ஒடுக்கும் அமைப்புகளை மீட்டுருவாக்குதல் (194) Transform ing the oppressive structures. நாகூம் 1:1-15. திருப் பாடல் 113. திருத் தூதர் பணிகள் 4:32-37.லூக்கா 13:10-17.The fourth Sunday in the Lent.

முன்னுரை:
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இயேசு கிறிஸ்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் ஞாயிற்று தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது "ஒடுக்கும் அமைப் புகளை மீட்டுருவாக்குதல்"
என்பதாகும். முதலாவதாக ஒடுக்கும் அமைப்புகள் என்றால் என்ன? ஒடுக்கும் அமைப்புகள் என்பது,  "மக்களை சுரண்டுதல், ஓரங்கட்டுதல், அவமதித்தல் அல்லது ஒடுக்குமுறைக்கு அனும திக்கும் எந்தவொரு பொருளா தார, அரசியல் அல்லது சமூக/கலாச்சார அமைப்பை குறிக்கும்."
 நம் திரு விவிலியம் கூறுவது,
" கடவுளுக்கு முன்பாக அனை வரும் சமம் என்பதைக் காட்டுகி ன்றன; ஏழைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ப தை இது குறிக்கிறது: 'பணக்கார ர்களுக்கும் ஏழைகளுக்கும் இது பொதுவானது: கர்த்தர் அவர்கள் அனைவரையும் படைத்தவர்' (நீதிமொழிகள் 22:2, ) மற்றும்
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலே யே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்க ளைப் படைத்தார். (தொடக்கநூல் 1:27) இது ஏற்ற தாழ்வுகள் இல்லாத படைப்பாகும்.அவ்வாறே  'பத்து கட்டளைகளின் கடைசி ஆறு கட்டளைகள், சமூக அநீதியைத் தடுக்க கடவுள் நல்ல தார்மீக சட்டங்களை வழங்குகிறார் 
 1.ஒடுக்கும் அமைப்புக்கு திருச்சபையின் பங்கு என்ன?
What is the role of the Churches on the oppressed?
 கிறித்துவுக்கு பிரியமானவர்களே நம் திருச்சபைகள் காலம் கால மாக இத்தகைய ஒடுக்குமுறை மக்களோடு இணைந்து தன் சேவையை செய்து கொண்டு தான் வருகிறது.உலகில் அதிகரி த்து வரும் வறுமை, வன்முறை மற்றும் அநீதிகளைக் கருத்தில் கொண்டு, கிறிஸ்தவ திருச்சபை, மாற்றத்திற்கான ஒரு முகவராக இருக்கும் பணியைத் தழுவி, அதில் ஈடுபடவும், தொடரவும் அழைக்கப்பட்டுள்ளது. கொரான  (Cirona)போன்ற பெருந்தொற்று காலத்தில் திருச்சபைகள் ஆற்றி ய பங்கு மிகவும் மகத்தானது. நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத் துடன் வாழ உலகை அனைவரும் சிறந்த இட மாக மாற்றுவதற்கான நற்செய்தி கட்டாயத்தை அது நிறைவேற்ற தொடர்ந்து பயணிக்க வேண்டும். கிறிஸ்தவ திருச்சபை, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று, ​​சமூக மாற்றத்தில் ஈடுபட்டு ள்ளது. இதற்கு முன்னோடியாக  அருட்பணியாளர்கள், (Missionary Movements) நற்செய்தியுடன் கல்வி நிறுவனங்கள், மருத் துவமனை கள், சமூக சேவைகளை ஆரம்ப காலகட்டத்தில் செய்து கொண்டு வந்தனர். சமூக மாற்றமே சமய மாற்றத்தின் துவக்கமாகும். அவ் வப்போது திருச்சபைகள் தனது கவனத்தை இழந்த போதிலும், திருச்சபை வரலாறு முழுவதும், அது பெரும்பாலும் அதன் நற் செய்தி பொறுப்பை கடைப்பிடிக்க முடிந்தது.  கடவுளின் அரசை அறி வித்து, அனைத்து நாடுகளையும் சீடர்களாக்குவதற்கான கட்டாய த்தை நிறைவேற்றுவதே திருச் சபையின் பணியாக மாறின. ஆண்டவரின் நற்செய்தி" ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற் றோர் பார்வைபெறுவர் என முழக் கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்  
"ஆண்டவர் அருள்தரும் ஆண்டி னை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். " (லூக்கா நற்செய்தி 4:18,19) என
ஆண்டவர் ஒடுக்கும் மக்களின் விடுதலையை செயலாற்ற, தான் வந்ததை பிரகடனப்படுத்தினார்.
