சிரேன் ஊரராகிய சீமோனும், அரிமத்தியா ஊரராகிய யோசேப்பும். (197). 𝗦𝗶𝗺𝗼𝗻 𝗼𝗳 𝗖𝘆𝗿𝗲𝗻𝗲 𝗮𝗻𝗱 𝗝𝗼𝘀𝗲𝗽𝗵 o𝗳 𝗔𝗿𝗶𝗺𝗮𝘁𝗵𝗲𝗮. மாற்கு: 15: 20-24, மாற்கு: 15: 40-47.𝚃𝚑𝚎 𝚂𝚒𝚡𝚝𝚑 𝙵𝚛𝚒𝚍𝚊𝚢 𝚘𝚏 𝚝𝚑𝚎 𝙻𝚎𝚗𝚝.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! லெந்து காலத்தின் ஆறாவது  வெள்ளிக் கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "சிரேன் ஊரராகிய சீமோனும், அரிமத் தியா ஊரராகிய யோசேப்பும்" என்ற தலைப்பாகும்.
1.சிரேனே ஊரனாகிய சீமோன்:Simon of Cyrene:
ஆப்பிரிக்காவின் வடக்கில் உள்ள  லிபியாவில், சிரீன் என்ற ஊர் அமைந்துள்ளது , அக்காலத்தில் இப்பகுதி கிரேக்க குடியேற்றப் பகுதியாக இருந்தது. ஏறத்தாழ 100,000 யூதர்கள் இங்கு வசித்திரு க்கக்கூடும். கிறித்தவம் பரவிய முதல் சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். .  சைமன் ஒரு கருமையான நிறமுள்ள மனிதர் என்று பலர் முடிவு செய்கிறார்கள், ஆனால் வேதம் அவரது இனத் தைப் பற்றி உறுதியாகக் கூறாத தால் நமக்கு உறுதியாகத் தெரிய வில்லை. சைமன் ஆப்பிரிக்கராக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு இடமாற்றப்பட்ட யூதராகவோ அல்லது வேறு சில வம்சாவளி யைச் சேர்ந்தவராகவோ இருக்க லாம். வேதம் அதைச் சொல்லவி ல்லை, சிரேன் ஊரில் வாழ்ந்த யூதர்கள் எருசலேமில் ஒரு தொழு கைக் கூடம் வைத்திருந்தனர். திருவிழாக்களுக்கு எருசலேமுக்கு வரும் சிரேன் ஊரில் வாழ்ந்த யூதர்கள் இக்கூடத்திற்கு வருவது வழக்கமாகும்.மற்றும் சைமன்
பாஸ்கா பண்டிகை கொண்டா டுவதற்காகத்தான் எருசலேம் தேவாலயம் வந்தார். ஆண்டவரின் சிலுவை சுமப்பது ஆண்டவர் சைமனுக்கு கொடுத்த ஒரு பரிசா கும் இரண்டாவதாக சைமனுக்கு எப்படி இந்த வாய்ப்பு வந்தது என்றால், ஆலயத்துக்கு  வந்து கடவுளை தொழ வேண்டும் என்ற எண்ணத்தோடு சிரேனே ஊரிலிரு ந்து சுமார் 800 மைல் நடந்து எருசலேமுக்கு வந்தார். இதன் மூலம் தெரிந்து கொள்வது ஆலயம் செல்கின்ற ஒவ்வொரு 
வருக்கும் கடவுள் ஒரு பரிசு கொடுக்கிறார். எனவே இந்த நிகழ்வு நம்மை ஆலயம் செல்ல அழைக்கின்றது. இந்த நிகழ்வை மூன்று நற்செய்தி நூல்களும் பதிவு செய்கின்றன வரலாற்றில் இடம்பெறுகின்றன. திருத்தூதர் யோவான் பதிவு செய்யவில்லை.
