புனித திங்கள் "நீ துன்புறுத்தும் இயேசு நானே" I am Jesus whom you are Persecuting இந்திய சிறுபான்மையினர் (199) தானியேல்: 6: 1-28, யோனா: 4:1-10, உரோமையர்: 16:1-16, யோவான்: 4:1-26.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் பாடுபடும் மைந் தன் இயேசு கிறிஸ்துவின் நாம த்தில் வாழ்த்துக்கள். தூய வாரத் தின் தலைப்பாக நமக்கு கொடுக் கப்பட்டிருப்பது  
"நீ துன்புறுத்தும் இயேசு நானே"   ( I am Jesus whom you are Persecuting)      இந்த தூய வாரத் தில் ஆண்டவரின் பாடுகளை சிந்திக்கின்ற நாம் இந்திய நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களையும் சிந்திக்க வேண்டும் என்ற உன்னது நோக்கத்தில்  இந்நாளை நமக்கு தென்னிந்திய திருச்சபை அறிவித்திருக்கிறது. அதற்கு நம்முடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.    
யார் சிறுபான்மையினர்?  இந்தியாவில் முஸ்லீம்கள், கிறித் துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர் கள், பார்ஸிகள் மற்றும் சமண மதத்தினர் ஆகிய ஆறு மதத்தின ரும் சிறுபான்மையினர். 
இவர்கள் இன, மொழி, மதம், பண் பாடு அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலோ, விகிதா ச்சார அடிப்படையில் குறைந்த அளவிலோ வாழ்பவர்கள். சிறு பான்மையினர் பூர்வகுடிகளா கவோ, குடிபெயர்ந்தோராகவோ இருக்கலாம். எண்ணிக்கையில் சிறுபான்மையினராய் இருந்தா லும், அவர்களும் தங்கள் வாழும் பகுதியின் குடிமக்களே என்பதால், பல நாடுகள், பகுதிகள் இவர்களு க்கும் சம உரிமையை வழங்கியுள் ளன.அனைத்து சிறுபான்மையின ரும்..தங்களுக்கென கல்வி நிறுவ னங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்"_என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 30(1) அதிகாரம் அளிக்கிறது.
 சிறுபான்மையினருக்கான திருச்சபையின் பங்கு என்ன?
 அன்பானவர்களே! திருச்சபையே ஒரு சிறுபான்மையின் அமைப்பு தான். அது தன் சிறு பான்மை, ஏழை, எளிய, விளிம்புநிலை மக்க ளுக்காக பல நற்காரியங்களை செய்து கொண்டே வருகிறது.
 திருச்சபைகள் பல நாட்டில் சிறு பான்மையின் நலத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடும் அமைப்பாக இருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண் டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சமூக சேவை அமைப்புகள் போன்றவற்றை திருச்சபைகள் நடத்த காரணமே சிறுபான்மையின் நலத்திற்காக தான். ஆனாலும் இவ் நிறுவனங்க ளில் வணிகத்தனமான செயல்க ளும் இருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. தென்னி ந்திய திருச்சபை ஒன்றிணைந்து கேரளாவில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு உதவியது 
 பாராட்டுக்குரியது. சிறுபான்மையினருக்கு பொருளா தார, கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் திருச்சபைகள் மிகப்பெரிய கவனத்தை செலுத்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். மிக முக்கியமாக சிறுபான்மை மாணவர்கள் படித்து அரசுத்துறைகளில் வேலை கிடைக்க திருச்சபையில் சிறப்பு பயிற்சிகளை நடத்த வேண்டும். கல்வி உதவி தேவை அவர்களுக் கு வழங்க வேண்டும் என்பது இக்காலத்தின் கட்டாய தேவை யாக இருக்கிறது. திருச்சபை சமூகத்தோடு ஒட்டி வாழ வேண் டும். தன்னை பிரித்துக் கொள்ளக் கூடாது, தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது.
