பாவ சுமையிலிருந்து விடுவித் தல். (190,)Releasing from the burden of sin) 2 சாமுவேல் 12: 1-14, திருப்பாடல்: 32, திருத்தூதர் பணிகள் 8: 9-25, மாற்கு 2:1-12. (the second sunday of lent)
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த லெந்து காலத்தின் இரண்டாவது ஞாயிற் றுக்கிழமையின் தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது "பாவ சுமையிலிருந்து விடுவித்தல்"
பாவ சுமை என்றால் என்ன?
பாவச் சுமை" என்ற கருத்து வேதம் முழுவதும் ஒரு ஆழமான கருப் பொருளாகும், இது மனிதகுலத்தி ன் மீதான பாவத்தின் முழு விளை வுகளை பிரதிபலிக்கிறது. கடவு ளின் பரிசுத்தம் மற்றும் கட்ட ளைகளுக்குக் குறைவானஎந்த வொருசெயல், சிந்தனை அல்லது அணுகு முறை எல்லா மே பாவம்தான். தனிநபர்களை கடவுளிடமிருந்து பிரித்து ஆன்மீக மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு கனமான சுமையாக பாவ சுமை சித்தரிக் கப்படுகிறது.
கி. பி 1678ல் ஜான் பன்யனின் புத்தகம், பில்கிரிம்ஸ் ப்ரோக்ர ஸ்,(யாத்திரிகரின் முன்னேற் றம் ( மோட்ச பயணம்) இங்கிலாந்தில் கிறிஸ்தவர் அல் லாத குடும்பத்தில் பிறந்த இவர், தனது சிறு வயதில் இருந்தே தனது மூதாதையரின் தொழிலா ன பாத்திரங்களை பழுதுபார்த்து விற்பனை செய்யும் தொழிலை தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார். குடும்பத்தின் ஏழ்மை நிலையால் பள்ளிப் படிப்பைக்கூட பாதியிலேயே விட வேண்டியதா யிற்று. இளம்பிராயத்தில் தீய மனிதனாக வாழ்ந்தார்.ஜாண் பனியன் தனது பதினாறாவது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். ஒருமுறை அரசின் ஆணைப்படி போருக்குச் செல்ல உத்தரவிப்பட் டார். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக வேறொருவர் அனுப்பப்பட்டார். அந்த நபர் போரி ன் முதல்நாளிலேயே போரில் மரணமடைந்தார். இந்த நிகழ்ச்சி அவரை சிந்திக்க வைத்தது. மயிரிழையில் உயிர் தப்பினது ஏனோ? என்று யோசித்து நல்லவ னாக வாழ விரும்பினார். ஆனால் அது முடியவில்லை. இரண்டு ஆண்டுகளில் வீடு திரும்பினார்.
19வது வயதில் ஒரு கிறிஸ்துவ பெண்ணை மணமுடித்தார். மனைவி அடிக்கடி கிறிஸ்துவை பற்றி கூறியும் அவர் ஆண்டவரை ஏற்க மனமற்றவராக இருந்தார்.
ஒருநாள் தெருவில் பாத்திரம் பழுதுபார்க்க வந்த மூன்று பெண்கள் இயேசுவைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்ததை கேட்டு தன்னை முற்றிலும் கிறிஸ்துவு க்கு ஒப்படைத்தார். அவர் ஆண்ட வரை ஏற்றுக்கொண்ட கொஞ்ச நாட்களிலேயே அவரது மனைவி இறந்து போனார்.ரிப்பேர் பார்க் கும் வீடுகளில் தனது தொழிலை செய்து கொண்டே இயேசுவைப் பற்றி அறிவிக்க ஆரம்பித்தார். அக்காலத்தில் இங்கிலாந்தில் போதகர் தவிர மற்ற யாரும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. ஆனால் வேதத்திலுள்ள “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ் டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கி யுங்கள்” என்ற வசனத்திற்கு கீழ்ப் படிவது உத்தமம் என உணர்ந்து சுவிசேஷத்தை தைரியமாய் பிரசங்கித்தார். ஆகவே சட்டத்தை மீறிய குற்றத்திற்காக அவர் நீதி பதி முன் நிறுத்தப்பட்டார். “இனி சுவிசேஷம் அறிவிக்க மாட்டேன் என்று கூறினால் விடுதலை” என்றார் நீதிபதி. அப்படி உறுதிய ளிக்க