உயிர்த்த ஆண்டவரால் ஆற்றல் பெறல்.( 205) 𝙴𝚖𝚙𝚘𝚠𝚎𝚛𝚎𝚍 𝚋𝚢 𝚝𝚑𝚎 𝚁𝚒𝚜𝚎𝚗 𝙻𝚘𝚛𝚍. தொடக்க நூல் 28:10-22, திருப்பாடல் 29. திருத்தூதர் பணிகள் 20:7-12 யோவான் 20:11-18. உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் முதலாம் ஞாயிறு
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உயிர்த்தெழு ந்த கிறிஸ்துவின் இனிய நாமத் தில் வாழ்த்துக்கள். உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் முதலாம் ஞாயிற்றுக் கிழமை தலைப்பாக கொடுக்கப் பட்டிருப்பது உயிர்த்த ஆண்ட வரால் ஆற்றல் பெறல்.
ஆற்றல் Empowered என்றால் என்ன?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆற்றல் என்றால், ஒருவர் ஒரு செயலை செய்ய கொடுக்க ப்படும் அதிகாரம் or சக்தி அல்லது திறமை எனப்படும். உயிர்த்த கிறிஸ்துவின் ஆற்றல் மூலம் அவரின் விண்ணரசை இவ்வுல கில் நாம் கொண்டு வருவதற்கு கொடுக்கப்பட்ட ஒரு அதிகாரமா கும்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலம், மனிதர்களுக்கு புதிய நம்பிக்கை, சக்தி, மற்றும் ஆவிக் குரிய புதுப்பிப்பித்தல் கிடைக் கிறது.இது கிறிஸ்தவ நம்பிக்கை யின் ஒரு மையக் கருத்தாகும். உயிர்த்த கிறித்து, தன் சீடர்களை ஓரிடத்தில் வர வழைத்து விண் ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. நீங்கள் போய் அனைத்து மக்களினத் தையும் சீடராக்குங்கள் என்றார். சமத்துவ சமுதாயத்தை உருவா க்க, நான் உங்களுக்குக் கட்டளை யிட்டயாவற்றையும் மக்கள் கடைப் பிடிக்கும்படி கற்பியுங்கள் (மத்தேயு 28:16-20) என்றார். உயிர்த்த கிறிஸ்துவின் கட்டளை சீடராக்குங்கள் மற்றும் கற்பியுங் கள். இவை இரண்டும் இந்த உலகம் இருக்கிறவரை கிறிஸ் தவர்களின் முக்கிய கடமையாய் இருக்கும்."இயேசு துன்புற்று இறந்த பின்பு நாற்பது நாள்களா க அவர்களுக்குத் தோன்றி,இறை யாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்". (திருத்தூதர் பணிகள் 1:3)
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னி க் கப்படும். எவருடைய பாவங்க ளை மன்னியா திருப்பீர்களோ அவை மன்னிக்கப்படா’’ என்பது உயிர்த்த கிருத்துவின் உன்னத அன்பளிப்பு மன்னிப்பாகும்.
மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார்.
(1 கொரிந்தியர் 15:45) உயிர்த்த கிறிஸ்துவின் வல்லமை பெற்ற திருத்தூதர் பேதுருவும் யோவா னும் ஆலயத்துக்கு சென்று கொண்டிருக்கும் வேளையில்
பிறவியிலேயே கால் ஊனமுற்றி ருந்த ஒருவரைச் சிலர் சுமந்துக் கொண்டு வந்தனர்.அவர் பேதுரு வையும் யோவானையும் கண்டு பிச்சைக் கேட்டார். பேதுரு அவரி டம், "வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கி றேன். நாசரேத்து இயேசு கிறிஸ் துவின் பெயரால் எழுந்து நடந்தி டும்" என்று கூறி, (திருத்தூதர் பணிகள் 3:6) முடமானவனை குணப்படுத்தினர். உயிர்த்த ஆண் டவரின் ஆற்றல் பெற்றவர்கள் இத்தகைய அற்புதங்களை அடை யாளங்களை ஆண்டவர் திருப்பெ யரால் செய்தனர்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த் தெழுதல் என்பது ஒரு உருமாற்ற நிகழ்வாகும், இது விசுவாசிகள் எதிர்ப்பை தைரியத்துடன் எதிர் கொள்ள அதிகாரம் அளிக்கிறது.