1 நீ துன்புறுத்தும் இயேசு நானே"
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! துன்புரும் இயேசுவின் வார்த்தை  "நீ துன்புறுத்தும் இயேசு நானே" என்ற வார்த்தை சவுல் என்ற பவுலுக்கு மட்டுமல்ல நம்மையும் கேட்கும் வார்த்தை. நான் ஆண்டவரை துன்புறுத்துகி றேனா? Am I perscuting Jesus? எந்த வகையில் துன்புறுத்துகிறேன் என ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்வியாகும்.
சவுல் என்பவர் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த வாலிபர். இவர் தீவிர யூத மதத்தில் பற்றுக் கொண்டவர். யூத மதத்தின் தோரா எனப்பட்ட மத சட்ட திட்டங் களை தீவிரமாக கற்று நடந்தவர். தம்மை மதத் தீவிரவாதியாகவே கருதினார். யூத மதத்திற்கு எதிரானவர்களை கல்லெறிந்து கொன்று போட்டு யூத மதத்தின் பாதுகாவலராகவே கருதினார். தம்மையொத்த வாலிபர்களை இணைத்துக்கொண்டு தீவிர மதவாதியானார். எங்கெங்கெ ல்லாம் கிறிஸ்தவர்கள் துன்பப்ப டுத்துகிறார்களோ அங்கெல்லாம் இயேசு கிறிஸ்து துன்புரும் கிறிஸ் துவாக இருக்கிறார். கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் அது ஆண்டவரை தாக்குதலாகும். ஒரு காலம் வரும் தாக்கியவர்கள் பவுல் அடிகளார் போல ஆண்ட வரை ஏற்றுக் கொள்கின்ற மக்க ளாக மாறுவார்கள்.நிச்சயம் நம் தேவன் ஜீவன் உள்ள தேவன் ஒவ்வொருவரும் படுகின்ற பாடுக ளை கண்ணோக்கிப் பார்க்கிறார் இந்தியாவில் நம்முடைய ஆலயங் கள் இடிக்கப்படுகின்றன, நம் போதகர்கள் தாக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் பொருளாதா ரத்திலும், சமூகத்திலும் அவர் களை ஒடுக்குகிறார்கள் இவைகள் எல்லாம் ஆண்டவர் மீது நேரடியான தாக்குதலாகும்.   கிறிஸ்தவனை அசால்டாக எண்ணி விடாதே என்ற பாடல் நினைவுக்கு வருகிறது அவன் வெட்ட வெட்ட வளருவான் இது உண்மை நம் ஆண்டவர் நம்மை கைவிடமாட்டார். துன்பத்தின் ஊடாக கிறிஸ்து வளர்ந்தது உலகம் முழுவதும் பரவியது அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. தடுத்த சாம்ராஜ்யங்கள் காணாமல் போயின, ஏன் அழிந்து போனது. முள்ளில் உதைப்பது உங்களுக்கு கடினம் என்பதை இந்நாளில் எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கிறேன்.
2..உன் கடவுள் உன்னை விடுவி ப்பாராக!"தானியேல்: 6: 1-28.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் மிக பிரமாண் டமான கட்டடங்களைக் கட்டி தன் பேரரசின் தலைநகரில் கோட்டை கொத்தளங்களை எழுப்பி அதை வலுப்படுத்த அரும் பாடுபட்டார். 
கி. மு 539-ல். மேதிய படையோடு வந்த பெர்சிய அரசனாகிய இரண்டாம் கோரேசு,(Cyrus) பாபிலோனைக் கைப்பற்றி அதன் கல்தேய அரசனாகிய பெல்ஷா த்சாரைக் கொன்று போட்டான்.
