பேதுருவும் யூதாசும்.(191)Peter and Judas. மத்தேயு 26: 31-35, 20-25. The third friday of lent.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! வரும்  மூன் றாவது லெந்தின் வெள்ளிக் கிழமையின் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது "பேதுரு வும் யூதாசும் ".
 சீமோன் பேதுரு என்று அழைக்க ப்படும்  Peter the Rock, முதலாம் திருத்தூதர் அவர்கள் கிபி ஒன்றாம் ஆண்டில் கலிலேயா வில்  உள்ள பெத்சாய்தா என்ற இடத்தில் பிறந்தார்.(யோவான் 1:44)இவர் இறந்தது கி.பி 64-68ல்.  ரோம பேரரசின் ஆட்சியில் பிறந்தார், இறந்தார். இயேசுவைப்
போல. இவரின் தந்தையார் யோனா அல்லது யோவான் என்று அழைக்கப்படுவார். ஆண்டவர்  இயேசு கிறிஸ்து இவருக்கு பேதுரு அதாவது கற்பாறை என்ற  பெயர் வைத்தார்." உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என்திருச் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. (மத்தேயு 16:18) என திருச்சபையின் அடித் தள கல்லாக அவரை நியமித்தார்.
 பேதுரு என்பதுஆங்கிலத்தில்  Peter எனப்படும்.யோனாவின் குமாரனாகிய சீமோனே என யோவான் (21:15) நற்செய்தியில் மட்டும் 17 முறை சீமோன் என்று அழைக்கப்படுகிறார் (Simon, son of John), கிரேக்க மொழி மாற்றமான பெட்ராஸ் என அழைக்ககூடிய பேதுரு என நற்செய்திகளிலும்,  நிருபங்களிலும் 150 முறைக்கு மேல் அழைக்கப்படுகிறார். இவருடைய சகோதரர் அந்திரேயா மற்றும் செபதேயின் குமாரர்கள் யாக்கோபு யோவானோடு சேர்ந்து கலிலேய கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் இவர்களை இனி மனிதர்களை பிடிப்பீர் என ஆண்டவர் அழைத்தார். பேதுரு தான் சீடர்களிலே தலைமையா னவர். ஆண்டவரால் முதலில் அழைக்கப்பட்டவர். ஆண்டவரின் ஊழியத்தை பாலஸ்தீனம், மற்றும் ஆசியாமைனர், லித்தா, யோப்பா, சிசேரியாவில் செய்தார். ஆண்டவரை இவர் மூன்று முறை மறுதலித்தாலும் உயிர்த்த கிறித்துவின் காலி கல்லறையை (Epmty tomb) முதலில் பார்த்த சீடர் இவர்தான்.
 இவர்தான், திருச்சபையின் ரோம், அந்தியோகியாவின் முதல் போப்பாக. (திருத்தந்தை) கருதப் படுகிறார். இவருடைய பிரசங்கத் தை பெந்தகோஸ்தே நாளில் கேட்டு எருசலேமில் திருமுழுக்கு பெற்று திருச்சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் ஒரே நேரத் தில் 3000 பேர் என்பது திருச்சபை வரலாற்றில், ஏன் உலக வரலாற் றில் முதல் அற்புதமாகும்.(திரு தூதர் Acts:2:41)Please, imagine the power of the holyspirit.
 இவர் எழுதிய முதலாம் பேதுரு இரண்டாம் பேதுரு நிருபங்களை
கிபி 66,67ல், கிறிஸ்தவர்கள் ரோம அரசன் கீழ் மிகவும் துன்புறுத்தப் படுதலின் போது இவர்களை ஊக்குவிக்கும் பொருட்டாக இதை எழுதினார்.
 இயேசுவை மிகவும் கவர்ந்த பேதுரு: 
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆண்டவர் சீமோன் பேதுரு வை அதிகமாய் நேசித்தார், பேதுரு ஆண்டவர்மீதுஅதிகஅன்பு உள்ளவராய், பற்று, பாசம் உடைய வராக இருந்தார். இவர் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர், உடனே செயல்பட கூடியவர், அவசர புத்திகாரர்.
