புனித வியாழன் நற்கருணை: துன்புறும் மானுடத் தின் கூட்டொருமை ( 202)𝗘𝘂𝗰𝗵𝗮𝗿𝗶𝘀𝘁: 𝗖𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗦𝘂𝗳𝗳𝗲𝗿𝗶𝗻𝗴 𝗛𝘂𝗺𝗮𝗻𝗶𝘁𝘆. விடுதலை பயணம் 12: 1-7, திருப்பாடல் 116, 1 கொரிந்தி யர்11:23-34,. மாற்கு 14:17-25

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! புனித வாரத் தின் வியாகுல வியாழக் கிழமை தலைப்பு (Maundy Thursday) நற்கருணை: துன்பு றும் மானுடத்தின் கூட்டொரு மை 𝗘𝘂𝗰𝗵𝗮𝗿𝗶𝘀𝘁: 𝗖𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗦𝘂𝗳𝗳𝗲𝗿𝗶𝗻𝗴 𝗛𝘂𝗺𝗮𝗻𝗶𝘁𝘆. 
நற்கருணை என்ற சொல் கிரேக் க வார்த்தையான யூகரிஸ்டியோ விலிருந்து (Eucharist ) வந்தது. இது கர்த்தருடைய  திருவிருந்து என்ற நற்கருணை என்றும் அழைக்கப்படுகிறது. நற்கருணை என்பது கடவுள் அளித்த கிருபை யை அறிவிக்கிறது.இயேசு காட்டி க் கொடுக்கப்பட்ட இரவில், அவர் பெசஹாவை (Pessaha). அனுசரி க்க முடிவு செய்துள்ளார். 
பெசஹா ஆட்டுக்குட்டி வெட்டப் படும்போது, அதாவது,​​புளிப்பில் லாத அப்பப் பண்டிகையின்போது, ​​பஸ்கா விருந்துக்குத் தயாராக இயேசு பேதுருவையும் யோவா னையும் அனுப்பினார்.
விருந்து அலங்கரிக்கப்பட்ட மேல் அறையில்ஏற்பாடுசெய்யப்பட்டது.
அன்று இயேசு சாப்பிட்ட கடைசி உணவு (𝚃𝚑𝚎 𝙻𝚊𝚜𝚝 𝚜𝚞𝚙𝚙𝚎𝚛)பின்னர் திருச்சபையால் ஒரு சடங்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
யூதர்களால் அனுசரிக்கப்படும் மூன்றில் மிக முக்கியமான பண்டிகை.பெசஹா.
இது எபிரேய மொழியில் பெசா என்றும் கிரேக்க மொழியில் பாஸ்கா என்றும் அழைக்கப்படுகி றது. இந்த வார்த்தைக்கு 'கடந்து செல்வது' (𝚙𝚊𝚜𝚜 𝚘𝚟𝚎𝚛) என்று பொருள்.
பெசகா என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததையும், அவரது மரணத்தின் மூலம் பெறப் பட்ட மீட்பையும் குறிக்கிறது. திருத்தூதர் பவுல் அடிகளார், இயேசு நம்முடைய பஸ்கா ஆட்டுக் குட்டி என்று கூறினார்.
(1.கொரிந்தியர் 5:7), பாஸ்கா ஆண்டவரை நினுவுகூறும் படியா க செய்ய வேண்டியது.எகிப்தில் ஆரம்பிக்கப்பட்ட பாஸ்கா இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. இயேசு உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிறதேவஆட்டுக்குட்டி.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! பாஸ்கா யூதர்கள் மட்டு மே கொண்டாட வேண்டிய ஒரு பண்டிகையாக இருந்தது
(விடுதலைப் பயணம் 12: 42-49) அதை உலகளாவிய மக்களுக்கு உரிமைப் பொருளாக கொடுத்தார் ஆண்டவர்.
பாஸ்கா ஒரே வீட்டிற்குள் இது உண்ணப்படவேண்டும். இறைச்சி எதுவும் வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படலாகாது. எந்த எலும்பையும் நீங்கள் முறிக்கக் கூடாது. 
(விடுதலைப் பயணம் 12:46)
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே பாஸ்கா பலிஆட்டின் எந்த எலும்பையும் முறிக்கக் கூடாது கடவுளின் கட்டளையாக கொடு க்ப்படுகிறது. இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டப்பிறகு, கள்வர்க ளின் எலும்புகளை முறித்தவர்கள்  இயேசு கிறிஸ்துவின் எலும்பை முறிக்கவில்லை. இயேசு கிறிஸ்துவை உண்மையான பலி. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கின்ற தேவ ஆட்டுக்குட்டியே பலியாக நமக்கு கொடுக்கப்பட் டார்.