 இந்த சிந்தனையே நமக்கு இருக்க வேண்டும் 
"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந் தையே உங்களிலும் இருக்கக் கடவது; அவர் தேவனுடைய ரூப மாயிருந்தும், தேவனுக்குச் சமமா யிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மை த்தாமே வெறுமையாக்கி, அடிமை யின் ரூபமெடுத்து, மனுஷர் சாய லானார். மனுசரூபமாய்க் காணப் பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலி 2:5-8,) எனவே ஆண்டவரின் சிந்தனையை நாம் அணிந்து கொள்வோம்.
2.நினிவேயின் மீது ஆண்டவ ரின் தீர்ப்பு: The judgement on Nineveh. நாகூம் 1:1-15.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!இறைவாக்கினர் நாகூம்  அல்கோஷ் நகரத்திலிருந்து வந்தார் ( நாகூம் 1:1), இதை அறிஞர்கள் வடக்கு ஈராக்கில் உள்ள நவீன அல்கோஷ் மற்றும் வடக்கு கலிலேயாவின் கப்பர் நகூம் உட்பட பல நகரங்களுடன் அடையாளம் காண முயற்சித்துள் ளனர் .இவர், எல்கோஷியர்களி டையே அமைதியுடன் வாழ்ந்தார். "எல்கோஷியர்" என்று அழைக் கப்படும் நாகூம், ஒரு சிறிய இறைவாக்கினார். இந்நூல் கி.மு. 663 - 612 ஆண்டளவில் எழுதியது எனலாம். இந்நூலில் கவிதை நயம் சிறப்பாய் உள்ளது.அசீரியப் பேரரசின் தலைநகரான நினிவே யின் தலைவிதி மற்றும் அழிவு குறித்து எழுதியது ஆகும், இது இஸ்ரேலை அழித்து, பல நில மக் களை சிறைபிடித்தது (கிமு 722).
இறைவாக்கினர் நாகூமுக்கும், இறைவாக்கினர் யோனாவுக்கும் சில நெருங்கிய தொடர்புகள் உண்டு.நாகூம்,  இப்பெயரின் பொருள் "ஆறுதலளிப்பவர்" என்பதாகும்யோனாவின் புத்தகம் நினிவேயின் அழிவைப் பதிவு செய்தாலும், நாகூம் அதன் அழிவை முன்னறிவிக்கிறது. சுமார் 150 ஆண்டுகள் இடைவெளி யோனாவின் செய்தி இரக்கத்தின் செய்தி; நாகூமின் செய்தி , அழிவி ன் செய்தியாகும்.  அசீரியா பேர ரசு இஸ்ரேல் மற்றும் யூதாவின் பரம எதிரியாக இருந்தது. சிலை வழிபாடு மற்றும் பிற தீய பழக்க வழக்கங்களுக்குத் திரும்பிய இஸ்ரேல் மக்களைத் தண்டிக்க கடவுளால் இது பயன்படுத்தப்ப ட்டது.நினிவே மக்கள் பாவிகளாக இருந்ததால் எச்சரிக்கைக் குரலா க யோனா சென்றார். அப்போது மக்கள் மனம் திரும்பினார்கள். எனவே இறைவன் அந்த நாட்டை அழிக்காமல் மன்னித்து விட் டார்.