இயேசு பேதுருவையும் அவரது சகோதரர் அந்திரேயாவின்  படகி ல் ஏறி, அற்புதமாக மீன் பிடிக்க உதவுவதன் மூலமும், இனி மனிதர்களைப் பிடிப்பவர்களாக அவர்களை அழைப்பித்தார். , “ஆனால் சீமோன் பேதுரு அதைக் கண்டதும், இயேசுவின் முழங்கா லில் விழுந்து, 'என்னை விட்டுப் போ, நான் பாவி, ஆண்டவரே' என்று கூறினார்” ( லூக்கா 5:8 ) 
 இது அவர் உணர்ச்சிவசப்பட்டு செய்தது.
என்னை மக்கள் யார் என்கிறா ர்கள் என்ற இயேசுவின் கேள்வி க்கு சீமோன் பேதுரு பதிலளித் தார்: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றார். இயேசு அவனுக்குப் பிரதியுத்த ரமாக: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீர் பாக்கியவான் ! மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா வே இதை உனக்கு வெளிப்படுத் தினார். நான் உனக்குச் சொல்லு கிறேன், நீ பேதுரு, இந்தக் கல்லி ன் மேல் நான் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வ தில்லை” ( மத்தேயு 16:16-18 ). என
ஆண்டவர் பேதுருவை பாராட்டு கிறார்.மத்தேயு 16:21–23- ல் , கிறிஸ்து தனது மரணத்தை முன்னறிவித்தார், அதற்கு பேதுரு அவரைக் கடிந்துகொண்டு அது ஒருபோதும் நடக்காது என்று கூறினார். அதற்கு கிறிஸ்து பதிலளித்தார்,"என் பின்னே போ, சாத்தானே! நீ எனக்கு இடையூ றாக இருக்கிறாய். ஏனென்றால் நீ தேவனுக்குரியவைகளைச் சிந்தி க்காமல், மனுசருக்குரியவைக ளைச் சிந்திக்கிறாய்."என்று கடிந் து கொண்டார்.
கிறிஸ்துவை நோக்கி கலிலேயா கடலின் தண்ணீரில் ஆண்டவரை போல நடந்த ஒரே நபர் பேதுரு மட்டுமே.
பேதுரு தன் சொந்த ஊரானகப்பர் நகூமில் இருந்தபோது, “ஆண்ட வரே, என்னுடைய சகோதரன் என க்கு விரோதமாகப் பாவம் செய்து வந்தால் எத்தனை தடவை நான் அவனை மன்னிக்க வேண்டும்? ஏழு தடவை வரைக்குமா?” என்று இயேசுவிடம் கேட்டார்.  ஏனென் றால், ஒருவரை மூன்றுமுறை மன்னித்தாலேபோது மென அன் றைய மதத்தலைவர்கள் கற்பித் திருந்தார்கள், ஆனால் இயேசு, “ஏழு தடவை அல்ல, எழுபத்தேழு தடவை வரை” மன்னிக்க வேண்டு ம் என்று சொன்னார்.​—(மத். 18:​21, 22.)
கால்களை கழுவுதல்:
 அன்பானவர்களே ஆண்டவர் சீடர்களின் கால்களை கழுவியது ஆண்டவர் எவ்வளவு தாழ்மையா னவர், தான் ஒரு தந்தையின் மைந்தன் என்ற உரிமை சொத்தை தனக்கை எடுத்துக் கொள்ளாமல் இறை பணி ஆற்றுவதற்கு ஒரு ஊழியருக்கு தேவை தாழ்மை, பணிவு, அன்பு என்பதை தன் உன்னத செயல் மூலம் வெளிப் படுத்தியது சீடர்களின் கால்களை கழுவியது.பழங்காலத்தில் கால் கழுவுதல் ஒரு வழக்கம், இதற்கு
 மவுண்டி (Maundy) அல்லது புனிதர்களின் கால்களைக் கழுவுதல் என்றும் பெயர். பழைய பிரெஞ்சு மொழியில் இருந்து mandé, லத்தீன் மொழியில் mandatum என்று பொருள்படும்,  அத்துடன் சில பிரஸ்பைடிரி யன்கள் மற்றும் மெதடிஸ்டுகள் உட்பட புனித வாரத்தின் புனித வியாழக்கிழமையன்று  Maundy Thursday கால் கழுவுதலை நம் திருவிருந்திற்கு முன்பாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை ஆண்டவர் மேற்கொண்ட பொழுது பேதுரு அவர்கள், ஆண்டவரே! நீர் என் கால்களை கழுவுவதா?  என தடுத்தார். பேதுரு அவரிடம், "நீர் என் காலடிகளைக் கழுவ விடவே மாட்டேன்" என்றார். இயேசு அவரைப் பார்த்து, "நான் உன் காலடிகளைக் கழுவாவிட் டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார். அப்போது சீமோன் பேதுரு, "அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும் கூடக் கழுவும்" என்றார். 