பனியன் முன்வரவில்லை. உடனே நீதிபதி 3 மாதம் சிறை தண்டனை என அறிவித்தார். மறு நிமிடமே இன்று நான் விடுவிக்கப் படாமல் போனால் தேவ உதவியா ல் நாளை பிரசங்கிப்பேன் என் றார். அதனால் 3 மாத சிறைத்த ண்டனையை 12 வருடங்களாக நீட்டிக்கப்பட்டது. அந்த சிறிய அறையில் 50 பேருடன்தங்கவேண் டியதாயிருந்தது. மங்கலான வெளிச்சம், துஷ்டர்கள், சுகாதார மற்ற நிலை காணப்பட்டது. இந்த நிலையில்தான் பனியன் “மோட்ச பிரயாணம்” என்ற புத்தகத்தை எழுதினார். சற்று யோசித்துப் பாருங்கள் 50 பேரின் பேச்சு, சத்தம், தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்லி அடிக்க வரும் துஷ்டர்கள் மத்தியில் ஒரு பெரிய புத்தகத்தை எழுதினார். அவர் பிறப்பிலே கிறிஸ்தவர் அல்ல, படித்தவர் அல்ல,நாற்றமெடுக்கும் அறையில் உலகிற்கே மணம் வீசும் “மோட்ச பிரயாணம்” என்ற புத்தகத்தை எழுதினார். அந்த
புத்தகத்தில்:
ஒரு சராசரி கிறிஸ்தவ நபரின் அடையாளமாக இருக்கும் கிறிஸ் டியன் என்ற மனிதனின் பயணத் தை முன்வைக்கிறது.பாவியை சொர்க்கத்திற்கு தகுதியானவராக மாற்றவோ முடியாது - பாவிகளின் சார்பாக கிறிஸ்துவின் தியாக மரணம் மட்டுமே இதை நிறை வேற்ற முடியாது. இந்தக் கருத்தை வெளிப்படுத்த, ஜான் பன்யன் கிறிஸ்தவரை தனது முதுகில் ஒரு உடல் சுமையைச் சுமப்பதாக சித்தரிக்கிறார் , இது அவரது பாவத்தைக் குறிக்கிறது. உண்மையில், கிறிஸ்தவரால் இந்த சுமையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது, மேலும் கிறிஸ்துவின் தியாகத் தின் மீதான அவரது நம்பிக்கை மட்டுமே அவரை மீட்கிறது. கிறிஸ்தவ விசுவாசியும், கிறிஸ் தவ யாத்ரீகரைப் போலவே, கிறிஸ்துவின் தியாகத்தை நம்புவதன் மூலம் சுமையிலிருந்து விடுபட வேண்டும். அன்பர்களே!
இஸ்ரவேலர் தங்கள் பாவங்களு க்குப் பரிகாரம் செய்ய பலிகளைச் செலுத்த வேண்டியிருந்தது, இது பாவத்தின் பெரும் விலையையும் சுத்திகரிப்புக்கான அவசியத்தை யும் குறிக்கிறது.
"ஆண்டவரின் கட்டளைகளின்படி, செய்யக்கூடாதென்று விலக்கப்ப ட்ட ஒன்றை ஒருவர் செய்து பாவத் திற்கு உள்ளானால், அவர் அறியா மல் செய்தாலும்கூட, அவர் குற்ற வாளியே. அத்தீச்செயலுக்கு அவரே பொறுப்பாவார்.
(லேவியர் 5:17) தாவீது அரசர் தன் பாவங்கள் அவருடைய தலைக்கு மேல் சென்று விட்டதாக ஆண்ட வரிடம் முறையிடுகிறார்.
"என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன; தாங்கவொண் ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன."
திருப்பாடல்கள்(சங்கீதம்) 38:4)
ஆண்டவராக இயேசு கிறிஸ்து இத்தகைய பாவ சுமையில் இருப் பவரை பார்த்து அவர், "பெருஞ் சுமை சுமந்து சோர்ந்திருப்பவ ர்களே, எல்லாரும் என்னிடம் வாரு ங்கள், நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்.(மத்தேயு 11:28)
என அழைக்கிறார்.
பாவத்தின் சுமை ஒரு தனிப்பட்ட மற்றும் உலகளாவிய நிலையாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் தனது சொந்த பாவத்தின் எடையைச் சுமக்கிறான், ஆனால் மனிதகுலம் கூட்டாக ஆதாமிடமிருந்து பெறப் பட்ட வீழ்ச்சியடைந்த இயல்பில் பங்குகொள்கிறது. ரோமர்5:12"ல்
"ஆகையால், ஒரே மனிதனால் பாவமும், பாவத்தினால் மரணமும் உலகத்திற்குள் நுழைந்தது போல, எல்லா மனிதர்களுக்கும் மரணம் வந்தது, ஏனென்றால்எல்லாமனித ர்களும் பாவம் செய்தார்கள்.