 அக்காலகட்டத்தில் இறைவாக்கினராய் இருந்தவர் தானியேல் என்ற கடவுளுடைய தீர்க்கதரிசி.  தானியேல் யூத குலத்தைச் சேர்ந்தவன். ராஜ பரம்பரையில் உள்ளவன். எசேக் கியா ராஜாவுக்கு உறவினன். தானியேலின் வாழ்வும் ஊழிய மும் பாபிலோன் சிறைவாசகால மான 70 ஆண்டுகளும் விரிந்து நின்றது. 16வது வயதில் கைதியா கப் பாபிலோ னையடைந்தார். தானியேல் “மேதியனாகிய தரியு (Darius the Mede) தன் 62 அறுபத்திரண்டாம் வயதில் அரசனானான். இவன் தந்தை .
அகாஸ்வேரு.
தரியு பதவியேற்றவுடன், “ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிரு பது தேசாதிபதிகளையும்” ‘அவர்களுக்கு மேலாக மூன்று ஆளுநர்களை ஏற்படுத்தினார்;’ “இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்”தானியேல் ஒரு ஆளுநராக இருந்தார். இவர் மிகவும் நேர்மையான ஒரு ஆளுநர் இதனால், மற்ற ஆளுநர் ள், இவர் மீது பொறாமை கொண்ட னர். தானியேலிடம் தரியு அரசன் மிகவும் பிரியமாயிருந்தான்.
 இதனால் பொறாமை கொண்ட இரண்டு பிரதானிகளும் தேசாதி பதிகளும் சேர்ந்து சதித்திட்ட மொன்றைத் தீட்டினார்கள். அவர்கள், 30 நாள்வரைக்கும் தரியுவைத் தவிர ‘எந்த தேவனை யாகிலும் மனுஷனையாகிலும் நோக்கி விண்ணப்பம் பண்ணுவ தைத்’ தடைசெய்யும் அரசாணை யில் கையெழுத்தைப் பெறும்படி அரசரிடம்  சென்றார் கள். அதை மீறுகிற எவரும் சிங்க கெபியிலே போடப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் கொடுத் தார்கள். பதவியிலுள்ள எல்லா அரசாங்க அதிகாரிகளுக்கும் இதில் சம்மதம் என்றும் இந்த யோசனை ராஜாவுக்கு தங்கள் ராஜபக்தியைக் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பு என்றும் தரியுவை இவர்கள் நம்ப வைத்தார்கள். தரியு அரசன் அந்த ஆணைக்கு கையொப்பமிட்டார் தானியேக்கு ஆபத்தும் ஆரம்பமானது. அரசனின் ஆணையை மீறிய முதல் ஆள் தானியேல் அவர் தன்னுடைய ஆண்டவரை தடை யை மீறி தொடர்ந்து வழிபட்டார்.
மாற்றமுடியாத அந்தச் சட்டத்தின் தண்டனையிலிருந்து தானியே லைத் தப்புவிக்க ராஜா மனப்பூர்வ மாக முயற்சிகள் எடுத்தார். ஆயினும் உண்மையுள்ள தானி யேல் சிங்க கெபிக்குள் எறியப்பட் டார். தானியேலின் கடவுள் அந்தத் தீர்க்கதரிசியை உயிரோடே காக்க வல்லவர் என்ற நம்பிக்கை தரியுவுக்கு இருந்தது.
இராமுழுவதும் உண்ணாமலும் உறங்காமலும் இருந்த தரியு அதிகாலையில் சிங்க கெபியி னிடம் விரைந்தார். எந்த சேதமும் இன்றி தானியேல் உயிரோடிருந்த தைக் கண்டபோது அவர் மெய்சி லிர்த்துப் போனார்! தானியேலை குற்றஞ்சாட்டியவர்களையும் அவர்களுடைய குடும்பங்களை யும் ராஜா உடனடியாக சிங்க கெபிக்குள் போடுவதன் மூலம் அவர்களை நியாயமாக பழிவாங் கினார். ‘தன் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர் கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்ற’ கட்டளை யையும் பிறப்பித்தார்.
