புனித புதன். "நீ துன்புறுத்தும் இயேசு நானே" I am Jesus whom you are Persecuting (201). பாலஸ்தீன மக்கள். யோனா 4:1-12.

முன்னுரை கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே புனித வாரத்தின் புதன்கிழமை தலைப் பாக கொடுக்கப்பட்டிருப்பது, நீ துன்புறுத்தும் இயேசு நானே" I am Jesus whom you are Persecuting. பாலஸ்தீன மக்கள்.    
பலத்தீன் நாடு (State of Palestine, என்பது மேற்கு ஆசியாவில் தெற்கு லெவண்ட் பிரதேசத்தில் உள்ள ஒரு நாடு ஆகும். இது இரண்டு துண்டிக்கப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கியது - மேற்குக் கரை, காசாப் பகுதி, கூட்டாக பாலத்தீனியப் பிரதேசங் கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடு இசுரேலுடன் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கிலும், கிழக்கில் ஜோர்தானுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. 
 நமது தூய திருவிவிலியத்தில் பலஸ்தீன் நாடு புனித நாடாக (𝙷𝚘𝚕𝚢 𝙻𝚊𝚗𝚍.) கருதப்படுகிறது.இது யூதேயா, சமாரியா மற்றும் கலியிலேயே அடங்கியுள்ள உள்ள நாடு இதற்கு இஸ்ரேல் என்றும் கானான் (𝚃𝚑𝚎 𝚕𝚊𝚗𝚍 𝚘𝚏 𝙲𝚊𝚗𝚊𝚗) என்றும் அழைக்கப்படுகிறது. 
 இது கடவுளிtன் பூமி (𝚝𝚑𝚎 𝚕𝚊𝚗𝚍  𝚘𝚏 𝙶𝚘𝚍)என்றும் வாக்கு தத்தம் பண்ணப்பட்ட நாடு ( 𝚝𝚑𝚎 𝚕𝚊𝚗𝚍 𝚘𝚏 𝚙𝚛𝚘𝚖𝚒𝚜𝚎) என்றும் அழைக்கப்படு கிறது. இது யூதாவின் நாடென் றும் அடைக்கப்பட்டது (𝚝𝚑𝚎 𝚕𝚊𝚗𝚍 𝚘𝚏 𝙹𝚞𝚍𝚊) 
தொடக்கநூல் 10:14 ன்படி, பெலிஸ்தியர்கள் நோவாவின்
பிள்ளைகள் வழியாக வந்தவ ர்கள்.இவர்களின் மூதாதையர் கஸ்லுகிம், கப்தோரிம்.
 பாலஸ்தீனத்தை இஸ்ரவேலரும் கிரேக்கரும் ரோமானியரும் ஆட்சி செய்தனர். திருவிவிலியத்தில் பாலஸ்டின் என்பது கானானை குறிக்கும்.இன்று பாலஸ்தீனியர் கள் என்ற சொல் பாலஸ்தீன மாநிலத்தில் (மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெருசலேம்) வாழ்பவர்களைக் குறிக்கிறது,
பாலஸ்தீனிய கிறிஸ்தவர்கள் மக்கள்தொகையில் 2.5 -6% சதவீதமாக உள்ளனர், 
1914-க்கு முன்பு வரை பாலத்தீன பகுதியை ஓட்டோமான் பேரரசு ஆண்டு வந்தது. பாலத்தீனத்தில் அரேபியர்கள்பெரும்பான்மையாக வும், யூதர்கள் சிறுபான்மையினரா வாகவும் இருந்தனர்.முதலாம் உலகப்போரில் ஒட்டோமான் பேரரசு வீழ்ந்தது. பிரிட்டன் ஆளுகையின் கீழ் பாலத்தீனம் வந்தது. அப்போது சர்வதேச சமூகம் பிரிட்டனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தது. அது பாலத்தீனத்தில் யூதர்களுக்கு அவர்களுக்கான ‘தேசியத் தாயகத்தை’ தோற்றுவிப்பதே.
1947-ம் ஆண்டு பிரிட்டன் பாலத்தீனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது. அப்போது பாலத்தீனத்தை இரண்டாக பிரித்து யூதர்களுக்கு ஒரு நாடும், பாலத்தீன அரபிகளுக்கு ஒரு நாடும் தோற்றுவிக்கவும், இரு சமூகத்துக்கும் புனித நகரமாக கருதப்படும் ஜெருசலேமை சர்வதேச நகரமாக மாற்றவும் ஐநா ஆதரவளித்தது.இந்த திட்டத்தை யூத தலைவர்கள் ஏற்றுக்கொண் டார்கள். ஆனால் பாலத்தீன அரபிகள் நிராகரித்தார்கள்.