இரு இறைவாக்கினரும் வட நாடான இஸ்ரேலில் உள்ளவர்கள். இருவருமே இறைவனால் அழைக் கப்பட்டவர்கள். இருவருமே நினி வே நகரத்துக்குச் செல்ல அனுப் பப்ப ட்டவர்கள். அன்பர்களே! யோனாவுக்குப் பின் நூறு ஆண்டு கள் கடந்தபின் நாகூம் அங்கே இறை வாக்குரைத்தார். அதற்கும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நினிவே நகர் அழிந்தது. அதாவது, யோனா இறைவா க்குரைத்தபின் 150 ஆண்டுக்குப் பின் அழித்தார் .கடவுள் மாபெரும் நீதிபதி, இவ்வு லகின் சர்வ வல்லமையுள்ள ஆட்சியாளர். ஒருபுறம் அவர் கலகக்காரர்களிடம் பொறு மையாக இருக்கிறார், மறுபுறம் அவர் நீதிக்காக வைராக்கியமாக இருக்கிறார். குற்றவாளிகளுக்கு அவர் அளிக்கும் தண்டனை கடுமையானது, ஆனால் அது நீதி யானதும் கூட (1:1-3). புயல்கள், காற்று, வறட்சி மற்றும் பூகம்பங் கள் மூலம் முழுமையான அழிவை க் கொண்டுவரும் தீர்ப்புகளை அவர் அனுப்புகிறார். பாவிகள் மீது அவரது கோபம் ஊற்றப்படும் போது, ​​யாரும் தப்பிக்க முடியாது (3-6).மிகவும் வலிமையானவராக இருப்பதால், கடவுள் தன்னை நம் புபவர்களைப் பாதுகாக்க முடியும், மேலும் அவருக்கு எதிராகப் போராடுபவர்களை அழிக்கவும் முடியும் (7-8). நாகூம் அனைத்து எதிரிகளையும் கடவுளுக்கு எதிராக சதி செய்வது பயனற்றது என்று எச்சரிக்கிறார், ஏனெனில் அவர் அவர்களை ஒரே அடியால் அழிக்க முடியும். அவர் இரண்டு முறை அடிக்க வேண்டிய அவசிய மில்லை (9-11).
கடவுளின் மக்களை நோக்கித் திரும்பும் நாகூம், கடவுள் அவர்க ளை மேலும் தண்டிக்க மாட்டார் என்று உறுதியளிக்கிறார். அவர் எதிரியின் சக்தியிலிருந்து விடுவி ப்பார் (12-13). நாகூம் அசீரியர்களி டம் அவர்களின் தெய்வங்கள் அழிக்கப்படும் என்று கூறுகிறார் (14), ஆனால் யூதர்களிடம் அவர் களின் கடவுள் வெற்றி பெறுவார் என்று கூறுகிறார். விரைவில் ஒரு தூதர் அசீரியாவின் வீழ்ச்சியைப் பற்றிய செய்தியை அவர்களுக் குக் கொண்டு வருவார், அதன் பிறகு அவர்கள் கடவுளை நன்றி யுடனும், உண்மையுடனும், மகிழ்ச் சியுடனும் வணங்க வேண்டும் (15).நாகூம் இறைவாக்குரைத்ததுட தான், நினிவேயின் கடைசி சாவு மணி. நினிவேவுக்குக் கடவுள் கொடுத்திருந்த மன்னிப்பின் காலம் முடிந்துவிட்டிருந்தது. கடவுளின் கோபம் அவர்களை
கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதி யில் நினிவே அழிவுற்றது.
 இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது :
1.இது லெந்து காலம்,  கடவுள் நம் பாவங்களுக்காக சிலுவைப் பாடுகளை சுமந்தார். 
  2. கடவுள் நினைவே மக்களை தன் பாவங்களுக்காக எச்சரித்தார் யோனாவின் காலத்தில் உடனே மனம் திரும்பினார்.