 தானியேல் அவருடைய மூன்று வேளை ஜெபமும், கடவுள் மேல் இருந்த உறுதியான பற்றுறுதி யும் நேர்மையுமே அவரை விடுவித்து காப்பாற்றியது. தானியல் வழியில் நாமும் துன்பத்திலும் இன்பத்திலும் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் ஆண்டவர் மீது உறுதியாய் இருப்போம்.
3.துன்புறுத்தும் யோனா:
யோனா 4:1-10.
 அன்பானவர்களே ஒரு இறை வக்கினனின் அடிப்படைத் தகுதி கடவுளுக்கு கீழ்ப்படிதல் (Obed ience) கடவுளுடைய வார்த்தை யை எடுத்துச் சொல்லுதல். (Messenger) இதை மீறுகின்றான் மனதளவில் கடவுளை துன்புறுத் துகிறான் யோனா.Mentally tourching our God.
நினிவே என்ற நகரத்தின் மிஞ்சிய பாவத்தைக் கண்டு, அதை அழிக்க நினைத்த தேவன், அது குறித்து எச்சரிக்க, தீர்க்கத் தரிசி யோனாவை அங்கு செல்லுமாறு கூறுகிறார். இவர் காலம் கி.மு.786-746. இவரின் தந்தையாரும் ஒரு இறைவாக்கி னர் தான்.(2. இராஜாக்கள் 14 :25 )
தான் செய்த பாவத்தில் மனிதன் அழிந்து போவதைத் தேவன் ஒருநாளும் விரும்புவது இல்லை. அவர் மீட்கவே விரும்புகிறார் மன்னிப்பின் ஆண்டவர் அவர் மீட்பர்.
யோனா, நினிவே நகரம் அழிக் கப்பட விரும்பினார். ஏனென்றால் அங்கு புற இனத்தார்கள் அதிகம் வாழும் பகுதி. இவர் எபிரேய தீர்க்கதரிசி, யூதர். நினிவே மக்களோ அசீரியர்கள், விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்.  பின்னர் கடவுள் ஒரு ஆமணக் குச் செடியைப் பயன்படுத்தி யோனாவை கடவுள் அனைத்து உயிரினங்களையும் நேசிக்கிறார் என்று கற்பிக்க முயற்சிக்கிறார்,
 அன்பானவர்களே,இறை வாக்கி னர்களிலேயே கடவுளிடம் கடும் சினம் கொண்டவர் தீர்க்கர் யோனாவாக தான் இருக்க முடியும்.
 ஆண்டவரே, என் உயிரை எடுத்துக் கொள்ளும், வாழ்வதை விட சாவதே மேல் என்று ஆண்டவரிடம் கூறிய மனிதர் இவர். 
 ஆண்டவர் உருவாக்கிய ஆமணக்கு செடியை ஒரு புழு மூலம் அதை அழிக்கிறார். இதற்காக யோனா ஆண்டவர் மீது கோபம் கொள்கிறார்.
 யோனாவே, நீ வளர்க்காத ஆமணக்கு செடிக்கு  இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை எது, இடக்கை எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிருந்த கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?" என்றார். 
 கடவுள் யார்?
 அன்பானவர்களே யோனாவின் கூற்றுப்படி கடவுள் யார்?
1. அவர் கனிவு மிக்கவர், 2.இரக்கமுள்ளவர், 
3.மிகுந்த பொறுமை உள்ளவர் 4.அளவிலா அன்பும் உள்ளகடவுள்  5.அழிக்க நினைப்பார்; பிறகு தம் மனத்தை மாற்றிக் கொள்வார்.
 நமக்கு கூட கடவுள் அப்படிதான் நம்மை நமது பாவங்களில் இருந்து மீட்கவே எப்போதும் விரும்புகிறார். அழிக்க நினைப் பதில்லை அவர் மன்னிப்பின் தேவன், மனமாற ஒரு மனுசன் இல்லை.
