ஏரோதுவும், பிலாத்துவும் (195) 𝗛𝗲𝗿𝗼𝗱 and 𝗣𝗶𝗹𝗮𝘁𝗲.லூக்கா: 23:12-24. லெந்து கால ஐந்தாம் வெள்ளிக் கிழமை.

முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து வின் இனிய நாமத்தில் வாழ்த்துக் கள். ஐந்தாம் வெள்ளியின் தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது ஏரோதும், பிலாத்தும்.
1  அதோ அந்த நரி: 𝗧𝗵𝗲𝗿𝗲'𝘀 That Fox: லூக்கா: 13:32.
கிறித்துவுக்கு அன்பானவர்களே!
ஏரோது அந்திப்பா கிமு 21 இல் பிறந்தார் - கிபி 43 க்குப் பிறகு இறந்தார்.(Actually he and his wife Jerorodis were banished by Gaius Caesar (Caligula). ஏரோது அந்திப் பாவின் தந்தைதான்மகாஏரோது. இயேசு பிறந்த போது வானவியல் அறிஞ்சர்கள் ஏசு கிறிஸ்து குழந் தையைப் பற்றி  சொன்னப் பிறகு இரண்டு வயதிற்குட்பட்ட அப்பாவி குழந்தைகளைக் கொன்றவரு மான மகா ஏரோதுவைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆனால் இது அவரது மகன் ஏரோது அந்திபாஸ். கலிலேயா வை காற்பங்கு அதிபராக ஆட்சி செய்துவருகிறான் . இவனின் ஒன்று விட்டசகோதரன்  ஏரோது
பிலிப்பின் (Herod1) மனைவிதான் ஏரோதியால். இவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் பெயர்   சலோமி. இவள், ஏரோது பிலிப் பை விவாகரத்து செய்து ஏரோது அந்திப்பாஸை திருமணம் செய்து கொண்டாள்.குடிமக்களில் ஒரு வரான திருமுழுக்கு யோவான்  , மோசேயின் நியாயப்பிரமாணத் தை மீறியதாகக் கண்டிக்கப்ப ட்டார் .இந்தத் திருமணத்திற்காக ஏரோதைக் கண்டித்தபோது , ​​ஏரோ தியாள் தன் கணவன் மூலம்சிறை யில் அடைக்கத் தூண்டினாள். மாற்குவின் நற்செய்தியில் (6:19-20) பதிவு செய்யப்பட்டுள்ளபடி, ஏரோதியாஸ், யோவானைக் கொன்றிருப்பார், ஆனால் ஏரோது அந்த மனிதனுக்கு பயந்ததால் முடியவில்லை. ஏரோதின் பிறந்த நாள் கொண்டாட்டம் யோவானின் கண்டனத்திற்குப் பழிவாங்க ஒரு வாய்ப்பைவழங்கியது.ஏரோதியாவின் முதல் கணவரின் மகள் சலோமி , ஒரு நடனத்தை நிகழ் த்தினார், அது ஏரோதை மிகவும் மகிழ்வித்தது, அவள் வெளிப்படுத் திய எந்த விருப்பத்தையும் நிறை வேற்ற அவர் முன்வந்தார். அவளு டைய தாயின் தூண்டுதலால், சலோமி யோவானின் தலையை ஒரு தட்டில் கேட்டாள், தயக்கம் காட்டிய ஏரோது பந்தியில் அமர் ந்திருந்தவர்கள் நிமித்தமாக நிறைவேற்ற வேண்டிய கட்டாய செயல். ஹெரோட் அந்திபாஸ் ஒரு அநீதியான மனிதர் மற்றும் ஒரு தகுதியற்ற ஆட்சியாளர் என்பதை உணர்ந்திருப்பார்கள். எந்த ஒரு பக்தியுள்ள யூதரும் தனது மகளை அந்நியர்கள் முன்னிலையில் நட னமாட அனுமதித்திருக்கமாட்டா ர்கள்.
அன்பர்களே! ஏரோது அந்திப்பா ஸை குறித்து பரிசேயர்கள் ஆண்ட வராகிய இயேசு கிறிஸ்துவிடம் "ஏரோது உங்களை கொல்ல திட்ட மிடுகிறான் நீங்கள் நகரத்தை விட்டு வெளியேறும்படி எச்சரித்து  கூறியபொழுது," ஆண்டவர் இந்த வார்த்தையை அவர்களிடம் "கூறினார்  "போய் அந்த நரியிடம் சொல்லுங்கள்..." என்று சொன் னார்.