3. இறைவாக்கினர் நாகூம், நினிவே மக்களை எச்சரித்தும் மனம் திருந்தாத நினிவே மக்களை கடவுள் அழிக்கின்றார்.. 4 கடவுளிடம் திரும்பி வரும் மக்களுக்கு தண்டனை இல்லை
5. கடவுள் மக்களின் பாவங்களுக் காக மிகவும் பொறுமையாக இருக்கிறார் ஆனால் அவர் நீதி எப்போதும் உண்டு.
6. ஒவ்வொருவரும் மனம் திரும்ப கடவுள் காலத்தைக் குறிக்கிறார்.
7. மனம் திருந்தாத மக்களுக்கு இயற்கை மூலமாகவும் அழிவை தருகிறார்.
 எனவே அன்பர்களே நாம் மனம் திருந்தி நம்முடைய பாவங்களை விட்டு சிலுவை நோக்கி பயணிப் போம்.
3.கிறித்துவம் பொது உடைமை
சித்தாந்தின் முன்னோடி. Christianity is a pioneer to Commu nism. திருத்தூதர்பணிகள். 4:32-37. கிறிஸ்துவுக்குள் பிரியமான வர்களே! திருத்தூதர் பணிகளில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய சொந்த சொத்துக்களை விற்று அதை திருச்சபைக்கு கொண்டு வந்தனர். இதை அனைத்து விசு வாசிகளுக்கும் சொந்தமானது என்பதை அறிவித்தார்கள் இது ஒரு பொதுவுடமை சித்தாந்தம். சைப்ரஸைச் சேர்ந்த லேவியரான யோசேப்பு, திருதூதுவர்களில்  ஒருவர்.  இவர் ஆறுதலின் மகன் என்கிற பர்னபா என்பவருக்கு ஒரு நிலம் இருந்தது. அவர் அதை விற்று, அதன் விலையைக் கொண்டு வந்து, திருத்தூதுவர்க ளின் காலடியில் வைத்தார்.
இது சகோதரத்துவத்தின் மீதான அன்பு.அனைவரும் உதவ வேண் டும் என்பதை அவர்கள் ஒருபோது ம் மறக்கவில்லை. இது அவர்களி டம் இருந்த அனைத்தையும் பகிர் ந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தை அவர்களிடம் எழுப்பியது.இந்தப் பகிர்வு சட்டத்தின் விளைவாக இல்லை; அது முற்றிலும் தன்னிச் சையானது.அவர்களுக்குச் சொந் தமான அனைத்தும் பொதுவான தாக இருக்கும்" (4:32) என்ற விரிவான பகிர்வு -கிறிஸ்தவ கம்யூனிசத்துடன்" ஒப்பிடுகிறார் கள், "இது நம்பத்தகாதது மட்டுமல் ல, இது ஆபத்தானது.பர்னபாவின் தாராள மனப்பான்மையின் (4:36-37) மாறுபட்ட செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளும் அனனியா மற்றும் சப்பிராவின் வஞ்சகமும்
நடந்துள்ளன.பர்னபாவின் செயல் கள் கடவுளின் ஆவியால் ஈர்க்கப்ப ட்டவற்றுடன் ஒத்துப்போகின்றன (cf. 4:31-35, 36-37), அனனியா மற்றும் சப்பிராவின் செயல்கள் சாத்தானின் செயல்கள்.இதுசமூக ஒற்றுமை மற்றும் பகிர்வு பற்றிய லூக்காவின் சித்தரிப்பு,
அவை ஆரம்பகால சமூகத்தின் அனுபவம், தன்மை மற்றும் நோக் கங்களின் அம்சங்களைக் குறிப்பி டுகின்றன.கிறிஸ்துவைப் பின் பற்றும் சமூகம் பகிர்ந்து கொள் வதன் இலட்சியத்தை  தெளிவாக