பாவத்தின் சுமையிலிருந்து இரட்சிப்பு என்பது ஒரு பரிசு, இது மனித தகுதியால் சம்பாதிக்கப்ப டவில்லை, ஆனால் இயேசு கிறிஸ் துவில் விசுவாசம் வைப்பதன் மூலம் வழங்கப்படுகிறது.
1.ஏழையும், செல்வந்தனும். The poor and the rich. 2 சாமுவேல் 12: 1-14 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! தாவிது அரசர் ஒன்றி ணைந்த இஸ்ரேல் தேசத்தை சவுலுக்குப் பிறகு இரண்டாவது அரசராக கிமு 1010- முதல் 970 வரை அரசாண்டார். அவர் காலத்
தில் இஸ்ரவேல் படை அம்மோ னுக்கு எதிராக மற்றொரு போரில் ஈடுபட்டிருந்தபோது, எருசலேமில் இருந்த தாவீது, தனது வாழ்நாள் முழுவதும் துக்கத்தையும் பிரச்ச னையையும் கொண்டு வந்ததொட ர்ச்சியான பாவங்களைச் செய்தா ர். முதலில், தாவீதின் உயர் மட்ட வீரர்களில் ஒருவரான உரியா வின் மனைவி பத்சேபாளுடன் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டார்.பத்சேபா கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடித்ததும், தாவீது தனது பாவத்தை மறைக்க ஒரு திட்டத்தை யோசித்தார். போரிலிருந்து உரியாவை மீட்டு, பத்சேபாளுடன் தூங்க வீட்டிற்கு அனுப்பினார், இது பத்சேபாளின் கர்ப்பத்திற்கு உரியா தான் கார ணம் என்று மக்கள் நினைக்க வைக்கும் என்று நம்பினார். ஆனால் உரியா தனது மனைவி யின் அருகில் செல்ல மறுத்து விட்டார். எனவே தாவீது உரியா வை மீண்டும் போருக்கு அனுப்பி, சண்டையின் போது அவரைக் கொல்ல ஏற்பாடு செய்தார். உரியா இறந்து விட்டார் என்பதை போர்க்களத்திலிருந்து உறுதிப் படுத்தும் வரை காத்திருந்த பிறகு (18-25), பத்சேபாளை ஒரு அரச மனைவியாக தனது அரண்மனை க்கு அழைத்துச் சென்றார் (26-27).
அரண்மனையில் உள்ள எவருக் கும் தனது பாவம் தெரியும் என்பது தாவீதுக்குத் தெரியாது. ஆனால் நாத்தான் இதை அறிந் திருந்தான்,
நாத்தான் யார்? Who was நாதன்?
நாத்தான் ஒரு தீர்க்கதரிசி. தாவீது அரசரின் காலத்தில் நீதிமன்ற தீர்க்கதரிசியாக இருந்தார்.( 2சாமு வேல் 7:2 மற்றும் 1 நாளாகமம் 17:1இல்) தாவீதின் ஆலோசகராக (Chief Counsellor) அறிமுகப்படுத்த ப்படுகிறார். "ஒரு பணக்கார ஆடுகளின் உரிமையாளர் ஒரு ஏழை மனிதனின் செல்லப் பிராணி" வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக் கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக் குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான். உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு,"ஆண்டவர்மேல்ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும். இரக்கமின்றி இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்" என்று நாத்தானிடம் கூறினார்.