 1967-ல் நடந்த ஆறுநாள் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலமேயும் மேற்கு கரையையும் ஆக்கிரமித்தது. மேலும், சிரியன் கோலன் குன்றுகள், காஸா மற்று ம் எகிப்தின் சினாய் தீபகற்பத் தின் பெரும் பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது.பாலத்தீன அகதிக ள் பலரும் அவர்களது சந்ததியி னரும் காஸா, மேற்கு கரை மற்றும் அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் வாழ்கின்றனர்.
காஸா பகுதியைச் சுற்றி இஸ்ரேல் கடுமையான தடைகளை ஏற்படுத்தினாலும், ஹமாஸ் குழு காஸாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ‍ ஆமா ஸ்கூல் இருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஏற்பட்ட சண்டையினால் 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு அகதிகளாக காசாவில் முகாம்களில் தங்கி இருக்கின்றனர் இவர்களின் துயரம் துக்கங்கள் என்று நிறுத்தப்படுமோ அன்றுதான் ஆண்டவர் மகிழ்ச்சி அடைவார்
கொடூரமான போர்த் தலைவரான "ஜோசுவா தி கசாப்புக்காரன்" தலைமையிலான யூத பழங்குடியினரின் ஒரு குழு இப்பகுதியைக் கைப்பற்றியது. இந்த வரலாற்றுக் கணக்கின்படி, "ஜோசுவா தி கசாப்புக்காரன்" "அமைதியான பாலஸ்தீனத்திற்கு" போரை கொண்டு வந்தார், மேலும் யூதர்கள் நகரங்களைக் கொள்ளையடித்தனர், கால்நடைகளைத் திருடினர்
அவர்கள் கண்ட அனைவரையும் கொன்றனர். 
1 சாமுவேல்  4:1–10 இல் விவரிக்கப்பட்டுள்ள இந்தப் போரின் போது , ​​பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் படையைத் தோற்கடித் து உடன்படிக்கைப் பெட்டியைக் கைப்பற்றினர். முதல் போரில் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்க ளை தோற்கடித்து, 4,000 இஸ்ரவே லர்களைக் கொன்றனர்.
பெலிஸ்தியர்கள் மீண்டும் இஸ்ர வேலர்களைத் தோற்கடித்தனர், இந்த முறை 30,000 பேரைக் கொன்று பெட்டியைக் கைப்ப ற்றினர்.
விவிலிய மிக்மாஷ் போர்  என்பது சவுல் ராஜாவின் மகன் யோனத் தானின் கீழ் இஸ்ரவேலருக்கும் , பெத்தேலுக்கு கிழக்கேயும் மிக்ரோனுக்கு தெற்கேயும் உள்ள ஒரு நகரமான மிக்மாஷில் பெலிஸ்தியர்களின் படைக்கும் இடையே நடந்தது . 
1 சாமுவேல் 13- ல்,சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடேகூட இருந்த ஜனங் களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் தங்கினார்கள் ; பெலிஸ்தர்களோ மிக்மாசிலே முகாமிட்டிருந்தார்கள். இப்போரில் பெலிஸ்தியர்களின் உயிரிழப்புக ளை 60,000 பேர் வரை கணக்கி ட்டார் வரலாற்று ஆசிரியர் ஜோசபஸ்,
தாவீது பெலிஸ்தனான  கோலியாத்தை தோற்கடித்தது வரலாற்றில் மறக்க முடியாத செயல் ஆகும்.
இஸ்ரவேலில் நடக்கும் போரைப பற்றி கடவுள் என்ன சொல்கிறார்? எருசலேமின் அமைதிக்காக தொடர்ந்து ஜெபியு ங்கள், கர்த்தருடைய சேனையின் தளபதியாகிய அவரை நோக்கிப் பாருங்கள். சண்டை எப்போதும் ஒரு தீர்வாகாது அமைதி ஒன்றே தீர்வாக அமையும் அந்த அமைதி அமைதியின் அரசர் இயேசு கிறிஸ்துவின் அன்பினாலே செயலாற்ற முடியும்.
1.யுத்தம் கர்த்தருடையது(The battle belongs to the Lord).