இயேசு அவனை "அந்த நரி" என்று அழைக்கும் போது, ​​அவன் ஒரு நரியைப் போல தந்திரமான வன் என்று சொல்லவில்லை, அவன் அப்படித்தான் இருந்திருக் கலாம் என்றாலும். இல்லை, இயேசு உண்மையில் அவனை அவமதிக்கிறார், ஏனென்றால் இஸ்ரவேலர்களின் புனிதக் குறியீ டுகளில் ஒரு நரி ஒரு அசுத்தமான விலங்கு. 
ஏன் அவன் நரியாக அழைக் கப்படுகிறான்?
1.கிமு 4 ஆம் ஆண்டு வாக்கில் , ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் தனது தந்தையின் உயிலை இவனுக்காக மாற்றிய பிறகுதான், ஹெரோட் ஆன்டிபாஸ் தனது தந்தையின் ராஜ்யத்தின் ஒரு பகுதியைப் பெற்றார். 
2.தனது தந்தையின் மரணத்திற் கும் உயிலின் ஒப்புதலுக்கும் இடையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட சேதத்தை அவர் மீட்டெடுத் தார் 
3.இவன், கலிலேயா கடலின் மேற்குக் கரையில் தனது மதிப்பி ற்குரிய பேரரசர் டைபீரியஸின் பெயரால் தலைநகரான டைபீரி யாஸைக் கட்டுவதற்கும் அவர் பொறுப்பேற்றார். இப் பேரரசர்  பெயரால் திபேரியா கடல் என்று அழைக்கப்படும் கலிலேயா கடல்
நகரை கட்டினான்.
4 அந்திபாஸ் தனது முதல் மனை வியான நபாட்டியாவின் அரபு அரசர் நான்காம் அரேட்டாவின் மகள் பாசேலை விவாகரத்து செய்தார்
5. , இதன் விளைவாக ஆன்டிபா ஸுக்கு பேரழிவை ஏற்படுத்திய ஒரு போர் ஏற்பட்டது;
6.கி. பி 39 இல் ஆன்டிபாஸ் மீது அவரது மருமகன் அக்ரிப்பா I பேரரசர் கலிகுலாவுக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டினார்
7 கலிகுலா( காயு சீசர்) அவரை கவுலுக்கு (மேற்கு இரோப்) நாடுகடத்தினார் . ஹெரோடி யாஸுடன் அங்கு சென்ற அவர், கிபி 49ல்,  இறந்தார். ( வரலாற்று ஆசிரியர் யோசேப்பின் கூற்று)
நரி என்றால், இஸ்ரவேலில் மிக அசுத்தமான விலங்கு என்று பெயர். ஆண்டவர், தனக்கு அருட் பொழிவு செய்த திருமுழுக்கு யோவானை கொன்றதினால் ஏரோது மீது அதிக வெறுப்பு உடையவராய் இருந்தார். சுருக்கமாகச் சொன்னால், ஏரோது அந்திபாஸ் ஒரு விரும்பத்தகாத மற்றும் நேர்மையற்ற ரோமானிய கைப்பாவை ஆட்சியாளராக இருந்தார், 
இவன்,பஸ்கா சமயத்தில் எருசலே முக்கு வந்திருக்கிறான். அதனால், இயேசுவை விசாரிக்க ஏரோதுவி டம் பிலாத்து அனுப்புகிறார். இந்த ஏரோது அந்திப்பா தான் பிற்பாடு, இயேசு அற்புதங்கள் செய்வதைக் கேள்விப்பட்டதும், யோவான்தான் உயிரோடு எழுந்துவிட்டாரோ என்று பயந்தவன்.—(லூக்கா 9:7-9.)
 இறுதியாக ஆண்டவர் கூறியது:
"இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்கு வேன்; மூன்றாம் நாளில் என்பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள். ஏனெ னில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே! என்றார்
(லூக்கா நற்செய்தி 13:32,33)
2. கைகழுவிய பிலாத்து:Pilate washed his hands.
 கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! பிலாத்து (Pilot)பொந்தியு குடும்பத்தை சேர்ந்த உரோமை வீரர்.இவர் கிபி. 26-36 வரை உரோ மைப் பேரரசின் கட்டுப்பாட்டுக் குள் இருந்த யூதேயா பிரதேசத் தின் ஐந்தாம் ஆளுநராக இருந் தவர். இவர் திபேரியுஸ் அரசரின் ஆட்சிக்காலத்தில் இயேசு கிறித் துவின் வழக்கை விசாரித்து அவரை சிலுவையில் அறைந்து கொல்ல தீர்ப்பளித்ததால் வரலாற்றில் இடம் பெற்றார்.
பிலாத்துவின் அரசியல் அதிகா ரம்: Pilot's Political Power:
1.அவரது அதிகாரங்களில் பிரதா ன பாதிரியாரை நியமிப்பது.
2  ராணுவ, நீதித்துறை மற்றும் நிதி அதிகாரமும் இருந்தது.
3. வரி வசூலிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது.
4. மரண தண்டனை அளிக்கும் அதிகாரம் அவருக்கு இருந்தது.
5 குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரமும் அவரிடம் இருந்தது.
அன்பர்களே!
 இயேசுவை பிலாத்துவின் வீட்டிற்கு அழைத்து வந்த நேரம் நான்காம் காவல் நேரம் என்று கூறுகின்றனர். (அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரத்தைக் குறிக்கும். விவிலிய காலங்களில், நகரங்கள் அல்லது படைகளைக் கண்காணிப்பவர்கள் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் காவலை மாற்றுவார்கள்.)   மறு நாளோ பாஸ்கா பண்டிகை இஸ்ரவேலரை கடவுள் விடுதலை செய்த நாள். அதற்கு முன் நாள்  நம் ஆண்டவரை சிறை பிடித்த நாள். பாஸ்கா அரசு விடுமுறை நாள், எனவே அதற்கு முன்பாகவே அவசர அவசரமாக அவரை விசா ரித்து தீர்ப்பை பெற்றுவிட வேண் டும் என்று சனகெரீம் சங்கம் விரும்பியது.
 இயேசுவை கட்டி இழுத்துச் சென் ற கூட்டம் பிலாத்துவின் வீட்டுவாச லிலே நின்றது. பிலாத்து ஒரு அன் னியன்,ரோமன் எனவே அவன் வீட்டுக்குள் சென்றால் தீட்டாகி    விடும் என்று வீட்டிற்கு வெளியே நின்று பிலாத்துவை வர சொன் னார்கள் (யோவான் 18 : 28) மறுநாள் விடுதலைப் பண்டிகை கொண்டாட இருப்பதினால் தீட்டு ப்படக்கூடாது என்பதற்காக வெளிய நின்றார்கள் அற்பர்கள்.
 யூதர்கள் பிடிவாதம் பிடித்தவர்கள் எனவே அதிகாலை நேரம் ஆனா லும் தன் தூக்கத்தை கலைத்து விட்டு வெளியே வந்தான் பிலாத் து. பிலாத்துவின் முதல் கேள்வி:
1 இவன் என்ன குற்றம் செய் தான்?. கிறிஸ்துவுக்கு பிரியமான வர்களே!  பிலாத்து வெளியே வந்து இயேசுவை காட்டி, " இவன் என்ன குற்றச்செய்தான்? என்று கேட்டார். இவர்கள் இவன் ஒரு குற்றவாளி என்றார்கள். குற்ற வாளி என்று என்னிடத்தில் ஏன் கொண்டு வர வேண்டும். நீங்களே தீர்ப்பு செய்து உங்கள் சட்டப்படி தண்டிக்க வேண்டியது தானே என்று பதில் அளித்தான். ஆனால் எங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் சட்டம் எங்களுக்கு அனும திக்கவில்லை என்றார்கள் (யோவான் 18 :31 )
2 இயேசுவை வீட்டிற்குள் தனி மையாக அழைத்துச் சென்ற பிலாத்து :Pilot took Jesus inside his house alone:
அன்பானவர்களே! பிலாத்து இயேசுவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஏனெனில் பிலாத்து லத்தீன், கிரேக்க மொழி பேசுகி றவன். இயேசுவோ அராமிக் மொழி பேசுகிறவர். இதனால் அவன் வீட்டில் உள்ள பணியாளர் கள் அராமிக்,  லத்தின் மொழி, தெரிந்தவர்களின் உதவியோடு இயேசுவிடத்தில் விசாரணை நடத்தி இவன் குற்றமற்றவன் என்று கூறினான்.