(12:1-6). தாவீது தன்னைத்தானே கண்டனம் செய்ததாக நாத்தான் சுட்டிக்காட்டினான். உரியாவைக் கொன்றதற்கான தண்டனையாக, அவனதுசொந்தகுடும்பம்கொலை யால் துண்டாடப்படும். பத்சேபாளு டன் அவன் விபச்சாரம் செய்ததற் கான தண்டனையாக, அவனது சொந்த குடும்பம் அனைத்து இஸ்ரவேலரின் பார்வையிலும் ஒழுக்க ரீதியாக அவ மானப்படுத் தப்படும்.உண்மையான துக்கத் தில் தாவீது கடவுளிடம் தனது பாவங்களை அறிக்கையிட்டார் ( சங்கீதம் 51:0 ஐப் பார்க்கவும் ), கடவுள் அவரை கிருபையுடன் மன்னித்தார். ஆனால் அது தாவீது தனது பாவங்களின் விளைவாக அனுபவிக்கும் துயரத்தை நீக்கவி ல்லை. தாவீதுக்கும் பத்சேபாளுக் கும் பிறந்த குழந்தை நோய்வாய் ப்பட்டபோது, தாவீது அதற்காக ஊக்கமாக ஜெபித்தான்.உண்ணா நோம்பும் இருந்தான் ஆனால் நாத்தான் முன்னறிவித்தபடி அந்தக் குழந்தை இறந்து விட்டது. நடந்ததை தாவீது ஏற்றுக் கொண் டு, அது தன் மீதான கடவுளின் நியாயத்தீர்ப்பின் ஒரு பகுதி என்பதை உணர்ந்தான் . சிறிது காலத்திற்குப் பிறகு, தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் மற்றொரு மகன் பிறந்தார் அவர்தான் சாலொ மோன்.
தாவீது பாவம் செய்த பிறகு, நாத்தான் அவரை பயத்தில் கடிந் துகொண்டு, தாவீது தனது பாவத் தை மனத்தாழ்மையுடன் ஒப்புக் கொண்ட பிறகு, நாத்தான் கூறி னார்: "கர்த்தர் உன் பாவத்தை நீக்கிவிட்டார்; நீ சாகமாட்டாய்." ( 2 சாமுவேல் 12:1-13 .) நாத்தான் தாவீதின் பாவத்தை மன்னிக்க வில்லை, ஆனால் அவர் தாவீதுக் கு கடவுளின் மன்னிப்பை தெரிவி த்து அதை அவருக்கு உறுதியளித் தார். ஆனால், தாவீது அரசர் நியா யப்பிரமாண சட்டமாகிய கொலை செய்யா திருப்பாயாக, விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, அயலான் பொருளை இச்சையாதிருப்பாயா க என்ற மூன்று கட்டளைகளை மீறினார். ஆனால் ஆண்டவரிடத் தில் மனம் கசந்து உண்ணா நோன்பிருந்து ஜேபித்து தன் பாவ ங்களுக்காக விடுதலை பெற்றார் ஆனாலும் கூட ஆண்டவர் அவரு டைய மூர்க்கமான பாவத்திற்காக அவருடைய குழந்தையை கொன் றார். பாவத்திற்கு தண்டனை உண்டு என்பது மற்றும் விடுதலை யும் கடவுள் கொடுப்பார் என்பதும் இதன் மூலம் அறிகிறோம்.
2. மன மாற்றத்தின் பரிசு தூய ஆவி. Holy spirit is the gift of Repentence.திருத்தூதர் பணிகள் 8: 9-25.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! சமாரியர்கள் இயேசு கிறிஸ் துவை ஏற்றுக் கொண்டவுடன் திரு த்தூதர்களால் தூய ஆவி அவர்க ளுக்கு அருளப்பட்டது. திருத்தூதர்
பிலிப்பு சமாரியாவிலே பிரசங் கித்ததும், இயேசுவின் நற்செய்தி இந்த மக்களுக்குக் கொடுக்கப் பட்டதும், திருச்சபை அனைவரும் அறியாமலேயே வரலாற்றில் மிக முக்கியமான படிகளில் ஒன்றை எடுத்து, கிறிஸ்து உலகம் முழுவ தற்கும் உரியவர் என்பதைக் கண்டுபிடித்து காட்டுகிறது. பிலிப்பைப் பற்றி நமக்கு மிகக் குறைவாகவே தெரியும், ஆனால் பிலிப்பு கிறிஸ்தவ திருச்சபை யின் சிற்பிகளில் ஒருவர்.. Philip was an Architect of the Church.
கிறிஸ்தவம் இந்த மக்களுக்கு என்ன கொண்டு வந்தது என்ப தை நாம் கவனிக்க வேண்டும்.
(i) அது இயேசுவின் நற்செய்தி யை கொண்டு வந்தது.
(ii)சமாரியர்கள் இதற்கு முன்பு அறிந்திராத மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது.
(iii)கிறிஸ்தவம் ஒருபோதும் வெறு ம் வார்த்தைகளாக இருந்ததில் லை.
(iv)கிறித்தவம் குணப்படுத்துத லைக் கொண்டு வந்தது.