1.பாஸ்கா: விடுதலை பண்டி கை.  𝙿𝚊𝚜𝚜𝚔𝚑𝚊 𝚒𝚜 𝚝𝚑𝚎 𝚏𝚎𝚜𝚝𝚒𝚟𝚊𝚕 𝚘𝚏 𝙻𝚒𝚋𝚎𝚛𝚊𝚝𝚒𝚘𝚗. (விடு. பயணம் 12:1-7).
 கிறிஸ்துவுக்குப் பிரியமானவர் களே! கடவுளால் தெரிந்து கொள் ளப்பட்ட இஸ்ரேல் மக்கள் 430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைப் பட்டு இருந்தவர்களை விடுதலை செய்யப்பட்டதை நினைவு கூறுவ தற்காக பாஸ்கா கொண்டாடப்படு கிறது. இந்த பாஸ்கா யூத மக்க ளுக்கானது. யூத மக்கள் தவிர வேறு யாரும் இந்த பாஸ்காவை கொண்டாட முடியாது.ஆனால் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டியாக இயேசு உலக மக்களுக்களின் பாவத்திற்கான பாஸ்கா பலியாக தம்மை ஒப்புக்கொடுத்தது .
எகிப்தில் முதல் பஸ்கா பண்டிகை யின் போது, ​​உணவு நின்று கொண்டே உண்ணப்பட்டது.            ( விடுதலை பயணம் 12:11)
 இயேசுவின் பாஸ்கா சீடர்களோடு அமர்ந்து பகிர்ந்து உண்டு அனுச ரிக்கப்பட்டது.
 இஸ்ரேல் மக்கள் பாஸ்கா பண்டி கை கொண்டாடப்பட்ட மாதமே வருடத்தின் முதல் மாதமாக மாறியது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனுசரித்த பாஸ்கா கடைசி திருவிருந்து ஆக மாறி யது. (𝚃𝚑𝚎 𝙻𝚊𝚜𝚝 𝚜𝚞𝚙𝚙𝚎𝚛)
பாஸ்காவில் சிந்தப்பட்ட இரத்தம்
 ஒவ்வொரு வீட்டின் வாசல் கதவுகளில் பூசப்பட்டது, எகிப்தின் அனைத்து ஆண் தலைமகன் சாவுக்கு காரணமானது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவ ங்களை நீக்கி நம்மை இரட்சித் தது. இஸ்ரேல் மக்களின் பாஸ்காவில் சிந்தியது விலங்கி ன் இரத்தம், ஆனால் உலக மக்க ளுக்காக சிந்தப்பட்டது ஆண்ட வரின் தூய ரத்தம். இஸ்ரவேல் மக்கள் பாஸ்கா உன்னும்போது குடும்பத்தில் போதுமான ஆட்கள் இல்லை என்றால், மற்ற குடும்பத் தில் இருந்து ஆட்களை இவர்கள் அழைத்துக் கொள்ளலாம் இது நம் திருச்சபையை அடையாளப்படுத் துகிறது நம் திருச்சபை அனைவ ரையும் சேர்த்துக் கொள்கின்ற ஒரு இடம்.எல்லாவற்றையும் உட்படுத்திய இடம். The church is
an Ecumenical. திருச்சபையின் கூட்டொருமை நற்கருணை, ஒரு பாஸ்கா, இது பாவத்தில் இருந்து  விடுதலை அளிக்கிறது.
2 நற்கருணை: ஆண்டவரின் வருகையை உறுதிப்படுத்து கிறது.1.கொரிந்தியர்11:23-34
𝗘𝘂𝗰𝗵𝗮𝗿𝗶𝘀𝘁: Confirms the coming of Christ.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நற்கருணை நம் ஆண்டவர் திரும்பி வர காத்திருக்கிறோம். அவர் வருவதை உறுதிப்படுத்து கிறது.
 கிறிஸ்துவின் நற்கருனையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அணுகுகிறார்கள். சிலர் அதை வழக்கமான ஒன்றாகவும், ஒருசிலர் மிக சாதாரணமானதா கவும் சிலர் மகிழ்ச்சியான ஒன்றாகவும், சிலரே அதை மிக தூயதாக கருதுகிறார்கள்.
மேலும் நற்கருணை அவர்களை அதிக நன்றியுணர்வு, அதிக மன்னிப்பு, அதிக கருணை மற்றும் இயேசுவிடம் அதிக அர்ப் பணிப்புடன் இருக்க தூண்டுகி றது. இது அவர்களுக்கு ஒரு உண்மையான வழிபாட்டுச் முறை
யாகும்.
 கர்த்தரின் நற்கருணை நம்மை காயப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்கவும், நாம் உந்து தல் பெறவும், தைரியம் கொள்ள வும்,   நற்கருணை நமக்கு ஆண்ட வரின் கிருபை உள்ளவர்களாக மாற்றுகிறது.