 பிளாத்து கேட்ட கேள்விகள் இரண்டு :? 1. நீர் யூதர்களுக்கு அரசரா? 2. நீர் அரசனா? (யோவான் 18: 33 37 ) ஆண்டவர், அரசர் அல்ல, இவ்வுலகின் அரசர் அல்ல அவர் விண்ணகத்தின் அரசர், கடவுளின் அரசின் அரசர் எனவே இந்த இரண்டு கேள்விக ளுக்கும் மறுப்பு சொல்கிறார். (யோவான்18:36)
3. யூதர்கள் இயேசுவின் மீது சாற்றிய குற்றங்கள்: The charges against Jesus 𝗯𝘆 𝘁𝗵𝗲 𝗝𝗲𝘄𝘀.
 கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! பிலாத்து இயேசு கிறிஸ் துவின் மீது ஒரு குற்றமும் காண வில்லை என்று சொன்ன பொழுது யூதர்கள் கீழ்க்கண்ட குற்றச்சா ட்டை ஆண்டவராகிய இயேசு மீது சுமத்தினார்கள் :
1. எங்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினார்
2. சீசருக்கு வரி கொடுக்கத் தேவையில்லை என்றான் 
3. மக்களை உங்கள் அரசுக்கு எதிராக தூண்டி விடுகிறான்.
4. கலிலியோ தொடங்கி இவ் விடம் வரை யூதேயா எங்கும் போதித்து மக்களை கிளர்ச்சிசெய் யத்தூண்டினான்.என்றார்கள்.
 இந்த குற்றங்களில் பிலாத்திற்கு கலிலேயா என்ற வார்த்தை மிகவும் எச்சரிக்கையாக இந்த வழக்கை எடுத்துச் செல்ல தூண் டியது, ஏனென்றால் பிலாத்து யூதேயாவின் ஆளுநர், ஏரோது சமாரியா, கலிலேயா பகுதியின் ஆளுநர். எனவே ஏரோது விசாரி க்கட்டும் என்று அவரிடம் இயேசு வை திருப்பி அனுப்பினான்.ஆனா லும் பிலாத்து மிகவும் குழப்பத்து டன் வீட்டிற்கு திரும்பினான்.
4. பிலாத்துவின் மனைவி. The wife of Pilot. மத்தேயு 27:19-23.
 அன்பின் இறை மக்களே! ஆண்டவர் தன் ஊழியத்தில் பல பெண்களுக்கு மறுவாழ்வை கொடுத்தார். பெண்களை நேசிப்ப தில் ஆண்டவர் முதலிடமாக திகழ்ந்தார். கண்ணீர் விட்டு வந்தவர்களின் கண்ணீர்களை துடைத்தார். அத்தகைய ஆண்ட வருக்கு எந்த விதத்திலும் தொடர் பில்லாத பிலாத்துவின் மனைவி பரிந்து பேசுவதை நாம் காண்கி றோம். பொதுவாக,  மனைவியின் கருத்துகள் ஆளுநர் அதிகாரத் தில் இடம் பெறுதல் கூடாது. ஆனாலும் பிளாத்துவிடும் இயேசு ஒரு நீதிமான் எனவே அவர் பாவம் நமக்கோ, நமது தலைமுறைக்கோ வேண்டாம். அவர் விசயத்தில் மிக கவனமாக முடிவெடுங்கள் அவர் நமக்கு எதிரி இல்லை என்றாள். அதற்கு பிலாத்து இந்த பழிக்கு நம்மை விளக்கிக் கொள்ள எனக்கு தெரியும் என்றான்.இவள் கண்ட கனவும் கனவின் நிமித்தம் அவர் பட்ட துன்பங்களும் கடவு ளின் வெளிப்பாடாகக்கூட இருந் திருக்கலாம். அவளது பங்களிப்பு பிலாத்துவை தண்ணீரில் கைக ளைக் கழுவச் செய்தது. இயேசு வின் தீர்ப்பிலிருந்து விலகிக் கொள்ளவே அவள் கணவனைக் கேட்டிருந்தாள்.இயேசு, யாரையும் தீர்ப்பு செய்யாதீர்கள். நீங்களும் அப்படியே தீர்ப்பிடப்படுவீர்கள் என்று கூறியுள்ளார்.நாம் நீதியின் பக்கம் நிற்க சிலுவை காட்சி நமக் கு துணை நிற்கட்டும். ஒவ்வொரு பாஸ்கா பண்டிகையின் போது ஒரு சிறைக் கைதியை விடுதலை செய்வது வழக்கம் அவ்வாறே பிலாத்து, பரபாஸ் என்ற கைதி யை மக்கள் நீதி மன்றத்தில் கொண்டு வருகிறார். 