கிறிஸ்துவின் செய்தியை எந்த சக்தியும் தோற்கடிக்க முடியாது என்பதை உயிர்த்தெழுதல் நமக்கு உறுதியளிக்கிறது. உயிர்த்த இயேசுவின் நாமம் நமது விசுவா சத்தின் மூலக் கல்லாகவும், நாம் இரட்சிக்கப்பட வேண்டிய ஒரே பெயராகவும் இருக்கிறது.உயிர் த்தெழுதல் வல்லமை விசுவாசிக ளையும் விசுவாசிகள் அல்லாத வர்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
உயிர்த்தெழுதல் வல்லமைகிறிஸ் துவின் எதிரிகளை எதிர்க்க நம்மை வழிநடத்துகிறது. நற்செய் தியை அறிவிப்பதில் நாம் தைரிய மாகவும், விட்டுக்கொடுக்காமலும் இருக்க அழைக்கப்படுகிறோம். எதிரி நம்மை மௌனமாக்க முயற் சிக்கலாம், ஆனால் நாம் கண்ட தையும் கேட்டதையும் தொடர்ந்து பேச வேண்டும், ஏனென்றால் அவ்வாறு செய்வதன் மூலம், நாம் இருளைக் கடந்து கிறிஸ்துவின் ஒளியைப் பரப்புகிறோம்.
உயிர்த்த கிறிஸ்து தன் சீடர்க ளுக்கு முதலில் அருளுவது peace "சமாதானம்", அதைத் தொடர்ந்து பாவங்களை மன்னிக்கும் சக்தி ( யோவான் 20:19-23 )
1. உயிர்த்த கிறித்துவின் வல்லமை : The power of risen Lord.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! உயிர்த்த கிறிஸ்து தன் சீடர்கள் செய்த தவறுகளை கண் ணோக்காமல் அவர்களை மன்னி த்து தன் மாபெரும் பணிக்கு தயார்படுத்துவதை நாம் காண் கிறோம். வேதத்திலே மிக சிறிய அளவில் பேசக்கூடிய மரியா சலோமி பற்றி நாம் சிந்திக் கலாம். இவரை நாம் மத்தேயு நற்செய்தியில் முதல் முதலில் பார்க்கிறோம். அவர் தன் மகன் கள் மீது அளவற்ற பாசமும் கொஞ்சம் ஆசையும் நிறைந்த வள் எனவே, இயேசுவின் காலடி யில் மண்டியிட்டு, அவரது மகன் களான யாக்கோபு மற்றும் யோவானுக்கு அவரது விண்ண ரசில் நல்ல பதவிகளைக் கோரு கிறார் ( மத் 20:20-23 ). ஆனால் அவளும் இயேசுவை நேசிக்கவும், அவரது பணியை ஏற்றுக்கொள்ள வும் வளர்கிறாள். சிலுவையில் அறையப்பட்டவுடன், அவளால் அவரைக் கைவிடவும், தனது சொந்த மகன்களை தங்கள் உயிரை காப்பாற்ற ஓடவும் கூட வற்புறுத்தவில்லை. . ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, ஒரு காலத் தில் சுயநலத்திற்காக மண்டியிட்ட பெண் இப்போது உயிர்த்தெழுந்த இறைவனை வணங்கவும், அவரது சீடர்களுக்கு நற்செய்தி யைப் பரப்புவதன் மூலம் அவரு க்கு சேவை செய்ய அவரது அழைப்பை ஏற்றுக்கொள்ளவும் மண்டியிடுகிறாள். உயிர்த்தெழுந்த இறைவனுடனா ன அவரது சந்திப்பு அவரது வாழ்க் கையை எவ்வாறு மாற்றியிருக் கலாம் என்பதற்கான அடையாள மாகும்.
