முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நம் தென்னி ந்திய திருச்சபை குருத்தோலை ஞாயிற்றறை (திருநங்கையர்ஞாயிறாக). அனுசரிக்கிறது. இது கடவுளின் படைப்பில் அனை வரும் சமம். கடவுள் அனைவரை யும் நேசிக்கிறார் என்ற அடிப்ப. டையில் நாம் இத்தகைய விளிம்பு நிலை மக்களை நேசிக்க வேண் டும் என்ற அடிப்படையில் இதை நாம் அனுசரிக்கிறோம். திருநங்கை (Trans woman) எனப் படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.
சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலிய ல் தொழிலில் கட்டாயப்படுத்தப் பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் பொதுவா கத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, திருநங்கைகள் எனும் குழு மத்தில் கலந்து விடுகிறார்கள்.
இங்கிலாந்து திருச்சபைதான்
முதன் முதலில் திருநங்கை ஆயரை கி. பி. 2005 ம் இண்டு
அருட்பொழிவு செய்து உலகத் திற்கு முன்னோடியாக திகழ்ந்தது.
இந்தியாவில் ECI திருச்சபை முதன் முதலில் எஸ்தர்பாரதி
என்ற திருநங்கை ஆயராக 2000ம் ஆண்டு அருட்பொழிவு செய்து செங்கல்பட்டு பகுதியில் ஊழியம் செய்ய வைத்தது. சென்னை பேராயம் மூன்றாம் பாலினத்துகளுக்காகவே சிறப்பு துறையை வைத்து இவர்களு டைய மேம்பாட்டிற்கு அருட்ப பணியாற் றி வருகிறது சிஎஸ்ஐ சென்னை பேராயம் 2012, ம், ஆண்டு எஸ்தர் பாரதியை அழை த்து பேராயத்தில் அருட்பொழுவா ற்ற அழைப்பு விடுத்தது.
தொடர்ந்து இத்தகைய விளிம்பு நிலை மக்களுக்கு பேராயம் உழைத்து வருகிறது.
திருவிவிலியத்தில் அண்ணகர் களாகப்பட்டவர்கள், மற்றும் புற இனத்தார் ஆலயத்திற்கு வருவ தற்கு தடை செய்யப்பட்டிருக்கிறா ர்கள் (இணைச்சட்டம் 23:1-3), (லேவியர் : 21 18 )
ஆயினும், இஸ்ரவேலின் நாடு கடத்தினின் போது ஓய்வு நாளை தூயதாய் ஆசரிக்கும் அண்ணர்க ளும், புற இணைத்தாரும்ஆசீர்வதி க்கப்பட்டவர்கள் என்று ஏசையா தீர்க்கர் கூறுகிறார். சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நினைவு சின்னம் மற்றும் நற்பெயர் வழங்கப்படும் என தீர்க்கர் கூறுகிறார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வின் கூற்றுப்படி: மூன்று விதமா ன அண்ணகர்கள் இருக்கிறா ர்கள்.
1. சிலர் பிறவியிலேயே அண்ண
கர்கள்.
2. வேறு சிலர் மனிதரால் அண்ண கர்களாகப்படுகின்றனர். 3.விண்ணரசின்பொருட்டுஅண்ண கர்களாகப்படுகின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக் கூடிய வர் ஏற்றுக்கொள்ளட்டும்" என்றார். (மத்தேயு நற்செய்தி 19:12)
எத்தோப்பிய மந்திரி அவரும் ஒரு அண்ணகர்தான். முதல் புற இனத் தவர் கிறிஸ்த்துவை ஏற்றுக் கொண்ட ஒரு அண்ணகர். (திருத்தூதர் பணிகள் 8:27) கிறிஸ்தவம் கடல் போன்றது அனைத்து நீர்களை ஏற்றுக் கொள்வது போல அனைத்து மக்களையும் ஏற்றுக் கொள்வதே கிறிஸ்துவம்.
1. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார்.Behold! Thy King come unto you. செக்காரியா 9:1-12.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கிமு 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த எபிரேய இறைவாக்கினர் சகரியா இவரின் தீர்க்கதரிசனங்கள் மகா தரியுவின் ஆட்சிக் காலத்தில் நடந்தன . (மேதிய அரசன் தரியு, பாபிலோனின் ராஜ்யத்தை கட்டிக்கொண்டவர்.கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்ட பிறகு, தரியு ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டார்.)
அலெக்சாண்டர் (Alexander the Great)மற்றும் கிறிஸ்து இருவரும் ராஜாக்களாக எருசலேமுக்கு வந்தனர்.இருவரும் உலகளாவிய வெற்றியாளர்கள்; ஆனால் 30 வயதுகளின் முற்பகுதியில் இறந்தனர்.இருவரும் அமைதி யாக எருசலேமுக்கு வந்தனர், மக்கள் தங்களைக் காப்பாற்றும் படி வேண்டினர்.ஒருவர் தனது கைகளில் லட்சக்கணக்கானோரி ன் இரத்தத்துடன் வந்தார். மற்றவர் தனது சொந்த இரத்தத் துடன் கடவுளின் பிரசன்னத்தி ற்குச் சென்றார்.இருவரும் கோவி லுக்குச் சென்றனர். அலெக்சாண்டர் ஒரு விண்ணப் பதாரராக வந்தார், ஆனால் இயேசு கோவிலின் கட்டளையை ஏற்றுக்கொண்டு, ஆசாரியர்களின் வணிகத்திற்காக அவர்களைக் கண்டித்தார். (யோவான். 2:13-)
அலெக்சாண்டர் குதிரைபடை யுடன் வந்தார். இயேசு கிறிஸ்து கழுதை குட்டி மேல் ஏறி திராளான மற்றும் சாதாரண மக்களோடு பவனியாக எருசலேம் வந்தார்.
அலெக்சாண்டர் தனது சொந்த பாவங்களுக்காக இறந்தார். இயேசு உலகத்தின் பாவங்களு க்காக இறந்தார்.ஒருவர் தன்னை ஒரு கடவுள் என்று நினைத்தார். இவரே கடவுள். உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
இறைவாக்கினர் சகரியா அவர் கள், மனுசகுமாரன். அனைத்து நாடுகளுக்கும் இடை யே அமை தியைக் கொண்டுவர வெற்றிகர மாக நகரத்திற்குள் நுழைவார் என்று உறுதியளிக்கிறார். இறைவாக்கினர் சகரியா காலத் தில் இஸ்ரேல் மக்களுக்கு எதிராக தீரு, சீடோன், அஸ்கெளான், காசா, எக்ரோன், தமஸ்கு, ஹாமத், பாலஸ்டைன் போன்ற எட்டு நாடுக ளும் விரோதியாக இருந்தனர். போர் மேகங்கள் சூழ்ந்த பகுதியா க இருந்தது எருசலேம். இக்கால கட்டத்தில் அமைதியின் அரசர் எருசலேமில் பவனிவர இருக்கி றார் என்பதை இறை வாக்கினர் சகரியா அழகாக எடுத்துரைக் கிறார். "மகளே, சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதை யின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். "
(செக்கரியா 9:9) அவர் எருசலே மில் குதிரை படைகள் இல்லாமல் செய்வார் புற இனத்தாருக்கு அமைதியை உண்டாக்குவார் அவரே அமைதியின் அரசர் (Prince of Peace )
2.கிறிஸ்துவின் நல்ல ஊழிய ராக இருக்க முயற்சி செய்கிறீர் களா? Are you trying to be a good servant of Christ? 1.திமோத்தேயு 4:6-16.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே திருத்தூதர் பவுல் அடிகளார் தன்னுடைய அன்பு சீடனாகிய திமோத்தேயுவுக்கு கூறும் அறிவு ரைகள் ஒரு ஊழியர் எப்படி இருக் க வேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்
புதிய ஏற்பாட்டில், போதகர் மற்றும் மூப்பர் என்பது ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகிற து, மேலும் பவுல் அடிகளார் குறிப் பாக தீமோத்தேயுவை ஒரு போதக ராகக் குறிப்பிடுகிறார்.