 பாஸ்கா பண்டிகை விடுதலைப் பண்டிகையாகும்,, கடவுள் இஸ் ரேல் மக்களையும், வேறு அநேக இதர இன மக்களையும் விடுத லை செய்த நாளை நினைத்து கொண்டாடும் பண்டிகை ஆகும் (விடுதலை பயணம்:12 :38 )
இந்தப் பண்டிகையை   முன்னிட் டு யூதரின் அரசனாகிய இயேசு வையா? அல்லது கொலை குற்றவாளி ஆன பரபாசசையா?  யாரை உங்களுக்கு விடுதலை செய்ய வேண்டும் என்று கேட் டான். மதத் தலைவர்கள் சொல்லி யவாறு, பரபாசை விடுதலை செய் யுங்கள் என்று உரக்க சத்தமாய் கத்தினார்கள்.. இந்த வாய் ப்பிலும் தோல்வியைக் கண்ட பிலாத்து, வேறொரு வாய்ப்பாக ஆண்டவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற உள்மனதோடு கேட்கிறார், அப்படியானால் நீங் கள் மேசியா என்றும், யூதருடைய அரசர் என்றும் சொல்லும் இந்த இயேசுவை என்ன செய்வது என்று கேட்கிறான், இது நீதிமன்ற வரலாற்றில் இல்லாத கேள்வி, தீர்ப்பை மக்களிடம் கேட்பது யூதர்களுக்கு எரிச்சல் ஊட்டு கிறான். ஆனால் அங்கிருந்த மக்களோ, "அவனை அழித்து விடும்" என்றனர்.( லூக்கா 23:18)
 பிலாத்து கை கழுவினான் இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தான். சிலுவையில் அறைய ரோமர்களுக்கே அதிகார ம் உண்டு அதை நிறைவேற்றி னான்.
அன்பர்களே! ஆண்டவர், சாந்த
குணம் நிறைந்தவராய், நமக்காக
முள் முடி, சூட்டப்பட்டு (the Grown of
Thorns), சவுக்கடிகள், அவமானங்க
ளை சிலுவையுடன் சுமந்து நமக்கு
புது வாழ்வை கொடுத்தார். நன்றி
ஆணாடவரே! நன்றி. ஆமேன்.

ᴩ𝚛𝚘𝚏. 𝙳𝚛. 𝙳𝚊𝚟𝚒𝚍 𝙰𝚛𝚞𝚕 𝙿𝚊𝚛𝚊𝚖𝚊𝚗𝚊𝚗𝚍𝚊𝚖, 𝚂𝚎𝚛𝚖𝚘𝚗 𝚆𝚛𝚒𝚝𝚎𝚛.
𝚠𝚠𝚠. 𝚍𝚊𝚟𝚒𝚍𝚊𝚛𝚞𝚕𝚜𝚎𝚛𝚖𝚘𝚗. 𝚌𝚘𝚖
𝚠𝚠𝚠. 𝚍𝚊𝚟𝚒𝚍𝚊𝚛𝚞𝚕𝚋𝚕o𝚐𝚜𝚙𝚘𝚝. 𝚌𝚘𝚖.







பொந்தியு பிலாத்து
பான்டியஸ் பிலாட்டஸ்
எச்சே ஹோமோ ("இதோ மனிதன்"), எருசேலத்தின் மக்களுக்கு முன்னாள் துன்புறுத்தப்பட்ட இயேசுவை பிலாத்து நிற்க வைப்பது குறித்த அந்தோனியோ சிசேரியின் சித்தரிப்பு
யூதேயாவின் 5வது ஆளுநர்

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.