இக்காலகட்டத்தில் சீமோன்
(சைமன்) என்று அழைக்கப்படும் ஒரு மனிதர் உள்ளூர் அளவில் ஓரளவு புகழ் பெற்றவர். அந்த நகரத்தில் மாயவித்தை செய்து வந்தான். பண்டைய உலகில் மந்திரவாதிகள் என்று அழைக்க ப்படும் வானியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஒரு பிரிவு இருந்தது ( மத்தேயு 2:1 ), ஆனால் உள்ளூர் மந்திரவாதிகள் மற்றும் மந்திரவாதிகளும் இந்த பட்டத்தை எடுத்துக் கொண்டனர். அந்த வகையில் சீமோன் என்ற மந்திர வாதி கடவுளின் வல்லமையை மட்டும் பெற்றிராதவர் என்று அவர் கௌரவிக்கப்பட்டார்; அவரைப் பற்றி அவர்கள் "இந்த மனிதர் கடவுளின் மகத்தான வல்லமை" என்று சொன்னார் கள்.அவன் தன் சூனியங்களால் அவர்களை ஆச்சரியப்படுத்தி யதால் அவர்கள் அவனுக்குச் செவிசாய்த்தார்கள்.
தேவனுடைய ராஜ்யத்தையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை யும் குறித்து பிலிப்பு பிரசங்கித்த போது அவர்கள் விசுவாசித்த போது : சீமோனையும் அவனு டைய சூனியத்தையும் கண்டு முன்பு ஆச்சரியப்பட்டவர்கள் இப்போது பிலிப்பையும் அவன் பிரசங்கித்ததையும் விசுவாசித் தார்கள். பிலிப்பின் நற்செய்தி
அவர்களைக் கிறித்துவுக்குள் மாற்றியது.விசுவாசிகள் ஞானஸ் நானம் பெற்றபோது தங்கள் விசுவாசத்தை அறிவித்தனர் . "அவர்களுடைய விசுவாசத்தில் எந்தக் குறைபாட்டிற்கும் எந்த அறிகுறியும் இல்லை.நடந்த அற்புதங்களையும் அடையாளங்க ளையும் சீமோன் கண்டு வியப் படைந்தார் : பிலிப்பின் பிரசங்க த்தாலும் அற்புதங்களாலும் சீமோன் நம்பிக்கை கொண்டு, விசுவாசத்தை அறிவிக்கும் அளவுக்கு திருமுழுக்கு பெற்று, பிலிப்புடன் தொடர்ந்தார் .
ஆண்டவருடைய வார்த்தைகள் அற்புதங்களை நடப்பிக்கும். மாறாதவற்றை மாற்றும், மனிதனை புதுப்பிக்கும். அது இரு புறமும் கருக்குள்ள பட்டையம் கண்மலையே பிளக்கும். இந்த மந்திரவாதியும் கிறிஸ்தவனாக மாற்றியது விந்தையிலும் விந்தை ஆண்டவரின் அற்புதத்தின் விந்தை.சீமோன் பிலிப்பையும் அவருடைய ஊழியத்தையும் பின்பற்றுபவராக ஆனார். அதன் பிறகு சமாரியர் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண் டதை எருசலேமிலிருந்த திருதூது வர்கள் கேள்விப்பட்டு, பேதுரு வையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார் கள்; அவர்கள் வந்து, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி னார்கள்.அவர்கள், அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! பிலிப்பின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சமாரி யர்கள் திருமுழுக்கு பெற்றனர் அதே நேரத்தில் பேதுரு, யோவான் மூலமாக தூய ஆவியைப் பெற்றனர். திருமுழுக்கு தூய ஆவி பெறுவதற்கான ஒரு தகுதி யாய் இருக்கிறது. ஆண்டவர் திருமுழுக்கு பெற்றவுடன் வானத் திலிருந்து புறாவைப் போல் தூய ஆவியானவர் அவர் மேல் இறங் கியதை நாம் அறிவோம்.
மந்திரவாதி சீமோனின் பண ஆசை:
அன்பானவர்களே தூய ஆவியை பெறுகின்ற ஒரு வரம் மந்திரவாதி சீமோனுக்கு ஆச்சரியமாக இருந் தது. அதை எப்படியாவது பணத் தின் மூலமாக நாம் பெற்று விட லாம் என்று ஒரு அவா அவனிடத் தில் வந்தது. இது தவறு என்று சொல்ல முடியாது புதிதாக கிறித் துவை ஏற்றுக் கொண்டவன், திருமூழுக்கு பெற்றவன், ஆனால் பணத்தின் மூலமாக வாங்கிவிட லாம் என்று சிந்தித்தானே அது தான் தவறு. தூய ஆவி என்பது தூய்மை உள்ளம் உள்ளோருக் கான உரிமைப் பற்றாகும்.