 கிறிஸ்துவின் நற்கருணை அவரி ன் மரணத்தை நாம் நினைவு கூற செய்வதோடு, எவ்வாறு நம்மை மீட்டு எடுத்தது  என்றும் எவ்வாறு ஒப்புரவாக்கியது என்ப தை நாம் சிந்திக்கின்ற இடம். நாம் கர்த்தருடைய நற்கருணையை  உட்கொள்ளும்போது, ​​நம் குடும்ப த்தில் உள்ள மக்களை  நினைத் துப் பார்த்து, அவர்களையும் மீட்டெ டுங்கள்.நற்கருணையில், இயேசு கிறிஸ்துவையும், சிலுவையில் அவர் செய்த தியாகத்தையும் நினைவுகூருவது அவர் பாடுகளி ல் பங்கு பெற நம்மை அழைக்கிற து.நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து இந்தப் பாத்திரத்தில் குடிக்கும் ஒவ்வொரு முறையும், நாம் கர்த்தருடைய மரணத்தை அறிவிக்கிறோம்..." 
கர்த்தருடைய நற்கருணை மூலம் அவருடைய மரணத்தை அறிவிக் கும் அந்தச் செயல், உலகத்தில் கிறிஸ்துவை அறிவிக்க நமக்கு கொடுக்கப்பட்ட கடமை யாகும்.
3. நற்கருணை: திருச்சபையின் சாக்கிரமந்து.𝙴𝚞𝚌𝚑𝚊𝚛𝚒𝚘𝚞𝚜: 𝚃𝚑𝚎 𝚂𝚊𝚌𝚛𝚊𝚖𝚎𝚗𝚝 𝚘𝚏 𝚝𝚑𝚎 𝙲𝚑𝚞𝚛𝚌𝚑.மாற்கு 14:17-25
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நற்கருணை, திருச்சபையி ன் சாக்கிரமந்துகளில் ஒன்றாகும்.
சாக்கிரமந்து (sacrament) என்பது இலத்தீன் சொல் ஆகும்.அதன் தமிழ் அர்த்தம் திருவருட்சாத னம் என்பதாகும். நற்கருணை யின் முக்கிய நோக்கமே ஆண்டவ ரின் மரணத்தை நினைவு கூறுவ தாகும். நற்கருணையின் போது ஆண்டவர், " அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப் படுகிற எனது இரத்தத்தால் நிலை ப்படுத்தப்படும் புதிய உடன்படிக் கை. (லூக்கா நற்செய்தி 22:19,20)
 நற்கருணை, கர்த்தருடைய மரணத்தையும், உயிர்த்தெழுத லையும் மற்றும் எதிர்காலத்தில் அவருடைய மகிமையான வருகையையும் நினைவுகூரச் செய்கின்றது.
பஸ்கா பண்டிகை போலவே திருவிருந்தும் ஒரு நினைவுகூரும் ஆசரிப்பு ஆகும்.நானே வாழ்வின் அப்பம் என்ற இயேசு (யோவான் 6:48), நீங்கள் வாங்கிப் புசியுங்கள் (மாற்கு 14:22) என்றார். நற்கரு ணை  இயேசுவின் இரத்தத்தி லான புது உடன்படிக்கையின் அடையாளமாகும் மத்தேயு, திருவிருந்தை, அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படி க்கை என்கிறார் (மத்தேயு 26:28). 
நற்கருணையில் கிறிஸ்து என்ற ஆட்டுக்குட்டியின் பலியின் தன்மையைநினைவுகூருகிறோம்.
 பிரியமானவர்களே! நற்கருணை யில்,நமக்காக இயேசு கிறிஸ்து கொடுத்த சரீரத்தையும், இரத்தத் தையும் நாம் நினைவுகூருகி றோம்  என்பதை திருவிருந்து ஜெபங்கள் நமக்கு நினைவூட்டு கின்றன. இயேசுவை பின்பற்ற வும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவும் நாம் வாக்களிக்கிறோம். தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள முயற்சிக்க நாம் வாக்களிக்கிறோம்.
நற்கருணை: இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எவ்வளவு நன்மையும், எவ்வளவு இன்பமுமானது. அந்த ஒரே அப்ப த்தில் நாமெல்லாரும் பங்கு பெறு கிறபடியால், அநேகராகிய நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிரு க்கிறோம். என்ற கூட்டொருமை யை உண்டாக்குகிறது.
திருவிருந்து: இரட்சகரை நினைவு கூருவதற்கான ஒரு வழி. அவ்வழி யில் தொடர்ந்து நாம் பயணிக்க ஆண்டவர் கிருபை செய்வாராக ஆமென். 