உயிர்த்தெழுந்த ஆண்டவர் திருத் தூதுவர்களுக்குத் தோன்றிய போது இல்லாத, சந்தேக தோமா, தனது சகோதரர்களின் சாட்சியத் தை நம்ப மறுத்துவிட்டார். அவர்
இயேசுவைத் தானே பார்த்துத் தொட வேண்டும். ( யோவான் 20:24-29 )மனித பலவீனத்தின் மீது எப்போதும் கருணை காட்டும் இறைவன், தோமாவின் சந்தேகங் களைத் தணிக்கத் தோன்றுகி றார்.உயிர்த்தெழுந்த இறைவனு டனான புனித தோமாவின் சந்திப்பு முன்னாள் சந்தேகவாதி நற்செய்தியின் மிகுந்த ஆர்வமு ள்ள பிரசங்கியாக மாறுகிறார், அவர் தனது சகோதரர் அப்போஸ் தலர்களை விட அதிக தூரம் பயணிக்கிறார். புனித தாமஸ் தென்னிந் தியாவரை தேவால யங்களை விதைத்து, "பார்க்காத மற்றும் இன்னும் நம்பாதவர் களை" ஆசீர்வதிக்கிறார் ( யோவான் 20:29 ). அவரது 40 ஆண்டுகால மிஷனரி பணி அவரது தியாகத்தால் மட்டுமே நிறுத்தப்படுகிறது.
பேதுரு: புனித பேதுருவின் இதயம் கனமாக இருக்கிறது, ஏனென்றால் அவர் இயேசுவுக் காக தனது உயிரைக் கொடுப்ப தாக உறுதியளித்திருந்தாலும் ( யோவான் 13:37 ), அவர் கைது செய்யப்படுவார் என்ற பயத்தில் மூன்று முறை இயேசுவை மறுத் தார் ( யோவான்18:15-27) இதே பேதுரு, பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவி சீடர்கள் மீது இறங்கியது, பேதுரு ஒரு சக்திவாய்ந்த பிரசங்கத்தைப் பிரசங்கித்தார், அங்கு சுமார் 3,000 பேர் ஆரம்பகால திருச்சபையின் ஒரு பகுதியாக மாறினர்.
அன்பின் ஆண்டவர், அவரைக் கடிந்துகொள்வதற்குப் பதிலாக, புனித பேதுருவை அவர் மீதுள்ள அன்பினால் தனது பணியைத் தொடரச் சொல்கிறார்; "என் ஆடுக ளை மேய்க்க". புனித பேதுரு இந்த அழைப்பை ஏற்றுக் கொள்கிறார், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறான்" ( யோவான் 10:10 ). என்பதை தன் வாழ்க்கையில் நிறைவேற்று கிறார்.
2. விசுவாசத்தின் பயணம். The
Journey of Faith. தொடக்க நூல்
28:10-22
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! யாக்கோபு, பெயெர் செபாவை (கானான்) விட்டு (ஆபிரகாமுக்கும் அபிமெலேக் என்ற சீகேம் மற்றும் மனாசேயின் பழங்குடிப் பிரதேசத்தின் அரசர். இவர் நீதிபதி கிதியோனின் மகனாகவும் இருந்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட உடன்படி க்கையின் படி ஏழு பெண்ணாட் டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தி துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான்.அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணை யிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயெர்செபா என்னப்ப ட்டது.) ஆரானுக்குப் (Haran) போனான். ஏன் சென்றான் என்றா ல் இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன ஒன்று தன் சகோத ரன் ஏசாவிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, இரண்டாவது தனக்கு மனைவியை தன்னுடைய உறவினர்கள் குடும்பத்தில் இருந்து திருமணம் செய்வதற் காக ஆராமுக்கு செல்கிறார். தன் தாய் ரெபாக்காவின் சகோதரன் லாபான் வசிக்கும் ஊர் ஆராம்.