சிலுவையில் சுமந்து கொண்டு வரும் வழியில், அலக்சாந்தர், ரூபஸ் (முதலாம் நூற்றாண்டு சீடர்கள்) ஆகியோரின் தந்தை யான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளி யிலிருந்து வந்து கொண்டிருந் தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவ ரைக் கட்டாயப்படுத்தினார்கள். (மாற்கு நற்செய்தி 15:21)
திருத்தூதர் பவுல் அடிகளார் ரோமருக்கு எழுதிய கடிதத்தில்  16:13  "கர்த்தருக்குள் சிறந்தவரா கிய ரூஃபையும், அவருடைய தாயும் என்னுடைய தாயும் வாழ்த் துங்கள்." ரூஃபஸ் மிகவும் தேர்ந் தெடுக்கப்பட்ட கிறிஸ்தவராக இருந்ததால், அவர் கர்த்தருக்குள் சிறந்தவராக இருந்தார். ரூஃபஸி ன் தாய் பவுலுக்கு மிகவும் பிரிய மானவர் சிமியோனியின் சிலுவைப் பயணம் ஆண்டவரின் திருப்பணி ஆற்றும் குடும்பமாக மாறியது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சிலுவையை சுமந்தது பிலாத்துவின் அரண்மனிலிருந்து கொல்கதா மலை வரையிலும் உள்ள தூரம் சுமார் அரை கிலோ மீட்டர். இவற்றில் எந்த இடத்தில் இருந்து சைமன் சிலுவை சுமந் தார் என்பதை தெளிவாக குறிப்பி டவில்லை.ஆனால் சைமன் அவர் கள், ஆண்டவரின் பாரத்தை இக் கட்டான மற்றும் முடியாத நேரத் தில் பகிர்ந்து கொண்டது ஆண்ட வரின் பாரத்தை சுமந்தது ஒரே மனிதன் சைமன் தான்.

2.சிரேனே ஊரானாகிய சீமோன் ஒரு கருப்பனா? Was Simon of Cyrene a black?
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!நம் திரு விவிலியம் திட்ட வட்டமாக சீமோன் எந்த இனம் என்று குறிப்பிடவில்லை. ஆனால் இவர் வட ஆப்பிரிக்கா பகுதியை சேர்ந்தவராய் இருப்பதினால், ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உரிய நிறமாகிய கருப்பு நிறம் அவருக்கு இருந்திருக்கலாம். இதற்கு ஆதார மாக நாம் சொல்ல வேண்டுமா னால், சிலுவை சுமந்த இயேசு கிறிஸ்துவை சுற்றிலும் இருந்த கூட்டத்திலேயே இவர் ஒருவரை பிரித்து எடுக்கப்படுகிறார். இவரை ரோமர்கள் குறிப்பிட்டு அழைத்து, கட்டாயப்படுத்தி, சிலுவை சுமக்க வைப்பது இன வேறுபாட்டின் அடையாளமல் லவா.?
உலகெங்கிலும் உள்ள கறுப்பின மக்கள் மீது திணிக்கப்பட்ட சமூக விரோதம் மற்றும் கட்டாய உழைப் பின் தற்போதைய யதார்த்தத்தை இது குறிப்பிடுகிறது. அரை மில்லினியம்( 500)ஆண்டுகால இத்தகைய ஒடுக்குமுறையை எதிர்கொண்டதில் கறுப்பின மக்கள் பெற்ற கண்ணியம், அதிகாரம் மற்றும் மனிதநேயத் தையும் இது குறிப்பிடுகிறது. சமூகத்தில் கறுப்பின மனிதர் சிரீனின் சைமன், கடவுள் தனது சுமையைச் சுமக்க உதவுகிறார்.
சிரேனே ஊரானாகிய சீமோன் கர்த்தருடைய சிலுவையை சுமந் தது எவ்வளவு பெரிய ஆசீர்வாத த்தை அந்த குடும்பத்திற்கு கொண்டு வந்தது. அவன் பிள்ளை கள் அலெக்சாண்டர், ரூபஸ் இருவருடைய பெயரும் வேத புத்தகத்தில் இடம் பெற அவன் காரணமாய் இருந்தார் ஆண்டவர் எவரை முன்குறித்தாரோ, அவரை தெரிந்து கொண்டார் .