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! யுத்தம் கர்த்தருடையது. அவர் சேனைகளின் கர்த்தர். அவர் நமக்காக யுத்தம் செய்வார். ஆனால் ஆனால் அநீதி நிமித்தம் யுத்தம் செய்வது கடவுள் விரும்பு வதில்லை. கர்த்தர் பட்டயத்தினா லும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று  இந்த ஜனக் கூட்ட மெல்லாம் அறிந்து கொள்ளும், யுத்தம் கர்த்தருடையது, அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான் 
(1 சாமுவேல் 17:47). தாவீது கோலியாத்தை கர்த்தரின் மேல் வைத்த நம்பிக்கையினால் வெற்றி பெற்றான்.
1.சகிப்புத்தன்மை மற்றும் இரக்கத்திற்கான அழைப்பு”,A call for tolerance and compassion”
யோனா 4:1-12.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இறைவாக்கினர் யோனா மிகவும் கோபம் உள்ள ஒரு மனிதராகவும், சகிப்புத்தன்மை அற்றவராகவும், இரக்கம் இல்லா தவராய் இருக்கிறார். ஆனாலும் கடவுள் அவரை அழைக்கின்றார் இவர் யூத வெறியாளர். கடவுள் யூதருக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கின்றவர். ஆனால் கடவுள் உலக மக்களை நேசிக்கி ன்ற கடவுள் என்பதை இவர் புரிந் து கொள்ளும்படியாக செய்கின்ற பகுதி தான் இந்த யோனாவின் வரலாறு. எந்த ஒரு ஊழியக்கார ரும் யோனாவைப் போல இருக்கக் கூடாது, கடவுள் விரும்புகின்ற இரக்கம், சகிப்பு தன்மை உடையவ ராய் இருக்க வேண்டும், "இரக்கமு ள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்."
அன்பானவர்களே யோனா தீர்க்கர் ஒரு யூத வெறியன், இவர்,
இஸ்ரேலின் மோசமான அரசர்க ளில் ஒருவரான இரண்டாம் ஜெரோபெயாமின் ஆட்சியின் போது தோன்றினார். இரண்டாம் ஜெரோபெயாமின் அரசாங்க த்திற்கு ஆதரவாக தீர்க்கதரிசனம் உரைத்தார்.
நினிவேயின் துன்மார்க்கத்தைப் பற்றி யோனா பிரசங்கிக்க வேண் டும் என்று கடவுள் விரும்பினார். கடவுளின் சித்தத்தை கடவுளின் வழியில் செய்ய யோனா விரும்ப வில்லை. கடவுள் தலையிட்டு, அவரது பயணத்தை இடைமறிக்க வேண்டி யிருந்தது, இறுதியாக யோனா கீழ்ப்படிந்து நினிவேக்குச் சென் றார். ராஜா முதல் சமூக ஏணியில் மிகவும் தாழ்ந்தவர் வரை முழு நகரமும் உண்ணா விரதம் இருந்து தங்கள் செயல்களை மாற்றிக்கொண்டது. 
இது சகிப்பின்மையை வென்று இரக்கத்தை வளர்ப்பதற்கான கடவுளின் அழைப்பாகும். தேவன் நகரத்தை காப்பாற்றியதைக் குறித்து யோனா மகிழ்ச்சி அடைய வில்லை, கோபம் அடைந்தான். யோனாவின் கோபம் (வசனம் 1-5) மற்றும் கடவுளின் இரக்கம்
கடவுள் அவருக்கு இரண்டு கேள்விகளுடன் பதிலளிக்கிறார்: "நீ கோபப்படுவது நல்லதா?" (வசனம் 4) மற்றும் "நீ ஆமணக்கு செடியைப் பற்றி கோபப்படுவது நல்லதா?" (வசனம் 9) இது கடவுளின் வரம்பற்ற மற்றும் உலகளாவிய கருணையைக் குறிக்கிறது. இந்த வழியில், யோனாவின் கதை சகிப்புத்தன் மை மற்றும் இரக்கத்தின் யாத்தி ரைக்கு நம்மை அழைக்கிறது.
தேவனுடைய இரக்கம் யோனா வைக் கோபமடையச் செய்தது. ல
 தீர்க்கதரிசியின் மீது வெறுப்பு இருந்தபோதிலும், கர்த்தர் தம்முடைய இரட்சிப்பு நோக்கங்க ளை நிறைவேற்ற யோனாவைப் பயன்படுத்தினார். இதுதான் கடவுளின் தன்மை அவரின் பண்பு.