போகிற வழியில் யாக்கோபு தன் தலையின் கீழ் ஒரு கல்லை தலை யணையாக வைத்து அவர் கனவு கண்டார். "இதோ, பூமியில் ஒரு படிக்கட்டு அமைக் கப்பட்டிருந்த து, அதன் உச்சி வானத்தை எட்டி யது" அந்த இடத்திற்குப் பெத் தேல் என்று பெயரிட்டான்" "எல்" என்பது கடவுளைக் குறிக்கும் ஒரு பொது வான சொல், பெத்தேல் என்ற வார்த்தைக்கு "கடவுளின் வீடு" என்று பொருள். பெத்தேல் என்பது எருசலேமுக்கு வடக்கே சுமார் 15 மைல்கள் (24 கி.மீ) தொலைவில் உள்ள ஒரு நகரம். யாக்கோபு கானானின் தெற்கே, பெயெர் செபாவில் தொடங்கி, வடக்கு மற்றும் கிழக்கே ஆரானை நோக்கிப் பயணிக்கிறார். அவர் இதுவரை சுமார் 50 மைல்கள் (80 கி.மீ) மட்டுமே பயணம் செய்துள் ளார்.இதோ, தேவனுடைய தூதர் கள் அதில் ஏறி இறங்குகிறார்கள்" (வசனம் 12). தேவதூதர்கள் மனித ர்களுடன் தொடர்பு கொள்ளும் போது, அது வழக்கமாக ஒரு செய் தியை வழங்குவதற்கோ அல்லது கர்த்தருடைய கட்டளை நிறை வேறுவதைக் காண்பதற்கோ (தொடக்க நூல்19:1-29; 32:1-2;) அல்லது கடவுளைப் புகழ்வதற் கோ (சங்கீதம் 148:2) வருகிறது. அவர்களின் ஏறுதலும் இறங்குத லும் கடவுள் தெரிவிக்க விரும்பும் செய்தியை வெளிப்படுத்துகின்ற ன. இதோ, யெகோவா அதற்கு மேலே நின்றார்".
நான் யாவே, உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவன்" தொடக்க நூலில் "ஆபிர காமின் தேவன்" என்ற சொற் றொடர் முதன்முதலில் வருவது இங்குதான்.(வசனம் 13)
முதலில், தேவன் யாக்கோபுக்கும் அவருடைய சந்ததிக்கும் அந்தத் தேசத்தைக் கொடுப்பார்.இரண் டாவதாக, யாக்கோபின் சந்ததி யினர் உலகை நிரப்ப எல்லா திசைகளிலும் சிதறிச் செல்வார் கள் - யாக்கோபு இன்னும் மண மாகாதவராக இருக்கும்போதே கடவுள் இந்த வாக்குறுதியை அளிக்கிறார்.
மூன்றாவதாக, யாக்கோபின் சந்ததியினர் மூலம் பூமியிலுள்ள அனைத்து குடும்பங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.கடவுளின் ( எலோஹிம் ) வீடு தவிர வேறில் லை , இது பரலோக வாசல்" (வசனம் 17c). யாக்கோபு இந்த இடத்தில் கடவுளைச் சந்தித்ததால் இதை "தேவனுடைய வீடு" என்று அறிவிக்கிறார். பூமியையும் பரலோகத்தையும் இணைக்கும் ஏணியைப் பற்றிய தனது கனவின் காரணமாக அவர் இதை "பரலோக வாசல்" என்று அறிவிக்கிறார். பூமியில் இருக்கி ற ஆண்டவரின் பிள்ளைகள் அவர் மீது விசுவாசம் வைத்து அவரோடு கூட விசுவாச பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உயிர்த் தெழுந்து விண்ணகம் செல்லுகி ன்ற தன்மையை இது விவரிக் கிறது இதற்கு ஆதாரமாக இருந் தவர் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவரே முதற் பலனாக உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்றார்.
3. உயிர்த்தகிறித்துவின் எதிர்வினை. The Reaction of Resurrected Lord. திருதூதர்பணிகள் 20:7-12
கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! இயற்பியல் அறிஞர் சர் ஐசக் நியூட்டனின் மூன்றாவது விதி, "ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் வினை உண்டு" என ஒரு பொருளின் மீது செயல்படுத் தப்படும் விசையை குறித்து எழுதினார். இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் சக்தி, ஆற்றல் திருத்தூதர்களை மிகவும் பலமாகவும் எதிர்வினை ஆற்ற செய்தது. அவர்கள் இயேசு வின் நாமத்தினால் அற்புதங்க ளை செய்து "உலகமெங்கும் கலகம் உண்டாக்குகிற இவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள்.