எடுத்து காட்டுகிறது.ஆரம்பகால கிறித்துவ சமூகம் பெந்தெகொ ஸ்தே நாளுக்கு பிறகு, அவர்களி ன் வழிபாடு, போதனை, கூட்டுறவு மற்றும் பகிர்வுக்கு தன்னை அர்ப் பணிக்கிறது. திருதூதர் பணிகள்
4:4 ன்படி  கிறிஸ்துவைப் பின்பற் றுபவர்களின்   5,000 ஆண்கள் என்று மதிப்பிடுகிறார் (காண். 2:41, 47), ஆனால் லூக்காவின்  எண்ணிக்கை சொல்லாட்சி தாக்கத்திற்கு மிகைப்படுத்தப் பட்டதாக இருக்கலாம்.விசுவாசித்
தவர்கள் எல்லோரும் ஒரே இருத யமும் ஒரே ஆத்துமாவும் உடைய வர்களாயிருந்தார்கள், எவரும் எந்த உடைமைகளையும் சொந் தமாகக் கோரவில்லை, ஆனால் அவர்கள் வைத்திருந்த அனைத் தும் பொதுவானவை... அவர்க ளில் ஒரு தேவையுள்ளவனும் இல்லை, ஏனென்றால் எத்தனை நிலங்களையோ வீடுகளையோ வைத்திருந்தார்களோ அத்தனை பேரும் அவற்றை விற்று, விற்கப் பட்டவற்றின் வருமானத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அதை திரூதூதர்களின் பாதங் களில் வைத்தார்கள், அது அவர வர் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது." (தி. தூ. பணிகள்4:32, 34-35).
பர்னபா தனக்கு சொந்தமான
நிலம் வீடு அனைத்தையும் விற்று
முழு நேர பணியாளராக திருத்தூ
துவர்கள் பணியில் சேர்ந்து திருத்தூதர் பவுல் அடிகளாருடன்
இறைபணியாற்றினார்.
வரலாறு முழுவதும் திருச்சபை பெரும்பாலும் "வறுமையின் அடை யாளமாக இல்லாமல் செல்வத்தி ன் அடையாளமாக இருந்து வருகி றது, மேலும்,சமூகத்தின் தாராள மனப்பான்மையே இயேசுவின் செய்தியை அங்கீகரிக்கும் ஒரு உறுதியான "அடையாளமாக" மாறுகிறது. அன்பானவர்களே தற்கால சூழ்நிலைக்கும், குடும்ப அமைப்புக்கும் இத்தகைய செயல் பாடுகள் பொருத்தமானவை அல்ல. 
  இதன் முக்கிய கருத்துக்கள்:
1. பணக்கார விசுவாசிகள் தங்கள் நிலத்தையும் சொத்துக்களையும் விற்று, பின்னர் திரு தூதுவர்களி டம் பணத்தைக் கொண்டு வந்து
கொடுத்தனர்.
2  இது மிகவும் தேவைப்படுபவர் களுக்குக் கொடுக்கிறார்கள். 
3.எல்லா விசுவாசிகளும் பரிசுத்த ஆவியைப் பெறுகிறார்கள்,
4.திருச்சபை எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையானது. அது ஒன்று பட்டதாக இருந்தது  
5 திரு தூதுவர்கள் தங்கள் பிரசங் கத்தின் உண்மைக்கு சான்றாக அற்புதங்களை செய்தார்கள் 
6  இயேசுவை விசுவாசித்ததன் விளைவாக சில யூத விசுவாசிகள் நிதி நெருக்கடியை அனுபவித்திரு க்கலாம் என்று தெரிகிறது. 
7 சிலர் வேலைகளை இழந்திருக் கலாம் அல்லது குடும்பங்களை விட்டு வெளியேற்றப்பட்டிருக்க லாம். 
8 தேவையின் அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்டது என்பதும் தெளிவாகிறது .
9 விசுவாசிகளின் சபையில் இனி ஏழைகள் அல்லது தேவைப்படு பவர்கள் யாரும் இருக்க மாட்டா ர்கள் .