It is a matter of ownership.
சீமோன் தூய ஆவியை பெற்று அதன் மூலமாக பணத்தை சம்பா திக்கலாம் என்ற எண்ணம் வந்தது.
பரிசுத்த ஆவி என்பது வாங்கவோ விற்கவோ கூடிய ஒரு சக்தி என்று சைமன் நினைத்தார். Holy spirit is
not a commodity to buy and sell. It's the free gift of God.
சீமோன் உண்மையில் தனக்காக பரிசுத்த ஆவியை விரும்பவில் லை, மாறாக பரிசுத்த ஆவியின் வல்லமையை மற்றவர்களுக்குத் தன் விருப்பப்படி வழங்கும் திறனைதான் விரும்பினார்.
ஆனால் பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தி னால் வாங்கலாம் என்று நீ நினைத்தபடியால், உன் பணம் உன்னுடனேகூட அழிந்துபோம்! உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் சரியாக இல்லாத படியால், இந்தக் காரியத்தில் உனக்குப் பங்குமில்லை, உரிமையுமில்லை. ஆகையால், நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படக்கூடுமானால், தேவனிடத்தில் வேண்டிக்கொள். நீ கசப்பினாலும் அக்கிரமத்தி னாலும் கட்டுண்டிருக்கிறதை நான்காண்கிறேன் என்றான்.
அன்பானவர்களே! ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் அந்த கடைசி திருவிருந்து பந்தியில் ஆண்டவருக்கும் பேதுருக்கம் நடந்தது என்ன?அது மீண்டும் சீமோனின் நிகழ்ச்சியில் வருகி றது,நம் ஆண்டவர் எவற்றிலும் மறக்க முடியாதவர், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதற்கு பேதுரு, மந்திரவாதி சீமோனிடம் பேசிய அந்த வார்த் தை நினைவுப்படுத்துகிறது.
"இந்த ஊழியத்தில் உனக்குப் பங்கு இல்லை, உரிமை இல்லை’ என்று பேதுரு கூறும்போது, மேல் அறையில் இயேசு தன் கால்க ளைக் கழுவுவதை பேதுரு எதிர்த்தபோது இயேசு அவருக்குப் பயன்படுத்திய அதே வார்த்தை களை அவர் பயன்படுத்துவது சுவாரஸ்யமானது. இயேசு, ‘நான் உன்னைக் கழுவாவிட்டால், உனக்கு என்னோடு பங்கில் லை’ என்றார் (யோவான் 13:8). வலுவான வார்த்தைகள். இருப்பினும் பேதுரு ஒரு அவிசு வாசி அல்ல; அவன் கடவுளின் சித்தத்திற்கு உட்பட்டவன்.”
சீமோன் போன்று, ஆண்டவரின் ஊழியத்தை பணத்துக்காக செய்கின்றவர்களை எச்சரிக்கை தான் இந்த வார்த்தை உங்கள் பணம் உங்களோடு அழிந்து
போம்.
சீமோன், "நீங்கள் சொன்ன காரியங்களில் எதுவும் எனக்கு நேரிடாதபடிக்கு எனக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக் கொள்ளுங்கள்" என்று பேதுருவையும் யோவானையும் கேட்டுக்கொண்டான். இதற்கு பதிலாக தான் செய்த தவறை ஆண்டவர் இடத்தில் நேரடியாக சீமோன் கேட்டு மன்னிப்பு கேட்டி ருந்தால் மிக நலமாக இருக்கும். இவற்றில் அவனுக்கு ஆண்டவர் மீது ஒரு பயம் இருந்தது. என்பது தெளிவாக தெரிகிறது...