4. திருச்சபையில் சிறுபான்மை பெண்களின் பங்கு : உரோமையர்: 16:1-16.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிகளார் ரோம திருச்சபையாருக்கு எழுது கின்ற போது அவருடைய திருப்ப ணியில் சேர்ந்து பணியாற்றிய பெண்களுக்கும் மற்றும் அனைத் து ஊழியர்களுக்கும் பெயர் குறிப்பிட்டு வாழ்த்துக்களை பதிவு செய்கிறார். பெண்கள் திருச்சபை யின் கண்கள். பெண்கள் இல்லை என்றால் ஆலயமே வெறிச்சோடி இருக்கும் ஆலயத்தை நிறப்புப வர்கள் பெண்கள் தான்.
இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களைக் கவனியுங்கள்: ஃபோபேயாள் , பிரிஸ்கில்லா , மரியாள் , திரிபேனா , ரூஃபஸின் தாய் திரிபோசா , ஜூலியா . இவர்கள் கர்த்தருக்காக வேலை செய்த பெண்கள்.கிறிஸ்துவுக்காக உழைப்பது ஒரு மரியாதை, அதிகமாக உழைப்பது இன்னும் பெரிய மரியாதை.அவர்கள் கர்த்தரை நேசித்தார்கள், எனவே பவுல் அவர்களின் பெயர்களை நினைவு கூர்ந்தபடி, பரிசுத்த வேதாகமத்தில் பதப்படுத்தப்பட்ட அன்பின் செய்தியை அவர்களுக் கு அனுப்பினார். 
பிரிஸ்கில்லா மற்றும் அகிலா வை ப் பற்றிய ஸ்பர்ஜன் : “இரண்டு அன்பான இதயங்கள் ஒன்றிணையும்போது அவை அதிசயங்களைச் செய்கின்றன.
என்றார்.இவர்களின் வீட்டில் இருக்கும் தேவாலயம் ஒரு சான்
றாகும்.இவர்கள் பவுலின் கூட்டா ளிகளாகவும் அப்பல்லோவின் உதவியாளர்களாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. 
எப்பனேட்டஸ் முதல் மதம் மாறிய வர்களில் ஒருவர் என்பது தெளிவாகிறது. எப்பனேட்டஸ் பவுலுக்கும் மிகவும் பிரியமானவ ராக இருந்தார்.
ஆண்ட்ரோனிகஸ் மற்றும் ஜூனியா : இவர்கள் வெளிப்ப டையாக யூதர்கள் பவுலின்  உறவி னர்கள் மற்றும் நற்செய்திக்காக சிறையில் பவுலோடு அடைக்கப்ப ட்டனர்  அவரின் சக கைதிகள்.
 ஆம்ப்லியாஸ் : ரோமின் ஆரம்பகால கிறிஸ்தவர். இவர் கல்லறை ரோமில் உள்ளது.
 அரிஸ்டோபுலஸின் வீட்டாரை வாழ்த்துங்கள்.அரிஸ்டோபுலஸ் மதம் மாறவில்லை, ஆனால் அவரது வீட்டில் பலர் மதம் மாறி னர் என ஸ்பார்ஜன் கூறுகிறார்.
ரூஃபஸ் : இவர் மாற்கு 15:21- ல் சிரேனே ஊரானாகிய சீமோனின் மகன் என்று குறிப்பிடப்பட்டுள் ளார்.நேரியஸ் : கி.பி. 95-ல் இரண்டு புகழ்பெற்ற ரோமானியர் கள் கிறிஸ்தவர்களாக இருந்ததற் காகக் கண்டனம் செய்யப்பட்டனர். கணவர் தூக்கிலிடப்பட்டார், மனைவி நாடுகடத்தப்பட்டார். அவர்களின் தலைமை ஊழியரின் பெயர்தான் நேரியஸ்.