எபேசு தேவாலயத்தின் பொரு
ப்பாளராக திமொத்தேயு உள்ளார்
பயபக்தியற்ற, முட்டாள்தனமான கட்டுக்கதைகளுடன் எந்த தொடர் பும் இல்லை. மாறாக, உங்களை தெய்வபக்திக்காகப் பயிற்றுவிக் கவும்."வேதத்தில் காணப்படாத கட்டுக்கதைகளை நாம் திசை திருப்பப்படக்கூடாது. என அறி வுறுத்துகிறார்.போதகரின் பணி முதன்மையாக சகோதரர்களுக் குப் போதனை என்பதை கவனியு ங்கள் . ஊழியர் சகோதரர்களுக்கு இந்தக் காரியங்களில் போதனை செய்யவில்லை என்றால் , அவர் உண்மையில் இயேசு கிறிஸ்து வின் நல்ல ஊழியராக இல்லை .
தீமோத்தேயு இயேசு கிறிஸ்து வின் நல்ல ஊழியராக இருக்க வேண்டுமென்றால் , அவர் கடவுளுடைய வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும் , நல்ல கோட்பாட்டை கவனமாகப் பின்பற் ற வேண்டும் . திமோத்தேயு மட்டும ல்ல, நாம் அனைவருமே ஆண்டவ ருடைய வார்த்தையில் நிலைத் திருக்க வேண்டும் நாம் கேட்ப வராக மட்டுமல்ல வசனத்தின் படி செய்பவராகவும் இருக்க வேண் டும்.
பண்டைய கிரேக்க மற்றும் ரோமா னிய கலாச்சாரம் உடல் பயிற்சி க்கு அதிக மதிப்பைக் கொடுத் தது. மற்றவர்கள் உடல் பயிற்சி யில் செய்யும் அதே உழைப்பும் அர்ப்பணிப்பும் தெய்வபக்தியைப் பின்தொடர்வதற்கும் செலுத்தப் பட வேண்டும் என்று பவுல் தீமோத் தேயுவிடம் கூறுகிறார் .
கேளுங்கள், நீங்கள் கிறிஸ்துவின் நல்ல ஊழியராக இருக்க விரும்பி னால், கடவுளுடைய வார்த்தை யை தியானிப்பதன் மூலம் மட்டு மே முடியும்.
தீமோத்தேயு தனது பாட்டி லோயி சாலும், தாயார் ஐனிக்கேயாளா லும் பயிற்றுவிக்கப்பட்டார். பவுலி ன் கீழ் ஒரு பயிற்சியாளராக அவர் பயிற்சி பெற்றார்.கிறிஸ்துவைச் சேவிப்பது, கிறிஸ்துவை நேசிப்ப து, கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது - அந்த நிலைப்பாட்டிலிருந்தும் அந்த நிலையிலிருந்தும் மட்டுமே நாம் மற்றவர்களுக்கு அர்த்தமு ள்ள மற்றும் நிலையான சேவை செய்யத் தொடங்க முடியும்.நாம் கடவுளை மகிமைப்படுத்தவே படைக்கப்பட்டோம்.கிறிஸ்துவின் நல்ல ஊழியராக இருக்க முயற்சி செய்வோம்.
3.தாவீதின் மகனுக்கு ஓசன்னா!.Hosanna to the Son of David! லூக்கா : 19: 29-40.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! பாஸ்கா பண்டிகை ஒவ்வொ ரு வருடமும் எபிரேயா நாட்காட் டியில் நிசான் மாதம் 15ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு 7 அல்லது 8 நாட் களிலாக கொண்டாடப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்கமாக வும், நுழைவு வாயிலாகவும் குருத் து ஞாயிறு அமைகின்றது.The Palm Sunday is a gateway to the holy week.நான்கு நியமன நற்செய்திக ளிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிகழ்வான எருசலேமுக்குள் கிறிஸ்துவின் வெற்றிகரமான பிரவேசத்தை நினைவுகூரும் குருத்தோலை திருநாள்.