(திருத்தூதர் பணிகள் 17:6)
என செயலாற்றினர்கள். இது உயிர்த்த கிறிஸ்துவின் ஆற்றலை வெளிப்படுத்தியது.
திருத்தூதர் பவுல் அடிகளார் துரோவா (Troas or Troad மிகப் பழமை வாய்ந்த பட்டினம் ஆகும் இது தற்சமயம் துருக்கியில் உள் ளது) பட்டினத்திற்கு செல்கிறார் அது ஒரு ஞாயிற்றுக்கிழமை நற்கருணை ஆராதனை கலந்து கொண்டு இரவு முழுதும் பிரசங் கத்து கொண்டு வருகிறார் அது 6 மணி நேரம் நீண்ட பிரசங்கம் ஆகும். இது மூன்று மாடி கட்டிடத் தில் மேல் மாடியில் ஆராதனை நடந்து கொண்டு வருகிறது யூத்திகு (Eutychus) என்னும் இளைஞர் ஒருவர் பலகணியில் உட்கார்ந்திருந்தார். பவுல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டி ருந்தார்; தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தார்; அவரை அவர்கள் பிணமாகத்தா ன் தூக்கி எடுத்தார்கள். (திருத்தூ தர் பணிகள் 20:9) இது ஒரு எச்சரி க்கை நாம் ஆராதனை நேரத்தில் தூங்கக்கூடாது. வியாகுல வியா ழன் அன்று கெர்ச்சமனே தோட்ட த்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது சீடர்கள் உறங்கி விழுந்தார்கள். ஆண்டவர் சீடர்களிடம் எனக்காக விழித்திருக்கக் கூடாதா என்று கேட்டார் என்பதே நாம் சிந்திக்க வேண்டும்.
4. மேல்வீட்டரையின் அற்புத அனுபவங்கள்: The miracles of the upper House. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நம் திருவிவ லியத்தில் மேல் வீட்டு அறை அனுபவங்கள் இறைவாக்கின ர்கள் மூலம் பல நிகழ்வுகள் நடந் திருக்கின்றன
1. உயிர்த்த குறித்துவின் வல்லமை பெற்ற திருத்தூதர் பவுல் அடிகளார், கீழே இறங்கி அவன் மேல் விழுந்து, அவனைத் தழுவி: கலங்காதேயுங்கள்; அவன் உயிர் அவனுக்குள் இருக்கிறது என்றார்.
இது சூனேமியப் பெண்ணின் மகனுக்கு எலிசா செய்தது போல, பவுல் அவன் மீது விழுந்து, அவ னைத் தழுவிக் கொண்டிருந்தார். மீண்டும், கடவுள் யூத்திகுவுக்கு உயிர் கொடுத்தது ஒரு உண்மை யான அதிசயம்.பவுல் ஒரு புகழ் பெற்ற பிரசங்கியாகவும், மிஷன ரியாகவும், திருச்சபை நிறுவனரா கவும் மாறுவார். யூதரல்லாத உலகிற்கு நற்செய்தியை எடுத்துச் செல்வதில் அவர் குறிப்பாக திறம் பட செயல்பட்டார். (திருதூதர் பணிகள் 20:9-10 ).
2.பெந்தேகோஸ்தே நாளன்று மேல் வீட்டரையில் இயேசுவின் சீஷர்களும், விசுவாசிகளுமாக 120 பேர் கூடியிருந்த போது, அங்கிருந்த அனைவர் மேலும் ஆவியானவர் இறங்கி பற்பல பாஷைகளைப் பேச வைத்ததை திருதூதர்பணிகள் 2ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.
3. அதே திருத்தூதர் பணிகள் இரண்டாம் அதிகாரத்தில் பார்க் கிறோம். பேதுருவும் சீமோன் வீட்டில் தங்கியிருந்த போது மேல் வீட்டரையில்தான் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தபோது கொர்நேலியு வீட்டிற்குப் போகச் சொல்லி தரிசனத்தைப் பார்த்தார்.