 "குளித்துவிட்டவர் தம் காலடிக ளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக் கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்று யூதாஸ்காரியத்தை குறிப்பிட்டார்
 பேதுரு தன் எஜமானரை காப்பா ற்ற கத்தியை எடுத்து மல்கூஸ் என்ற வேலைக்காரனை காதை வெட்டுகிறார். ஆண்டவர் அதை நிறுத்துகிறார். மீண்டும் அந்த காதை அவனிடத்தில் பொருத்தி அற்புதத்தை செய்கிறார்.
 உள்ளத்தை உடைக்கும் மூன்று முறை,:
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவருடைய சீடனாகிய பேதுருவிடும், மூன்று முறை அடங் கிய மூன்று நிகழ்வுகளை நாம் சிந்திக்கின்ற போது இவைகள் நம் உள்ளத்தை உடைக்கின்றன.
1.ஆண்டவர் கெர்ச்சமென தோட்ட த்தில்,, "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் "என்று கூறி இறைவனிடம் வேண்டினார். 
(மத்தேயு நற்செய்தி 26:39)  பேதுருவும் யோவானும் யாக்கோ பும் ஜெப நேரத்தில் உடன் இருந் தனர். அவர்கள் ஆண்டவர் ஜெபிக்கும் போது  உறங்கிக் கொண்டிருந்தனர். மூன்று முறையும் ஆண்டவர் வந்து பார்க்கின்ற பொழுது இவர்கள் தூங்கிக் கொண்டே இருந்தார்கள் ஆண்டவர் அவர்களை பார்த்து ஒரு மணி நேரமாவது எனக்காக விழித்திருக்கக் கூடாதா என்று கேட்டார்.
2. கடைசி திருவிருந்து இரவில் சீமான் பேதுருவை ஆண்டவர் எச்சரிக்கிறார் "சீமோனே, சீமோ னே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். அதற்கு பேதுரு, "ஆண்டவரே, உம்மோடுசிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமா ய் உள்ளேன்" என்றார். 
இயேசு அவரிடம், "பேதுருவே, இன்றிரவு, 'என்னைத் தெரியாது' என மும்முறை நீ மறுதலிக்கு முன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 22:32-34)
 இயேசு தலைமை குருவின் வீட்டில் விசாரணை சங்கத்தில் ஒப்படைக்கப்பட்ட பிறகு பேதுரு வெளியே குளிர் காய்ந்து கொண் டிருந்தார். அப்போது பணிப்பெண் மற்றும் இரண்டு நபர்கள் நீர் அவரோடு கூட இருந்தீர் என்று கேட்டதற்கு மூன்று பேரிடமும் மூன்று முறை அவர் எனக்கு தெரியாது, தெரியவே தெரியாது என்று கூறினார். உடனே சேவல் கூவியது: ஆண்டவருடைய கண்கள் பேதுருவை நோக்கி பார்த்தன அந்த கலங்கிய கண் களை பார்க்க முடியாத பேதுரு மனம் கசந்து அழுதார், உள்ளம் வலிக்க அழுதார், அந்த வலி அவர் உடலையும் உள்ளத்தையும் பாதித்தது.
 சிலுவை பாடுகளின் நேரத்தில் பேதுரு ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறார். கிறிஸ்து சிலுவை யில் வேதனைப்பட்டு பிதாவிடம் மன்றாடுவதைப் பார்க்க அவர் அங்கு இல்லை. கிறிஸ்துவின் உடல் கீழே இறக்கி அடக்கம் செய்யப்பட்டபோது தாய் மரியாள், மகதலேனா மரியாள் மற்றும் பிற பெண்களை ஆறுதல்படுத்தவும் அவர் அங்கு இல்லை. கிறிஸ்து வின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகுதான் நாம் அவரை மீண்டும் பார்க்கிறோம்.