10. நற்செய்தி நூல்கள் இயேசு வின் ஊழியத்தைப் பற்றியது போல, திருத்தூதர்  புத்தகம் பரிசுத்த ஆவியின் ஊழியத்தைப் பற்றியது. 
11. ஆண்டவரின் வார்த்தைப்படி 
"உங்கள் உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள்; பழமையா காத பணப் பெட்டகங்களையும், பரலோகத்தில் குறையாத பொக்கிஷத்தையும் உங்களுக்குச் சேர்த்துக்கொள்ளுங்கள்; (லூக்கா 12:22-24 )இவ்வழியில், திருத்தூ தர்கள் செயல்பட்டனர்.
12.நிலம் விற்றவர்கள் முழுநேர பணியாளராக மாற்றியது.
4.தனிநபர்களை மீட்டுருவாக்கு தல். Transforming the Individuals 
லூக்கா 13:10-17.
கிறித்துவுக்குள் அன்பானவர் களே!.ஆண்டவர், "இழந்து போன தைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" (லூக்கா  நற் செய்தி 19:10) என்ற வாக்கின்படி
தனி மனித விடுதலையே சமுக விடுதலை என்ற மேலான கண் னோட்டத்துடன், செயல்படுகிறார்.
கிறிஸ்தவத்தில் தனிநபர் எந்ந அமைப்புக்கும் (Structures) முன்னால் வருகிறார். கிறிஸ்தவம் இல்லாமல் ஜனநாயகம் என்ற ஒன்று இருக்க முடியாது.   ஏனென் றால் கிறிஸ்தவம் மட்டுமே சாதா ரண, தனிமனிதனின் மதிப்பை, வாழ்வை உறுதிசெய்து பாது காக்கிறது. கிறிஸ்தவக் கொள் கைகள் அரசியல் மற்றும் பொரு ளாதார வாழ்க்கையிலிருந்து வெளியேற்றப்பட்டால், தனி நபர் நலனுக்காக அல்ல  , மாறாக அமைப்பின் நலனுக்காக மட்டுமே இருக்கும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனிநபர் நலனுக்காக பாடுபட்டவர் என்பதை விளக்கு வதற்காக தான் இந்த பகுதி நமக் கு தியானிக்க கொடுக்கப்பட்டிரு க்கிறது. இங்கு அமைப்பு என்பது யூத மத சட்டத்தை குறிப்பிடப்ப டுகிறது. 
அன்பானவர்களே!
இயேசு ஒரு ஜெப ஆலயத்தில் இருந்ததாக நாம் கேள்விப்படுவது இதுவே கடைசி முறை. இந்த நேரத்தில் யூத மத அதிகாரிகள் அவரது ஒவ்வொரு செயலையும் கண் காணித்து, வாய்ப்பு கிடைக் கும் போதெல்லாம் அவர் மீது தாக்குதல் நடத்த காத்திருந்தனர் என்பது தெளிவாகிறது. பதினெ ட்டு ஆண்டுகளாக வளைந்த உடலை நேராக்க முடியாத ஒரு பெண்ணை  ( a spirit of infirmity) இயேசு குணப்படுத்தினார்; பின்னர் ஜெப ஆலயத் தலைவர் தலையிட்டார். இயேசுவிடம் நேரடி யாகப் பேச அவருக்கு தைரியம் கூட இல்லை. காத்திருந்த மக்களி டம் அவர்கள் தனது எதிர்ப்பை தெரிவித்தார், அது இயேசுவுக்கா கவே என்றாலும். இயேசு ஓய்வு நாளில் குணப்படுத்தினார்; தொழில்நுட்ப ரீதியாக குணப்படு த்துதல் என்பது வேலை; எனவே, அவர் ஓய்வுநாளை மீறினார்.Jesus
broke the  structure of theJews' law. ஆனால் அவர் தனது எதிரிகளுக் கு அவர்களின் சொந்த சட்டத்தி லிருந்து பதிலளித்தார். ஊமை விலங்குகளை கொடுமைப்படு த்துவதை ரபீக்கள் வெறுத்தனர், ஓய்வுநாளில் கூட, அவற்றின் தொழுவங்களிலிருந்து மிருகங் களை அவிழ்த்து அவற்றுக்குத் தண்ணீர் கொடுப்பது முற்றிலும் சட்டபூர்வமானது. இயேசு, "நீங்கள் ஒரு தொழுவத்திலிருந்து ஒரு மிருகத்தை அவிழ்த்து ஓய்வுநாளி ல் அதற்கு தண்ணீர் கொடுக்க முடிந்தால், இந்த ஏழைப் பெண் ணை அவளுடைய நோயிலிருந்து விடுவிப்பது கடவுளின் பார்வை யில் நிச்சயமாக சரியானது "இல்லையா என்று கேட்டார்.
