆரம்பித்து நீங்கள் பிசாசின் பிள்ளைகள் எனவே உங்கள் தகப்பனின் (ஆபிரகாம்) கிரியையை செய்ய விருப்பமாயிருக்கிறீர்கள் என்பது வரை" மிக அதிகமான விமர்சனங் களை கூறி கடிந்துகொண்டுள்ளர்.
வேத பாரர்களின் நீதி என்ன?
1.அவர்கள் வேத வாக்கியங்களை நன்றாக அறிந்திருந்தனர். வேத பாரகரும் பரிசேயரும் வேதவாக்கி யங்களை நன்றாக அறிந்து வைத் திருந்தனர் என்பதை அவர்கள் மோசேயின் நியமனங்களை சுட்டி காட்டியதிலும், ஆபிரகாம் பற்றி மோசே பற்றி கேள்விகள் எழுப்பி யதிளுமிருந்து அறிந்துகொள்ள முடியும்.
2.இவர்கள் வேத வார்த்தைகளின் மேல் வைராக்கியம் உள்ளவர்கள்.
ஒய்வு நாளில் ஆண்டவர் சுகமாக்கியதைகூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
3.அவர்கள் பழைய ஏற்ப்பாட்டில் கடவுளின் கட்டளைகளை சரியாக கைகொண்டனர்.
"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சிரகம் ஆகிய வற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்ச ட்டத்தின் முக்கிய போதனைக ளாகிய நீதி, இரக்கம், நம்பிக் கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள். இவற்றையும் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது.
(மத்தேயு நற்செய்தி 23:23)
மேற்கண்ட வார்த்தைகளை ஆண் டவர் வேதபாரகர்களை நோக்கி சொல்வதன் மூலம் அவர்கள் பழைய ஏற்ப்பட்டு கட்டளையாகிய விருத்த சேதனம் பண்ணுதல், தசமபாகம் செலுத்துதல் போன்ற கட்டளைகளை சரியாக கைகொ ண்டனர். ஆனால் நீதியையும் மனித நேயத்தையும் கைவிட்டனர் என்று ஆண்டவர் கண்டித்தார்.
நியாயப்பிரமாணத்தில் கற்பித் திருக்கிற விசேஷித்தவை களாகிய நீதியையும் இரக்கத்தை யும் விசுவாசத்தையும் விட்டு விட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும்.
"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்ல றைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்ற மளிக்கின்றன; அவற்றின் உள்ளே யோ இறந்தவர்களின் எலும்புக ளும் எல்லாவகையான அழுக்கு களும் நிறைந்திருக்கின்றன. (மத்தேயு நற்செய்தி 23:27)
அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். (மத்தேயு நற் செய்தி 23:28)
அன்பானவர்களே! இயேசுவினு டைய போதனைக்கும் வேதபாரகர் மற்றும் பரிசேயருடைய போதனை க்குமிடையே உள்ள வித்தியாச மானது வெறும் அப்போதனை யின் பொருளடக்கத்தில் மட்டும் அல்ல—மனிதர்களிடமிருந்து வந்த பாரமான வாய்மொழி பாரம்பரி யங்களுக்கு எதிர்மாறாக கடவுளி டமிருந்து வந்த சத்தியங்களைப் போதித்தது மட்டும் அல்ல—அவை போதிக்கப்பட்ட விதத்திலும்வித்தி யாசம் இருந்தது. வேதபாரகரும் பரிசேயரும் கர்வமுள்ளவர்களா கவும்,கொடூரமானவர்களாகவும் உயர்வான பட்டப்பெயர்களை அகந்தையோடு வற்புறுத்துகிற வர்களாகவும் இருந்து, ஜனக்கூ ட்டத்தை “சபிக்கப்பட்டவர்கள்” என்பதாக அலட்சியமாக நடத்தி னார்கள். ஆனால் இயேசுவோ "மனத்தாழ்மையுள்ளவராக, சாந்த முள்ளவராக, தயவுள்ளவராக, அனுதாபமுள்ளவராக, அடிக்கடி இசைந்துக்கொடுக்கும் மனச்சாய் வுள்ளவராக இருந்தார்". மேலும் அவர்களுக்காக அவர் மனதுருகுப வராக இருந்தார்.இயேசு சரியான வார்த்தைகளை மாத்திரமல்ல, ஆனால் தம்முடைய இருதயத்திலி ருந்து வந்த மனதைக் கவரும் வார்த்தைகளைப் பேசினார், இது கேட்போரின் இருதயத்திற்குள் நேரடியாகச் சென்றது. சந்தோ ஷமான அவருடைய செய்தி மக்களை அவரிடமாக கவர்ந்திழு த்தது, இதுதான் நாம் கைக்கொ ள்ள வேண்டியது. இந்த லெந்து காலங்களில் சாந்தமும், மனதாழ் மையும், அன்புள்ள மக்களாய் ஆண்டவர் இடத்தில் அன்பு செலுத்துவதும் மக்களிடத்தில் அன்பு செலுத்துவதுமே சிலுவை நமக்கு காட்டும் வழியாகும் அவ்வாறு இருக்க கடவுள் நமக்கு கிருபை செய்வாராக. ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com.
www.davidarulblogspot.com
Comments
Post a Comment