3. உயிர்த்த கிறிஸ்துவை சீடர்கள் பேதுரு தலைமையில் திபேரியா கடலில் (கலிலேயகடல்) மீன் பிடி
க்கும்போது, முதன் முதலில் பேது ருவை ஊழியத்திற்கு அழைக்கும் போது என்ன நடந்ததோ அதே அற்புதத்தை ஆண்டவர் செய்தார் வலது பக்கமாக வலையை விரித் து அதிக மீன்களை பிடித்தார்கள் அதன் மூலம் அவர்ள் எழுவரும் ஆண்டவர் இயேசு என்பதை தெரிந்து கொண்டனர் அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானி ன் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிக ளைப் பேணி வளர்" என்றார். மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார். "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். இயேசு அவரிடம், ""என் ஆடுகளைப் பேணிவளர். பேதுருவின் உள்ளம் உடைந்தது. ஆண்டவர் பேதுரு எவ்வாறு மரிக்கப் போகிறார் என்பதை முன் குறித்தார்.
"நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொ ருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் " 
கிபி 68ல், ரோம் நகரில் நீரோ மன்னனால் பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு ஆண்டவருக்காக மரித்தார்.
கர்த்தருடைய ஜனங்கள் கிறிஸ்து இயேசுவிலிருந்த தாழ்மையின் சிந்தையைக் கற்று அதன்படி வாழ நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
யூதாஸ் காரியத்: Judas Iscariot.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! யூதாசு இஸ்காரியோத்து (Judas Iscariot) என்பவர் இயேசுவி ன் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். சீடர்களிலே கல்வி அறிவு பெற்ற ஒரே சீடர் யுதாஸ் காரியத் இதனால்தான் அவருக்கு பொரு ளாளர் பதவி கொடுக்கப்பட்டது.
யூதா என்கிற எபிரேய பெயரின் கிரேக்க வடிவம் தான் யூதாஸ்.
இவன் யூதா கோத்திரத்தைச் சார்ந்தவன். ஊர் பெயர். காரி
யோத், தந்தை சைமன் காரியத்
 இவர் மட்டுமே யூதேயாவை சேர்ந்தவர் மற்றும் சீடர்கள் கலிலேயாவை சேர்ந்தவர்கள் 
ஒரு காலத்தில் இயேசுவின் மிகவும் நம்பகமான சீடர்களில் ஒருவரான யூதாஸ், துரோகம் மற்றும் கோழைத்தனத்திற்கு முன்னோடியாக மாறினார்.
யூதாஸ் அடிப்ப‌டையில் ஒரு போராளி. யூத‌ர்க‌ள் ரோம‌ர்க‌ளின் ஆட்சியின் கீழ் இருப்பதை அவன் விரும்பவில்லை. இயேசுவை யூதர்களின் அரசராக்க விரும்பி னான். இயேசுவோ,என‌து அர‌சு இவ்வுல‌கைச் சார்ந்த‌த‌ல்ல‌” என‌ தெளிவாய்ச் சொன்னார்.
 இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி யைப் பரப்புவதற்காக அவர் மற்ற சீடராகளுடன் வெளியே சென் றார்: “அப்படியே அவர்கள் புறப் பட்டு, மக்கள் மனந்திரும்ப வேண் டும் என்று அறிவித்தார்கள். அவர்கள் அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகர் வியாதிப்பட்டவர் களுக்கு எண்ணெய் பூசி, அவர் களைச் சுகப்படுத்தினார்கள்” ( மாற்கு 6:12-13 ). இந்தப் பணியில் யூதாஸ் தோல்வியடைந்ததாக எந்தக் குறிப்பும் கூறவில்லை.