பவனி என்றால் என்ன?
மக்கள் ஆரவாரங்களுடன் கூடி சாலைகளிலே திரண்டு செல்ல, அரசனோ அல்லது அதிகாரியோ அல்லது விழா நாயகனோ பவனி யின் இறுதியிலே ஆரவாரமாக அழைத்து வரப்படுவர்.இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலே மில் நுழைகிறார். “தாவீதின்மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி மக்கள் ஆர்பரிக்கு ம்போது, எருசலேம் நகர் முழுதும் பரபரப்படைகிறது. அங்கிருப் பவர்கள் இவர் யார் என்ற கேள்வி யை எழுப்புகின்றனர். அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலு ள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று பதிலளித்தனர். ( மத் 21:9-11). இதுவரை இப்படியொரு நிகழ்வை எருசலேமில் யாருமே நிகழ்த்திக் காட்டியிருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்நிகழ்வு அமைகிறது. இயேசு வின் இந்தக் கோவில் நுழைவு ஆட்சியில் இருப்போரையும், ஆதி க்க மனப்பான்மை கொண்ட யூதர் களையும், உரோமை ஆட்சியாளர் களின் அடிவருடிகளையும் ஆட்டம் காணச்செய்கிறது. யூத சமுதாய த்தில் பிரிவினைவாதங்களால் கட்டுண்டு கிடந்த ஏழை எளியோ ருக்கு இந்நிகழ்வு விடுதலை தரும் நம்பிக்கையாக அமைகிறது. இத னைத்தான் சிமியோன் குழந்தை இயேசுவை கரங்களில் ஏந்திய வாறு, இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரண மாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும் (லூக்க்கா 2:34) என்று கூறினார். இதே எருசலேம் ஆலயத்தில் அவர் அன்று கூறிய வார்த்தை, இன்று அதே இடத்தில் நிறைவேறுகிறது. ஆக, இன்றைய குருத்தோலை ஞாயிறு, வேறுபாடுகளற்ற சமத் துவ சமுதாயம் படைக்கவும் அதற் காக இலட்சிய மரணமேற்கவும் நம்மை அழைக்கிறது. புனித வார த்தின் தொடக்கமாகவும், நுழைவு வாயிலாகவும் குருத்து ஞாயிறு அமைகின்றது.இந்தப் பயணம், தான் இயேசு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறை வேற்றுவதாகவும், மீட்பின் முதல் படியாகவும் அமைகிறது. ஈராயிரம் ஆண்டுகளாய் விடுதலைக்காய், வாழ்வின் விடியலுக்காய் ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையும், புத்துயிரையும் கொடுப்பதாகவும் அமைகிறது.
தாவீதின் மகன்:
அன்பானவர்களே!இயேசுவுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்க ளுள் நம் கவனத்தை ஈர்க்கும் ஒரு பெயர் அவர் 'தாவீதின் மகன்' என்பது. இயேசு தாவீது வழிமர பில் வந்தவர் என்பது நாம் அறிந் ததே. யூதா கோத்திரம்.அவர் தாவீதின் மரபைச் சேர்ந்தவர், மெசியா என்பவர் தாவீதின் மரபிலிருந்துதான் தோன்றுவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. இறைவாக்குகளும் அவ்வாறே முன்னறிவித்தன. எனவே இயேசு தான் மெசியா என நற் செய்தி யாளர் மத்தேயு1:1-17ல் உறுதிப் படுத்துகிறார்.ஆண்டவரின் தூதர்
வளர்ப்புத் தந்தையான யோசேப் பை சந்தித்தபோது,"யோசேப்பே, தாவீதின் மகனே' (மத் 1:20)என்று தான் அழைத்தார். நற்செய்தியா ளரின் நோக்கமே இயேசு தாவீதி ன் குமாரன் என்பதை உறுதிப்படு த்துவதாக முதல் அதிகாரத்திலே யே கொடுக்கப்படுகிறது.