 யோனா யார்?
அன்பானவர்களே யோனாவின் தனிப்பட்ட குணங்களை சிந்திக் கின்ற போது அவர் யார் என்று நமக்கு புரியும். ஆனாலும் கடவுள் அவர் மூலமாக நினிவே நகர மக்க ளுக்கு இரட்சிப்பை அளிக்கிறார் அதுதான் ஆண்டவரின் அற்புதம்.
1.யோனா தன்னைப் பற்றியும், தன் ஆறுதலைப் பற்றியும், தன் மக்களைப் பற்றியும், (யூத மக்கள்)தன் நாட்டைப் பற்றியும் முழுமையாகக் கவலைப்பட்டான். கடவுளால் பயன்படுத்தப்பட்ட போதிலும் அவன் மிகவும் சுயநலவாதியாக இருந்தான்.
2. அசீரியர்கள் (நினிவே மக்கள்,) மதம் மாறுவதை என்னால் பொறு த்துக்கொள்ள முடியவில்லை."
3. நினைவே மக்கள், கடவுளின் கிருபைக்கு தகுதியற்றவர்கள், ஆனால் கடவுளின் கிருபை என்பது நம்மைத் துன்புறுத்து பவர்களை நேசித்து ஆசீர்வதிப் பதாகும் என்பதை யோனா ஒரு போதும் புரிந்து கொள்ளவில்லை.
4.யோனாவின் மனப்பான்மை ஒன்றுதான் அவரது கீழ்ப்படியா மை. சுயநலத்திலிருந்துதான் கீழ்ப்படியாமை வந்தது. 
5.யோனா தனது எதிரிகள் மீது கடவுள் துன்பத்தை வரவழைக்க வில்லை என்பதில் மிகவும் அதிரு ப்தி அடைகிறார்.
6.இப்போது, ​​கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள் ளும்; ஏனென்றால், நான் வாழ்வ தைவிட சாவது நல்லது.” 
என்றார்.
7.நினிவேயைத் தண்டிக்காததில் யோனா கோபமடைந்தார்:நான் மிகவும் கோபமாக இருக்கிறேன், நான் இறந்து போயிருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
8.கடவுள் யோனாவை மன்னித்து காப்பாற்றுகிறார். 
9.கடவுள் யோனாவுக்கு நினைவே மக்களுக்காக செய்தியைக் கொடுக்கிறார். கடவுள் நினிவே மக்களை செய்தியைக் கேட்க வைக்கிறார். 
10.கடவுள் மக்களை செய்தியை நம்பவும், மனந்திரும்பி, மனம் மாறவும், தன்னை வணங்கவும் வைக்கிறார். கடவுள் நினிவேயை மன்னிக்கிறார்.
அன்பானவர்களே கடவுளின் மன்னிப்பின் குணமும் இறக்கமும் சகிப்புத் தன்மையும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கு இருக்க வேண்டும் என்பதே இந்த புனித வாரத்தின் செய்தியாகும் அவ்வாறு நாம் பயணிக்க கடவுள் நமக்கு கிருபை செய்வாராக ஆமேன்.

𝙿𝚛𝚘𝚏. 𝙳𝚛. 𝙳𝚊𝚟𝚒𝚍 𝙰𝚛𝚞𝚕 𝙿𝚊𝚛𝚊𝚖𝚊𝚗𝚊𝚗𝚍𝚊𝚖, 𝚂𝚎𝚛𝚖𝚘𝚗 𝚆𝚛𝚒𝚝𝚎𝚛.

𝚠𝚠𝚠. 𝚍𝚊𝚟𝚒𝚍𝚊𝚛𝚞𝚕𝚜𝚎𝚛𝚖𝚘𝚗𝚌𝚎𝚗𝚝𝚛𝚎. 𝚌𝚘𝚖
𝚠𝚠𝚠. 𝚍𝚊𝚟𝚒𝚍𝚊𝚛𝚞𝚕𝚋𝚕𝚘𝚐𝚜𝚙𝚘𝚝. 𝚌𝚘𝚖.








யோனா இறைவாக்கினர். ஓவியர்: மைக்கிலாஞ்சலோ போனரோட்டி. ஆண்டு: 1511. காப்பிடம்: சிஸ்டைன் சிற்றாலயம், வத்திக்கான்.

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.