அசின்கிரிட்டஸ்... ஃபிளெகோன்... பட்ரோபாஸ்... ஹெர்ம்ஸ் : இந்தப் பெயர்களில் மீதமுள்ளவற்றில், பவுல் கிட்டத்தட்ட ஒவ்வொருவ ரையும் பற்றி அற்புதமான ஒன்றைச் சொல்கிறார் - அவர்க ளின் உழைப்பு, அவர்கள் மீது அவருக்கு இருந்த சிறப்பு மரியா தை. இவர்கள் துன்பப்படும் கிறிஸ்துவாக உழைத்தவர்கள் பாடுகளை அனுபவித்தவர்கள் எனவே தான் இவர்கள் பெயர்கள் திரு விவலியத்தில் இடம் பெற்று இருக்கின்றன.
5. விளிம்பு நிலை மக்களை விடுவித்தல். யோவான்: 4:1-26.
𝚃𝚑𝚎 𝚕𝚒𝚋𝚎𝚛𝚊𝚝𝚒𝚘𝚗 𝚘𝚏 𝚖𝚊𝚛𝚐𝚒𝚗𝚊𝚕𝚒𝚣𝚎𝚍
𝙿𝚎𝚘𝚙𝚕𝚎.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நம்முடைய ஆண்டவருடைய இறை பயணத்தில் பாடுபடும் மக்களை தேடிச் சென்றவர். இங்கு இந்த சமாரியா பெண்ணிடம் தேடிச் சென்று வாழ்வு தரும் தண்ணீரை அள்ளிக் கொடுத்தார்.
சமாரியா வழியாகச் செல்லும் பாதை எருசலேமிலிருந்து கலிலேயாவுக்குச் செல்லும் குறுகிய பாதையாக இருந்தாலும், பக்தியுள்ள யூதர்கள் பெரும்பா லும் அதைத் தவிர்த்தனர். பல யூத மக்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே ஆழ்ந்த அவநம்பிக்கை மற்றும் வெறுப்பு இருந்ததால் அவர்கள் அவ்வாறு செய்தனர்.
சமாரியர்கள் கெரிசிம் மலையில் யெகோவாவுக்குத் தங்கள் சொந் த ஆலயத்தைக் கட்டினார்கள், ஆனால் யூதர்கள் அதை கிமு 128 இல் எரித்தனர். இது யூதர்களுக் கும் சமாரியர்களுக்கும் இடையி லான உறவை இன்னும் மோசமா க்கியது. இந்த சூழலில் இயேசு சமாரியா வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. யாக்கோபின் கிணறு  சீகார் என்ற இடத்தில்  இருந்தது :  சீகார் நகரம் பண்டை ய சீகேம் , அது சமாரியர்களின் தலைநகரம்.கானானில் ஆபிரகா முக்குக் கடவுள் முதன்முதலில் தோன்றிய இடம் இதுதான்,
இது யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலம்.
இதை யாக்கோபு கானானியரான ஏமோரிடமிருந்து 100 வெள்ளிக் காசுகளுக்கு இந்த நிலத்தை வாங்கினார். ( ஆதியாகமம் 33:19 )
எகிப்திலிருந்து கொண்டு வரப்ப ட்டபோது யோசேப்பின் எலும்புகள் இறுதியில் அடக்கம் செய்யப்பட்ட இடம் இதுதான். ( யோசுவா 24:32 )
இங்குதான் யோசுவா இஸ்ரவேலுடன் ஒரு உடன்படிக்கை செய்து, இஸ்ரவேலின் கடவுளுக்கு தங்கள் உறுதிப்பாட்டை புதுப்பித்து, நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம் என்று அறிவித்தார் . ( யோசுவா 24 )
இந்த கிணற்றின் அருகே இயேசு  அமர்ந்தார்.அது சுமார் ஆறாம் மணி நேரம், அதாவது பிற்பகல்,
நல்ல வெயில்.