பார்வையற்றவரும், பேச்சற்றவரு மான பேய் பிடித்த மனிதர் ஒருவ ரை இயேசு குணமாக்கியபோது, திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப்போய் 'தாவீதின் மகன் இவரோ?' என்று பேசிக்கொண் டனர்.(மத் 12:23)
பார்வையற்ற பர்த்திமேயு இயேசு வை நோக்கி, 'இயேசுவே, தாவீதி ன் மகனே, எனக்கு இரங்கும்'(லூக் 18:38,39)என்றே வேண்டினார்.
இயேசு பரிசேயர்களிடம் 'மெசியாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?' என்று கேட்டார். அவர்கள் 'தாவீதின் மகன்' என்று பதிலளித்தார்கள்(மத் 22:41-45)
ஆனால்,இயேசு தாவீதைவிட மேலானவர்.
ஓசன்னா என்றால் என்ன?
அன்பானவர்களே! ஓசன்னா" என்பது ஒரு சங்கீத பாடல், இது இயேசுவை மகிமைப்படுத்துவத ற்கும், அவரிடம் இரட்சிப்புக்காக ஜெபிப்பதற்கும் பயன்படுத்தப்ப டுகிறது. ஓசன்னா" என்பது ஒரு எபிரேய மொழி வார்த்தை, இதன் பொருள் "கிருபையே!" அல்லது "காப்பாற்றுங்கள்!". இது திரு விவிலியத்தில் , குறிப்பாக சங்கீதம் 118:25 இல் பயன் படுத்தப்பட்டுள்ளது. ஓசன்னா என்ற வார்த்தை யூத மக்களை ரோம அரசாட்சியில் இருந்து எங்களை காப்பாற்றும் என்ற விண்ணப்ப வார்த்தையாகும். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.
(மாற்கு நற்செய்தி 11:10)
இதே கூட்டத்தினர் தான் தாவீதி ன் அரசை எருசலேமில் கொண்டு வராத காரணத்தினால் இந்த முழு கூட்டமும் ஆண்டவருக்கு விரோத மாக மாறினார். ஆண்டவர் அவர் களை ரோமர்களிடம் விடுதலை வாங்கிக் கொடுக்காமல் போனதி னால் இவரை சிலுவையில் அறையும் என்று கூறிய கூட்ட மாகும்.
வரலாற்றில் இடம் பெற்ற பெத்பகு.(Bethphage)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! பெத்பகு மிக சிறிய சிற்றூர் ஆனால் அது ஆண்டவருக்காக பயணம் செய்யும் விலங்கினை பரிசாக கொடுத்த ஊர். இதற்கு அரமேய மொழியில் "அத்திக் காய் வீடு" என்பது.
இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தா னியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கிய பொழுது இரு சீடர்களை அனுப்பி, 'உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்: அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்...' என்றார்"
பெத்பகு என்னும் ஊர் எங்கிருக் கிறது என்பதைப் பண்டைக்கால எழுத்தாளரான யூசேபியஸ் (Eusebius of Caesarea) என்பவர் குறிப்பிடுகிறார். அவர் கருத்து ப்படி, பெத்பகு அமைந்திருந்த இடம் இயேசு இரத்த வேர்வை வியர்த்த "ஒலிவ மலை" ஆகும். லூக்கா, பெத்பகு ஊர் பெத்தானி யாவுக்கு அருகே இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
நம்முடைய பவனி புதிய எருசலேமை நோக்கியே.