𝙿𝚛𝚘𝚏. 𝙳𝚛. 𝙳𝚊𝚟𝚒𝚍 𝙰𝚛𝚞𝚕 𝙿𝚊𝚛𝚊𝚖𝚊𝚗𝚊𝚗𝚍𝚊𝚖, 𝚂𝚎𝚛𝚖𝚘𝚗 𝚆𝚛𝚒𝚝𝚎𝚛.
𝚠𝚠𝚠. 𝚍𝚊𝚟𝚒𝚍𝚊𝚛𝚞𝚕𝚜𝚎𝚛𝚖𝚘𝚗𝚌𝚎𝚗𝚝𝚛𝚎. 𝚌𝚘𝚖
𝚠𝚠𝚠. 𝚍𝚊𝚟𝚒𝚍𝚊𝚛𝚞𝚕𝚋𝚕𝚘𝚐𝚜𝚙𝚘𝚝. 𝚌𝚘𝚖











"கிறிஸ்துவோடு ஒன்றுபடும் நிலைக்கு நற்கருணை துணை யாகிறது" என்று நெகேமியா கோரே என்ற இறையியலார் புரிந்துகொள்கிறார்."









.     குணமாக்கப்படுகிறோம்.

கடைசி இராப்போஜனம்

கடைசி இராப்போஜனம்–கார்ல் ஹெயின்ரிச் பிளாக்

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.