தாகமாயிருக்கிறேன். (203) I am thirsty யோவான் 19:28-29.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! சிலுவையில் மொழிந்த ஐந்தாம் வார்த்தை நான் தாகமாய் இருக்கிறேன் இவ்வார்த்தை நிகழ் காலத்திலே யே குறிக்கப்பட்டு இருக்கிறது அவர் இன்றும் தாகமாய் இருப்ப தை நினைவு படுத்துகிறது.
 ஆண்டவருக்கு ஏற்பட்ட உடல் ரீதியான தாகமும் 𝙿𝚑𝚢𝚜𝚒𝚌𝚊𝚕 𝚝𝚑𝚒𝚛𝚜𝚝 ஆன்மீக ரீதியான 𝚂𝚙𝚒𝚛𝚒𝚝𝚞𝚊𝚕 𝚝𝚑𝚒𝚛𝚜𝚝.தாகமும் இங்கு அடங்கி இருக்கிறது.
 அவருடைய தாகம் தீர்க்கதரிசன ங்கள் 𝚏𝚞𝚕𝚏𝚒𝚕𝚖𝚎𝚗𝚝 𝚘𝚏 𝙿𝚛𝚘𝚙𝚑𝚎𝚌𝚢 நிறைவேற ஏற்பட்டிருக்கிறது. அவருடைய தாகம் மனித இரட்சிப்புக்காக  𝚜𝚊𝚕𝚟𝚊𝚝𝚒𝚘𝚗 𝚘𝚏 𝚑𝚞𝚖𝚊𝚗 ஏற்பட்டிருக்கிறது. அவருடைய தாகம்  பாடுகளின் அடையாளமாய் ஏற்பட்டது 
𝙿𝚑𝚢𝚜𝚒𝚌𝚊𝚕 𝚜𝚞𝚏𝚏𝚎𝚛𝚒𝚗𝚐.
அவரது புனித உடலின் இரத்த நாளங்கள் கிட்டத்தட்ட வறண்டு விட்டன. அவரது உடலில் ஒரு பயங்கரமான வெப்பம் பரவுகிறது. அவரது நாக்கு அவரது தாடைகளைப் பற்றிக் கொள்கி றது.அவரதுஉதடுகள்எரிகின்றன..இந்த" தீராத தாகத்தை விடபெரிய வேதனை எதுவும் இல்லை". இந்த உடல் ரீதியான துன்பத்தின் வெளிப்பாடு தான் நான் தாகமாய் இருக்கிறேன்.தாகமாயிருக்கிறேன் என்பது இயேசுவின் சரீரத்துக் குரியது. முடிந்தது என்பது அவரது ஆத்துமாவுக்குரியதுசங்கீதம் 42 : 2ல் “என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?” என்கிறார்.
1. ஏன் இயேசு தாகமாய் இருந் தார்.𝚆𝚑𝚢 𝙹𝚎𝚜𝚞𝚜 𝚠𝚊𝚜 𝚝𝚑𝚒𝚛𝚜𝚝𝚢?
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஏன் இயேசு தாகமாய் இருந் தார் என்பதற்கு:
1. வேத வார்த்தைகள் நிறைவேற வேண்டும்:
 தன் வாழ்நாளில் ஆண்டவர் வாழ்வு தரும் தண்ணீரை தன்னுடைய திருவாசனத்தின் மூலம் மக்களுக்கு அளித்தார் யோவான் 4,ல் சமாரியா பெண்ணிடம் வாழ்வு தரும் தண்ணீர் நானே என்றார் இப்படி ஜீவ தண்ணீரை கொடுக்கும் ஆண்டவர் தாகமாய் இருந்தார் என்றால் அவரை குறித்தான வேத வார்த்தைகள்,  தீர்க்கதரிசன ங்கள் நிறைவேற வேண்டும் என்ற வேட்கையால் இது நடந்தேறியது. 
 சங்கீதக்காரன் கூறுவது போல :
"என் வலிமை ஓடுபோலக் காய்ந் தது; என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; என்னைச் சாவின்புழுதியிலேபோட்டுவிட்டீர். திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 22:15)என்ற இந்த சங்கீதத்தை நிறைவேற்றுகிறார். 29 ஆம் வசனத்தில்  “ புளிப்பு மது நிறைந் த ஒரு ஜாடி அங்கே நின்றது, அதனால் அவர்கள் புளிப்பு மது நிறைந்த கடற்பாசியை ஈசோப்புக் கிளையில் வைத்து, அதை அவர் வாயில் வைத்தார்கள்.” இயேசு சங்கீதம் 69 ஐ நிறைவேற்றினார்.
 தாகமாய் இருத்தல் என்பது நரகத்தில் இருப்பவர்களின் தண்டனையாகும். செல்வந்தனும் லாசரசும் என்ற உவமையில் லூக்கா நற்செய்தி16:19-31ல், "தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். இலாசர் தமது விரல் நுனியை நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் வெந்து, வறண்டு நான் மிகுந்த வேதனையை அடைகிறேன்" என்று உரக்கக் கூறினார். ஆண்டவர் நமக்காக சிலுவையில் நரக வேதனை அடைவதை நாம் காண்கிறோம்.
2.இயேசு உடல் ரீதியாக துன்ப ப்பட்டார்.
 கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! இயேசு, 100 % கடவுளின் மகன் 100 % மானிட மைந்தன்,  அவர் பசி மற்றும் தாகம் போன்ற விஷயங்களை நம்மில் மற்றவர்களைப் போல வித்தியாச மாக அனுபவித்தார். ஆண்டவர் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சுமார் 6 மணி நேரம் சிலுவையில் பாடுபட்டார். இதில், மூன்று மணி நேரங்கள் கடுமையான வெயிலில் கழித்தார். இதனால் அவருக்கு உடல் ரீதியான தாகம் ஏற்பட்டது.