3. மகனே! உன் பாவங்கள் மன் னிக்கப்பட்டன. மாற்கு 2:1-12.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆண்டவர் பல ஜெப ஆலய ங்களில் பிரசங்கத்தை முடித்து விட்டு கப்பர்நகூமுக்குத் திரும்பினார். எபிரேய மொழியில் கப்பர் நகூம் என்பது "நாகும் நகர்" என்பது விவிலியத்தோடு தொடர்புடைய ஒரு பாலஸ்தீன ஊர் ஆகும். அங்கு மீன்பிடித் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஊர் கலிலேயக் கடல் என்று அழைக்கப்படுகின்ற கெனசரேத்து ஏரிக்கரையில் அமைந்தது. இங்கு சுமார் 1500 மக்கள் இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்தார்கள். குறிப்பாக லூக்கா நற்செய்தியில் கப்பர் நாகும் என்னும் ஊர் இயேசுவின் சீடர்களாயிருந்த பேதுரு, அந்தி ரேயா, யாக்கோபு, யோவான் மற்றும் வரிதண்டுபவரான மத்தேயு ஆகியோரின் சொந்த ஊர் என்று குறிக்கப்படுகிறது. இங்கே இயேசுவின் வீடும் இருந்திருக்கலாம் கப்பர்நாகும் ஊரில் இயேசு பல முறை மக்க ளுக்குக் கற்பித்து, பலரைக் குணமாக்கினார். இயேசுவின் பணி மையம் போல கப்பர் நாகும் விளங்கியது. இயேசு வந்த செய்தி உடன டியாகப் பரவியது. பாலஸ்தீனத்தில் வாழ்க்கை மிகவும் பிரபலமாக இருந்தது. காலையில் வீட்டின் கதவு திறக்கப்பட்டது, விரும்பிய எவரும் வெளியே வந்து உள்ளே வரலாம். ஒரு மனிதன் வேண்டு மென்றே தனிமையை விரும்பா விட்டால் கதவு ஒருபோதும் மூடப்படாது; திறந்த கதவு என்பது அனைவரும் உள்ளே வருவதற் கான திறந்த அழைப்பைக் குறிக்கிறது. இது போன்ற எளிய வீடுகளில், நுழைவு மண்டபம் இல்லை; கதவு நேரடியாக தெரு வுக்குத் திறக்கப்பட்டது. எனவே, சிறிது நேரத்தில், ஒரு கூட்டம் வீட்டை நிரம்பி வழிந்து, கதவைச் சுற்றியுள்ள நடைபாதையில் அடைத்தது; அவர்கள் அனைவரும் இயேசு சொல்வதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்திற்குள் நான்கு ஆண்கள் தங்கள் நண்பன் ஒருவ னை ஒரு கட்டிலில் சுமந்து வந்த னர், அவன் பக்கவாதத்தால் பாதி க்கப்பட்டிருந்தான். கூட்டத்தின் வழியாக அவர்களால் கடந்து உள்ளே செல்லவே முடியவில்லை, ஆனால் அவர்கள் வளமான மனித ர்கள். ஒரு பாலஸ்தீன வீட்டின் கூரை தட்டையானது. அது தொட ர்ந்து ஓய்வெடுக்கவும் அமைதியா கவும் பயன்படுத்தப்பட்டது, என வே வழக்கமாக அதற்கு மேலே ஒரு வெளிப்புற படிக்கட்டு இருந் தது. கூரையின் கட்டுமானம் இந்த நான்கு பேரும் செய்ய முன் வந்த தற்கு ஏற்றதாக இருந்தது. கூரை சுவரிலிருந்து சுவருக்கு குறுக்கே அமைக்கப்பட்ட தட்டையான விட்டங்களைக் கொண்டி ருந்தது, ஒருவேளை மூன்று அடி இடை வெளியில். விட்டங்களுக்கு இடை யிலான இடம் களிமண்ணால் இறுக்கமாக நிரப்பப்பட்ட புதர் மரத்தால் நிரப்பப்பட்டது. பின்னர் மேற்பகுதி மார்பிள் செய்யப்பட் டது. பெரும்பாலும் கூரை மண் ணால் ஆனது, பெரும்பாலும் ஒரு பாலஸ்தீன வீட்டின் கூரையில் செழிப்பான புல் வளர்ந்தது. இரண்டு விட்டங்களுக்கு இடை யில் உள்ள பள்ளத்தை தோண்டி எடுப்பது உலகிலேயே எளிதான காரியம்; அது வீட்டை அதிகம் சேதப்படுத்தவில்லை, மேலும் உடைப்பை மீண்டும் சரிசெய்வது எளிதாக இருந்தது. எனவே நான் கு பேரும் இரண்டு விட்டங்களு க்கு இடையில் உள்ள நிரப்புத லைத் தோண்டி, தங்கள் நண்பரை இயேசுவின் காலடியில் நேரடியாக இறக்கிவிட்டனர். ஆளில்லாத அனாதைகளுக்களுக்கெல்லாம் தோள் கொடுத்து சுமந்து வரும் அந்த நாலு பேருக்கு நன்றி. இவர்கள் செய்வதை பார்த்து சிரித்த நம் ஆண்டவர் இவர்களின் இந்த விசுவாசத்தைக் கண்ட இயேசு, ஒரு புரிதலுடன் புன்னகை த்திருக்க வேண்டும். அவர் அந்த மனிதனை ப் பார்த்து, "மகனே," என்று கூறினார், "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன." என்றார் இந்த உலகில் பாவங்க ளை மன்னிக்கும் அதிகாரம் உள்ளவர் ஆண்டவர் ஒருவரே, ஏனெனில் அவர் உலக மக்களின் பாவத் திற்காக தண்ணியே சிலுவையில் ஒப்புக்கொடுத்தார். எனவே உரிமையோடு சொல்கி ன்றார் உன் பாவங்கள் மன்னி க்கப்பட்டன. உலகத்தின் பாவத் தை சுமந்து இருக்கிற தேவா ஆட்டுக்குட்டி நம் ஆண்டவர் அல் லவா. மகனே என்று ரத்த பாசத்து டன் அழைக்கும் நம் இயேசு நம் இறை தந்தை அல்லவா.