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! சிலுவை பாடுகள் 14 நிலை யங்களை உடையது.( Fourteen Stations of the  Cross) சிமியோன்  சிலுவை சுமந்தது ஐந்தாவது நிலையம் ஆகும்.(இயேசு கல்வாரி மலைக்கு நடந்து சென்ற பாதை யை குறிக்கும் ஒரு பாரம்பரிய ஊர்வல பாதையாகும்) . 
3. அரிமத்தியா ஊரானாகிய யோசேப் :Joseph of Arimathea.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!
நற்பெய்திகளின் படி இயேசுவின் மரணத்துக்குப் பின்பு அவரை அடக்கம் செய்தவர் ஆவர். இவர் நான்கு திருமுறை நற்செய்திகளி லும் குறிப்பிடப்பட்டுள்ளார். மாற்கு 15:43 இவரை மதிப்புக்கு ரிய தலைமைச் சங்க உறுப்பி னர் எனவும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர் எனவும் குறிக்கின்றது. யூத சன்ஹெட்ரின் முன் இயேசுவின் விசாரணையின் போது அவரைக் கண்டிக்க வாக்களிக்காத இருவர் அரிமத்தேயு யோசப் மற்றும் நிக்கோடெமஸ் மட்டுமே.மத்தேயு 27:57 இவர் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார் எனக்குறிக்கின்றது. யோவான் 19:38 இவரை இயேசு வின் சீடர்களுள் ஒருவர் எனவும் யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர் எனவும் குறிக்கின்றது. இவர் தலைமைச் சங்கத்தின் உறுப்பினராக இருந்த அதிகாரத்தினால், இவர் இயேசு வின் உடலை எடுத்துக் கொண்டு போகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்து நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு இயேசு வின் இறப்பை உறுதிசெய்தபின்பு யோசேப்பிடம் இயேசுவின் உடலை அளித்தான். இயேசுவின் சீடர்கள் செய்ய முடியாததை இந்த இரகசிய சீடன் ஆண்டவருக்கு இறுதி மரியாதை செலுத்தினான்.
 1. லூக்கா நற்செய்தியாளரின் பார்வையில்:The Perspective  View
of St. Luke.
இவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர். என்றும் தலை மைச் சங்கத்தாரின் திட்டத்துக் கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தி யா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட் சியின் வருகைக்காகக் காத்திருந் தவர். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். 
அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்ல றையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்த தில்லை. 
(லூக்கா நற்செய்தி 23:50-53)

2. மத்தேயு இவ்வாறு சொல்லு கிறார்: The Perspective View of St. Matthew.
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பை சீடனாகவும், பணக் காரனாகவும் இருந்தான் என்று. சீடன் என்பவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் இயேசுவைப் பின்பற்றுகிறவன். அப்படியானால் இந்த அரிமத்தி யா ஊரானாகிய யோசேப்பும் இயேசுவைப் பின்பற்றுகிறவ னாக இருந்தான். ஆனால், அவன் பணக்காரன் 
 அன்பானவர்களே! உரோம சட்டத் தில் சிலுவையில் அறையப்பட்ட வர்கள் அடக்கம் செய்ய தடை செய்யப்பட்டவர்கள். ஆனால் அரிமாத்தியோ ஊராரான யோசே ப் தன் பணக்கார செல்வாக்கினா ல், இயேசு கிறித்துவை அடக்கம் செய்யஅதிகாரம்பெற்றார்.அவரது உடலைப் பாதுகாப்பதிலும், நறும ணம் பூசுவதிலுமம், புதிய கல்ல றையில் வைப்பதிலும்  இன்றி யமையாத கருவியாக மாறியது. 
 இயேசு ஒரு பணக்காரனின் கல்லறையில் வைக்கப்பட்டார் என்பது அவர் "விண்ணகத்தின் அரசர்" என்பதை நிரூபிக்கப்ப டுகிறது.(ஆனால், யூதர்கள் யோசேப்பை ரோமானிய சட்டத் தை மீறியதற்காக சிறையில் அடைத்ததாக நிக்கோடெமஸின் நற்செய்தி கூறுகிறது)
3. மாற்கு நற்செய்தியாளரின் பார்வையில் அரிமாத்தேயு யோசேப் :The Perspective View of St. Mark. மாற்கு 15:43-47.