மிக சரியானதே.
(i) ஜெப ஆலயத் தலைவரும் அவரைப் போன்றவர்களும் மக்களை விட அமைப்புகளை நேசித்தவர்கள்.
2.ஒரு பெண்ணுக்கு உதவப்படு வதை விட, தங்கள் சொந்த சிறிய சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் அதிக அக்கறை கொண்டிருந் தனர்.
3.ஒரு வளர்ந்த நாகரிகத்தின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று, தனிமனிதனுக்கும் அமைப்புக்கும் உள்ள உறவு.
4   சட்டமா? மனித உறவா? மனித
நேயமா? என்ற விவாதத்தில் மனித உறவே, மனித நையமே மேலானது என நிரூபித்தார் 
5 ஓய்வு நாள் மனிதனுக்காக படைக்கப்பட்டது மனிதன் ஓய்வு நாளுக்காக படைக்கப்படவில்லை
6 இத்தகைய சட்ட அமைப்புகள்
திருச்சபையை ஆக்கிரமிக்கிறது.
7 மனிதர்களின் சேவையையும் விட திருச்சபை அரசாங்கத்தின் முறையிலேயே அதிக அக்கறை கொண்ட பல திருச்சபை மக்கள் உள்ளனர் -
8.உலகத்திலும், சபையிலும், நாம் கடவுளை விடவும், மனிதர்களை விடவும் அதிகமாக அமைப்புகளை நேசிப்பதால் தொடர்ந்து ஆபத் தில் இருக்கிறோம்
9.உயிருக்கு ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு ஓய்வுநாளில் உதவு வது முற்றிலும் சட்டபூர்வமானது என்பது யூத சட்டம்.
10.இந்த பெண்ணின் குணப்ப டுத்துதலை இயேசு நாளை வரை ஒத்திவைத்திருந்தால், யாரும் அவரை விமர்சித்திருக்க முடியா து; ஆனால் இன்று உதவ முடிந்தா ல், துன்பம் நாளை வரை தொடர அனுமதிக்கப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
11."விரைவாகக் கொடுப்பவர் இரு மடங்கு கொடுக்கிறார்", என்ற லத்தீன் பழமொழி சொல்வது போல். இன்று நாம் செய்யக்கூடிய எந்த உதவிகரமான செயலையும் நாளை வரை ஒத்திவைக்கக் கூடாது.
அன்பர்களே! எங்கெங்கெல்லாம் அடக்கு முறைகளும், ஒடுக்கு முறைகளும் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆண்டவர் சார்பாக நாம் விடுதலைக்காக செயல்பட வேண்டும் என்பதே நம் கடமை
யாகும். ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com.

Note: The message has been prepared
to deliver on 30th March, 2025 at
CSI St. Peter's Church, Chengalpet.


the miracles of Jesus in the Gospels (Luke 13:10-17).[1]

the miracles of Jesus in the Gospels (Luke 13:10-17).[1]

Christ healing an infirm woman by James Tissot, 1886–1896.
Christ healing an infirm woman by James Tissot, 1886–1896.


Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.