சமாரியாவைச் சேர்ந்த ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள் : 
 அன்பானவர்களே! இந்தப் பெண் ஒரு அசாதாரண நேரத்தில் தண்ணீர் எடுக்க வந்தாள், அவள் தனியாக வந்தாள். பொதுவாக, பெண்கள் அதிகாலையில் தண்ணீர் எடுக்க வருவார்கள், அவர்கள் குழுக்களாக வருவார் கள். ஒருவேளை திடீரென்று ஏதாவது தேவை இருந்திருக் கலாம், அல்லது ஒருவேளை அவள் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட வளாக இருந்திருக்கலாம், சமூகத்தில் உள்ள மற்ற பெண் களால் ஒதுக்கப்பட்டவளாக இருக்கலாம்.
யூத பாரம்பரியத்தின்படி, ஒரு ரபீ பொது இடத்தில் ஒரு பெண்ணி டம் பேசமாட்டார், அவருடைய சொந்த மனைவியிடம் கூட பேச மாட்டார்.
அந்தக் கால யூதர் ஒருவர் சமாரியரின் கிண்ணத்திலிருந்து உதவி கேட்பதோ அல்லது பானம் அருந்துவதோ மிகவும் அசாதார ணமானது, நடக்காது.
இஸ்ரவேலின் மெசியாவாகிய அவர் ஒரு சமாரியப் பெண்ணிடம் பேசுகிறார்.
ஜீவத் தண்ணீரை தன்னிடத்தே உள்ளவர், கிணற்றில் குடிக்கக் கேட்கிறார்.
ஒரு யூதனாக இருந்தும், சமாரி யப் பெண்ணான என்னிடம் நீ எப்படி ஒரு பானம் கேட்கிறாய்?
 அன்பானவர்களே! அக்காலத்தில் இருந்த சமூகத்தின் ஏற்றத் தாழ்வு களை இது எடுத்துக்காட்டுகிறது.
யூதர்கள் சமாரியர்களை சபித்த னர், மேலும் அவர்கள் சபிக்கப்பட் டவர்கள் என்று நம்பினர்.
இயேசு அப்பெண்ணைப் பார்த்து, "கடவுளுடைய கொடை எது என்பதையும் "குடிக்கத் தண்ணீர் கொடும்" எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர். அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப் பார்" என்றார். 
அவள், ஐயா, உம்மிடத்தில் மொண்டுகொள்ள ஒன்றுமில்லை, கிணறும் ஆழமாயிருக்கிறது என்றாள்.
அந்த ஜீவத்தண்ணீர் உமக்கு எங்கிருந்து வரும்? என்று கேட்டால்.
அவள், "எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். என்றாள்.
இந்தத் தண்ணீரைக் குடிப்பவருக்கு மீண்டும் தாகம் எடுக்கும் என்றார்.
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிப்பவருக்கு ஒருபோதும் தாகம் எடுக்காது என்றார்.
நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலை வாழ்வு அளிக்கும்" என்றார். 
அப்பெண் அவரை நோக்கி, "ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது" என்றார். ஆண்டவரிடம் நிலைவாழ்வுதரும் தண்ணீரை கேட்டு பெற்றுக் கொண்ட மாபெரும் மகளாக அந்த சமாரியா பெண் இருக்கிறார்.

𝙿𝚛𝚘𝚏. 𝙳𝚛. 𝙳𝚊𝚟𝚒𝚍 𝙰𝚛𝚞𝚕 𝙿𝚊𝚛𝚊𝚖𝚊𝚗𝚊𝚗𝚍𝚊𝚖, 𝚂𝚎𝚛𝚖𝚘𝚗 𝚆𝚛𝚒𝚝𝚎𝚛.

𝚠𝚠𝚠. 𝚍𝚊𝚟𝚒𝚍𝚊𝚛𝚞𝚕𝚜𝚎𝚛𝚖𝚘𝚗centre.com
www.davidarulbligspot.com











Messiah in prophecy.

The Clever Samaritan Woman

The Clever Samaritan Woman




Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.