4.மேல் வீட்டு அறையில் தொற்காளின் மரணம்.
தொற்காள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நற்கிரியைகளைச் செய்து வந்தவள். இவள் யோப்பா பட்டணத்தில் வாழும் ஏழைகளுக் கும், விதவைகளுக்கும் தனக்குத் தேவன் கொடுத்த தையல்தைக் கும் தாலந்தைப் பயன்படுத்தி வஸ்திரங்களையும் அங்கிகளை யும் தைத்துக் கொடுத்து உதவி னாள்.அவளிடம் பெரிய பதவி யோ, கல்வியோ, செல்வமோ கிடையாது. ஆனால் மக்களுக்குச் செய்த உதவியினால் கர்த்தருக்கு ஊழியம் செய்து வந்தாள்.இவள் திருச்சபையிலும் சமூகத்திலும் கனத்துக்குரிய பாத்திரமாக,பிறரு க்குஆசீர்வாதமுள்ள பெண்ணாக இருந்தாள்.திருதூதர் பணிகள் 9 : 37, 38 “அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல் வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.
யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்ப தைச் சீடர்கள் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, "எங்களிடம் உடனே வாருங்கள்" என்று கெஞ்சிக் கேட்டார்கள்.
பேதுரு உடனே அங்கு வந்தார்,
பேதுரு அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்; அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, "தபித்தா, எழுந்திடு" என்றார். உடனே அவர் கண்க ளைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார்.
(திருத்தூதர் பணிகள் 9:40)
யூதர்களின் பாரம்பரியத்தில் மேல் வீடு என்பது ஒரு முக்கியமான பகுதியாகும். மேல் வீட்டை ஜெபம் செய்வதற்குப் பயன்படுத்துவர். நண்பர்களே! நாமும் ஒரு மேல் அறையை ஆண்டவருக்காக ஏற்பாடு செய்து அதை நம் மன்றா ட்டு கூடமாக மாற்றுவோமாக மேலறை அனுபவம் அற்புதமான து, அதிசயமானது, ஆண்டவருக்கு பிரியமானது.வேதத்தில் எட்டு பேர் உயிரோடெழுப்பப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பழைய ஏற்பாட்டில் எலியா சாறிபாத்தின் மகனையும் (1இராஜாக்கள் 17 : 20 – 22), எலிசா சூனேமியாளின் மகனையும் (2 இராஜாக்கள் 4 : 32 – 35), எலிசாவின் கல்லறையில் போட்ட மனுஷனையும் (2 இராஜாக்கள் 13 : 21), புதியஏற்பாட்டில் இயேசு வானவர் லாசருவையும் (யோவா ன் 11: 43,44), யவீருவின் மகளை யும் (மாற்கு 5 : 41, 42), நாயீன் ஊர் விதவையின் மகளையும் (லூக்கா 7 : 14,15), பேதுரு தொற்காளையும் (திரு. தூதர் 9 : 36 –41), பவுல் ஐந்திகு என்ற ஒரு வாலிபனையும் உயிரோடெழுப்பினர் (திருதூதர் 20:9, 10)
5.ஆண்டவருடன் மேல் அறை அனுபவம்:
கிறித்துவின் அன்பர்களே! ஆண்ட வரின் மேல்விட்டறை அனுபவம் கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. அன்று ஆண்டவர் தன்னுடைய இறுதி பாஸ்காவை கொண்டாடுவதற்காக சீடர்களு டன் மேல் வீட்டின் அறையை தேர்வு செய்தார். தன் சீடர்களை தன் இறை பணிக்கு தகுதிப்ப டுத்திட அவர்களின் கால்களை கழுவினார். கால்களை கழுவுவது ஒரு சேவை பணிவின் அடையா ளம். இது கிறிஸ்தவர்களின் பண்பாகும். நற்கருணை (Eucharist) என்னும் திரு விருந்தை நமக்கு அடையாளமாக கொடுத் தார் அவற்றில் ஆண்டவரின் திரு சரீரமும் திரு ரத்தமும் நமக்கு மீட்பின் பரிசாக கொடுப்பதை பார்க்கிறோம்.