 இயேசு தம்முடைய அன்பான சீடரான யோவானிடம் வசனம் 19: 25-27-ல் தன் தாயைக் கவனித்துக் கொள்ளச் சொன்ன பிறகு, வசனம் 28-ல் , “ இதற்குப் பிறகு, எல்லாம் முடிந்தது என்பதை அறிந்த இயேசு, “எனக்குத் தாகம்” என்றார்.” யோவான், “எனக்குத் தாகம்” என்று இயேசு சொல்வதற்கு முன்னுரையாக, “எல்லாம் இப்போது முடிந்தது என்பதை அறிவேன்” என்ற கூற்றை எழுதினார். அதன் அர்த்தம் என்ன? இயேசுவின் தாகம் பற்றிய அறிவிப்பு சிலுவை யில் அவர் செய்த தியாகத்தின் இறுதிப் பகுதியில் வருகிறது என்று அர்த்தம். அவர் கேலி செய்யப்ப ட்டார், அடிக்கப்பட்டார், சிலுவையில் அறையப்பட்டார், மேலும் முந்தைய வசனங்களில் நாம் பார்த்தது போல், அவரது தாயாருக்கு ஏற்பாடு செய்தார். தியாக மரணம் அடையும் அவரது பணி கிட்டத்தட்ட நிறைவடைந் துவிட்டது. இந்த நேரத்தில்தான் இயேசு, “எனக்குத் தாகம்” என்ற வார்த்தைகளை உச்சரிக்கிறார்.
இந்த கட்டத்தில், இயேசு மரணம் வருவதை உணர்கிறார்.
3.இயேசு தாகமாக இருந்ததால் நாம் தாகமாக இருக்க வேண்டிய தில்லை.
 ஆண்டவருடைய தாகம் நேரடி யானது மற்றும் நியாயமானது, ஆனால் அதே நேரத்தில் அவரின் தாகம்  அவருடைய துன்பத்தின் அடையாளம் ஆகும். நம்முடைய தாகத்தையும் அவர் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார்.
 இயேசுவிடம் வருபவர்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது 
 இறைவாக்கினர் ஏசையா கூறுவது போல, " தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லா தவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங் கள், வாருங்கள், காசு பணமின்றி த் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். (எசாயா 55:1)
 ஆண்டவர் சமாரியா ஸ்திரியிடம்,
தேவனுடைய ஈவையும், உன்னிடத்தில் குடிக்கத் தண்ணீர் கொடு என்று சொல்லுகிறவர் யார் என்பதையும் நீ அறிந்திரு ந்தால், நீயே அவனிடம் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத் தண்ணீரைக் கொடுத்தி ருப்பார்" (யோவான் 4:10)
 இந்த உலகில் மனிதர்கள் பல விடயங்களில் தாகமாய் இருக்கிறார்கள் ஆனால் வாழ்வு தரும் தண்ணீரை இப்படி இயேசுவிடத்தில் வருகின்ற போது அவர்கள் என்றும் இளப்ப டையார்கள் தாகமடையார். 
 அன்பானவர்களே! வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரம் பெற்றவர், கற்பாறையில் தண்ணீரை வரவழைத்தவர், தண்ணீரையே திராட்சைரசமாக மாற்றினவர், தன்னுடைய நலனுக்காக அவர் எந்த அற்புதமும் செய்யவில்லை.
அவர் தாகமாயிருக்க வேண்டுமென்பது பிதாவின் சித்தமாயிருந்தது. இயேசு தன்னுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்ற இந்த உலகத்துக்கு வரவில்லை. பிதா தன்னை அனுப்பின சித்தம் நிறைவேறு வதற்கு எந்தப் பாடுகளையும் அனுபவிக்க பிதாவுக்கு எப்போதும் கீழ்ப்படிந்திருந்தார். 

 திருத்தூதர்  பவுலடியார் 
1 கொரிந்தியர் 12 : 13ல் “நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீன ராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள் ளாக ஞானஸ்நானம் பண்ணப் பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள் ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.” என்கிறார். ஐந்தாம் வார்த்தையின் சிறப்பு கிறிஸ்துவுக்குள் இருக்கிறவர்கள் இனி தாகம் அடைய மாட்டார்  

Prof Dr. David Arul Paramanandam 
Sermon Writer 
www.davidarulsermoncentre.com
www.davidarul blogspot. com.



புனித வெள்ளி
இயேசு சிலுவையில் அறையுண்டு இறத்தல். ஆண்டு: 1868
இயேசு சிலுவையில் அறையுண்டு இறத்தல். ஆண்டு: 1868

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.