இயேசு சிலுவையில் அடிக்கப்ப ட்டு மரிப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்பு,பெத்தானியா
சென்றார். ஆண்டவர் லாசருவை உயிர்த்தெழுந்த செய்த இடம். அவரும் பந்தியில் இருந்தார்.   மார்த்தாளின் சகோதரியாகிய மரியாள் விலையேறப்பெற்ற நளதம் என்ற பரிமளதைலத்தை, வெள்ளைக்கல் பரணியில் கொண்டுவந்து, அதை உடைத்து ஆண்டவருடைய சிரசின் மேல் ஊற்றினாள். மற்றும், இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். அந்த வீடு பரிமள தைலத்தின் வாசனையா ல் நிறைந்தது.  யூதாஸ் பரிமளதை லத்தை முந்நூறு பணத்திற்கு விற்று தரித்திரருக்குக் கொடுக் கலாமே என்றான்.சீட‌ர்க‌ளிலேயே நிர்வாக‌த் திற‌மையுடைய‌ யூதாஸ் பொருளாள‌ராய் இருந்தார். கிறித் த‌வ‌ப் ப‌த‌விக‌ள் மீட்பைத் த‌ராது. அது அவரைக் காப்பாற்றவில் லை. எச்ச‌ரிக்கைகளை உதாசீ ன‌ப்ப‌டுத்தினால் மீட்பு வ‌ராது. “உங்களுள் ஒருவன் அலகை யாய் இருக்கிறான்” என்றும் “அவரைக் காட்டிக் கொடுக்கிற வனுக்குக் கேடு” என்றும் இயேசு எச்சரித்திருந்தார். யூதாசு செவி சாய்க்கவில்லை.இயேசு தன் சீடர்களோடு இறுதி இரவுஉணவு உண்டு கொண்டிருக்கையில் தன் சீடரிடம், “உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.அதிர்ச்சியடைந்த அனைவரும் அவரிடம், ‘போதகரே அது நானா?, அது நானா?’ என வினவத்தொடங்கினர். யூதாசும் தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ள “அது நானா?” என கேட்க, “நீயே சொல்லிவிட்டாய் என இயேசு மறுமொழி கூறினார்” என மத்தேயு நற்செய்தி கூறுகிறது. ப‌ண‌ ஆசை ஒருவ‌னை அழிவுக்கு இட்டுச் செல்லும். யூதாஸ் முப்ப‌து வெள்ளிக்காசுக்கு ஆசைப்ப‌ட் டான். 
இரவு நேரம் கெர்ச்சேமனைத் தோட்டத்தில் ஆண்டவர் ஜெபத் தில் இருந்தார்.அங்கு, யூத மத தலைவர்களின் ஆட்கள், ஆலய காவலாளிகள், ரோம போர் வீரர்கள், யூதாஸ் சென்றனர்.
ர‌பி வாழ்க‌’ என்று சொல்லி இயேசுவை முத்த‌மிட்டான். இயேசு அதிகபட்ச அன்புடன் அவ‌னிட‌ம், “தோழா எத‌ற்காக‌ வ‌ந்தாய்” என்றார். இயேசு தோழா என்று த‌னிப்ப‌ட்ட‌ முறையில் அழைத்த‌ ஒரே சீட‌ர் யூதாசு தான் !
 தீர்க்கதரிசனம் நிறைவேற 
"என் உற்ற நண்பன்;, நான் பெரி தும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண்டகமா கத் தம் குதிகாலைத் தூக்குகின் றான்.( திருப்பாடல்கள் (சங்கீதங் கள்) 41:9) இதை திருப்பாடல்கள் நினைவூட்டுகிறது.
முத்தம் காட்டிக் கொடுப்பதற் கா? Is kissing for betrayal?
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! முத்தம் அன்பின் அடையாள ம், நம்பிக்கையின் பரிசு. தூய்மை யானது. திருவிவிலியத்தில் முற்பிதாக்கள் முத்தம் கொடுப்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர் 
 யாக்கோபு தன் தந்தையாகிய ஈசாவுக்கு முத்தம் கொடுத்தார் 
(தொ. நூ.27:27) பின்பு யாக்கோபு ராகேலுக்கு முத்தமிட்டார். தன் மாமனாகிய லாபான் யாக்கோ புக்கு முத்தமிட்டார்.(Genesis 29:13)
 ஏசா தன் சகோதரனாகிய யாக்கோபுக்கு முத்தமிட்டார் (33:4),
 யோசேப் எகிப்தில் தன் சகோத ரர்களை பார்த்து, கட்டி அணைத்து முத்தமிட்டு அன்புடன் ஏற்றுக் கொண்டார் (45:15) இப்படி தூய்மைக்கும், அன்பிற்கும், மதிப்புக்கும் அடையாளமான முத்தத்தை காட்டிக் கொடுக்கும் சின்னமாக சிறுமைப்படுத்தி னான் யூதாஸ்.