𝙻𝚎𝚝 𝚞𝚜 𝚠𝚊𝚕𝚔 𝚝𝚑𝚛𝚘𝚞𝚐𝚑 𝚝𝚑𝚎 𝙽𝚎𝚠
𝙹𝚎𝚛𝚞𝚜𝚊𝚕𝚎𝚖.திருவெளிப்பாடு 21.
அன்பின் இறை மக்களே நம்மு டைய பயணம் புதிய எருசலேமை நோக்கிய இருக்கட்டும். புதிய ஜெருசலேம் என்பது எருசலேமில் நிறுவப்படவுள்ளது மீண்டும் கட்டப்பட்ட புனித ஆலயத்தை மையமாகக் கொண்ட ஒரு நகரத்தைப் பற்றிய எசேக்கிய லின் தீர்க்கதரிசனக் காட்சியாகும் ,அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னை யே அணி செய்து கொண்ட மணம களைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. (திருவெளிப்பாடு 21:2)
ஆண்டவர் தன் மக்களோடு குடியிருக்கும் இறுதி உறைவிடம் தான் அந்த புதிய எருசலேம். அது வானத்திலிருந்து இறங்கி பூமியிலே ஆண்டவரின் அரசு உறுதியாய் நிலை பெற வழி வகுக்கிறது. இது மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை புதுப்பித்து வாழ்கின்ற பகுதி இங்கு வியாதி இல்லை பாவம் இல்லை துன்பம் இல்லை துயரம் இல்லை மரணம் இல்லை.
1500 மைல்கள் சுற்றளவு Perimeter உள்ள நகரம் கடவுளின் அனைத் து மக்களையும் ஏற்றுக் கொள்ளு ம் கன சதுர cubic வடிவம் ஆனது.
கடவுளின் மகிமையே ஒளியாக பிரகாசிக்கும் அது விலை ஏறப்பட் டு அணிகலனாக ஜொலிக்கும்.
அங்கு கோவில் இல்லை ஆண்டவரும், ஆட்டுக்குட்டியும் தான் அங்கு கோவில். அங்கு சூரியன் இல்லை, நிலவும் இல்லை ஆண்டவரின் ஒளியே அங்கு பிரகாசிக்கும் அந்த விண்ணகத்திற்கு செல்ல தகுதி ப்படுத்தும் பவனியாக நம்முடைய வாழ்க்கை பயணம் அதுவாகவே இருக்கட்டும். ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
Note: The sermon has been prepared to deliver on Palm Sunday at
CSI Bishop M. Azariah, Memorial Church, Pulipakkam, Chengalpet.
"எங்கெல்லாம் அடக்கப்பட்டவர் களின் இதயத்துடிப்புக் கேட்கிற தோ, அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்’ என்றார் புரட்சியாளர் சே குவேரா.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, " ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும். கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்' (athetes) என்பது, " கற்றுக்கொள்" என்ற பொருளாகும். உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும் , (life) போத னையையும் ( teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில் "டால்மிடிம்" (talmidim) என்ற வார் த்தை சீடர் என்பதை குறிக்கிறது. லத்தின் மொழியில், சீடர் (disciple) என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற வார்த்தையாகும். இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்...
முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமான தென்னிந்திய திருச்சபையினர்கள் அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வாரம் 27/09/2024ம் நாள் நாம் தென்னிந்திய திருச்சபை உருவா க்கம் நாளை கொண்டாடுகி றோம். பஇங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, 24 பேராயங்களால் நிர்வகிக்கப்ப டுகிறது. இது திருச்சபைகளின் ஐக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் போற்றப்பட்டது, CSI என்பது, 1.ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), 2.காங்கிரேஷனல், 3.பிரஸ்பைடிரியன் மற்றும் 4. மெதடிஸ்ட் ஆகியவற்றில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன . இந்த தேவாலயங்கள் அனைத் தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் மிஷனரி பணியின் மூலம் இந்தியாவில் நிறுவப்பட்டன, அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் தங்கள் பணிகளைத் தொடங் கினர்.இது 1910 இல் எடின்பரோ ...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
Comments
Post a Comment