6.மேல்வீட்டறையில் உயிர்த்த திருச்சபையின் அனுபவம்.
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக் கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லி யபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டி னார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்க ளை அனுப்பகிறேன்" என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர் கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். (யோவான் நற்செய்தி 20:19-22) இந்த மேல் வீட்டு அறை அனுபவத் தில் சீடர் தோமா இல்லை.
அவ்வாறே, மேல் வீட்டு அறையில் தான் இறைவாக்கினர் தானியேல் அவர்கள் தினமும் மூன்று வேளை ஜெபத்தில் ஈடுபட்டார் எலியாவும் எலிசாவும் இதே போல் மேல்வீட்ட றையில் அற்புதங்களை நிகழ்த் தினார். தன் துயரத்தில் துக்கத் தில் சாரா அவர்கள் (Sarah in Tobit ) தன் மேல்விட்டரையில் சென்று ஆண்டவரிடம் விண்ணப்பித் தாள். இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.2 கொரி.5-17* இந்த அனுபவம் நமக்கு இருக்க கடவுள் கிருபை செய்வாராக.
5. உயிர்த்த கிறிஸ்துவின் முதல் சக்தி மரியாள். 𝚃𝚑𝚎 𝙼𝚊𝚛𝚢 𝚘𝚏 𝙼𝚊𝚐𝚊𝚍𝚎𝚕𝚒𝚗 was the first empowered Lady of Resurrected Lord.யோவான் 20:11-18.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே உயிர்த்த கிறிஸ்துவை முதல் முதலில் சந்தித்த முதல் கிறிஸ்தவர் யார் என்றால் அது மகதலேனா மரியாள். இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற நற்செய் தியை ஆண்டவரின் சீடர்களான பேதுருவுக்கும் யோவானுக்கும் முதன்முதலாக அறிவித்தவர் மகதலேனா மரியாள். உயிர்த் தெழுந்த கிறிஸ்துவை முதலில் பார்த்த பெருமை மரியாளுக்கே உரியது. அவள் கல்லறைக்கு முதலில் வந்திருந்தாள்; அவளு க்கு ஏமாற்றம். கல்லறையில் திறந்து இருந்தது ஆனால் ஆண்டவரை காணவில்லை. திரும்பிச் சென்று பேதுரு விடவும் யோவானிடமும் கூறுகிறாள் பின்னர் கல்லறைக்குச் செல்லும் அவர்களின் ஓட்டத்தில் அவள் பின்தங்கியிருக்கலாம், அதனால் அவள் அங்கு சென்று காணவில் லை என்று அவர்கள் போய்விட் டார்கள். ஆனால் அவள் அங்கே யே அழுதுகொண்டே நின்றாள். அழுகை அன்பின் வெளிப்பாடு கவலையின் பிரதி பலிப்பு. உண்மை என்னவென்றால், அவளுடைய கண்ணீரில் அவ ரைப் பார்க்க முடியவில்லை. தோட்டக்காரன் என்று அவள் நினைத்த நபருடனான அவளு டைய முழு உரையாடலும் அவளு டைய அன்பைக் காட்டுகிறது. முதல் தோட்டக்காரர் ஆன ஆதாம்
ஏதேன் தோட்டத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார். இரண் டாம் தோட்டக்காரரான இயேசு கிறிஸ்து அரிமத்யா யோசேப்பின் கல்லறை தோட்டத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டார். மரியாளுக்கு உயிர் பிக்கப்பட்ட இயேசு கிறிஸ்து தோட்டக்காரராக காணப்பட்டார். எனவே அவரிடம்
நீ அவரை எடுத்த மனிதன் என்றா ல், அவரை எங்கே வைத்தாய் என்று சொல்." அவள் இயேசுவின் பெயரை ஒருபோதும் குறிப்பிட வில்லை; நான் அவரை எடுத்துச் செல்வேன்.அவள் அவரை எங்கே அழைத்துச் செல்லப் போகிறாள்?