 அன்பானவர்களே! உண்மையில் யூதாஸ் என்ன நினைத்தான் என்றால் : இயேசுவை இத‌ற்கு முன்பும் சில‌ முறை பிடிக்க‌வும், க‌ல்லால் எறிந்து கொல்ல‌வும் எதிரிகள் முய‌ன்ற‌ போது அவ‌ர் த‌ப்பிச் சென்றிருக்கிறார். அதே போல இப்போதும் தப்புவார் என நினைத்தான்.ஆனால் இந்த‌ முறை இயேசு த‌ப்ப‌வில்லை. ம‌னுக்குல‌த்தின் பாவ‌ங்க‌ளுக் காய் தன்னை பலியாக்கும் நேர‌ம் வ‌ந்த‌து. என‌வே அமைதியாய் த‌ன்னை அவ‌ர் அர்ப்ப‌ணித்தார்.
யூதாசு இந்தத் திருப்ப‌த்தை எதிர்பார்க்க‌வில்லை.தலைமை குருக்க‌ளிட‌ம் ஓடிப் போய் தான்
வாங்கிய‌ முப்ப‌து வெள்ளிக்காசை திரும்பக் கொடுத்து இயேசுவை மீட்க‌ முய‌ல்கிறான். ந‌ட‌க்க‌வில் லை. குற்ற‌ உண‌ர்வு குத்தியது. ம‌ன்னிப்பு வேண்டி இயேசுவிட‌ம் ஓடாம‌ல் த‌ற்கொலை செய்து அழிந்து போனான்.அழியாத‌ விண்ண‌க‌ வாழ்வை இழ‌ந்தான்.
யூதாஸ் நிதி ஆதாயத்திற்காக மதத் தலைவர்களிடம் ரபியை ஒப்படைத்தார்; பேதுரு அவர் ஆண்டவர் என்று அழைத்த மனிதனுடனான தனது தொடர் பை மறுத்தார். இந்த இருவருக் கும் இடையிலான வித்தியாசத் தை ஏற்படுத்தியது என்னவென் றால், ஒருவர் இயேசு கிறிஸ்து வை தனது இரட்சகராகக் கண் டார், மற்றவர் தனது இரட்சகர் யார் என்பதைக் காணத் தவறிவிட்டார், மேலும் விசுவாசமோ, நம்பிக்கை யோ அல்லது மீட்பின் வாய்ப்பும் இல்லாமல் இறந்தார். இருவரும் தங்கள் இறைவனைக் காட்டிக் கொடுத்தார்கள், ஆனால் ஒருவர் மட்டுமே மனந்திரும்பினார். இது வாழ்வின் பாடம், அன்பர்களே! எல்லா சூழ்நிலையிலும் நாம் ஆண்டவரை நோக்கி செல்வோம். உயர்விலும் தாழ்விலும் என்னி லையிலும்  இந்த   லெந்து காலத் தில் நம்முடைய பயணம் சிலுவை யை நோக்கியே இருக்கட்டும். அது மீட்பைத் தரும், அமைதியைத் தரும், அன்பை தரும் சந்தோசத் தை தரும், அவற்றில் நாம் உறுதி யாய் இருக்க ஆண்டவர் நமக்கு அருள் புரிவாராக ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
























  
ஜியோட்டோ டி பாண்டோனின் (1304 மற்றும் 1306 க்கு இடையில்) யூதாஸின் முத்தம் கெத்செமனே தோட்டத்தில் யூதாஸின் அடையாளம் காணும் முத்தத்தை சித்தரிக்கிறது.







Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.