ஒருவனின் பாவமே எல்லா துன்ப த்திற்கும் காரணமாக இருக்கிறது அதில் வியாதியும் ஒன்று.
யூதர்கள் பாவத்தையும் துன்பத் தையும் முழுமையாக இணைத்த னர். ஒரு மனிதன் துன்பப்பட்டால் அவன் பாவம் செய்திருக்க வேண் டும் என்று அவர்கள் வாதிட்டனர். உண்மையில் அதுதான் யோபு வின் நண்பர்கள் உருவாக்கிய வாதம். "யார்," தேமானியரான எலிப்பாஸ், "அந்த அப்பாவி எப்போதாவது அழிந்துவிட்டாரா?" ( யோபு 4:7 ) என்று கேட்டார். யூத ரபீக்கள், "ஒரு நோயாளியின் அனைத்து பாவங்களும் மன்னிக் கப்படும் வரை அவரது நோயிலி ருந்து குணமடைவதில்லை" என்று கூறினர்.
இயேசு அந்த மனிதனிடம் அவனு டைய பாவங்கள் மன்னிக்கப்பட் டன என்று சொன்னதை அவர்கள் கேட்டபோது அது ஒரு அதிர்ச்சி யாக இருந்தது. கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும் என்பது யூத நம்பிக்கையின் இன்றியமையாத ஒன்றாகும். அவ்வாறு கூறுவது கடவுளை அவமதிப்பதாகும்; அது தெய்வ நிந்தனை, தெய்வ நிந்தனைக் கான தண்டனை கல்லெறிந்து கொல்லப்படுதல் (லேவியர் 24:16)
பாவமும் நோயும் பிரிக்கமுடியாத வகையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பது அவர்களின் சொந்த உறுதியான நம்பிக்கை. ஒரு நோயாளி என்பது பாவம் செய்த ஒரு மனிதன். எனவே இயேசு அவர்களிடம் கேட்டார்: "இந்த மனிதனிடம் 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்று சொல்வது எளிதா அல்லது 'எழுந்து நட' என்று சொல்வது எளிதா?"
"நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக் குப் போ" என்றார். அவரும்எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இத னால் அனைவரும் மலைத்துப் போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே" என்று கூறிக் கடவுளைப் போற் றிப் புகழ்ந்தனர்.
பாவத்தை எதிர்த்துப் போராடுங் கள். பரிசுத்தத்தில் தொடர்ந்து வளருங்கள். பாவச் சுமை உங்க ளை சோர்வடையச் செய்ய விடாதீ ர்கள். ஓய்வு பெறவோ அல்லது ராஜினாமா செய்யவோ வேண் டாம், ஆனால் விடாமுயற்சியுடன் இருங்கள். கிறிஸ்து நம்மை நித்தி யத்திற்கும் அவருடன் இணைத்து, அவருடைய மகிமையில் பங்கு கொள்ளும் வரை தொடர்ந்து செல்லுங்கள். அவ்வாறு இருக்க கடவுள் நமக்கு கிருபை அருள்வா ராக! ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www. david arul sermom centre. com
www. david arul blogs. com
ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்த விடாதீர்கள். (உரோமையர் 6:12)
Comments
Post a Comment