 கிறித்துவுக்கு பிரியமானவர் களே! நான்கு நற்செய்தியாளரும் இவரைக் குறித்து குறிப்பிட்டிருக் கிறார்கள்.
1 சனகரின் சங்கத்தின் மதிப்பு மிக்க உறுப்பினர்,
2.  விண்ணரசு வருவதற்காக காத்திருந்தவர் 
3. துணிந்து சென்று பிளாத்து விடும் இயேசுவின் உடலை கேட்டு பெற்றார்
4 இயேசுவின் உடலை யூத அடக் க முறைப்படி  மெல்லிய துணி வாங்கி,   நறுமணர்த்துடன் கல்லறையில் வைத்து கல்லை புரட்டி மூடி வைத்தவர் இவரே.
5. இவர் ஒரு யூதமத தலைவர். 4.யோவான் நற்செய்தியாள ரின் பார்வையில் : The Perspec tive view of St.John யோவான்: 19:18. 
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! யோவான் நற்செய்தியாளர் 
 கூற்றுப்படி அரிமத்திய யோசேப் :
1. இவர் ஒரு இரகசிய சீடர் என்று குறிப்பிடுகிறார் ஏனென்றால் யூதருக்கு இவர் அஞ்சி இருந்ததி னால்,
2. சிலுவையில் இருந்து ஆண்டவ ரின் சரீரத்தை இறக்கியவர் இவர் தான்.
2. இயேசு மரித்த பிறகு பிளாத்தி விடம் தைரியமாகச் சென்று அவர் உடலைப் பெற்று யூத முறைப்படி அடக்கம் செய்தார்கள்.
3. இவரைப்போலவேநிக்கதொம் மும் ஒரு ரகசிய சீடர் அவரும் இவருக்கு துணையாக இருந்து ஆண்டவரின் சரீரத்தை அந்த புனித வெள்ளி என்று அவசர அவசரமாக அடக்கம் செய்தனர்.
4. மறு நாள் ஓய்வு நாள், எனவே,  மரித்த நாளே அடக்கம்செய்தனர்.
 தான் தெரிந்து கொள்ளப்பட்ட சீடர்கள் செய்ய முடியாததை ஆண்டவருடைய ரகசிய சீடர்கள் அவருக்கு உரிய மரியாதையை செய்து முடித்தனர்.
 நண்பர்களே! ஏசையா தீர்க்கரின் கருத்துப்படி, "துன்பப்படும் ஊழியக்காரனின்" கல்லறை ஒரு பணக்காரனுடன் இருக் கும்" என்ற ஏசாயாவின் கணிப்பை நிறை வேற்றுவதாக பல கிறிஸ்தவர்கள்  யோசேப்பின் பங்கை விளக்குகிறார்கள் ( ஏசாயா 53:9).
 இந்த சிலுவை தியான நாட்களில் நம்முடைய எண்ணங்களும் சிந்தனையும் பாடுபடும் தாசனின் சிலுவையே நோக்கி இருப்பதாக ஆமென்.
𝙿𝚛𝚘𝚏. 𝙳𝚛. 𝙳𝚊𝚟𝚒𝚍 𝙰𝚛𝚞𝚕 𝙿𝚊𝚛𝚊𝚖𝚊𝚗 𝚊𝚗𝚍𝚊𝚖, 𝚂𝚎𝚛𝚖𝚘𝚗 𝚆𝚛𝚒𝚝𝚎𝚛.
𝚠𝚠𝚠. 𝚍𝚊𝚟𝚒𝚍𝚊𝚛𝚞𝚕𝚜𝚎𝚛𝚖𝚘𝚗𝚌𝚎𝚗𝚝𝚛𝚎. 𝙲𝚘𝚖
𝚠𝚠𝚠. 𝚍𝚊𝚟𝚒𝚍𝚊𝚛𝚞𝚕𝚋𝚕𝚘𝚐𝚜𝚙𝚘𝚝. 𝚌𝚘𝚖.









சிரேன் ஊர் சீமோன் இயேசுவின் சிலுவை யைச் சுமந்து உதவும்





Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.