உலகம் முழுவதும் அவளுக்கு வேறு யாரும் இல்லை. அவளுடை ய ஒரே ஆசை இயேசுவின் இறந்த உடலைப் பார்த்து தன் அன்பை வெளிப்படுத்தி அழுவதுதான். அவள் தோட்டக்காரனாக எடுத்துக் கொண்ட நபருக்கு செய்யும் பணி யாகும். ஆனால் மரியாளுக்கு இயேசுவை அடையாளம் காட்ட முடியாததற்கு இரண்டு காரணங்கள் :
1.அவள் கண்ணீரால் அவனை அடையாளம் காண முடியவில் லை. அவள் பார்க்க முடியாதபடி அவர்கள் அவள் கண்களை குருடாக்கினர்.
2.துக்கம் வரும்போது, கண்ணீர் நம் கண்களை மகிமையிலிருந்து மறைக்க ஒருபோதும் அனுமதிக் கக்கூடாது. அவள் தவறான திசையில் எதிர்நோக்கிக் கொண் டிருந்தாள் எனவே இயேசுவை பார்க்க முடியவில்லை.
இயேசு அவரிடம், "மரியா" என்றார். மரியா திரும்பிப் பார்த்து, "ரபூனி" என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு "போதகரே" என்பது பொருள். இயேசு மரியாளிடம் கூறினார்: "என்னைத் தொடாதே, ஏனென்றால் நான் இன்னும் பிதாவினிடத்தில் ஏறிப்போகவி ல்லை." இங்கு ஆண்டவர் மரியா ளை தொட அனுமதிக்கவில்லை ஆனால், அவர் தோமாவைத் தன்னைத் தொட அழைத்ததைக் காண்கிறோம்.என்னைப் பிடிக்காதே, ஏனென்றால் நான் இன்னும் பிதாவினிடத்தில் ஏறிப்போகவில்லை", அவர் ஏறிய பிறகு அவரைத் தொட முடியும் என்று சொல்வது போல். இதற்கு எந்த விளக்கமும் முழுமையாக திருப்திகரமாக இல்லை.
லூக்காவில், அவர் பயந்துபோன சீடர்களை அழைத்ததாக வாசிக் கிறோம்: "என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், அது நானே; என்னைத் தொட்டுப் பாருங்கள்; ஏனென்றால், நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டே" ( லூக்கா 24:39 ). மத்தேயுவின் கதையில், "அவர்கள் மேலே வந்து அவரு டைய பாதங்களைப் பிடித்து வணங்கினார்கள்" ( மத்தேயு 28:9 ) என்று வாசிக்கிறோம். யோவானி ன் கூற்றின் வடிவம் கூட கடினமா னது. அவர் இயேசுவைச் சொல்ல வைக்கிறார்: "
உயிர்த்த கிறிஸ்துவின் வார்த்தை சீடர்களை பார்த்து : "பயப்படாதே." என்பதே.மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர் களிடம் சொன்னார். மரியாளின் அந்தச் செய்தியில் கிறிஸ்தவத் தின் சாராம்சம் உள்ளது, ஏனெ னில் ஒரு கிறிஸ்தவர் அடிப்படை யில் "நான் கர்த்தரைக் கண்டேன்" என்று சொல்லக்கூடியவர். கிறிஸ் தவம் என்றால் இயேசுவைப் பற்றி அறிவது அல்ல; அது அவரை அறிவது. அது அவரைப் பற்றி வாதிடுவதைக் குறிக்காது; அது அவரைச் சந்திப்பதைக் குறிக்கி றது. இயேசு உயிருடன் இருக்கி றார் என்ற அனுபவத்தின் உறுதி யைக் குறிக்கிறது. உயிர்த்த கிறிஸ்து நமக்கு வல்லமையை சக்தியை, செயலாக்கும் திறமை யை தருகிறார் அந்த வல்லமை யானது விண்ணரசை இவ்வுல கில் கொண்டு வருவது. ஒவ்வொ ரு கிறித்துவர்களின் கடமையா கும். கடவுள் நம்மை ஆசீர்வதித்து காப்பாராக! ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
மகதலா மரியா | |
---|---|
![]() சிலுவை அடியில் மகதலா மரியா |
சிலுவை அடியில் மகதலா மரியா
Comments
Post a Comment